Search This Blog

Sunday, October 7, 2012

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்



அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
நுங்கல் - முழு

வதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

நவீன கவிதையை க.நா.சுவிலிருந்தும் தொடங்கலாம்-ஷங்கர்ராமசுப்ரமணியன்


க.நா.சுவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறைக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை
இன்று செழுமையும், பன்மைத்தன்மையும், பலபடித்தான பாதைகளும் கொண்ட நவீனத் தமிழ்க் கவிதைகளைப் புதிதாக படிக்கத் தொடங்கும் வாசகன், நவீன கவிதையின் இன்றைய உருவம், எதேச்சையாக, எதிர்ப்புகளற்று, வசதிகள் கொண்ட ஒரு சூழலில் பிறந்ததாகவே எண்ணக்கூடும்.  புதுக்கவிதை தன்னை நிறுவிக் கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல.. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்தை பெற்ற உருவம் புதுக்கவிதை. பழைய வெளியீட்டு வடிவத்திலிருந்து புதிய வெளியீட்டு வடிவத்தை தமிழ்க் கவிதை அடைந்தது உடல் ஒரு சட்டையைத் துறந்து, மற்றொரு சட்டையை அணிவது போன்றதல்ல. ஒரு உயிர் தன் உடலையை மறு தகவமைப்புக்கு உட்படுத்தியதற்கு சமமானது.kanasu98
தமிழில் பாரதியால் வசனகவிதை என்ற பெயரில் தொடங்கப்பட்டு,புதுமைப்பித்தன், கு.ப.ரா. ஆகியோரால் ஓரளவு முயற்சிக்கப்பட்டு,ந.பிச்சமூர்த்தியும், க.நா.சுவும் நிலைநிறுத்திய வடிவம் புதுக்கவிதை.
ந.பிச்சமூர்த்தி மற்றும் க.நா.சு ஆகியோர் முயன்ற கவிதைகளை இப்போது ஒப்பிடும்போது, க.நா.சுவின் கவிதைகள் இன்றைய நவீன கவிஞர்களுக்கும் பொருளம்சத்துடன் கூடிய அனுபவத்தை தரும் வலுவில் இருப்பதை உணரமுடிகிறது. ந. பிச்சமூர்த்தியின் வேதாந்த, லட்சியச்சார்பு அவர் கவிதையை பழமையில் நங்கூரமிட்டு விடுகிறது. க.நா.சுவின் கவிதைகள் லட்சியம் துறந்தவையாக உள்ளன. அந்த குணம் க.நா.சுவின் கவிதைகளை,இன்றைய நவீன கவிஞனுக்கு மேலும் இணக்கமாக்கக் கூடியது.
தமிழில் நாவல், சிறுகதைகளின் வடிவம் மற்றும் பொருள் சார்ந்து தனது மொழிபெயர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் மூலம் திட்டமான தரமதிப்பீட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் க.நா.சுப்பிரமணியம். அதே போலவே புதுக்கவிதை தொடர்பாகவும் அந்தக் கலைவடிவம் நவீன வாழ்க்கை சார்ந்து துறக்கவேண்டியதும், ஏற்கவேண்டியதுமான அம்சங்களையும் நிகழ்த்திக் காட்டுவதற்காகவே தனது கவிதைகளை எழுதியுள்ளார் என்றும் சொல்லலாம்.அதனால் தான் தனது கவிதைகளை அவர் சோதனைகள் என்று சொல்கிறார்.
"இலக்கியச் சோதனைகளில் எப்போதுமே வெற்றி,தோல்விகள் பூரணமானவை.என் புதுக்கவிதை முயற்சி வெற்றிபெறும் என்றே நான் எண்ணிச் செய்கிறேன்.சோதனைகளின் தன்மையே இதுதானே. செய்து, செய்து பார்க்கவேண்டும்.அவ்வளவுதான்"
இப்படி, 1959 இல் வெளியான சரஸ்வதி ஆண்டுமலரில் வெளியான அவர் கட்டுரையில் எழுதுகிறார்.
சிறுகதை, நாவல் மற்றும் உரைநடையைப் போல் நேரடியாக க.நா.சுவின் கவிதைகள் எல்லாத் திசைகளிலும் திறந்திருக்கும் ஒளிவீடாக வாசகனை வரவேற்பவை.. வாசகன் தனது அனுபவத்தைக் கொண்டு பிரதிபலிக்கவும்,அதில் தனது சலனங்களை இனம்காணவும், அவர் கவிதைகள் இன்றின் துடிப்போடு காத்திருக்கிறது. அதுதான் அவர் கவிதைகளில் நுழையும் போது காணும் முதல் அழகு. நேரடிக் கூற்று, மரபின் சுமையற்ற சுதந்திரம், படிம,தத்துவச் சுமையின்மை போன்ற அம்சங்களுடன் அன்றாட வாழ்வின் பொருட்களும், சத்தங்களும் சாதாரணத்துவத்துடனேயே உலவும் இடம் அது.இப்படியாக தமிழ் புதுக்கவிதை வடிவத்துக்கு ஒரு சிறந்த முன்வரைவை க.நா.சு உருவாக்கியிருக்கிறார்.
க.நா.சுவின் எளிமை என்று நான் கூறுவது அதன் மொழிதல் முறையையே தவிர, அதன் பொருள் மற்றும் அனுபவத்தை அல்ல. நவீன வாழ்வின் சிக்கல்கள் மற்றும் சிடுக்குகள் அனைத்தும் புதுக் கவிதையில் இருக்கவேண்டும். . ஆனால் மொழிதலில் தெளிவு, வாசகனுக்குத் தொனிக்க வேண்டும் என்று பிரக்ஞையுடையவர் அவர்.
புதுக்கவிதையில் க.நா.வின் இடத்தைப் பற்றி ஞானக்கூத்தன் பேசும்போது, "இருபதாம் நூற்றாண்டு படைப்பாளிகளில் கவிதைக்கு நிகழ்ந்து கொண்டிருந்த சிக்கல்களை அறிந்தவர்களில் பாரதி, பிச்சமூர்த்தி,கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க.நா.சு இவர்கள் தான் முக்கியமானவர்கள். அடுத்த நூற்றாண்டின் இரட்டைக் கதவு மூடிக்கிடந்ததை அறிந்தவர் பாரதி. அதைத் திறக்க முயன்றதில் அது சற்றுத் திறந்துகொண்டு இடைவெளி காட்டியது. பிச்சமூர்த்தி முயன்றதில் அது திறந்துகொண்டது.ஆனால் முழுமையாகத் திறந்துகொண்டு விடவில்லை. அவரே கூட அது முன்போல மூட வருகிறதா என்று பார்த்தார். ஆனால் க.நா.சுவோ கதவை நன்றாகத் திறந்ததோடல்லாமல், கதவின் இரண்டு பக்கங்களையும் பெயர்த்து அப்புறப்படுத்திவிட்டார்." என்கிறார்.
000
க.நா.சுவின் கவிதைகளைத் தொடர்ந்து படிக்கும்போது சலித்த ஒரு மனதின் தன்விசாரமாக அவை இருப்பதை உணரமுடியும். தனிமனிதனின் குரல் முதல்முதலில் கவிதையில் அழுத்தம்பெறும் போது இப்படித்தான் தொடங்கியிருக்கவும் முடியும். தமிழிலும் முதல் தலைமுறைப் புதுக்கவிஞர்களின் பொது இயல்பென்றும் இந்த தன்விசார அம்சத்தை நாம் கூறிவிடமுடியும். தத்துவம் அல்லது வேதாந்தத்தின் சாய்வுநாற்காலியில் சாய்ந்து கொண்டு இந்த சுயவிசாரத்தை க.நா.சு நிகழ்த்தவில்லை. தனது வாசிப்பு, பட்டறிவு, நினைவுகள் வழியாக அவர் சுயவிசாரத்தை தொடர்ந்து கவிதைகளில் மேற்கொள்கிறார். அவர் கவிதைகளில் நன்மை, தீமைகளின் பெரிய மோதலையோ, உயிரின் அலைக்கழிப்பையோ, உணர்வுச்சத்தையோ வாசகன் பார்க்க இயலாது. க.நா.சுவின் எழுத்துவாழ்வு அது தொடர்பான ஏமாற்றங்கள், சலிப்புகளையும் அவர் கவிதைகள் வழியாகப் படிக்க முடியும்.அறிவார்த்தத்தின் சமநிலையுடன், அசட்டுத்தனத்தை மூர்க்கமாக அகற்றியபடிதான் செல்கிறது அவரது விசாரணை. அந்த விசாரணையில் பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளாத மனதின் இயல்புகளை மனத்தடை இன்றி சுய அம்பலமாக நிதர்சனத்தைச் சொல்லிச் செல்கிறார். கலாச்சாரப் புனிதங்கள் ஏதும் படைப்பில் கட்டிக்காக்கவேண்டியதில்லை என்ற தொனியை அவர் கவிதையில் பார்க்கமுடிகிறது..

நினைவுப்பாதை
இரவு சாப்பிட உட்கார்ந்ததும்
பாட்டி சாதம் போட்டு சாம்பார்
வார்த்ததும்
பக்கத்தறையில் உரக்க
முனகல் கேட்டு
எழுந்துபோய்ப் பார்க்க
செத்துக்கிடந்த தாய்
உருவம் அடியோடு மறந்துவிட்டது.
ஆனால்
தாயை இழந்தவன்
அழ வேண்டிய
மாதிரியா நீ அழுதாய்?
என்று
மறுநாள்
பாட்டி கேட்டது மட்டும்
பசுமையாய் நினைவில்
பதிந்திருக்கிறது.
தகப்பன் இறந்தபோது
சாகவயது வந்துவிட்டது.
கருமத்தில் கண்ணாக
இருந்தது கண்டு புரோகிதர்
'என்ன சிரத்தை! என்ன சிரத்தை!
என்று வைதீகமாய்ப் பாராட்டியது
நினைவில் இருக்கிறது.
குப்பையைக் கூட்டி
அப்புறப்படுத்த
உயிரற்ற உடலை
எடுத்தெரிக்க
எத்தனை சடங்குகள்
எத்தனை புராணச் சப்பைக் கட்டுகள்
என்று நினைத்ததும்
நினைவில் இருக்கிறது
20 ஆம் நூற்றாண்டில் வாழும் க.நா.சுவுக்கு மனிதகுலம் ஓரளவுக்கும் அதிகமாக நீடித்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது. வாழ்வு ஒரு கட்டத்தில் பழக்கத்தின் செக்குமாட்டுத் தனத்தில் உறைந்துவிட்டது. பாலுறவு, மதம்,சிந்தனை எதுவுமே அவனை விடுவிக்கவில்லை. இந்நிலையில் ஒரு நம்பிக்கையின்மை, ஒரு சந்தேகம், விடை போன்று தொனிக்கும் விடை,ஆழ்ந்த புரியாமை உணர்வு, ஒரு போதாமை மற்றும் அமைதியை உருவாக்க அவர் ஒரு வார்த்தைக் கூட்டத்தை சுழற்றி மேயவிடுகிறார். சின்னஞ்சிறிய வியப்புகளையும், கவனிப்புகளையும் அவர் வானில் நட்சத்திரங்களைப் போல தெளித்துவிடுகிறார். கவிதைச் செயல்பாடு மட்டுமல்ல படைப்புச் செயல்பாடு அத்தனையும் மனிதனின் போதாமை மற்றும் நிராசையிலிருந்தே எழுகிறது என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. அந்த நிறைவின்மையை அவர் தனது கவிதைகளிலும் தொட்டெழுப்பி ஒரு முழுமையைப் பற்ற முயன்றுகொண்டே இருக்கிறார்.
கவிதை பற்றி எழுதிய கவிதை இதோ
கவிதை
எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுகள் எடுத்து வைத்துவிட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்திய மாயின
என்று யார்
தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்
எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது?
மொழியின் மழலை அழகு தான்.
ஆனால் அது போதவே
போதாது.
போதுமானால் கவிதையைத் தவிர வேறு
இலக்கியம் தோன்றியிராதே. போதாது
என்று தான், ஒன்றன்பின் ஒன்றாக
இத்தனை இலக்கியத்
துறைகள்
தோன்றின- நாடகமும், நாவலும், நீள்
கதையும், கட்டுரையும் இல்லாவிட்டால்
தோன்றியிராது; ஆனால் அவையும்தான்
திருப்தி தருவதில்லையே!
அதனால்,
தான் நானும் கவிதை எழுதுகிறேன்.
மனிதனுக்கு கலை எதுவும் திருப்திதராது
மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத் தான்
தரும். கலையின்
பிறப்பு
இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே
இன்னமும் உயிர்வைத்துக் கொண்டிருப்பது
இந்த அடிப்படையில்தான் சாத்தியம்
என்று சொல்லலாம்.
எழுத்து- ஜனவரி 1959

என்று எழுதுகிறார்.
000
இன்றைய தலைமுறை வாசகர்களும், நவீன கவிஞர்களும் இனம் காணக்கூடிய, க.நா.சு மீதான மதிப்பாக நினைவுகொள்ளக் கூடிய கவிதைகளை அறிமுகப்படுத்துவது இக்கட்டுரையின் முக்கிய பயன்பாடாக இருக்கவேண்டும்.க.நா.சு கவிதையில் வரும் பிராணிகளும், பறவைகளும் அழகு, சுதந்திரம் அல்லது எந்த தத்துவப் பொருண்மையுடையதான குறியீடுகளாக இல்லை.அவை சிறியதாக இருந்தாலும் தனித்த குணமுடைய மற்றமையின் அழகுடைய உயிர்கள். அந்தப் பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் க.நா.சு கவிதையில் அளித்த சுதந்திரம் சாதாரணமானதல்ல. இன்றைக்கும் க.நா.சுவின் வாஞ்சையான பரிசுகள் என்று பெருமிதமாக கூஃபி, விளையாடும் பூனைக்குட்டி, சிட்டுக்குருவி, பூனைக்குட்டிகள் ஆகிய கவிதைகளை இளம் வாசகன் முன் எடுத்துவைக்க முடியும்.
க.நா.சு தனது அறிவு மற்றும் பிரக்ஞையின் போதத்திலிருந்து,ம்,சலிப்பிலிருந்தும் விடுபட்டு தன்னை இழக்கும் இடமாக இக்கவிதைகளைப் பார்க்க முடிகிறது.
அதற்கு அடுத்தபடியான நிலையில் இலக்கிய வரலாறு மற்றும் அரசியல் முக்கியத்துவம் கொண்டு பார்த்தால் புதுமைப்பித்தன் இருந்த வீடு,போ, உயில்,மதுரை மீனாக்ஷியின் கன்னிமை கழியும்போது, முச்சங்கம், இன்னொரு ராவணன், பயணம் போன்ற கவிதைகள் முக்கியமானவை.
(கூஃபி- பக்கம் 44) (விளையாடு பூனைக்குட்டி-70) (பூனைக்குட்டிகள் 148)
அவர் காலத்தில் எழுச்சி பெற்ற திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனங்களை அவர் கவிதைகளில் வெளிப்படையாகவே பார்க்கமுடிகிறது.. நகுலனில் அது விபீடணன் தனிமொழி போன்ற கவிதைகளில் மிகவும் பூடகமாக இயங்குகிறது.அலங்காரப் பேச்சுக்கும், நடைமுறை எதாரத்தத்துக்கும் இடையே தத்தளிக்கும் தமிழ் கலாச்சார வறுமை, முச்சங்கம் கவிதையில் அங்கதத்துடன் விமர்சிக்கப்படுகிறது. முச்சங்கம்( 129)
மதுரை மீனாக்ஷியின் கன்னிமை கழியும்போது கவிதையும் அரசியல்ரீதியானதே.. ஆனால் அவரது கவிதைகளின் பொதுவான சமநிலையைத் துறந்து உக்கிரமான நிகழ்ச்சிகள் தாளகதியுடன் இக்கவிதையில் விவரிக்கப்படுகின்றன. இன்னமும் அக்கவிதை பூடகத்தையும், புதிரின் எழிலையும் விலக்காமல் வைத்திருக்கிறது. இக்கவிதையில் இறந்தகால நிகழ்ச்சிகளையும் , தற்காலத்தின் நடைமுறைக்காட்சிகளையும் பிணைத்து ஒரு கூத்து நிகழ்த்தப்படுகிறது. மதுரையின் மீனாக்ஷியின் கன்னிமை கழியும் போது என்ற வாக்கியமே ஒரு சாதாரண தமிழ் மனத்துக்கு இன்னமும் அதிர்ச்சியை ஊட்டுவதே.(103)
000
தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் முக்கியத் தடம் பதித்த சாதனையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம். தனக்கென ஒரு பார்வையையும், உலகத்தையும் உருவாக்கி அதை முற்றிலும் செழுமைப்படுத்தி அந்த வெற்றியின் பலன்களை முற்றிலும் நுகர்ந்து அது தரும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் சுவைத்தவர்கள் முதல்பிரிவினர்.
படைப்பின் தீராத சவால்களால் தூண்டப்பட்டு, நிறைவின்மையின் தொடர்ந்த அலைக்கழிப்புடன் வெற்றி,தோல்வியை அறியாமலேயே பல்வேறு சாத்தியங்களின் விதைகளைத் தூவியவர்கள் இரண்டாம் பிரிவினர். அவர்கள் பண்படுத்தி, விதைகள் இட்ட நிலம் அவர்களின் படைப்பு வாழ்க்கைக்குப் பின்னும் செழுமையாகவே இருக்கும். முழுமையின்மையிலிருந்து கொப்பளிக்கும் படைப்பூக்க நிலம் அது. இந்த இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர் தான் க.நா.சுப்பிரமணியம்.
க.நா.சுவின் தொடர்ச்சியாக நகுலன், விக்ரமாதித்யன், ஆத்மாநாம், சுகுமாரன்,சமயவேல், பா.வெங்கடேசன் என்று ஒரு ஆரோக்கியமான சங்கிலி இன்னும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
க.நா.சு, புதுக்கவிதை சார்ந்து உத்தேசித்த இயல்புகளின் விரிந்த வரையறைக்குள் இருப்பவர்களே தவிர ஒவ்வொருவருமே அவர்களின் உலகங்கள் சார்ந்து தனித்துவம் கொண்டவர்கள் என்பதும் முக்கியமானது.
000
இலக்கியத்தை பிரதானமான அறிதல் முறையாகப் பார்த்து, முழுவாழ்க்கையின் கர்மமாக எழுத்தை எண்ணி வாழ்ந்த வாழ்க்கை க.நா.சு.வினுடையது.  படைப்பின் வழியாக அவர் வாழ்க்கையின் சிக்கல்களையும் அதன் அகபரிமாணங்களையும் தொடுவதற்காக அவர் கொண்ட எத்தனங்களின் துளி அனுபங்களாக அவரது கவிதைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் சிட்டுக்குருவி கவிதை.
தான் கழற்ற முடியாத மின்விசிறியின் ப்ளேடை தொடர்ந்து அசைத்துப் பார்த்துவிட்டு பின்னர் சிகரெட் தாளையும், விளக்குமாறு குச்சியையும் தன் கூட்டுக்கு எடுத்துச் செல்வது போல மெய்மையைக் அறிந்துவிட எழுத்தாளனும் முயன்றுகொண்டேயிருக்கிறான். அவனுக்கு கடவுளின் ஆறுதல் பரிசைப் போல கணநேர அழகுகளும், தரிசனங்களும், மன எழுச்சிகளும் கிடைக்கின்றன. அவன் ஓயாமல் கொண்ட சலனங்களுக்கு அவன் மேற்கொண்ட சிரமம்மிக்க பயணமும் பரிசுதான் என்பதைப் போலத்தான் இருந்திருக்கிறது க.நா.சுவின் வாழ்க்கை.
பார்வை நூல்கள் மயன் கவிதைகள், க.நா.சு கவிதைகள்
நன்றி: யானை

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான்


.


அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேய
ப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே
குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை.

இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”.

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில்,

“அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே

வணிக நிலையங்கங்களுக் கான தமிழ்ப் பெயர்கள்:


பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோரஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேபஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சால ை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் : விரை உணா
85 பேகஸ் : தொலை எழுதி
86 பைனானஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு,இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம்அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி :நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில் , காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வங்குநர்,
120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடரஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் :வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்... Via -Mohanraj Palanisamy

New graphene material developed


MONASH UNIVERSITY   
Share on print
gaby-wikicommons-corrosion
The new graphene coating makes copper almost 100 times more resistant to corrosion.
Image: Dschwen/Wikicommons
A coating so thin it’s invisible to the human eye has been shown to make copper nearly 100 times more resistant to corrosion, creating tremendous potential for metal protection even in harsh environments.
In a paper published in Carbon, researchers from Monash University and Rice University in the USA say their findings could mean paradigm changes in the development of anti-corrosion coatings using extremely thin graphene films.
Graphene is a microscopically thin layer of carbon atoms. It is already in use in such things as smartphone screens, and is attracting research attention for its possibilities as a means of increasing metal’s resistance to corrosion.
“We have obtained one of the best improvements that have been reported so far,” said study co-author Dr Mainak Majumder. “At this point we are almost 100 times better than untreated copper. Other people are maybe five or six times better, so it’s a pretty big jump.”
Dr Parama Banerjee, who performed most of the experiments for this study, said graphene had excellent mechanical properties and great strength.
The polymer coatings that are often used on metals can be scratched, compromising their protective ability, but the invisible layer of graphene – although it changes neither the feel nor the appearance of the metal – is much harder to damage.
“I call it a magic material,” Dr Banerjee said.
The researchers applied the graphene to copper at temperatures between 800 and 900 degrees, using a technique known as chemical vapour deposition, and tested it in saline water.
“In nations like Australia, where we are surrounded by ocean, it is particularly significant that such an atomically thin coating can provide protection in that environment,” Dr Banerjee said.
Initial experiments were confined to copper, but Dr Banerjee said research was already under way on using the same technique with other metals.
This would open up uses for a huge range of applications, from ocean-going vessels to electronics: anywhere that metal is used and at risk of corrosion. Such a dramatic extension of metal’s useful life could mean tremendous cost savings for many industries.
The process is still in the laboratory-testing stage, but Dr Majumder said the group was not only looking at different metals, but also investigating ways of applying the coating at lower temperatures, which would simplify production and enhance market potential. 
Editor's Note: Original news release can be found here.

A cure for ovarian cancer


QUEENSLAND UNIVERSITY OF TECHNOLOGY   
Share on print
ovarian_cancer_wikicommons
Most cases of ovarian cancer are detected when the disease has spread to the abdominal area.
Image: Nephron/Wkicommons
Ovarian cancer takes the lives of nearly 900 Australian women each year. It's called the silent killer because by the time most cases are detected, the cancer has spread to other vital organs throughout the abdominal area.
Now QUT scientists together with researchers from India's National Centre for Cell Sciences are hot on the trail of the genetic pathway that regulates ovarian cancer stem cells.
Dr Ying Dong, a QUT research fellow in the School of Biomedical Sciences in QUT's IHBI (Institute of Health and Biomedical Innovation) said ovarian cancer was difficult to treat and fewer than 30 per cent of women survived after five years.
She said 1,272 Australian women were diagnosed with ovarian cancer in 2009 and that number was expected to be 1,640 in 2020 according to the Australian Institute of Health and Welfare.
Research by Dr Dong and Professor Judith Clements in the Cancer Research Program at IHBI has shown that the secondary tumour cells of ovarian cancer are resistant to the current chemotherapy.
"Surgery alone cannot remove all the tumour once it has spread to the other organs in the abdomen," Dr Dong said.
"Patients are given chemotherapy but the tumours eventually become resistant to it and recur.
"The key to fighting this cancer could be to identify the molecular or gene pathways that regulate it, such as the stem cells. They are the cells that change and build resistance to the chemotherapy."
Dr Dong said QUT's research collaborator in India, Dr Sharmila Bapat, and her team were the first in the world to identify ovarian cancer stem cells and predict potential gene pathways using bioinformatic analysis.
They will use the 3D-suspension model that Dr Dong developed to mimic the microenvironment of the metastatic tumour to study ovarian cancer cells' response to chemotherapy. Dr Dong will also use the model with cancer cells taken from patients with this tumour.
"Together, we will investigate the role of these pathways and test their potential as therapeutic targets," Dr Dong said.
"We hope we will be able to help design more effective treatment for women with ovarian cancer with this knowledge."
Editor's Note: Original news release can be found here.

நையாண்டி மேளமும் நாட்டுப்புற ஆட்டக் கலைகளும்

இசையும் நடனமும் மிகப் பழங்காலத்திலிருந்தே மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளாக விளங்கி வந்துள்ளன. இசைக்கு முந்தியது நடனம் என்று கூறுகின்றார்கள். அனைவரும் பாடும் பொழுதும், ஆடும் பொழுதும் தங்களது நெஞ்சையழுத்தும் உணர்ச்சிப் பாரத்திலிருந்து விடுதலை பெறுகின்றார்கள். விழாக்கள், திருமணங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கேற்றதான பாட்டும் ஆட்டமும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். தொடக்க காலத்தில் தொழில் முறையான ஆட்டக்காரர்கள் இருந்தது இல்லை. எல்லாமே ”சமூக நடனம்” என்ற அளவில்தான் இருந்தது.




நாட்டுப்புற இசை நாட்டுப்புற மக்களால் காலம் காலமாக வளர்க்கப்பட்டு வருகின்றது. நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையோடு நாட்டுப்புற இசை பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்திருக்கின்றது.





நாட்டுப்புற மக்கள் தண்­ர் சுமந்து செல்கிறபோதும், நெல் குற்றும் போதும், உழவு சம்பந்தமான செயல்களைச் செய்யும் போதும் நாட்டுப்புற இசையும், ஆட்டமும் இடம் பெறாமல் இருப்பதில்லை.




நாட்டுப்புற மக்கள் ஓய்வாக இருக்கும்போது, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த ”புல்லாங்குழல்” வாசிக்கின்றார்கள்; திண்ணையில் உட்கார்ந்து உடுக்கையடித்து தங்களுக்குப் பிடித்தமான நாட்டுப்புறத் தெய்வத்தின் மீது பாட்டுப் பாடுகின்றார்கள். தப்பு, திடும், நகார், பம்பை, உறுமி, கிணுக்குச்சட்டி, கஞ்கிரா, மேளம், மண்மேளம் முதலிய நாட்டுப்புற இசைக்கருவிகளை வாசிக்கும் வழக்கம் நாட்டுப்புற மக்களிடம் இன்றும் காணப்படுகின்றது. நாட்டுப்புற இசையையும், நாட்டுப்புற இசைக்கருவிகளையும், கிராமப்புற மக்கள் அழியாமல் பாதுகாத்துக் கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். நாட்டுப்புறத் திருவிழாக்களின் போது நாட்டுப்புற இசையைக் கேட்கலாம்.



நாட்டுப்புற இசை:



இசையில் இரு வகைகள் உண்டு. ஒன்று நாட்டுப்புற இசை. மற்றொன்று சாஸ்த்திரீய இசை.



நாட்டுப்புற இசை நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது. மரபு வழியாகப் பரவி வரும் இசையையும், செவி வழியாகப் பரவி வரும் இசையையும் ”நாட்டுப்புற இசை” என்று பொதுவாகக் கூறி வருகின்றனர். ”நாட்டுப்புற இசை” (Folk Music) என்பது செவி வழியாகப் பரவுவது; எழுதப்படாதது; அச்சிடப்பட்ட இசை அலகுகளை அடிப்படையாக வைத்து இசை அமைக்கப்படாதது; நினைவாற்றலால் அமைவது ஆகும்.



இதற்கு மாறானது. சாஸ்த்திரீய இசை, இது கற்றோர் வழி மரபினது. திட்டமிடல் தன்மையும் கட்டுக்கோப்பும் உண்டு. பாடுவோர், கேட்போர் என்ற நிகழ்த்துமுறையில் இது கற்றோரைத் தளமாகக் கொண்டது. சாஸ்த்திரீய இசை பெரும்பாலும் அரங்குகளில் நிகழ்கிறது. நாட்டுப்புற இசை பெரும்பாலும் திறந்த வெளி அரங்குகளில் நிகழ்த்தப் பெறுகின்றது. பாடுவோர் – கேட்போர் என்ற நிலையில் இது நாட்டுப்புற மக்களைத் தளமாகக் கொண்டது.



1. நையாண்டி மேளம்



மேளம் இரு வகைப்படும் ஒன்று கோவில் மேளம். மற்றொன்று நையாண்டி மேளம். ”கோவில் மேளம்” திருக்கோவில் வழிபாடு. சுவாமி புறப்பாடு. சுவாமி திரு உலா, தேர்த்திருவிழாவில் வாசிக்கப்படுவது. மங்கல இசை வாசிக்கவும். ”கோவில் மேளம்” பயன்படுத்தப்படுகிறது.



”நையாண்டி மேளம் கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கு (Flok Dances) – பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது. திறந்தவெளி அரங்கில் நையாண்டி மேளக் குழுவினர் வட்டமாக நின்று கொண்டு வாத்தியக் கருவிகளை வாசிக்கின்றார்கள்.



நையாண்டி மேளத்தின் அமைப்பு



நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி, ஒரு தாளம் கொண்டதாகும். கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது. தெற்கு நாட்டுப் பகுதிகளில் இவற்றுடன் உறுமியையும் சேர்த்துக் கொள்கின்றார்கள்.



நையாண்டி மேளத்தில் சில போது மூன்று தவில்., நான்கு தவில் என்று சேர்த்துக் கொள்வதும் உண்டு. ஆயின் இரண்டு நாதசுரம் மட்டுமே இடம் பெறும்.



நையாண்டி மேளத்தில் தொடக்கத்தில் நாதசுரக் கலைஞர்கள் பிள்ளையார் துதி வாசிக்கின்றனர். பின்னர் தனது குருநாதரை நினைத்து வாசிக்கின்றனர். கரகாட்டத்திற்கு ஏற்ற வகையில் நையாண்டி மேளத்தை வாசிக்கின்றனர். ஆட்டமும், வாசிப்பும் ஒத்துப் போகுமாறு பார்த்துக் கொள்கின்றனர். கரகாட்டப் பாடலை இவர்கள் நாதசுரத்தில் வாசிக்கின்றனர். பின்னர் தெம்மாங்கு வாசிக்கின்றனர். காவடியாட்டம் ஆடும் போது ”காவடிச் சிந்து, வாசிக்கின்றனர். நையாண்டி மேளத்தின் முடிவில் திருப்புகழ் வாசிக்கின்றனர்.



நாட்டுப்புற மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டக்கூடிய வகையில் நையாண்டி மேள இசை அமைகின்றது. சில இசைக் கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை யாழ் நூல் ”ஆமந்திரிகை” என்று கூறுகின்றது. பழந்தமிழர் இதனைப் ”பல்லியம்” என்று குறிப்பிட்டனர்; இசைக்கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை இன்று வாத்திய விருந்து என்று அழைக்கின்றனர்.



2. கிராமீய நடனங்கள்



நாட்டுப்புற ஆட்டங்கள் நாட்டுப்புற மக்களால் உருவாக்கப்பட்டவை. நாட்டுப்புற மக்கள் உழைப்பின் களைப்பிலிருந்து விடுபட நாட்டுப்புற ஆட்டங்களை ஆடி வருகின்றனர்.



கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, கும்மி, ஒயிலாட்டம், முதலியன தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்கள் ஆகும். தமிழ்நாடு கிராமீயக் கலைகளின் களஞ்சியமாகத் திகழ்ந்து வருகிறது எனலாம். கிராமீயக் கலைகள் கிராமீய மக்களின் வாழ்க்கை, அதன் இன்ப துன்பங்களைக் தெளிவான மொழியில் விளக்குகின்றன. மக்களுடைய எளிய உணர்வுகள், தொல்லை தொடரும் அவர்களது அன்றாட வாழ்க்கை அல்லது வாழ்க்கையின் ஊடே இயற்கையாக நிரம்பி வழியும் மகிழ்ச்சிப் பெருக்கே இந்தக் கிராமீய நடனமும் இசையும். இக்கிராமீய நடனங்கள் மிக எளிமையானவை; கலை மதிப்புடையவை.



தமிழ்நாட்டில் உயர்தரமான, கிராமீய நடன வடிவங்கள் மலிந்து கிடக்கின்றன. சங்கப் பண்பாட்டைப் புலப்படுத்தும் கிராமீய நடனங்கள் சில இன்றும் ஆடப்பட்டு வருகின்றன. சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படும் சிலவகை கிராமீய நடனங்கள் இன்றும் வழக்கில் உள்ளன.



3. கரகாட்டம்



சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்ற குடக்கூத்திலிருந்தே இன்றைய ”கரகம்” தோன்றியிருக்க வேண்டும். கிருஷ்ண பகவான் ஒருமுறை மண்ணாலும்; உலோகத்தாலும் செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு நடனமாடியதாகப் புராணக் கதைகள் எடுத்துரைக்கின்றன. ”கரகம்” என்ற ஆட்டத்திற்கு ஈடாக திருநெல்வேலி மாவட்டத்தில் ”அம்மன் கொண்டாடி” இன்றும் வழக்கில் உள்ளது.



கிராமப்புறங்களில் காளியம்மன், மாரியம்மன் முதலிய நாட்டுப்புற தெய்வவிழாக்களின்போது ஆற்றங்கரைகளிலிருந்தோ, நதி தீரங்களிலிருந்தோ சக்தி கரகத்தை மலர்களால் அலங்கரித்துக் கொண்டு வருவர். ”சக்தி கரகம்” எடுத்து வருபவர் சாமியாட்டம் ஆடிக்கொண்டு வருவார். தொடக்க காலத்தில் ”கரகம்” வழிபாட்டோடு சடங்கோடு தொடர்புடையதாக இருந்தது. காலப்போக்கில் ”கரகம்” சடங்கு நிலையிலிருந்து விடுபட்டு சமூக நடனமாக தொழில்முறை ஆட்டமாக மாற்றம் பெற்றது எனலாம். ஏனைய கிராமீயக் கலைகளைப் போலவே நாட்டுப்புற மக்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தவும், பொழுது போக்கிற்காகவும் கரகாட்டத்தை ஆடி வருகின்றனர் எனலாம்.



நாட்டுப்புறத் திருவிழாக்களின் போதும், முருகன் கோவில் விழாக்களின் போதும் கரகாட்டம் இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பழனி முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய பெருவிழாக்களின் போது காவடிக் குழுவினர், கண்டு களிப்பதற்காக கரகாட்டத்தை உடன் அழைத்து வருகின்றனர். கொங்கு நாட்டு காவடிக் குழுவினர், பழனிக்கு காவடி எடுத்து வரும் போது பெரும் பொருட்செலவில் நையாண்டிமேளக் குழுவினரையும், கரகாட்டக் குழுவினரையும் உடன் அழைத்து வருகின்றனர்.



கரகாட்ட அமைப்பு முறை



பெரும்பாலான நாட்டுப்புற ஆட்டங்கள் வட்ட வடிவ அமைப்பு முறையிலேயே நிகழ்த்தப் பெறுகின்றன. அதைப் போலவே கரகாட்டமும் வட்ட வடிவு அமைப்பு முறையிலேயே நிகழ்த்தப் பெறுகின்றது. கோவில் வளாகங்களிலும், திறந்த வெளி அரங்குகளிலும் கரகாட்டம் இடம் பெறுகின்றது. பார்வையாளர்கள் வட்டமாகச் சூழ்ந்து கொண்டு கரகாட்டத்தைக் கண்டு களிக்கின்றார்கள்.



கரகாட்டத்தில் நையாண்டி மேளம் முக்கியம் இடம் வகிக்கின்றது. நையாண்டி மேளம் இசையைத் தொலை தூரத்தில் கேட்டாலே அங்கு கரகாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.



கரகாட்டத்தோடு பல துணை ஆட்டங்களும் சேர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கரகம், குறவன் குறத்தி, பபூன் (கோமாளி) காவடியாட்டம், மயிலாட்டம், மாடாட்டம் என்ற முறையில் கரகாட்டம் கிராமப் புறங்களில் நிகழ்த்தப் பெற்று வருகின்றது.



ஆட்ட உடை



கரகாட்டம் ஆடத்தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் கரகாட்டக் கலைஞர்கள் ஒப்பனை செய்து கொள்கிறார்கள். வண்ண வண்ண உடைகளை ஆட்டத்தின்போது அணிந்து கொள்கிறார்கள். கரகாட்டம் ஆடுவதற்கென்றே இவர்கள் தனி உடையைத் தைத்து வைத்துக் கொள்கிறார்கள்.



செம்பு அலங்காரம்



கரகச்செம்பை வண்ண வண்ணக் காகிதங்களால், அலங்கரித்துக் கொள்கின்றார்கள். செம்பின் உச்சியில் கிளி பொம்மையை வைத்து அழகு படுத்துகின்றார்கள். சில நேரங்களில் கரகச் செம்பில் வேப்பிலைக் கொத்து வைத்தும் கரகாட்டம் ஆடுகின்றார்கள். தொடக்க காலத்தில் மண் கரகங்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. மண் கரகங்களுக்கு பதிலாக பித்தளைச் செம்பைத் தற்போது கரகமாகப் பயன்படுத்துகின்றனர்.



கரகாட்டக் குழுவினர் ஆடத் தொடங்குவதற்கு முன்னர் நையாண்டி மேளத்தைத் தொட்டுக் கும்பிட்ட பிறகே கரகாட்டம் ஆடத் தொடங்குகின்றனர். முதலில் இரு பெண்கள் கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு கரகாட்டம் ஆடுகின்றனர். சுமார் ஒரு மணி நேரம் தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு ஆடுகின்றனர். கரகம் ஆடி முடிந்ததும் குறவன் குறத்தி ஆட்டம் இடம் பெறுகின்றது. குறவன் – குறத்தி ஆட்டம் முடிந்ததும் ”பபூன்” அல்லது கோமாளி ஆட்டம் இடம் பெறுகின்றது. பார்வையாளர்களை மகிழ்விக்க ”கோமாளி” ஆட்டம் இடம் பெறுகின்றது.



பின்னர் மயிலாட்டம் 1/2 மணி நேரம் இடம் பெறுகின்றது. ஆண் ஒருவர் மயில்போல வேடம் அணிந்து கொண்டு மயிலாட்டம் ஆடுகின்றார். மயிலாட்டம் ஆடும் போது ”மயில்” பற்றிய பாடல்களை நாதசுரத்தில் வாசிக்கின்றனர். மயிலாட்டம் முடிந்த பிறகு அரைமணி நேரம் மாடாட்டம் இடம் பெறுகின்றது. பின்னர் தொடர்ந்து கரகாட்டம் இடம் பெறுகின்றது.



கரகாட்டத்தின் முடிவில் கரகம் ஆடும் கலைஞர்களுடன் குறவன் – குறத்தி, பபூன் முதலிய அனைவரும் சேர்ந்து கையில் வண்ணக் கைக்குட்டையை வைத்துக்கொண்டு ஒயிலாட்டம் போல ஒரு நடனம் ஆடுகின்றனர். கரகாட்டத்தில் பல துணை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.



அ. வாழைக்காய் வெட்டுதல்



கராகட்டம் ஆடிக் கொண்டிருக்கும் போது ஒருவரைப் படுக்க வைத்து அவரது நெஞ்சில் வாழைக்காயை வைத்து விடுகின்றனர். கராகட்டம் ஆடுபவர் கண்ணைக் கட்டிக் கொண்டு, கரக ஆட்டம் ஆடிக்கொண்டு, கரகம் கீழே விழாமல், கத்தியால் வாழைக்காய் வெட்டுகின்றனர். இதனைப் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களிக்கின்றனர்.



ஆ. பல்லால் ஊசி எடுத்தல்



தரையில் ஊசி வைக்கப்பட்டு இருக்கும். கரகாட்டம் ஆடுபவர், ஆட்டம் ஆடிக்கொண்டே தலையில் இருக்கும் கரகம் கீழே விழாமல், பல்லால் கடித்து ஊசியை எடுப்பார். இதன் போது பார்வையாளர்கள் உற்சாகமடைந்து தை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள்.



இ. தீப்பந்த விளையாட்டு



கரகாட்டக்காரர்கள் வட்டமான தீப்பந்தத்திற்குள் நுழைந்து வெளியே வருகின்றனர். இது ஆபத்தான விளையாட்டாகும், கரகாட்டக்காரர்கள் சிறு ஏணி மீது தீப்பந்த விளையாட்டு செய்து காட்டுவதும் உண்டு.



ஈ. பித்தளைத் தட்டு ஆட்டம்



கரகாட்டம் ஆடுபவர் அகன்ற பித்தளைத் தட்டு மீது இருகால்களையும் வைத்து தட்டை நகர்த்திக் கொண்டே கரகாட்டம் ஆடுகின்றார்கள்.



உ. சைக்கிள் ஓட்டுவது



மதுரையைச் சேர்ந்த கரகாட்டக் கலைஞர் லட்சுமி சைக்கிள் பெடல் மீது நின்று கொண்டு ஓட்டிக் கொண்டே கரகாட்டம் ஆடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.



இவ்வாறு கரகாட்டக் கலைஞர்கள் கரகாட்டத்தில் பல சாகசச்செயல்களை நிகழ்த்திக் காட்டி கரகம் ஆடி வருகின்றார்கள்.



திரைப்படத்தின் தாக்கத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட கிராமீயக் கலை கரகாட்டம் என்று குறிப்பிடலாம். எனினும் கரகாட்டத்தில் சிலபோது பரத நாட்டியத்தின் நளினத்தையும், ஹஸ்த முத்திரைகளையும் காணலாம். கலையம்சம் நிறைந்த கரகாட்டத்தைக் கிராமப்புறங்களில் இன்று காண முடிகின்றது. இதற்குக் காரணம் படித்த பெண்கள் சிலர் கரகாட்டம் கற்றுக்கொண்டு ஆட வந்ததுதான்.



கரகாட்டம் ஆடும்போது மாரியம்மன் மீது பாட்டுப்பாடி கரகாட்டம் ஆடுவது தவறுவதில்லை.



”ஒண்ணாங் கரகமடி எங்கு முத்துமாரி



ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி



ரெண்டாங் கரகமடி எங்க முத்துமாரி



ரெத்தினக் கரகமடி எங்க முத்துமாரி”



என்ற பாடல் எல்லோருக்கும் நன்கு தெரிந்த கரகாட்டப் பாடலாகும்.



பார்வையாளர்கள்



கரகாட்டம் இரவு எட்டு மணிக்குத் தொடங்கி, அதிகாலை ஆறுமணி வரை நடைபெறுகின்றது. விடிய விடிய கரகாட்டத்தை நடத்துகின்றோம். கிராம மக்கள் அனைவரும் திரளாக வந்து கூடி, விடிய விடியக் கரகாட்டம் பார்க்கின்றனர். கிராமப்புற மக்கள் நையாண்டி மேளத்திற்கும், கரகாட்டத்திற்கும் பேராதரவு தந்து வருகின்றார்கள். கிராமப்புற மக்களால் தான் நையாண்டி மேளமும், கரகாட்டமும் வளர்ந்து கொண்டு வருகின்றது என்று நையாண்டி மேளக் கலைஞர் ஒருவர் பேட்டியின் போது தெரிவித்தர். கரகாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது யாரும் எழுந்து செல்வதில்லை; கரகாட்டக் கலைஞர்களுக்குப் பார்வையாளர் சன்மானம் வழங்குகிறார்கள் என்றும் தவில் கலைஞர் தெரிவித்தார்.



கிராமப்புறங்களில் நோன்பு கொண்டாடுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே நையாண்டி மேளமும் கரகாட்டமும் இடம் பெற வேண்டும் என்ற தீர்மானித்து விடுகின்றார்கள்.



4. நையாண்டி மேளமும் காவடியாட்டமும்



முருகப் பெருமானுக்கு தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகின்ற பக்தர்களின் பழக்கத்திலிருந்துதான் காவடி எடுக்கும் பழக்கம் தோன்றியது எனலாம். காணிக்கைப் பொருட்களை மரத்தண்டின் இருமுனைகளிலும் கட்டிக் கொண்டு சென்ற வழக்கத்திலிருந்தே காவடியாட்டம் தோன்றியது.



காவடி எடுத்துச் செல்வோர் முருகன் புகழைப் பாட்டாகப் பாடிக் கொண்டு செல்கிறார்கள். காவடிப் பாடல்களைக் கூட்டாகச் சேர்ந்து பாடிக்கொண்டு செல்கின்றார்கள். காவடி எடுத்ததோடு தொடர்புடைய காவடிச் சிந்துப் பாடல்களும் தோன்றின. காவடி எடுத்தல் எனும் சடங்குடன் பாட்டும், ஆட்டமும் இணைந்து கொண்டன.



காவடி எடுத்துச் செல்வோரில் திறமையுள்ள சிலர் காவடி ஆட்டக் கலையின் நுணுக்கங்களை அறிந்து கொண்டு அதைத் தொழில் முறைக் கலையாக ஆட ஆரம்பித்தனர்.



தொழில் முறைக் கலைஞன் காவடியைத் தான் தோள்களில் சுற்றி வரச் செய்வான் முதுகில் காவடியை உருளவிடுவான். முதுகிலிருந்து மெல்ல மெல்ல காவடியைத் தலைக்குக் கொண்டு வருவான். தலையில் நீண்ட நேரம் சுழற்றி ஆடுவான்.



பார்வையாளர்கள் காவடியாட்டத்தைக் கண்டு மெய்மறந்து நிற்பார்கள். கோவை மாவட்டத்தில் தொழில் முறையாக காவடியாட்டம் ஆடும் கலைஞர்கள் சிலர் இருக்கின்றனர். இவர்கள் கனமான பெரிய மயில் பீலிக் காவடிகளை வைத்து ஆடுகின்றனர். நையாண்டி மேளம் தான் காவடியாட்டத்திற்குப் பின்னணி இசையாக அமைகின்றது. இதன் போது ”காவடிக் கொட்டு” வாசிக்கப்படுகிறது.



காவடியாட்டம் உச்ச கட்டத்திற்குச் செல்லும் போது நையாண்டி மேளமும் உச்சச்கட்டத்திற்குச் செல்லும். காவடிச் சிந்துப் பாடல்களை நாதசுரத்தில் வாசிக்கின்றனர். கரகாட்டத்தில் கால் வைப்பு முறையும், காவடியாட்டத்தின் கால் வைப்பு முறையும், ஏறக்குறைய ஒன்று போலத்தான் இருக்கும். தொழில் முறைக் காவடி ஆட்டக் கலைஞர் தலையில் காவடியை வைத்து ஒரு மணி நேரம் சுழன்று சுழன்று ஆடுகின்றார். தொழில் முறைக் கலைஞர்கள் ஆடுகின்ற காவடியாட்டமும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் ஆட்டம் ஆகும்.



5. நையாண்டி மேளமும் பொய்க்கால் குதிரையாட்டமும்



தமிழ்நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் நாட்டுப்புற ஆட்டம் பொய்க்கால் குதிரையாகும். கோயில் திருவிழாக்களிலும், திருமண ஊர்வலங்களிலும் இவ்வாட்டம் ஆடப்பட்டு வருகின்றது. மூங்கில் தப்பைகளாலும், அட்டையாலும் செய்யப்பட்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட அழகிய குதிரைகளை, ஆட்டம் ஆடும் இருவர் அணிந்து கொண்டு, தங்களது கால்களில் மரக்கட்டைகளை கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடுபவர்கள் தங்கள் சொந்தக்கால்களில் நிற்காமல் பொய்க்கால்களில் நின்று கொண்டு ஆடுவதுதான் இந்த ஆட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.



நையாண்டி மேளத்தின் இசைக்கு ஏற்ப ஆட்டம் ஆடுபவர்கள் கால்களைப் பின்னிப் பின்னி ஆடுவார்கள்.



தொடக்க காலத்தில் முதன் முதலில் தஞ்சாவூரில் இக்கலை தோன்றிப் பின்னர் பிற பகுதிகளுக்குப் பரவியது என்று கூறுகின்றனர். பொய்க்கால் குதிரையாட்டத்தில் ராஜா – ராணி வேடம் அணிந்து கொண்டு ஆடும் ஆட்டமே பிரதானம் ஆகும். குதிரையின் மீது ராஜா ஏறி அமர்ந்து கொண்டு ராணியின் அருகில் ஆட்டம் ஆடிக்கொண்டு வருவதும், ராணி விலகிச் செல்வதும் கண்டு மகிழத்தக்கதாகும். ராஜாவின் வருகை, அவரது செயல்கள் நையாண்டி மேள இசைக்கு ஏற்ப அமையும். தஞ்சாவூர் மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்ற ஆட்ட வடிவமாக இவ் ஆட்டம் விளங்கி வருகின்றது. சேர, சோழ, பாண்டியர் காலத்திலிருந்தே ஆடப்பட்டு வருகின்ற கலை வடிவம் என்ற பாரம்பரியம் இந்த ஆட்டத்திற்கு உண்டு. ”பொய்க்கால் குதிரையாட்டம்” பார்வையாளர்களை மகிழ்ச்சியூட்டக் கூடிய, உற்சாகத்தில் திளைக்கச் செய்யக் கூடிய ஆட்ட வகையாகும்.



நையாண்டி மேள இசைப் பிண்ணனியுடன் வளர்ந்து வரும் கலைகளென கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களைக் குறிப்பிடலாம்.



திரைப்படம், தொலைக்காட்சி முதலிய பொழுது போக்கு சாதனங்கள் கிராம மக்களின் சமூக வாழ்க்கையைப் பாதித்துக் கொண்டு வந்தாலும், நையாண்டிமேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய பாரம்பரிய கலை வடிவங்கள் மண்ணின் மனத்தோடு செழித்து வளர்வதற்கு கிராம மக்கள் துணைபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.



குறிப்புகள்



1. வி.வி. சடகோபன், (இ.ஆ)., தென் இந்தியக் கிராமிய நடனங்கள், ப.9.



2. மேலது, ப.9.



3. George List, Folk Music, Richard M.Dorson (E.d) Folk Lore and Folk Life, P.363.



4. நையாண்டி மேளக் கலைஞர், என். முருகேசன், பேட்டி நாள் : 11.1.2003



5. விபுலாநந்த சுவாமிகள், யாழ் நூல், பாயிரவியல், ப.18.



6. S. Krishnaswamy, Musical Instruments of India, P.27.



7. கபில வாத்ஸ்யாயன் (இ.ஆ)., இந்தியக் கிராமிய நடனங்கள், (முதற்பாகம்), முன்னுரை, ப.7.



8. வி.வி. சடகோபன், (இ.ஆ)., தென் இந்தியக் கிராமிய நடனங்கள், ப.10.



9. மேலது. பக். 9-10.



10. நையாண்டி மேளக் கலைஞர், என். முருகேசன், பேட்டி நாள் : 11.1.2003.



11. நையாண்டி மேளக் கலைஞர், என். முருகேசன், பேட்டி நாள் : 11.1.2003.



12. வி.வி. சடகோபன், (இ.ஆ), மு.கு. நூல், ப.32.



நன்றி: பெ. சுப்ரமணியன். திறனாய்வு சில புதிய தேடல்கள்.

வறுமைதான் என் வைராக்கியத்தை உறுதிப்படுத்தியது



தந்தை சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்... மகன் ஐஏஎஸ் அதிகாரி!

படிப்பறிவும் பொருளாதாரப் பின்புலமும் இல்லாத நாராயண், வாரணாசியில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர். இவருக்கு மூன்று பிள்ளைகள். சாப்பாட்டுக்கே சிரமமான நிலைமை. இந்த வறுமையான சூழ்நிலையிலும் தன் மகன் கோவிந்த் ஜெய்ஸ்வாலை ஐஏஎஸ் படிக்க வைத்துள்ளார். இன்று கோவிந்த் உதவி ஆட்சியர்.

தான் படிக்காவிட்டாலும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்த நாராயண், தன் சிரமமான பொருளாதார நிலைமையிலும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்துள்ளார். அதில் இளைய மகனான கோவிந்த் ஜெய்ஸ்வால்தான் இப்போது ஐஏஎஸ் அதிகாரி.

நெருக்கடி மிகுந்த வாரணாசி பகுதியில் 12 x 8 என்ற அளவுகொண்ட ஒரு சிறிய அறைதான் கோவிந்தின் வாடகை வீடு. அந்தச் சிறிய அறையில்தான் கோவிந்தின் படிப்பு, வீட்டின் சமையல், துணிகளைத் துவைத்தல் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரின் இரவு நேர உறக்கமும். வறுமை ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க, கூடவே கோவிந்தின் ஐஏஎஸ் கனவும் வளர்ந்திருக்கிறது. வீட்டைச் சுற்றியுள்ள மின்தறி சத்தங்கள், தொழிற்சாலைகளின் புகை, பதினான்கு மணி நேரம் மின்வெட்டு எனப் பல்வேறு பிரச்சினைகள் அவரது கனவுக்கு முட்டுக்கட்டை போட்டாலும் அவற்றை வென்று, கனவைக் கைப்பற்றியிருக்கிறார் கோவிந்த்.

சிறு வயதில் மற்ற பிள்ளைகளைப் போல வீதியில் விளையாடுவது, நண்பர்களுடன் அரட்டை என எதுவும் இல்லாமல் படிப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார். இதனால், மற்ற மாணவர்கள் கோவிந்தை கூச்ச சுபாவம் மிக்க மாணவராவே கருதினர். ஆனால், உண்மையில் கோவிந்த் தனது லட்சியத்துக்காக தனது சிறு வயது பால்ய சந்தோஷங்களை தியாகம் செய்துள்ளார் என்பதே உண்மை.

கணக்குப் பாடத்தில் வல்லவரான கோவிந்த், எட்டாம் வகுப்பு படிக்கும்போதே மற்ற ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்களுக்கும் மாலை வேளையில் டியூஷன் சொல்லிக் கொடுத்து அதில்வரும் வருமானத்தில் தன் அக்காக்களுக்கும், குடும்பத்திற்கும் உதவிகரமாக இருந்துள்ளார். பள்ளியில் அவர்தான் முதல் மாணவர். பின்பு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரிப் படிப்பினை முடித்து, ஐஏஎஸ் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தார். மேலும், தனது ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சிக்காக டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் கோவிந்த். அந்த நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக கோவிந்தின் தந்தைக்கு காலில் அடிபட்டு படுக்கையில் முடங்கினார். ஒரு பக்கம் தன் கனவு, இன்னொரு பக்கம் தந்தையின் உடல் நிலை என இறுக்கமான சூழ்நிலையில் இருந்த கோவிந்திற்கு அவரது தந்தை நாராயண் நம்பிக்கை அளித்து, டெல்லிக்குச் சென்று படிக்க, மகள்களின் திருமணத்திற்காக வாங்கிய இடத்தினை 30,000 ரூபாய்க்கு விற்று, கோவிந்தை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தன் குடும்பத்தின் வறுமை நிலையை எண்ணி கடுமையாகப் படித்த கோவிந்த், 2006ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். மேலும் இரண்டு வருட ஐஏஎஸ் பயிற்சியில் தனக்குக் கிடைத்த உதவித்தொகையை அடிபட்ட தந்தையின் மருத்துவச் செலவிற்காக அனுப்பியுள்ளார் கோவிந்த்.

வெற்றிபெற்ற அனுபவத்தை கோவிந்த் கூறும்போது, "சிறு வயதில் பகல் நேரத்தில் தொழிற்சாலைகளின் சத்தத்தில் நான் கணக்குப் பாடங்களின் சூத்திரங்களை மட்டுமே போட்டுப் பார்ப்பேன். ஏனென்றால், அந்தச் சத்தத்தில் மற்ற பாடங்கள் சரியான முறையில் மனதில் ஏறாது. சத்தங்கள் மாலை நேரங்களில் குறைந்ததும் மற்ற பாடங்களைப் படிப்பேன். அப்துல் கலாம் தான் என்னுடைய ஹீரோ. என்னுடைய ஐஏஎஸ் கனவு நிஜமாக என்னுடன் இருந்து நம்பிக்கையூட்டியது அவர் எழுதிய, ‘அக்னி சிறகுகள்’ புத்தகம். மேலும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி உற்சாகம் அளித்த சகோதரிகளுக்கும், என் கனவின் மேல் நம்பிக்கை வைத்து என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்த என் தந்தைக்கும் மனம் நெகிழ்ந்த நன்றியைக் கூறுகிறேன். என்னுடைய சிறுவயது நாட்கள் கஷ்டமானவையாக இல்லாமல் போயிருந்தால் நான் ஐஏஎஸ் ஆகியிருக்க வாய்ப்பில்லை. அந்த வறுமையும் கஷ்டங்களும்தான் என் வைராக்கியத்தை அதிகப்படுத்தி, பொறுப்புடன் படிக்க காரணமானது" என்கிறார் கோவிந்த்.

ஐஏஎஸ் பிரதானத் தேர்வில் கணக்கினைத் தவிர்த்து விட்டு தத்துவம், வரலாற்றுப் பாடங்களைப் பிரதானமாகத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார் கோவிந்த். "உலகில் எல்லாப் பாடங்களும் எளிதில் படிக்கக் கூடியவைதான். ஆனால், அதில் நாம் எவ்வளவு தூரம் ஆழமாக கற்றுக் கொள்கிறோம் என்பதே முக்கியம்" என்கிறார். ஐஏஎஸ் தேர்வில் அனைத்துப் பாடங்களையும் தாய்மொழி ஹிந்தியிலேயே எழுதியிருக்கிறார் இவர். "தாய்மொழியில் தேர்வு எழுதுவது பிரச்சினை கிடையாது. நாம் கற்றதை தெளிவான முறையில் எப்படித் தேர்வில் வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இத்துடன் தளராத நம்பிக்கையும் இருந்தால் எந்தத் தடையையும் உங்களால் வெல்ல முடியும்" என்று சொல்லும் கோவிந்த் ஜெய்ஸ்வால், இப்போது நாகாலாந்து மாநிலத்திலுள்ள சூன்ஹிபோடோ (zunheboto) என்ற மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிகிறார்.

---என். ஹரிபிரசாத்
 

அறிவியல் துறைகளின் அருந்தமிழ்ப் பெயர்கள்



அகச்சுரப்பியியல் - Endocrinology
அடிசிலியல் - Aristology
அடையாளவியல் - Symbology
அண்டவியல் - Universology
அண்டவியல் - Cosmology
அணலியல் - Pogonology
அருங்காட்சியியல் - Museology
அருளரியல் - Hagiology
அளவீட்டியல் - Metrology
அற்புதவியல் - Aretalogy
ஆடவர் நோயியல் - Andrology
ஆய்வு வினையியல் - Sakanology
ஆவணவியல் - Anagraphy 
ஆவியியல் - Spectrology
ஆறுகளியல் - Potamology
இசையியல் - Musicology
இந்தியவியல் - Indology
இயற்பியல் - Physics
இரைப்பையியல் - Gastrology
இலக்கிலி இயல் - Dysteleology
இறை எதிர் இயல் - Atheology
இறைமையியல் - Pistology
இறைமையியல் - Theology
இன உறுப்பியல் - Aedoeology 
இன்ப துன்பவியல் - Algedonics
இனப் பண்பாட்டியல் - Ethnology
இனவியல் - Raciology
ஈரிடவாழ்வி இயல் - Herpetology
உடலியல் - Physiology
உடற் பண்டுவஇயல் - Phytogeography
உடற்பண்பியல் - Somatology
உடுவியக்கவியல் - Asteroseismology 
உணர்வகற்றியல் – Anesthesiology
உயிர் மின்னியல் - electro biology
உயிர்ப்படிமவியல் - Paleontology
உயிர்ப்பொருளியல் - Physiology
உயிர்மியியல் - Cytology
உயிரித் தொகை மரபியல் - Population Genetics
உயிரித்தொகை இயக்க இயல் - Population Dynamics
உயிரிய இயற்பியல் - Biophysics
உயிரிய மின்னணுவியல் - Bioelectronics
உயிரிய வேதியியல் - Biochemistry
உயிரிய வேதிவகைப்பாட்டியல் - Biochemical taxonomy
உயிரியத்தொழில் நுட்ப இயல் - Biotechnology
உயிரியப் பொறியியல் - Bioengineering 
உயிரியல் - Biology
உயிரினக் காலவியல் - Bioclimatology
உயிரினச் சூழ்வியல் - Bioecology
உருவகவியல் - Tropology
உருள்புழுவியல் - Nematology
உரைவிளக்கியல் - Dittology
உளவியல் - Psychology
ஊட்டவியல் - Trophology
எகிப்தியல் - Egyptology
எண்கணியியல் - Numerology
எரிமலையியல் - Volconology
எலும்பியல் - Osteology
எலும்பு நோய் இயல் - Osteo pathology
எறும்பியல் - Myrmecology
ஒட்பவியல் - Pantology
ஒப்பனையியல் - Cosmetology 
ஒலியியல் - Phonology
ஒவ்வாமை இயல் - Allergology
ஒழுக்கவியல் - Ethics
ஒளி அளவை இயல் - Photometry
ஒளி இயல் - Photology
ஒளி உயிரியல் - Photobiology
ஒளி விளைவியல் - Actinology
ஒளி வேதியியல் - Photo Chemistry
ஒளித்துத்த வரைவியல் - Photozincography
ஓசையியல் - Acoustics 
கசிவியல் - Eccrinology
கட்டடச்சூழலியல் - Arcology 
கடப்பாட்டியல் - Deontology
கடல் உயிரியல் - Marine biology 
கடற் பாசியியல் - Algology
கண்ணியல் - Opthalmology
கணிப்பியல் - Astrology
கதிர் மண்டிலவியல் - Astrogeology
கதிர் விளைவியல் - Actinobiology 
கரிசியல் - Hamartiology
கரிம வேதியியல் - Organic Chemistry
கருத்தியல் - Ideology
கருதுகை விலங்கியல் - Cryptozoology
கருவியல் - Embryology
கருவியல் - Embryology
கல்வி உளவியல் - Educational Psychology
கலைச்சொல்லியல் - Terminology
கழிவியல் - Garbology
கனி வளர்ப்பியல் - Pomology
கனிம வேதியியல் - inorganic chemistry
கனியியல் - Carpology
கனியியல் - Pomology
காளானியல் - Mycology
காற்றழுத்தவியல் - Aerostatics 
காற்றியக்கவியல் - Aerodynamics 
காற்றியல் - Anemology
கிறித்துவியல் - Christology
குடல் புழுவியல் - Helminthology
குருட்டியல் -Typhology
குருதி இயல் - Haematology / Hematology
குளுமையியல் - Cryology 
குற்றவியல் - Criminology
குறிசொல்லியல் - Parapsychology
குறிப்பியல் - Cryptology
குறியீட்டியல் - Iconology
கெல்டிக் சடங்கியல் - Druidology
கேட்பியல் - Audiology
கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)-Pasimology
கையெழுத்தியல் - Graphology
கொள்ளை நோயியல்- Epidomology
கோட்பாட்டியல் - Archology
கோளியல் - Uranology
சங்குஇயல் - Conchology
சமயவிழாவியல் - Heortology
சரி தவறு ஆய்வியல் - Alethiology
சாணவியல் - Scatology
சிலந்தி இயல் - Araneology
சிலந்தியியல் - Arachnology 
சிறப்புச் சொல் தோற்றவியல் - Onomatology 
சீனவியல் - Sinology
சுரப்பியியல் - Adenology 
சூழ் வளர் பூவியல் - Anthoecology
சூழ்நிலையியல் - Ecology
செதுக்கியல் - Anaglyptics 
செய்கை இயல் - Dactylology
செல்வ வியல் - Aphnology 
செல்வவியல் - Plutology
செவ்வாயியல் - Areology
செவியியல் - Otology
சொல்லியல் - Lexicology
சொல்லியல் - Accidence 
சொற்பொருளியல் - Semasiology
தசையியல் - Myology
தண்டனையியல் - Penology
தமிழியல் - Tamilology
தன்மையியல் - Axiology
தன்னியல் - Autology
தாவர உள்ளியல் - Phytotomy
தாவர நோய் இயல் - Phytopathology
தாவர வரைவியல் - Phytography
தாவரஊட்டவியல் - Agrobiology 
தாவரவியல் - Botany
திணைத் தாவர இயல் - Floristics
திணையியல் - Geomorphology
திமிங்கில இயல் - Cetology
திருமறைக் குறியீட்டியல் - Typology
திருமனையியல் - Naology
திரைப்படவியல் - Cinimatography
தீவினையியல் -Ponerology
துகள் இயற்பியல் - Particle physics
துகளியல் - Koniology
துதிப்பாவியல் - Hymnology 
துயிலியல் - Hypnology
தூய இலக்கியல் - Heirology
தூள்மாழை இயல் - Powder Metallurgy
தேர்தலியல் -Psephology
தேவதை இயல் - Angelology
தேவாலயவியல் - Ecclesiology
தேனீ இயல் - Apiology
தொடர்பிலியியல் - Phenomenology
தொண்டை இயல் - Pharyngology
தொல் அசீரியர் இயல் - Assyriology
தொல் உயிரியல் - Palaeontology
தொல் சூழ்நிலையியல் - Paleo ecology
தொல் பயிரியல் - Paleobotany
தொல் மாந்தவியல் - Paleoethnology 
தொல் மீனியல் - Paleoichthylogy 
தொல் விலங்கியல் - Palaeozoology
தொல்தோற்ற இனவியல் (மாந்த - மாந்தக்குரங்கினவியல்) - Anthropobiology
தொல்லிசையியல் - Ethnomusicology
தொல்லியல் - Archaeology
தொல்லினவியல் - Paleethnology 
தொல்லெச்சவியல் - Archaeozoology
தொழில் நுட்பச் சொல்லியல் - Orismology
தொழில் நுட்பவியல் - Technlogy
தொழிற்சாலை வேதியியல் - industrial chemistry
தொழு நோயியல் - Leprology
தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் - Pestology 
தொன்மவியல் - Mythology
தோட்டுயிரியியல் - Astacology
தோல்நோயியல் - Dermatology
நச்சியியல் - Virology
நடத்தையியல் - Praxeology
நரம்பியல் - Neurology
நல்லுயிரியல் - Pneumatology
நலிவியல் - Astheniology 
நன்னியல் - Agathology
நாடி இயல் - Arteriology
நாணயவியல் - Numismatology
நாளவியல் - Angiology 
நிகழ்வியல்- Chronology
நிலத்தடி நீரியல் - Hydrogeology
நிலநடுக்கவியல் - Seismology
நிலாவியல் - Selenology
நிலை நீரியல் - Hydrostatics
நீத்தாரியல் - Martyrology
நீர் வளர்ப்பியல் - Hydroponics 
நீர்நிலைகளியல் - Limnology
நீராடல் இயல் - Balneology
நுண் உயிரியல் - Microbiology
நுண் வேதியியல் - Microchemistry
நுண்பொருளியல் - Micrology
நுண்மி இயல் - Bacteriology
நுண்மின் அணுவியல் - Micro-electronics
நூல் வகை இயல் - Bibliology
நெஞ்சக வியல் - Cardiology
நெடுங்கணக்கியல் - Alphabetology
நெறிமுறையியல் - Aretaics 
நொதி இயல் - Enzymology
நொதித் தொழில் நுட்பவியல் - Enzyme tecnology
நோய் இயல் - Pathology
நோய்க்காரணவியல் - Aetiology
நோய்க்குறியியல் - Symptomatology
நோய்த்தடுப்பியல் - Immunology
நோய்த்தீர்வியல் - acology 
நோய்நீக்கியல் - Aceology 
நோய்வகையியல் - Nosology
நோயாய்வியல் - Etiology
நோயியல் - Pathology
படஎழுத்தியல் - Hieroglyphology
படிகவியல் - crystallography
பணிச்சூழ் இயல் - Ergonomics
பத்தியவியல் - Sitology
பயிர் மண்ணியல் - Agrology
பயிரியல்-Phytology
பரியியல் - Hippology
பருப் பொருள் இயக்கவியல் - kinematics
பருவ இயல் - Phenology
பருவப் பெயர்வியல் - Phenology
பல்லியல் - Odontology
பழங்குடி வழக்கியல் - Agriology
பழம்பொருளியல் - Paleology
பற் கட்டுப்பாட்டியல் - Contrology
பறவை நோக்கியல் - Ornithoscopy 
பறவையியல் - Paleornithology
பனிப்பாளவியல் - Glaciology
பாசி இயல் - Phycology
பாப்பிரசு சுவடியியல் - Panyrology
பாம்பியல் - Ophiology
பார்ப்பியல் Neossology
பாலூட்டியல் - Mammalogy
பாறைக் காந்தவியல் - Palaeo Magnetism
பாறையியல் - Lithology
பாறை அமைவியல் - Petrology
பிசாசியல் - Diabology
பிளவையியல் - Oncology
புத்த இயல் - Buddhology
புத்தியற்பியல் - New physics
புதிரியல் - Enigmatology
புதைபடிவ இயல் - Ichnology
புல உளவியல் - Faculty Psychology
புல்லியல் - Agrostology
புவி இயற்பியல் - Geo physics
புவி உயிர்ப் பரவியல் - Biogeography
புவி வடிவ இயல் - Geodesy
புவி வளர் இயல் - Geology
புவி வேதியியல்- Geo-chemistry
புவியியல் - Geography
புவிவெளியியல் - Meteorology
புள்ளியல் - Ornithology
புறமண்டிலவியல் - Exobiology
புற்று நோய் இயல் - Cancerology
பூச்சி பொட்டு இயல் - Acarology
பூச்சியியல் - Entomology
பூச்சியியல் - Entomology
பூச்சியியல் - Insectology 
பெயர்வன இயல் - Acridology
பெரு வாழ்வியல் - macrobiotics
பேயியல் - Demonology
பொதுஅறிவு இயல் - Epistemology
பொருள்சார் வேதியியல் - Physical Chemistry
போட்டியியல் - Agonistics 
போதனையியல் - Patrology
மகளிர் நோய் இயல் - Gynaecology/ Gynecology
மண்டையோட்டியல் - Craniology 
மண்ணியல் - Pedology
மண்புழையியல் - Aerology
மணி இயல் - Campanology
மணிவியல் - Gemology
மதுவியல் - Enology (or Oenology)
மர ஒளி வரைவியல் - Photoxylography
மரபு இயைபியல் - Genecology
மரபு வழியியல் - Geneology
மரவரியியல் - Dendrochronology
மரவியல் - Dendrology
மருத்துவ அளவீட்டியல் - Posology
மருத்துவ நோயியல் - Clinical pathology
மருத்துவ மரபணுவியல் - Clinical genetics
மருந்தாளுமியல் - Pharmacy
மருந்தியல் - Pharmacology
மருந்து வேதியியல் - Medicinal chemistry
மலையியல் - Orology
மழையியல் - Ombrology
மனக்காட்சியியல் - Noology
மனநடையியல் - Nomology
மன்பதை உளவியல் - Social Psychology
மன்பதையியல் - Sociology
மனைவளர்உயிரியல் - Thremmatology
மாந்த இனவியல் - Ethnology
மாவியல் - Morphology
மானிடவியல் - Anthropology
மின் ஒலியியல் - Electro-acoustics 
மின்வேதியியல் - Electrochemistry
மின்னணுவியல் - Electronics
மீனியல் - Ichthyology. 
முகிலியல் - Nephology
முட்டையியல் - Oology
முடியியல் - Trichology
முதற்கோட்பாட்டியல் - Archelogy / Archology 
முதியோர் கல்வியியல் - Andragogy
முதுமையியல் - Gerontology
முரண் உயிரியல் - Teratology
முரணியல் - Heresiology
முறையியல் - Systomatology
முனைப்படு வரைவியல் - Polarography
மூக்கியல் - Rhinology
மூதுரையியல் - Gnomology
மூப்பியல் - Gerontology
மூலக் கூறு உயிரியல் - Molecular biology
மெய் அறிவியல் - Philosophy
மெய்ம்மி நோயியல் - Histopathology
மெய்ம்மியியல் - Histology
மேகநோயியல் - Syphilology
மொழியியல் - Philology
மோப்பவியல் - Olfactology
ரூனிக்கியல் - Runology
வகையியல் - Taxology
வண்ணவியல் - Chromatology
வழக்குப் பேச்சியல் - Dialectology
வழிபாட்டியல் - Liturgiology
வளி நுண்மியல்- Aerobiology
வளிநுகரியியல் - Aerobiology 
வாந்தியியல் - Emetology 
வாய்நோயியல் - Stomatology
வாலில்லாக் குரங்கியல் – Pithecology
வான இயற்பியல் - Astrophysics
வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) - Aerophilately
வானியல் - Astronomy
வானிலை இயல் - Neteorology/ Astrometeorology
வானோடவியல் - Aerodonetics 
விசை இயக்க இயல் - Kinetics
விண்கற்களியல் – Aerolithology
விண்ணுயிரியியல் - Astrobiology 
விண்பொருளியல் - Astrogeology 
விந்தையியல் - Thaumatology
விலங்கியல் - Zoology
விளைச்சலியல் (வேளாண் பொருளியல்) - Agronomics
வெளிற்றியல் - Agnoiology
வேதியியல் - Chemistry
வேதிவகைப்பாட்டியல் - Chemotaxonomy
வேர்ச்சொல்லியல் - Etymology