Search This Blog

Wednesday, August 1, 2012

சந்திரசேகரபாரதி கணிக்கும் இலவச மாத ராசிபலன்:


Photo: சந்திரசேகரபாரதி கணிக்கும் 
இலவச மாத ராசிபலன்:

2012 ஆகஸ்ட் 1 முதல் 31 வரை

சிம்மம், கன்னி, துலாம் ,விருச்சிகம்,

சிம்மம் :

சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் மட்டுமே கோசாரப்படி அனுகூலமாக இருப்பதால் எதிலும் விசேடமான  நன்மைகளை எதிர்பார்க்க இயலாமல் போகும். பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகம் இருக்கும். சிக்கன  நடவடிக்கை அவசியம் தேவை. வீடு மாற்றம், தொழில் மாற்றம் ஆகியவை ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால்  தொல்லைகள் சூழும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப நலனில் அக்கறை அதிகம் தேவை. 

குடும்பத்தில் சலசலப்புக்கள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். 

அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். மக்களால் அதிகம் அனுகூலமிராது. உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள்,  வங்கிப்பணியாளர்கள், இயந்திரப்பணியாளர்கள், இஞ்சினீயர்கள் ஆகியோருக்கெல்லாம் பிரச்னைகள் சூழும். 

அரசியல்வாதிகளும் அரசுப்பணியாளர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும், இரசாயனத்துறைகளைச் சேர்ந்தவர்களும்  மாத முன்பகுதியில் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள்  படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது.  விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும். 


4-ஆம் தேதி முதல் சனி 3-ஆமிடம் மாறி, வலுப்பெறுவதால் மனத்துணிவு கூடும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு  உண்டாகும். தொழிலாளர்களது நிலை உயரும். 14-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறுவதால் போட்டிப்  பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

இயந்திரப்பணிகள் லாபம் தரும். சொத்துக்கள் சேரும். 16-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு இடம் மாறி  வலுப்பெறுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உயர்பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் மாதம்  முழுவதுமே சிறப்பாக அமையும். புதிய பொருட்சேர்க்கை நிகழும். 

மகம், உத்திரம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகமாகும். 

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 3, 12, 13, 15, 20, 22, 23, 26 (பிற்பகல்), 29.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.  

எண்கள்: 6, 7.  
.............

கன்னி: 


சூரியன், புதன், குரு, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும்.  புத்திசாலித்தனம் கூடும். முக்கியமான காரியங்கள் எளிதில் நிறைவேறும். முக்கியஸ்தர்கள் உங்களுக்குப் பக்கபலமாக  இருப்பார்கள். அரசுப்பணிகள் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். 

புதிய வியாபார முன்னேற்றத்திட்டங்கள் கைகூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு சம்பந்தப்பட்ட  துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

புதிய சொத்துக்கள், பொருட்கள் சேரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பயணத்தால் அனுகூலம்  உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். 

அறப்பணிகளில் ஈடுபாடு கூடும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி  பெறுவார்கள். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்களுக்குச்  செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 

ஜன்ம ராசியில் செவ்வாயும் சனியும் உலவுவதால் உடல்நலம் பாதிக்கப்படும் என்றாலும் ராசியைக் குருபார்ப்பதால்  சரியாகும். எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடவும். 4-ஆம் தேதி முதல் சனி 2-ஆமிடம் மாறுவதால்  உழைப்புக்குரிய பயன் கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும். கடனாகப் பணம் கிடைக்கும். 14-ஆம் தேதி முதல்  செவ்வாய் 2-ஆமிடம் மாறுவதால் குடும்ப நலனில் கவனம் தேவை. பேச்சில் நிதானம் அவசியமாகும். உணவுப்  பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத்  தேவை. 16-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. உஷ்ணாதிக்கம் கூடும். தந்தையாலும் 


அரசாங்கத்தாராலும் செலவுகள் ஏற்படும். கண், வாய், பல், கால் பாதம் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். 28 -ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. வியாபாரத்தில் முழுக்கவனம் செலுத்தவும். சிலருக்கு  தொழிலில் ஒரு மாற்றம் உண்டாகும். 

உத்திரம். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 3, 6, 12, 13, 15, 20, 22, 23, 26 (பிற்பகல்), 29.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு. 

எண்: 1, 3, 4, 5, 6. 

............
துலாம்: 


சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் செயல்திறமை வெளிப்படும். 


அறிவாற்றல் கூடும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய துறைகளில் ஈடுபடவும் வாய்ப்புக் கூடிவரும்.  அரசாங்கப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். உங்களைக்  காட்டிலும் வயதில் மூத்தவர்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம்  ஏற்படும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். 

மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். புனிதமான  காரியங்களில் பங்கு கொள்வீர்கள். 2-ல் ராகுவும் 8-ல் குரு, கேது ஆகியோரும் இருப்பதால் பொருள்  கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். 12-ல் செவ்வாயும் சனியும்  சஞ்சரிப்பதால் சுகம் குறையும். தூக்கம் கெடும். வீண் செலவுகளும் இழப்புகளும் உண்டாகும். கண், கால் சம்பந்தமான  உபாதைகள் ஏற்படும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரும். கைப்பொருள் காணாமல் போகக் கூடும் 

என்பதால் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. 

4-ஆம் தேதி முதல் சனி ஜன்ம ராசிக்கு இடம் மாறினாலும் அவர் உங்கள் ராசிக்கு யோக காரகன் என்பதால் நலமே  புரிவார். மதிப்பு உயரும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். 14-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு  இடம் மாறுவது சிறப்பாகாது. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியமாகும். 16-ஆம் தேதி முதல்  சூரியன் 11-ஆமிடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத்திறமை கூடும். 28-ஆம் தேதி முதல் புதன் 11 -ஆமிடம் மாறுவதால் தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். தந்தையால் நலம் பெருகும். தொலைதூரத் தொடர்பு  பயன்படும். 

சுவாதி, விசாக நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும். 

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 3, 6, 13, 15, 20, 22, 23, 26 (பிற்பகல்), 29.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 5, 6.  
...........

விருச்சிகம்: 


செவ்வாய், குரு, சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் சுயபலம் கூடும். செயல்திறமை  வெளிப்படும். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும்.  இயந்திரப்பணியாளர்களும் இஞ்சினீயர்களும் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும்.  பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். தெய்வப் பணிகள் ஈடேறும்.  திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். 

குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். விருந்து,உபசாரங்களில் ஈடுபாடு கூடும். பேச்சில் இனிமை நிறைந்திருக்கும்.  தனவந்தர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகமாகும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.  ஜன்ம ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் உலவுவதால் அலைச்சல் கூடும். கணவன் மனைவியிடையே சிறுசிறு 

சலசலப்புக்கள் ஏற்படும். 9-ல் சூரியனும் புதனும் உலவுவதால் செய்து வரும் தொழிலில் கவனம் தேவை. 4-ஆம் தேதி முதல் சனி 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும்.  14-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறி, சனியுடன் கூடுவதால் பிரச்னைகள் அதிகமாகும். சகோதர நலம் பாதிக்கும். வீண் செலவுகள், இழப்புகள் ஆகியவை ஏற்படும். கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். உடல்நலனில்  கவனம் தேவை. 16-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். 

வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு,  இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். 28-ஆம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவதும்  குறிப்பிடத்தக்கது. வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். மாணவர்களது நிலை உயரும். தொழில் நுட்பத்திறமை 

பளிச்சிடும். முக்கியப் பொறுப்புகளைப் பெறுவீர்கள். 

விசாகம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான மாதமிது. 

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 3, 6, 12, 15 (பிற்பகல்), 20, 22, 23, 26 (பிற்பகல்), 29.

திசைகள்: கிழக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு. 

எண்கள்: 1, 3, 6, 9. 
.........

சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம்


சிவாஜி 25

சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...

* சத்ரபதி சிவாஜி வேடத்த
ில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!

* தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!

* விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!

* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

* கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

- மானா பாஸ்கரன்

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....




எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்க
ளே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல்

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.

‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.