Search This Blog

Friday, January 1, 2016

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில்
மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்
குழந்தையாக இருக்கும் போது அவனுடைய
உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர
வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற
எலும்புகளுடன் இணைந்து விடுகிறது...
2. நாம் 6
விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.
சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்...
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள்
ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில்
சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக
வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம்
தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்
இடது கால் செருப்பை விட வலதுகாலின்
செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த
சிறு வித்தியாசத்தால் தான்...
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள்
தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது.
அவனது எலும்பு தொடர்ந்து 4
நாட்களை வரை செயல் படுகிறது. தோல்
தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண்
மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம்
பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம்
செயல்படுகிறது. அவனது சிறுநீரகம்
தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக
அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல்
உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்
லை...
5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்
ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில்
குழந்தை பிறக்கிறது. 28
நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும்
பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.
இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள
பெண்களுக்கு குழந்தை பிறப்பும்
சற்று முன்னாடியே (குறை பிரச வம்)
அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில்
கவனம் கொள்ள வேண்டும்...
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8
மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம்
பகலில் நமது வேலைகள்
செய்யும்போது தண்டு வடத்திலுள்ள
குறுத்தெலும்பு வட்டுகள்
ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால்
உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்
தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால்
நமது உடம்பின் உயரம் கூடுகிறது...
7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம்
127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள்
உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்
ஆயுட்காலம் 120 நாட்கள்...
8. நம்உடலில் சுமார் 20 லட்சம்
வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6
லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன...
9. நமது கைகளில் நடுவிரலில் நகம்
வேகமாகவும், கட்டை விர லில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல்
பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம்
மெதுவாக வளர்கிறது...
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல்
தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம்,
இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்...
11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக்
குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர்
கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4
முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.
12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித
உறுப்பு கட் டை விரல்கள்...
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம்
தாடை எலும்பு...
14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம்
தண்ணீரைக் கொண்டதாகும்...
15. கல்லீரல் 500 விதமான
இயக்கங்களை நிகழ்த்துகிறது...
16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630...
17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம்
பங்கு ரத்தம் உள்ளது...
18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்த
ு இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1
மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன...
19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம்
வயது வரை வளர்கிறது...
20. மனித முகங்களை மொத்தம் 520
வகைகளுக்குள் அடக்கி விடலாம்...
21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ...
22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9
லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்
போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்
தேவைப்படுகிறது...
23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும்
மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள்
ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால்
போன்றவற்றால் பாதிப்படைகிறது...
24.பெண்களைவிட
ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது.
பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்
ஆண்கள் மூளையில் இருக்கிறது...
25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்...
26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்...
27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்...
28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க
நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள்
கிடை யாது...
29. மூளையின்
மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது...
30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்...
31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /
கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற
வேறுபாடே தெரியாது...
32. மனித உடலின் தோலின் எடை 27
கிலோ கிராம்...
33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன...
34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை,
முழங்காலை மாற்றலாம். ஆனால்
மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம்
ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன்
தான் அவன் அந்நியன் தான்...
35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க
இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின்
விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும்
போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம்
அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந
்து கண்ணீர் வினியோகம் ஆகிறது...
36. நமது உடலிலுள்ள செல்கள்
பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது.
ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள்
இறந்து புது செல்கள் பிறக்கின்றன...
37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம்
வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல்
இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம்
வளர்கிறது...
38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54
தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது...
39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின்
இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.
ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம்
ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப்
செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை,
கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால்
போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்...
40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத்
தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்
திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது...
41. நமது உடலின் நீளமான
எலும்பு தொடை எலும்பு தான்...
42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500
சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100
சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது...
43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால்
உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்
வலியை உணர்த்துவது மூளையே...
44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம்
கூடுதலாக வியர்க்கிறது...
45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்...
46. உடலில் ரத்தம் பாயாத
பகுதி கருவிழி மட்டுமே...
47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்
பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும்
உட்கொள்கிறோம்..
48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர
அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன...
49. நம்முடைய தலை ஒரே எலும்பால்
உருவானது அல்ல, 22 எலும்புகளில்
உருவானதாகும்...
50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள்
உள்ளதாகவும், பெண்களின் முடியை விட
ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது..
51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில்
தூங்கி விடுகின்றான்...
52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்...
53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன்
முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக
இவ்வளவு வார்த்தைகளைத்தான்
பயன்படுத்துகிறார்கள்...
54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள்
உள்ளன...
55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம்
வளர்கிறது..
56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040
தடவை சுவாசிக்கின்றோம்..
57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..
58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள்
வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்
சாதனைகளை நிகழ்த்தலாம்..
59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும்
இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.
இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது...
60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும்
வளரும்...
61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த
சிவப்பணுக்கள் உள்ளன...
62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.
63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக
குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி,
வயிற்றுப் போக்கு ஏற்படும்.
64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்
எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர்
வியர்வை வெளியிடுகிறான்..
65. சிந்தனையின் வேகம்
அல்லது ஒரு யோசனையின் தூரம்
என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150
மைல்களாகும்..
66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம்
அதிகமாக துடிக்கிறது...
67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல்
நுனிவரை உள்ள நீளமும், மேவாய்
கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..
68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30
கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்..
69. உடலில் உண்டாகும் உஷ்ணம்
வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..
70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல்
முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்
இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம்
30 செகண்டு ஆகும்...
71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர்
ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய
அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான்
மனிதனுக்கு கோபம் வருகிறது...
72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம்
ஆகும்.
73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக
நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்
ஆணுக்கு பெண்குணமும்,
பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்...
74. தானாக
மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம்
ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது...
75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50
லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில்
22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால்
மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை..
76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான்.
அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால்
என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான்
அவரவர் இதயம் இருக்கும்...
77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள
'ஆலவியோலி' என் னும் சிறிய காற்று அறைகளின்
எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..
78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால்
ஆனது..
79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள்
உள்ளன..
80. மனிதனுக்கு 4 வகையான பற்கள்
உண்டு..
81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள்
9000 உள்ளன..
82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள்
உள்ளன.
83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும்
தசை நாக்கு..
84. மனித உடலில் அதிக செல்களால் உருவான
பகுதி மூளை,மூளையின்
வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால்
உருவானது..
85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம்
தூங்குகிறான்.
86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½
லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள்.
இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.
87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600
மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..
88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார்
375 முறை ஏற் படுகிறது..
89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம்
தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4
கோடி தடவை..
90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20
சதுரஅடிகள்.
91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20
ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..
92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900
பென்சில்களை உரு வாக்கலாம்.
93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7
பார் சோப்புகளை செய்ய லாம்..
94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல
ஆணி ஒன்று செய்யலாம்..
95. மனித உடலில் அதிகமாக காணப்படும்
தாதுப்பொருள் கால்சியம்..
96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர்
நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம்
வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது...
97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன்
குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால
் உபரியாக காற்றை உள்வாங்க
கொட்டாவி விடுகிறோம்...
98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின்
எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும்
நின்று விடுகிறது.
இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான்
சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத
அளவிற்கு வளர்ச்சி...
99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான்
என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்
வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள்
வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது..
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..

The smallest species of deer in the world

Oh this? It's just a pudu - the smallest species of deer in the world. It's so cute our hearts hurt. 



Pudu (Poo-doo) deer are indigenous to temperate rainforests of South America, where they hang out in dense underbrush and bamboo groves. There are two distinct species of pudu — the southern pudu that inhabit the lower Andes of Chile and southwest Argentina, and the northern pudu (Pudu mephistophiles) that inhabit the lower Andes of Ecuador, northern Peru and Colombia. Though the southern pudu deer is tiny, its cousin is actually a tad smaller, making the northern pudu the smallest deer species in the world,