Search This Blog

Saturday, August 25, 2018

பொன்னுச்சாமி சேர் ,அவரின் நளவெண்பா பற்றிய இலக்கிய பாடம்

"குலேந்தி! இஞ்ச வா!!! போனமுறை உனக்குத் தமிழுக்கு எத்தினை?"
"52 சேர்"
"பொன்னுச்சாமி சேர் என்னவொரு அழகா தமிழ் படிப்பிக்கிறார்.
போய்த் தமிழ் படி!!
சனியன்! சனியன்!!!"
என்ற காது கிழியும் சத்தத்தில் வேலாயுதம் சேர் சொல்லிக்கொண்டே இருப்பார்.
செல்வவடிவேல் ஆசிரியரின் விஞ்ஞான வகுப்புக்கு அடுத்தது பொன்னுச்சாமி சேரின் தமிழ் வகுப்பு.
அநேக மாணவர்கள் தமிழ் பாட வகுப்புக்கு நிற்காமல், செல்வவடிவேல் ஆசிரியர் வகுப்பு முடிந்து திரும்பும்போது, அவரின் முதுகுக்குப் பின்னால் பதுங்கியபடி சென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறி விடுவார்கள். இந்தச் செயல்களை நன்கு அறிந்திருந்த வேலாயுதம் வாத்தியார், வாசலில் மதிலுக்கு வெளியில் நின்று இவர்களை பல சமயங்களில் “அப்பி” விடுவார்.
இவையெல்லாம் நடப்பது கொக்குவில் மணி டியூஷன் சென்டரில் தான்.
மெல்லிய உயர்ந்த தோற்றம்.
தலையில் ஆங்காங்கே சில முடிகள்.
அரைக்கையில் வெளிர் நிறத்தில் ஷேர்ட்.
நெற்றியில் திருநீற்றுக் குறியும் அதன் மேல் சந்தனப்பொட்டுமிட்டு பொன்னுச்சாமி சேர் தோற்றமளிப்பார். சிலவேளைகளில், காதில் பூவிதழ் ஒன்றும் சொருகி இருப்பார். தோற்றத்தில் கோவில் குருக்கள் போல தெய்வீகமாய் தோற்றமளிப்பார். "தொப்" என சைக்கிளை நிறுத்தி, சைக்கிளைத் தரை வரை சரித்துப் பக்குவமாக இறங்குவார். டபிள் ஸ்டான்ட் சைக்கிள் அது. கண்களில் கொஞ்சம் நீர்ப்பது போலும். சிறு கைக்குட்டை ஒன்றால் அடிக்கடி கண்களை ஒற்றிய படியே இருப்பார். ஏதோவொரு விபத்தின் பின்னர், அதன் தாக்கத்தால் இப்படி ஆகிவிட்டதென அறிந்த நினைவு.
இள மண்ணிறத்தில் ஒரு வட்டத் தொப்பியும் அணிந்து அவர் வருகையில், சாடையாக "Cowboy" மாதிரியே தெரிவதாக, வகுப்பில் சில இளவட்டுக்கள் கிசுகிசுப்பதும் கேட்கும்.
பொன்னுச்சாமி சேர் கொஞ்சம் மென்மையான அணுகுமுறை கொண்டவர்.
"காலைக் கொஞ்சம் ஒதுக்கி வெச்சு வாங்கோ சேர். சூரிய வெளிச்சம் வேட்டிக்கால வருது"
என்று கிண்டல் பண்ணிய சில வம்புப் பயல்களின் எந்தப் பேச்சையும் செவிமடுக்க மாட்டார்.
ஒரேயொரு தடவை அவரின் அதியுச்ச கோபத்தையும் கண்டிருக்கிறேன்.
இலக்கிய பாடங்களில் வரும் பாடல்களை அழகாக ரசித்து அனுபவித்துப் போதிப்பார். அவரது மெல்லிய குரலும் அதற்கு இசைவாகவே அமைந்திருக்கும். அந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி அணியாமல் அவரால் புத்தகங்களை வாசித்துக் கற்பிக்க முடிந்தமை தனிச்சிறப்பு.
தமிழ் இலக்கணம், சமய பாடங்களை விட, அவரின் தமிழ் இலக்கிய வகுப்பு ஒரு தனிக் களை கொள்வது இயல்பு. காரணம், இலக்கிய கதைகளில் வரும் முக்கிய கதாபாத்திரங்களாக தன்னை மாற்றிக் கொண்டு, அந்தப் பாடத்தில் வரும் கதாபாத்திரங்களுடன் ஐக்கியமாகி விடுவார். அதிலும் இன்றுவரை மறக்க முடியாதது அவரின் நளவெண்பா பற்றிய இலக்கிய பாடம்.
அதுவும் நளவெண்பாவில் நளனைப் பற்றிச் சொன்னதைவிட தமயந்தியைப் பற்றிச் சொன்னதுதான் அதிகம். அதிலும் தமயந்தியின் மார்பினை வர்ணிப்பதுதான் பாடல்களின் பெரும்பகுதி. ஏற்கனவே அந்தந்த வேஷத்தைப் போடும் பொன்னுச்சாமி சேர் இதை சவாலாகவே எடுத்துக்கொண்டாரோ என்னவோ? உதாரணத்துக்கு அதில் ஒரு சில பாடல்களைப் பார்ப்போம். (பல உண்டு-ஆனால், இவை மட்டும்தான் எனக்கு நினைவு உண்டு)
1)
மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு – நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.
தமயந்தியினுடைய இடையானது உயர்ந்த இள முலைகளை அவளது வாழ்நாள் முழுவதும் சுமந்து நிற்கும் வன்மையுடையதாகாதெனக் காலில் அணிந்துள்ள சிலம்புகள் , புதிய தேன் மேலெழும் மலர் சூடிய கூந்தலாளின் இரண்டு அடிகளிலும் வீழ்ந்து அவ்வடிகளுக்கு அணியாக அமைந்து வாய் விட்டுப் புலம்பும்!’
அதாவது,
முலைகள் பாரமுடையன; ஆதலின் , தமயந்தியின் இடை அவற்றைத் தாங்க முடியாமல் ஒடிந்துவிடுமாம்! இதை நினைத்து சிலம்புகள் புலம்புகின்றன.
என்பது கொஞ்சம் விளக்கமான உரை.
2)
வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் – சேம
நெடுங்குடையாய என்றுரைத்த நீங்கியதே அன்னம்
ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து.
நாட்டு மக்கட்கு நன்மை செய்கின்ற விரிந்த குடையை உடையவனே, வீமராசனுடைய செல்வ மகளான தமயந்தியின் இளமை தவழும் மார்பினை, உன்னுடைய அழகிய உயர்ந்த தோள்களைப் பொருந்தச் செய்விப்பேன்!’ என்று அன்னம் கூறிவிட்டு நுண்மையான இடையை உடையவளாகிய தமயந்தியிடம் பறந்து சென்றது.
என்பது உரை.
தமயந்தியைக் கட்டியணைத்தால் என்னாகும் என்பதை கொஞ்சம் "ஓவர்"ராகவே விளக்கம் கொடுத்த அவரது நளினம் அப்படியே கண்முன் இன்றும் நிழலாடுகிறது. அத்தனை அற்புதமாய் விளக்கம் கொடுக்கும் பொன்னுச்சாமி ஆசிரியரின் வகுப்பில் அன்றைய தினம் அத்தனை கரவொலி. அனைத்துப் பையன்கள் முகத்திலும் அத்தனை பொலிவு. கீழே குனிந்து மேசையின் கால்களைப் பார்த்தபடி, இருக்கும் பெண்களின் குதிரை வால் கொண்டைகள் சொல்லும்-அவர்களின் அடக்கமுடியாத சிரிப்பினை.
ஒரு நகைச்சுவைக்காக இந்நிகழ்வைச் சொல்லவில்லை. பொன்னுச்சாமி சேரின் அற்புதமான நடிப்பு அப்படி. அப்படியே தன்னை ஒரு "தமயந்தி" ஆகவே நினைத்து, அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.
இன்னுமொரு முஸ்லீம் இனப்பாடப்பகுதி ஒன்று இலக்கியத்தில் வரும்.
"செய்னம்பு நாச்சியார் மான்மியம்"
என்பது பாடம்.
"கட்டிலிலிருந்த காசிம்பாவா உற்றுப்பார்த்தாள் - ஒடுங்கிப்போனார்"
என்ற வரிகளில் மீண்டும் சர்ச்சை கிளப்பிய நினைவுகள் உண்டு.
செய்னம்பு நாச்சியார் செங்காட்டுப் புலி
வாயில்லாமலே வங்காளம் போவாள்
நோயில்லாமலே நூறுநாட் படுப்பாள்
சீட்டுப் பிடித்துச் சேர்த்த பணத்தைக்
கூட்டுப் பெட்டிக்குள் குவித்து வைப்பாள்.
என்று நகைச்சுவை மிக்கதொரு பாடல்களை பொன்னுச்சாமி சேரின் வாயிலிருந்து கேட்பதில் அத்தனை ஆனந்தம்.
நம்ம குடும்பம் நாடே யறியும், கிள்ளிக் கொடுத்தாலும் கிடாரம் வேண்டும், பேச்சுச் செப்பா? பிச்சைச் செப்பா?
என்று அந்த வரிகள் நீண்டு செல்லும்.
இவரது தமிழ் இலக்கண, இலக்கிய மற்றும் சமய பாட குறிப்புகளுக்கு ஒரு அப்பியாசக் கொப்பி வைத்திருப்பார். அதில், எல்லாமே வினா-விடை அமைப்பாகவே இருக்கும். பரீட்சையில் எந்த வினா வந்தாலும், இந்தக் குறிப்புக் கொப்பியிலுள்ள மாதிரி வினாக்களுக்கு வெளியே, ஒருபோதும் வராது. அவ்வளவு துல்லியமாக எழுதப்பட்டது. இந்தக் குறிப்புக் கொப்பியை யாராவது ஒரு மாணாக்கரிடம் கொடுத்து வாசிக்கச் சொல்ல, மற்றைய மாணவர்கள் அதைத் தமது அப்பியாசப் புத்தகத்தில் எழுதிக் கொள்ளச் செய்வார். இறுதியில், அந்தக் குறிப்புப் புத்தகத்தை அந்த மாணவரிடம் கொடுத்து, வீட்டில் எழுதிவரும்படி சொல்லுவார். இப்படி என் கையில் இப்புத்தகம் வந்துவிட்டால், வீட்டில் வைத்து அந்த வருடத்துக்குரிய அனைத்துக் குறிப்புக்களையும் எழுதிவிடுவேன். ஏனென்றால், அடுத்தடுத்த வகுப்புக்களில் எழுதாமல் இருந்து கொஞ்சம் நையாண்டி பண்ணிக்கொண்டிருக்கலாம் என்ற குறுகிய புத்திதான்.
தன் குடும்ப உறவினர்களைப் பற்றி அவ்வப்போது பெருமையாகப் பேசவும் தயங்கமாட்டார்.
"என்ர மகன் ஒருத்தன் இருக்கிறான். அவன் நடந்து போனா, நாலு பெட்டையள் திரும்பிப் பாக்காம போமாட்டாளவை"
என்று தன் மகனைப் பற்றியெல்லாம் பேசி, வகுப்பைக் கலகலப்பாக்குவார்.
அற்புதமான ஒரு தமிழ் விற்பன்னரிடம் தமிழ் படித்த மகிழ்வும் பெருமையும் என்றென்றும் எல்லோர் உள்ளத்திலும் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. வகுப்புக்கு வெளியே தனிப்பட்ட முறையிலும் அவருடன் நெருக்கம் உண்டு. ஒருசில சந்தர்ப்பங்களில் எனக்கு தமிழ்ப் பாடங்களுக்கு உதவியும் செய்திருக்கிறார்.
ஐயனார் கோவிலடியில் சிவப்பிரகாசம் வீதியில் இவரின் வீடு. யாரைக்கண்டாலும், "தம்பி, இஞ்ச உள்ள வந்து இதில கொஞ்சம் புடுங்கிக் கொண்டு போ" என்று தன் ஜம்மு நாவல் மரத்தைக் காட்டுவார். படித்த பிள்ளைகள் மட்டுமல்ல, வீதியால் செல்வோரும் இவர் வீட்டு ஜம்முப் பழத்தைச் சுவைத்திருக்க தவறியிருக்கவில்லை. அளவெட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட இவரின் தமிழ்ப் புலமையை மற்றையவர்களும் அனுபவிக்க இறைவன் இவருக்கு, இன்னும் கொஞ்சம் நீண்ட ஆயுளைக் கொடுத்திருக்கலாம்.
அவரின் நினைவுகளைச் சுமந்த வண்ணம்...
அன்புடன்,
அந்நாள் மாணவன்.
ரஞ்சித் தவராஜா

Sunday, July 22, 2018

Sakhavu – Malayala movie : Introduction to communism

Vadakarai Velan

கம்யூனிசத்தின் மீதும் கம்யூனிஸ்டுகள் மீதும் இளைய தலைமுறை கொண்டிருக்கும் எள்ளல் மிகுந்த பார்வையையும், உண்மையான கம்யூனிசம் எப்படிக் கேரள நிலத்தில் வேரூன்றி கிளைபரப்பி மக்கள் வாழ்வில் மலர்ச்சியைக் கொணர்ந்தது என்பதையும் பேசுகிறது ”சகாவு” திரைப்படம்.
இளையவனான கிருஷ்ணகுமார் தான் ஒரு சகாவு என்கிற போர்வையில் மக்கள் பணி எதிலும் ஈடுபடமாலேயே, ஆனால் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என மற்றவர்கள் மதிக்க வேண்டுமென்றும், அதனடையாளம் மூலம் கிடைக்கும் வசதிக வாய்ப்புகளுக்கும் ஆசை கொண்டு, அலட்டல்கள் செய்கிறான். யாரென்று தெரியாத ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது, கட்சி அவனைக் கேட்டுக் கொள்ள ரத்ததானம் செய்ய அரசு மருத்துவமணைக்கு வருகிறான்.
அரம்பகட்ட அலட்டல்களும் அலம்பல்களும் தீர்ந்த பின், தான் ரத்தம் கொடுக்க வந்திருப்பது ஒரு உண்மையான “சகாவு” எனக் கேள்விப்பட்டு, அவரது உறவினர் நண்பர்கள் மூலம் அறிய நேர்கிற “சகாவு கிருஷ்ணன்” முன், தான் ஒன்றுமில்லாத ஒரு வெற்றுப் பதர் என்ற தன்னுணர்வு கொள்கிறான். ஒரு கள்ள சகாவு நல்ல சகாவாக மாறுவதே கதை.
கிருஷ்ணக்குமாருக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் மாறி மாறிப் பயணிக்கும் கதை, மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தரிசு நிலத்தை உழுது, விதைத்து, செடிவளர்த்து மரமாக்குவதைப் போல, கிருஷ்ணன் வெறும் கிருஷ்ணனாக இருந்து “சகாவு” கிருஷ்ணனாக மாறுவதையும் கம்யூனிசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே பரப்பி அவர்கள் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருப்பதையும் தெளிவாகக் காட்டி இருக்கிறார்கள்.
இரண்டு “சகாவு” பாத்திரத்தையும் நிவின் பாலியே செய்திருக்கிறார். இளையோருக்கான ஒரு தென்னாவெட்டு உடல் மொழியும், ஓர் சித்தாந்தத்தின் பால் ஆட்படும்போது வரும் கனிவையும் மிகத் தெளிவாகத் திரையில் காட்டுகிறார்.
கொத்தடிமைகள் போல் இருக்கும் தோட்டத் தொழிலாளிகளை, அவர்கள் வாழ்வை, எளிமயாகக் காட்டி கம்யூனிசம் எப்படி அவர்கள் வாழ்வில் ஒளியூட்டுகிறது என்பதை காட்சிப்படுத்திருப்பது மிக அருமை. சகாவை மூர்க்கமாக எதிர்த்த காவலரே இறுதியில் அவரது உற்ற நண்பராக மாறுகிறார்; “நண்பன் விரோதியாவதில் என்ன ஆச்சர்யம்? என்னைப் போல விரோதியாக இருந்து நண்பனாக மாறுவதுதான் கஷ்டம்”
காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ், சகாவின் மணைவி ஜானகியாக. இளைய வயது ஜானகிகிக்கும் முதிய ஜானகிக்கும்மான உடல்மொழியைக் கவனமாகக் கையாண்டிருக்கிறார். பாராட்டுகள்.
இன்று இணையத்தில், குறிப்பாக முகநூலில் சலம்பும் கட்சி இளைஞர்களையும், சார்ந்திருக்கும் கட்சிச் சித்தாங்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அறியாமையும், அச்சித்தாந்தங்களை நிலை நிறுத்த அவர்களது மூத்தோர் செய்த தியாகங்களை உணராமல் இருப்பதும், அது குறித்த எந்த பெருமிதமும் அற்று இருப்பதும் வருத்தம் தருகிறது.
படம் பார்த்து முடித்ததும், அ.கலையம்புத்தூரில் எங்கள் பால்யவயதில் நாங்கள், கலைஞர் எனக் கிண்டல் செய்த நபர் ஞாபகம் வருகிறார். மு.க போலவே தலை வகிடெடுத்துச் சீவி, பட்டை ஃப்ரேம் கொண்ட கருப்புக் கண்ணாடி, முழுக்கைச் சட்டை அணிந்து, தரைதொடும் துண்டணிந்து, சைக்கிளில் வலம் வருவார், ஹேண்டில் பாரில் மடித்துவைத்த முரசொலி.
இன்று நம் அடையாளங்களை மாற்றிக் கொண்டோம், கூடவே எந்தச் சித்தாந்தத்தின் மீதும் ஈடுபாடு கொள்ளாமல் வாழவும் பழகி விட்டோம்; அந்தந்த நேரச் சுகம் போதுமென.

Communism seems to be the flavour of the season as far as Malayalam cinema is concerned. Recently we saw the release of Tom Emmatty’s Oru Mexican Aparatha (Tovino Thomas) and now we have Sidhartha Siva’s Sakhavu (Nivin Pauly) as well. And there’s Amal Neerad’s Comrade in America aka CIA (Dulquer Salmaan) that is due for release shortly. What’s common to all these films is not just that the communist background, it’s also that these films are being headlined by a popular leading man as well, that surely means that there is definitely an attempt to bring back the theme of communism in Malayalam films. And considering that it is now the LDF-led government in power back in Kerala, this seems to be more than just a casual coincidence. Sidhartha Siva who started off making award winning feature films turned to mainstream commercial films with Kochavva Paulo Ayappa Coelho last year. And with Nivin Pauly on board Sakhavu he has taken a big leap in his career as a filmmaker.

Nivin Pauly plays two different characters, Krishna Kumar and Sakhavu Krishnan. Krishna Kumar is a youth communist leader who is eager to climb up the political ladder by all possible means. Sakhavu Krishnan is a veteran communist leader and social worker, who enjoys the respect of people around him thanks to his good work over the years. 
One fine day unknown to both of them, the lives of Krishna Kumar and Sakhavu Krishnan get entwined in an interesting fashion. Krishna Kumar is asked to donate blood to a patient who is about to undergo a surgery and hence he lands up at a Government hospital. It is only much later that he comes to know that the patient is Sakhavu Krishnan. In the course of the day Krishna Kumar slowly goes on to know the life story of Sakhavu Krishnan in detail. The story shifts between the two time zones regularly, one symbolising the past during the heydays of Krishnan when he was an active communist leader, and the present as seen through the eyes of Krishnan.

Beginning with the voice over of Krishnan it is made very clear by Sidhartha Siva that the film would be a positive tribute to communism and its ideologies. The film is indeed a eulogy of sorts to the communist way of life and why the philosophy is so relevant in Kerala. Now this is a tad risky considering that there is a possibility of alienating a certain section of the audience which is not so fond of political dramas or has a different perspective on communism. The writing by Sidhartha Siva at times results in making the proceedings quite slow in a few places, the duration of 164 minutes making it appear slightly stretched overall. And it’s necessary to note that the film clearly paints Sakahvu Krishnan in extremely positive shades all the way. Luckily the spotlessly white portrayal of Sakhavu Krishnan is balanced by that of the more practical and contemporary Krishna Kumar.

The film benefits a lot by getting the period look (the 1970s) well taken care of, George C Williams’s cinematography and the choice of locations aiding the same. Prashant Pillai’s music goes well with the flow of the film. Of the supporting cast, Althaf as Mahesh provides some laughs while Binu Pappu as Prabhakaran Eerali, Krishnan’s foe turned close friend, Sreenivasan as the doctor treating Sakhavu Krishnan and Baiju as Garudan Kangani, the right hand man of the tea estate manager leave an impact.

Of the women while Aparna Gopinath and Gayathri Suresh have nothing much to do, Aishwarya Rajesh as Sakhavu Krishnan does well despite her limited scenes. Needless to say the main reason why the film works is Nivin Pauly who brings in a spirited performance, portraying both the contrasting characters in a manner that makes one nearly overlook the issues with the film.

Sakhavu is not as splendid a film as one might have expected, but it is a film that does not mislead the viewer and is definitely worth an outing at the cinemas.


Sethumadhavan N

A Star Within a Star (Thorne-Żytkow Object)

In 1977, Kip Thorne and Anna Żytkow figured out what happens when a neutron star - a ball of neutronium 25 kilometers across - hits a normal star. It's called a "Thorne-Żytkow object" or TŻO. Now astronomers may have found one in the Small Magellanic Cloud!
A Thorne-Żytkow Object Is a Star Within a Star
The neutron star slowly eats its host from within. Gas gets sucked into the neutron star and gets very hot: over a billion Celsius! The heat comes from two things: energy released when infalling gas hits the neutron star, and nuclear fusion after the gas hits.
How can you tell if a star is a Thorne-Żytkow object? If it's a red giant, the neutron star will make its core a lot hotter than usual. So, the "rapid proton process" should create elements that you don't usually see in such a star.
And now astronomers have found a red supergiant with a lot more rubidium, strontium, yttrium, zirconium, molybdenum and lithium than usual
"Discovery of a Thorne-Zytkow object candidate in the Small Magellanic Cloud": https://arxiv.org/abs/1406.0001

Expanding red giant stars will swallow too-close planets. In the solar system, the sun will engulf Mercury and Venus, and may devour Earth, as well.

Credit: James Gitlin/STScI AVL