Search This Blog

Wednesday, May 29, 2013

படித்ததில் -பிடித்தது அழுக்குப்படுத்த முடியாத அறிவுச் சூரியன் "அம்பேத்கர்"





ஒரு மாட்டு வண்டிக்காரன் அச் சிறுவனை ஏற்றிக் கொண்டு போகிறான். அவனது பேச்சொலியின் வட்டாரவழக்கிலிருந்து அவன் தீண்டத்தகாத சிறுவன் என்று அறிந்ததும் மாட்டைக் கழட்டி விட்டு வண்டியைக் குடை சாய்க்கிறான் வண்டிக்காரன்.

தாகத்துக்கு அந்தச் சிறுவன் தண்ணீர் கோட்கிறான்;
அதோ இதுதான் உனக்கான தண்ணீர் எனச் சாலையோரப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரைக் காட்டியுள்ளார்கள்...
உயர் சாதிக்காரர்கள்.

அவன் மட்டுமல்ல- அவன் எழுதிய தாளும் தீண்டத்தகாதது என்று நோட்டுப் புத்தகத்தைத் திருத்த மறுக்கிறார்
ஆசிரியர்.

முடி வெட்டி முடிந்தபின் அவன் தீண்டத்தகாதவன் என்று தெரிந்து கொண்ட ஒரு சவரத் தொழிலாளி கத்தியை எங்கே கழுவுவேன் என்று கத்துகிறான். அன்று முதல் தன் சகோதரியிடம் முடிவெட்டிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறான்.

வடமொழியைப் பாடமாய் எடுத்துப் படிக்க விரும்பிய போது இந்து தர்மம் -கல்விச் சட்டம் இரண்டுமே இடம் தரவில்லை அவனுக்கு.

பதினாறு வயதில் திருமணம் நடக்கிறது; தீண்டத் தகாதவர்கள் பகலில் திருமணம் புரியக் கூடாது எனும் விதிக்குட்பட்டு ஒரு மீன் அங்காடியில் சாக்கடை மூடிய கற்பலகையே மேடையாய் இரவில் நடக்கிறது அந்த ஏழையின் திருமணம்.

இத்தனை அவமானத்தையும் தன் கொள்கைக்கு உரமாயிட்டு வளர்ந்த கோபுரத் தலைவன் தான் இந்திய அரசமைப்பை வடிவமைத்திருக்கிறார். அடிமை இந்தியாவில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்குகெதிராகவும்,
சுதந்திர இந்தியாவில் இந்து ஏகாதிபத்தியத்திற்குகெதிராகவும்
இரண்டு யுத்தங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.

சேறும் சகதியும் சுவரை அழுக்காக்கலாம்;
சூரியனை அழுக்காக்குமோ?
அழுக்குப்படுத்த முடியாத அறிவுச் சூரியன்
"அம்பேத்கர்"

சாணக்கியரின் நேர்மை!

சாணக்கியரின் நேர்மை!
வரலாற்றில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவக் கதை...

இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் சாணக்கியர். அவர் அரசியல் மேதை. அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர்.

சாணக்கியர் என்பவர் சுமார் 2350 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தலைசிறந்த தத்துவஞானி ஆவார். இவர் நீதிமுறை, பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்.
சாணக்கியருக்கு கௌடில்யர் மற்றும் விஷ்ணு குப்தர் என்ற மற்ற இரு பெயர்களும் உள்ளன. சாணக்கியரின் அர்த்தசாஸ்திர நூல் பண்டைய இந்திய அரசியல் நூலாகத் திகழ்கின்றது.
சமண மத நூலான அபிதான சிந்தாமணி, சாணக்கியர் தென் இந்தியாவைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடுகின்றது. ஏனைய குறிப்புகள் சாணக்கியர் வட இந்தியாவை சேர்ந்தவர் எனக் குறிப்பிடுகின்றன. யாதுமாகினும் சாணக்கியர் பாரத தாயின் மைந்தன் என்பதில் ஐயமில்லை.
சாணக்கியர் இயற்றிய இரண்டு நூல்கள்:
1) அர்த்தசாஸ்திரம்
2) சாணக்கியர் நீதி சாஸ்திரம்

அவற்றுள் அர்த்தசாஸ்திரம் அரசியல், அனைத்துலக உறவுமுறை, போர் தந்திரம், நாணய முறைமை, நாட்டுப் பொருளாதாரம் குறித்த விஷயங்களை விரிவாக விளக்குகின்றது.
சாணக்கியர் நீதி சாஸ்திரம் பல்வேறு சாஸ்திர நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட தத்துவங்களும் முதுமொழிகளும் அடங்கிய ஒரு நூலாகும்.
...
ஒருநாள் அரசவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாணக்கியர் தலைமை அமைச்சர் என்ற முறையில் எழுந்து, `மன்னா! நம் மக்களில் பலர் ஏழ்மை நிலையில் கடுங்குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும் என்றார்.

தலைமை அமைச்சர் அவர்களே! தங்கள் கருத்தை வரவேற்கிறேன். எல்லா ஏழை எளிய மக்களுக்கும் கம்பளிப் போர்வை வழங்க ஏற்பாடு செய்கிறேன். அந்தப் பொறுப்பைத் தங்களிடமே ஒப்படைக்கிறேன் என்றார் அரசர்.

அதன்படியே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சந்திரகுப்தர்.

சாணக்கியர் ஆடம்பரம் இல்லாத சாதாரண வீட்டில் வசித்து வந்தார். கம்பளிப் போர்வை பற்றிய விஷயம் அந்த ஊர் கொள்ளையர்களுக்குத் தெரியவந்தது.

கம்பளிப் போர்வைகளைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என்று திட்டமிட்டார்கள்.

குளிர்காலம். நள்ளிரவு. சாணக்கியர் வீட்டிற்கு மூன்று கொள்ளையர்கள் சென்றனர். கம்பளிப் போர்வைகள் விதவிதமாக மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன. சற்றுத் தள்ளி ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டு சாணக்கியர் படுத்திருந்தார். பக்கத்தில் அவரது வயதான தாயாரும் ஒரு பழைய கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்த திருடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

திருட வந்ததையும் மறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பினர். கண் விழித்த சாணக்கியர் திகைத்தார். எதிரே மூன்று திருடர்கள். அவர்களில் ஒருவன் ஐயா! நாங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்பளிகளைத் திருட வந்தோம். இவ்வளவு புதிய கம்பளிகள் குவிந்திருக்கும் போது நீங்களும், உங்கள் தாயாரும் கிழிந்து போன பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டிருக்கின்றீர்களே... இவற்றில் இரண்டைஎடுத்துக் கொள்ளக்கூடாதா? என்றான்.

அதற்கு சாணக்கியர், அவை எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. ஏழை எளிய குடிமக்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரசாங்கப் பொருள்கள். அவற்றை எப்படி என் உபயோகத்துக்கு பயன்படுத்த முடியும்? என்றார் சாணக்கியர்.

திருடர்கள் சாணக்கியரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். எங்களை மன்னித்து விடுங்கள். இனி பிறருக்குச் சொந்தமான பொருள்களைத் திருடவே எண்ண மாட்டோம் என்று சத்தியம் செய்தார்கள்.

#சாணக்கியரின் செயலைக் கவனித்தாயா? இந்தக் கதையைக் குறிப்பிட்டதன் காரணம், பொது வாழ்க்கையில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத்தான்.

டி .எம்.சௌந்தரராஜன் அவர்களின் முக்கியமான தனிப் பாடல்கள்


திருவிளையாடல் -பாட்டும் நானே
அருணகிரிநாதர் - முத்தைத் திரு பத்தித்
முதலாளி -ஏரிக் கரையின் மேலே
திருமணம் -மங்கியதோர் நிலவினிலே
வளையாபதி - குலுங்கிடும் பூவில் எல்லாம்
மந்திரிகுமாரி - அன்னம் இட்ட வீட்டிலே
கூண்டுக்கிளி -கொஞ்சும் கிளியான
நானே ராஜா -மந்தமாருதம் தவழும்
மலைக்கள்ளன் -எத்தனை காலம்தான்
தூக்குத் தூக்கி - பெண்களை நம்பாதே
ஏறாத மலைதனிலே
சதாரம் -எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே
நான் பெற்ற செல்வம் -வாழ்ந்தாலும் ஏசும்
ராணி லலிதாங்கி -ஆண்டவனே இல்லையே
மர்ம வீரன் -ஓ எந்தன் பிரேமா
சபாஷ் மீனா - சித்திரம் பேசுதடி
சௌபாக்கியவதி - தில்லையம்பல நடராஜா
சாரங்கதாரா -வசந்த முல்லை போலே
உத்தமபுத்திரன் -யாரடி நீ மோகினி
நாடோடி மன்னன் - தூங்காதே தம்பி தூங்காதே
பதிபக்தி -வீடு நோக்கி ஓடி வந்த
பாகப் பிரிவினை - ஏன் பிறந்தாய் மகனே
பாவ மன்னிப்பு -வந்த நாள் முதல்
தாய் சொல்லைத் தட்டாதே -போயும் போயும்
தாயைக் காத்த தனயன் - கட்டித் தங்கம்
பார் மகளே பார் -பார் மகளே பார்
பாதை தெரியுது பார் - சின்னச் சின்ன மூக்குத்தியாம்
பார்த்தல் பசிதீரும் -பிள்ளைக்குத் தந்தை
ஆலயமணி - பொன்னை விரும்பும்
நிச்சய தாம்பூலம் - பாவாடை தாவணியில்
பலேபாண்டியா - நான் என்ன சொல்லி விட்டேன்
படித்தால் மட்டும் போதுமா? - நான் கவிஞனுமல்ல
இரத்தத் திலகம்- ஒரு கோப்பையிலே
இருவர் உள்ளம்- கண்ணெதிரே தோன்றினாள்
தெய்வத் தாய் - ஒரு பெண்ணைப் பார்த்து
படகோட்டி - தரை மேல் பிறக்க வைத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
எங்க வீட்டுப் பிள்ளை- நான் ஆணையிட்டால்
பெண் போனால்
கலங் கரை விளக்கம் - நான் காற்று வாங்கப் போனேன்
அன்பே வா -உள்ளம் என்றொரு கோயிலிலே
புதியபறவை -எங்கே நிம்மதி ,எங்கே நிம்மதி
பச்சை விளக்கு - ஒளி மயமான எதிர்காலம்
என் கடமை -நில்லடி நில்லடி சீமாட்டி
ஹலோ மிஸ்
ஆண்டவன் கட்டளை -ஆறு மனமே ஆறு
கை கொடுத்த தெய்வம் - ஆயிரத்தில் ஒருத்தியம்மா
வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால்
ஆயிரத்தில் ஒருவன் - அதோ அந்தப் பறவை
ஓடும் மேகங்களே
குடியிருந்த கோயில் -என்னைத் தெரியுமா
இரவும் பகலும் -இரவும் வரும் பகலும் வரும்
உள்ளத்தின் கதவுகள்
பெண்ணே நீ வாழ்க -பொல்லாத புன் சிரிப்பு
மனம் ஒரு குரங்கு -மனம் ஒரு குரங்கு
செல்வமகள் - அவன் நினைத்தானா
பேசும் தெய்வம்- நான் அனுப்புவது கடிதம் அல்ல
கௌரி கல்யாணம்- ஒருவர் மனதை ஒருவர்
சாந்தி -யார் அந்த நிலவு?
நீலவானம் -ஒ, லிட்டில் பிளவர்
பெற்றால்தான் பிள்ளையா -செல்லக் கிளியே [டி.எம்.எஸ்.]
தங்கை -தண்ணீரிலே தாமரைப் பூ
நெஞ்சிருக்கும் வரை - பூ முடிப்பாள்
ஒளி விளக்கு -தைரியமாகச் சொல் நீ
வல்லவனுக்கு வல்லவன் -ஓராயிரம் பார்வையினிலே
தொழிலாளி -ஆண்டவன் உலகத்தின்
ஆனந்தி -கண்ணிலே அன்பிருந்தால்
கண்ணன் என் காதலன் -பாடுவோர் பாடினால்
கல்லும் கனியாகும் -நான் கடவுளைக் கண்டேன்
கை விரலினில் பிறந்தது
ஐந்து லட்சம் -நான் பாடிய தமிழ்ப் பாட்டு
நம் நாடு - நல்ல பேரை வாங்க
மன்னிப்பு நீ எங்கே
கார்த்திகை தீபம் எண்ணப் பறவை சிறகடித்து
சொர்க்கம் பொன் மகள் வந்தாள்
மாட்டுக் கார வேலன் -ஒரு பக்கம் பார்க்கிறா
ராமன் எத்தனை ராமனடி -அம்மாடி பொண்ணுக்குத்
வியட்நாம் வீடு -உன் கண்ணில் நீர் வழிந்தால்
குமரிக் கோட்டம் -எங்கே அவள்
சவாலே சமாளி -நிலவைப் பார்த்து
பாபு -இதோ எந்தன் தெய்வம்
ரிக்ஷாகாரன் -கடலோரம் வாங்கிய காற்று
தங்கப் பதக்கம் -சுமை தாங்கி சாய்ந்தால்
தேவி- -தித்திக்கும் முத்தமிழே
இருள் பாதி ஒளி பாதி
சின்னக் குழந்தை
உயர்ந்த மனிதன் -அந்த நாள் ஞாபகம்
தவப்புதல்வன் -இசை கேட்டால்

--உமா வரதராஜன்