Search This Blog

Monday, June 27, 2011

சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்


இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான தோமா (Thomas) கி.பி 52ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் கொடுங்கநல்லூர் என்னும் ஊருக்கு அருகில் இருந்த, மிகவும் பழமை வாய்ந்ததும், கி.பி 1341இல் அழிந்து போனதுமான ‘முகரிஸ்’ என்னும் துறைமுகத்தை வந்தடைந்து, இந்தியாவில் கிறிஸ்தவ மதத்திற்கான முதல் விதையை ஊன்றினார். பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் முக்கியமாக போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், டென்மார்க்கர்கள்;, ஆர்மினியர்கள், ஆங்கிலேயர்கள் போன்றோர் வியாபாரத்தின் நிமித்தமாக இந்தியாவில் காலடி வைத்தனர். இவர்களில் போர்ச்சுக்கீசியர் கத்தோலிக்க திருச்சபையை இந்தியாவில் அதிகமாக நிறுவினர்.
புராட்டஸ்டண்ட் திருச்சபைகள் ஐரோப்பாவில் மட்டுமே பரவியிருந்த காலம் அது. அதனை இந்தியாவுக்கு முதலில் கொண்டு வந்தவர்கள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பர்த்தலோமேயு சீகன்பால்க்கும் (Bartholomaus Ziegenbalg) ஹென்ரிச் புளுட்ச்சோவும் (Henrich Pluetchau) ஆவர். அவர்களைத் தொடர்ந்து பெங்சமின் சூல்ச் (Benjamin Schultze), ஜோகான் பிலிப் பப்ரிஷியஸ் (Johazz flillbzP Fabrbcius), சார்ல்ஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் (Clarles Tleoplilus Ewald Rlezius) போன்ற ஜெர்மன் மிஷனரிகள் தங்களின் சுவிசேஷப் பணியோடு, சமுதாயப்பணி, கல்விப்பணி, வேதாகமத்தைத் தழிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியையும் செய்தனர். இதே கால கட்டத்தில் ஆங்கிலேய மிஷனரிகளும் இறைப்பணியோடு சமுதாய, கல்வி, மருத்துவப் பணிகளையும் திறம்படச் செய்தனர்.
சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் (Clarles Tleoplilus Ewald Rlezius) ஐயர் 1790, நவம்பர் 5ஆம் நாள் ஜெர்மனியில் உள்ள கிரான்டன்ஸ் (Graudens) என்னுமிடத்தில் பிறந்தார். ரேனியஸ் 6 வயதாயிருக்கும் போது தந்தை நிக்கலஸ் ரேனியஸ் (Otto Gottlebb Nikolaus Rlezius) இறந்து போனார். தாயார் பெயர் காத்தரின் டாரதி (Cathar,na Dorothea). ரேனியசோடு பிறந்தவர்கள் இரு சகோதரிகளும், இரு சகோதரர்களுமாவர். ரேனியஸ் 14 வயது வரை மரியன் வெர்டர் நகரிலிருந்த கதீட்ரல் பள்ளியில் கல்வி கற்றார். பின்பு 3 வருடங்கள் ‘பாஸ்கா’ என்ற ஊரிலிருந்த மாமாவிடம் எழுத்தாளராகப் பணிபுரிந்தார். 1807ஆம் ஆண்டு, ரேனியஸ் தன்னுடைய வயது முதிர்ந்த பெரியப்பாவும், பெரிய பண்ணையாருமான வில். ஹெல்ம் ஏ. ரேனியஸின் அன்பின் அழைப்பை ஏற்று, பாக்மனுக்குச் சென்று அவருடைய நிலபுலன்களைக் கவனித்து வந்தார். அங்கு இருக்கும் போது அவர் மிஷனரி ஊழியத்தில் ஆர்வங்கொண்டு, அதற்காகத் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள பெர்லின் (Berlin) சென்று, அங்கு 15 மாதங்கள் இறையியல் கல்வி பயின்று, 1812-ல் குரு பட்டம் பெற்றார்.
இவர் ‘சீர்திருத்தத் திருச்சபை’யைச் (Reformed Church)  சேர்ந்தவர். 1814ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் தேதி, ‘சர்ச் மிஷன் சங்கம்’ (C M S) சார்பில் இந்தியாவுக்கு ஊழியராய் வந்தார். தரங்கம்பாடியில் சிறிது காலம் தங்கி தமிழ் பயின்றார். பின்பு சென்னைக்குச் சென்றார். அங்கு அனி வேன் சாமரன் (Annie Van Someran) என்ற டச்சு நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தார். தமிழும், தெலுங்கும் கற்றார். ஜெர்மானிய மிஷனரிகள் ஆங்கிலிக்கன் திருச்சபையை அனுசரித்துப் போக வேண்டும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ரேனியசால் அது இயலவில்லை. எனவே அவரை சென்னையிலிருந்து அனுப்பிவிடத் தீர்மானம் எடுக்கப்பட்டு, திருநெல்வேலிக்கு அவரை மாற்றினார்கள். அதன்படி ரேனியஸ் 1820, ஜூலை 7ஆம் தேதி திருநெல்வேலிக்கு வந்து, அங்கு 18 வருடங்கள் தொண்டாற்றினார்.
பப்ரிஷியஸ் ஐயருடைய தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமம் அச்சடிக்கப்பட்டாலும், போதிய அளவில் பிரதிகள் சபை மக்களுக்கு கிடைக்கவில்லை. அதிகமான பிரதிகள் தேவையென உணர்ந்த வேதாகம சங்கம் பப்ரிஷியஸ் ஐயருடைய மொழிபெயர்ப்பையே திருத்திப் பிரசுரிக்க எண்ணங் கொண்டு, சமீபத்தில் இந்தியா வந்திருக்கும் ரேனியஸ் ஐயரிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்தது. ராட்லர் ஐயரும் (J.P. Rottler) வேதாகமம் எல்லோருக்கும் நன்கு புரியும்படியாகத் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கருதி, அந்தப் பணியை ரேனியஸ் ஐயரை செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். பப்ரிஷியஸ் மொழிபெயர்ப்பில் அதிகப் பிழைகள் இருந்தன என்பதும் உண்மையே.
தமிழ் மொழியை நன்கு கற்றறிவதற்காக, சென்னையில் இருக்கும் போது, முகவை இராமானுஜக் கவிராயரிடம் தமிழில் நன்னூல் போன்ற இலக்கண நூல்களை முறையாகக் கற்றுத் தெளிந்தார். பின்பு திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழ் அறிஞரிடம் 14 வருடங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இயல்பாகவே இனிமையாகப் பேசும் வரம் உடையவராதலால், தமிழையும் திறமையாகப் பேசக்கூடியவரானார். இவருடைய சொற்பொழிவுகளை இந்துக்களும் இரசித்துக் கேட்பார்களாம். பல தமிழ் உரைநடை நூல்களை எழுதினார். 1832இல் ‘பூமி சாஸ்திர நூல்’ ஒன்றை எழுதினார்.  பின்னர் ‘பலவகைத் திருட்டாட்டம்’, ‘தமிழ் இலக்கணம்’, ‘வேத உதாரணத் திரட்டு’, ‘உருவக வணக்கம்’, ‘மனுக்குல வரலாற்றுச் சுருக்கம்’, ‘சமய சாரம்’, ‘புராட்டாஸ்ட்ண்ட் - கத்தோலிக்கன் உரையாடல்’, ‘சுவிசேஷ சமரசம்’, ‘கிறிஸ்து மார்க்க நிச்சயத்துவம்’, ‘தெய்வீக சாராம்சம்’ ஆகியவைகளையும் எழுதினார். பாட நூல்களான, பூகோளம், சரித்திரம், இயற்கை, வான சாஸ்திரம், மனுக்குல வரலாறு, சூரிய மண்டலம், பிரெஞ்சு இலக்கணம், கால நூல், தர்க்கம் முதலான பள்ளிக்கூட நூல்களையும் அவர் தயாரித்தார்.
ரேனியஸ் ஐயரின் தமிழைப் பற்றி சேதுப்பிள்ளை, ‘உயர்ந்த கருத்துக்களைத் தெளிந்த நடையில் உணர்த்தும் திறன் அவரிடம் அமைந்திருந்தது. அவர் தம் நூல்களில் அழகுண்டு, இனிமையுண்டு, நிரந்துரைக்கும் நீர்மையுண்டு; வகுத்தும் தொகுத்தும் உரைக்கும் வனப்பும் உண்டு“ என்று கூறியுள்ளார். தமிழ் மொழிக்குச் சிறப்பாய்த் தொண்டாற்றிய வீரமாமுனிவர், போப் ஐயர், கால்டுவெல் ஐயர் போன்றவர்களுக்கு இணையாக ரேனியஸ் ஐயரும் கருதப்படுகிறார்.
கதீட்ரல் ஆலயம்
கிறிஸ்தவ ஊழியத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இவர் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. இவரை ‘திருநெல்வேலி அப்போஸ்தலர்’ (The Apostle of Tirunelveli) என்று அழைப்பர். திருநெல்வேலியில் இன்று வரை சிறந்து விளங்கும் 371 சபைகளை இவர் நிறுவினார். ரேனியஸ் ஐயர், பாளையங்கோட்டை, முருகன்குறிச்சியில், கதீட்ரல் ஆலயம் (Cathedral Church) இருக்கும் இடத்தில் முதன் முதலில் ஒரு சிறு ஆலயத்தை 1826, ஜனவரி மாதம் கட்டத் தொடங்கி, ஜூன் மாதம் மூன்றாம் நாள் கட்டி முடித்தார். ஆலயம் ஜூன் 26ஆம் நாள் பொது மக்கள் வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டது. அதுவே இன்றைய தூய திரித்துவப் பேராலயம் எனப்படும் ஊசிக்கோபுரம் (Holy Trinity Cathedral) ஆகும். மேலும் அதன் அருகே பெண்களுக்கென்று ஒரு பள்ளிக்கூடத்தையும், உபதேசியார்களும், ஆசிரியர்களும் கற்பதற்கு ஒரு பயிற்சிக்கூடத்தையும் நிறுவினார். ரேனியஸ் அன்று தொடங்கிய முதல் பெண்கள் பள்ளி தான் இன்று ‘மேரி சார்ஜென்ட் மேல்நிலைப் பள்ளி’ யாக உயர்ந்து இருக்கிறது. அதுபோல் அன்று அவர் தொடங்கிய பயிற்சி செமினரி தான் இன்று ‘பிஷப் சார்ஜென்ட் போதனாப் பள்ளி’ யாக வளர்ந்துள்ளது. ‘1820 முதல் 1835 வரை ரேனியஸின் வாழ்க்கை வரலாறே திருநெல்வேலி திருச்சபையின் வரலாறாகும்’ என மறைதிரு. டி. ஏ. கிறிஸ்துதாஸ் எழுதுகின்றார். ‘வெகுசன கிறிஸ்து இயக்கம்’, ‘அனைத்து மக்கள் கல்வி’, ‘சமுதாய நீதி குறித்த புதிய நோக்கு’, எளிமையான வசனத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, அச்சுப் பிரசுரத் தொடர்பு சாதனம் இவையாவும் இவருடைய தெளிந்த கோட்பாடுகளினாலும், அர்ப்பண உழைப்பாலும் தமிழ் நாட்டில் புதிய பரிமாணங்கள் பெற்று வளரலாயின.
‘சமூக அநீதிகளால் விளைந்த துயரங்களைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் வேகமாகக் கிறிஸ்தவம் தழுவியதாக ரேனியஸ் கருதினார்’, என பால் அப்பாசாமி தன்னுடைய திருநெல்வேலி திருச்சபை வரலாற்றில் குறிப்பிடுகிறார். உயர் சாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பல கிறிஸ்தவ கிராமங்கள் ரேனியஸ் காலத்தில் தோன்றின. அவ்வாறு தோன்றிய ஊர்கள் தான், நல்லூர், மெய்யூர், சமாதானபுரம், முதலூர், அடைக்கலாபுரம் போன்ற சமத்துவ சமாதானக் குடியிருப்புகளாகும். ஜெர்மனியிலிருந்து ‘டோனா பிரபுவின் நிதியுதவியோடு புலியூர்க்குறிச்சி கிராமத்தை 1827-ல் ரேனியஸ் விலைக்கு வாங்கி அங்கு கிறிஸ்தவர்களைக் குடியேற்றியதால், அந்த ஊர் ‘டோனாவூர்’ என்று பெயர் பெற்றது.
திருநெல்வேலிக்குத் தஞ்சாவூரிலிருந்து வந்த முதல் பாதிரியார் (1786–1805) வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திருநெல்வேலி சபையிலும் சாதிமதப் பழக்கங்களை அனுமதித்திருந்தார். ஆனால் ரேனியஸ் அவ்வாறு அனுமதிக்கவில்லை. பள்ளியிலும், ஆலயங்களிலும் மாணவர் தங்கும் விடுதிகளிலும்கூட சகல மாணவர்களும் சரிசமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். தமிழிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதும் இவரது கொள்கையாயிருந்தது. அதனால் தேவைப்பட்ட பாட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். அநேக பாடசாலைகளைத் தோற்றுவித்தார். ஆண்களைப் போல் பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பெண்கள் பாடசாலைகளைத் தோற்றுவித்தார்.
ரேனியஸ் சென்னையிலிருந்த போது 1818-ல், ‘துண்டுப் பிரசுரம் மற்றும் சமய நூல்கள் சங்கம்’ (Madras Tract and Religious Book Society) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னாளில் இது ‘கிறிஸ்தவ இலக்கிய சங்கத்துடன்’ (Christian Literary Society) இணைக்கப்பட்டு விட்டது. திருநெல்வேலியிலும் ‘துண்டுப் பிரசுர சங்கத்தை’ நிறுவினார். லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்ட தாளில், துண்டுப் பிரசுரங்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வினியோகம் செய்தனர். இதனால் கிறிஸ்தவ சமய அறிவும், சாதாரண மக்களின் எழுத்தறிவும் வளரலாயிற்று.
‘தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும்’ என்பதற்கேற்ப, ரேனியஸ் மேலும் பல சங்கங்களை ஏற்படுத்தினார். ‘தரும சங்கம்’ என்ற பெயரால் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பாடசாலைகள், வீடுகள், கோவில்கள் கட்டுவதற்கு நிலம் வாங்கிக் கொடுத்தார். ‘விதவைகளின் ஆதரிப்புச் சங்கம்’ நிறுவி, அதன் மூலம் உபதேசியாரின் விதவைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்துவர ஏற்பாடு செய்தார்.
கிறிஸ்தவர்களாய் மதம் மாறிய சில இந்து குடும்பத்தார், தங்கள் பழக்கத்தின் காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குரங்கணி கொடைவிழாவில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக ரேனியஸ் ஐயர், பாளையங்கோட்டையில், 09-07-1834, புதன்கிழமை, மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். அது இன்றளவும் திருமண்டலத்தில் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திரப்பண்டிகையாக வருடந்தோறும், அதேநாளில் (09–18-1834), அதேபெயரில், பாளையங்கோட்டை, நூற்றாண்டு மண்டபத்தில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. அதுபோல ஆலய வளர்ச்சிக்காகச் சபை மக்கள் ‘ஒருநாள் வருமானக் காணிக்கைப் படைத்தல்’, ‘ஆலய பரிபாலன நிதித் திட்டம்’ (Local Church Fund), ‘கைப்பிடி அரிசி காணிக்கை’ போன்ற திட்டங்களை ரேனியஸ் ஐயர் அறிமுகப்படுத்தினார். அவைகள் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
சென்னையில் தொடங்கிய வேதாகம மொழிபெயர்ப்பு வேலை திருநெல்வேலியிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதற்கென ஒரு செயற்குழு நியமனமாகியிருந்த போதிலும், குழுவின் பிரதம மொழிபெயர்ப்பாளரான ரேனியஸ் ஐயரே முழு வேலையையும் செய்து வந்தார். அவர் புதிய ஏற்பாட்டை முதலில் மொழிபெயர்த்து முடித்தபின், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் தொடங்கி தானியேல் வரையும் முடித்தார். மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களை மொழிபெயர்க்க முடியாமற் போனது ஒரு மாபெரும் இழப்பாகும். கூட்டெழுத்து முறையை மாற்றி வார்த்தைகளுக்கு நடுவில் இடம் விட்டு எழுதும் பழக்கத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே. ரேனியஸ் மொழிநடை யாவராலும் போற்றப்பட்டாலும், மொழிபெயர்ப்பில் இவர் பப்ரிஷியஸ் ஐயரைப் போல் மூலத்தை நுணுக்கமாய்த் தழுவாததுதான் ஒரு பிழையாகக் கருதப்பட்டது.
சின்னக் கோயில்
இங்கிலாந்து திருச்சபையில், தான் குறைபாடுகளாகக் கருதியவற்றை ரேனியஸ் அழுத்தந்திருத்தமாக ஒரு நூலின் மதிப்புரைக்காக எழுதியதை அந்நூல் ஆசிரியர் பிரசுரிக்கவில்லை. ஆகையால் அதை ரேனியஸ் தாமாகவே பிரசுரித்து விட்டார். அதனால் ‘சர்ச் மிஷன் சங்கம்’ (Church Mission Society) ரேனியஸின் பணி நீக்கும் உத்தரவை, 1835-ல் டக்கர் ஐயருக்கு அனுப்பி, ரேனியஸ் ஐயருடன் உறவை முறித்துக் கொண்டது. அதனால் அவரும், அவரைச் சார்ந்தவர்களும் ஆர்க்காட்டுக்குச் சென்று அங்கே ஒரு புதிய மிஷனை நிறுவி ஊழியம் செய்து வந்தனர். ஆனால் திருநெல்வேலியிலிருந்த உபதேசியரும், மக்களும் அவரை வேண்டிக் கொண்டதன்படி, அவர்கள் திருநெல்வேலியில் உள்ள சிந்துபூந்துறைக்கு மீண்டும் வந்தனர். அங்கு புகழ் பெற்ற ‘யாத்ரிகர் சங்கம்’ என்ற சுவிசேஷ சங்கத்தை நிறுவி, சுவிசேஷத்தைக் கிராமங்களில் பரப்பினர். பாளையங்கோட்டையில் இருந்த ரேனியஸ் ஐயரின் ஆதரவாளர்கள் சி எம் எஸ் கோவிலுக்குப் போவதை நிறுத்தி விட்டனர். அதனால் அவர்களின் வழிபாட்டிற்காக அடைக்கலாபுரத்தில் ஒரு ஜெபக்கூடம் கட்டப்பட்டது. அதுதான் இன்று ‘சின்னக் கோயில்’ என்று அழைக்கப்படும் தூய. யோவான் ஆலயம் ஆகும்.
வேளாளரை மட்டுமின்றி, முதன் முறையாக நாடார்களையும், ஆசிரியர்களாகவும், உபதேசியார்களாகவும் நியமிக்கத் தொடங்கினார். இதனால் ரேனியஸ் அநேக தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டது. செயற்கரியன செய்த ஒரு மாமேதைக்குத் தேவையான சுதந்திரத்தையும், உரிய மரியாதையையும் சர்ச் மிஷன் சங்கம் அளிக்கத் தவறி விட்டது என்பது மாபெரும் உண்மையே! திருநெல்வேலி கிறிஸ்தவர்களுக்கும் ரேனியசுக்குமிடையே இருந்த பாசப் பிணைப்பையும் அவர்கள் உணராமல் போனதும் வருந்துதற்குரியதே. அதோடு சர்ச் மிஷனரி சங்க அதிகாரிகளின் தொல்லைகளும் அவருக்கு நீடித்தன. அவை யாவற்றையும் அவர் துணிவுடன் பொறுத்துக் கொண்டார்.

ரேனியஸ் ஐயர் கடமை உணர்ச்சி மிக்கவர். அவர் தன் கடமைகளையே தன் உடமைகளாய் மதித்தார். எப்பொழுதும், எல்லா இடத்திலும் அவர் பயன் தரும் செயலையே செய்தார். காலத்தின் அருமை பெருமையை அறிந்தவர். ஒவ்வொரு அலுவலையும் அதற்கேற்ற வேளையில் நிறைவேற்றினார். அவருடைய பொறுமையும், தெய்வ சித்தத்திற்குப் பணிவதும் வியப்பிற்குரியவை. அறிவாற்றலில், மனஉறுதியில், உடல்வன்மையில் சிறந்தவர். தன்னலமற்றவர். குறுகிய மனப்பான்மை அற்றவர். ஆனால் கொள்கைப் பிடிப்பில் தீவிரமானவர். அவருடைய மதிப்பு மிக்க நூல்கள் தமிழர் சமுதாயத்திற்கு அவர் விட்டுச் சென்ற சொத்துக்கள். அவருடைய மனைவிக்கும் ஆறு பிள்ளைகளுக்கும் அவர் விட்டுச் சென்ற செல்வமெல்லாம் நல்ல பெயர் – சமுதாய ஊழியன், தெய்வபக்தி மிக்கவன், திறமை மிக்கவன், பயன் மிக்கவன் - என்பவைகளே!
1838ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 5ஆம் தேதி காலை அவர் ஆங்கிலேயருக்கு எழுத்து மூலம் ஒரு விண்ணப்பம் விடுத்திருந்தார். அதில் அவர்கள் ‘பைபிள் சங்கத்தை’ (Bible Society) ஆதரிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அன்று மாலை,
வாழும் நாள் உவப்பினோடு
வனப்பினை எவர்க்கும் நல்கி
வீழும் நாள் அரவமின்றி
வீழ்ந்துறை விரைமலர் போல்
அவர் மரணத்திற்குள் மறைந்தார்.
படிமம்:Rhenius Grave.JPG

ரேனியஸ் ஐயரின் சரீரம், அடைக்கலாபுரம், தூய. யோவான் ஆலயக் கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே, சற்றுத் தள்ளி ஊரின் நடுவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒருவிதத்தில் அது நல்லதாகவும் தெரிகிறது. ஏனெனில் இன்று திருநெல்வேலியில் அது ஒன்றுதான் அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கும் அடையாளம். அவருடைய கல்லறையில், ‘என் ஆண்டவரிடம் நான் நீதியை நாடுகின்றேன். என் அலுவல் அவருக்கு உரியதாயிற்று’ என்று எழுதப்பட்டுள்ளது. டாக்டர். உல்ப் (Dr. Wolf) என்ற யூத மிஷனரி, 1833ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் திருநெல்வேலிக்கு வந்து ரேனியஸ் ஐயருடன் ஒரு வாரம் தங்கியிருந்தார். அவர் சொன்ன வார்த்தைகள், ‘பவுல் அப்போஸ்தலனுக்குப் பிறகு தோன்றிய மிகப் பெரிய மிஷனரி ரேனியஸ் ஐயர்’ என்பதாகும்.
- பேராசிரியர். சிட்னி சுதந்திரன்.

பேராசையின் பொருள் என்ன?



  • வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. அது நடந்து முடிந்து விட்டது. அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. அது நடந்து கொண்டே இருக்கிறது. அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் அது தவிர்க்க முடியாதது. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?


    ''நான் பிறக்கும்போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை. எந்த மாதிரியான தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை. அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை. அதைப்போல இறக்கும் போதும், அதே உணர்வுடன் தான் இறப்பேன்,'' என்று எண்ணுங்கள்.
    மென்சியஸ் என்னும் சீடன் தன குருவான கன்பூசியசிடம், 'இறந்த பிறகு என்ன நடக்கும்?' என்று கேட்டான். அதற்கு அவர், ''இதற்குப் போய் உன் நேரத்தை வீணடிக்காதே. நீ கல்லறையில் படுத்திருக்கும் போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம். இப்போது ஏன் நீ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?'' என்றார்.

  • பேராசை கொள்ளும்படி நீங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். அது ஒரு போதும் எந்த இன்பத்தையும் தராது. அது வன்முறையானது. அழிவு பயப்பது. புத்திசாலி மனிதன் பேராசை கொள்வதில்லை.மற்றவர்களுடன் போட்டி போடும் விருப்பமின்றி அவர் சாதாரணமாக வாழ்கிறார்.ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்பு உண்டு என்பதை அவர் அறிவார். அவர் ஒரு போதும் பிறருடன் ஒப்பிடுவதேயில்லை. ஒருபோதும் தன்னை மேல் என்றோ, கீழ் என்றோ அவர் எண்ணுவதில்லை.அவர் ஒருபோதும் உயர்வு மனப்பான்மையாலோ, தாழ்வு மனப்பான்மையாலோ துன்புறுவதில்லை.ரோஜாவை தாமரையுடன் எப்படி ஒப்பிட முடியும்? எல்லா ஒப்பீடுகளின் துவக்கமுமே தவறாக உள்ளன. ஒவ்வொரு தனி நபரும் தனக்கே உரிய தனியழகு கொண்டிருக்கிறார். இவற்றை ஒப்பிடுவது சாத்தியமில்லை. அப்படியானால் பேராசை கொள்வதன் பொருள் என்ன? உன்னை விட நானே உயர்வாக இருக்க வேண்டும் என்பதே பேராசையின் பொருள். மற்றவர்களை விட நான் உசத்தி என்பதை நான் நிரூபித்தாக வேண்டும். இதற்காக நீ ஏன் புத்தியை இழக்க வேண்டும்?

  • நீங்கள் உண்மையைவிடக் கற்பனையில் மிகுந்த விருப்பம் காட்டுகிறீர்கள். உண்மையைவிடப் பொய் மிக உண்மையாகத் தெரிகிறது. கற்பனை பலவகையில் உங்களுக்கு திருப்தியைக் கொடுக்கும்.உங்களுடைய கற்பனை உங்கள் அகங்காரத்திற்கு திருப்தி அளிக்கிறது. ஒரு குரு இறந்த பின் அவருக்கு பல சீடர்கள் உருவாகிறார்கள். (உதாரணம்:புத்தர், இயேசு..) அவர் இறந்த பின் நீங்கள் அவரைப்பற்றி நிறைய கற்பனை செய்கிறீர்கள். உங்கள் விருப்பம் போல அவரை வரைந்து கொள்கிறீர்கள். அவர் உயிரோடு உங்கள் அருகிலிருந்தால், அவர் உங்களுக்கு ஒரு சாதாரண மனிதராகவே தெரிவார்.

  • முட்டாள்தனமானவர்கள் மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்கள். எதையும் எதிர்க்க மாட்டார்கள்.ஜடமாகத் திரிவார்கள். வாழ்வின் சிறப்பை வாழ்ந்து பார்க்க முயற்சிக்க மாட்டார்கள். அவர்களிடம் தீவிரம் இருப்பதில்லை. இந்த சமூகம் நீ முட்டாளாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது.

  • தையும் உனக்குத் தேவை என்று ஆசைப்படும் முன் மும்முறை நினைத்துப்பார். உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.99% தேவையற்றதாகவே இருக்கும். அவை உன்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன. உனக்குள்ளே நீ இருக்க அவை நேரமோ இடமோ தருவதில்லை.

  • வாழ்க்கை ஒரு புதிர். ஏன் என்பதில்லை. குறிக்கோள் என்பது இல்லை காரணம் ஏதும் இல்லை. அது அப்படியே இருக்கிறது. எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு. அது அங்கே இருக்கத்தான் செய்யும். ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? எதற்கு தத்துவ விசாரத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டும்?நடனமாடலாமே? பாடலாமே? அன்பு காட்டலாமே? தியானம் செய்யலாமே? வாழ்க்கை என்கிற அதற்குள் இன்னும் ஆழ ஆழமாகப் போய்க் கொண்டிருக்கலாமே?

  • ஒரு குழந்தை நாள் முழுக்கக் கீழே விழுந்தாலும், இயல்பாகவே எழுந்துவிடும். அது கீழே விழுந்ததைப் பற்றியே நினைக்காது. ஆனால்,அதைப்போல நீங்கள் விழுந்தால், உங்களை மருத்துவ மனையில் தான் சந்திக்க வேண்டிவரும். ஏன்? ஒரு குழந்தை கீழே விழும் போது அது இயல்பாக விழுகிறது. விழுதலில் இருந்து சண்டை போட்டு தப்பிக்க நினைப்பதில்லை. அது அதன் போக்கிலேயே விழுகிறது. புவி ஈர்ப்புடன் போராடுவது இல்லை. ஒரு தலையணை எப்படி வெறுமே தரையில் விழுமோ, அப்படியே அது விழுகிறது. ஆனால்,நீங்கள் விழும்போது ஆரம்பத்திலேயே எதிர்க்கிறீர்கள். உங்களுடைய எல்லா தசைகளும், ஏன்,உங்கள் எலும்புகள் கூட இறுக்கம் அடைகின்றன. இப்படி இறுக்கமான தசைகள், நரம்புகள் மற்றும் எலும்புகள் கூட்டாக விழும்போது விரும்பத்தாகாத பல உடைவுகள் உங்கள் உடலில் ஏற்படுகின்றன. அதேபோல், ஒரு குடிகாரன் கீழே விழும் போது பார்த்திருக்கிறீர்களா?அவன் எந்த விதப் போராட்டமும் இல்லாமல், முழுமையாக விழுவான். அவனுக்கும் ஒன்றும் ஆகியிருக்காது. முக்கியமாக,அவன் போராடும் மன நிலையில் இல்லை. இதுதான் காரணம். காலையில், அவன் மிக இயல்பாக, சாதாரணமாக எழுந்து நடப்பான்.அவன் உடலில் உடைவோ வலியோ இருக்காது.

  • எப்படி கண்ணில் பட்ட மணல் இந்த அழகிய உலகைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல சிறிய சந்தேகம் அல்லது தயக்கம் இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம்,உங்களது மலரும் தன்மை அனைத்தையும் மறைத்துவிடும்.

  • பொதுவாக மனிதர்கள் கோபம், வெறுப்பு போன்றவைகளை தங்களிடம் சேர்த்து வைத்துக்கொண்டு,அந்தக் கெடுதல் உணர்வுகளை வெளியேற்ற தகுந்த சந்தர்ப்பத்தை தேடுகிறார்கள். ஏதாவது சிறு காரணம் போதும். அவை வெளிப்பட்டுவிடும்.

  • செயல்பாட்டில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குழுவுக்குத் தலைவனாக இருக்கவே விரும்புவான்.ஒவ்வொருவரும் அடுத்தவரை அதிகாரம் செய்யவும் அடுத்தவரை வழி நடத்திச் செல்லவும் ஆசைப் படுவான். அவன் மக்களுக்கு சொல்லும் அறிவுரையில் உண்மை அல்லது நன்மை இருக்கிறதா என்பது பற்றி அவனுக்கு அக்கறை கிடையாது. இங்கு எது முக்கியம் எனில், அப்படி எடுத்து சொல்வதால் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது. ஏனெனில் அவனை பிறர் புத்திசாலி என்று மதிக்கிறார்கள், என்று தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான். பல பேர் அவனை அண்ணாந்து பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆத்ம திருப்தி.

  • ஒரு மனிதர் சாவைக் கண்டு அஞ்சாதபோது, அவரை ஒரு செயலைச் செய்யச் சொல்லி வற்புறுத்த முடியாது. உங்களுடைய அச்ச உணர்வுதான் உங்களை அடிமையாக்குகிறது. உண்மையில்,நீங்கள,எங்கே மற்றவர்களால் அவமானப்படுத்தப் பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால் தான் மற்றவர்களை அடிமையாக்க முயற்சி செய்கிறீர்கள். ஒருவர் தைரியமாக இருந்தால் யாரையும் அச்சப்படுத்தவோ, மற்றவர்களால் அச்சுறுத்தப்படவோ மாட்டார்கள்.

  • அமைதியாய் இருங்கள்.ஆனால் அந்த அமைதியை ஒரு சோகமாக ஆக்கி விடாதீர்கள். அதை ஒரு சிரிப்பாகவும், நடனமாகவும் இருக்க விடுங்கள். அந்த அமைதியானது குழந்தைத் தன்மையுடன் கூடியதாக இருக்கட்டும். ஆற்றல் நிரம்பி வழிவதாக இருக்கட்டும். அது செத்துப்போன சவமாக இருக்க வேண்டாம்.

- ஓஷோ.
தொகுப்பு: தாமரைச்செல்வி.

அணு அண்டம் அறிவியல்- 35


அணு அண்டம் அறிவியல்- 35 உங்களை வரவேற்கிறது.
இந்தத் தொடரில் நிறைய பேர் நிறைய கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். Please give me some time..எல்லாவற்றிற்கும் மறுமொழி மூலமாகவோ இல்லை தொடரின் மூலமாகவோ பதில் சொல்ல முயற்சிக்கிறேன்..எனக்கு எல்லாம் விரல் நுனியில் இருப்பதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள். ஒரு அத்தியாயம் எழுதுவதற்கு சுமார் பத்து மூலங்களை REFER செய்து அவை சொல்வது சரிதானா என்று சரிபார்க்கவும் வேண்டியிருக்கிறது.

இயக்கத்தில் உள்ள பொருளுக்கு எவ்வாறு காலம் மெதுவாகச் செல்லும் என்று ஒரு உதாரணம் மூலம் பார்த்தோம். இப்போது வெளி எவ்வாறு சுருங்கும் என்று ஒரு உதாரணம் பார்க்கலாம். மறுபடியும் ஒரு ரயில்!


ஒரு பாலத்தின் இரு முனைகளில் A மற்றும் B என்று இரண்டு விளக்குகள் உள்ளன. இந்த பாலத்தின் வழியே ஒரு ரயில் செல்வதாக வைத்துக் கொள்வோம். ரயிலின் முன்பக்க முனை கம்பம் B யை அடைந்தவுடன் மின்சார சுற்று பூர்த்தியாகி B விளக்கு ஒளிரும். அதே மாதிரி ரயிலின் பின்பக்க முனை கம்பம் A யை அடைந்த உடனே மின்சுற்று பூர்த்தியாகி விளக்கு ஒளிரும். இந்த நிகழ்வை பிளாட்பாரத்தில் பாலத்தின் மையத்தில் நின்று கொண்டு இருக்கும் ஒருவர் கவனிப்பதாகக் கொள்வோம்.

(1 ) ரயிலின் நீளமும் பாலத்தின் நீளமும் சமமாக இருந்தால் கவனிப்பவருக்கு இரண்டு விளக்குகளும் ஒரே நேரத்தில் ஒளிரும்.

(2 ) ரயிலின் நீளம் பாலத்தின் நீளத்தை விட குறைவாக இருந்தால் ரயிலின் பின்பக்க முனை பட்டு விளக்கு A முதலில் எரிந்து விடும்.

(3 ) ரயிலின் நீளம் பாலத்தின் நீளத்தை விட அதிகமாக இருந்தால் ரயிலின் முன்பக்க முனை பட்டு விளக்கு B முதலில் எரியும்.

புரிந்ததா? NO DOUBT ? ஓகே.....

இப்போது ரயிலின் நீளமும் பாலத்தின் நீளமும் சமமாக இருப்பதாகவும் விளக்குகள் எரிவதை ரயிலின்உள்ளே உள்ள ஒரு ஆள் கவனிப்பதாகவும் கருதுவோம். ரயிலின் முன்பக்க முனை கம்பத்தில் பட்டு B விளக்கு எரிந்து அந்த ஒளி அவரை நோக்கி வருகிறது.ஆனால் ரயில் அந்த ஒளிக்கு எதிர்திசையில் நகர்ந்து கொண்டிருப்பதால் அந்த ஆள் கொஞ்சம் நகர்ந்து சீக்கிரமாகவே அந்த ஒளியைப் பார்த்து விடுவார்.ரயிலின் பின் பக்க முனை பட்டு எரிந்த விளக்கு A யின் ஒளியானது கவனிப்பவரை அடைவதற்குள் அவர் ரயிலின் வேகத்தால் அவர் முன்னே நகர்ந்து விடுகிறார். எனவே ரயிலின் உள்ளே இருப்பவருக்கு விளக்கு B யின் ஒளி முதலிலும் விளக்கு A வின் ஒளி சற்றே தாமதமாகவும் வந்து சேரும். சரி இப்போது ரயிலின் உள்ளே இருப்பவருக்கு இயற்பியல் விதிகள் அவர் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்வதற்கு அனுமதிக்காது. வெளியே உள்ள எந்த ஒரு பொருளின் துணையும் இல்லாவிட்டால் அவர் தான் நிலையாக இருப்பதாகவே எண்ணுவார். இப்போது அவருக்கு விளக்கு B யின் ஒளி முதலில் வந்து விடுவதால் கேஸ் (2 ) இன் படி அவர் ரயிலின் நீளம் பாலத்தின் நீளத்தை விட அதிகம் என்று எண்ணுவார்!!அதாவது இயக்கத்தில் இருப்பவர் ரயிலின் நீளத்தை அதிகமாக அளவிடுவார். ஆனால் வெளியே இருப்பவர் அதே ரயிலின் நீளத்தை குறைத்து அளவிடுவார்.

அதாவது நிலையாக இருக்கும் ஒருவருக்கு அவரைப் பொறுத்து இயக்கத்தில் உள்ள ஒரு பொருளின் நீளம் குறைந்திருப்பதாகத் தோன்றும்.
ஐன்ஸ்டீனின் இந்தக் கொள்கை SPECIAL THEORY OF RELATIVITY என்று அழைக்கப்படுகிறது. RELATIVITY என்று ஏன் சொல்கிறார்கள் என்றால் இந்த கொள்கைக்கு ஒருவரைப் பொறுத்து ஒருவர் நகர்ந்து கொண்டிருக்கும் இரண்டு கவனிப்பவர்கள் தேவைப்படுகிறார்கள். (ஏன் ஸ்பெஷல் என்று பிறகு பார்க்கலாம்) ஒருவருடன் ஒப்பிடும் போது இன்னொருவருக்கு எப்படி வெளியும் காலமும் வேறுபடுகின்றன என்று கணக்கிடுவது. நகரும் ஒருவருக்கு வெளி சுருங்கும் என்றால் அவர் சாண்ட்விட்ச் மாறி நசுக்கப்படுவாரா என்று கேட்பது மகா அபத்தம். நகரும் ஒருவரை நாம் யாருடனும் 'ஒப்பிட'வில்லை என்றால் அவர் அவரது FRAME OF REFERENCE இல் அவருக்கே உரிய வெளி மற்றும் காலத்தில் சந்தோசமாக இருப்பார். அவரது கடிகாரங்கள் ஒரு நொடிக்கு ஒரு நொடி என்ற ரேட்டில் நகரும். அவர் எடுத்துச் செல்லும் ஸ்கேல் சரியாக வேலை செய்யும். அங்கேயும் சன் டிவி. திருமதி செல்வம் அரைமணி நேரம் தான் ஓடும்.அங்கேயும் அவர் இதயம் நிமிடத்திற்கு 72 முறை தான் துடிக்கும். அவர் எந்த வித்தியாசத்தையும் உணர மாட்டார். இப்போது நகர்பவரை நிலையாக இருக்கும் ஒருவருடன் ஒப்பிடும் போது தான் பிரச்சனை. அப்போது இருவரின் கடிகாரங்களும் ஒத்துப் போகாது. இருவரின் ஸ்கேல்களும் ஒத்துப் போகாது.

வெளியே இருக்கும் ஒருவரும் (சீரான வேகத்தில்) பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவரும் தங்கள் கடிகார நேரங்களுடனும் தங்கள் வெளி அளவீடுகளுடனும் ஒருபோதும் ஒத்துப் போகமாட்டார்கள். ஆனால் இருவரும் ஒளியின் வேகத்தோடு மட்டும் ஒத்துப் போவார்கள்.

திடீரென்று நம்மை சுற்றி உள்ள எல்லாம் (நாம் உட்பட) இரண்டு மடங்கு பெரிதாகி விட்டால் அது நமக்குத் தெரிய வருமா? அதை நம்மால் உணர முடியாது. இரண்டு மடங்கு சூரியன், இரண்டு மடங்கு பெரிய பூமி, நாற்காலி, மரம், நாய், பூனை எல்லாமே இரண்டு மடங்கு!நம்மால் அறிய முடியாது. யாராவது ஒரு ஆள் மட்டும் விதிவிலக்காக அப்படியே நின்று விட்டால் அப்போது தான் அவருக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிய வரும். அதே மாதிரி காலமும் வெளியும் ஏதோ தில்லுமுல்லு செய்திருக்கின்றன என்பது நாம் நம்மை வேறு ஒரு F.O.R இல் உள்ள இன்னொரு ஆளுடன் ஒப்பிடும் போது தான் தெரிய வரும்.

சரி ரிலேடிவிடிக்கும் த்வைத சித்தாந்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்வதாக சொல்லியிருந்தேன்..அதை பார்த்து விட்டு
மேலே போகலாம்.


த்வைதம் ஹரி, அதாவது நாராயணனை ULTIMATE பரமாத்மா ,சர்வோத்தமன் என்கிறது. HIERARCHY எனப்படும் படிநிலைகள் அதில் உள்ளன. இந்த படிநிலைகளில் மனிதர்கள், தேவர்கள், பிரம்மா, லக்ஷ்மி என்று எல்லாரும் அடக்கம். இந்த படிநிலையில் கடைசியாக இறைவன் நாராயணன் வருகிறார். என்ன தான் படாத பாடு பட்டாலும் ஹரியின் இடத்தை யாராலும் அடைய முடியாது என்கிறது த்வைதம்.அதாவது ஜீவாத்மா ஒன்று பக்தியால் தன்னை உயர்த்திக் கொண்டு மேம்பட்ட படிநிலைகளை அடையலாமே தவிர ஒருபோதும் ஜீவன் பரமாத்மாவாக ஆக முடியாது. ரிலேடிவிட்டி ஒளிவேகத்தை ULTIMATE ஆக நிர்ணயிக்கிறது. என்னதான் கிட்டக் கிட்ட வரலாமே தவிர ஒளியின் வேகத்தை ஒரு பொருள் எட்டவே முடியாது என்கிறது. நாராயணன் மட்டுமே பரமாத்மா ஸ்தானத்தை வகிக்க முடியும். அதே மாதிரி ஒளி மட்டுமே ஒளிவேகத்தில் செல்ல முடியும்!

ஹரியைத் தவிர எல்லாரும் (லக்ஷ்மி உட்பட) காலத்தால் கட்டுப்பட்டிருக்கிறார்கள். ஹரி ஒருவன் மட்டுமே காலாதீதன்,காலத்தின் பிடியில் சிக்காதவன். சரி,நிலையாக இருந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்து முன்னேறும் ஒரு பொருளை பக்தியில் முன்னேறும் ஒரு சாதகனுக்கு உவமையாகக் கருதலாம். பக்தியில் நெகிழ்ந்து ஹரி அவனுக்கு குபேர பதவியைத்தரலாம்.குபேரனுக்கு அடுத்தபடியாக கணபதியின் இடம் வருகிறது. அடுத்த படிநிலையைபஞ்சபூதங்கள் எடுத்துக் கொள்கின்றன. அடுத்த படிநிலை சூரிய சந்திரர்களுக்கு.அதற்கு அடுத்த இடம்இந்திரனுக்கானது.அடுத்து கருடன்,ஆதிசேஷன்சிவன் ஆகியோர் வருகிறார்கள்.அடுத்த நிலையில்சரஸ்வதி தேவி. அவளுக்கு அடுத்து பிரம்மா. பின்னர் பிரம்மாவை விட உயர்ந்த இடத்தில் வாயுதேவர்எனப்படும் ஹனுமார். கடைசியில் சர்வோத்துமன் ஹரி. பொருள் வேகத்தை எட்ட எட்ட அதன் கால அளவு நிலையாக இருக்கும் ஒருவருடன் ஒப்பிடுகையில் மட்டுப்பட ஆரம்பிக்கிறது. அதே மாதிரி குபேரனின் உலகில் நம் பூமியை விட காலம் கொஞ்சம் மெதுவாக நகரலாம். எனவே அவன் ஆயிரம் வருடங்கள் உயிர் வாழலாம்.அடுத்து தேவர்களுக்கு காலம் இன்னும் மெதுவாக நகரலாம். மனிதனின் ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாளாக இருக்கலாம். அடுத்து சூரிய சந்திரர்களுக்கு இன்னும் காலம் மெதுவாக நகரலாம். பிரம்மாவுக்கு நாம் முன்பே சொன்னபடி காலம் ஆமை வேகத்தில் படு மெதுவாக நகருகிறது. நமக்கு ஒரு யுகம் கழியும் போது பிரம்ம லோகத்தில் ஒரு நிமிடம் கழிந்திருக்கும். என்னதான் காலம் மெதுவாக சென்றாலும் பிரம்மா கூட இறந்தே ஆக வேண்டும் என்கிறது த்வைதம். கடைசியில் ஒளிவேகத்தை எட்டுவது போன்றது ஹரியை அடைவது. அது அசாத்தியம். யாராலும் தொட முடியாத இலக்கு அது.பொருளுக்கு காலம் வேகத்துக்கு ஏற்ப மட்டுப்பட்டு ஒளிவேகத்தில் பொருளுக்கு காலம் தன் நகர்வை நிறுத்துகிறது.ஹரியும் காலம் இல்லாததால் அழிவேதும் இல்லாத பரம்பொருளாக திகழ்கிறான்.

சரி...ஒளியின் வேகத்தில் புறப்படும் ஒருவர் தனக்குப் பின்னே உள்ள ஒரு மணிக்கூண்டு கடிகாரத்தை திரும்பிப் பார்க்கிறார்.
அவருக்கு என்ன தெரியும்? இதற்கு பதிலாக வரும் TWIN PARADOX எனப்படும் இரட்டையர்கள் புதிரை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

சமுத்ரா

POSSIBLE COMPUTER PROTOTYPES OF THE FUTURE





Our present need for internet connectivity is so profound that secondary computer devices are bound to happen. This Sony Nextep archetype was developed and designed by Japanese software engineer Hiromi Kirikito to be worn as a bracelet. It’s a computer concept constructed out of a flexible OLED touchscreen to mimic something you’d find on Minority Report. Earmarked for the year 2020, it features streamlined capabilities such as a holographic projector (serving as the screen), pull-out keyboard panels, voice commands, geo-location responsiveness and social networking compatibility make the concept very plausible. These type of gadgets, condensed to the size of a watch, could possibly serve every modern-day purpose you can imagine―wallet, phone, laptop, camera, car/house key, navigation system, language translator and television. Ten years from now is not too far away, so how many of these do you think we’ll be buying?
Possible Computer Prototypes of the Future
Possible Computer Prototypes of the Future
Possible Computer Prototypes of the Future
Possible Computer Prototypes of the Future
Possible Computer Prototypes of the Future
Possible Computer Prototypes of the Future
Possible Computer Prototypes of the Future
Possible Computer Prototypes of the Future
Possible Computer Prototypes of the Future

Top 10 Most Famous People You Can Call



While your address book or Rolodex might be filled up with plenty of phone numbers of friends and family, you may want to add to your contacts the following world famous individuals who provide their phone number to the public.
Of course, to save on long distance charges, make sure to call them from your computer using an internet phone service and not from your land line. The most widely-known provider Skype has low monthly subscription plans and free video call capabilities. Other providers, including MediaRing Talkoffer free calls to landlines and mobile phones in many countries.
So, regardless if you want to call the leader of the free world or just your buddy in another state, you can definitely benefit from choosing to call from your computer instead of your home phone.
Now, here’s your VIP call list for your dialing pleasure:

10. Barack Obama

barack-obama
So you were sadly left off of the invitation list for the recent state dinner, and you’re not one for crashing parties. You can still communicate with the White House when you feel the need to express your support or dislike for how the President is spending your hard-earned tax dollars. To chat with President Obama or perhaps one of his aids, dial 202-456-1111.

9. The Pope

800px-Pope_Benedict_XVI
Feel compelled to confess your sins or just want to let Pope Benedict XVI know that you really like his stylish red shoes? Why not give His Holiness a jingle? Yes, the Pope and his clergy maintain a busy switchboard and welcome calls from the public. To dial the world’s smallest country’s most famous resident, dial 39-06-6982.

8. Queen Elizabeth

queenelizabethii
Since 1952, Queen Elizabeth has proudly reigned over the Commonwealth with a level of dignity not commonly found in many of today’s leaders. Undoubtedly, the Queen has stoically weathered countless challenges including the death of Princess Diana and a fire that nearly destroyed her beloved Windsor Castle. Yet, the Queen has remained steadfast in her dedication. Buckingham Palace is now readying itself for the 60th anniversary of her coronation in 2012. Want to wish the Queen congratulations on a job well done? Give her a call at 44-020-7930-4832.

7. The Dalai Lama

FE_DA_080328dalailama
The Dalai Lama travels the world to promote human values and religious understanding. He has won the Nobel Peach Prize, a U.S. Congressional Gold Medal and over 100 other awards, honorary doctorates, and honors. He’s also authored over 70 books. It’s fair to say that he’s busier than most of us. Even though he’s visiting dignitaries and foreign leaders most of the time, he still maintains an office in India, the country that took him in as a refugee half a century ago. If you’d like to say, “Hi” to His Holiness, the 14th Dalai Lama of Tibet, you can call him at 91-1892-221343.

6. Santa Claus

384770034_920527f03d_b
Tired of the kids telling you what they want this Christmas? Let them call in their wish list directly to Santa instead. As a free holiday service, the team at TollFreeForwarding.com offers a handy holiday service called Tel Santa. The free service provides users with a toll-free number to call and record what they want for Christmas. Then, the voice-recorded message is sent via email so that you can store it on your computer, iPod, or any device that plays music files.

5. Bill Gates

specialreports_2edb.bill_gates
Though he’s no longer manning the helm of Microsoft, this self-professed nerd is still making news with his foundation that is focused on helping impoverished children throughout the world. If you’d like to talk with him about receiving a grant or partnering with him on a global health program, give him a call at 206-709-3100.

4. Tiger Woods

alg_tiger-woods
Ok, Tiger isn’t even taking calls from State Troopers right now. And, he’ll probably be sorting out problems at home for quite some time. However, you can probably get a message to him via the PGA National Headquarters switchboard at 904-285-3700.

3. Oprah Winfrey

Oprah-Winfrey
Want to secure your seat in the audience for one of Oprah’s giveaway shows? Have an idea for a show that you’re sure she’ll love? If so, try calling her at her studio in Chicago at 312-633-1182.

2. Bono

1bono
As the leader of one of the world’s most famous and long-lasting rock bands, Bono has become equally known for his music and his dedication to philanthropy. If you’d like to personally thank him for all of his efforts, you can communicate with him through his manager’s office in Dublin at 01 6777330.

1. Donald Trump

trump-video-phone1
Do you think you have what it takes to be the next “Apprentice”? Maybe, you should give “The Donald” a ring. Try him in his New York office at 212-832-2000.
Julie Trade, Sourdough Communications, a Scottsdale PR Agency.