Search This Blog

Showing posts with label Sweet Mid Tamil Songs. Show all posts
Showing posts with label Sweet Mid Tamil Songs. Show all posts

Monday, October 24, 2011

நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்


திரைப் படம்: உணர்ச்சிகள் (1976)


பாடியவர்கள்: S P B , ஜானகி

நடிப்பு: கமல், ஸ்ரீவித்யா

இயக்கம்: R C சக்தி

இசை: ஷ்யாம்
லலல்லா

ஹே ஹே

லலல்லா

லலல்ல லல்லா

ஆஹா

லலல்ல லல்லா

ஹேஹே

லலல்ல லல்லா

ஆஹா

லலல்ல லல்லா

ஹேஹே

லல்லல் லல்ல லல்லலல்

லல்லல் லல்ல லல்லலல்




நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்

நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ

கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளிவீச

வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்

வாட்டிடும் ஆசைதீர நீ தொட வேண்டும்

தாபத்தை நானே சொல்லவோ



கனிவோடு காதல் கைதொட்ட வேளை

கல்யாண மேடை அலங்கரிக்காதோ

இதயத்தின் பாரம் இறங்கிடும் நேரம்

இருமனம் கூடும் உணர்ச்சியில் ஆடும்

வரும் வெள்ளம் இளம் உள்ளமும்

ஒரே வேகமாய் ஓடாதோ

அதன் சங்கமம் பெறும் மங்கலம்

உயிர் கீதமாய் பாடாதோ



நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்

நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ

கொஞ்சும் மொழி பேசி பெண்மை ஒளிவீசி

வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்

வாட்டிடும் ஆசைதீர நீ தொட வேண்டும்

தாபத்தை நானே சொல்லவோ



துணை தேடும் பாவை உனை நாடும் போது

தூண்டிலில் மீனாய் துடிப்பதும் ஏனோ

பருவத்தின் ஏக்கம் துளிர் விடும் போது

உறவினைத் தேடும் உணர்ச்சிகள் மோதும்

மலர் மேடையில் மது ஓடையில்

புனல் ஆடுவோம் வாராயோ

உனைக் கண்டதும் மனம் சொன்னது

சுகம் தேடுவோம் வாராயோ



நெஞ்சத்தில்

போராடும் எண்ணங்கள்

நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ

கொஞ்சும் மொழி பேசி

பெண்மை ஒளிவீச

வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்

வாட்டிடும் ஆசைதீர நீ தொட வேண்டும்

தாபத்தை

நானே சொல்லவோ

Read more: http://asokarajanandaraj.blogspot.com/2011/10/blog-post_07.html#ixzz1bfY26w4x

Tuesday, October 18, 2011

உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்...உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்


கர்னாடக இசையுடன்  SPBயின் இனிமையான் குரலில் நல்லதொரு பாடல்



படம்:   பெண் ஒன்று கண்டேன்   (1974)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: முத்துராமன், பிரமிளா
இயக்கம்: கோபு


உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்...

உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்...

உன் இள நடை மலையமாருதமாகும்...

உன் மலர் முகம் சால மதியெனக் கூறும்...



நீ ஒரு ராக மாளிகை...உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...

நீ ஒரு ராக மாளிகை....

நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி...இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி..

உறவுக்கு உதவிடும் சரசாங்கி...இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி..

குரல் வழிப் பிறந்தது அம்சத்வனீ...

உன் குரல் வழிப் பிறந்தது அம்சத்வனீ...

உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி...



நீ ஒரு ராக மாளிகை...உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...

நீ ஒரு ராக மாளிகை...
நான் வாவெனெ அழைக்கையில் விரைந்தோடி வந்து தழுவிடும் தேவ மனோஹரி...

யாரபிமானமும் தேவையில்லை இந்த அகிலத்தில் உன் போல் பாவையில்லை...

நீ ஒரு ராக மாளிகை...உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...

நீ ஒரு ராக மாளிகை...
நீ எனக்கே தாரம் என்றிறுக்க உனை என் வசம் தாவென நான் கேட்க...

நீ எனக்கே தாரம் என்றிறுக்க உனை என் வசம் தாவென நான் கேட்க...

என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்ஜனியே...

நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்ஜனியே...

இந்த நாயகன் தேடிடும் நாயகியே.....


Monday, October 17, 2011

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...(மகிழ்ச்சி)


வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...(மகிழ்ச்சி)

படம்: பருவ காலம்  (1974)
இயக்கம்: ஜோஸ் ஃபெர்னாண்டோ
நடிப்பு: கமல், பிரமிளா
இசை: தேவராஜன்
பாடியவர்: மாதுரி



http://www.divshare.com/download/13423607-101

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் இளமை ராகம்...

பாட வந்தது பருவ காலம்...

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் இளமை ராகம்...

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...



பாடும் பறவை ஆயிரம் நடுவே...

நானும் ஒரு பறவை...

பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம்...

தந்தேன் எனதுறவை...

எங்கோ இருக்கும் மனிதர் யாரும்...

இங்கே வரவேண்டும்...

இனி எல்லா நலமும்...

எல்லா வளமும் எவரும் பெறவேண்டும்...

எவரும் பெறவேண்டும்...

ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் இளமை ராகம்...

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...



முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து...

சிந்தும் புன்னகையோ...

அலை மோதும் அருவி என்னைப் போலே

இளமைக் கன்னிகையோ...

அன்னை மடியில் பிள்ளை இருந்தால்...

அன்பு பெருகாதோ...

கொடி ஆசைக் கொண்டால் தழுவும் பூவின் உள்ளம் உருகாதோ..

உள்ளம் உருகாதோ..

ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் இளமை ராகம்...

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...

பருவ காலம்...


Read more: http://asokarajanandaraj.blogspot.com/2010/12/blog-post_1315.html#ixzz1b11ClHZM