Search This Blog

Monday, July 4, 2011

Scientists provide never before seen 3D images of the Titanic



NORFOLK, Va. (AP) — Scientists showed some never-before-seen images of the Titanic in a Virginia courtroom Thursday, unveiling dramatic three-dimensional views of the rusting hulk and the ghostly images of the sea floor where the ship sank almost a century ago.
This photo August 2010 provided by RMS Titanic Inc., shows the last davit remaining on the wreck of RMS Titanic. These lifeboat cranes were used to hoist the Ship's wooden lifeboats over the side and into the water during Titanic's sinking. Many of the boats launched soon after the sinking were not close to full—passengers refused to believe the seriousness of the situation. Scientists were in court in Norfolk Va. revealing never-before-seen images of the Titanic and the ocean bottom where the violently strewn remnants of the world's most famous shipwreck rest nearly a century after it sank on its maiden voyage. (AP Photo/RMS Titanic Inc.)
The Titanic struck ice while making its maiden voyage on April 12, 1912, about 400 miles off Newfoundland, Canada. More than 1,500 of the 2,228 passengers and crew perished as the liner plunged into the deep. The images taken from a remote-controlled submersible vehicle were shown to a judge Thursday amid an ongoing salvage claim involving the world’s most famous shipwreck.
Scientists who took part in a 2010 expedition to the North Atlantic wreck site said the images are the most extensive and highest quality ever taken of the Titanic. The expedition also fully mapped the 3-by-5-mile wreck site, which is located 2 1/2 miles below the ocean’s surface. The experts said the entire debris field has now been documented for the first time.
The new images will ultimately be assembled for public viewing, scientists said, and to help oceanographers and archaeologists explain the ship’s violent descent to the ocean bottom. It is also intended to provide answers on the state of the wreck, which scientists say is showing increasing signs of deterioration.
The findings were presented in a federal courtroom in Norfolk where a salvage claim is still being decided 26 years after the Titanic was discovered by oceanographer Robert Ballard.
The most striking images involved the 3-D tour of the Titanic’s stern, which lies 2,000 feet from the bow. Attorneys and court visitors donned 3-D glasses as a camera in a remote-controlled submersible vehicle skimmed over the stern, seemingly transporting viewers through scenes of jagged rusticles sprouting from deck, a length of chain, the captain’s bathtub, and wooden elements that scientists had previously believed had disappeared in the harsh, deep ocean environment.
The images were gathered last year using submersibles that were either tethered to a research vessel or programed to skim the ocean floor — “mowing the lawn,” in the words of one scientist.
The scientists said previous sonar and optical images were random and akin to snapshots, while the expedition strived to record and map every inch of the wreck and its resting place using the latest recording technologies. Individual images are stitched together in a mosaic process to create large-scale, almost panoramic views of the wreck.
This August 2010 photo provided by RMS Titanic Inc., shows the port side of the bow section. The rip in the hull can be seen clearly at right, with the stern coming to rest several thousand feet away. The small rectangular windows admit light into Titanic’s famous suites, while the square windows on the left mark the “Private Promenade” reserved for exclusive use of those booking the best shipboard accommodations in the world. Scientists were in court in Norfolk Va. revealing never-before-seen images of the Titanic and the ocean bottom where the violently strewn remnants of the world's most famous shipwreck rest nearly a century after it sank on its maiden voyage. (AP Photo/RMS Titanic Inc.)
“We have an image of everything. That’s what’s important,” said William N. Lange of the Woods Hole Oceanographic Institution in Massachusetts. “This has never been done before in the deep sea.”
The cameras did not probe the interior of the wreck.
The 2010 expedition, which included many veterans of past Titanic expeditions, was organized by RMS Titanic Inc. The company has exclusive rights to salvage the Titanic, and has gathered nearly 6,000 objects from the once-opulent cruise ship. They are valued in excess of $110 million.
U.S. District Judge Rebecca Beach Smith ruled last year that RMS Titanic is entitled to full compensation for the Titanic trove, but has not determined how it will be paid. The hearing Thursday was intended, in part, to demonstrate the extraordinary costs to RMS Titanic of organizing the risky expeditions and salvage operations. The seas above the wreck are commonly raked by fierce storms, and the wreck site is pitch black and subject to powerful deep-ocean currents.
Chris Davino, president and CEO of Premier Exhibitions, RMS Titanic’s parent, estimated the cost of the 2010 expedition at $4 million to $5 million. He said company officials have not decided whether they will launch another salvage expedition.
Scientists said the images collected by the expedition will someday be available to the public to explore the wreck, navigating the ocean depths as a teenager operates a video game with joy sticks.
Some of the individual images were startling in their detail and grandeur. Huge boilers and engines seemed frozen in time as they rose from the ocean bottom.
Since Ballard and an international team discovered the Titanic, most of the expeditions have either been to photograph the wreck or gather thousands of artifacts, like fine china, shoes and ship fittings. “Titanic” director James Cameron also has led teams to the wreck to record the bow and the stern.
RMS Titanic made the last expedition to site in 2004. The company conducts traveling displays of the Titanic artifacts, which the company says have been viewed by tens of millions of people worldwide.

Mutations can spur dangerous identity crisis in cells



University of Michigan research marks step toward treatments for aging, and disease-related destabilization of gene expression
As our bodies first form, developing cells are a lot like children put on the school bus with their names and addresses pinned to their shirts.
The notes identify one as a future heart cell, another as a liver cell, a third as a neuron. And that’s what they each grow up to be.
In this image of heart cells in a mouse that has had a heart attack, some of the red cells are new cells generated to repair the heart attack damage. Image credit: Richard T. Lee
But once those cells reach adulthood, changes to those original marching orders caused by aging, disease and other stressors like smoking can precipitate a kind of identity crisis, researchers at the University of Michigan Health System have found.
The cells start to forget things like which genes are supposed to be turned on and which turned off. This can lead to significant changes in their ability to function.
While microscopic, these changes can still have profound impacts on living beings. When this type of mutation was purposefully introduced into the heart muscle cells of mice, the normal functioning of the heart’s electrical systems were disturbed, at times leading to dangerous arrhythmia, a new U-M study shows.
The results, published in the July issue of the Journal of Clinical Investigation, bring us one step closer to developing treatments for issues associated with aging or chronic diseases in which cells lose their ability to maintain a stable pattern of gene expression, says senior study author Gregory R. Dressler, Ph.D., collegiate professor of pathology research at the U-M Medical School.
“We’re excited about this research because it suggests that these mutations can be the cause of disease as well as the result,” says lead author Adam B. Stein, M.D., an assistant professor of cardiology at U-M.
Stein, Dressler and their colleagues are working in a relatively new area of research known as “epigenetics.” It’s well known that human beings pass a life code, bound up in the double helix of our DNA, from one generation to the next. What’s less well understood is that they also transmit sets of instructions – written in proteins and enzymes – that tell each cell of the body which genes should be expressed, that is, which should be turned on and which turned off, Dressler says. (Epigenetic means, basically, a trait that is inherited but not encoded directly in the DNA.)
Early on, when all the cells in an embryo are an undifferentiated mass of stem cells, these instructions lay out the master plan. Like children groomed for the Olympic greatness, their destinies are spelled out for them: nerve, muscle, bone.
“What scientists didn’t know was whether those instructions, once in place, must be maintained after a cell reaches maturity,” Dressler explains. “We wanted to find out what happens when you remove some of the imprinting machinery that tells the heart cell that it’s a heart cell.”
The researchers found that those instructions matter quite a bit.
“What we found was that it’s important for the body to keep telling the heart cell, ‘You’re a heart cell, you’re a heart cell,’ ” says Dressler, who notes the research was the first time this mechanism has been studied in a living mammal. “When you knock out a piece of those instructions, the heart cell starts to forget who it is. These changes start off small, but over time they can have big effects on the organism.”
Moreover, although they can be caused by environmental factors, negative changes like those that led to arrhythmia in the mice could potentially be passed down through the generations.
“The idea that cell state is a stable phenomenon is what’s being challenged here,” says Dressler. “We believe these findings could eventually lead to drug treatments to fight this type of cell destabilization.”
____________
Citation: “Loss of H3K4 methylation destabilizes gene expression patterns and physiological functions in adult murine cardiomyocytes,” Journal of Clinical Investigation, July 2011.

சித்தர்களையும், அவர்களின் சித்துக்களையும் சிந்தனைகளையும் அறிந்து கொள்வோம்



சித்தர்களை அறிந்துகொள்வோம்:-

சித்தர்கள் யாவரும் சாதி மத வேறுபாடுகளை ஒழிக்கப் தங்களின் சிந்தனைகளை, அனுபவங்களை பாடல்களாக பாடிச் சென்றுள்ளனர்.  உலகம் யாவுமே மனித குலம் ஒன்றே எனவும், ஒருவனே தேவன் என்பதனையும் உபதேசித்து மூட நம்பிக்கைகளை விரட்ட பாடியுள்ளார்கள். இக்கருத்தை வலியுறுத்திப் பாடியதாலேயே அவர்களின் பாடல்களும், வாழ்கை வரலாறும் திட்டமிட்டே ஒதுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சித்தர்களின் உண்மையான தவமும் அவர்கள் மனித நேயம் உயர உழைத்த தொண்டும் நிலைத்து நின்று சூழ்ச்சிகளை வென்று இன்று உலகம் முழுமையும் பறை சாற்றி வருகின்றது.சித்தர்களின் யோக ஞானக் கலைகளும் தியானம்தவம் போன்றவைகளும் உலக அறிஞர்களால் போற்றப்பட்டு வளர்ந்து வருகின்றது. சித்தர்கள் மனித குத்தை சாதி மதங்களால் பிரித்த்வர்களையும் இன உணர்வுகளைத் தூண்டி பிரிப்பவர் களையும் மிகவும் கடுமையாகச் சாடி பல பாடல்களை புனைந்தவர்கள் .அவர்களின் பாடல்களில் உள்ள பரிபாஷையைஇரகசியங்களைஉண்மையானகருத்துக்களையும் அதன் விளக்கங் களையும் அனைவரும் அறிந்து கொண்டுசித்தர்கள் வழியில் உண்மையாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் இப்பகிர்வினை தொடராகப் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.

சித்தர்களின் பாடங்களின் பொருளை உணர்வதற்கு முதலில் தன்னை உணரவேண்டும். தன் உயிரை அறிய வேண்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பதினெட்டு நிலைகளையும் தெரிந்து கடக்க வேண்டும். அனைத்திற்கும் அடிப்படையான ஓங்காரத்தையும், எட்டிரண்டையும் முழுமையாக உபதேசம் பெறவேண்டும். ஐந்தெழுத்தின் உண்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். பிராணாயாமம், வாசியோகம் போன்ற யோகக் கலைகளை கற்க்கவேண்டும். மேலும் யாவிற்கும் மேலான ஒரேழுத்து இரகசியத்தையும், மெய்ப்பொருள்உண்மையையும் உணர்ந்திருந்தால் சித்தர்களின் பரிபாஷையைப் புரிந்துகொள்ளலாம். இவைகளை சித்தர் பாடல்களில் மிகவும் விரிவாக விளக்கியும் கூறியுள்ளார்கள். ஆதலால் இவைகளை விரிவாக தெரிந்து கொள்ள, பின்வரும் உண்மைகளைப் படித்து அறிந்து கொள்ள வேண்டி, அட்டவணைப் படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பது வாசல் கொண்ட நமது உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்:-
அறிவு.......................................... 1
இருவினைகள்............................ 2 (நல்வினை, தீவினை)
மூவாசைகள்............................... 3 (மண், பொன், பெண்)
அந்த கரணங்கள்....................... 4 (மனம், புத்தி, அகங்காரம், சித்தம்)
பஞ்சபூதங்கள்............................. 5 (பிரிதிவி,பூமி,நிலம்,மண்/அப்பு,ஜலம்,நீர்,புனல்/தேயு,அக்னி,நெருப்பு    /அனல்,வாயு,கால்,காற்று,கனல்/ஆகாயம்,வெளி,வானம்,விசும்பு)
பஞ்ச ஞானேந்திரியங்கள்..........5 (மெய், வாய், கண், மூக்கு, செவி)
பஞ்ச கன்மேந்திரியங்கள்..........5 (வாக்கு,வாய்-பாணிகை-பாதம்,கால்-பாயுரு,மலவாய்-உபஸ்தம்,கருவாய்)
பஞ்ச தன்மாத்திரைகள்..............5 (சுவை,ரசம்-ஒளி,ரூபம்-ஊறு,ஸ்பரிசம்-ஓசை,சப்தம்-நாற்றம்,கந்தம்)
பஞ்சகோசங்கள்...........................5(அன்னமயம்,பிராமணயம்,மனோமயம்,விஞ்ஞானமயம்,ஆனந்தமயம் கோசம்
மூன்று மண்டலங்கள்.................3 (அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்)
குணங்கள் ...................................3 (ராஜசம், தாமசம், சாத்வீகம்)
மலங்கள்......................................3 (ஆணவம், கன்மம், மாயை)
பிணிகள்.......................................3 (வாதம், பித்தம், சிலேத்துமம்)
ஏடணை........................................3 (லோக ஏடணை, அர்த்த ஏடணை, புத்திர ஏடணை)
ஆதாரங்கள்..................................6 (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா)
அவஸ்தைகள்.............................5 (சாக்கரம்,நனவு-சொப்பனம்,கனவு-கழுத்தி,உறக்கம்-துரியம்,நிஷ்டை-துரியாதீதம்-உயிர்ப்படக்கம்.) 
தாதுக்கள்.....................................7 இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம், சுரோனிதம்.
ராகங்கள்......................................8காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மதாம்,மாச்சரியம்,இடம்பம்,அகங்காரம்.
தசநாடிகள்..................................10 இடகலை,இடபக்க நரம்பு/பிங்கலை,வலபக்க நரம்பு/சுழுமுனை,நடுநரம்பு/சிகுவை,உள்நாக்கு நரம்பு/புருடன், வலக்கண் நரம்பு/ காந்தாரி, இடக்கண் நரம்பு/ அத்தி,வலச்செவி நரம்பு/அலம்புடை, இடச்செவி நரம்பு/சங்கினி, கருவாய் நரம்பு/குகு, மலவாய் நரம்பு.

தசவாயுக்கள்.............................10 பிராணன், உயிர்க்காற்று- அபானன், மலக்காற்று-வியானன், தொழிற்காற்று-உதானன், ஒலிக்காற்று-சாமாணன், நிரவுக்காற்று-நாகன், விழிக்காற்று-கூர்மன், இமைக்காற்று-கிருகரன், தும்மல் காற்று- தேவதத்தன், கொட்டாவிக் காற்று-தனஞ்செயன்,வீங்கள் காற்று.....ஆக கூடுதல் 96 தத்துவங்கள் ஆகும். 



ஓங்காரம்:- 
ஓம்அ + உ + ம் = உகாரம், அகாரம், மகாரம்  ஓம் என்பதே வாளையாகும்.  ஒம்காரத்தினுள்ளே அனைத்தும் ஒடுங்கி ஒம்காரத்தினாலேயே யாவும் தோன்றி நடந்து வருகின்றது. இதனை உபதேச வாயிலாக உட்பொருளை அறிந்து கொள்ளல் வேண்டும். வாளையின் அட்சரம் ஆ = ஹூ, ஹீ,(அ,உ,இ,கூ, கீ.)

Love~Jiddu Krishnamurti


Love is neither personal nor impersonal; it is a state of being. It is not of the mind; the mind cannot acquire it. You cannot practice love, or through meditation acquire it. It comes into being only when there is no fear, when this sense of anxiety, loneliness, has ceased, when there is no dependence or acquisition. And that comes only when we understand ourselves, when we are fully cognizant of our hidden motives, when the mind can delve into the depths of itself without seeking an answer, an explanation, when it is no longer naming. Surely one of our difficulties is, is it not, that most of us are satisfied with the superficialities of life, - with explanations, chiefly. And we think we have solved all things by explaining them, - which is the activity of the mind. As long as we can name, recognize, we think we have achieved something, and the moment there is the idea of no recognition no naming, no explanation, then the mind gets confused. But only when there are no explanations, when the mind is not caught in words, is it possible for love to come into being.  

வாழ்வில் எல்லா வளமும் பெற - ஒரு ஆன்மீக ஆலோசனை




கீழே கொடுக்கப்பட்டுள நீண்ட கட்டுரையை அனைவரும் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாது. இதில் கொட்டிக் கிடக்கும் சூட்சுமங்களை உணர்ந்து , அதைப் பற்றிக்கொண்டு - உங்கள் வாழ்வில் சகல பாக்கியங்களும் கிடைக்க , இறைவனை மனமார வேண்டி - இங்கே பதிவிடுகிறேன். 



உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது , முழுவதும் படிக்கவும். உங்களை அறியாமலேயே , உங்களில் மாற்றம் நடப்பது உறுதி .. !!



விதிவசத்தால் இரண்டு பெண்களுடன் வாழும் ஆண்களும், சூழ்நிலை சந்தர்ப்பங்களால் இரண்டு கணவன்மார்களுடன் வாழும் பெண்களும் திருச்சி உய்யக் கொண்டான் திருமலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் திருக்கோயிலில் அருள்புரியும் இரட்டை பிள்ளையார் மூர்த்திகளை வணங்கி அர்த்த நாரீஸ்வரருக்கு ஐந்து தேங்காய் எண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் அவர்கள் துன்ப நிலை மாற வழி பிறக்கும். 


அறியாமை காரணமாக குரு வார்த்தையை மீறியதற்கு (குருவை நிந்தித்தவர்கள் அல்ல) பிராய சித்தம் தருவதே திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலய தீர்த்தமாகும்.


காயத்ரீ மந்திரத்தின் பொருள் தெரிய வேண்டுமா? திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலயத்தின் ஓங்காரப் பிரகாரத்தை 24 முறை வலம் வந்து வணங்குங்கள்.

ஆவுடைமேல் முருகன் அற்புதக் காட்சி தரும் திருத்தலமே திருச்சி உய்யக்கொண்டான்மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலயமாகும். குழந்தைகள், பெரியவர்கள் தொலைந்து போனால் அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்க ஆவுடை முருகன் அருள்புரிவார். செவ்வாய்க் கிழமைகளில் அரளிப் பூ மாலை ஆறு முழத்திற்குக் குறையாமல் சார்த்தி முருகனை வழிபடுதல் சிறப்பு. 

ஞாயிற்றுக் கிழமை அன்று தேன் கலந்த தினைமாவு முருகனுக்குப் படைத்து குழந்தைகளுக்குத் தானமாக வழங்குவதால் அப்பா பையன்களுக்கு இடையே உள்ள கருத்து வேற்றுமை மறையும். பெண் பிள்ளைகள் மட்டுமே உள்ள குடும்பங்களில் புது வாழ்வு மலரும்.
 
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான நாகதோஷங்களையும் தீர்க்கும் அற்புத தலமே திருச்சி மலைக்கோட்டை அருகில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் உள்ள ஒவ்வொரு துõணும் ஒவ்வொரு விதமான நாக தோஷங்களைத் தீர்க்கும் சிறப்புடையவை. தங்கள் கையால் அரைத்த மஞ்களைத் தடவி இத்திருத்தலத்தில் உள்ள ஒவ்வொரு துõணையும் 16 முறை வலம் வந்து வணங்குதல் நலம்.


திருப்பாற்கடலிலிருந்து வெளிவந்த ஆலகால விஷம் நாம் நினைப்பது போல் ஒரு சாதாரண விஷம் கிடையாது. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவர்கள் கூட அதன் வெப்பக் கிரணங்களால் பஸ்மமாகி விடுவர். அத்தகைய கடுமையான வெப்பம் உடைய ஆலகால விஷத்தை எம்பெருமான் உண்டபோது விஷத்தின் உஷ்ணம் தாளாமல் அவர் கழுத்து, கை, கால், இடுப்பு என திருமேனியின் எல்லாப் பாகங்களிலும் இருந்த நாகங்கள் எல்லாம் தரையில் இறங்கி விட்டன.

சிவபெருமானின் உச்சந் தலை ஜடாமுடியை அலங்கரித்த சசபிந்து என்னும் நாகம் மட்டும் அந்தக் கடுமையான ஆலகால வெப்பத்தையும் பொருட்படுத்தாது சிவ பஞ்சாட்சர ஜபித்திலேயே இலயித்திருந்தது. அதன் தியாகத்தை மெச்சிய சிவபெருமான் பிரபஞ்சத்தில் இனி வரும் எந்த நாக தோஷத்தையும் தீர்க்கக் கூடிய ஆசீர்வாத சக்தியை அனுகிரகமாக அந்நாகத்திற்கு அளித்தார். 

சசபிந்து நாகம் மனித உருவம் கொண்டு மகரிஷியாக தூணில் அமர்ந்து அருளாட்சி செய்யும் திருக்கோயிலே திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயிலாகும். சசபிந்துமகரிஷிக்குக் கையால் அரைத்த மஞ்சள் காப்பிட்டு வணங்கி வந்தால் நாக தோஷங்களால் தடைபட்டுள்ள திருமணங்கள் விரைவில் நிறைவேறும்.
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTRMHGAXB6PSWT-HzapUqDe83XWxvfjCdk3sUBFepB0PHUCHVJxNw===============================


கருணையே வடிவானவர்கள் சித்தர்கள். எல்லையில்லா பரம்பொருளாகிய இறைவனின் ஒரு அணுத் துகளைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் நாம் இருப்பதால் சித்தர் பெருமக்கள் இறைவனின் பெருங்கருணையை நாமும் அனுபவித்துப் பயன் பெறும் வகையில் பல வழிபாட்டு முறைகளை அமைத்துத் தந்துள்ளனர். இவ்வகையில் பன்னிரு திருமுறைப் பாடல்களை நாம் எப்படி ஓதிப் பயன்பெற வேண்டும் என்ற முறையையும் நமக்காக அவர்கள் வகுத்துத் தந்துள்ளனர்.

இதன் பின்னால் அமைந்த வரலாறு மிகவும் ஆச்சரியமான ஒன்று. அது என்ன என்பதைத் தெரிந்து கொள்வோமா?

காலத்தின் சுழற்சியில் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. கிருத யுகத்தில் மனிதர்களுக்கு இறை நம்பிக்கை பரிபூரணமாக இருந்தது. இறைவன், இறைவி அவர்களின் நடமாட்டங்களும் இருந்தன. அதனால் இறை அவதாரங்களை நேருக்கு நேர் பார்க்கும் பாக்கியத்தை அந்த யுக மக்கள் அனைவருமே பெற்றிருந்தனர். சிவன், பார்வதி, பெருமாள் என அனைத்து இறை மூர்த்திகளையும் நாம் இன்றைய மனிதர்களைப் பார்ப்பது போல தெருக்களிலேயே காணும்  பேற்றைப் பெற்றிருந்தனர்.

ராமர், கிருஷ்ணர் போன்ற அவதார மூர்த்திகளும், மார்கண்டேயர், அகஸ்தியர், வசிஷ்டர், காகபுஜண்டர் போன்ற மகரிஷிகளும் கூட மக்களோடு மக்களாய்ப் பேசி உரையாடி, ஆன்மீக ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டு உலாவி வந்தனர். இறை வழிபாடுகளும், சந்தியா வந்தனம், தர்ப்பணம், ஹோம, யக்ஞம் போன்றவையும் நேரம், காலம் தவறாமல் முறையாக நிறைவேற்றப்பட்டு வந்தன.

யுக தர்மங்கள் மாற்றம் கொண்டபோது இந்த வழிபாட்டு முறைகளில் அசிரத்தை ஏற்பட்டு சிறிது சிறிதாக மக்கள் இறைவழிபாட்டை ஏனோ தானோ என்று நிறைவேற்ற ஆரம்பித்தனர். ஆனால், மக்களை நன்னெறியில் இட்டுச் செல்லும் சித்தர் பிரான்கள் எவ்வகையிலேனும் இறை உணர்வை மங்காமல், தளராமல் வைத்துக் கொள்ள தங்களால் இயன்ற வரையில் அருட் பணியில் தொடர்ந்து ஆற்றிக் கொண்டே இருக்கிறார்கள். வானமும் பூமியும் உள்ள அளவும், ஏன், அதன் பின்னரும் காணும் பொருட்களும், காணாத பொருட்களும் தோன்றி மறைந்தாலும் கூட கருணை உள்ளம் கொண்ட சித்தர்களின் அருந் தொண்டு என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.


இம்முறையில் கிருத யுகத்தில் முறையாக விளங்கி வந்த வேத பாராயணம் நாளடைவில் சந்தியா வந்தனம், காயத்ரீ ஜபம் போன்ற வழிபாட்டு முறைகளைப் போல நலிவடைந்த போது புனித தென் பாரதத்தில் நால்வர் என்று அன்புடன் அழைக்கப்படும் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தர மூர்த்தி சுவாமிகள், மணிவாசக சுவாமிகளும் தேவார திருவாசகப் பாக்களை ஓதி இறை பக்தியையும், தமிழ் வேத பாராயணத்தையும் மங்காது காத்து வந்தனர்

யாரும் எதிர்பார்க்காத உண்மைச் சம்பவங்களையும் இத்திரு மூர்த்திகள் சிவனருளால் நிகழ்த்தியுள்ளனர். மண்ணைப் பொன்னாக்கி வறுமை, பஞ்சம் தீர்த்தல், முதலை விழுங்கிய குழந்தையைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதலை வாயிலிருந்து உயிருடன் மீட்டல், இறந்து சாம்பலாகிப் போன சிறுமியை உயிர் பெற்று எழச் செய்தல், வயிற்றில் கல்லைக் கட்டி கடலில் வீசினாலும் நமச்சிவாயத் தெப்பம் கொண்டு கரையேறுதல் போன்ற பற்பல அற்புதங்களை எல்லாம் நிகழ்த்தி சிவ நாம மகிமையை உலகெங்கும் பரப்பி வந்தனர். நாயன்மார்கள் மட்டும் அல்லாது திருமூலர், சேக்கிழார் போன்ற  உத்தம இறையடியார்கள் அருளிய தெய்வீகப் பாடல்களையே பன்னிரு திருமுறைப் பாக்கள் என வழங்குகிறோம்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் தினந்தோறும் ஓதியே ஆக வேண்டும். இத்திருமுறைப் பாடல்கள் அனைத்தும் நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுடன் தொடர்பு கொண்டவை. ஆனால், இன்றைய கலியுகத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதனால் பன்னிரு திருமுறைகளில் உள்ள அனைத்துப் பாடல்களையும் தினமும் ஓத முடியுமா?தேவாரம், திருக்கோவையார், திருப்பல்லாண்டு, திருவாசகம், பெரிய புராணம், திருவிசைப்பா, திருமந்திரம் போன்ற நூல்கள்  இப்பன்னிரு திருமுறை தொகுப்பில் அடங்கும்.

இறை அடியார்களால் இறையருளால் மனித குல மேம்பாட்டிற்காக அருளப் பெற்றவையே இந்தப் பாக்கள். சாதாரண மனிதனுக்கு உண்டான இறை பக்தி, அவனுக்கு உலகப் பொருட்கள் மேல் உள்ள நாட்டம் இவற்றை முழுவதுமாக உணர்ந்த சித்தர் குல நாயகரான ஸ்ரீஅகஸ்திய மாமுனி கலியுக மனிதன் பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் தினமுமே எவ்வாறு ஓத முடியும் என்பதைக் குறித்து பொதிய மலையில் இறைவனை நோக்கி தவமியற்றினார். அன்ன ஆகாரமின்றி பன்னெடுங் காலம் அவருடைய தவம் தொடர்ந்தது. நீண்ட கால தவத்திற்குப் பின் எம்பெருமான் மனம் கனிந்து ஸ்ரீஅகஸ்திய மாமுனிக்கு காட்சி அளித்து அச்சித்தர் பிரானின் நீண்ட தவத்திற்கான காரணத்தை வினவினார்.

ஸ்ரீஅகஸ்திய மாமுனியும், “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! தாங்கள் அறியாதது ஒன்று உண்டா? கலியுகத்தில் இன்று வாழும் மனிதன் தன்னுடைய சாதாரண கடமையான பொருள் ஈட்டுதல், குடும்பத்திற்காக உணவு தேடுதல், குடும்பத்தாரைப் பாதுகாத்தல் என்று சுயநல செயல்களிலேயே தன்னுடைய பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டு விடுகிறான்.

தன்னுடைய உண்மையான கடமையான சிவ வழிபாட்டை முற்றிலுமாக மறந்து விட்டு அலைகிறான். சிவ வழிபாட்டிற்காக தற்போது செலவிடும் நேரத்தை மிக மிகக் குறைவாக மனித சமுதாயம் அமைத்துக் கொண்டு விட்டது. அதனால் மனிதன் சிவ வழிபாட்டை இயற்றாமல் வீணாக்கிய நேரம் என்னும் சஞ்சித கர்மாவின் அளவு பெருகிக் கொண்டே வருகிறது. இந்த வினைச் சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது சித்தர்களின் கடமை அல்லவா? இதுவும் தாங்கள் எங்களுக்குக் கருணை மேற்கொண்டு அளித்த பெரும் பேறு அல்லவா?’’

கிருத யுகத்தில் நிகழ்ந்தது போல் இன்றைய கலியுகத்தில் வேத பாராயணத்தை நிறைவேற்ற இயலாவிட்டாலும் பன்னிரு திருமுறைப் பாக்களைத் தினமும் ஓதி வந்தால், அதுவே கலியுக மனிதன் வேதம் ஓதிய பலனை அடைய வழிகாட்டும் என்று முன்னரே அருளினீர்கள். ஆனால், இன்றைய மனிதன் பன்னிரு திருமுறைப் பாடல்களைக் கூட தினமும் முழுமையாக ஓத முடியாத  அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளான்.

தாங்கள் பெருங் கருணை கொண்டு பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் ஓதியே ஆக வேண்டும் என்ற இறை நியதிக்குச் சற்று விலக்கு அளிக்க வேண்டும் என்று தங்கள் திருவடிகளைச் சரணடைந்து கேட்டுக் கொள்கிறேன், “ என்று எம்பெருமானிடம் தன்னுடைய கருத்தை வெளியிட்டார்.


ஸ்ரீஅகஸ்திய மாமுனிக்கு உயிர்கள் மேல் கொண்ட பெருங் கருணையை வியந்தவாறே, உனது வேண்டுகோள் எமக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது, மாமுனியே. மண்ணுயிர்கள் மேல் நீர் கொண்ட கருணை ஒப்பற்றது. நீர் விரும்பிய வண்ணமே கலியுக மனிதன் பன்னிரு திருமுறைப் பாடல்கள் அனைத்தையும் ஓதியே ஆக வேண்டும் என்ற எமது நியதியிலிருந்து சற்றே விலக்கு அளித்து சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் ஓதினாலே யுக தர்ம நியதியால் அவனுக்கு அனைத்துப் பாடல்களையும் ஓதிய பலன் கிடைக்க யாம் வழி செய்வோம், என்று கூறி மறைந்தார்.

 ஸ்ரீஅகஸ்திய மாமுனி அருளிய
பன்னிரு திருமுறைகளை ஓதும் விதிமுறைகளும் பலாபலன்களும்


1. காலை, மதியம், மாலை என எந்த நேரத்திலும் இந்தப் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடி இறைவனை வழிபடலாம்.


2. தனி மனித ஆராதனையை விட கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம். இறையடியார்கள் தங்கள் குடும்பத்திலுள்ள அனைவருடனும் சேர்ந்து இந்தப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு. உற்றார், உறவினர், நண்பர்கள், அறிந்தோர், அறியாதோர் என அனைவரையும் ஒன்று திரட்டி இத்திருப்பதிகங்களை ஓதி வந்தால் சமுதாய ஒற்றுமையும், அமைதியும் நிலவ வழி ஏற்படும்.


3. காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளைகளிலும் தினமும் சந்தியா வந்தன வழிபாடுகளை அனைவரும் நிறைவேற்றியாக வேண்டும். இதற்கு எந்தவித விலக்கும் கிடையாது. காணாமல், கோணாமல், கண்டு சந்தியா வந்தன வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது சித்தர்கள் வாக்கு. அதாவது காலையில் சூரிய உதயத்திற்கு முன்னும் (சூரியனைக் காணாத போது), மதியம் உச்சி வேளையிலும் (சூரியன் கோணாமல் சரியாக தலை உச்சிக்கு நேராக இருக்கும்போது), மாலையில் சூரியன் மறைவதைக் கண்டும் (சூரிய அஸ்தமனத்தின்போது) சந்தியா வந்தன வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
சந்தியா வந்தன வழிபாட்டைத் தக்க சற்குரு மூலம் அறிந்து நிறைவேற்றுவதே சிறப்பு. அவ்வாறு சற்குரு அமையப் பெறாதோர் இந்த 32 பதிகங்களைக் கொண்ட ஸ்ரீஅகஸ்தியர் தேவாரத் திரட்டுப் பாடல்களைப் பாடி வந்தால் சந்தியா வந்தன வழிபாட்டுப் பலன்களைப் பெறலாம்.


4. இந்தப் பன்னிரு திருமுறைத் திரட்டுப் பாடல்களைக் காரிய சித்திக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, நோயால் வாடும்போது மந்திரமாவது நீறு ... என்னும் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகத்தை ஓதி திருநீறு அணிந்து வந்தால் நோய் அகலும். காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களின் கடுமை தணியும். திருமணம், வீடு, நிலம் போன்ற நியாயமான தேவைகளுக்காகவும், வருமானத்தை மிஞ்சிய செலவு, கடன் தொல்லை போன்றவை நிவர்த்தியாகவும் வாசி தீரவே காசி நல்குவீர் .. என்ற திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகத்தைத் தொடர்ந்து ஓதி பலன் பெறலாம்.


5. ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதியிலும் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று மூன்று முறை ஓதுதல் சிறப்பு.


6. பாடல் பெற்ற சிவத் தலங்கள், மங்கள சாசனம் அமைந்த பெருமாள் தலங்கள் (திவ்ய க்ஷேத்திரங்கள்), சுயம்பு மூர்த்தி அருளும் தலங்கள், கங்கை, காவிரி போன்ற புனித நதிக் கரைகள், துளசி மாடம், பசுமடம், திருஅண்ணாமலை, ஐயர்மலை, பழனி மலை கிரிவலப் பாதைகள், மலைத் தலங்களில் இந்தப் பதிகங்களை ஓதுவதால் வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காகப் பெருகும். ஆனால், அபரிமிதமான இந்தப் பலன்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் வெள்ளம், புயல், வறட்சி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கவும், சமுதாய அமைதிக்காகவும், இன ஒற்றுமைக்காகவும் அர்ப்பணித்தல் சிறப்பாகும்.


7. தமிழ் மொழியும், சமஸ்கிருதம் என்னும் வடமொழியும் இறைவனின் இரு கண்கள் என்பது சித்தர்கள் கூற்று. ஹோமம், வேள்வி, யாக வழிபாடுகளில் தேவமொழியில் அமைந்த மந்திரங்களை ஓதியே ஆஹூதி அளித்து வருகிறோம். ஆனால், தேவமொழி அறியாதோரும் இந்த 32 பதிகங்களில் உள்ள பாடல்களை ஓதி ஹோம, யக்ஞ வழிபாடுகளை மேற்கொள்ளலாம். பொதுவாக, திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியுள்ள திருத்தாண்டகப் பதிகங்களை ஹோம வழிபாட்டிற்காக ஓதுதல் சிறப்பாகும்.


8. மனிதப் பிறவிக்கு வித்தாக அமைவது நாம் செய்த கர்மமே. நிறைவேறாத ஆசையும் கர்மா என்னும் முறையில் பிறவிக்கு வழி வகுக்கும். முறையான எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வந்தால்தான் பிறவி இல்லாத நிலையை என்றாவது ஒரு நாள் மனிதன் அடைய குருவருள் துணை புரியும். நியாயமான எல்லா இன்பங்களையும் இந்தப் பிறவியிலோ அடுத்த பிறவிகளிலோ நாம் பெற துணை புரிவதே இந்த 32 திருப்பதிகங்கள்.

உணவு, உடை, இருப்பிடம், வாகனம், செல்வம், போகம் என மனித அனுபவிக்கக் கூடிய இன்பங்கள் 32 வகைப்படும். இந்த 32 வகையான இன்பங்களை ஒரு மனிதன் பெற வேண்டுமானால் அவன் 32 விதமான அறங்களை நிறைவேற்றியாக வேண்டும். அன்னதானம், ஆடை தானம், கல்வி தானம், விலங்குகளுக்கு உணவு, அநாதை குழந்தைகள் பராமரிப்பு, இலவசத் திருமணங்கள், முதியோர் சேவை என 32 விதமான அறங்களையும் நிறைவேற்றியவர்களுக்கே 32 விதமான இன்பங்களை, போகங்களை அனுபவிக்க ஏதுவான பிறவிகள் அமையும். இந்த 32 விதமான இன்பங்களை ஒரு மனிதன் அனுபவித்த பின்னரே அவன் ஆசைகள் இல்லாத, பிறவி அற்ற நிலையை அடைய முடியும்.

ஆசை இல்லாத நிலையை அடைந்த மனித மனமே முழு மூச்சுடன் இறை வழிபாட்டில் ஈடுபட முடியும். அணு அளவு ஆசை இருந்தால் ஒரு மனிதனிடம் இருந்தால் கூட அது ஒரு பிறவிக்கு வித்தாக அமைந்து அப்பிறவியில் பல கர்ம வினைகளை உருவாக்கிப் பிறவிகளைப் பெருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படலாம். இங்கு அளித்துள்ள 32 பதிகங்களை தொடர்ந்து ஓதி வந்தால் 32 அறங்களை நிறைவேற்றும் நிலையை அடைய குருவருள் துணை புரியும்.


9. தர்பைப் பாய், துண்டு, கம்பளி இவைகளின் மேல் அமர்ந்து திருமுறைப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு.


10. திருமுறைகளை ஓதும்போது அனைவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு வட்ட வடிவில் அமர்ந்து வழிபாட்டை மேற்கொள்வதால் மனம் அலைபாயாமல் ஒருமுகப்பட்ட தியானம் எளிதில் கை கூடுவதைக் கண் கூடாகக் காணலாம். வழிபாட்டுப் பலன்களும் பன்மடங்காகப் பெருகும்.

11. தேவ மொழியில் அமைந்த ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள் ஓதிய பலன்களை ஒட்டு மொத்தமாக அளிக்கவல்லதே இந்த 32 திருமுறைப் பாடல்கள். தேவமொழி அறியாதோரும் வேதம் ஓதிய பலன்களை எளிதில் பெற வழி வகுப்பதே திருமுறைப் பாடல்கள். உதாரணமாக, மந்திரமாவது நீறு என்று தொடங்கும் ஒரு (திருநீற்றுப்) பதிகத்தின் பாடல்களே நான்கு வேதங்களின் பீஜாட்சர சக்திகளை உள்ளடக்கி, நான்கு வேதங்களின் திரட்சியாக அமைகின்றது என்றால் அனைத்துப் பதிகங்களின் பலாபலன்களை எழுத்தில் வடிக்க இயலுமா என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.


12. கடுக்கன், தீட்சை, ருத்ராட்சம், யக்ஞோபவீதம், ஸ்திர கங்கண், வைபவ கங்கண் போன்ற காப்புச் சாதனங்களை அணிந்து திருமுறைகளை ஓதுவதால் வழிபாட்டுப் பலன்கள் பன்மடங்காகப் பெருகும்.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

இந்த 32 பதிகங்கள்  அடங்கிய புத்தகத்தை அகத்திய ஆஸ்ரமம் , திருவண்ணாமலை வெளியிட்டு இருக்கிறது. ஆர்வம் இருப்பவர்கள் வாங்கிப் பயன்பெறவும்.

திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய இடர் களையும் பதிகம் 

(ருக், யஜுர் முதலான நான்கு வேதங்களும் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ளதால் பலருக்கும் இந்த வேதங்களை ஓத இயலவில்லையே என்ற மனக் குறை இருந்து கொண்டு இருக்கும். மேலும் இந்த வேதங்களை முறையான ஸ்வரம், அட்சர சுத்தியுடன் ஒதுவது மிகவும் அவசியம். இம்முறை அறியாதோர் தொடர்ந்து மேற்கூறிய இடர்களையும் பதிகத்தை ஓதி வந்தால் இக்குறை தீர்ந்து நான்கு வேதங்களையும் முறையாகப் பயிலும் வழிமுறை சிவனருளால் கிட்டும்.)

மறை யுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறை யுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால்
குறை யுடையார் குற்ற மோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறை யுடையார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

கனைத் தெழுந்த வெண்திரை சூழ் கடலிடை நஞ்சுதன்னை
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடல்ஆடல் பேணி இராப் பகலும்
நினைத் தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடர் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவ நின்தாள் நிழல்கீழ்
நிலைபுரிந்தார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

பாங்கின் னல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலிதேர்
துõங்கி னல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினொடுந் தலைவ நின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விருத்தனாகி பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகி கங்கையாளைக் கமல் சடைமேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாகக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்த மீதென்று எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

குன்றின் உச்சி மேல்விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப் பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

வேழவெண் கொம்பொசித்த மாலும் விளங்கிய நான்முகனும்
சூழவெங்கும் தேட ஆங்கோர் சோதியுள்ளாகி நின்றாய்
கேழல் வெண்கொம்பணிந்த பெம்மான் கேடிலா பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

வெஞ்சொல் தஞ்சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியரும் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தை
சேடர் வாழும் மாமருகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்



(வாழ்க்கையில் வளம்பெற கீழே  கொடுக்கப்பட்டுள்ள  இப்பதிகத்தை ஓதி வரவும். குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை அளித்து படிப்பில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கக் கூடிய பதிகம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஓதி வந்தால் ஞான வளத்தை சிவனருளால் எளிதில் பெற முடியும்.)

தோடு டையசெவி யன்விடை யேறியோர் துõவெண் மதிசூடிக்
காடு டையசுடலைப் பொடி பூசியென் னுள்ளங் கவர் கள்வன்
ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள் செய்த
பீடு டையபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

முற்ற லாமையிள நாகமோ டேனமுளைக் கொம் பவைபூண்டு
வற்ற லோடுகல னாப்பலி தேர்ந்தென துள்ளங் கவர் கள்வன்
கற்றல் கேட்ட லுடை யார்பெரி யார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்ற மூர்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

நீர்ப ரந்த நிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்ப ரந்தயின வெள்வளை சோரஎன் உள்ளங் கவர்கள்வன்
ஊர்ப ரந்தவுல கின்முத லாகிய ஓரூரிது வென்னப்
பேர்ப ரந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

விண்ம கிழ்ந்தமதி லெய்த்து மன்றி விளங்கு தலையோட்டில்
உன்ம கிழ்ந்துபலி தேரிய வந்தென துள்ளங் கவர்கள்வன்
மன்ம கிழ்ந்தஅர வம்மலர்க் கொன்றை மலிந்த வரைமார்பில்
பெண்ம கிழ்ந்த பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

ஒருமை பெண்மையுடை யன்சடை யன்விøடையூரும் இவனென்ன
அருமை யாகவுரை செய்ய அமர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் காலம் இதுவென்னப்
பெருமை பெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.


மறை கலந்தஒலி பாடலோடு ஆடலராகி மழுவேந்தி
இறை கலந்த இனவெள் வளைசோர என்னுள்ளங் கவர்கள்வன்
கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர் சிந்தப்
பிறை கலந்த பிரமா புரமேவிய பெம்மான் இவனன்றே.

சடை மூயங்கு புனலன் அனலன் எரிவீசிச் சதிர்வெய்த
உடை மூயங்கு மரவோடுழி தந்தென துள்ளங் கவர்கள்வன்
கடன் மூயங்கு கழிசூழ் குளிர்காலைம் பொன்னஞ் சிறகன்னம்
பெடை மூயங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

வியரிலங்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயரிலங்கை அரையன் வலிசெற் றெனதுள்ளங் கவர்கள்வன்
துயரிலங்கும் உலகிற்பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

தாணுதல் செய்திறை காணிய மாலொடு தாண்டா மரையானும்
நீணுதல் செய்தொழியந் நிமிர்ந்தான் எனதுள்ளங் கவர்கள்வன்
வாணுதல் செய் மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்
பேணுதல் செய்பிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

புத்த ரோடுபொறியில் சமணும் புறங்கூற நெறிநில்லா
ஒத்த சொல்ல உலகம் பலிதேர்ந் தெனதுள்ளங் கவர்கள்வன்
மத்த யானை மறுகவ்வுரி போர்த்ததோர் மாயம் இதுவென்னப்
பித்தர் போலும்பிர மாபுரம் மேவிய பெம்மா னிவனன்றே.

அரு நெறிய மறைவல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெரு நெறியபிரமாபுர மேவிய பெம்மான் இவன்றன்னை
ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திரு நெறிய தமிழ்வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்


நன்றி : அகஸ்திய விஜயம் மாத இதழ். 


Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_5530.html#ixzz1R8Ddzabb