Search This Blog

Showing posts with label Jokes. Show all posts
Showing posts with label Jokes. Show all posts

Friday, March 2, 2012

Thursday, February 2, 2012

THE SECRET TO A HAPPY MARRIED LIFE.


Once I was asked by my friend,
"What is the secret behind your happy married life?"
 
I said,
"You should share responsibilities with due love and respect each other.
Then absolutely there will be no problems."
   

He asked,
"Can you explain?"
 
I said,
"In my house, I take decisions on bigger issues where as my wife decides on smaller issues.
We do not interfere in each other's decisions."
 
Still not convinced, the friend asked me,
"Give me some examples".
 
I said,
"Smaller issues like,
Which car we should buy,
How much amount to save,
When to visit the super market,
When to go on vacation,
Which sofa,
Air conditioner,
Refrigerator,
Monthly expenses,
Whether to keep a maid or not etc.
Are all decided by my wife.
I just agree to it "
 
He asked,
"Then, what is your role?"
 
I said,
"My decisions are only for very big issues.
Like whether America should attack Iran,
Whether Britain should lift sanctions over Zimbabwe,
Whether to widen the Sri Lankan economy,
Whether Sanath Jayasuriya  should retire from cricket etc., etc. and
Do you know, my wife, NEVER, objects to any of these decisions".


Nothing is more precious than peace...

Wednesday, January 25, 2012

Funny Lesson


A woman goes to the Doctor, worried about her husband’s temper and
threatening manner.
The Doctor asks: "What's the problem?
The woman says: "Doctor, I don't know what to do. Every time my husband
comes home drunk, he threatens to slap me around."
The Doctor says: "I have a real good cure for that. When your husband
comes home drunk, just take a glass of water and start swishing it in
your mouth. Just swish and swish but don't swallow it until he goes to
bed and is asleep."

Two weeks later the woman comes back to the doctor looking fresh and
reborn.

The woman says: "Doctor that was a brilliant idea! Every time my
husband came home drunk, I swished with water. I swished and swished,
and he didn't touch me!
How does the water do that?"
The Doctor says: "The water does it all. It’s keeping your mouth shut
that does the trick...."
  
 

Tuesday, December 27, 2011

Watch think and laugh








மேடம் நா ஒரு வருஷமா ட்ரை பண்றேன்..



லைன் கெடைச்ச சந்தோஷத்துல எனக்கு பேச்சே வரல...

ஏன்பா பத்து வருஷத்துக்கு முன்னால ஒரே ஒரு பெப்சி உமா வாரத்துல ஒரே ஒரு நாளு நேயர்களோட ஃபோன்ல பேசி மகிழ்விச்சாங்க... அப்ப இந்த effect ல்லாம் குடுத்தது  வாஸ்தவம். இப்பதான் இத 24 மணி நேர சேவையாவே ஒரு 20 சேனல் பண்ணிகிட்டு இருக்காங்களே. இன்னும் அதே effect ah மாத்தாம குடுத்துக்கிட்டு இருக்கீங்களே இது நியாயமா? சில பேரு டெய்லி போன் பண்ணி "ஹை லைன் கெடச்சிருச்சி"ன்னு டெய்லி ஷாக் ஆவுறாய்ங்க. இப்பலாம் லைன் கெடைக்கலன்னாதாண்டா நீங்க ஷாக் ஆவனும்

காலங்காத்தால 7 மணிக்கு அலாரம் வச்சி எழுந்து ஆரம்பிக்கிற இவிங்க அலும்பு நைட் 9  மணிக்கு தான்பா முடியுது. "காலை தென்றல்"   "வாழ்த்தலம் வாங்க"    "வடை திங்கலாம் வாங்க"   "நாங்களும் நீங்களும்"   "நீங்களும் பக்கத்து வீட்டு காரரும்"   "குழந்தைகளுக்காக"  "மகளிர்க்காக "   "அக்காவுக்காக" "ஆயாவுக்காக"   "ஹலோ ஹலோ"    "ட்ரிங் ட்ரிங்"   "டொய்ங் டொய்ங்"  ன்னு ப்ரொக்ராமோட பேரும் ஆளும் தான மாறுறாய்ங்ளே தவற போட்ட மொக்கையே தான் 24 மணி நேரமும் போடுறாய்ங்க.

இந்த ப்ரோக்ராம்கள host பண்ற ஆளூகள பாக்கனுமே.. சென்னையிலயே
பொறந்து வளர்ந்து தமிழ் பேச தெரியாது போல பேசி உயிரெடுக்கும் ஒரு சுமார் ஃபிகர்க்கு அரை இன்ச்கு மேக்கப்ப போட்டுவிட்டு நிக்கவச்சிருவாய்ங்க. அதுக்கு pair ah ஒருத்தன போடுவாய்ங்க பாரூங்க...அவரு தலை சீவாம ஒரு கட்டம் போட்ட சட்டைய போட்டுகிட்டு ஒரு தூங்கி எந்திரிச்சி effect la இருப்பான். கேசுவலா இருக்காராமா...

காலைங்காத்தால 7 மணி ஆனா வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சிருவாய்ங்க. எது எதுக்கெல்லாம் வாழ்த்து சொல்லலாம்னு இவைங்கள பாத்து தான் கத்துக்கனும். திடீர்னு ஒருத்தன் போன் பண்ணீ "நாளைக்கு தனது இருபத்து அஞ்சாவது நினைவு தினத்தை கொண்டாடும் எங்கள் கொள்ளூ தாத்தா பிச்சாண்டிக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்" ன்னு சொன்னா கூட "கால் பண்ணியதற்கு மிக்க நன்றி.. நாளை இருபத்தைஞ்சாவது நினைவு தினத்தை கொண்டாடும் உங்கள் கொள்ளூ தாத்தா பிச்சாண்டிக்கு எங்களின் சார்பாகவும் எங்கள் ..பீம்..டிவியின் சார்பாகவும்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. இதோ உங்களுக்கான பாடல் பாத்து எஞ்சாய் பண்ணுங்கம்பாய்ங்க. "அட்ரா அட்ரா நாக்கு மூக்க நாக்கு மூக்க"

கரெக்டா மணி 10 ஆயிருச்சின்னா உடனே மகளிர கவர் பண்ண ஆரம்பிச்சிருவாயிங்க ஏன்னா அந்த டைம்ல அவங்க மட்டும் தான் வீட்டுல இருப்பாங்க.ஆனா அவங்களூக்கு ஒரு கண்டிஷன். அவங்க போன் பண்ணா எதாவது டிப்ஸ் குடுக்கனும். டிப்ஸ் குடுத்தா தான் பாட்டு போடுவாங்க. இல்லன்னா song தான் போடுவாங்க அவங்க டிப்ஸ்குடுப்பாங்க பாருங்க... "நைட்டு அரைச்ச தோசை மாவ ஃப்ரிட்ஜ்ல வச்சிருந்தா அது கெட்டுபோகம அப்புடியே இருக்கும்... காலைல நாம தோசை செஞ்சி சாப்புடலாம்" னு ஒரு அம்மா ஒரு உலக மகா டிப்ஸகொடுப்பாங்க. அதுக்கு இதுங்க  "wow... இவளசூப்பரான டிப்ஸ் குடுத்த உங்களுக்காக ஒரு சூப்பர் பாடல் பாத்து எஞ்சய் பண்ணூங்க"

இந்த ப்யூட்டி டிப்ஸ் தான் இதுல எல்லாம் லைஹைட்.. "டெயிலி கடல மாவ மூஞ்சிலதடவி அரைமணி நேரம் வச்சிருந்து கழுவனும்.. இப்புடியே ஒரு மாசம் பண்ணா...."  இப்புடியே ஒரு மாசம் பண்ணா வீட்டுல உள்ள கடலை மாவுதான்டா காலி ஆகும். கருமம் புடிச்சவிங்களா...வேற ஒண்ணும் ஆவாது. எவன் கேக்க போறான்னு வாயில வர்றத அடிச்சி விடுறது

திடீர்னு பாத்தா ஒரு பாட்டி போன் பண்ணுது... இவியிங்க அதுகிட்ட இன்னிக்கு என்ன கொழம்பு வச்சீங்க ஆண்டின்னு கேக்குறாய்ங்க" அதுக்கு அவங்க  "சாம்பார் கண்ணு" ங்குது..உடனே இவியிங்க "போங்க ஆண்டி முந்தாநாளூ கூட இதே கொழம்பு தானே வச்சீங்கங்குறான். ஆக அந்த பாட்டி டெய்லி ஃபோன் பண்ணி என்ன சமைக்கிறோம்ங்கற வரைக்கும் இவிங்களுக்கு update குடுத்துகிட்டு இருக்கு. அப்புறம் ஏண்டா தமிழ்நாட்டுல இத்தனை நெட்வொர்க் வராது.

அப்புறம் சாயங்காலம் ஒரு 5 மணி ஆயிருச்சின்னா "அடிக்கடி கடி கடி" ன்னு அங்கங்க புடிச்சி கடிச்சி வச்சிருவானுக. வெறி நாய் கடிய கூட தாங்கிகலாம் போல.. கடி ஜோக் சொல்றோம்ங்கற பேர்ல இவனுங்க கடிய தாங்க முடியல... கடி ஜோக்கு உண்டான  மரியாதை போச்சேடா உங்களால.. (படிக்காதவன் விவேக் Slang)..

கடைசியா நைட்டு வருவாய்ங்க... காதலர்களுக்காக... அதுலயும் ஸ்பெஷலா ஒரு question ஒன்னு டெய்லி ரெடி பண்ணிகிட்டு வருவாய்ங்க. இந்த ப்ரோக்ராமுக்கு அதிகமா வர்றவிங்க யாருன்னு பாத்தா "ரெண்டு நாள் முன்னாடி லவ் பண்ண ஆரம்பிச்சவிங்க..போன வாரத்துலருந்து லவ் பண்ண ஆரம்பிச்சவியிங்கலாதான்  இருக்கும். மிஞ்சி மிஞ்சி போன போன மாசமா இருக்கும்.ஒரு ஆர்வ கோளாரு. எப்பயாச்சும் ஒருத்தரு ரெண்டு பேரு ஒரு நாலு வருஷமா லவ் பண்றேன்.. ஒரு ஆறு வருஷமா ல்வ் பண்றேன்ன்னு சொல்லுவாங்க... அதுக்கு நம்மாளுக "wow.. superb..உங்க ஆளு  என்ன பண்றாங்க?" ம்பாங்க. அதுக்கு "நான் என்னோட wife ah தான் லவ் பண்றேன்... கல்யாணம் ஆயி நாலு வருஷம் ஆச்சி". நாயி வேற யாரயாச்சும் பாத்துச் சின்னா ராத்திரி வீட்டுல செருப்படி நாலு விழுகும். அதுக இப்புடி ஃபோன் பண்ணி மனச தேத்திக்கிறாங்க... ஒரே குஸ்டமப்பா...

ஆமா இதெல்லாம் நா என் உங்க கிட்ட சொல்லிகிட்டு இருக்கேன்.. வேற என்ன
பண்றது நா பொலம்புறதல்லாம் கேக்க உங்கள விட்டா வேற யாரு இருக்கா...
நா உங்க தம்பி மாதிரி...அவ்வ்...அவ்வ்....



கரு. விக்னேஷ் ஜானகிராமன் 

Monday, December 12, 2011

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்...

அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!
$$$$$$$$$$$$$$$$$$$$
பாடகர்:தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா 
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!
$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????
$$$$$$$$$$$$$$$$$$$$
குளிர்காலத்துல ஆபரேஷன் பண்றதா இருந்தா டாக்டருக்கு ரொம்ப இஷ்டம்...."
"ஏன்?"
"ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்னால நடுங்குதுன்னு சொல்லி சமாளிச்சுறலாமே!"
$$$$$$$$$$$$$$$$$$$$$
"என்னடா! கையில பைனாகுலர் எடுத்துகிட்டு எங்கே போறே?"
"நான் என் "தூரத்து" சொந்தக்காரர் ஒருத்தர பாக்கப்போறேன்."
$$$$$$$$$$$$$$$$$$$$$
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது,நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
$$$$$$$$$$$$$$$$$$$$$
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$
"ஏண்டி டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல..."
"ஆமாம்...அதுக்கென்ன...?"
"நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "ஓ"போட்டாங்க...
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
முதலாளி: இந்தக் கம்பெனியில்"நைட் வாட்ச் மேன்"வேலை கேட்கறியே,உனக்கு அனுபவம் இருக்குதா?
வேலைக்கு வந்தவன்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க.இரவுல லேசா சின்ன சத்தம் கேட்டாக் கூட நான் விழித்துக் கொண்டு விடுவேன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நர்ஸ்:ஆப்ரேஷன் தியேட்டர்ல டெலிபோன் வைக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்?
டாக்டர்: ஏன்?
நர்ஸ்: இப்ப அதுவும் டெட் ஆய்டுச்சு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பொதுக் கூட்ட மேடையிலே ஏன் தீப்பிடிச்சிருக்கு?
தலைவர் அனல் பறக்கப் பேசினாராம்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
போலீஸ்:!!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி: ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?
கணவன்: முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க...
வணக்கம்தான் சொல்லிட்டேனே...வெண்ணே மறுக என்ன வணக்கம் நொனக்கம்னு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
யாருங்க அந்த மகாலட்சுமி ?
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா? 
இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா.
$$$$$$$$$$$$$$$$$$$$$$
நீதிபதி:ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?
கபாலி:என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான் அதான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே?வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.





Thursday, December 1, 2011

Man O Man !


Man O Man !
 
When he is without money, he eats vegetables at home;
When he has money, he eats vegetables in a fine restaurant.
 
When he is without money, he rides bicycle to work;
When he has money, he rides bicycle to exercise.
 
When he is without money, he walks to eat food;
When he has money, he walks to burn food.
 
When he is without money, he wishes to get married;
When he has money, he wishes to get divorced.
 
When he is without money, his wife becomes secretary; 
When he has money, his secretary becomes wife.

cheers
Mohan Ranasinghe


Tuesday, November 29, 2011

இதுக்கு என்ன சொல்றீங்க?


 
ஒரு  இங்கிலீஷ் டிக்சனரி கூட இந்த COMPLETEஎன்ற வார்த்தைக்கும்  FINISH என்ற வார்த்தைக்கும் என்ன வேறுபாடு என்று சொல்லவில்லை.  நானும் பலரிடம் கேட்டு பார்த்தேன். அவர்கள் எல்லாம் இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம்தான் பெருசா வித்யாசம் ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இருந்தும்  எனக்கு ஒன்று  மட்டும் நிச்சயமாகத் தெரியும்

உங்களுக்கும் தெரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்   ......

இருந்தாலும் மனதில் பட்டதை சொல்லுகிறேன்..
நீங்கள் ஒரு சரியான,  நல்ல குணமுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்கை COMPLETE...

அதேசமயம்,
நீங்கள் ஒரு குணக் கட்டையான ( நல்ல குணம் இல்லாத பெண்  என்று அர்த்தம்) பெண்ணைத்  திருமணம் செய்துகொண்டால் உங்கள் வாழ்கை FINISH...
அதே மாதிரி... கணவனும் மனைவியும் எதிர் நோக்கு எண்ணங்களைக் கொண்டவர்களாக இருந்தால் .... COMPLETELY FINISHED
Join Only-for-tamil
 

Thursday, November 17, 2011

Goodbye Prayer



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wednesday, September 28, 2011

சிந்திச்சுப் பாத்து செய்கையை மாத்து... Lovely Tamil Jokes




================================== 
புதிதாக மணமான‌ கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவருடைய அலமாரியை திறந்து பார்ப்பதில்லை என்று.

30 ஆண்டுகள் உருண்டோடின..

ஒருநாள் மனைவி தன்னுடைய அலமாரியை சுத்தம் செய்யும் போது ஒரு மூலையில் 3 புளியங்கொட்டைகளும், சில்லறையாக 500 ரூபாய்க்கு நோட்டுகளும் இருந்தன.

ஆச்சர்யம் அடைந்த மனைவி தன் கணவனிடம் இது குறித்து கேட்டாள். கணவன் சொன்னான்..

" அன்பே என்னை மன்னித்துவிடு.. ஒவ்வொருமுறை திருட்டுத்தனமாக உன் அலமாரியைத் திறக்கும்போதும் ஒரு புளியங்கொட்டையை போட்டு வைப்பேன்.."

" பரவாயில்லை உயிரே..! 30 வருடங்களில் மூன்றே மூன்று புளியங்கொட்டைகள் தானே.. அது என்ன பத்தும் ஐம்பதுமாக ரூபாய் நோட்டுகள்..?"

" புளியங்கொட்டைகள் சேர சேர கடையில் விற்று காசாக்கிவிடுவேன் கண்ணே..!" 
==========================================
மார்க்கெட்டிலிருந்து வீட்டுக்கு காய்கறி வாங்கிப்போகும் ஒருவர் வெண்டைக்காய்களை உடைத்துப் பார்த்து முற்றலாக இருந்தால் கீழே போட்டுவிட்டு சென்றார்.. எதிரில் வந்த நண்பர் ஆச்சர்யம் தாங்காமல் ஏனென்று கேட்டார்..

என்ன சார் பண்றது..? உடைச்சு பார்த்து வாங்கினா கடைக்காரன் திட்டறான்.. உடைக்காம வாங்கினா வீட்டுக்காரி திட்டுறா..!
==========================================

 சின்னா ஆசிரியர்கள் ஓய்வறை வழியாகப் போனபோது ஒரு ஆசிரியர் கூப்பிட்டார்..

சின்னா, எனக்கொரு டீ வாங்கி வா..

மற்றொருவர் " எனக்கும்.. க்ளாஸை நல்லா கழுவிட்டு டீ போட்டு வாங்கிட்டு வா.."

சின்னா 2 தேனீர் குவளைகளுடன் திரும்பினான்..

" யார் சார் கழுவின க்ளாஸ்லே டீ கேட்டது.. இந்தாங்க...!"

==========================================
வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில் இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிட்டு

" பாட்டி, இன்னும் 1 மாசத்துக்கு மாடிப் படி ஏறக்கூடாது.." என்று சொல்லிப் போனார்.  

ஒரு மாதத்துக்குப் பின், மாவுக்கட்டை மருத்துவர் அகற்றும் போது பாட்டி கேட்டாள்..  

டாக்டர்.. இனி படியில் ஏறலாமில்லையா..?  

ஓ.எஸ்.. தாராளமா..  

நன்றி டாக்டர்.. தண்ணி பைப்பை புடிச்சி மாடி ஏறுவது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு..!!!  
===================================================

பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக 2 கோப்பைகளுடன் திரும்பிய மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான்..  

சின்ன கோப்பை எதுக்கு கிடைச்சது..?  

கர்நாடக சங்கீதம் பாடினதுக்கு..  

பெருசு எதுக்கு குடுத்தாங்க..?  

பாட்டை நிறுத்தச் சொல்லி...!!!
======================================= 
 http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQbLInemFKWrAkAWNC2sq2uwDN2nevuLLJ9xDoo8QHjj2C_5HUs
மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். “”பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்” என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.

கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: “நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது"  
அதற்கு தவான், “உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்” என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.

இதில இருந்து என்ன தெரிஞ்சுக்கிறீங்க?  

மனுஷனுக்கு புறத் தோற்றம் முக்கியமில்லைனா? இல்லீங்கண்ணா .... 
சாதிக்கணும் , சாதிச்ச மனுஷனுக்கு ஆடை ஒரு பெரிய விஷயமா கிடையாது.. அது வரைக்கும் , நீங்க நீட்டா  டிரஸ் பண்ணுங்க, நச்சுன்னு! அதே நேரத்தில, இலக்கு முக்கியம்.. அது ரொம்ப பெருசா இருக்கட்டும்..!

மனசை எப்போவும் வாட விடாதீங்க.. மலர்ச்சி இருந்துக்கிட்டே இருக்கட்டும்.. நாம எல்லாம் சாதிக்கப் பிறந்து இருக்கோம் , ஏதோ வந்தோம் போனோம்னு இருக்க வேண்டாம்..!


Read more: http://www.livingextra.com/2011/09/blog-post_3713.html#ixzz1ZDexb7tz