Search This Blog

Wednesday, June 28, 2017

உங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது? நவ ரத்தின கற்களின் தரம் அறிவது எப்படி?





உங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது?



ராசிக் கற்கள்:

ராசிக்கல்

நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்படுகிறது. இந்த நவமணிகளை அணிவதன் மூலம் அந்த கிரகத்தின் நற் தன்மைகள் கதிர் வீச்சுக்களாய் நம் உடலில் ஊடுருவி குறிப்பிட்ட கிரகத்தின் பாதிப்புகளை சமன் செய்வதுடன் அதிர்ஷ்டத்தையும் வழங்குவதாக குறிப்புகள் கூறுகின்றன.



இன்றும் கூட தமிழர்கள் வீடு கட்ட துவங்கும் போது நவமணிகளை வீட்டின் தலைவாயிலில் புதைப்பதை காணலாம். இவை தவிர கோவில்களில் நவமணிகள் பெரும் அளவில் கருவறைகளிலும், கோபுர அஸ்திவாரங்களில் புதையுண்டிருப்பதாக குறிப்புகள் காணப் படுகின்றன. இவையெல்லாம் இந்த நவமணிகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதாகும்.





ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

1.சூரியன்மாணிக்கம்.இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

2.சந்திரன்-முத்து.இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.

3.செவ்வாய்-பவழம்.இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம்               உண்டாகும்.



4.புதன்-மரகதம்.இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும், ஞானம்,வாக்கு                        சதுர்த்தியம்,யுக்கி,,வியபார தந்திரம் போன்ற பலன்களை அளிக்க வல்லது.

5.குரு-புஷ்பராகம்.இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ            விருத்தியையும் கொடுக்கும்.



6.சுக்கிரன்-வைரம்.இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.

7.சனி-நீலம்.செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது

8. ராகு-கோமேதகம்.

9. கேது- வைடூரியம்.





நமக்குத் தேவையான நவமணிகளை எல்லா நாளும் வாங்கிடலமா.. ?





எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்..?

ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும் எனசாஸ்திரம்சொல்லுகிறது.அதற்கென சில நாட்களை வரையறுத்திருக்கின்றனர். அதன்படி....



ஞாயிறு : மாணிக்கம், கோமேதகம்

திங்கள் : முத்து, வைடூரியம்

செவ்வாய் : பவழம்

புதன் : மரகதம்

வியாழன் : புஷ்பராகம்

வெள்ளி : வைரம்

சனி : நீலம்



தரம் அறிந்து, நாள் பார்த்து வாங்கிய நவமணிகற்களை அப்படியே ஆபரணத்தில் பதித்து அணிவது தவறு. எப்படி மூலிகளைகளும், பாஷாணங்களும் மருந்து செய்வதற்கு முன்னர் சுத்தி செய்யப் படுகின்றனவோ அதே போல இந்த கற்களும் சுத்தி செய்தல் அவசியம். இதனை சித்தர்கள்தோஷ நிவர்த்திஎன்பர்.



நவமணிகள் ஒவ்வொன்றும் பிரத்யேகமான வண்ணக் கதிர்களை வெளியிடும் தன்மை உடையவை. இந்த கதிர்கள் மனிதனின் உடலில் படும் போது உடல் நலம் மற்றும் மன நலத்தினை சீர்படுத்தி மேம்படுத்துவதாகவும் கருத்துக்கள் உள்ளது.



மாணிக்கம் சிவந்த நிறக் கதிர்களையும்,

முத்து ஆரஞ்சு நிற கதிர்களையும்,

புஷ்பராகம் நீல நிறக் கதிர்களையும்,

கோமேதகம் ஊதா நிறக் கதிர்களையும்,

மரகதம் பச்சை நிறக் கதிர்களையும்,

வைரம் வெளிர் நீல நிறக் கதிர்களையும்,

வைடூரியம் வெளிர் சிவப்பு நிறக் கதிர்களையும்,

நீலம் அடர் ஊதா நிறக் கதிர்களையும்,

பவளம் மஞ்சள் நிற கதிர்களையும் வெளியிடுமாம்.



இத்தனை தன்மைகளையும், சிறப்புகளையும் உடைய பழுதில்லாத (வெடிப்புக்கள், புள்ளிகள்) கற்களால் மட்டுமே குறிப்பிட்ட ஜாதகருக்கான நற்பலனைத் தரமுடியும். சுத்தமான கற்களை கண்டறிவது என்பது ஆகச் சிரமமான பணி. தேர்ந்த வல்லுனர்களே தவறிழைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.



ஆனால் அகத்தியர் தனதுஅகத்தியர் வாகடம்என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார்.



முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.



மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.



பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.



வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.



பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.



கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.



புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.



வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.



நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.





 நாம் மேலே குறிப்பிட்ட அட்டவணைப்படி எல்லோருமே ராசிக்கற்களை அணிந்துகொள்ளலாமா என்றால், கூடாது என்றுதான் கூறவேண்டும். நிஜத்தில் ஒவ்வொரு ஜாதகரின் கிரக அமைப்பு, அவற்றின் சாதக பாதகங்களை வைத்து மட்டுமே நவமணிகளை பரிந்துரைக்க முடியும்.அதாவது பிறந்த ராசி, ராசிஅதிபதி, நட்சத்திரம், தசாபுத்தி, போன்றவற்றைக் கருத்தில் கொண்டே யாருக்கு எந்தவகை ரத்தினம் பொருந்தும் என்று குறிப்பிடமுடியும். மற்ற படி தனியாக ஒரு ராசியையோ, நட்சத்திரத்தையோ முன்வைத்து கற்களை குறிப்பிடுதல் தவறாகும்.



எந்த ராசிக்காரர்கள் எந்தக் கல்லை அணியக்கூடாது?



1.மேஷம் - நீலம்



2.ரிஷபம் - நீலம்



3.மிதுனம் - புஷ்பராகம்



4.கடகம் - வைரம்



5.சிம்மம் - பவளம்



6.கன்னி - புஷ்பராகம்



7.துலாம் - மாணிக்கம்



8.விருச்சிகம் - முத்து



9.தனுசு - பவளம்



10.கும்பம் - பவளம்



12.மீனம் - மரகதம்

இவ்வாறு பரிந்துரைக்கப் பட்ட ரத்தின வகைகளை பொதுவாக ஆண்கள் தங்கள் வலது கை மோதிரவிரலிலும், பெண்கள் இடதுகை மோதிர விரலிலும் அணிதல் வேண்டும். சிறு குழந்தைகளாயின் கழுத்தில் அணியலாம். இவ்வாறு அணியும் போது அந்தக் கல்லானது உடலில் படும் வண்ணம் அமைத்துக் கொள்வதே சிறப்பு.முறையாக தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாக பரிந்துரைக்கப் பட்டு அணியப் படும் கற்கள் நல்ல பலன்களை தரும்.





அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்!

மாணிக்கம் : இணைக்கும் உலோகம்தங்கம்

அணிய வேண்டிய விரல்                    மோதிர விரல்



முத்து : இணைக்கும் உலோகம்  தங்கம் அல்லது வெள்ளி

அணிய வேண்டிய விரல்  ஆள்காட்டி விரல், மோதிர விரல்



புஷ்பராகம், கனக புஷ்பராகம் : இணைக்கும் உலோகம்தங்கம்

அணிய வேண்டிய விரல்ஆள்காட்டி விரல்



கோமேதகம் : இணைக்கும் உலோகம்வெள்ளி அல்லது தங்கம்

அணிய வேண்டிய விரல்மோதிர விரல், நடு விரல்



மரகதம் : இணைக்கும் உலோகம்தங்கம் அல்லது வெள்ளி

அணிய வேண்டிய விரல்சுண்டு விரல், மோதிர விரல்







உங்களின் தொழிலுக்கேற்ற அதிஷ்ட இரத்தினம் எது..?


ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம். ரத்தினங்களானது தொழில்,அல்லது வியாபார மந்த நிலையை போக்கி சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.

எந்த கல் எந்த தொழிலுக்கு ஏற்றது என்பதை காண்போம்.

புஷ்பராகம் : கல்வித்துறை. கலைத்துறை, எழுத்து துறை, பொருளாதார துறை, சமய துறை, அற நிலைய துறை

வைரம் : விவசாயம், நிர்வாகம், கோழிப்பண்ணை, பால் பண்ணை, பழ மரங்கள்  பயிரிடுவோர்



நவரத்தினங்கள் பதித்த மோதிரங்கள்யார், எப்படி அணியவேண்டும்? ஒரு கண்ணோட்டம்

செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து. மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம். நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல், தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும். தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும். இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.



பதிக்கும் முறை


மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும். பிறகு கடிகார சுற்றுபடி முத்து, பவளம், கோமேதகம், நீலம், வைடூரியம், புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.



நவரத்தினங்கள் தரும் நற்பலன்கள்


நவரத்தின 9-கற்கள் பதித்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம். எதிலும் வெற்றிகிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும். போடும் திட்டங்கள் எல்லாம் சரியானதாக இருக்கும். உழைப்பிற்க்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.



.முத்து (pearl)



முத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்கு உண்டு.

வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும். பேய்களை விரட்டும். முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும், அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும் தடைகளை முத்து போக்கும். விலகிசென்ற நட்புகளையும், உறவுகளையும் சேர்த்து வைக்கும்.

முத்தின் மருத்துவ குணங்கள்

முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது. அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும். குடல் அழற்சி வராமல் காக்கும். மூத்திர கடுப்பை போக்கும்.

இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை, தூக்கமின்மை, ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.







வைரம் (diamond)


உடல் உரம்,மன உரம், வெற்றி, செல்வம், அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. வைரம். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆணுக்கு பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும். கோரக் கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும்.

கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.

வைரத்தின் மருத்துவ குணங்கள்

மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு. சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும். சக்கரை நோய், மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மை தன்மையை இழக்காதவாறு செய்யும்.





வைடூரியம் (cat’s eye)


இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது நம்மை மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல். மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும். மனநோய்களை குணப்படுத்தும். பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும். மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும்.

சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நிலையான வருமானம் அமையும். முகத்தில் வசீகரம் உண்டாகும் .

வைடூரியத்தின் மருத்துவ குணங்கள்

வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி, ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.



மாணிக்கம் (ruby)


இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும், இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் .

பண்புகள்

மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும். வெகுளித்தனமாகவும், ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள், கவலை, கருத்து வேறுபாடுகளை போக்கும். இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .

மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும். இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது. மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும். இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும்.

மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .





மரகத பச்சை (emerald)


ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும், தீய சக்திகள், பில்லி சூனியங்களில் இருந்து காக்கும். போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும். காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.

பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள், மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும். மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும். நினைவாற்றலை பெருக்கும்.

மரகதத்தின் மருத்துவ குணம்

மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும். இருதய கோளாறு, ரத்த கொதிப்பு, புற்றுநோய், தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.





புஷ்பராகம் (topaz)


இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும். நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.

கோபம் குறையும், மனம்அமைதியாக இருக்கும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பெரும் புகழ் கிடைக்கும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பை கொடுக்கும்.

புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.







பவழம் (coral)


இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.



சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டியில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.

அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.



பவழத்தின் மருத்துவ குணங்கள்

ஒவ்வாமை நோய்கள், ரத்த சோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும். பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும், நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும். மலட்டுதன்மையை போக்கும். நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும். சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.





இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.



சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.

அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும். நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.



நீலம் (sappihire)


ஞானம், சாந்தம், பெருந்தன்மை நற்பழக்கம், ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம். திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.

தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும். பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு, சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.



நீலகல்லின் மருத்துவ குணம்

கீல் வாதம், இடுப்புவாதம், நரம்புவலி, வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும், குஷ்ட நோயையும் குணப்படுத்தும். வயிற்று நோயை சரிபடுத்தும். அதிக உடல் பருமனை குறைக்கும். இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.



கோமேதகம் (hessonits)


புத்திசாலிதனத்தையும், கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும். அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும். தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும். வாக்கு வசியம், வாக்கு சாதுர்யம் உண்டாகும். அரசியல் வாதிகள், கலைஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.

உத்தியோக உயர்வை கொடுக்கும், தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.





கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்

கோமேதக பஸ்பம் ஈரல்வலி, குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.


நோய்களும் அவற்றை குணப்படுத்தும் நவரத்தின கற்களும்:


மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரகதத் துடன், நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.



ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.



மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய ஜாதி சிகப்பு பவளத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.



கடக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவிற்குரிய கனக புஷப ராகத்தை நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.



சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள்; வரும்.



கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.



துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவுக்கு உரிய கனக புஷபராகத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.



விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய சிகப்பு பவளத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.



தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன்; இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.



மகர லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரக தத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.



கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சந்திரனுக்குரிய ஜாதி முத்தினை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.



மீன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சூரியனுக்குரிய மாணிக்கத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

இரண்டு ரத்தினங்களை இணைக்கும்போது, அவைகளுக்குள் பேதை ஏற் படுமானால், நடுவில் ஏதேனும் சாதாரண கல்லினை வைக்க வேண்டும். மோதிரம் அடியில் திறப்புடன் ஓபன்- செட்டிங் முறையில் அமைக்கப்பட வேண்டும். நோயின் தாக்கம் தீர்ந்தவுடன், மோதிரத்தை எடுத்துவிட வேண் டும். மேலே குறிப்பிட்டவை பொதுவானது ஆகும். தனிப்பட்ட ஜாதகங் களில், கிரகங்களின் நிலையை ஆராய்ந்து, நவரத்தினங்களை உரிய முறையில் அணிந்து, நன்மைகளைப் பெறலாம்




நவரத்தின கற்களை விட அதிஷ்டமும் நன்மையும் தரக்கூடிய மலிவான கற்களும் தற்பொழுது பாவனையில் உள்ளது.



சந்திர காந்தகற்கள் (moon stone), சூரிய காந்தகற்கள்( sun stone)

சந்திர காந்த கற்கள்

இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும். ஜலகண்டதில் இருந்து காக்கும். நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்

தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று பிரச்சனைகளை நீக்கும். குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.

யாரெல்லாம் அணியலாம் ..?

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு மாற்றாகவும் அணியலாம்.





சூரிய காந்த கற்கள்

இந்த கல்லை அணிவதால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். துரதிஷ்ட்டங்கள் விலகி அதிஷ்ட்டம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு சம்பந்தமான தடைகள் நீங்கும்.

யாரெல்லாம் அணியலாம் ..?

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்கினம் கொண்டவர்கள் இக்கல்லை அணியலாம் . மாணிக்க கல்லுக்கு மாற்றாகவும் இக்கல்லை அணிந்து பலன் பெறலாம்.

அதிஷ்டக் கற்களை தெரிவு செய்வதற்கு ஜாதகம் எதற்கு?
பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும்.  அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "//ல" என குறிக்கப்பட்டிருக்கும்.


நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.

அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.

அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; எமது உடலுக்கு நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடிய "நவரத்தின கற்களை" கண்டறிந்து அதனைப் பாவிப்பதன் மூலம் எமக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என்றும் அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........

Wednesday, June 21, 2017

A Separation Movie


Written and directed by Asghar Farhadi, A Separation is a 2011 Iranian drama starring Leila Hatami, Peyman Moaadi, Shahab Hosseini, Sareh Bayat and Sarina Farhadi.
Simin (Hatami) wants to leave Iran to give her daughter (Farhadi) a shot at a better future. Her husband Nader (Moaadi) initially agrees but changes his mind as he feels he cannot leave his father, who suffers from Alzheimer's, behind. This causes Simin to file for a divorce but when the family court denies her request she moves back with her parents. Meanwhile, Nader hires a young religious woman named Razieh (Bayat) to take care of his father when he's at work. The pregnant Razieh, however, has not sought permission from her husband (Hosseini) to accept the job and also finds the work more demanding than expected. And when Nader returns home one day to find his father unconscious and tied up, the situation gets out of hand with serious repercussions for all involved.
A family drama about a relationship breaking down with some mystery and tension thrown in, A Separation features a complex and multi-layered screenplay and masterful direction by Asghar Farhadi, who manages to make the most of his talented ensemble cast. The naturalistic family drama manages to function as a microcosm to explore complex moral and social issues in modern Iran and Farhadi gives each of his characters understandable motivations thereby denying the viewer any easy answers. The cinematography greatly adds to the film's realism whilst the editing keeps things snappy at all times. A Separation won Best Foreign Language Film at both the Academy Awards and the Golden Globes, Best Film, Director, Screenwriter and Editing at the Asian Film Awards, Golden Berlin Bear and the Prize of the Ecumenical Jury at the Berlin International Film Festival, where it also snapped up the Silver Bear for Best Actress and Actor, and a whole slate of other awards, many for Best Film, at many other festivals, award ceremonies and critics' circles worldwide. Possibly the crowning achievement of Asghar Farhadi extremely impressive filmography so far.