Search This Blog

Monday, July 29, 2013

The economics of happy

Australian National University   

Jared_Rodriguez_economy_ANU
[New research has shown that natural and social capital have decreased over the past 35 years.
Image: JaredRodr'iguez/truthout/ANU
Over the last three decades global society has grown richer, but not better off.
“Although the global economy has tripled since 1950, global human well-being, as estimated by the Genuine Progress Indicator (GPI), has been flat or decreasing since around 1978,” said Dr Ida Kubiszewski.
A study from The Australian National University (ANU) led by Dr Kubiszewski compared the GPI to Gross Domestic Product (GDP) in 17 countries representing the majority of the world’s population.
GPI is calculated through the measure of 25 different variables including consumption, income distribution, volunteer and household work, and importantly, environmental and social costs.
“Interestingly, 1978 is also around the time that the human ecological footprint exceeded the Earth’s capacity to support life on it. Other global indicators, such as life satisfaction, also began to level off around this time.”
Dr Kubiszewski said that both natural and social capital have decreased over the past decades.
“The depletion of natural capital can be seen through the decreased quality of air and water in many countries, climate disruption, deforestation, acidification of our oceans, and many other impacts humans are having on the environment.
“On national levels, the deterioration of social capital can be seen through the significant increase of inequality.”
Dr Kubiszewski said that the research highlights the need for taking a more considered approach to measuring success in societies.
“The original creators of GDP never meant it to be an indicator of societal well-being and it’s a mistake to continue using it for this purpose,” she said.
Editor's Note: Original news release can be found here.

What Is Cancer? A Shocking Truth...

செல்லி : கூக்லி : அசெம்ப்லி …
கேன்சர் பயம் கேன்சல்ட் (Cancel the fear of Cancer)
********************************************
செல்லி : சின்ன வயசு நல்லாத் தான் பா இருந்தா ..தொண்டை அடைக்கறா மாதிரி யே இருக்கு..முழுங்கும் போது கஷ்டமா இருக்குன்னு சொல்லுவா…ஒரு நாள் திடீர்னு வாந்தி எடுத்தா ..டாக்டர் கிட்ட போய்க் காட்டினா ..டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தா ஃபுட் பைப் ல கேன்சராம் .உருக் கொலஞ்சு போய்டாங்க மொத்த குடும்பமும்..ஆபரேஷன் பண்ணனுமாம்..அப்புறம் கீமோதெரபி ட்ரீட்மென்ட் ..பயம்மா இருக்கு எந்த நேரத்துல யாருக்கு என்ன வரும்னே சொல்ல முடில.
.
கூக்லி : ஒன்னு தெரிஞ்சிக்கோ ..இந்த பயம் தான் கான்சரை விட உயிர்க் கொல்லி..ஆங்கிலத்துல சொல்லனும்னா FEAR ..it has got two meanings
1 .Forget Everything And Run
2. Face Everything And Rise
Choice is yours…
மொதல்ல நம்மில் பாதி பேருக்கு இந்த கேன்சரைப் பற்றி சரியான அறிவு இல்லை..அதைப் பற்றி பேச்செடுத்தாலேக் காது குடுத்துக் கேட்க கூட பயப்படுகிறார்கள்..அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டாலெ அதை எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்றும் வரும் முன் பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்து விடும்.

செல்லி : சரி சொல்லேன் ..இந்த கேன்சர் னா என்ன?

கூக்லி : கேன்சர் செல்கள் எல்லார் உடம்பிலும் இருக்கும் தெரியுமா? .அவை கம்மியாக இருக்கும்..இப்ப உன் உடம்பிலும் இருக்கும்..

செல்லி : அப்ப நான் போய் டெஸ்ட் பண்ணி ட்ரீட் பண்ண வேண்டாமா?

கூக்லி : வேணடாம். ..இப்ப போய் டெஸ்ட் பண்ணி பார்த்தா தெரியாது..அது பல மில்லியன் செல்களாக உருவெடுக்கும் போது தான் தெரிய வரும் ....அதுவரை எந்த டெஸ்ட் செஞ்சாலும் தெரியாது..

செல்லி :அப்ப எப்ப தெரிய வரும்..எப்படி இந்த செல்கள் அதிகமாக பெருகும்?

கூக்லி : மனுஷ உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் போது இந்த செல்கள் பெருகாது..எப்ப நோய் எதிர்ப்பு சக்தி குறையுதோ அப்ப இந்த செல்களும் பெருகும்..எதேனும் சத்து உடம்புல குறையும் போது இந்த செல்கள் பெருக வாய்ப்பு இருக்கு..பெருகி கேன்சர் கட்டி வருகிறது..

செல்லி ஆபரேஷன் பண்ணித்தானே கட்டிய எடுக்கணும்?

கூக்லி : ஆமாம்.

செல்லி : அப்புறம் அந்த செல்கள் உடம்புல அழிக்க கீமோதெரபி செஞ்சுதானெ ஆகணும் ?

கூக்லி : நாம் அணுகும் முறை தான் தவறு..இதை புரிஞ்சிக்கோ.வீட்டிலோ ரோட்டிலோ கொசு அதிகமாக இருக்கும் போது கொசுவை அழித்தால் மட்டும் போதாது..குப்பைகளை தேக்கி வைக்காமல் இருக்கனும்..குப்பை இருக்க இருக்க கொசு வந்துகிட்டே தான் இருக்கும்..அதனால் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்..அது போல் தான் நம் உடலையும் இந்த கேன்சர் கிருமிகள் பெருகாத வாறு வைத்திருக்க வேண்டும்..

செல்லி : அப்ப கீமோதெரபி நல்லதில்லையா?

கூக்லி : கீமொதெரபீ சிகிச்சை வேகமா வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாம எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. இன்னும் குடல், கிட்னி, இதயம், போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது.கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது..இதனால் மீண்டும் கேன்சர் செல்கள் பெருகத் தான் வாய்ப்பிருக்கு.. கீமோ தெரபி செஞ்டுகிட்டதால தான் நிறைய பேர் இறக்கிறார்கள்..

செல்லி: இதென்ன ?..அப்ப கீமோதெரபி யை ஏன் டாக்டர்கள் கை ஆளுகிறார்கள்..?

கூக்லி : அப்படித்தான் ..புற்று நோய்க்கு) கீமொதெரபீ சிகிச்சை மட்டுமே தான் வழின்னு இந்த டாக்டர்கள் சொல்றத மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது ன்னு ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் ன்ற டாக்டர் சொல்றார்.

இந்த வீடியோவ பாரு..உனக்காக நானும் அவர் சொன்னத தமிழில் மொழி பெயர்த்து போடறேன்

1) மொதல்ல இந்த கேன்சர் செல் பெருகாமல் இருக்க உடலில் ஆக்சிஜன் லெவெல் அதிகமாக இருக்க வேண்டும் .ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலைல கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. அதனால் தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும். மூச்சுப் பயிற்ச்சி செய்தால் உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்கும் இந்த ஆக்சிஜன் தெரபி உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

2 ) இரண்டாவது பெருக்கி அமிலத் தன்மை உள்ள உணவுகள்.. கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழி கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணாமல் தவிர்க்கணும்.ஆடு,பன்றி இறைச்சி சோடா,கோக் ,காஃபி டீ போன்றவற்றை முழுவதுமாக தவிர்க்கனும் ..இதற்கு பதிலா நிறைய க்ரீன் டீ குடிக்கலாம் .மீன் மற்றும் சிக்கன் குறைந்த அளவில் எடுத்துக்கலாம்.....பச்சைக் காய்கறிகள் ,பழங்கள் முக்கியமாக நார் சத்து நிறைந்த இலை தழைகள் தான் மிகச் சிறந்த உணவு..காரத் தன்மை உள்ள உடலில் கேன்சர் செல்கள் அழிந்து விடும் அல்லது பெருகாது . சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம்,. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் சத்தைப் பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! ..நல்ல சுத்திகரிக்கப் பட்ட நீரை நிறைய அருந்துவதும் கேன்சர் செல்களை எதிர்த்து போராட உதவும் ..சர்க்கரை ,உப்பும் மிகவும் கெடுதல்..அப்புறம் ரொம்ப முக்கியம் நோ சிகரெட் நோ மது…!

3. ஸ்ட்ரெஸ் இல்லாமல் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளணும்.ஸ்ட்ரெஸ் இன்னொரு கேன்சர் செல் பெருக்கி. ஸ்ட்ரெஸ் உடலின் அமிலத் தன்மையை அதிகரிக்கும் அதனால் கேன்சர் செல் பெருக வழி வகுக்கும்

கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! பாசிடிவான சிந்தனைகள் , ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கும்..
கோப தாபங்கள் கொள்ளாம, அன்பா,உற்சாகமா எல்லாவற்றையும் நல்ல நகைசுவை உணர்வோட அணுக கத்துக்கணும்..இந்த மூனு விஷ்யங்களக் கடைப் பிடிச்சு ,கூட இருக்குறவ்ங்களும் சப்போர்டிவா இருந்து இதை எதிர்த்து போராட என்னால ,நம் குடும்பத்தால முடியும்ங்ற பாசிடிவ் எண்ணத்தோடு இந்த கேன்சரை அணுகினால் கீமோதெர்பி சிகிச்சை இல்லாமலேயே இயற்கையாக கேன்சரை வென்று விடலாம்..

செல்லி : சூப்பர் பா ..இந்த 8 நிமிட வீடியோவப் பார்த்தாலே மனதில் கேன்சரைப் பற்றி எதிர் மறை எண்ணமும்,பயமும் கொஞ்சம் விலகி தெளிவாத் தான் இருக்கு..

கூக்லி: ம்ம் சரி உன் நண்பர்களிடமும் இதை பகிர்ந்துக்கோ.. மொக்கை ஜோக்குகளையும் ஸ்டேடஸ்களை ஷேர் செய்வதற்கு இடையில் முடிந்த வரை இந்த வீடியோவையும் ஷேர் செய்ய சொல்லு .
.
செல்லி : இதோ இப்பவே போடறேன்..நன்றி கூக்லி.

கொலஸ்டரோல் பிரச்சனையை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்:-

வெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத மற்றொரு ஆபத்தான நோய்தான் கொலஸ்டரோல். பிரச்சனை. இது வயதானவர்களுக்கான பிரச்சனை மட்டும் என எண்ண வேண்டாம். இப்பொழுது நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விசயமாக இருக்கிறது.

அது மட்டுமல்ல குழந்தைப் பருவத்திலேயே இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவது ஆரம்பித்து விடுவதால் எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?

கொலஸ்டரோல் உங்கள் இரத்தத்தில் அதிகரித்திருந்தால் என்ன நடக்கும். வெளிப்படையாக உங்களுக்கு உடலுழைவோ, கழுத்துழைவோ, நெஞ்சு வலியோ, இளைப்போ வேறெந்தப் பிரச்சனையோ இருக்கப்; போவதில்லை. ஆனால் சற்றுக் காலம் செல்ல,
பக்கவாதம்,

மாரடைப்பு

சிறுநீரக நோய்கள்,

கண்பார்வை பாதிப்பு,
போன்ற கடுமையான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

என்ன பரிசோதனை

வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் இல்லாத பிரச்சனை என்பதால் இரத்தப் பரிசோதனை மூலமே ஒருவருக்கு இந்நோய் இருப்பதைக் கண்டறியலாம்.
Lipid Profile என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. 12 மணிநேரம் உணவின்றி இருந்து இந்த இரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். பானங்களும் ஆகாது. ஆனால் வெறும் நீர் அருந்துவதில் தவறில்லை.

யாருக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்?

25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களும், இப்பரிசோதனையைச் செய்வது விரும்பத்தக்கது.

ஆயினும் கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக் கூடிய வாய்ப்புள்ள ஏனையவர்களுக்கும் வயது வித்தியாசமின்றிச் செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.

பின்வருவோர் கட்டாயம் பரிசோதனைக்கு ஆளாவது அவசியம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளோர்

நீரிழிவு நோயாளிகள்

சிறு நீரக வழுவல் (Renal failure) உள்ளோர்

இருதய நாடி, அல்லது மூளை நாடி நோயுள்ளோர். அதாவது மாரடைப்பு பக்கவாதம் போன்ற நோயுள்ளவர்களும் அதுவரக் கூடிய சாத்தியமுள்ளவர்களும்.

தமது இரத்த உறவுகளில் மேற் கூறிய இருதய நாடி, அல்லது மூளை நாடி நோயுள்ளோர்

கொழுத்த உடல் வாகுடையோர் ( BMI >25)

புகைபிடிப்போர்

உடலுழைப்பு அற்ற தொழில் செய்பவர்கள்

மாதவிடாய் முற்றாக நின்ற பெண்கள்
அத்தகையோர் வயது வேறுபாடின்றி தமது இரத்த கொலஸ்டரோல் அளவை அறிந்திருப்பது அவசியமாகும்.

இரத்த கொலஸ்டரோலில் Total Cholesrterol, LDL , HDL, triglygeride எனப் பல வகைகள் உண்டு. ஒருவரது கொலஸ்டரோல் வகைளில் முக்கியமானது கெட்ட கொலஸ்டரோல் என்று சொல்லப்படும் LDL (Low density lipoprotein) கொலஸ்டரோலும், ரைகிளிசரைட் (Triglygeride) கொலஸ்டரோல் ஆகிய இரண்டுமாகும்.

ஏன் அதிகரிக்கின்றன?

இவை அதிகரிப்பிற்கு
உணவு தவிர்ந்த ஏனைய காரணிகள் 75 சதவிகிதமாக இருக்கின்றன.
ஆனால் உணவு சார்ந்த காரணிகள் 25 சதவிகிதம் மட்டுமே.

ஏனைய காரணிகள்

குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளின் பங்களிப்பு பின்வருமாறு இருக்கிறது.
பரம்பரை அம்சங்கள் 15% சதவிகிதம்,

அதிகரித்த எடை 12% சதவிகிதம்,

ஹோர்மோன்களும் நொதியங்களும் 8% சதவிகிதம்,

உயர் இரத்த அழுத்தம் 8% சதவிகிதம்,

அதிக மது பாவனை 2% சதவிகிதம்,

மனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8 % சதவிகிதம்,

நீரிழிவு 7% சதவிகிதம்,

உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6% சதவிகிதம்,

புகைத்தலும், சூழல் மாசுக்களும் 6% சதவிகிதம்,

ஆணா பெண்ணா என்பது, வயது அதிகரிப்பு, சிலவகை மருந்துகள், போன்றஏனைய பல காரணிகள் 5% சதவிகிதம்
எனச் சொல்லப்படுகிறது.

இவற்றில் மிக உயர்ந்த அளவான 25% சதவிகிதத்தைக் கொண்டிருப்பது உணவுமுறைகளே.

எனவே எமது குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பிற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவுமுறைகள்தான் என்பதில் ஐயமில்லை.

ஆனால் அதற்கு அடுத்து இருப்பது பரம்பரை அம்சங்களாகும். இது 15% சதவிகிதம் வரை கொலஸ்டரோல் அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கிறது.

செய்ய வேண்டியவை

1. கொலஸ்டரோல் மிகுந்துள்ள உணவுகளைக் குறையுங்கள்

2. உணவில் பொதுவாக எல்லாக் கொழுப்புப் பொருட்களையும் குறையுங்கள்

3. நார்ப்பொருள் அதிகமுள்ள உணவுகளை (தவிடு நீக்காத தானிய வகைகள், காய்கறிகள், பழவகைகள்) கூடுதலாக உட்கொள்ளுங்கள்

4. புகைப்பராயின் அதை நிறுத்துங்கள்

5. தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்

6. எடையை உங்களது உயரத்திற்கு ஏற்றவாறு வைத்திருங்கள்.

7. மதுபானத்தைத் தவிருங்கள்.

8. மருத்துவ ஆலோசனையின் படி மருந்துகளை உட்கொள்ளுங்கள்

9. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதீத எடை போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிக அவசியம்.

நன்றி= ஹாய் நலமா
Photo: கொலஸ்டரோல் பிரச்சனையை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்:-