Search This Blog

Wednesday, August 28, 2013

காட்டாமணக்கின் பயன்பாடு ஏராளம்...

பொதுவாக காட்டாமணக்கு என்றால் இயற்கை எரிபொருளை கொடுக்கும் தாவரம் என்று கூறுவர். ஆனால், காட்டாமணக்கு ஒரு சிறந்த மூலிகை பயிர் ஆகும். இது அனைத்து பகுதிகளிலும் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. காட்டாமணக்கு தாவரத்தில் இருந்து வரும் பால் போன்ற திரவம் பல் வலிக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.

காட்டாமணக்கின் நுனிக்குச்சிகளை கொண்டு பல் துலக்கும் கிராமத்தினர் தற்போதும் உண்டு. இதனால் பல் சொத்தை, பற்சிதைவை உண்டாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது. ஆயுர்வேதம், சித்த மருத்துவ ஆய்வாளர்கள் இந்த பால் போன்ற திரவத்தில் ஜெட்ரோபின், ஜெட்ரோபாம், காகேன் போன்ற வீரியம் நிறைந்த ஆல்கலாய்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

மேலும், இந்த வெள்ளை திரவத்தை தேள் அல்லது தேனி கொட்டிய இடங்களில் வைத்தால் கொட்டிய பூச்சியின் கொடுக்கு வெளியில் வந்துவிடும் எனவும் கிராமங்களில் கூறுவர். காட்டாமணக்கின் இலைச்சாறும் மருத்துவத்திற்கு உதவுகிறது. இதில் அபிஜெனின், விட்டெக்சின், ஜசோவிட்டெக்கின் என்கின்ற மூலக்கூறுகள் அதிகளவில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள் மலேரியா, மூட்டுவலி, தசைவலிக்கு மருந்தாக பயன்படுகின்றது. மேலும், மஞ்சள்காமாலை, புற்றுநோய், இருமல், கக்குவான், வீக்கம், வயிற்றுப்புண், நிமோனியா, வீக்கம், வாதநோய்களை குணப்படுத்த உதவுகின்றன என ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றன.

இதன் வேரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பாம்புகடிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வேரை இடித்து சாறாக்கி கொப்பளித்தால் பல் ஈறுகளில் இருந்து வடியும் ரத்தகசிவை உடனடியாக நிறுத்தலாம். இத்தாவரத்தின் விதையில் மட்டும் சில நச்சுப்பொருட்கள் உள்ளதால் இதை மட்டும் மருத்துவத்திற்கு நேரடியாக பயன்படுத்த முடியாது. இன்றைய காலகட்டங்களில் பல மூலிகை பயிர்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதில், காட்டாமணக்கு பயிரையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம்

ஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு.!

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. அதன் பெயர், ஜின்ஜெங். இது சீனாவில் உற்பத்தியாகிறது.

* இந்த வேரை அரைத்துக் குடிக்கிறார்கள். மாத்திரை, கேப்ஸ்யூல் ஆக்கி விழுங்குகிறார்கள், தேநீர், காபியில் கலந்து பருகுகிறார்கள். மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சோப்பிலும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள்.

* காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

* ஜின்செங் செடி 5 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் வளர்க்கப்படுகிறது. 1948-ல் இளம் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ஜின்செங் வேரை ராணுவ வீரர்களுக்குக் கொடுத்துப் பார்த்தார்.

* உடனே அவர்கள் அதிகமான சுறுசுறுப்பு அடைந்து வேலை செய்தார்கள். அதிலிருந்து ஐரோப்பாவில் ஜின்செங் வேர் பிரபலமாகிவிட்டது. சமீப ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு ஜின்செங் வேர்களை அமெரிக்கா வாங்கியுள்ளது.

* ஜின்செங்கின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆராய பல சர்வதேச மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

* இருந்தாலும் சீன, கொரிய டாக்டர்கள், ஜின்செங் வேரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று இப்போதே அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.

* படிப்புத் திறனையும், நினைவாற்றலையும் ஜின்செங் அதிகப்படுத்தி இருப்பதை அவர்கள் சோதனைகள் மூலம் நிலைநாட்டியிருக்கிறார்கள்.

Tuesday, August 27, 2013

நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்

கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும்.

உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.

2. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்

4. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

5. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

6. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

8. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

9. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

12. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

13. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

ஒரு நொடி கோபப்பட்டால் 60 விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.