Search This Blog

Sunday, August 9, 2020

அபூர்வ நக்ஷத்திரங்கள் பற்றிய முழு ரகசியங்கள்.

 நக்ஷசத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் சந்திரன் எந்த இடத்தில் நிற்கின்றானோ அந்த இடத்தை நக்ஷ்சத்திரம் எனக்குறிப்பிடுவது வழக்கம்.
நட்சத்திர மண்டலம் 27 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது,அவைகளே 27 நட்சத்திரங்களாகும். 27 நட்சத்திரங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நட்சத்திர பெயர்கள்
***********************

1.அஸ்வினி 2. பரணி 3.கிருத்திகை 4.ரோஹிணி 5.மிருகசீரிடம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம்

10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்தம் 14.சித்திரை 15.ஸ்வாதி 16.விசாகம் 17. அனுசம் 18. கேட்டை

19.மூலம் 20.பூராடம் 21.உத்திராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27. ரேவதி

நட்சத்திர வடிவம்
*******************

அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - யோனி, அடுப்பு,
முக்கோணம்
கிருத்திகை - கத்தி, கற்றை, வாள்,
தீஜ்வாலை
ரோஹிணி - தேர், வண்டி, கோயில்,
ஆலமரம், ஊற்றால், சகடம்
மிருகசீரிடம் - மான் தலை,
தேங்கைக்கண்
திருவாதிரை - மனித தலை, வைரம்,
கண்ணீர்துளி
புனர்பூசம் - வில்
பூசம் - புடலம்பூ, அம்புக்கூடு,
பசுவின்மடி
ஆயில்யம் - சர்ப்பம்,அம்மி
மகம் - வீடு,பல்லக்கு,நுகம்
பூரம் - கட்டில்கால், கண்கள்,
அத்திமரம், சதுரம், மெத்தை
உத்திரம் - கட்டில்கால், கம்பு, குச்சி,
மெத்தை
ஹஸ்தம் - கை
சித்திரை - முத்து,புலிக்கண்
ஸ்வாதி - பவளம்,தீபம்
விசாகம் - முறம், தோரணம், குயவன் சக்கரம்
அனுசம் - குடை, முடப்பனை,
தாமரை, வில்வளசல்
கேட்டை - குடை,குண்டலம்,ஈட்டி
மூலம் - அங்குசம்,சிங்கத்தின்
வால், பொற்காளம்,
யானையின் துதிக்கை
பூராடம் - கட்டில்கால்
உத்திராடம் - கட்டில்கால்
திருவோணம் - முழக்கோல், மூன்று.
பாதச்சுவடு,அம்பு
அவிட்டம் - மிருதங்கம்,உடுக்கை
சதயம் - பூங்கொத்து,
மூலிகைகொத்து
பூரட்டாதி - கட்டில்கால்
உத்திரட்டாதி - கட்டில்கால்
ரேவதி - மீன்,படகு

நட்சத்திரப்பெயர்களுக்குரிய தமிழ் அர்த்த்ம்.
************************************************

அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - தாங்கிப்பிடிப்பது
கிருத்திகை - வெட்டுவது
ரோஹிணி - சிவப்பானது
மிருகசீரிடம் - மான் தலை
திருவாதிரை - ஈரமானது
புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி
பூசம் - வளம் பெருக்குவது
ஆயில்யம் - தழுவிக்கொள்வது
மகம் - மகத்தானது
பூரம் - பாராட்ட த்தகுந்தது
உத்திரம் - சிறப்பானது
ஹஸ்தம் - கை
சித்திரை - ஒளி வீசுவது
ஸ்வாதி - சுதந்தரமானது
விசாகம் - பிளவுபட்டது
அனுசம் - வெற்றி
கேட்டை - மூத்தது
மூலம் - வேர்
பூராடம் - முந்தைய வெற்றி
உத்திராடம் - பிந்தைய வெற்றி
திருவோணம் - படிப்பறிவு உடையது,
காது
அவிட்டம் - பணக்காரன்
சதயம் - நூறு மருத்துவர்கள்
பூரட்டாதி - முன் மங்கள பாதம்
உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்
ரேவதி - செல்வம் மிகுந்தது

நட்சத்திர அதிபதிகள்.
************************

அஸ்வினி - கேது
பரணி - சுக்கிரன்
கிருத்திகை - சூரியன்
ரோஹிணி - சந்திரன்
மிருகசீரிடம் - செவ்வாய்
திருவாதிரை - ராஹு
புனர்பூசம் - குரு
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
ஹஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
ஸ்வாதி - ராஹு
விசாகம் - குரு
அனுசம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராஹு
பூரட்டாதி - குரு
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்
*****************************

அஸ்வினி - சரம்
பரணி - ஸ்திரம்
கிருத்திகை - உபயம்
ரோஹிணி - சரம்
மிருகசீரிடம் - ஸ்திரம்
திருவாதிரை - உபயம்
புனர்பூசம் - சரம்
பூசம் - ஸ்திரம்
ஆயில்யம் - உபயம்
மகம் - சரம்
பூரம் - ஸ்திரம்
உத்திரம் - உபயம்
ஹஸ்தம் - சரம்
சித்திரை - ஸ்திரம்
ஸ்வாதி - உபயம்
விசாகம் - சரம்
அனுசம் - ஸ்திரம்
கேட்டை - உபயம்
மூலம் - சரம்
பூராடம் - ஸ்திரம்
உத்திராடம் - உபயம்
திருவோணம் - சரம்
அவிட்டம் - ஸ்திரம்
சதயம் - உபயம்
பூரட்டாதி - சரம்
உத்திரட்டாதி - ஸ்திரம்
ரேவதி - உபயம்

மூலாதி நட்சத்திரப்பிரிவுகள்
*******************************

அஸ்வினி - தாது
பரணி - மூலம்
கிருத்திகை - ஜீவன்
ரோஹிணி - தாது
மிருகசீரிடம் - மூலம்
திருவாதிரை - ஜீவன்
புனர்பூசம் - தாது
பூசம் - மூலம்
ஆயில்யம் - ஜீவன்
மகம் - தாது
பூரம் - மூலம்
உத்திரம் - ஜீவன்
ஹஸ்தம் - தாது
சித்திரை - மூலம்
ஸ்வாதி - ஜீவன்
விசாகம் - தாது
அனுசம் - மூலம்
கேட்டை - ஜீவன்
மூலம் - தாது
பூராடம் - மூலம்
உத்திராடம் - ஜீவன்
திருவோணம் - தாது
அவிட்டம் - மூலம்
சதயம் - ஜீவன்
பூரட்டாதி - தாது
உத்திரட்டாதி - மூலம்
ரேவதி - ஜீவன்

பிரம்மாதி நட்சத்திரப்பிரிவுகள்
**********************************

அஸ்வினி - பிரம்மா
பரணி - சிவன்
கிருத்திகை - விஷ்ணு
ரோஹிணி - பிரம்மா
மிருகசீரிடம் - சிவன்
திருவாதிரை - விஷ்ணு
புனர்பூசம் - பிரம்மா
பூசம் - சிவன்
ஆயில்யம் - விஷ்ணு
மகம் - பிரம்மா
பூரம் - சிவன்
உத்திரம் - விஷ்ணு
ஹஸ்தம் - பிரம்மா
சித்திரை - சிவன்
ஸ்வாதி - விஷ்ணு
விசாகம் - பிரம்மா
அனுசம் - சிவன்
கேட்டை - விஷ்ணு
மூலம் - பிரம்மா
பூராடம் - சிவன்
உத்திராடம் - விஷ்ணு
திருவோணம் - பிரம்மா
அவிட்டம் - சிவன்
சதயம் - விஷ்ணு
பூரட்டாதி - பிரம்மா
உத்திரட்டாதி - சிவன்
ரேவதி - விஷ்ணு

நட்சத்திர திரிதோஷம்
*************************

அஸ்வினி - வாதம்
பரணி - பித்தம்
கிருத்திகை - கபம்
ரோஹிணி - கபம்
மிருகசீரிடம் - பித்தம்
திருவாதிரை - வாதம்
புனர்பூசம் - வாதம்
பூசம் - பித்தம்
ஆயில்யம் - கபம்
மகம் - கபம்
பூரம் - பித்தம்
உத்திரம் - வாதம்
ஹஸ்தம் - வாதம்
சித்திரை - பித்தம்
ஸ்வாதி - கபம்
விசாகம் - கபம்
அனுசம் - பித்தம்
கேட்டை - வாதம்
மூலம் - வாதம்
பூராடம் - பித்தம்
உத்திராடம் - கபம்
திருவோணம் - கபம்
அவிட்டம் - பித்தம்
சதயம் - வாதம்
பூரட்டாதி - வாதம்
உத்திரட்டாதி - பித்தம்
ரேவதி - கபம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்
************************************

அஸ்வினி - தர்மம்
பரணி - ஆர்த்தம்
கிருத்திகை - காமம்
ரோஹிணி - மோட்சம்
மிருகசீரிடம் - மோட்சம்
திருவாதிரை - காமம்
புனர்பூசம் - ஆர்த்தம்
பூசம் - தர்மம்
ஆயில்யம் - தர்மம்
மகம் - ஆர்த்தம்
பூரம் - காமம்
உத்திரம் - மோட்சம்
ஹஸ்தம் - மோட்சம்
சித்திரை - காமம்
ஸ்வாதி - ஆர்த்தம்
விசாகம் - தர்மம்
அனுசம் - தர்மம்
கேட்டை - ஆர்த்தம்
மூலம் - காமம்
பூராடம் - மோட்சம்
உத்திராடம் - மோட்சம்
அபிஜித் - காமம்
திருவோணம் - ஆர்த்தம்
அவிட்டம் - தர்மம்
சதயம் - தர்மம்
பூரட்டாதி - ஆர்த்தம்
உத்திரட்டாதி - காமம்
ரேவதி - மோட்சம்

நட்சத்திர தேவதைகள்
*************************

அஸ்வினி - அஸ்வினி குமாரர்
பரணி - யமன்
கிருத்திகை - அக்னி
ரோஹிணி - பிரஜாபதி
மிருகசீரிடம் - சோமன்
திருவாதிரை - ருத்ரன்
புனர்பூசம் - அதிதி
பூசம் - பிரஹஸ்பதி
ஆயில்யம் - அஹி
மகம் - பித்ருக்கள்
பூரம் - பகன்
உத்திரம் - ஆர்யமான்
ஹஸ்தம் - அர்க்கன்/சாவித்ரி
சித்திரை - விஸ்வகர்மா
ஸ்வாதி - வாயு
விசாகம் - சக்ராக்னி
அனுசம் - மித்ரன்
கேட்டை - இந்திரன்
மூலம் - நைருதி
பூராடம் - அபா
உத்திராடம் - விஸ்வதேவன்
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வாசுதேவன்
சதயம் - வருணன்
பூரட்டாதி - அஜைகபாதன்
உத்திரட்டாதி - அஹிர்புத்தன்யன்
ரேவதி - பூசன்

நட்சத்திர ரிஷிகள்
*********************

அஸ்வினி - காத்யாயனா
பரணி - ரிஷிபத்தன்யா
கிருத்திகை - அக்னிவேஷா
ரோஹிணி - அனுரோஹி
மிருகசீரிடம் - ஸ்வேதயி
திருவாதிரை - பார்கவா
புனர்பூசம் - வாத்ஸாயனா
பூசம் - பரத்வாஜா
ஆயில்யம் - ஜடுகர்ணா
மகம் - வ்யாக்ரபாதா
பூரம் - பராசரா
உத்திரம் - உபசிவா
ஹஸ்தம் - மாண்டவ்யா
சித்திரை - கௌதமா
ஸ்வாதி - கௌண்டின்யா
விசாகம் - கபி
அனுசம் - மைத்ரேயா
கேட்டை - கௌசிகா
மூலம் - குட்சா
பூராடம் - ஹரிதா
உத்திராடம் - கஸ்யபா
அபிஜித் - சௌனகா
திருவோணம் - அத்ரி
அவிட்டம் - கர்கா
சதயம் - தாக்ஷாயணா
பூரட்டாதி - வத்ஸா
உத்திரட்டாதி - அகஸ்தியா
ரேவதி - சந்தாயணா

நட்சத்திர கோத்திரங்கள்
***************************

அஸ்வினி - அகஸ்தியா
பரணி - வஷிஷ்டா
கிருத்திகை - அத்ரி
ரோஹிணி - ஆங்கீரஸா
மிருகசீரிடம் - புலஸ்தியா
திருவாதிரை - புலஹா
புனர்பூசம் - க்ரது
பூசம் - அகஸ்தியா
ஆயில்யம் - வஷிஷ்டா
மகம் - அத்ரி
பூரம் - ஆங்கீரஸா
உத்திரம் - புலஸ்தியா
ஹஸ்தம் - புலஹா
சித்திரை - க்ரது
ஸ்வாதி - அகஸ்தியா
விசாகம் - வஷிஷ்டா
அனுசம் - அத்ரி
கேட்டை - ஆங்கீரஸா
மூலம் - புலஸ்தியா
பூராடம் - புலஹா
உத்திராடம் - க்ரது
அபிஜித் - அகஸ்தியா
திருவோணம் - வஷிஷ்டா
அவிட்டம் - அத்ரி
சதயம் - ஆங்கீரஸா
பூரட்டாதி - புலஸ்தியா
உத்திரட்டாதி - புலஹா
ரேவதி - க்ரது

அந்தரங்க பஹிரங்க நட்சத்திரங்கள்.
****************************************

அஸ்வினி - பஹிரங்கம்
பரணி - பஹிரங்கம்
கிருத்திகை - அந்தரங்கம்
ரோஹிணி - அந்தரங்கம்
மிருகசீரிடம் - அந்தரங்கம்
திருவாதிரை - அந்தரங்கம்
புனர்பூசம் - பஹிரங்கம்
பூசம் - பஹிரங்கம்
ஆயில்யம் - பஹிரங்கம்
மகம் - அந்தரங்கம்
பூரம் - அந்தரங்கம்
உத்திரம் - அந்தரங்கம்
ஹஸ்தம் - அந்தரங்கம்
சித்திரை - பஹிரங்கம்
ஸ்வாதி - பஹிரங்கம்
விசாகம் - பஹிரங்கம்
அனுசம் - அந்தரங்கம்
கேட்டை - அந்தரங்கம்
மூலம் - அந்தரங்கம்
பூராடம் - அந்தரங்கம்
உத்திராடம் - பஹிரங்கம்
திருவோணம் - பஹிரங்கம்
அவிட்டம் - அந்தரங்கம்
சதயம் - அந்தரங்கம்
பூரட்டாதி - அந்தரங்கம்
உத்திரட்டாதி - அந்தரங்கம்
ரேவதி - பஹிரங்கம்

நட்சத்திரங்களூம் தானங்களும்
**********************************

அஸ்வினி - பொன் தானம்
பரணி - எள் தானம்
கிருத்திகை - அன்ன தானம்
ரோஹிணி - பால் தானம்
மிருகசீரிடம் - கோதானம்
திருவாதிரை - எள் தானம்
புனர்பூசம் - அன்ன தானம்
பூசம் - சந்தன தானம்
ஆயில்யம் - காளைமாடு தானம்
மகம் - எள் தானம்
பூரம் - பொன் தானம்
உத்திரம் - எள் தானம்
ஹஸ்தம் - வாகன தானம்
சித்திரை - வஸ்திர தானம்
ஸ்வாதி - பணம் தானம்
விசாகம் - அன்ன தானம்
அனுசம் - வஸ்திர தானம்
கேட்டை - கோ தானம்
மூலம் - எருமை தானம்
பூராடம் - அன்ன தானம்
உத்திராடம் - நெய் தானம்
திருவோணம் - வஸ்திர தானம்
அவிட்டம் - வஸ்திர தானம்
சதயம் - சந்தன தானம்
பூரட்டாதி - பொன் தானம்
உத்திரட்டாதி - வெள்ளாடு தானம்
ரேவதி - பொன் தானம்

நட்சத்திர வீதி
****************

அஸ்வினி - நாக வீதி
பரணி - நாக வீதி
கிருத்திகை - நாக வீதி
ரோஹிணி - கஜ வீதி
மிருகசீரிடம் - கஜ வீதி
திருவாதிரை - கஜ வீதி
புனர்பூசம் - ஐராவத வீதி
பூசம் - ஐராவத வீதி
ஆயில்யம் - ஐராவத வீதி
மகம் - ஆர்ஷப வீதி
பூரம் - ஆர்ஷப வீதி
உத்திரம் - ஆர்ஷப வீதி
ஹஸ்தம் - கோ வீதி
சித்திரை - கோ வீதி
ஸ்வாதி - கோ வீதி
விசாகம் - ஜாரத்கவீ வீதி
அனுசம் - ஜாரத்கவீ வீதி
கேட்டை - ஜாரத்கவீ வீதி
மூலம் - அஜ வீதி
பூராடம் - அஜ வீதி
உத்திராடம் - அஜ வீதி
திருவோணம் - மிருக வீதி
அவிட்டம் - மிருக வீதி
சதயம் - மிருக வீதி
பூரட்டாதி - வைஷ்வானரீ வீதி
உத்திரட்டாதி - வைஷ்வானரீ வீதி
ரேவதி - வைஷ்வானரீ வீதி

நட்சத்திர வீதி(வேறு)
************************

அஸ்வினி - பசு வீதி
பரணி - நாக வீதி
கிருத்திகை - நாக வீதி
ரோஹிணி - யானை வீதி
மிருகசீரிடம் - யானை வீதி
திருவாதிரை - யானை வீதி
புனர்பூசம் - ஐராவத வீதி
பூசம் - ஐராவத வீதி
ஆயில்யம் - ஐராவத வீதி
மகம் - வ்ரிஷப வீதி
பூரம் - வ்ரிஷப வீதி
உத்திரம் - வ்ரிஷப வீதி
ஹஸ்தம் - ஆடு வீதி
சித்திரை - ஆடு வீதி
ஸ்வாதி - நாக வீதி
விசாகம் - ஆடு வீதி
அனுசம் - மான் வீதி
கேட்டை - மான் வீதி
மூலம் - மான் வீதி
பூராடம் - தகன வீதி
உத்திராடம் - தகன வீதி
திருவோணம் - கன்றுகுட்டி வீதி
அவிட்டம் - கன்றுகுட்டி வீதி
சதயம் - கன்றுகுட்டி வீதி
பூரட்டாதி - பசு வீதி
உத்திரட்டாதி - தகன வீதி
ரேவதி - பசு வீதி

நட்சத்திரங்களும் லோஹபாதங்களும்
*****************************************


அஸ்வினி - ஸ்வர்ண பாதம்
பரணி - ஸ்வர்ண பாதம்
கிருத்திகை - இரும்பு பாதம்
ரோஹிணி - இரும்பு பாதம்
மிருகசீரிடம் - இரும்பு பாதம்
திருவாதிரை - வெள்ளி பாதம்
புனர்பூசம் - வெள்ளி பாதம்
பூசம் - வெள்ளி பாதம்
ஆயில்யம் - வெள்ளி பாதம்
மகம் - வெள்ளி பாதம்
பூரம் - வெள்ளி பாதம்
உத்திரம் - வெள்ளி பாதம்
ஹஸ்தம் - வெள்ளி பாதம்
சித்திரை - வெள்ளி பாதம்
ஸ்வாதி - வெள்ளி பாதம்
விசாகம் - வெள்ளி பாதம்
அனுசம் - வெள்ளி பாதம்
கேட்டை - தாமிர பாதம்
மூலம் - தாமிர பாதம்
பூராடம் - தாமிர பாதம்
உத்திராடம் - தாமிர பாதம்
திருவோணம் - தாமிர பாதம்
அவிட்டம் - தாமிர பாதம்
சதயம் - தாமிர பாதம்
பூரட்டாதி - தாமிர பாதம்
உத்திரட்டாதி - தாமிர பாதம்
ரேவதி - ஸ்வர்ண பாதம்

நட்சத்திர குணம்
*******************

அஸ்வினி - க்ஷிப்ரம்/லகு
பரணி - உக்கிரம்/குரூரம்
கிருத்திகை - மிஸ்ரம்/சாதாரணம்
ரோஹிணி - ஸ்திரம்/துருவம்
மிருகசீரிடம் - மிருது/மைத்ரம்
திருவாதிரை - தாருணம்/தீக்ஷணம்
புனர்பூசம் - சரம்/சலனம்
பூசம் - க்ஷிப்ரம்/லகு
ஆயில்யம் - தாருணம்/தீக்ஷணம்
மகம் - உக்கிரம்/குரூரம்
பூரம் - உக்கிரம்/குரூரம்
உத்திரம் - ஸ்திரம்/துருவம்
ஹஸ்தம் - க்ஷிப்ரம்/லகு
சித்திரை - மிருது/மைத்ரம்
ஸ்வாதி - சரம்/சலனம்
விசாகம் - மிஸ்ரம்/சாதாரணம்
அனுசம் - மிருது/மைத்ரம்
கேட்டை - தீக்ஷணம்/தாருணம்
மூலம் - தீக்ஷணம்/தாருணம்
பூராடம் - உக்கிரம்/குரூரம்
உத்திராடம் - ஸ்திரம்/துருவம்
திருவோணம் - சரம்/சலனம்
அவிட்டம் - சரம்/சலனம்
சதயம் - சரம்/சலனம்
பூரட்டாதி - உக்கிரம்/குரூரம்
உத்திரட்டாதி - ஸ்திரம்/துருவம்
ரேவதி - மிருது/மைத்ரம்

(க்ஷிப்ரம்-துரிதமானது) (உக்கிரம்,குரூரம்-கொடியது)
(சரம், சலனம்-அசைகின்றது)
(ஸ்திரம்,துருவம்- அசையாதது) (தாருணம்-கொடூரமானது) (லகு-கனமில்லாதது,சிறியது)
(தீக்ஷணம்-கூர்மையானது)

நட்சத்திர கணம்
******************

அஸ்வினி - தேவம்
பரணி - மனுசம்
கிருத்திகை - ராக்ஷசம்
ரோஹிணி - மனுசம்
மிருகசீரிடம் - தேவம்
திருவாதிரை - மனுசம்
புனர்பூசம் - தேவம்
பூசம் - தேவம்
ஆயில்யம் - ராக்ஷசம்
மகம் - ராக்ஷசம்
பூரம் - மனுசம்
உத்திரம் - மனுசம்
ஹஸ்தம் - தேவம்
சித்திரை - ராக்ஷசம்
ஸ்வாதி - தேவம்
விசாகம் - ராக்ஷசம்
அனுசம் - தேவம்
கேட்டை - ராக்ஷசம்
மூலம் - ராக்ஷசம்
பூராடம் - மனுசம்
உத்திராடம் - மனுசம்
திருவோணம் - தேவம்
அவிட்டம் - ராக்ஷசம்
சதயம் - ராக்ஷசம்
பூரட்டாதி - மனுசம்
உத்திரட்டாதி - மனுசம்
ரேவதி - தேவம்

தேவம்- அழகு, ஈகைகுணம், விவேகம், நல்லொழுக்கம், அல்ப போஜனம், பேரறிவு

மனுசம்- அபிமானம், செல்வமுடைமை, கிருபை, அதிகாரம், பந்துக்களை பாதுகாத்தல்

ராக்ஷசம்- பராக்கிரமம், அதிமோகம், கலகப்பிரியம், துக்கம், தீயசெயல், பயங்கர வடிவம்

தாமசாதி நட்சத்திர குணங்கள்
**********************************

அஸ்வினி - தாமசம்
பரணி - ராஜசம்
கிருத்திகை - ராஜசம்
ரோஹிணி - ராஜசம்
மிருகசீரிடம் - தாமசம்
திருவாதிரை - தாமசம்
புனர்பூசம் - சாத்வீகம்
பூசம் - தாமசம்
ஆயில்யம் - தாமசம்
மகம் - தாமசம்
பூரம் - ராஜசம்
உத்திரம் - ராஜசம்
ஹஸ்தம் - ராஜசம்
சித்திரை - தாமசம்
ஸ்வாதி - தாமசம்
விசாகம் - சாத்வீகம்
அனுசம் - தாமசம்
கேட்டை - சாத்வீகம்
மூலம் - தாமசம்
பூராடம் - ராஜசம்
உத்திராடம் - ராஜசம்
திருவோணம் - ராஜசம்
அவிட்டம் - தாமசம்
சதயம் - தாமசம்
பூரட்டாதி - சாத்வீகம்
உத்திரட்டாதி - தாமசம்
ரேவதி - சாத்வீகம்

சாத்வீகம்-நுட்பமான புத்தி, ஞானம், தெய்வபக்தி, குருபக்தி, தீய செயல்களில் ஈடுபடாதிருத்தல்

ராஜசம்- உயிர்கள் மீது இரக்கம், நல்லறிவு, இனிமையான பேச்சு,
கல்வியில் தேர்ச்சி, இன்பசுகம், பரோபகாரம், யாருக்கும் தீங்கு நினையாமை, தான தர்மம் செய்வதில் விருப்பம், நடுநிலையோடு செயல்படுதல்

தாமசம்- அதிக தூக்கம், பொய் பேசுதல், நிதானமின்மை, சோம்பேறித்தனம், பாவசிந்தை, முன்யோசனை இல்லாமை

நட்சத்திர யோனி
*******************

அஸ்வினி - ஆண் குதிரை
பரணி - பெண் யானை
கிருத்திகை - பெண் ஆடு
ரோஹிணி - ஆண் நாகம்
மிருகசீரிடம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் பூனை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்திரம் - ஆண் எருது
ஹஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
ஸ்வாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுசம் - பெண் மான்
கேட்டை - ஆண் மான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - பெண் கீரி
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பெண் பசு
ரேவதி - பெண் யானை

நட்சத்திர கோத்திரங்கள்(வேறு)
***********************************

அஸ்வினி - மரீசா
பரணி - மரீசா
கிருத்திகை - மரீசா
ரோஹிணி - மரீசா
மிருகசீரிடம் - அத்ரி
திருவாதிரை - அத்ரி
புனர்பூசம் - அத்ரி
பூசம் - அத்ரி
ஆயில்யம் - வஷிஷ்டா
மகம் - வஷிஷ்டா
பூரம் - வஷிஷ்டா
உத்திரம் - வஷிஷ்டா
ஹஸ்தம் - ஆங்கீரஸா
சித்திரை - ஆங்கீரஸா
ஸ்வாதி - ஆங்கீரஸா
விசாகம் - ஆங்கீரஸா
அனுசம் - புலஸ்தியா
கேட்டை - புலஸ்தியா
மூலம் - புலஸ்தியா
பூராடம் - புலஸ்தியா
உத்திராடம் - புலஹா
திருவோணம் - புலஹா
அவிட்டம் - புலஹா
சதயம் - க்ரது
பூரட்டாதி - க்ரது
உத்திரட்டாதி - க்ரது
ரேவதி - க்ரது

நட்சத்திர திசைகள்
**********************

அஸ்வினி - கிழக்கு
பரணி - கிழக்கு
கிருத்திகை - கிழக்கு
ரோஹிணி - கிழக்கு
மிருகசீரிடம் - கிழக்கு
திருவாதிரை - தென்கிழக்கு
புனர்பூசம் - தென்கிழக்கு
பூசம் - தென்கிழக்கு
ஆயில்யம் - தெற்கு
மகம் - தெற்கு
பூரம் - தெற்கு
உத்திரம் - தெற்கு
ஹஸ்தம் - தென்மேற்கு
சித்திரை - தென்மேற்கு
ஸ்வாதி - மேற்கு
விசாகம் - மேற்கு
அனுசம் - மேற்கு
கேட்டை - மேற்கு
மூலம் - வடமேற்கு
பூராடம் - வடமேற்கு
உத்திராடம் - வடக்கு
திருவோணம் - வடக்கு
அவிட்டம் - வடக்கு
சதயம் - வடக்கு
பூரட்டாதி - வடக்கு
உத்திரட்டாதி - வடக்கு
ரேவதி - வடக்கு

நட்சத்திர திசைகள்(வேறு)
*****************************

அஸ்வினி - கிழக்கு
பரணி - தென்கிழக்கு
கிருத்திகை - தெற்கு
ரோஹிணி - தென்மேற்கு
மிருகசீரிடம் - மேற்கு
திருவாதிரை - வடமேற்கு
புனர்பூசம் - வடக்கு
பூசம் - வடகிழக்கு
ஆயில்யம் - கிழக்கு
மகம் - தென்கிழக்கு
பூரம் - தெற்கு
உத்திரம் - தென்மேற்கு
ஹஸ்தம் - மேற்கு
சித்திரை - வடமேற்கு
ஸ்வாதி - வடக்கு
விசாகம் - வடகிழக்கு
அனுசம் - கிழக்கு
கேட்டை - தென்கிழக்கு
மூலம் - தெற்கு
பூராடம் - தென்மேற்கு
உத்திராடம் - மேற்கு
திருவோணம் - வடமேற்கு
அவிட்டம் - வடக்கு
சதயம் - வடகிழக்கு
பூரட்டாதி - கிழக்கு
உத்திரட்டாதி - தென்கிழக்கு
ரேவதி - தெற்கு

நட்சத்திரங்களும் வணங்க வேண்டிய தேவதைகளும்.
************************************************************

அஸ்வினி - அஸ்வினி தேவதைகள்
பரணி - சிவன்
கிருத்திகை - சுப்பிரமணியன்
ரோஹிணி - ஸ்ரீக்ருஷ்ணன்
மிருகசீரிடம் - நாக தேவதைகள்
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - ஸ்ரீராமன்
பூசம் - சுப்பிரமணியன்
ஆயில்யம் - நாக தேவதைகள்
மகம் - சூரியன்,நரசிம்மன்
பூரம் - சூரியன்
உத்திரம் - சாஸ்தா,தன்வந்த்ரி
ஹஸ்தம் - மஹாவிஷ்ணு,
ராஜராஜேஷ்வரி
சித்திரை - மஹாலக்ஷ்மி
ஸ்வாதி - மஹாலக்ஷ்மி,ஹனுமன்
விசாகம் - சுப்பிரமணியன்
அனுசம் - சிவன்
கேட்டை - ஹனுமன்
மூலம் - கணபதி
பூராடம் - ராஜராஜேஷ்வரி
உத்திராடம் - ஆதித்தியன்
திருவோணம் - மஹாவிஷ்ணு
அவிட்டம் - கணபதி
சதயம் - நாக தேவதைகள்
பூரட்டாதி - வராஹ மூர்த்தி
உத்திரட்டாதி - சிவன்
ரேவதி - மஹாவிஷ்ணு

நட்சத்திர அதிதேவதைகள்
******************************

அஸ்வினி - கணபதி,சரஸ்வதி
பரணி - துர்கை
கிருத்திகை - அக்னி தேவன்
ரோஹிணி - பிரம்மா
மிருகசீரிடம் - சந்திரன்
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - தேவதைகள்
பூசம் - குரு
ஆயில்யம் - ஆதிசேஷன்
மகம் - சுக்கிரன்
பூரம் - பார்வதி
உத்திரம் - சூரியன்
ஹஸ்தம் - சாஸ்தா
சித்திரை - விஸ்வகர்மா
ஸ்வாதி - வாயு
விசாகம் - சுப்பிரமணியன்
அனுசம் - லக்ஷ்மி
கேட்டை - தேவேந்திரன்
மூலம் - அசுர தேவதைகள்
பூராடம் - வருணன்
உத்திராடம் - ஈஸ்வரன்,கணபதி
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வசுக்கள்,இந்திராணி
சதயம் - யமன்
பூரட்டாதி - குபேரன்
உத்திரட்டாதி - காமதேனு
ரேவதி - சனீஸ்வரன்

நட்சத்திர ஆதியந்த பரம நாழிகை
**************************************

அஸ்வினி - 65
பரணி - 56
கிருத்திகை - 56
ரோஹிணி - 56
மிருகசீரிடம் - 56
திருவாதிரை - 56
புனர்பூசம் - 62
பூசம் - 52
ஆயில்யம் - 56
மகம் - 54
பூரம் - 53
உத்திரம் - 56
ஹஸ்தம் - 57
சித்திரை - 60
ஸ்வாதி - 65
விசாகம் - 61
அனுசம் - 60
கேட்டை - 62
மூலம் - 63 ½
பூராடம் - 62
உத்திராடம் - 55
திருவோணம் - 65 ½
அவிட்டம் - 66 ½
சதயம் - 53 ½
பூரட்டாதி - 66 ½
உத்திரட்டாதி - 63 ½
ரேவதி - 64

நட்சத்திர நாடி
****************

அஸ்வினி - ஆதி
பரணி - மத்யா
கிருத்திகை - அந்த்யா
ரோஹிணி - அந்த்யா
மிருகசீரிடம் - மத்யா
திருவாதிரை - ஆதி
புனர்பூசம் - ஆதி
பூசம் - மத்யா
ஆயில்யம் - அந்த்யா
மகம் - அந்த்யா
பூரம் - மத்யா
உத்திரம் - ஆதி
ஹஸ்தம் - ஆதி
சித்திரை - மத்யா
ஸ்வாதி - அந்த்யா
விசாகம் - அந்த்யா
அனுசம் - மத்யா
கேட்டை - ஆதி
மூலம் - ஆதி
பூராடம் - மத்யா
உத்திராடம் - அந்த்யா
திருவோணம் - அந்த்யா
அவிட்டம் - மத்யா
சதயம் - ஆதி
பூரட்டாதி - ஆதி
உத்திரட்டாதி - மத்யா
ரேவதி - அந்த்யா

நட்சத்திர பஞ்சபக்ஷிகள்
***************************

அஸ்வினி - வல்லூறு
பரணி - வல்லூறு
கிருத்திகை - வல்லூறு
ரோஹிணி - வல்லூறு
மிருகசீரிடம் - வல்லூறு
திருவாதிரை - ஆந்தை
புனர்பூசம் - ஆந்தை
பூசம் - ஆந்தை
ஆயில்யம் - ஆந்தை
மகம் - ஆந்தை
பூரம் - ஆந்தை
உத்திரம் - காகம்
ஹஸ்தம் - காகம்
சித்திரை - காகம்
ஸ்வாதி - காகம்
விசாகம் - காகம்
அனுசம் - கோழி
கேட்டை - கோழி
மூலம் - கோழி
பூராடம் - கோழி
உத்திராடம் - கோழி
திருவோணம் - மயில்
அவிட்டம் - மயில்
சதயம் - மயில்
பூரட்டாதி - மயில்
உத்திரட்டாதி - மயில்
ரேவதி - மயில்

நட்சத்திர பஞ்சபூதங்கள்
***************************

அஸ்வினி - நிலம்
பரணி - நிலம்
கிருத்திகை - நிலம்
ரோஹிணி - நிலம்
மிருகசீரிடம் - நிலம்
திருவாதிரை - நீர்
புனர்பூசம் - நீர்
பூசம் - நீர்
ஆயில்யம் - நீர்
மகம் - நீர்
பூரம் - நீர்
உத்திரம் - நெருப்பு
ஹஸ்தம் - நெருப்பு
சித்திரை - நெருப்பு
ஸ்வாதி - நெருப்பு
விசாகம் - நெருப்பு
அனுசம் - நெருப்பு
கேட்டை - காற்று
மூலம் - காற்று
பூராடம் - காற்று
உத்திராடம் - காற்று
திருவோணம் - காற்று
அவிட்டம் - ஆகாயம்
சதயம் - ஆகாயம்
பூரட்டாதி - ஆகாயம்
உத்திரட்டாதி - ஆகாயம்
ரேவதி - ஆகாயம்

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்
***************************************

அஸ்வினி - அஸ்வத்தாமன்
பரணி - துரியோதனன்
கிருத்திகை - கார்த்திகேயன்
ரோஹிணி - கிருஷ்ணன்,பீமசேனன்
மிருகசீரிடம் - புருஷமிருகம்
திருவாதிரை - ருத்ரன், கருடன்,
ஆதிசங்கரர், ராமானுஜர்
புனர்பூசம் - ராமன்
பூசம் - பரதன்,தாமரை மலர்,
கிளி
ஆயில்யம் - தர்மராஜா,
லக்ஷ்மணன், சத்ருகணன்,
பலராமன்
மகம் - யமன்,சீதை,அர்ச்சுணன்
பூரம் - பார்வதி, மீனாட்சி,
ஆண்டாள்
உத்திரம் - மஹாலக்ஷ்மி, குரு.
ஹஸ்தம் - நகுலன்-சகாதேவன்,
லவ-குசன்
சித்திரை - வில்வ மரம்
ஸ்வாதி - நரசிம்மர்
விசாகம் - கணேசர்,முருகர்,
அனுசம் - நந்தனம்
கேட்டை - யுதிஸ்திரர்
மூலம் - அனுமன்,ராவணன்
பூராடம் - ப்ருஹஸ்பதி
உத்திராடம் - சல்யன்
திருவோணம் - வாமனன், விபீசனன்,
அங்காரகன்
அவிட்டம் - துந்துபி வாத்தியம்
சதயம் - வருணன்
பூரட்டாதி - கர்ணன், கின்னரன்,
குபேரன்
உத்திரட்டாதி - ஜடாயு,காமதேனு
ரேவதி - அபிமன்யு,சனிபகவான்

நட்சத்திரத்தொகை
*********************

அஸ்வினி - 3
பரணி - 3
கிருத்திகை - 6
ரோஹிணி - 5
மிருகசீரிடம் - 3
திருவாதிரை - 1
புனர்பூசம் - 2
பூசம் - 3
ஆயில்யம் - 6
மகம் - 5
பூரம் - 2
உத்திரம் - 2
ஹஸ்தம் - 5
சித்திரை - 1
ஸ்வாதி - 1
விசாகம் - 2
அனுசம் - 3
கேட்டை - 3
மூலம் - 9
பூராடம் - 4
உத்திராடம் - 4
திருவோணம் - 3
அவிட்டம் - 4
சதயம் - 6
பூரட்டாதி - 2
உத்திரட்டாதி - 2
ரேவதி - 3

நட்சத்திர இருப்பிடம்
***********************

அஸ்வினி - ஊர்
பரணி - மரம்
கிருத்திகை - காடு
ரோஹிணி - காடிச்சால்
மிருகசீரிடம் - கட்டிலின் கீழ்
திருவாதிரை - நிற்கும் தேரின் கீழ்
புனர்பூசம் - நெற்குதிர்
பூசம் - மனை
ஆயில்யம் - குப்பை
மகம் - நெற்கதிர்
பூரம் - வீடு
உத்திரம் - ஜலம்
ஹஸ்தம் - ஜலக்கரை
சித்திரை - வயல்
ஸ்வாதி - பருத்தி
விசாகம் - முற்றம்
அனுசம் - பாழடைந்த காடு
கேட்டை - கடை
மூலம் - குதிரைலாயம்
பூராடம் - கூரை
உத்திராடம் - வண்ணான் துறை
திருவோணம் - கோயில்
அவிட்டம் - ஆலை
சதயம் - செக்கு
பூரட்டாதி - தெரு
உத்திரட்டாதி - அக்னி மூலை வீடு
ரேவதி - பூஞ்சோலை

நட்சத்திர குலம்
******************

அஸ்வினி - வைசியகுலம்
பரணி - நீச்ச குலம்
கிருத்திகை - பிரம்ம குலம்
ரோஹிணி - க்ஷத்திரிய குலம்
மிருகசீரிடம் - வேடர் குலம்
திருவாதிரை - இராட்சச குலம்
புனர்பூசம் - வைசியகுலம்
பூசம் - சூத்திர குலம்
ஆயில்யம் - நீச்ச குலம்
மகம் - க்ஷத்திரிய குலம்
பூரம் - பிரம்ம குலம்
உத்திரம் - சூத்திர குலம்
ஹஸ்தம் - வைசியகுலம்
சித்திரை - வேடர் குலம்
ஸ்வாதி - இராட்சச குலம்
விசாகம் - நீச்ச குலம்
அனுசம் - க்ஷத்திரிய குலம்
கேட்டை - வேடர் குலம்
மூலம் - இராட்சச குலம்
பூராடம் - பிரம்ம குலம்
உத்திராடம் - சூத்திர குலம்
அபிஜித் - வைசியகுலம்
திருவோணம் - நீச்ச குலம்
அவிட்டம் - வேடர் குலம்
சதயம் - இராட்சச குலம்
பூரட்டாதி - பிரம்ம குலம்
உத்திரட்டாதி - சூத்திர குலம்
ரேவதி - க்ஷத்திரிய குல

நட்சத்திர யோனி திரை
சுயாதிகாரம், நற்குணம், தைரியம், அழகு, ஊராதிக்கம், யஜமான் விருப்பம் போல் நடத்தல்

யானை
ராஜ மரியாதை, உடல் வலிமை, போகம், உற்சாகம்

பசு
பெண் மோகம்

ஆடு
விடா முயற்சி,பிரயாணத்தில் விருப்பம்,பிற பெண்கள் மீது மோகம்,பிறருக்கு உதவும் தன்மை,மனித நேயம்,வழக்குரைத்தல்

சர்ப்பம்(பாம்பு)
கோபம்,கொடூரமான பேச்சு,செய்நன்றி இல்லாமை,மந்த புத்தி

சுவானம்(நாய்)
முயற்சி,உற்சாகம்,வீரம்,உறவினருடன் பகை,பக்தி,பெற்றோரிடத்தில் அன்பு

மார்ச்சாரம்(பூனை)
சாமர்த்தியம்,இரக்கமில்லாமை,கெட்டவர் தொடர்பு,உணவில் விருப்பம்

மூக்ஷிகம்(எலி)
அதிக விவேகம்,மிகுந்த செல்வம்,தன்னடக்கம்,சுய நலம்,

சிங்கம்
நற்குணம்,நற்செயல்,குடும்பத்தைப்பாதுகாத்தல்,சுயதர்மம்,சதாச்சாரம்

மஹிசம்(எருமை)
மந்த புத்தி,வெகுஜன தொடர்பு,வெற்றி,ஆசை

வியாக்ரம்(புலி)
முகஸ்துதிக்கு மயங்குதல்,சுயாதிகாரம்,பொருளாசை,உறவுமேன்மை,

மான்
சுதந்திர போக்கு,பொறுமை,உண்மைபேசுதல்,நற்காரியங்கள் செய்தல்,தானதர்மம் செய்தல்,தைரியம்,சொந்தங்கள் மீது பாசம்

வானரம்(குரங்கு)
போகத்தில் விருப்பம்,உலோபக்குணம்,தீயசெயல்,பேராசை,தைரியம்,நல்லோர் தொடர்பு

கீரி பிறருக்கு உதவுதல்,செல்வமுடைமை,பெற்றோரிடத்தில் அன்பு,நல்வழியில் செல்தல்,நன்றி விசுவாசம் இல்லாமை நன்றி நன்றி

- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
சித்தர்களின் குரல் shiva shangar

சித்தர் சரநூல் சாஸ்திரம்

 சித்தர் சரநூல் சாஸ்திரம் என்பது சிவன் பார்வதிக்குச் சொல்லி , பார்வதி நந்திதேவருக்குச் சொல்லி, நந்திதேவர் அகஸ்தியருக்குச் சொல்லி, அகஸ்தியர் பதிணென் சித்தர்களுக்கு சொல்லி, சித்தர் பரம்பரை வரும் அனைவருக்கும் இரகசியமாக உபதேசிக்கப்பட்டு வருவது.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120ஆண்டுகளாகும்.

ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும, உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற் போல் ஆயுள் குறைகிறது.
நாம் செய்யும் காரியங்களில் வெற்றி பெறவும், காரியத்தடை நேராமல் தடுத்துக் கொள்ளவும், பலன்களைச் சொல்வதற்கும், கேள்வி கேட்கும் நபருக்கு காரிய சித்தியாக்குதலையும், இன்னும் பல காரியங்களுக்கும் இந்த சரநூல் சாஸ்திரம் பயன்படுகிறது. சரம் பார்க்கத் தெரிந்தவனே "பார்ப்பான்" என்று அழைக்கப்படுகிறான். சரம் பார்க்கத் தெரிந்தவனிடம் எந்த மோதலையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே "சரம் பார்ப்பவனிடம் பரம் போகாதே" என்று வழக்குச் சொல்லில் கூறுவர். சரமே இறைவன், எனவே அகத்தியர் தனது சரநுநூல் சாஸ்திரத்தில், சரத்தை இறைவனுக்கு சமமாகவும் பஞ்சபூதங்களின் ஒடுக்க ஸ்தானமாகவும் கூறுகிறார். 

சூரிய கலை, சந்திர கலை அவற்றின் வேகம் மற்றும் எண்ணிக்கையைப் பற்றி பார்த்தோம். ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். 21,600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன. அவை ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சின் எண்ணிக்கையை குறிக்கும். 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.

இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

நந்தனார் கீர்த்தனையில் எட்டும் இரண்டறியாத மூடன் என்கிறார். 8-என்பது "அ" காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. 2-என்பது "உ" காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8×2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"

அகார(8), உகாரம்(2), யகாரம்(10).

தமிழ் எழுத்துக்களில் எண்ணாகவும் எழுத்தாகவும் திகழ்கின்றனவோ அவையே அகாரம்-ரவி, உகாரம்-மதி, மகாரம்-சுடர், இந்த மூன்றும் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவம்.

ரவி, மதி,சுடர் ஆகிய மூன்றிலும் இருப்பது சிகாரம் என்றழைக்கப்படும் நெருப்பு.

"நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும்"

"குழவியும் ஆணாம் வலத்தது ஆகில் குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்ட கால் ஒக்கிலே"
- திருமந்திரம் 482

உடலுறவில் இணைகின்ற ஆணுக்கு வலது நாசியில் சுவாசம் நடந்தால் ஆண்குழந்தை தோன்றும். சுவாசம் இடது நாசியில் நடந்தால் பெண் குழந்தை தோன்றும். சுவாசம் சுழுமுனையில் நடந்தால் தோன்றும் குழந்தை அலியாகும். வலது அல்லது இடது நாசியில் சுவாசம் நடந்து அப்போது அபானன் என்ற வாயு எதிர்க்குமானால் இரட்டைக் குழந்தை தோன்றும்.
பிறவியிலேயே கூன், குருடு, ஊமை போன்ற பல குறைகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கு, காரணங்களை சித்தர்கள் சரநூலில் பல இடங்களில் கூறுகின்றனர். இதையே திருமந்திரத்தில

"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாத உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை.
மாதாஉதரத்தில்வந்தகுழவிக்கே"
- திருமந்திரம் 481

உடலுறவின் போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் தோன்றும் குழந்தைக்கு மூளை வேகமாக செயல்படாது மந்தமாக இருக்கும். பெண்ணின் வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகும். மலம், சிறுநீர் இரண்டும் அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண் குருடாகும் என்ற திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.

"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாத்ர்க்கில்லை பார்க்கிலே"
- திருமந்திரம் 480

ஆணின் உடலிலிருந்து உயிரணுக்கள் வெளியேறும் நேரம் இருவரின் சுவாசமும் சரியான அளவில் இருந்தால் எந்தக் குறைபாடும் இராது. ஆனால் ஆணின் சுவாசம் தேவையான அளவை விட குறைந்து வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். சுவாசம் திடமின்றி வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை முடமாகும். சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு கூன் விழும்.

"பாய்ந்த பின் அஞ்சோடிய ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடி பாரினில் எண்பதாம்"
- திருமந்திரம் 479

உயிரணுக்கள் வெளியேறும் நேரம் ஆணின் சுவாசம் ஐந்து மாத்திரை நேரம் பாய்ந்தால் பிறக்கும் குழந்தை நூறு வயது வரை வாழும். நான்கு மாத்திரை நேரம் ஓடினால் எண்பது வயதுவரை உயிர்வாழும். சுவாசம் வெளிப்படும் மாத்திரை குறைய குறைய ஆயுளும் குறையும்

"கொண்ட வாயு இருவருக்கும் ஒத்தொழில்
கொண்ட குழவியும் கோமளமாயிரும்
கொண்ட நல்வாயு இருவருக்கும் குழறிடில்
கொண்டதும் இல்லை கோல்வினையாட்கே"
- திருமந்திரம் 483

உடலுறவின் போது ஆண் பெண் இருவருக்கும் சுவாசம் சீராக ஒரே அளவாக ஓடினால் தோன்றும் குழந்தை மிக அழகாக பிறக்கும் . சுவாசம் தாறுமாறாக ஓடினால் குழந்தை விகாரமாக பிறக்கும்.

சந்திர கலை சூரியகலை என்றால் என்ன?

சூரியன் உதிக்கும் போது ஓட வேண்டிய திதிகள் குறிப்பிட்டிருந்தோம். சூரியன் உதிக்கும்போது சூரியகலையில் அதாவது வலது நாசியில் ஓட வேண்டிய திதிகளில் காலை 6 மணிக்கு ஓட ஆரம்பித்து ஒரு மணிநேரம் கழித்து சந்திர கலை ஓட ஆரம்பிக்கும். மீண்டும் ஒரு மணிநேரம் கழித்து சூரிய கலை ஓட ஆரம்பிக்கும். இதே போல் சூரியன் உதிக்கும் போது சந்திர கலையில் ஓட வேண்டிய திதிகளில் சூரிய உதயத்தில் சந்திர கலையில் ஒரு மணிநேரம் மூச்சு ஓடி, பின் சூரிய கலையில் ஒரு மணி நேரம் மூச்சு ஓடி இப்படியே மாறி மாறி மூச்சு ஓடிக்கொண்டிருக்கும்.

"நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
-அருணகிரிநாதர் திருப்புகழ்

நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள ஜீவசக்தி) விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள ஜீவசக்தி) முதல் வணக்கத்தைத் தெரிவித்த அருணகிரிநாதர் பின்னரே வேத மந்திர சொரூபனான இறைவனுக்கே வணக்கம் தெரிவிக்கிறார். இதையே திருப்புகழில்

"அருகுநுனி பனியனைய சிறிய துளி
பெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்"
என்று கூறுகிறார். ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் ஒவ்வொன்றும் மானிடனாகி 120 வருடங்கள் வாழ வைக்கக்கூடிய உயிர்ச் சக்தியைப் பெற்றிருக்கின்றன. எனவே "விந்து விட்டவன் நொந்து கெட்டான்" என்று சித்தர்கள் கூறுகின்றனர். நாம் அணியும் திருநீறு வெள்ளை நிறமாக இருந்து இந்த விந்தையே குறிக்கிறது. குங்குமம் சிவந்த நிறமான பெண்களின் நாதத்தைக் குறிக்கிறது.

இதையே உலக இயக்கம் என்பதால் குங்குமமும், திருநீறும் நெற்றியில் அணிகிறோம். எல்லோருமே நாத விந்து சொரூபர்களே.....

ஆண், பெண்களின் சேர்க்கையே லிங்க சொரூபம். இடப் பாகம் சக்தியென்பதால் லிங்கத்தின் இடது பாகம் நீர்த்தாரை வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் அந்த இடப்பாகத்தையே நோக்குவது போல இடதுபுறம் நந்தி சாய்த்துப் பார்க்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. சக்தியான சந்திரகலையை முதலில் குறைக்க வேண்டும் என்பதற்காகவே, இது கோயிலில் அமைப்பாக காட்டப்பட்டுள்ளது.

(சீனத்து அக்கு பஞ்சர் முறை நமது போகர் சித்தரால் கண்டுபிடிக்கப்பட்டு சீனத்தில் கையாளப்பட்டு வருகிறது அதில் "யின்" (yin)என்றால் இடப்பக்கம் என்றும் பெண் தன்மை என்றும், "யாங்" (yang)என்றால் வலப்பக்கம் என்றும் ஆண் தன்மை என்றும் கூறப்பட்டுள்ளது.)

"மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாலு நாலு முன்னிலொரு நாட்டமாகி நாட்டில்
பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம்.
ஆலமுண்ட கண்டராணை அம்மையாணை உண்மையே"

"இருக்கலாம் இருக்கலாம் அவனியிலே இருக்கலாம்
அரிக்குமால் பிரம்மனும் அகண்ட மேழ் அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிடாத கண்ணிலே
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும்"
- சிவ வாக்கியர்

மேற்கண்ட பாடல்களில் மூலமான மூச்சை சரியான படி அறிந்து அளவிட்டு 4 அங்குலமட்டில் ஓட விட்டால் பாலன் போன்ற தோற்றமும், பரப்பிரம்மான இறைவனுக்குச் சமமாகவும் ஆகலாம் என்று சிவவாக்கியர் இறைவன், இறைவி மீது ஆணையிட்டுக் கூறுகிறார்.

இந்த அவனியான பூமி இருக்கும் வரை, அரி, மால் பிரம்மன், அண்டங்கள் இவற்றைக் கூட படைக்கலாம், அழிக்கலாம் காலிடாத கண்ணிலே என்ற மூச்சுவிடாத (கால் என்றால் காற்று) நிலை அடைந்தால் நெற்றிக்கண்ணில் நெருப்பறை திறக்கும். ன்நெருப்பறை திறக்குமானால் , நீ நான் அனைவரும் ஈசனே....

உண்ணும் போது உயிரெழுத்தைஉயரேவாங்கு
உறங்குகின்ற போதெல்லா மதுவேயாகும்.
பெண்ணின் பாலிந்திரியம் விடும்போ தெல்லாம்
பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு
தின்னுங் காயிலை மருந்தும் அதுவேயாகும்.
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணு}ழி காலமட்டும் வாழ்வார் பாரு.
மரலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.
- அகத்தியர்தம் ஞானப்பாடலில் இவ்வாறு கூறுகிறார்.

எல்லா வைத்திய முறைகளும் உடலில் ஏற்படுகின்றன பிணிகளைப் போக்கிக் கொள்ளும் முறைகளைப் பற்றிமட்டுமே கூறுகின்றன. அதிலும் சில நோய்கள் மனித குலத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் சவாலாகவே அமைந்திருக்கின்றன.

ஆனால் சித்தர்களோ உடலில் ஏற்படுகின்ற வியாதிகளின் எண்ணிக்கை 4448 வியாதிகள் என்று குறிப்பிட்டுச் சொல்வதுடன் அவற்றைப் போக்கும் முறைகளையும் தெளிவுபட விளக்கியுள்ளனர்.

இதற்கு மேலும் ஒருபடி சென்று மரணம் என்பதும் ஒரு பிணி என்று கூறுவதுடன் மரணம் மாற்றும் முறைகளையும், மரணமிலாப் பெருவாழ்வு என்பதனையும் விளக்கிச் சொன்னதுடன் கடைபிடித்து வெற்றியும் கண்டுள்ளனர்.

குரு குல கல்வி முறையில் இவையெல்லாம் ஒரு காலத்தில் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்த மேம்பாடான கல்விமுறை அழிந்து தற்கால சந்ததியினருக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமே. தற்கால சந்ததியினர் மேற்கத்தைய கல்வி முறை ஆங்கிலேயர் காலத்தில் குமாஸ்தாக்களை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்டது.

அந்தக் கல்வி முறை மூலம் உருவாகும் இவர்கள், சுயம் என்பது போய் தன் காலில்நிற்கத் தெரியாதவர்களாகவும், அரசாங்க வேலையை எதிர்பார்த்து, அதற்கு கையூட்டு கொடுப்பவர்களாகவும், கொடுத்த கையூட்டை, மறுபடி மக்களிடம் அதே கையூட்டின் மூலம் வசூலிக்கும் அக்கிரமக்காரர்களகவும் மாறி கடைசியில் நிம்மதியை தொலைத்து, முறையற்ற வழியில் பணம் தேடும் பிசாசுகளாய் வாழ்ந்து, முடிவில் இறந்தே போகுபவர்களாவே உள்ளனர்.

இந்த சரநூல் சாஸ்திரத்தைக் கொண்டு நோய்களை போக்கிக் கொள்ளவும், நமக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொள்ளவும் என் குரு காகபுஜண்டர் பெருமானின் அருளாசியால் நீங்கள் கற்றுக் கொள்ள இங்கு இறைவன் கருணை புரிந்து இருக்கின்றான் போல.....

சித்தர் சரநூல் கற்போம்
சராசரம் வெல்வோம்!!!!
http://amuthasurabhii.blogspot.com/

Friday, August 7, 2020

ஒரு வாக்களிப்பு நிலையத்திற்குரிய வாக்குகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை வாக்கெண்ணும் நிலையத்தில் வைத்து கணக்கிட முடியுமா??


ஒரு தேர்தல் தொகுதி சார்பாக பல வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் அவ்வாக்கெண்ணும் நிலையத்தில் தொகுதிக்குட்பட்ட வேறு வேறு பிரதேசங்களை சார்ந்த (நிலத்தொடர்பற்ற, வேறு வகையில் இலகுவாக யாரால் யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதனை இலகுவாக கணிக்க முடியாத வகையில்)வாக்களிப்பு நிலையங்கள் சார்பான வாக்குப்பெட்டிகள் எண்ணப்படும்

முதலாவது எண்ணிக்கையானது வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பெட்டியிலுள்ள வாக்குகளின் எண்ணிக்கையை வாக்குச்சீட்டு கணக்குடன் சரிபார்ப்பது ஆகும். இவ்வாறு ஒவ்வொரு பெட்டியாக கணக்கு சரிபார்க்கப்பட்டு ஒட்டுமொத்தமாக கலக்கப்படும். அதன் பின்னரே இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் பெற்ற வாக்குகள் சார்பாக எண்ணப்படும். வாக்காளர்களது ஜனநாயக உரிமையையும் அவர் யாருக்கு வாக்களித்தார் என்ற இரகசியத்தையும் பேணும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

ஆகவே ஒரு குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தில் ஒரு கட்சிசார்பாக அல்லது சுயேட்சைக்குழு சார்பாக அல்லது வேட்பாளர் சார்பாக இத்தனை வாக்குகள் அளிக்கப்பட்டன என யாராவது கூறினால்..... அதனை நீங்கள் நம்பினால்......
(கோடிட்ட இடைவெளிகளை தேவையான வகையில் பூர்த்திசெய்க).


Pragash Sinnarajah SLAS