Search This Blog

Tuesday, July 5, 2016

நீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி?- DR.S.சிவன்சுதன்

நீடிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து நிற்பது யாவரும் அறிந்ததே.
உலகளாவிய அளவில் ஏறத் தாழ 400 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்கள். இன்னும் 15 ஆண்டு கள் செல்ல இத் தொகை 600 மில்லியன்களைத் தாண்டும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நீரிழிவு நோயை வராமல் தடுக்கலாமா? இது நடைமுறைச் சாத்தியமா? அல்லது வெறும் கனவு தானா? இதனை எவ்வாறு நடைமுறைப் படுத்தலாம்? போன்ற வினாக்கள் எம்முன்னே எழுந்து கொண்டிருக்கின்றன.
அன்று கண்ட கனவுகள் சில இன்று நிஜமாவது போலவே எமது முயற்சிகள் சரியான திசையில் தொடருமாக இருந் தால் இன்று காணும் கனவுகள் பல நாளை நிஜமாவது நிச்சயம்.நீரிழிவு நோய்த் தடுப்புத் தொடர்பான கனவுகளும் அது போன்றதே.
அன்று சுக போக வாழ்வு வாழ்ந்த வசதியடைந்த குடும்பங்களிடையே மட்டும் அதிகம் பரவியிருந்த இந்த நோய்கள் இன்று அனைவரையும் அசுர வேகத்தில் தாக்க ஆரம்பித்திருப்பதன் காரணம் என்ன?
குடும்பங்களின் பொருளாதாரத்திலும் வாழ்வாதாரத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்களைத்தடுத்து நிறுத்துவது எப்படி? நீரிழிவு நோய் வரும் வரை காத்திருந்து அந்த நோயின் கட்டுப்பாட்டிலும் கவனிப்பிலும் கூடிய கவனம் செலுத்தப்போகிறோமா? அல்லது இந்த நோய் ஏற்படுவதை தடுத்து நிறுத்துவதில் அதி கூடிய அக்கறை எடுக்கப்போகின் றோமா? என்று சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது.
இந்த நோய் வேகமாக அதிகரித்து வருவதற்கான அடிப் படைக் காரணங்களாக பின் வருவன அடையாளப்படுத் தப்பட்டிருக்கின்றன…
  • ஆரோக கரிய மற்ற உணவுப் பழக்கங்களுக்கு நாம் அடிமையாயிருத்தல்.
  • உடல்களைக்க வேலை செயப்யாமளிருப்பதுடன் ஒழுங்கான உடற்பயிற்சி செய்வதில் ஆர்வமற்றவர்களாக இருத்தல்.
  • உடல் நிறை சரியான அளவில் பேணப்படாமை. எமது உடல் நிறையை எவ்வளவாகப் பேண வேண்டும் என்பதும் கூடத் தெரியாமல் இருத்தல். சிறிதளவு உண்டும் உடல் நிறை தானாக கூடியிருக்கிறது என்று கூறித் திருப்தி அடைந்து கொள்ளும் நிலையில் இருத்தல்.
  • இரசாயனப்பதார்த்தங்களும் சீனியும் சேர்க்கப்பட்டு போத்தல்களில் அடைத்து விற்ப்பனையாகும் பானங்களை அதிகம் அருந்துதல் தாகம் எடுக்கும் பொழுது சோடா குடித்தல். தேனிருக்கு சீனி சேர்த்தல்.
  • மக்களிடையே ஆரோக்கியம் பேணுவது சம்பந்தமான அறிவும் விழிப்புணர்வும் போதாமலரிருத்தல். நோய் வாய்ப்பட்டவர்களிற்க்குத் தான் உணவுக்கட்டுப்பாடும் உடற் பயிற்சியும். நமக்கல்ல என்ற தப்பான அபிப்பிராயம் சிறு வயதில் எதனையும் உண்ண முடியும் என்ற தவறான சிந்தனை.
  • நீரிழிவு நோயை ஏற்படுத்தவல்ல சில சுகாதாரப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து ஏற்ற நடவடிக்கைகளை எடுப்பதில் ஆர்வம் அற்றவர்களாக இருத்தல்.
இந்த அடிப்படைப் பிரச்சினைகள் சரியான முறையில் அணுகப்படுமாயின் நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சி முன்னேற்றம் காணும்.
நீரிழிவு நோய்த்தடுப்பு என்னும் பெரிய முயற்சியை மருத்துவதுறை சார்ந்தவர்களினால் மட்டும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. இதற்கு அனைத்து தரப்பினரதும் தொடர்ச்சியான முயற்சியம் பங்களிப்பும் தேவைப்படுகிறது.
பாடசாலை மாணவாகளுடன் ஆசிரியர்களும் இதில் பெரும் பங்காற்ற வேண்டிய தேவை இருக்கிறது.ஆரோக்கியமான வாழ்க்கைமுறைமற்றும்உணவு முறை சம்பந்தமாக பாடசாலை மட்டத்திலும் சமூக மட்டத்திலும் கருத்தரங்குகளையும் விழிப்பு ணர்வுகளையும் ஏற்பாடுசெய்தல்.
பாடசாலைகளிலும் அலுவலக சிற்றுணர்டிச் சாலைகளிலும் ஆரோக்கியமற்ற உணவுப் பாவனை மற்றும் சீனி அதிகம் சேர்க்கப்பட்ட மென்பானங்களின் பாவனையை நிறுத்த நட வடிக்கை எடுத்தல்.
தேநீருக்கு சீனி பாவிப்பதை நிறுத்தி தேவை ஏற்படின் இனிப் பூட்டிகளைப் பாவிக்கும் நடைமுறைகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதை அனைத்துத் தரப்பினர்களுக்குமான கட்டாய நடவடிக்கையாக அறிமுகம் செய்ய வேண்டும். வயது வேறுபாடின்றி அனைத்து தரப்பினரையும் உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.
பெற்றோர்கள் ஒவ்வொரு வரும் தமது பிள்ளைகள் தினந்தோறும் ஓடி விளையாடுகிறார் களா? அல்லது உடற்பயிற்சி செய்கிறார்களா? என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஊடகத்துறையானது நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் சுகாதார விழிப்புணர்வு நடவடிக் கைகளிற்க்கும் கூடிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சுகாதரத்துறை சார்ந்தவர்களும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்றும் கூடிய முக்கியத்துவம் கொடுப்பதுடன் மற்றவர்களிற்கும் முன்னுதாரணமாக வாழ முயற்சிக்க வேண்டும்.
முப்பது (30) வயது கடந்த அனைவரும் ஆறுமாதங்களிற்கு ஒரு தடைவை தமது குருதி குளுக்கோசின் அளவை சோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது.
காலை தேநீருக்கு முன் குருதிக் குளுக்கோசின் அளவு 110 mg இலும் அதிகமாக இருந்தால் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியம். குருதிக் குளுக்கோசின் தளம்பல் நிலை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் நீரிழிவு ஏற்படுவதைத்தடுத்து முடியும்.
குறைந்த நிறையுடன் பிறக்கும்குழந்தைககளிற்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாகும். எனவே கற்ப காலத்தில் தாய்மார் தமது உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களது பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்க முடியும்.
பரிசுப்பொருட்களைத் தெரிவு செய்யும் போது இனிப்பு வகைகளைத் தெரிவு செய்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
விளையாட்டுப் போட்டிகள் பொது நிகழ்வுகள் சுப வைபவங்கள் போன்ற வற்றில் சோடா கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
வீட்டிற்கு வரு பவர்களுக்கும் சோடா மற்றும் இரசாயன மென்பானங்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இலகுவில் செய்யக் கூடிய சுவையான மலிவான ஆரோக்கியமான புதிய உணவு வகைகளும் பானங்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
இந்த முயற்சியில் சமையல் கலை வல்லுனர்கள் ஈடுபடுவது அவசியம். இதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவுப் பாவனைகளைப் பெருமளவு குறைக்க முடியும்.
தற்போது பலர் நீரிழிவு அல்லது மாரடைப்பு நோய்களிற்க்கு முற்பட்ட நிலைகளிலேயே இனங்காணப்படுகின்றனர். இந்தநிலையை “மெற்றாபோளிக் சிண்ட்றோம்” என்று கூறுவார்கள். இவர்கள் தொடர்ச்சியான தேக ஆரோக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடாது விட்டால் எதிர் காலத்தில் இவர்களுக்கும் இந்த நோய்கள் ஏற்பட முடியும்.
இந்த நிலையில் உள்ள சிலரிற்கு நோய்த்தடுப்பிற்காக சில மாத்திரைகளும்கொடுக்கவேண்டிய தேவை ஏற்படுகின்றது. அத்துடன் அதிகரித்த நிறை உள்ளவர்கள் “அக்கந்தோ சிஸ்ணை கிறிக் கன்ஸ்” (Acanthosis Nigricans) எனப்படும் கறுப்பு நிறத்தோல் மடிப்பு உள்ளவர்கள் வேறு சில நோய்நிலைகள் உள்ளவர்கள் போன்றோரிற்கு நீரிழிவு நோய் எற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாகும்.
இவர்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. நாம் அனைவரும் ஆரம்பத்திலிருந்தே உடல் ஆரோக்கிய நடவடிக்கைகளைக் கடைப் பிடித்து நோய்த்தடுப்பு நடவடிக் கைகளிலும் ஊக்கத்துடன் ஈடுபட்டு வருவோமாகயிருந்தால் நீரிழிவு நோயை மட்டுமல்ல இன்னும் பல தொற்றா நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தைப் பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.
Dr.S.சிவன்சுதன் 
பொது வைத்திய நிபுணர்
யாழ்.போதனாவைத்தியசாலை,

Process of converting Motion in the Engine

The ­principle behind any reciprocating internal combustion engine: If you put a tiny amount of high-energy fuel (like gasoline) in a small, enclosed space and ignite it, an incredible amount of energy is released in the form of expanding gas. You can use that energy to propel a potato 500 feet. In this case, the energy is translated into potato motion. You can also use it for more interesting purposes. For example, if you can create a cycle that allows you to set off explosions like this hundreds of times per minute, and if you can harness that energy in a useful way, what you have is the core of a car engine!
Almost all cars currently use what is called a four-stroke combustion cycle to convert gasoline into motion. The four-stroke approach is also known as the Otto cycle, in honor of Nikolaus Otto, who invented it in 1867. 

Monday, July 4, 2016

அந்த மந்திரக்காரன்

Sakthi Jothi
அந்த மந்திரக்காரன்
வனம் முழுக்கப் மரங்களைப் பூக்கச் செய்கிறான்
பூக்களுக்கு வகைவகையான நிறங்களையும்
நிறங்களுக்கு தனியொரு வாசனையையும் தந்து
மாயங்கள் நிகழ்த்துகிறான்
மேடும் பள்ளங்களும் கரும்புதர்களும்
மாயங்களை அறிந்தவனை மயக்குவதில்லை
வனத்தை உணர்ந்த அவனே
நிலத்தை நெகிழச்செய்கிறான்
காதலின் வாசனையை உணர்கையில்
அவனைத் தேடி அலைகிறேன்
மாய கானகத்தில்
வனமே அலைகையில்
அவன்
கூடுவிட்டு கூடு பாய
காடு பற்றியெரிகிறது
கானகப் பச்சை அழியத் துவங்குகிறது
பறவைகள் தடுமாறிப் பறக்கின்றன
காலச்சர்ப்பம் ஊர்ந்து வெளியேறுகிறது
ஆடைகளை களைகிறேன் சர்ப்பம்போல
மனமிருகங்கள் வெளிக்கிளம்பின ஒவ்வொன்றாக
வனம் பற்றிய பெரும்நெருப்பு
சுட்டெரிக்கும் முன்பு
நம்புகிறேன்
வனநிலம் அறிந்த ஊற்று
வற்றாமல் பெருகி
நெருப்பை அணைக்குமென
பொங்குகிறது குழிநெருப்பு
அசைகிறது காடு.
நன்றி : உயிர் எழுத்து