Search This Blog

Thursday, March 12, 2015

இவ்வருட புதிய கவிதை தொகுப்புகள்

1.எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது - தேவதச்சன்
2.சிறகு தொலைத்த ஒற்றைவால் குருவி - ர.ராஜலிங்கம்
3.எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை - ப.தியாகு
4.ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் - நரன்
5.இசைக்காத இசைக்குறியீடு - வேல்கண்ணன்
6.சூரியனுக்கு அருகில் ஒரு வீடு - மனுஷ்ய புத்திரன்
7.இன்னமும் மிச்சமுள்ளது ஓர் நாள் - ஆர்.அபிலாஷ்
8.அமித்ரா குட்டியின் புத்தர் - குறிஞ்சி பிரபா
9.இவையும் இன்ன பிறவும் - அழகு நிலா
10.மோக்லியை தொலைத்த சிறுத்தை - லஷ்மி சரவணக்குமார்
11.குரல்வளையில் இறங்கும் ஆறு - அய்யப்ப மாதவன்
12.மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் - ரமேஷ் பிரேதன்
13.பனிப்பாலை பெண் - உமாசக்தி
14.கனவின் உபநடிகன் - ஆத்மார்த்தி
15.வலது கால் புன்னகை - ஃபைசால்
16.மனிதர்களை கற்றுக்கொண்டு போகிறவன் - செந்தில் பாலா
17.செய்வினை - றியாஸ் குரானா
18.சிறகு விரிந்தது - சாந்தி தேவி
19.சொந்த ரயில்காரி - ஜான் சுந்தர்
20.என் வானிலே - நிம்மி சிவா
21.மலைகளின் பறத்தல் - மாதங்கி
22.விரல் முனைக் கடவுள் - ஷான்
23.மெளன அழுகை - மு.கோபி ஷரபோஜி
24.அலறல்களின் பாடல் – கவின்மலர்
25.நீளா – பா.வெங்கடேசன்
26.கடலில் வசிக்கும் பறவை – நிலாரசிகன்
27.இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான் – ரவி உதயன்
28.அகவன் மகள் – குட்டி ரேவதி
29.சாத்தான்களின் அந்தப்புரம் – நறுமுகை தேவி
30.ஏன் என்னைக் கொல்கிறீர்கள் – க.இராமசாமி
31.விரல் முனைக் கடவுள் – ஷான்
32.பூனையின் கடவுள் – கோசின்ரா
33.உன்மத்தப் பித்தன் – பொன்.வாசுதேவன்
34.பெருங்கடல் போடுகிறேன் – அனார்
35.தெரிவை – பத்மஜா நாராயணன்
36.யாருமற்ற சொல் – யாழன் ஆதி
37.தலைமறைவுக்காலம் – யவனிகா ஶ்ரீராம்
38.மண்புழுவின் நான்காவது இதயம் – நேசமித்ரன்
39.டார்வின் படிக்காத குருவிகள் – உமா மோகன்
40.தனித்தலையும் செம்போத்து – செந்தி
41.சொல் எனும் தானியம் – சக்தி ஜோதி
42.நிறைசூலி – மகுடேசுவரன்
43. சினேகத்தின் வாசனை – சக்தி செல்வி
44. அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது – க.எழில்
45. இலைகள் பழுக்காத உலகம் – ராமலஷ்மி
46. மணல் நதி - கதீர்
47.ரகசியத்தின் நாக்குகள் - நெற்கொழு தாசன்
48.உள்ளே கவிதையென்று எதுவுமில்லை - ராசு

49.பெருங்கடல் போடுகிறேன். - ஈழத்துக் கவி அனார்.
50.ரகசியத்தின் நாக்குகள் - ஈழத்துக் கவி நெற்கொழு தாசன்.

அலறல்களின் பாடல்

வன்புணர்
முலைகளை வெட்டியெறி
பிறப்புறுப்பில் கடப்பாரையைச் செலுத்து
தெறிக்கும் குருதிச் சிவப்பு
உன் தெய்வங்கள் வீற்றிருக்கும்
கோயிலின் சுற்றுச்சுவருக்கு வண்ணமாகிறது

வன்புணர்
முந்திரிக் காட்டில்
நிர்வாணமாக்கு
அவள் உடைகள்
உன் கடவுளை அலங்கரிக்கின்றன

வன்புணர்
பள்ளிச்சீருடையில் ரத்தம் படரச் செய்
பின் முள்காட்டில் தூக்கியெறியுமுன்
அக்குழந்தையின் பால் மணத்தை
உன் மேனியில் வழித்து எடு
அதுவே
கோயிலின் தெய்வீக மணமாகிறது

வன்புணர்
மொட்டைமாடியில் இருந்து வீசியெறி
அவளின் அலறல்
பக்திப் பாடலாகிறது

வன்புணர்
அவள் கதறலை அணுஅணுவாய் ரசி
அவள் கண்ணீர்
புனிதத் தீர்த்தமாகிறது

வன்புணர்
அடையாளம் தெரியாமல்
அவளைச் சிதைத்து
சிதையில் இடு
அச்சாம்பல்
பிரசாதத் திருநீறாகிறது

வன்புணர்
அவள் மூச்சை நிறுத்து
இத்தனை காலம்
அவள் உதிர்த்த
புன்னகைகள் கோக்கப்பட்டு
உன் கடவுளின் கழுத்தில்
மலர்மாலையாகின்றன

இனி
நீ வல்லாங்கு செய்ய
சேரிவாழ் பெண்கள் எவரும் இலர்
காமுற்ற நீ
கோயிலுக்குள் நுழைகிறாய்

உன் முந்தைய வன்புணர்ச்சிகளின்
சாட்சியங்களைச் சுமக்கும்
அக்கோயிலுக்குள்
நீ அடியெடுத்து வைக்க வைக்க
பெண் கடவுளர்களின் கற்சிலைகள்
நடுங்கத் தொடங்குகின்றன!

கவின் மலர்

தாலி

கூடலின் கணங்களில்
அது
போய்விழும் திசை தெரியாது
குளிக்கையிலெல்லாம் குழாய்களில்தான்
ஆடிக் கொண்டிருக்கும்
தூங்குகையில் அக்குளில் சிக்கி உயிரெடுக்கும்
குனிந்து நிமிரும் பொழுதுகளில்
சலசலப்பென்று ஒலியெழுப்பியபடி
முன்வந்து தொங்குவதுமாய் கிடக்கும்
எக்காலத்தில் எம் அன்னைகள்
அம்மந்திரத்திற்குள் புதைந்து போனார்களோ தெரியாது...
தெளிந்தெழுந்து
அவ்வதிகாரத்தை கழட்டியெறிகையில்
ஏன் இத்துணை பதற்றம்?
காலத்தின் மாற்றமாகக் கொள்வதில்
ஏன் இத்துணை பதற்றம்?
ஆயிரம் கைகள் அள்ளியெறிந்த ஆசிகளாயிற்றேயென
எங்களுக்குள்ளும் உண்டு அதன் மீது சிறுமதிப்பு
அவ்வளவே...!
வெயில்
மழை
பகல்
இரவென
எப்போதும் அதற்கு விடுப்பு கிடையாது
என்றெண்ணி
இனியும் கயிற்றிலும்
உலோகத்திலும் அன்பையேற்ற
நாங்கள் தயாரில்லை
எங்களுக்குத் தெரியும்
சங்கிலிகளற்ற அன்பை பரிமாறிக்கொள்ள
கற்களை உங்களின் மந்திரங்களின் மீது வீசுங்கள்
கொண்டிருக்கும் பதாகைகளை
உங்களின் முகத்திற்கு நேரே பிடியுங்கள்
நீங்கள் புனைந்த எண்ணிலடங்கா
பொய்யுரைகளில் இம்மந்திரத் தாலியும்
ஒன்றென உணரும் வரைக்கும்
பிடித்துக்கொண்டேயிருங்கள்......
அப்படியும் போட்டுத்தான் ஆக வேண்டுமா தாலி?
போட்டுக்கொள்கிறோம்
சவம்
அது பாட்டுக்கு கிடக்கட்டும் கழுத்தில்
- மா.இளமதி
பெண்கவிஞர்கள், 'கவிஞராவது', என்ற எந்த இலட்சியத்திட்டத்தையும் தமக்கென வைத்துக்கொள்வதில்லை என்று நம்புகிறேன். ஆனால், ஊடகமும் பொதுச்சமூகமும் தமக்கேற்றாற்போல் அதை அணுகுகின்றன என்பதை எப்பொழுதுமே உணர்ந்திருக்கிறேன். அரசியலில் தொடர்ந்தும் துல்லியமாகவும் இயங்கிக் கொண்டிருக்கும்போது, கவின்மலர் அப்படியான தாக்கம் நிறைந்த கவிதையை முன்வைப்பது என்பதும் தற்செயலானது, தவிர்க்கமுடியாதது. அங்கீகாரம் கோராதது, 'இப்படித்தான் அது நிகழ்ந்திருக்கவேண்டியது' என்பதானது. பெண்கள், தம் உடலின், மனதின் மீதான தாக்கத்தை, எந்தத் தயக்கமும் இன்றி முன்வைத்துவிட்டு நகர்ந்து சென்றுகொண்டே இருக்கின்றனர்.
சமீபத்தில், இளமதியின் 'தாலி' குறித்த கவிதையைப் படித்தபொழுதும் எனக்கு இத்தகைய உணர்வே மேலோங்குகிறது. பெண்களுக்கு அதிலும், பெண் அரசியலின் மையவெளியில் இயங்குபவர்களுக்கு கவிதை தற்செயலானது. கவிஞர் என்ற எந்த முகாந்திரமுமின்றி, அவர்களால் எழுத்தை நிகழ்த்த இயலும். அதேசமயம், துல்லியமான ஒரு சமூகவினை அது. சமூக அழுத்தம், வெடித்துக்கிளம்பும், பெரிதாகும் ஒவ்வொரு வாய்ப்பையும் பெண்கவிஞர்கள் வழியாக எடுத்துக்கொள்கிறது. பின் அந்தக் கவிதை, தன் கூர்மையான கத்தியால் நல்லதொரு சிகிச்சையை, சமூகத்திற்கு அளிக்கத் தயாராகிறது. உடலை நெறிக்கும் இந்து அதிகாரச் சிந்தனைகளிலிருந்து பெண் உடல்கள், இக்கவிதைகள் வழியாகத் தாமாகவே விடுதலை பெற்றுக்கொள்கின்றன.
இளமதியின் இவ்வரிகள், யதார்த்தத்தையும், வேகத்தையும், கொஞ்சம் உளைச்சலையும் ஒரேசமயத்தில் பதிவுசெய்துள்ளது.
Kutti Revathi