""சமஸ்கிருதம் என்பது தேவமொழி, அதிலிருந்துதான் தமிழ் தோன்றியது என்ற கருத்து மக்கள் மனதில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. நான்கு
வேதங்களும் சமஸ்கிருத மொழியில் தான் எழுதப்பட்டன; அதை சூத்திரன் படிக்கக் கூடாது என்றெல் லாம் விதிகளை வகுத்தார்கள். ஏறக்குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழர்கள் வேதங்களைப் படிக்க வில்லை. அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே இவர்களுக்குத் தெரியாது. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்தபோது அவர்கள் சமஸ்கிருத மொழியில் ஆர்வம் காட்டினார்கள். குறிப் பாக மேக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியர் சமஸ்கிருத மொழியை ஆய்வு செய்தார்.
அதில் பல கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்ள லாம்; இன்னும் பலவற்றை நிராகரித்தும் விடலாம். பின்னர் வில்சன் என்ற ஆங்கில அறிஞர் ரிக் வேதத்தைப் படித்து அதற்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். அந்த நூல் ரிக் வேதத்தை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியது. அதுவரை வேதத்தைப் படித்தறியாத பலருக்கும் இந்த நூல் வேதம் பற்றிய மாபெரும் மாயைகளைத் தகர்த்தது. தமிழர்கள் பலரும் இந்த மொழிபெயர்ப்பின் வாயிலாக ரிக் வேதம் என்ன என்பதைக் கண்டு கொண்டார்கள். எனக்கும் வில்சனுடைய ஆங்கிலப் பிரதியே ஆய்வுக்குப் பயன் பட்டது. வரலாற்றறிஞர்கள் தங்களுடைய ஆய்வில், "கி.மு. 2000-க்கு முன்பு ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருப்பதற்கான வாய்ப்பே இல்லை' என்று அறுதியிட்டுச் சொல்லிவிட்டார்கள். கி.மு.2000 என்பது அதிகபட்ச கால வரையறை.
தற்காலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஒரு புதிய சான்று கிடைத்தது. அப்போது முரளி மனோகர் ஜோஷி மனிதவளத் துறையின் மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். அவர், "இந்த சான்றின் அடிப்படையில் சிந்துசமவெளி நாகரீகத்தின் காலம் கி.மு.7,500 என்று அரசு முடிவு செய்கிறது' என்று அறிவித் தார். அதை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர், "இது திராவிட நாகரீகமா அல்லது ஆரிய நாகரீகமா?' என்று கேட்டார். ஜோஷிக்கு திராவிட நாகரீகம் என்று சொல்ல மனமில்லை. ஆரிய நாகரீகம் என்று சொல்லச் சான்றில்லை. மாறாக "இந்திய நாகரீகம்' என்று சமாளித்தார். இப்போது வரும் சான்றுகளின்படி, கி.மு.10,000 ஆண்டுகளில் சிந்துவெளியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான செய்திகள் வருகின்றன.
ஆரிய சார்புடைய அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது பெரிய பின்னடைவு. சமஸ்கிருதத்தை இந்தியாவின் முதல் மொழி என இனி எப்படிச் சொல்வதென்று திகைத்து நிற்கிறார்கள்.
நீங்கள் குறிப்பிட்டதைப்போல தமிழை நீச பாஷை என்று கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்கள். பிறகு திராவிட இயக்கம் எழுச்சி பெற்றபோது தோன்றிய எதிர்ப்புக்க ளைக் கணக்கில் கொண்டு, சிவனின் உடுக்கையில் பக்கத்துக் கொன்றாகத் தோன்றிய மொழிகளே தமிழும் சமஸ்கிருதமும் என்று பதுங்கினார்கள். ஆனால் சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் தோன்றியது என்ற எண்ணத்திலிருந்து அவர்கள் மாறுவதாக இல்லை. இந்த நிலையில்தான் பாவாணரது ஆய்வுகள் ஆணித்தரமாக வெளிவந்தன. "சமஸ்கிருதம் தமிழில் இருந்து பிறந்த மொழி' என்று பாவாணர் சொன்னார். அதுமட்டுமல்ல; "சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்கூட்டத்தில் நூற்றுக்கு நாற்பது விழுக்காடு சொற்கள் தமிழ்ச் சொற்களே' என்றார். இப்போது ரிக் வேதத்தைப் படித்துப் பார்க்கிறபோது பாவாணர் குறிப்பிட்ட நாற்பது விழுக் காட்டினையும் தாண்டுகிறது
ம.சோ. விக்டர்
நன்றி : தமிழில் மட்டும் பேசுவோம்
சமஸ்கிருதம் எப்போதாவது பேசப்பட்டிருக்கிறதா ?
சமஸ்கிருதம் என்ற மொழி எப்போது தோன்றியது ?அது எப்போதாவது பேசப்பட்டிருக்கிறதா ?பேசப்பட்டிருந்தால் ஏன் அது வழக்கிலிருந்து ஒழிந்தது ? இவையெல்லாம் சமஸ்கிருதத்தை பற்றிய பல சுவையான கேள்விகள் !
கி .மு .காலத்தில் வெண் தோல் ஆரியர் இந்தியாவுக்குள் வரும் போது ,அவர்களின் மாறுபட்ட தோற்றத்தை கண்டு இந்தியாவின் பூர்வ குடி மக்களான தமிழர்கள் ,அவர்களை 'அரியன் 'என்று அழைத்தனர் .தமிழில் 'அரியன் 'என்றால் 'காண அரிதானவன் 'என்று பொருள் .இது அவர்களின் அரிதான தோற்றத்தை குறிக்கும் சொல்லாகும் .அதுவே மருவி 'ஆரியன் 'என்று நாளைடைவில் மாறிவிட்டது .இந்த 'ஆரியர்கள் 'தங்களை என்ன பெயரில் அழைத்துக் கொண்டார்கள் என்பதற்கு எந்தவிதமான சரித்திர தெளிவும் இல்லை .
அது போல் அவர்கள் இந்திய துணைக்கண்டத்தில் நுழையும் போது பேசிய மொழி என்ன என்பதற்கும் எந்த சான்றுகளும் இல்லை .நிச்சயமாக அவர்களுக்கென்று ஒரு மொழி இருந்திருக்க வேண்டும் .ஆனால் ,அது ஒரு குறிப்பிட தகுந்த மொழியாக இருந்ததற்கு எந்த விதமான சான்றுகளும் இல்லை .
பின்னர் 'சமஸ்கிருதம்' என்ற மொழி தோன்றியதே இந்தியாவில் அவர்கள் வந்து பல நூற்றாண்டுகள் கழித்து தான் என்பது உறுதி . கி .மு .450 வாக்கில் பாணினி ,தமிழ் தொல்காப்பியத்தின் அடிப்படையில் ஒரு இலக்கணம் வகுத்த பிறகே 'சமஸ்கிருதம் 'என்ற மொழியே பிறந்தது .'சமஸ்கிருதம் ' என்ற சொல்லே தமிழில் இருந்து பிறந்த சொல் என்பது நம்மில் பலருக்கு தெரியாது .
தமிழ் 'சமம் '= சமப்படுத்தப்பட்ட
தமிழ் 'கிறுக்கல் '= எழுத்து
ஆக ,சமஸ்கிருதம் =சமப்படுத்தப்பட்ட எழுத்து என்று பொருள் படும் .எனவே ,'சமஸ்கிருதம்' என்ற மொழியின் பெயரே தமிழில் இருந்து தான் தோன்றியது என்பது முக்கியமான தகவல் ஆகும் .மேலும் ,அதன் பொருளே 'சமப்படுத்தப்பட்ட எழுத்து' என்று தான் உள்ளது ;'சமப்படுத்தப்பட்ட பேச்சு 'என்று இல்லை என்பதும் குறிப்பிட தக்கது .
இந்த 'சமஸ்கிருதம்' எதை சமப்படுத்தியது ?ஆரியர்கள் வேத காலத்தில் பயன் படுத்திய ஒரு வகையான கச்சா மொழியை தான் சமப்படுத்தி 'சம்ஸ்கிருதம்' உருவாகியது .அந்த கச்சா வேத மொழி பாடல் வடிவில் தான் இருந்திருக்கிறது .அது அன்றாட வாழ்வில் பேசப்பட்ட வழக்கு மொழியாக இருந்ததாக தெரியவில்லை .
ஆக ,'சமஸ்கிருதம்' எந்தக் காலத்திலும் பேசப்பட்ட ஒரு மொழியாகத் தெரியவில்லை .
இது உண்மை தானா என்பதை வேறு கிளை வழிகளில் உறுதி படுத்த முடியுமா ?நிச்சயமாக முடியும் !
ஒரு மொழி என்றாலே அதற்கு 'native speakers' அதாவது 'அன்றாட பேச்சாளர்கள் 'இருக்க வேண்டும் .அவர்கள் அந்த மொழியை அன்றாடம் பேச வேண்டும் .அவர்கள் அந்த மொழியை தாய் மொழியென்று உரிமை கோர வேண்டும் .
அப்படி எந்த ஒரு இனமும் சமஸ்கிருதத்தை தங்களுடைய தாய் மொழியாக இதுவரை அறிவித்ததில்லை என்பது உண்மையாகும் .சமஸ்கிருதத்தின் பெருமையை தினமும் சொல்லும் பிராமணர்களே அதை அன்றாடம் பேசுவதில்லை.2001
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ,மாத்தூர் என்ற கர்நாடக கிராமத்தில் சுமார் 14000 பேர் 'சமஸ்கிருதம்' அவர்கள் தாய் மொழி என்று பதிவிட்டனர் .இது உண்மையல்ல என்பது ,அவர்களின் தாய் மொழி கன்னடம் /தமிழ் என்று அதற்கு முந்திய கணக்கெடுப்பில் பதிவாகியிருந்தது கொண்டு உறுதி செய்யப் பட்டது .
பேச்சு வழக்கில் இருந்த மொழி அழியுமா ?
ஒரு மொழி, பேச்சு வழக்கில் இருந்து முற்றிலும் பேசப்படாமல் ஆக முடியுமா ?நிச்சயமாக முடியும் !ஆனால் ,எப்போது அப்படி முடியும் ?

- அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் எல்லோரும் இறந்து போகும் நேரத்தில் ,அந்த மொழியும் பேசப்படாத மொழியாக ஆகும் .
- அதற்கு முன் ,அந்த மொழி,முதலில் 'அழிவின் விளிம்பில் தள்ளப்பட்ட மொழிகள் பட்டியலில் ' List of endangered languages இடம் பெறும் . எடுத்துக்காட்டாக ,சமஸ்கிருதம் பேசப்பட்ட மொழியாக இருந்து ,அதை தாய் மொழியாக கொண்டவர்கள் பலர் இருந்து ,பின்னர் அழிந்து ,அவர்கள் 1000 பேராக குறையும் போதே இந்த பட்டியலில் இடம் பெற்று விடுவர் .இது வரை அப்படி சமஸ்கிருதம் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்ற உண்மை ,சமஸ்கிருதம் பேசப்பட்டதே இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது .
- மேலும் ,ஒரு வேளை சமஸ்கிருதம் பேசப்பட்ட ஒரு மொழியாக இருந்திருந்தால், அதை பேச்சு வழக்கிலிருந்து, அதை பேசியவர்கள் ஒரு போதும் நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை .ஏனென்றால் சமஸ்கிருதம் அவ்வளவு ஒரு உயர்ந்த மொழியாகவும்,ராஜாக்கள் அங்கீகரித்த மொழியாகவும் இருந்ததாகும் .அதை சமஸ்கிருத புரவலர்கள் நிச்சயமாக அழிய விட்டிருக்க மாட்டார்கள் .
ஆக ,மேற்கூறிய காரணங்களால் ,சமஸ்கிருதம் ஒருபோதும் பேச்சு வழக்கில் இருந்த மொழியாக இருந்ததில்லை என்பது உறுதியாகிறது .
எதிலும் சாராத ஒரு தூய மொழியிலாளர் குழு இல்லலாமலில்லை .இவர்கள் தாம் அவ்வப்போது தமிழின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள் .கீழ்க்கண்டவர்கள் போன்றவர்கள் இதில் அடங்கும் .
- ஜார்ஜ் எல் .ஹார்ட்
- நோம் சோம்க்ஸ்சி
- காட்சும டாய்
- சூடோமோ காம்பே
- பேரா .ஓனூ
அரசியல் சார்ந்த மொழியிலாளர்கள் கீழ்க்கண்ட அடிப்படையற்ற கோட்பாடுகளில் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளனர் :
- சம்ஸ்கிருத மொழி மட்டும் இனமே இல்லாமல் தன்னாலே தோன்றியது .எந்த மொழியும் தோன்ற ஒரு இனம் அவசியம் .ஆனால் ,சரித்திரத்தில் சம்ஸ்கிருத இனம் என்று எந்த காலக்கட்டத்திலும் இருந்ததில்லை என்பது உறுதியானாலும் இவர்கள் இந்த நம்பிக்கையில் திளைக்கிறார்கள் .
- மொழி என்றால் அது பேசப்பட /பேசப்பட்டிருக்க வேண்டும் .பேசப்படாதது மொழி என்பதற்கு தகுதி பெறாது .ஆனால் ,இவர்கள் சரித்திரத்தில் எப்போதுமே பேசப்படாத சமஸ்கிருத்தை மொழியாக நம்புகிறார்கள் .
- அப்படி பேசப்படாத ஒன்று ,பேசப்படும் மொழிகளுக்கு எப்படி தாயாக முடியும் ?ஆனால் ,இவர்கள் பேசப்படாத சமஸ்கிருதம் பேசப்படும் ஆங்கிலம் ,இந்தி போன்ற மொழிகளுக்கு தாய் என நம்புகிறார்கள் .இது ,பேசப்படாத ஜாவா கணினி மொழியிலிருந்து ,பேசப்படும் ஆங்கிலம் வந்தது என்பதற்கு சமமாகும் .
- எந்த ஒரு மொழியும் ,ஒரு காலத்திற்கு பேசப்பட்டபின் தான் அதற்கு எழுத்து வடிவம் உருவாகும் .ஆனால் ,பேசவே படாத ‘தேவநாகரி ‘என்ற மொழிக்கு எழுத்து வடிவம் (Script )மட்டும் உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் .அந்த ‘தேவநாகரி ‘எழுத்து தான் சமஸ்கிருதத்திற்கும் ,இந்திக்கும் பயன் படுகிறதாம் !
Thanks sanskritandtamil.blogspot.com