Search This Blog

Wednesday, February 12, 2020

SYMBOLISM OF LORD GANESHA


The form of Lord Ganesha is very inspiring and charming. While the form of Lord Ganesh evokes our imaginations and pleases us beyond compare.
There is a deep spiritual symbolism behind the farm of Lord Ganesha.
Read more about the symbolism of Lord Ganesha.

பிள்ளையார் வழிபாடு

எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், பிள்ளையாரை வணங்கியபின் தொடங்கினால் அந்த செயலில் நல்ல வெற்றி கிடைக்கும் என்பது அனுபவரீதியான, திடமான நம்பிக்கை.
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.
கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

ஆனால் விநாயகரை மட்டும் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

இவ்வாறு நமக்கு தேவைக்கேற்றப்படி பல விதமான பொருட்களால் ஆவாஹனம் செய்து வழிபட்டால் நமக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
.

• மஞ்சள் பிள்ளையார் - சகல சௌபாகியங்களும் கிடைக்கும்.
• குங்கும பிள்ளையார் - செவ்வாய் தோஷம் நீங்கும்.
• புற்று மண் பிள்ளையார் - விவசாயம் நன்கு செழிப்படையும், நோய்கள் நீங்கும்.
• வெல்ல பிள்ளையார் - உடலில் ஏற்படும் கட்டிகள் குணமாகும்.
• கடல் உப்பு பிள்ளையார் - எதிரிகள் தொல்லை நீங்கும்.
• வெள்ளெருக்கு பிள்ளையார் - பில்லி, சூனியம் விலகி வாழ்வில் வளமும் நலமும் சேரும்.
• விபூதி பிள்ளையார் - நோய்கள் நீங்கும்.
• சக்கரை பிள்ளையார் - சக்கரை நோய் நீங்கும்.
• பசுமாட்டு சாண பிள்ளையார் - சகல தோஷங்களும் விலகி குடும்பம் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்க்கை அமையும். வியாபாரம் விருத்தியாகும்.
• சந்தன பிள்ளையார் - புத்திர பாக்கியம் உண்டாகும்.
• வாழைப்பழ பிள்ளையார் - குடும்பம் விருத்தியாகும்.
• வெண்ணை பிள்ளையார் - வியாபாரத்தில் ஏற்படும் கடன் மற்றும் அனைத்து கடன்களும் நீங்கி வளம் பெருகும்...

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி எதற்காக ஏன் உருவாக்கபட்டது?


இரு தசாப்த காலமாக கூட்டமைப்பு சரியாக செயல்பட்டதா? ஒற்றுமை என்ற வார்த்தைக்கு மதிப்பளித்து இவர்களுடன் இனைந்த சக கட்சி தலைமைகளின் ஆதங்கங்கள் வேண்டுதல்கள் கோரிக்கைகள் எப்போதாவது உள்வாங்கப்பட்டதா?
பெயரில் மட்டுமே கூட்டமைப்பு முடிவுகள் அனைத்தும் தமிழரசுக் கட்சியின் பின்கதவால் நுழைந்த ஐ தே க ஏஜேன்டால் தான் எடுக்கப்பட்டன. கிஞ்சித்தும் சக கட்சி தலைமைகளின் ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளவில்லை. அனைத்தும் ஏதோச்சதிகாரமாக புறக்கணிக்கபட்டன.
கட்சிகளை புறம்தள்ளியதை விட்டு விடுவோம். மக்களின் மன ஆதங்கத்துக்கு மதிக்களிக்ப்பட்டதா? கிடையவே கிடையாது. சகலதும் அறளை பேர்ந்த முதியவருடன் இனைந்து தனி ஒருவரால் எடுக்கபட்டது.
இவற்றை ஒற்றுமைக்கு ஊறு விழைவிக்க கூடதேன எண்ணிய சுரேஷ் தலைமையிலான அணியினர் உள்ளிருந்தவாறே நீண்ட காலமாகவே கூட்டமைப்பை நிறுவனபடுத்தி கல்விமான்களையும் புலம் பெயர் சமூகத்தையும் இனைத்து பயணிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.
ஏற்றுக் கொள்ளப்பட்டதா?
செவிடன் காதில் ஊதிய சங்காவே போனது.
கடந்த நாலரைவருட கால நல்லாட்சியில் அரசில் அங்கம் வகித்து இவர்கள் பெற்றுத்தந்த நன்மைகளை பட்டியல் இட்டால் வெறும் வார்த்தை ஜாலங்களையே இவர்கள் பெற்று தந்தனர் ?
நாம் இவர்களை உரிமைசார்ந்த பிரச்சனையை பேசவே பாராளுமன்றம் அனுப்பினோம்.
இவர்கள் அதை செவ்வன செய்தனரா? அரசில் அங்கம் வகித்த சமயத்தில் அரசாங்க வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்தனரா?

பெரும்பாண்மை சகோதரர்கள் வடக்கில் இன்று மின்சார சபையிலும் வைத்தியசாலையிலும் பிற துறைகளில் வேலைவாய்பை பெற்றுள்ளனர் அதை தடுக்கமுடிந்ததா? அந்த வேலைவாய்ப்பை ஊரில் உங்களுக்கு குப்பை கொட்டியவர்களுக்கு பெற்றுக் கொடுதீர்களா?
இல்லவே இல்லை. உங்கள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் வாயை மூட அவர்களின் பிள்ளைகளுக்கு மங்கள சமரவீரவுடன் பேசி வேலைவாய்பை பெற்றுக் கொடுத்தீர்கள்.
இவர்கள் ஒற்றுமையை குலைக்காதீர்கள் என கூக்குரல் இடுவது தமது பிளைப்புக்கு பங்கம் என கருதியே. மக்கள் நலன் கருதியல்ல. கடந்த காலங்களில் பெரும்பாண்மை மக்கள் கோவித்து கொள்வார்கள் எனக் கூறி தமிழ் மக்களின் கோமணத்தையும் உருவியதை மக்கள் அறிவர்.
பல அபிவிருத்தி திட்டங்கள் வெறும் வாய் வார்த்தைகளுடன் நின்றுவிட்டன.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முற்றாக இதிலிருந்து மாறுபட்டது.
மக்களின் உரிமை சார்ந்த விடயம் மட்டுமே பிரதான செயல்பாடாக அமையும் குறிப்பாக கூட்டணிக்குள் உட்கட்சி ஜனநாயகம் பேணப்படும். கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படும்.

குறிப்பாக கூட்டமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என நாம் எதிர்பார்த்தோமோ அதை விட சிறப்பாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயல்படும்.
அன்புடன் ஸ்ரீரங்கன்.