Search This Blog

Saturday, December 31, 2011

வழு, வழாநிலை, வழுஅமைதி பற்றி நன்னூலார் கூறும் செய்திகள் - ஒரு பார்வை



முன்னுரை 
                  ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் வளமைக்கும் அம்மொழியின் இலக்கண அமைப்புகளே முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. தொல்காப்பியரின் தூர நோக்குச் சிந்தனையின் வழியில், நன்னூலாரின் நன்னூல் இலக்கண விளக்கம் வழு, வழா, வழுஅமைதி என்ற மூன்றையும் கூறி, காலந்தோறும் தமிழ் வாழ வழி வகுத்துத் தந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

வழாநிலை
       நான் நாளை வருவேன்.
நான் என்பது தன்மை பெயர். நாளை என்பது எதிர்காலம் காட்டும். இவைகளுக்கு ஏற்ற வினைமுற்றுவருவேன் என்பதாகும். இவ்வாறு இலக்கணமுறை வழுவாமல் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.
இலக்கணப் பிழை இன்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். (வழாநிலை – இலக்கணப் பிழையற்ற முறை)
எ.கா – குயில் கூவும்.
       நாய் குரைக்கும்.


வழு
  நான் நாளை வந்தேன்.    
  நாளை என்னும் எதிர்காலத்தைக் குறிக்கும் சொல்லோடு வந்தேன் என்னும் இறந்த கால வினைமுற்றுச் சேர்த்துக் கூறுவது இலக்கணப் பிழையாகும்.
  இலக்கண முறைக்கு மாறாகப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். (வழு – குற்றம்)
  எ. கா. –
       அம்மா வந்தது.
       அவள் வந்தான்.
வழுவமைதி
  திணையே பால்இடம் பொழுது வினாஇறை
  மரபாம் ஏழும் மயங்கினாம் வழுவே (375<!--[if !supportFootnotes]-->[1]<!--[endif]-->
  இலக்கண நெறிப்படியும், அன்று தொட்டு வழங்கும் முறைப்படியும் அமையாது, பிறழ்ந்தும் மாறியும் திணை,பால், இடம், பொழுது, வினா, இறை (விடை), மரபு முதலியன ஒன்றிற்கொன்று மயங்கியும் மாறி வருவது வழுவாகும். அவ்வழுக்கள் உவப்பு, உயர்வு, சிறப்பு போன்ற காரணங்களால் தக்கதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மொழியில் வழங்கப்படும். அதனையே வழுவமைதி என்பர் இலக்கண வல்லார்கள்.
தாய் தன் குழந்தையை, என் கண்ணே, கண்மணியேஎனக் கொஞ்சுவது அன்பின் காரணமாக வந்த வழுவமைதி ஆகும்.
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->அவன் வந்தது – உயர்திணை அஃறிணையில் முடிந்தது. (திணை வழு)
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->அவன் வந்தாள் – பால் வழு
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->நான் வந்தாய் – இட வழு
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->நாளை வந்தான் – கால வழு
<!--[if !supportLists]-->5.       <!--[endif]-->பால் கறக்கின்ற பசு சினையா? – வினா வழு
<!--[if !supportLists]-->6.       <!--[endif]-->லிட்டல் இந்தியாவிற்கு வழி கேட்டால், நான் சாப்பிட்டுவிட்டேன் என்பது விடை வழு
<!--[if !supportLists]-->7.       <!--[endif]-->   பூனைக்குட்டியை,பூனைக் கன்று என்பது மரபு வழு

ஐயம் திணைபால் அவ்வப் பொதுவினும்
மெய்தெரி பொருள் மேல் அன்மையும் விளம்புப (376) <!--[if !supportFootnotes]-->[2]<!--[endif]-->
திணை பால்களில் ஐயம் ஏற்படும் பொழுது அவ்வவற்றின் பொதுச் சொல்லாலும், துணிந்த பொருளல்லாத பிறிதொன்றின் மேல் அன்மை சேர்த்தும் கூறுதல் வேண்டும். (எதிர்மறையில் கூறுதல்)
மரமோ, மனிதனோ, அங்கு நிற்கும் உருவம். உருவம் என்பது பொதுச்சொல். இதைத்தவிர்த்து மரமோ மனிதனோ அங்கு நிற்பவன், நிற்பது என்றால் இலக்கணப் பிழையாகிவிடும்.
பாலில் ஆணோ பெண்ணோ என ஐயம் இருந்தால்,
ஆணோ பெண்ணோ அங்கே தோன்றுகின்றவர் எனப் பொதுச் சொல்லால் வினவியும் வினா வழு ஏற்படாமல் தவிர்த்தல் வேண்டும்.
    திணை வழுவமைதி
    உயர்திணை தொடர்ந்த பொருள்முதல் ஆறும்
    அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின (377) <!--[if !supportFootnotes]-->[3]<!--[endif]-->
    உயர்திணை எழுவாயாக முதலில் வர, அதைத் தொடர்ந்து அஃறிணைப் பொருள்களான ( பொருள், இடம்,காலம், சினை, குணம், தொழில் ) ஆறும், அவ்வுயர்திணை முடிபையே பெறும்.
     எ.கா 
     1. முருகன் அருள் உடையான் (பொருள்)
     2. முருகன் மலை உடையான் (இடம்)
     3. முருகன் கார்த்திகை நாளினன் (காலம்)
     4. முருகன் முகம் ஆறுடையான் (சினை)
     5. முருகன் குடிமைச் சிறப்பினன் (குணம்)
     6. முருகன் போர் கடியன் (தொழில் – முருகன் போர் கடிது என்றால் முருகனது போர் கடிது என்று பொருள்படும். முருகன் என்பதே எழுவாயானால், கடியன் என்றே முடிக்க வேண்டும்.)
     திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்
     மிகவினும் இழிபினும் ஒருமுடி பினவே (378) <!--[if !supportFootnotes]-->[4]<!--[endif]-->
     திணைகளும், பால்களும், வெவ்வேறு செயல்களுக்குரிய பல பொருள்களும் ஒன்றோடொன்று கலந்து ஒரு தொடராக வருமாயின், அவை சிறப்பின் காரணமாகவும், மிகுதியின் காரணமாகவும், இழிவின் காரணமாகவும் ஒரு முடிவைப் பெறும்.
சிறப்பு –
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
 திங்களும் சான்றோரும் ஒப்பர்
     இங்கு உயர்திணையும் அஃறிணையும் கலந்து சிறப்பினால் ஒப்பர் என்னும் உயர்திணையின் முடிபைப் பெற்றது. சான்றோர் திங்களைப் போல மறுத்தாங்காமை இங்கே சிறப்பு.
மிகுதி –
பார்ப்பார், தவம் செய்வார், பிணிப்பட்டார், மூத்தார்,பசு, பெண்டிர் இவர்களுக்கு வழிவிட்டு உதவ வேண்டும் – எனும் கருத்தமைந்த பாடலில் பெரும்பாலும் உயர்திணையே வந்துள்ள மிகுதியால் இவர்களுக்கு என்னும் முடிபு வந்துள்ளது.
இழிவு –
     மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா
இருதிணையும் கலந்து, இழிவின் காரணமாக விடா என்ற அஃறிணை முடிபைக் கொண்டன.


உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும்
இழிப்பினும் பால்திணை இழுக்கினும் இயல்பே (379) <!--[if !supportFootnotes]-->[5]<!--[endif]-->
     மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, சினம், எள்ளல் போன்ற காரணங்களுக்காகப் பாலும் திணையும் வழுவி (தவறி) வரினும் அது இயல்பேயாகும்.
பால் –
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->தன் மகனைஎன்னம்மா, வந்தாயா எனக் கொஞ்சும் போது ஆண்பால் பெண்பாலாவது மகிழ்ச்சியினால் சொல்வதால் தவறன்று.
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->கம்பர் இராமகதை பாடினார் என்பது, மதிப்புப் பன்மை. ஒருமையை உயர்வினால் பன்மையில் சொல்வது.
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->அம்மையே அப்பா – என்று ஆண்டவனை அன்னை எனவும் கூறுவது சிறப்பினாலாகும்.
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->‘எனைத்துணையராயினும் என்னாம், தினைத் துணையும் தேரான் பிறனின் புகல் – எனும் குறளில் (144) எனைத்துணையர் என்ற பலர்பால்,சினத்தின் காரணமாகத் தேரான் என ஒருமையில் முடிந்தது.
<!--[if !supportLists]-->5.       <!--[endif]-->எதற்கும் அஞ்சி நடுங்கும் ஆணை, இவனொரு பெண்பிள்ளைஎன்பது இழிப்பினால் ஆண்பாலைப் பெண்பாலாகக் கூறுவது.
திணை –
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->ஒரு பசுவைஎன்னம்மை வந்தாள் என்பது உவப்பினால் (மகிழ்ச்சி) அஃறிணை உயர்திணையாயிற்று.
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->‘செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கு – உயர்வினால் அஃறிணை உயர்திணையாயிற்று. தூது சென்று,உயிர் தந்தமைக்கு கிளிக்கு உயர்வு.
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->‘தம் பொருள் என்பதம் மக்கள் – சிறப்பினால் உயர்திணை அஃறிணையாயிற்று.
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->‘ஏவவும் செய்கலான் தான்தேரான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய் – என்பது சீற்றத்தால் உயர்திணை அஃறிணையானது. தேரானை நோய் என்றது அஃறிணை.
<!--[if !supportLists]-->5.       <!--[endif]-->‘நாயினும் கெட்ட நன்றியில்லான் – இழிப்பினால் நன்றியில்லானை நாய் என அஃறிணையாய்க் கூறப்பட்டது.
உயர்திணை அஃறிணையாகவும், அஃறிணை உயர்திணையாகவும் மயங்கி வருவது திணை வழுவாகும். ஆண்பால் பெண்பாலாகவும், பெண்பால் ஆண்பாலாகவும்,ஒருமைப் பால் பன்மைப்பாலாகவும், பன்மைப்பால் ஒருமைப் பாலாகவும், பலர்பால் பிறபாலாகவும் மயங்கி வருதல் பால் வழுவாகும். மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, சினம், இழிவு ஆகிய காரணங்களால் இம்மயக்கம் ஏற்படக்கூடும்.
பால் இட வழுவமைதி
     ஒருமையிற் பன்மையும், பன்மையிற் ஒருமையும்
     ஓரிடம் பிறரிடம் தழுவலும் உளவே (380) <!--[if !supportFootnotes]-->[6]<!--[endif]-->
     தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களுக்குரிய சொல் தம்முள் மாறி வழங்குவது இடவழுவாகும். அவ்வாறு மாறி வழங்குவது குற்றமன்று என்று அவற்றை ஏற்றுக்கொள்வது இடவழுவமைதியாகும்.
     இருநோக்கு இவளுன்கண் உள்ளது வருநோக்கு
      நோய்நோக்குகொன் றந்தோய் மருந்து – இக்குறளில் இருநோக்கு என்பதற்கு ஏற்ப உள்ளன என்று இருக்க வேண்டியது உள்ளது என இருக்கிறது.
     அடிகள் எப்பொழுது வந்தனரோ?’
     நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்?’
முன்னிலையில் படர்க்கை வருதல் வழுவமைதியாகக் கொள்ளப்படுகிறது.
     தமிழ்மாறன் நீதி தவறுவானா?’
 ஐயாவிடமிருந்து தப்ப முடியுமா?’
முன்னிலையைப் படர்க்கையாக்கிக் கூறுதல்.
இடம் வழுவாமல் காத்தல்
     தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை
     எழுவாய் இரண்டும் எஞ்சிய ஏற்கும் (381) <!--[if !supportFootnotes]-->[7]<!--[endif]-->
     தரல், வரல், கொடை, செலல் என்னும் இந்நான்கு சொற்களையும் படர்க்கை ஏற்கும். முதலிலுள்ள தரல், வரல் என்னும் இரண்டையும் தன்மை முன்னிலைகள் ஏற்கும்.
எ.கா –
படர்க்கை
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->அவனுக்குத் தந்தான்
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->அவனிடத்து வந்தான்
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->அவனுக்குக் கொடுத்தான்
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->அவனிடத்துச் சென்றான்
தன்மை
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->எனக்குத் தந்தான்
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->என்னிடத்து வந்தான்
முன்னிலை
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->உனக்குத் தந்தான்
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->உன்னிடத்து வந்தான்
எனக்குக் கொடுத்தான், நின்பால் வந்தான் என்பன போல் வரும் சொற்களை வழுவமைதியாகக் கொள்ளல் வேண்டும்.
காலம்
     இறப்பு எதிர்வு நிகழ்வு எனக் காலம் மூன்றே (382) <!--[if !supportFootnotes]-->[8]<!--[endif]-->
வினைச்சொல் காலம்காட்டும் எனக் கூறப்பட்டது. அவை இறந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் என மூன்று வகைப்படும். சென்றான், செல்வான், செல்கின்றான் – இவை முறையே இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்பனவாகும்.
கால வழுவமைதி
     முக் காலத்தினும் ஒத்தியல் பொருளைச்
     செப்புவர் நிகழும் காலந் தானே (383) <!--[if !supportFootnotes]-->[9]<!--[endif]-->
மூன்று காலங்களிலும் தமது தொழில் இடையறாது ஒரு தன்மையாய் நிகழும் பொருள்களை நிகழ்காலத்தால் கூறுவர்.
மலை நிற்கின்றது.
தெய்வம் இருக்கின்றது.
இறைவன் கொடுக்கின்றார்.
மலைக்கு நிற்றலும், தெய்வத்திற்கு இருத்தலும்,இறைவனுக்கு கொடுத்தலும் முக்காலத்திற்கும் உள்ள தன்மையாகும்.
     விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும்
     பிறழவும் பெறூஉம்முக் காலமும் ஏற்புழி (384) <!--[if !supportFootnotes]-->[10]<!--[endif]-->
விரைவு, மிகுதி, தெளிவு ஆகியவை காரணமாக ஒரு காலத்திற்குரிய சொல்லை வேறொரு காலத்திற்குரிய சொல்லாகக் கொள்வது காலவழுவமைதியாகும்.
     நல்லது செய்யின் சுவர்க்கம் புக்கான்
இவ்வாக்கியத்தில் தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாகக் கூறப்பட்ட கால வழுவமைதி.
     கட்டுரையை எழுதிவிட்டாயா? என்னும் ஆசிரியரின் கேள்விக்கு இன்னும் அதனை எழுதத் தொடங்காத மாணவன் அல்லது எழுதிக்கொண்டிருக்கும் மாணவன்,முடித்து விட்டேன் என்பது விரைவின் காரணமாக நிகழ்தலின் வழுவமைதியாகக் கொள்ளப்படும்.
அறுவகை வினா
     அறிவு அறியாமை ஐயுறல் கொளல்கொடை
     ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார் (385) <!--[if !supportFootnotes]-->[11]<!--[endif]-->  
     ஒன்றைப்பற்றி தாம் அறிந்து கொள்வதற்காகவே ஒருவரை ஒருவர் வினவுகின்றோம். இவ்வாறு வினவும் வினாக்கள் அறுவகைப்படும்.
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->அறிவினா – தாம் அறிந்துள்ள ஒன்றை மற்றவரும் அறிந்துள்ளனரா என அறிய வினவும் வினா. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?’
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->அறியா வினா – தான் அறியாத ஒன்றை மற்றவரிடம் வினவி அறிந்து கொள்ளுவதற்கான வினவும் வினா. மாணவன் ஆசிரியரை நோக்கி, ஐயா, இச்செய்யுளின் பொருள் யாது?’ என வினவுவது.
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->ஐய வினா – தனக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தை அகற்றிக் கொள்ளும் நோக்கில் கேட்கப்படும் வினா ஐய வினா. இதனைச் செய்தவர் இராமனா? இலக்குமணணா?’
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->கொளல் வினா ஒன்றினை மற்றவரிடம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வினவும் வினா கொளல் வினா. வணிகரே,பருப்பு உள்ளதா? என்று வினவுதல். பருப்பு இருப்பின் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கேட்கப்பட்ட வினா.
<!--[if !supportLists]-->5.       <!--[endif]-->கொடை வினா – ஒன்றை மற்றவருக்குக் கொடுக்கும் பொருட்டு வினவும் வினா கொடை வினா. செல்வந்தர் இரவலரை நோக்கி, அணிய ஆடை உள்ளதோ?’ எனக் கேட்டல். ஆடையைக் கொடுக்கும் பொருட்டுக் கேட்கப்படும் வினா.
<!--[if !supportLists]-->6.       <!--[endif]-->ஏவல் வினா – ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுவதற்காக வினவும் வினா.தம்பி கடைக்குச் சென்று பழங்கள் வாங்கி வருவாயாஇது பழங்கள் வாங்கி வருமாறு கேட்கப் பட்டதால் ஏவல் வினா ஆகும்.
எண்வகை விடை
     வினவப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் முறை எட்டு வகையில் அமைந்துள்ளன.
     சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
     உற்ற துரைத்தல் உறுவது கூறல்
     இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
     நிலவிய ஐந்தும் அப் பொருண்மையின் நேர்ப (386) <!--[if !supportFootnotes]-->[12]<!--[endif]-->
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->சுட்டு விடை – வினவும் வினாவிற்குச் சுட்டி விடையளிப்பது சுட்டு வினா. கடற்கரைக்குச் செல்லும்வழி யாது? எனும் வினாவுக்கு, இது என்பது விடையாயின் சுட்டு விடை ஆகும்.
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->மறை விடை – வினவும் வினாவிற்கு எதிர்மறைப் பொருளில் விடையிருப்பின் மறை விடை எனப்படும். நீ நீந்துவாயா?’ இவ்வினாவிற்கு நீந்த மாட்டேன் என்று விடையளித்தால் மறை விடை ஆகும்.
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->நேர் விடை – வினவும் வினாவிற்கு உடன்பாட்டுப் பொருளில் விடையளித்தால் நேர் விடை எனப்படும். நீ நாளை பள்ளி செல்வாயா?’ இவ்வினாவிற்குச் செல்வேன் என்று விடையளித்தால் நேர் விடை ஆகும்.
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->ஏவல் விடை – வினவப்படும் வினாவிற்கு வினாவியவரையே ஏவுதல் ஏவல் விடை எனப்படும். கடைக்குச் செல்வாயா?’.இவ்வினாவிற்கு நீயே செல் என்று விடையளித்தால் ஏவல் விடை ஆகும்.
<!--[if !supportLists]-->5.       <!--[endif]-->வினா எதிர் வினாதல் – வினவும் வினாவிற்கு விடையாக வினாவாகவே கூறுதல் வினா எதிர் வினாதல் விடை எனப்படும். நீ தேர்வுக்குப் படித்தாயா?’ இவ்வினாவிற்கு, படிக்காமல் இருப்பேனா?’ என்று வினவுவது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.
<!--[if !supportLists]-->6.       <!--[endif]-->உற்றது உரைத்தல் விடை – வினவும் வினாவிற்குத் தனக்கு உற்றதை விடையாகக் கூறுதல். நீ சொற்பொழிவாற்றுவாயா?’இவ்வினாவிற்குத் தொண்டை வலிக்கிறது என்று தனக்கு நேர்ந்ததைக் கூறுவது.
<!--[if !supportLists]-->7.       <!--[endif]-->உறுவது கூறல் விடை – வினவும் வினாவிற்குத் தனக்கு நிகழப்போவதை விடையாகக் கூறுவது. நீ இதனைச் சாப்பிடுவாயா?’ என்ற வினாவிற்கு வயிறு வலிக்கும்என்று கூறுதல்.
<!--[if !supportLists]-->8.       <!--[endif]-->இனமொழி விடை – வினவும் வினாவிற்கு இனமான வேறொன்றை விடையாகக் கூறுதல். நீ பாடுவாயா?’இவ்வினாவிற்கு நான் ஆடுவேன் என்று கூறுதல் பாடலுக்கு இனமான ஆடலைக் குறிப்பிட்டமையால் இன மொழி எனப்படும்.
வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல் (387) <!--[if !supportFootnotes]-->[13]<!--[endif]-->
     வினவும் போதும் விடை கூறும் போதும் சினையை முதலோடும், முதலைச் சினையோடும் மயங்கும்படி கலந்து கூறக் கூடாது.
     தாய்மொழி சிறந்ததோ? பிறமொழி சிறந்ததோ? எனும் வினாவிற்குத் தாய்மொழியே பிறமொழியினும் சிறந்தது என விடையிருக்க வேண்டும். முதலுக்கு முதலே விடையாதல் இது.
     தமிழ்ச்சொல் இனிதோ? பிறமொழி இனிதோ? என வினவின், பிறசொல்லினும் தமிழ்ச்சொல்லே இனிது எனல் வேண்டும். சினைக்கு சினையே விடையாதல் இது. இவ்வாறல்லாமல் பிறசொல்லினும் தாய்மொழி இனிது எனக் கலந்து கூறல் தெளிவுதராது வழுவாகிவிடும்.
மரபு
     நம் முன்னோர் எப்பொருளை எச்சொல்லால் எம்முறையில் வழங்கினாரோ, அப்பொருளை அச்சொல்லால் அம்முறைப்படியே நாமும் வழங்குவது மரபு ஆகும்.
    

எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
     செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே  (388) <!--[if !supportFootnotes]-->[14]<!--[endif]-->
     ஆனால் ஏதேனும் ஒரு காரணம் பற்றி மரபு மாறி வழங்குதல் ஏற்றுக் கொள்ளப்படுமாயின் அது மரபு வழுவமைதி எனப்படும்.
     கத்தும் குயிலோசை என்றன் காதில் விழவேண்டும்
     குயில் கூவும் என்பது மரபு. அதற்கு மாறாக, கத்தும்என்று கூறியது மரபு வழுவாவினும் பெருங் கவிஞர் பாடினார் என்னும் காரணம் நோக்கி மரபு வழுவமைதி ஆயிற்று.
மரபு வழுவமைதி
     சிறப்புப் பெயர், இயற்பெயர் ஆகியவற்றை முன்பின்னாக இலக்கண மரபுக்கு மாறாகக் கூறுவது மரபு வழுவமைதியாகும்.
     கேளாளதைக் கேட்பது போலவும், சொல்லாததைச் சொல்வது போலவும், நடவாததை நடப்பது போலவும்,செய்யாததைச் செய்வது போலவும் அஃறிணையிடத்தில் கூறுவது மரபு வழுவமைதியாகும்.
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->சோழன் கரிகாலன் என்பதை கரிகாற் சோழன் என மாற்றிக் கூறுவது மரபு வழுவமைதி. இதில் சோழன் என்பது சிறப்புப் பெயர், கரிகாலன் என்பது இயற் பெயர். முன் பின்னாக மாற்றிக் கூறியதால் மரபு வழுவமைதி.
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->‘கடலே, நீ இரவெல்லாம் துயின்றிலை’, துயிலாதக் கடலை துயிலுவதாகச் சொல்லுவது மரபு வழுவமைதி.
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->‘இவ்வழி கோலாலம்பூருக்குப் போகும்’, போகாத வழியைப் போவதாகக் கூறுவது மரபு வழுவமைதியாகும்.

செயப்படுபொருளைக் கருத்தாவாக்கிக் கூறும் மரபு
     பேருந்து ஓடிற்று.
     முள் குத்தியது.
     மையுண்ட கண்.
ஒருபொருட் பன்மொழி
     உயந்தோங்கு மலை.
     உயர்ந்து, ஓங்கு என்னும் இரு சொற்களும் ஏறக்குறைய ஒரே பொருளைத் தந்து, மிக உயர்ந்த மலைஎன்னும் பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு ஒரு பொருள் தரும் இரண்டு சொற்கள் சேர்ந்து வருவது ஒரு பொருட்பன்மொழி எனப்படும்.
     வெங்கொடும்பசி – வெம்மை + கொடுமை + பசி
     இதில் வெம்மை, கொடுமை எனும் இரு சொற்களும் ஒரே பொருளைத் தருகின்றன. இவ்வாறு செவிக்குச் சொல்லின்பம் தோன்ற நிற்றல், அல்லது பசிக் கொடுமையின் மிகுதியை உணர்த்தல் ஆகிய சிறப்பினால் ஒரே பொருள் தரும் இரு சொற்கள் சேர்ந்து வந்ததால் இது ஒரு பொருட் பன்மொழியாகும்.
அடைமொழி
                ஒரு பொருளைச் சிறப்பிக்க அடுத்து வரும் மொழிஅடைமொழி எனப்படும். அதாவது, நாம் ஒரு பெயரையோ அல்லது வினையையோ சிறப்பிக்க அல்லது இகழ நேரும் போது, பெயருக்கு முன்னும் வினைக்கு முன்னும் சில சொற்களைச் சேர்த்து எழுதுகின்றோம். அச்சொற்கள் பெயரையோ அல்லது வினையையோ அடுத்து நிற்பதால்அடைமொழி எனப்படும்.
     இவ்வடைமொழி பொருள், இடம், காலம், சினை,குணம், தொழில் என்னும் ஆறினையும் உணர்த்தி வரும். இனம் உள்ள அடைமொழி, இனம் இல்லா அடைமொழி என இரு வகைப்படும். இதை நன்னூலின், பொருள் முதல்...எனத் தொடங்கும் 401 ஆவது நூற்பா விளக்குகிறது.
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->பொருள் – பால் குடம்,நெய்க்குடம் (இனமுள்ளவை) உப்பளம் (இனமில்லாதது)
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->இடம் – குள நெல்,வயல் நெல் (இனமுள்ளவை) ஊர்மன்று (இனமில்லாதது)
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->காலம் – தைப்பிறை,மாசிப்பிறை (இனமுள்ளவை) அரும்பு (இனமில்லாதது)
<!--[if !supportLists]-->4.       <!--[endif]-->சினை – பூ மரம், காய் மரம் (இனமுள்ளவை) இலை மரம் (இனமில்லாதது)
<!--[if !supportLists]-->5.       <!--[endif]-->குணம் – செந்தாமரை,வெண்டாமரை (இனமுள்ளவை) வெண்திங்கள் (இனமில்லாதது)
<!--[if !supportLists]-->6.       <!--[endif]-->தொழில் – ஊன்றுகோல், ஊதுகோல் (இனமுள்ளவை) தோய்தயிர் (இனமில்லாதது)
அடைமொழி இனத்தைச் சுட்டுவதோடன்றி இனமல்லாததையும் சுட்டும்.
     சிங்கப்பூர் குழு வெற்றி பெற்றது’               
 எனின் அதனுடன் எதிர்த்தாடிய குழு தோல்வியுற்றது என்பது செய்தியாகப் பெறப்படும்.
அடைமொழி சினை முதலோடு வருதல்
     அடைமொழி ஒரு சினைப்பொருளோடு சேர்ந்து வருதலும் உண்டு. முதற் பொருளோடு சேர்ந்து விடுதலும் உண்டு.
     வேற்கை முருகன் – இதில் வேல் என்பது அடைமொழி, கை என்பது சினை (உறுப்பு). அடைமொழி சினையோடு சேர்ந்து வந்துது. வேல் என்னும் அடைமொழி,கை என்னும் சினையைச் சிறப்பிக்கச் சேர்ந்து வந்துள்ளது.
     சிறு பொன்வண்டு – இதில் சிறு என்னும் அடைமொழியும் பொன் என்னும் அடைமொழியும் முதற் பொருளைச் (வண்டை) சிறப்பிக்கச் சேர்ந்து வந்துள்ளன. இது,ஈரடை மொழி முதலோடு வருதல் என்று சொல்லப்படும்.
இரட்டைக் கிளவி
     மரக்கிளை சடசட என முறிந்து.
     இத்தொடரில் சடசட என்பது ஒலியை உணர்த்துகிறது.சட என்பது இரண்டு முறை வந்துள்ளது. சட என்று மட்டும் தனியாகச் சொன்னால் பொருள் தராது. சட சட என வந்தால்தான் பொருள் தரும். இச்சொல் இரட்டைக் கிளவி எனப்படும்.



அடுக்குத் தொடர்
     புலவர்கள் மன்னனை வாழ்க வாழ்க என வாழ்த்தினர்.
     இத்தொடரில் வாழ்க என்னும் சொல் மீண்டும் வந்துள்ளது. வாழ்க எனத் தனியாகச் சொன்னாலும் பொருள் தரும். இவ்வாறு ஒரு சொல் விரைவு, வெகுளி, தெளிவு,அச்சம், உவகை முதலியனக் காரணமாக, இரண்டு அல்லது மூன்று முறை அடுக்கி  வருவது அடுக்குத் தொடர் எனப்படும்.
மேலும் சில வழுவமைதிகள்  
தம்பால் இல்லது.. எனத் தொடங்கும் 406 ஆவது நூற்பா, தம்மிடத்து இல்லாத பொருளை இல்லை எனக் கூறாமல், அதற்கு இனமாகத் தம்மிடம் உள்ள பொருளைக் கூறுதல் ஆகும்.
     பயறுண்டோ வணிகரே, என்பார்க்கு உழுந்துண்டு,உழுந்தும் துவரையும் உண்டு என்று அதன் இனத்தையும் கூறி, உள்ள அளவையும் கூறுதல்.
குறிப்பினால் பொருள் அறியப்படும் சொற்களும் வழக்கில் உண்டு.
அவர் தங்கத்தட்டில் சாப்பிடுபவர். (செல்வநிலை வெளிப்படுதல்)
மேலும் உருவகத்திலும் உவமையிலும் வரும் சொற்கள் உயர்திணை அஃறிணை மயங்கியும், சினை முதல் மயங்கியும் வருதலும் உண்டு. அவற்றை இடத்திற்கேற்பப் பேணிக் கொள்ளுதல் கடனாகும்.
 

முடிவுரை
          எந்த ஒரு மொழிக்கும் அரணாக அமைவது அம்மொழிக்கு அமைந்த இலக்கணமாகும். நம் தமிழ் மொழியின் இலக்கணம் தூர நோக்குச் சிந்தனையுடையதாகும். தொல்காப்பியர் காலத்து முன் இருந்து இன்றைய நவீன இலக்கியக் காலம் வரை எக்காலமும் வாழக்கூடிய மொழி தமிழ் மொழி. நன்னூலார் விளக்கிய வழுவமைதி, தமிழ் காலம்  தோறும் வாழ வழி வகுத்துள்ளது என்றால்அது மிகையாகாது. 

துணை நூல்கள்
<!--[if !supportLists]-->1.       <!--[endif]-->நன்னூல் சொல்லதிகாரம், தமிழண்ணல், இரண்டாம் பதிப்பு 2008, தமிழ்மொழிப் பயிலகம், மதுரை.
<!--[if !supportLists]-->2.       <!--[endif]-->நன்னூல் சொல்லதிகாரம், சோம. இளவரசு, மூன்றாம் பதிப்பு,மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
<!--[if !supportLists]-->3.       <!--[endif]-->சிம் கேயேடு.          
            
<!--[if !supportFootnotes]-->
<!--[endif]--> 
<!--[if !supportFootnotes]-->[1]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 187
<!--[if !supportFootnotes]-->[2]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 188
<!--[if !supportFootnotes]-->[3]<!--[endif]-->  இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 95
<!--[if !supportFootnotes]-->[4]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 190
<!--[if !supportFootnotes]-->[5]<!--[endif]-->  இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 97
<!--[if !supportFootnotes]-->[6]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 193
<!--[if !supportFootnotes]-->[7]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 194
<!--[if !supportFootnotes]-->[8]<!--[endif]-->  இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 100
<!--[if !supportFootnotes]-->[9]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 195
<!--[if !supportFootnotes]-->[10]<!--[endif]-->  இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், பக். 100
<!--[if !supportFootnotes]-->[11]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 196
<!--[if !supportFootnotes]-->[12]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 196
<!--[if !supportFootnotes]-->[13]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 197
<!--[if !supportFootnotes]-->[14]<!--[endif]--><!--[if !supportFootnotes]-->[14]<!--[endif]-->  தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், பக். 198