Search This Blog

Tuesday, June 23, 2015

அரபு நாட்டில் அரபி தெரியாமல் கஷ்டப்படும் என் தமிழ் சொந்தங்களுக்காக


தாள் ஹின - இங்கே வா
ஹினாக் ரோ -அங்கே போ
எம்சீ - நட
தய்யுப் - நல்லது
ஹைர் - குட்
துக் - அடி
எம்சீக் - புடி
ராத்திப் - சம்பளம்
கற்பான் - ரிப்பேர்
குவைஸ் - நலம்
சர்ராப்f - எ டி எம்
புளூஸ் - பணம்
அபு - வாப்பா
உம்மி - உம்மா
அக்கு - சகோதரன்
கரீப் - பக்கம் நெருக்கம்
பஈத் - தூரம்
மோயா - தண்ணீர்
சுக்ரன் - நன்றி
சுக்ரில்லாஹ் - இறைவனுக்கு
நன்றி
கபீர் - பெரிய
ஹாரிஸ் - வாச்மேன்
சவ்வாக் - டிரைவர்
கத்தாமா - வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்
முதீர் - மேனேஜர்
கபீல் - முதலாளி
அம்மாள் - தொழிலாளி
அக்கிள் - உணவு
சயாரா - கார்
திஜாஜ் - கோழி கரி
மஜ்நுண் - பைத்தியம்
சுதா - தலை வழி
களம் - பேனா
சிகப்பு - அக்gமர்
கருப்பு - அஸ்வத்
வெள்ளை - அபியத்
மஞ்சள் - அஸ்பர்
ஹார் - ஹீட்
துக்கான் - புகை
nadhdhaara - கண்ணாடி முக spex
gaan - பசி
fathoora - பில்
faththoor - காலை உணவு
சனப் - மீசை
உசூன் - காது
எத் - கை
ஐந்ன் - கண்ணு
அஷ்னான் - பல்லு
ஜிதார்- சுவர் , மதில்
பட் ஹா - மணல்
ராமல் - மணல்
துராப் - புழுதி , தூசி, தூசு
ஆமல் - தொழிலாளி
மோயா - தண்ணீர்
ஒயிட் - தண்ணீ லாரி
சவ்வாக் - டிரைவர்
முஹன்தீஸ் - இஞ்ஜினியர்
சப்பாக் முஹன்தீஸ் - மெக்கானிக்கல் இஞ்சினியர்
காரபா - எலக்ற்றிகள்
காரபாய் - எலக்ட்ரீசியன்
முராக்கப் - foreமேன்
மசூரா - பைப்
இஜ்தீமா - மீட்டிங்
சில்க் - வயர்
முஸ்மார் - ஆணி
வரக்கா - பேப்பர்
களம் - பேனா
தர்தீப் - ஒழுங்கு படுத்துதல்
யவ்முல் ஜும்மா - வெள்ளி கிழமை
எல்லா சவா சவா ரோ மஸ்ஜித் - மஸ்ஜிதிற்கு சேர்ந்து போவோம்
எல்லா சூரா சூரா - சீக்கிரம் கிளம்புங்க
அக்கிள் கலாஸ் - சாப்டாச்சா
லா - இல்லை
லிஸ்ஸ maafi - இன்னும் இல்லை
maafi - இல்லை
எல்லா ரோ
பாக்காலா - கடைக்கு போவோமா
பாக்காலா - கடை
சூக் - மார்கெட்
அல் எவ்ம் அன மா ஈஜி - இன்று நான் வர வில்லை
அல் எவ்ம் அன தாபான் - இன்று எனக்கு உடம்பு சரி இல்லை
தாபான் - உடல் நிலை சரி இல்லை
எல்லா ரோ முச்தஷ்பா - ஹாஸ்பிடல் போ
முஷ்தஷன்பா - ஹாஸ்பிடல்
ஜீப் இக்காமா - உன் இக்காமா கொடு
அந்த்த fபெய்ன் சுகுள் - நீ எங்கு வேலை செய்கிறாய்
கம் ராத்திப் - எவ்வளவு சம்பளம்
கம் - எவ்வளவு
ராத்திப் - சம்பளம்
அன ரோ பார்ரா - நான் வெளியே செல்கிறேன்
அன மவ்ஜூத் பேத் - நான் வீட்டில் இருக்கிறேன்
அன எபுக்க ராத்திப் சியாதா - எனக்கு சம்பளம் அதிகம் வேண்டும்
சியாதா - அதிகம்
சிரிப்பு - இத் ஹாக்
அழுகை - இப்கி
லேஸ் அந்த்த இப்கி - நீ ஏன் அழுகிறாய்
லேஸ் - ஏன்
அந்த்த - நீ
ஏற்ஜா பேத் - வீட்டுக்கு திரும்பி செல்
எர்ஜா - திரும்பி
பேத் - வீடு
எஸ்மக் - உன் பெயர் என்ன
எம்சீ - நட , செல்
அன gaan சியாதா - எனக்கு பசிக்கிறது
Thamks
Kiritharan Karthigesu Yoganathan

அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்..வீடியோ வடிவில் ...பார்க்கவும் ..பகிரவும் ..நன்றி

அஷ்ட லக்ஷ்மி துதி!
1. தனலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
2. வித்யாலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
3. தான்யலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
4. சௌபாக்யலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
5. வீரலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு முஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
6. சந்தானலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
7. காருண்யலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
8. மகாலக்ஷ்மி
யா தேவீ ஸர்வ பூதேஷு லக்ஷ?மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...


தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.