Search This Blog

Sunday, September 4, 2016

விநாயக சதுர்த்தி விரதம்

இந்து மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய தினம் இந்துக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு , உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். மாநிலத்திற்கு மாநிலம் நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில்
 (திபெத்து விநாயகர்)
கொண்டாடப்படும்.விநாயகர்’ என்றால் ‘மேலான தலைவர்’ என பொருள்..யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.

சுழி :
எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் – O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் – இணைந்து “உ” எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.


விநாயகர் வணக்கம் :
கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.
புராண காலத்தில் ஒரு சமயம் அகத்தியர் பொதிகை மலை வந்து, தவத்திலிருக்க, உலக நன்மைக்காக விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தை உருட்ட, அந்தக் கமண்டலத்திலிருக்கும் நீர் பெருக்காக எடுத்து காவிரி ஆறாக பிரவாகித்தது. தவம் நீங்கிய அகத்தியர், கமண்டலத்தை உருட்டிய காகத்தைக்காண, அது ஒரு சிறுவன் வடிவாக நிற்க, கோபத்தில் அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்டினார். அதன் பின், கோபம் மறைந்து தனது ஞானக் கண் திறக்க அங்கே ஸ்ரீ விநாயகர் நிற்பதைக் கண்டு மனம் பதைத்து மன்றாடினார்.

தலையில் ஒரு முறை குட்டியதற்கு பிராயச்சித்தமாக தனது இரு கைகளாலும் குட்டிக்கொண்டு, நமஸ்காரம் செய்யும் பாவனையில் தனது இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழுந்தார். இச்செய்கையில் மனம் மகிழ்ந்த விநாயகர் அவருக்கு பல வரங்கள் தந்து அருளினார். இந்த புராண சம்பவத்தை மையமாகக் கொண்டே பிள்ளையார் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது என்பது விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியமானதாகின்றது.

ஸ்ரீ கணபதி ஹோமம்:
பிள்ளையார் சுழி என்பது எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக அமைந்தது போல, யாகம் எனும் ஹோமம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் முதலாக அமைவது ஸ்ரீ கணபதி ஹோமம் ஆகும். நாம் தொடங்கக் கூடிய அனைத்து காரியங்களையும் சுபமாக நிறைவேற்ற வல்லது, வாழ்வில் வசந்தத்தை அளிக்க வல்லது. ஆகையினால் தான் ஒரு புதிய தொழில் தொடங்கும்போதும், கிரஹப்ரவேசம் செய்யும்போதும், அந்த இடத்தில் லாபமும், செல்வமும் அதிகரிக்க கணபதி ஹோமம் செய்கிறோம்



பிள்ளையாரின் அவதார சரிதம் :
ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார். அச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபிரான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.


காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து ‘வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார்.இது நடந்தது ஆவணி மாதத்து சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அந்த தினம் இந்து மதத்தின் உயர்வான ஒரு புனித தினமாக ஆகிவிட்டது
விநாயக விரதங்கள்.

ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் இருக்கிறது. சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்’ என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘நாக சதுர்த்தி’ என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘விநாயக சதுர்த்தி’ என்றும் கொண்டாடுகின்றனர்
மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தி ‘சங்கடஹர சதுர்த்தி’ ஆகும் . விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர். ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான ‘தேவி’ விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.

விநாயகரின் எல்லா விரத நாட்களையும் எல்லோரும் அனுஷ்டிப்பதில்லை. சிலர் வைதீகச் சைவ மக்கள் மாத்திரமே சதுர்த்தி விரதங்கள் இருபத்தி நான்கையும் கைக்கொள்வதுண்டு. சிலர் ஆவணி மாதச் சதுர்த்தி விரதங்கள் இரண்டையும் அனுஷ்டிப்பதுண்டு. இந்துக்கள் விநாயக சதுர்த்தியை மாத்திரமே தவறாது அனுஷ்டிப்பர். அத்துடன் மார்கழி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியையும் நோன்பு தினமாகக் கைக்கொள்வர். சிலர் கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்சப் பிரதமைத் திதியில் ஆரம்பித்து இருபத்தொரு நாட்கள், அதாவது மார்கழி மாத பூர்வபட்ச ஷஷ்டிவரை . அதை விநாயக சஷ்டி என்று காப்புக்கட்டி, நோன்பிருந்து விநாயகரை வழிபடுவர். அந்த இருபத்தொரு நாட்களும் இரவில் மாத்திரமே ஒரு வேளை உணவு கொள்வர்.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு
விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். அதில் ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைம் ஏற்றுக் கொள்கிறார் . தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.
விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கி வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி , இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைத்து , பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.

அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும் , இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம். பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.

பிள்ளையார்-பூஜை செய்யும் முறை

விநாயகர் சதுர்த்தி அன்று காலையில்தான் களிமண் விநாயகரை வாங்க வேண்டும். முதல் நாள் வாங்கி வைக்கக் கூடாது கிழக்குப் புறமாக தலைவாழை இலை (நுனி இலை) போட்டு அதன்மேல் நெல் பரப்பி, அதற்கு மேல் இன்னொரு நுனிஇலை போட்டு பச்சரிசியை நிரப்பி, அதன்மேல் களிமண் பிள்ளையார் வைக்கவேண்டும். வடக்குப்பக்கம், மேற்குப்பக்கம் பார்க்க பிள்ளையாரை வைத்து பூஜிக்கலாம். ஆனால், தெற்குப்பக்கம் பார்த்து வைப்பதோ, பூஜிப்பதோ கூடாது.
மஞ்சள் சந்தனம் குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்க வேண்டும். பிம்பத்துக்கு தொப்புளில் நாணயம் வைத்து மூட வேண்டும். அதன்பின் பிள்ளையாருக்குப் பூணூல் அணிவித்து, வெள்ளெருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் மாலை சார்த்தி பூஜிப்பது சிறப்பானது.
மணை அல்லது பாயில் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
வக்ரதுண்ட மஹாகாய கோடிஸூர்ய ஸமப்ரப |
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா ||

உடைந்த கொம்பையுடைய (ஸ்ரீ விநாயகப் பெருமான், வியாசர் சொல்ல ஸ்ரீமகாபாரதத்தைத் தன் கொம்பை உடைத்து எழுதினார் என்பது புராணக் கூற்று) பெரிய உடம்புடன் கூடிய பலகோடி சூரிய பிரகாசமுடைய இறைவனே! என்னுடைய எல்லா காரியங்களிலும் எப்போதும் எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் இருக்க நீ அருள் புரியவேண்டும்.
அடுத்து ஸ்ரீ விநாயகருக்கு உகந்த அருகம்புல்லால் கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சிப்பது குடும்ப நலனுக்கு உகந்தது..
ஓம் கம் கணபதயே நமஹ |
மஞ்சள், குங்குமம், சந்தனம், நீர் சேர்த்த அரிசியில் (அட்சதை) புஷ்பங்களும் (வெள்ளெருக்கு, செவ்வரளி, செம் பருத்தி, வெண்தாமரை) அருகம்புல் கொண்டு அர்ச்சிக்கவும். மேலே சொன்ன மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.
என்ன நைவேத்தியம்?
கொய்யா, இலந்தை, வாழைப்பழம், திராட்சை, நாகப்பழம் போன்றவற்றுடன் கரும்புத் துண்டு, தேங்காய், வெற்றிலை, பாக்கு வைக்கவேண்டும்.
பின்பு வெண்பொங்கல், வெல்ல மோதகம், உப்பு மோதகம், அப்பம், உளுந்து வடை, கறுப்பு சுண்டல், மொச்சக்கொட்டை வேகவைத்தது, இட்லி, தோசை, பாயசம், அவல், பொரியில் நாட்டுச் சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்யவேண்டும். அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது. பூஜை முடிந்ததும் அவரவர் சக்திக்கேற்ப பிரம்மச்சாரிக்கு அன்னமளித்து ஒரு வேஷ்டி (4 முழம்) கொடுத்து, தட்சணை அளிப்பது குடும்பத்துக்கு நலம் தரும்.
களிமண் பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டுவிட்டுப் பின்பு ஓடும் நீரில் விட்டுவிடவேண்டும். முடியாதவர்கள் கிணறு, ஏரி, கடற்கரையில் விடலாம்.
கொழுக்கட்டை
பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானது கொழுக்கட்டை. கணபதிக்குத் தொந்தி பெருத்தது கொழுக்கட்டையாலே என்பார்கள். எனவே, பிள்ளையாருக்குப் பூஜை செய்யும்போது கொழுக்கட்டை படைக்க வேண்டும். இருபத்தோரு கொழுக்கட்டை படைக்கவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

இங்கனம்:- JSK.கோபி.
JSK-ஆன்மீகம், அறிவுரை-இந்துமதம்.


1
Aum Vinayakaaya Namah
2
Aum Vighna-rajaaya Namah
3
Aum Gowri-puthraaya Namah
4
Aum Ganeshwaraaya Namah
5
Aum Skanda-grajaaya Namah
6
Aum Avyayaaya Namah
7
Aum Puthaaya Namah
8
Aum Dakshaaya Namah
9
Aum Adhyakshaaya Namah
10
Aum Dwija-priyaaya Namah
11
Aum Agni-garbha-chide Namah
12
Aum Indhra-shri-pradaaya Namah
13
Aum Vaani-pradaaya Namah
14
Aum Avyayaaya Namah
15
Aum Sarva-siddhi-pradaaya Namah
16
Aum Sarva-dhanayaaya Namah
17
Aum Sarva-priyaaya Namah
18
Aum Sarvatmakaaya Namah
19
Aum Shrishti-karthe Namah
20
Aum Dhevaaya Namah
21
Aum Anekar-chitaaya Namah
22
Aum Shivaaya Namah
23
Aum Shuddhaaya Namah
24
Aum Buddhi-priyaaya Namah
25
Aum Shantaya Namah
26
Aum Brahma-charine Namah
27
Aum Gajana-naaya Namah
28
Aum Dvai-madhuraaya Namah
29
Aum Muni-stuthaaya Namah
30
Aum Bhakta-vighna-vinashanaaya Namah
31
Aum Eka-dhandaya Namah
32
Aum Chatur-bhahave Namah
33
Aum Chatu-raaya Namah
34
Aum Shakthi-sam-yutaaya Namah
35
Aum Lambhodaraaya Namah
36
Aum Shoorpa-karnaaya Namah
37
Aum Haraaye Namah
38
Aum Brahma-viduttamaaya Namah
39
Aum Kalaaya Namah
40
Aum Graha-pataaye Namah
41
Aum Kamine Namah
42
Aum Soma-suryag-nilo-chanaaya Namah
43
Aum Pashanku-shadha-raaya Namah
44
Aum Chandhaaya Namah
45
Aum Guna-thitaaya Namah
46
Aum Niranjanaaya Namah
47
Aum Akalmashaaya Namah
48
Aum Swayam-siddhaaya Namah
49
Aum Siddhar-chita-padham-bujaaya Namah
50
Aum Bijapura-phala-sakthaaya Namah
51
Aum Varadhaaya Namah
52
Aum Shashwataaya Namah
53
Aum Krithine Namah
54
Aum Vidhwat-priyaaya Namah
55
Aum Vitha-bhayaaya Namah
56
Aum Gadhine Namah
57
Aum Chakrine Namah
58
Aum Ikshu-chapa-dhrute Namah
59
Aum Shridaaya Namah
60
Aum Ajaya Namah
61
Aum Utphala-karaaya Namah
62
Aum Shri-pataye Namah
63
Aum Stuthi-harshi-taaya Namah
64
Aum Kuladri-bhrite Namah
65
Aum Jatilaaya Namah
66
Aum Kali-kalmasha-nashanaaya Namah
67
Aum Chandra-chuda-manaye Namah
68
Aum Kantaaya Namah
69
Aum Papaharine Namah
70
Aum Sama-hithaaya Namah
71
Aum Aashritaaya Namah
72
Aum Shrikaraaya Namah
73
Aum Sowmyaaya Namah
74
Aum Bhakta-vamchita-dayakaaya Namah
75
Aum Shantaaya Namah
76
Aum Kaivalya-sukhadaaya Namah
77
Aum Sachida-nanda-vigrahaaya Namah
78
Aum Jnanine Namah
79
Aum Dayayuthaaya Namah
80
Aum Dandhaaya Namah
81
Aum Brahma-dvesha-vivarjitaaya Namah
82
Aum Pramatta-daitya-bhayadaaya Namah
83
Aum Shrikanthaaya Namah
84
Aum Vibudheshwaraaya Namah
85
Aum Ramarchitaaya Namah
86
Aum Vidhaye Namah
87
Aum Nagaraja-yagyno-pavitavaathe Namah
88
Aum Sthulakanthaaya Namah
89
Aum Swayam-kartre Namah
90
Aum Sama-ghosha-priyaaya Namah
91
Aum Parasmai Namah
92
Aum Sthula-tundhaaya Namah
93
Aum Agranyaaya Namah
94
Aum Dhiraaya Namah
95
Aum Vagishaaya Namah
96
Aum Siddhi-dhayakaaya Namah
97
Aum Dhurva-bilwa-priyaaya Namah
98
Aum Avyaktamurthaaye Namah
99
Aum Adbhuta-murthi-mathe Namah
100
Aum Shailendhra-tanu-jotsanga-khelanotsuka-manasaaya Namah
101
Aum Swalavanya-sudha-sarajitha-manmatha-vigrahaaya Namah
102
Aum Samastha-jagada-dharaaya Namah
103
Aum Mayine Namah
104
Aum Mushika-vahanaaya Namah
105
Aum Hrishtaaya Namah
106
Aum Tushtaaya Namah
107
Aum Prasannatmane Namah
108
Aum Sarva-siddhi-pradhayakaaya Namah

Saturday, September 3, 2016

An original 19th Century Studley tool chest




The history of H.O. Studley and his tool chest
Massachusetts piano maker Henry Studley built his magnificent tool chest over the course of a 30-year career at the Poole Piano Company. The chest lived on the wall near his workbench, and he worked on it regularly, making changes and adding new tools as he acquired them. Using ebony, mother-of-pearl, ivory, rosewood, and mahogany -- all materials used in the manufacture of pianos -- he refined the chest to the point that now, more than 80 years after his death, it remains in a class of its own.

Read more: http://www.finewoodworking.com/woodworking-plans/article/the-ho-studley-tool-chest.aspx#ixzz4JCWeeqnG

தமிழன் என்று பெருமை கொள், அதைக்காட்டிலும் மிக கர்வம் கொள்...

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் மொழி குறித்த உணர்ச்சிகரமான கவிதையால், தமிழ்ப் பெண் ஒருவர் பார்வையாளர்களை நெகிழ வைத்தார்.
அமெரிக்காவில் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக பள்ளி மாணவர்களில் இருந்து இளம் கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கிய தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதில் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட மாயா ஈஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மாயா ஈஸ்வரன், தமிழ் மொழி குறித்தும், அமெரிக்க வாழ்வு குறித்தும் வெள்ளை மாளிகையில் கவிதை வாசித்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார்.
நான் எனது தாய்மொழியான தமிழைப் பேசி மூன்றாண்டுகள் ஆகின்றன, "தாயே...." என்று ஆங்கிலத்தில் அவர் தனது அம்மாவிற்காக வாசித்த கவிதை அனைவரையும் உருக்கியது.

Thursday, September 1, 2016

வேதங்கள் ஓதி யாகம் செய்யும் ரஷ்யர்கள்


Old Beautiful Sri Lanka in Old English Movie" Elephant Walk " 1954

This article is about the 1954 motion picture. For other uses, see Elephant walk.
Elephant Walk
Elephant Walk 1954.jpg
Theatrical release poster
Directed by William Dieterle
Produced by Irving Asher
Written by John Lee Mahin?ö
Based on the novel by
Robert Standish
Starring Elizabeth Taylor
Dana Andrews
Peter Finch
Abraham Sofaer
Abner Biberman
Music by Franz Waxman
Cinematography Loyal Griggs
Distributed by Paramount Pictures
Release dates
  • April 21, 1954
Running time
103 minutes
Country United States
Language English
Budget $3 million
Box office $3 million (US)
Elephant Walk is a 1954 Paramount Pictures film, directed by William Dieterle, and starring Elizabeth Taylor, Dana Andrews, Peter Finch and Abraham Sofaer.
It is based upon the novel Elephant Walk by "Robert Standish", the pseudonym of the English novelist Digby George Gerahty (1898–1981).



It was originally intended to star the husband and wife team of Laurence Olivier and Vivien Leigh (with Olivier in the Finch role). However Olivier was already committed to the project The Beggar's Opera (1953). Leigh was enthusiastic about the role and continued in her husband's absence, but she was forced to withdraw from production shortly after filming began in Colombo, Ceylon, as a result of bipolar disorder. According to Leonard Maltin's annual Movie Guide book, Leigh can be seen in some long shots that were not re-filmed after Elizabeth Taylor replaced her.
 Colonial tea planter John Wiley, visiting England at the end of World War II, wins and weds lovely English rose Ruth and takes her home to Elephant Walk, Ceylon, where the local elephants have a grudge against the plantation because it blocks their migrating path. Ruth's delight with the tropical wealth and luxury of her new home is tempered by isolation as the only white woman in the district; by her husband's occasional imperious arrogance; by a mutual physical attraction with plantation manager Dick Carver; and by the hovering, ominous menace of the hostile elephants. The elephants end up destroying the plantation in a stampede along with a fire.

Wednesday, August 31, 2016

Evolution of mathematics traced using unusually comprehensive genealogy database


Most of the world’s mathematicians fall into just 24 scientific 'families', one of which dates back to the fifteenth century. The insight comes from an analysis of the Mathematics Genealogy Project (MGP), which aims to connect all mathematicians, living and dead, into family trees on the basis of teacher–pupil lineages, in particular who an individual's doctoral adviser was.
“You can see how mathematics has evolved in time,” says Floriana Gargiulo, who studies networks dynamics at the University of Namur, Belgium and who led the analysis.
This result just tickles our fancy a bit.
Our belief here is that 'the mathematical sense" is primary in our brain's functioning (prior to logic and language and indeed, as a key component of what we now know as the Salience Newtork and its operation...without which the Salience Network would be inept and/or inadequate.
And, of course, in tandem with that belief we consider that evolution must show that this particular aspect of our brains has emerged as a key factor in the rest of our culture and society's taking shape.
The fundamental area of the brain in which we now have considerable interest is the Intra Parietal Sulcus...and it is that area where all "numerical sense" is centered, not only numbers, but geometry and space and all comparisons of relative magnitude, whether greater or less, brighter or dimmer, louder or more quiet, sooner or later, faster or slower, friendlier or less friendly...and so on...more or less in every way, incluiding how simnilar or not to a past experience to merit a "novelty" response or a danger response or to simply ignore.... is centered there.
http://www.jneurosci.org/content/28/46/11819.short
We can speak about these matters in ordinary language, and say that what we encounter may be somewhere 'along a spectrum", or in a "dimension" or part of a "space" but that is only possible because the sense of number allows us to take experiences and consolidate them within our brains along such a dimension, spectrum or space.
We now recognize the incredible importance of the Salience Network. Organisms must have a way of distinguishing situations in such a manner that what is 'salient" is noticed and attended to and dealt with. But how does an organism realize which moment of experience presents it with salience. Of course, absolute danger is salient and that is recognizable.
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2899886/
But the key in most life situations that result in adaptation and learning and intelligent responses that develop is to understand "novelty' as it is called nowadays...but which tells us when two experiences are different enough to be salient and thus to warrant adjustment and action on our part.
Without the role played by the Intra Parietal Sulcus the immediately surrounding areas..how would "comparisons" be made. Does an organism actually bring to awareness two experiences, two representations or one of each and then do some sort of inventory of features side by side and then make decisions after such a stepwise item by item comparison.
There must be some better way to achieve those "comparisons". That better way evolves to become "measuring" and to conceiving of things experience along spectra of comparison.
https://www.edge.org/…/stanislas_dehaene-what-are-numbers-r…
And thus the Salience Network would not be able to function without this IPS being a kernel aspect of its function and all the resultant connectivity in the brain.
This particular genealogical study revealed 84 distinct family trees with two-thirds of the world’s mathematicians concentrated in just 24 of them. The high degree of clustering arises in part because the algorithms assigned each mathematician just one academic parent: when an individual had more than one adviser, they were assigned the one with the bigger network.
But the phenomenon chimes with anecdotal reports from those who research their own mathematical ancestry, says MGP director Mitchel Keller, a mathematician at Washington and Lee University in Lexington, Virginia. “Most of them run into Euler, or Gauss or some other big name,” he says
http://www.nature.com/…/majority-of-mathematicians-hail-fro…

ஸ்கந்த மகாபுராணம் KANDA PURANAM -தெய்வத்தின் குரல்


ஸ்கந்த மகாபுராணம்தான் புராணங்களுக்குள்ளயே மிகப் பெரியது. ஏறக்குறைய ஒன்றரை லட்சம் சுலோகம் கொண்டது. உலகத்திலேயே இருப்பதற்குள் மிகப் பெரிய கிரந்தம் அதுதான் எனலாம். இப்படிப்பட்ட ஸ்காந்தம், இன்னம் வால்மீகி ராமாயணம், காளிதாஸரின் குமார ஸம்பவம் எல்லாம் ஸுப்ரம்மண்யர் பெருமையைச் சொல்கின்றன. 'குமாரகுப்தன்' என்கிற மாதிரி, பழைய ஆரியாவர்த்த ராஜாக்களின் பேர் சுப்ரம்மண்ய பரமாக இருக்கிறது. ரொம்பப் பழங்கால நாணயங்களில்கூட - வட இந்தியாவின் மூலைக் கோடிகளில் கண்டெடுக்கப்பட்டவற்றில் - மயூர வாகனராகக் குமாரஸ்வாமி இருக்கிறார். இப்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்ட எல்லை மாகாணத்தில் (North - West Frontier) கண்டெடுத்த குஷானர் நாணயங்களில் குமாரஸ்வாமி உருவம் பொறித்திருந்தது. வடபுலத்தின் பல ராஜ வம்ஸங்கள் அவரை 'ப்ரம்மணிய குமாரர்' என்று குலதெய்வமாகக் கொண்டிருக்கின்றன. அந்த ராஜாக்கள் தங்களையும் 'ப்ரம்மண்யர்'கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். 'ஸுப்ரம்மண்ய'த்தின் முதல் எழுத்தைத் தள்ளினால் 'ப்ரம்மண்யம்' தானே நிற்கிறது? இங்கே நம் தமிழ் நாட்டில் வேதத்துக்கும் சமஸ்கிருதத்துக்கும் ரொம்பத் தொண்டு செய்திருக்கிற காஞ்சிப் பல்லவ ராஜாக்களும், தங்களை சிவ பக்தியில் சிறந்த 'பரம மாஹேசுவரர்களாகவும்' விஷ்ணு பக்தியில் சிறந்த 'பரம பாகவதர்'களாகவும் சொல்லிக் கொள்வதோடு, ஸ்கந்த உபாஸனையே விசேஷமாகச் செய்த 'பரம ப்ராம்மண்யர்'களாகவும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். சாஸனங்களில் இவற்றைப் பார்க்கிறோம்.
எல்லாவற்றுக்கும் முற்பட்ட வேதத்தில் போற்றப்பட்ட ஸ்வாமியாக அவர் இருக்கிறார். ரிக்வேத பஞ்ச சூத்திரத்தில் "தகப்பன் சாமி" யைப் பற்றிய பிரஸ்தாவம் வருகிறது. பரமேசுவரனைப் போற்ற வந்த இந்த வேத ஸூக்தத்தில் ஒரு மந்திரம் 'குமாரனை வணங்குகிற பிதா' என்று அவரைக் கொண்டாடுவது அதிவிசேஷம். சாந்தோக்ய உபநிஷத்தில் ஸனத்குமார - ஸ்கந்தரைப் பற்றி வருகிறது. பாணினியின் வியாகரணம், அதற்குப் பதஞ்சலி செய்த மஹா பாஷ்யம் எல்லாவற்றிலும் ஸ்கந்தன், விசாகன் என்ற பெயர்களில் முருகனைப் பற்றிப் பிரஸ்தாவம் உண்டு.
போதாயன தர்ம சூத்திரத்தில் தினமும் செய்ய வேண்டிய வேத தர்பணங்களில் ஸ்கந்தனும், அவனது பார்ஷதரும் (பரிவாரங்களும்) இடம் பெறுகிறார்கள்.
தமிழபிமானம் உள்ளவர்களுக்கு இதை எல்லாம் சொல்ல வேண்டும். ஏனென்றால், தமிழ் மொழிக்கே முருகன்தான் அதிஷ்டான தெய்வம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்! 'முருகன்' என்று அலாதி அன்பு சொட்டச் சொல்வது தமிழர்களுக்கே உரிய பெருமை. ஆதிகாலம் தொட்டு இங்கு குறிஞ்சி நிலக்கடவுளாக அவரை வழிபட்டு வருகிறோம். தொன்மையிலும் தொன்மையான தொல்காப்பியம் இதை 'சேயோன் மேய மைவரை உலகமும்' என்கிறது. ஆறுபடை வீடுகள் என்று பிரசித்தமான சுப்ரம்மணிய க்ஷேத்திரங்கள் தமிழ் தேசத்தில்தான் இருக்கின்றன. அவர் தமிழை உண்டாக்கியவர், வளர்த்தவர். சங்கப்புலவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். அகஸ்தியருக்குத் தமிழிலக்கணம் உபதேசிக்கிறார். மிகப் பழய சங்க காலத்திலேயே நக்கீரர் இவர் மீது 'திருமுருகாற்றுப்படை'யைப் பாடியிருக்கிறார். பலர் அதைப் பாராயணம் செய்தே கைகண்ட மருந்தாகப் பலன் அடைந்திருக்கிறார்கள். முன்னொரு முறை நம் மடத்துத் துவாரா மூலமாக ஒரு வைகாசி விசாகத்தின்போது இந்தத் திருமுருகாற்றுப்படையும், விநாயகர் அகவலையும் நிறைய அச்சுப் போட்டு எல்லோருக்கும் அன்பளிப்பாக வழங்கினோம் - விநாயக சதுர்த்திக்குள் இவற்றை மனப்பாடம் செய்ய ஒப்புக் கொண்டவர்களுக்கு. காவடி எடுப்பது, கிருத்திகா விரதம், சஷ்டி உபவாஸம் இருப்பதெல்லாம் தமிழ் நாட்டுக்கே விசேஷமானவை.
இதனாலெல்லாம் முருகனைத் 'தமிழ்த் தெய்வம்' என்று குறிப்பாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இந்தக் காலத்தில் தமிழ் மதம் வேறு, வேதநெறி வேறு என்று பேதம் செய்வதில் சிலருக்கு ருசி இருந்து வருகிறது. இது ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு நம் ஜனங்களை பேதப்படுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் செய்த விஷமத்தின் அனர்த்தமான விளைவு. வேத மதம்தான் என்றைக்கும் தமிழ் மதமாக இருந்திருக்கிறது என்பதுதான் என் அபிப்பிராயம். அந்த விவாதம் இப்போது வேண்டாம். குமாரஸ்வாமி ஒருத்தரை எடுத்துக் கொண்டால், 'இவர் தமிழ் தெய்வம்' என்கிற போது, 'வேதத்திலும் தமிழ்நாட்டுக்கு வெளியிலும் இவர் ஆதியில் கிடையாது' என்ற தப்பபிப்ராயம் ஏற்படக்கூடாது என்பதற்கே, ரிக்வேத காலத்திலிருந்து ராமாயணம், அப்புறம் புராண காலம், காளிதாஸன் காலம், குப்தர்கள் முதலிய ராஜாக்களின் காலம் எல்லாவற்றிலுமே பாரத தேசம் முழுக்க அவர் பெருமை பரவியிருந்திருக்கிறது என்று காட்ட வந்தேன்.
வைதிக நெறியை வளர்க்கவே ஏற்பட்ட ஸ்வாமி அவர் என்பதற்கு "ஸுப்ரம்மண்யர்" என்ற பெயரே போதும் என்று சமநிலையிலிருந்து (Un - biassed) பார்த்தால் தெரியும். பிரம்மண்யத்தை - அந்தணர்கள் பற்றி ஒழுகுகிற வேத நெறியை - வளர்க்கிறவர் சுப்ரம்மண்யர் என்பது வெளிப்படை.
வேதத்துக்கு முக்கியம் வேள்வி, யாகம். வேள்விக்கு முக்கியம் அக்னி. தெய்வங்களுக்குள் சுப்ரம்மண்யர்தான் அக்னி ஸ்வரூபமானவர். அவருக்குப் பஞ்சபூத சம்பந்தமும் உண்டு. ஆகாச ஸ்வரூபமான ஈசுவரனின் கண்களிலிருந்து நெருப்புப் பொறியாகத் தோன்றி, வாயுவும், அக்னியும் அவரைச் சுமந்து கங்கையிலே சரவணப் பொய்கை என்ற நீர் நிலையில் விட, அவர் அங்கே ஷண்முகராகி, பிறகு பூமி உச்சமாக எழுப்புகிற மலைச்சிகரங்களிலெல்லாம் கோயில் கொண்டிருக்கிறார். இப்படிப் பஞ்சபூத சம்பந்தமிருந்தாலும் அவர் அக்னிச் சுடராகவே பிறந்தவர். அக்னியில் பிறந்தவர் - "அக்னி பூ" - என்றும் அவருடைய பெயர் வரிசையில் அமரகோசம் சொல்லிக் கொண்டு போகிறது.
ஸேநானீ: அக்னி: பூ குஹ:
குகையில், நம் இருதய குகையில் ஆத்ம ஸ்வரூபமாக அரூபமாக இருக்கிற குகன், இப்படி வெளிப்பட்ட பஞ்சபூதங்களில் இருந்தாலும், முக்கியமான அக்னி ஸ்வரூபியாக இருப்பதால் அவர் அக்னியாராதனையை வையமாகக் கொண்ட வேதப் பிரதிபாத்யமான தேவதையே ஆவார்.
வேதநெறி க்ஷீணித்தால் அதைப் புணருத்தாரணம் பண்ணுவதே சுப்ரம்மண்ய ஸ்வாமிக்கு முக்கியமான காரியமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு முறையும், வட தேசத்தில் ஒரு முறையும் இப்படிப் புறச் சமயங்களை வென்று வைதிகத்தை ஸ்தாபிக்கவே அவர் இரு அவதாரங்கள் செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட அவதாரம் ஞானசம்பந்தர், பரமேசுவரனோ, முருகனோ அவதாரம் செய்ததாகச் சொன்னால் இழுக்கு என்று நினைக்கிற சித்தாந்திகள் இருக்கிறார்கள். கர்ப்பவாஸம் செய்தால் நிஷித்தம் என்பது அவர்கள் கருத்து. 'விஷ்ணுதான் அவதரிப்பவர், எங்கள் ஸ்வாமியான சிவபெருமான் பிறவாயாக்கை' என்பார்கள். ஆனால், அத்வைதிகளுக்கு எல்லா ஸ்வாமியும் ஒன்றுதான். ஜீவாத்மாவும் பரமாத்மாவும்கூட ஒன்றுதான். இத்தனை ஜீவர்களாக அந்தப் பிரமாத்மா கர்ப்பவாஸம் பண்ணி வெளி வந்திருப்பதையே இழுக்காக நினைக்காமல் இவனிடம்கூட 'நீயும் பிரம்மம் தானப்பா' என்று சொல்வது நம் கொள்கை. தப்புப் பண்ணுகிற ஜீவர்களை ரக்ஷிப்பதற்காக, ஒரு பாபமும் தொடமுடியாத ஸ்வாமி <>அவர்களில் ஒருத்தராகப்<> பரம கருணையுடன் அவதரிப்பதாகச் சொல்வது அவருக்குப் பெருமை தருவதாகவே நமக்குத் தெரிகிறது. அருணகிரிநாதரைவிடப் பெரிய முருகனடியார் இருக்க முடியாது. அவரே திருப்புகழில் முருகனை "உறை புகலியூரில் அன்று வருவோனே" என்கிறார். புகலியூர் என்பது சீர்காழி. ஞான சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் சீர்காழியில்தான் அவதாரம் செய்தார்.
ஞானசம்பந்தர் எதற்கு அவதரித்தார் என்பதைச் சேக்கிழார், "வேதநெறி தழைத்தோங்க" என்று சொல்கிறார். சமணர்களை வாதில் வென்று பிரம்மண்யத்தை நிலைநாட்டினவர் ஞானசம்பந்தர். தமிழ் வேதமான தேவாரம் பாடிய அவரும் தம்மை "நான்மறை ஞானசம்பந்தன்" என்றே சொல்லிக் கொள்கிறார். இந்த மறைகளை, மறை கூறும் யாகாதி கர்மாக்களை வாழ்த்தி வளர்ப்பது முருகனுக்கே ஏற்பட்ட ஒரு விசேஷமான காரியம் என்று, 'திருமுருகாற்றுப்படை'யும் சொல்கிறது.
தொன்மை வாய்ந்த பத்துப்பாடலில் முதலாவதாக இருக்கிற நூல் அது. தமிழ்நாட்டில் குறவரினத்திலிருந்து சகல சமுதாயத்தினரும் சுப்ரம்மண்யரை எப்படி எப்படி வழிபட்டார்கள் என்பதை அது சொல்கிறது. நக்கீரர் அதில் ஷண்முக நாதனின் ஆறுமுகங்களில், ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு விசேஷமான காரியத்தைச் சொல்கிறபோது,
ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழா அது
அந்தணர் வேள்வி ஓர்க்கும் மே
(மந்திர விதி தப்பாமல், வைதிக சம்பிரதாயப்படி பிராமணர்கள் செய்கிற யாகங்களைக் கண்டு இன்புற்று அவற்றை வளர்க்கவே முருகனுக்கு ஒரு முகம் இருக்கிறது) என்றார்.

Monday, August 29, 2016

Drug therapy in Diabetes made simple


Aims  of management
►    To achieve near normal glycaemia
-    Short term- to prevent symptoms of hyper & hypo
-    Long term- to prevent complications
►    Good quality of life, near normal life expectancy



Types of Insulin

►      Short acting -      Soluble / Neutral insulin
                       Insulin aspart
                     Insulin lispro
►     Intermediate acting - Isophane
►     Long acting - Insulin Zinc suspension
                  new insulin analogue - Glargine 
                                 Detemir  
►      Biphasic- mixture of short and intermediate
                     Biphasic lispro
                     Biphasic Isophane


Types of Insulin



Insulin
Lispro
Aspart
Neutral/
regular
IsophaneultratardGlargine
Onset10-20301h4h2-4h
Peak1h1-3h4-6h6-18hpeak less
Duration3-5h4-8h8-14h24h20-24h





Soluble insulin / neutral /clear

►    Names - Human actrapid/ Humulin S
►    Species- Bovine, porcine, human
►    Following s/c injection 
        Onset of action – 30 min
           Peak- 1-3 hours
           Duration- 4-8 hours
►    Only insulin suitable for intravenous route –plasma half life < 5 min, required continuous infusion 
►    Used in diabetes Ketoacidosis


Sites of injections - Subcutaneous

►    Thighs
►    Upper buttocks
►    Abdomen
►    Arms
Important to rotate the site
Rate of absorption may be significantly different – faster from arm and abdomen than from thigh and buttock


Routes of Administration 

►    Subcutaneous for long term regular use
►    Intravenous infusion in acute conditions- diabetes Ketoacidosis, Perioperative period, Hyperosmolar Nonketotic state  ONLY NEUTRAL/ CLEAR INSULIN CAN BE USED
►    Continuous subcutaneous insulin infusion via pump – neutral
►    Intraperitoneal – Peritoneal dialysis patients
►    Inhaled insulin- experimental


Untoward effect of insulin

►    Hypoglycaemia
►    Weight gain- anabolic hormone
►    Lipohypertrophy- injection to same site
►    Insulin oedema
►    Transient deterioration in retinopathy
►    Insulin neuritis – actively regenerating neurone, uncommon
►    Postural hypotension



Recurrent Hypo

►    ? Required dose adjustment
►    ? Right insulin/ injection technique
►    ? Meal/ fasting related
►    ? Injections sites
►    ? Exercise
►    Unexplained - ?autonomic neuropathy


Sick day rules

    never stop insulin
    monitor more frequently
    maintain your hydration
    Check for ketones
    Know when & how to call for help


Oral Medications to Treat Type 2 Diabetes

Major Classes of Medications
    sensitize   the body to insulin +/- control hepatic glucose production

    stimulate the pancreas to make more insulin


    slow the absorption of starches 


Thiazolidinediones

Biguanides


Sulfonylureas

Meglitinides


Alpha-glucosidase

 inhibitors



Thiazolidinediones

►    ↓ insulin resistance by making muscle and adipose cells more sensitive to insulin. They also suppress hepatic glucose production.
►    Efficacy
    ↓ fasting plasma glucose ~1.9-2.2 mmol/L
    Reduce A1C ~0.5-1.0%
    6 weeks for maximum effect
►    Other Effects
    Weight gain, oedema 
    Hypoglycemia (if taken with insulin or agents that stimulate insulin release)
    Contraindicated in patients with abnormal LFT or CHF
    Improves HDL cholesterol and plasma triglycerides; usually LDL neutral
►    Medications in this Class: pioglitazone (Actos), rosiglitazone (Avandia), [troglitazone (Rezulin) - taken off market due to liver toxicity]


Biguanides

►    Biguanides ↓ hepatic glucose production and increase insulin-mediated peripheral glucose uptake.
►    Efficacy
    Decrease fasting plasma glucose 60-70 mg/dl (3.3-3.9 mmol/L)
    Reduce A1C 1.0-2.0%
►    Other Effects
    Diarrhea and abdominal discomfort
    Lactic acidosis if improperly prescribed
    Cause small decrease in LDL cholesterol level and triglycerides
    No specific effect on blood pressure
    No weight gain, with possible modest weight loss
    Contraindicated in patients with impaired renal function 
    Medications in this Class: metformin (Glucophage), metformin hydrochloride extended release (Glucophage XR)


Sulfonylureas

►    Sulfonylureas increase endogenous insulin secretion
►    Efficacy
    Decrease fasting plasma glucose 3.3-3.9 mmol/L
    Reduce A1C by 1.0-2.0%
►    Other Effects
    Hypoglycemia
    Weight gain 
    No specific effect on plasma lipids or blood pressure
    Generally the least expensive class of medication
►    Medications in this Class:
    First generation : chlorpropamide , tolazamide, acetohexamide , tolbutamide
    Second generation : glyburide , glimepiride , glipizide 


Meglitinides

►    stimulate insulin secretion (rapidly and for a short duration) in the presence of glucose.
►    Efficacy
    ↓ peak postprandial glucose
    ↓ plasma glucose 3.3-3.9 mmol/L
    ↓ HbA1C 1.0-2.0%
►    Other Effects
    Hypoglycemia (may be less than with sulfonylureas if patient has a variable eating schedule)
    Weight gain 
    No significant effect on plasma lipid levels
    Safe at higher levels of serum Cr than sulfonylureas
►    Medications in this Class: repaglinide , nateglinide


Alpha-glucosidase Inhibitors

►    Alpha-glucosidase inhibitors block the enzymes that digest starches in the small intestine
►    Efficacy
    ↓ peak postprandial glucose 2.2-2.8 mmol/L
    ↓ fasting plasma glucose 1.4-1.7 mmol/L
    Decrease A1C 0.5-1.0%
►    Other Effects
    Flatulence or abdominal discomfort 
    No specific effect on lipids or blood pressure
    No weight gain
    Contraindicated in patients with inflammatory bowel disease or cirrhosis
►    Medications in this Class: acarbose , miglitol  




Combination Therapy  for Type 2 Diabetes

Sulfonylurea + Biguanide 
    Glyburide  +  Metformin     -  Glucovance 
    Glipizide  +  Metformin     -  Metaglip

Thiazolidinedione + Biguanide

   Rosiglitazone + Metformin  -  Avandamet 


Chart


Clinic Checklists

►    Glycaemic control- home monitoring, HbA1c, inj site, hypo
►    Diet, exercise, Smoking, alcohol 
►    BP
►    Weight
►    Macrovascular- CVA, IHD
►    Microvascular- Retinopathy, microalbuminuria, neuropathy
►    Foot 
►    Lipid profile, renal function, TSH


Special circumstances

►    Intercurrent illness
►    Peri-operative period
►    Pregnancy
►    Childhood and adolescents
►    Others- travelling across time zones
                Exercise
                Alcohol
            Driving


Dr K S Myint

Specialist Registrar

Sunday, August 28, 2016

Sculpture,Step Well Rani Ki Vav ,Patan,Gujarat, India,

Rani-ki-Vav, on the banks of the Saraswati River, was initially built as a memorial to a king in the 11th century AD. Stepwells are a distinctive form of subterranean water resource and storage systems on the Indian subcontinent, and have been constructed since the 3rd millennium BC. They evolved over time from what was basically a pit in sandy soil towards elaborate multi-storey works of art and architecture. Rani-ki-Vav was built at the height of craftsmens’ ability in stepwell construction and the Maru-Gurjara architectural style, reflecting mastery of this complex technique and great beauty of detail and proportions. Designed as an inverted temple highlighting the sanctity of water, it is divided into seven levels of stairs with sculptural panels of high artistic quality; more than 500 principle sculptures and over a thousand minor ones combine religious, mythological and secular imagery, often referencing literary works. The fourth level is the deepest and leads into a rectangular tank 9.5 m by 9.4 m, at a depth of 23 m. The well is located at the westernmost end of the property and consists of a shaft 10 m in diameter and 30 m deep.