Search This Blog

Thursday, January 19, 2012

.....என் சிந்தனைகள் சில......




கைதட்டல் வேண்ட
பொய்யின் அம்மணத்தை
சபைகளில் படமிடுகிறோம்.
இரத்தின ரவிக்கை உடுத்தி
உண்மைகளை ரகசிய பெட்டிகளில்
அடைத்து விடுகிறோம்.
சூனிய பொய்களுக்கு இருக்கும் சுதந்திரம்
சுந்தர உண்மைகளுக்கு இல்லை.


Join Only-for-tamil


வீட்டுக்குள் அடைந்து கிடந்தால்
இரண்டு இன்ச் இல்லாத
ஈக்கள் கூட உன்னை
இம்சைப் படுத்தும்.
Join Only-for-tamil
தன் சிறிய குவளையில்
ஒரு துளி உயிர் மிச்சமிருக்கிறது
முறிந்த கால்களுடன் மீண்டும்
எழுத்து ஓட முயற்சிக்கிறது.
விரல் விபத்தில் நசுக்கப்பட்ட
எறும்பு ஒன்று...
காயம் பட்ட மனிதன்
கட்டிலை கல்லறையாக்கி கொள்கிறான்.


Join Only-for-tamil


அடுத்த யுகத்தின் அறிவியல் புரட்சி
அதன் முதிர்ச்சியில்
ஆராய்ச்சி கூடங்களிலிருந்து
அனுப்பப்படுகிற ரசாயனக் காகிதங்களில்
அச்சடிக்கப் படலாம்
மரங்களின் வரலாறு....
மாணவர்கள் படிக்க...
Join Only-for-tamil
ஒரு குவளை நிறையத் 
தேனை அள்ளிக் 
குடிப்பதை விட
சொட்டுத் தேனில் தான்
சொர்க்கம் இருக்கிறது.


Join Only-for-tamil


எரிந்த போன என் ஆதித் தமிழ் வார்த்தைகளின்
சாம்பல் எடுத்து திருநீறு தர முயல்கிறேன்.
மழுங்கிப்போன மசாலா வார்த்தைகளில்
சாம்பார் செய்து தின்பண்டம் தரக் கேட்கிறார்கள்.
Join Only-for-tamil
உன் முயற்சிகள் தோல்வியடைந்தால்
உன் அறிவீனத்தை ஏற்றுக் கொள்வதை விட்டு
சூழ்நிலை காரணங்களை சாடுவது
சரியாகாது.


Join Only-for-tamil


வெற்றி கிடைத்தபின்
உறங்குபவனைவிட
வெற்றி கிடைக்கும் வரை
உறங்காதவனைத்தான்
நீ ஊக்கப்படுத்த வேண்டும்.
Join Only-for-tamil
தன் வாழ்க்கை என்பது
அடுத்தவனின் நலனில்தான்
ஆரோக்கியமடைகிறது
என வாழ்பவன்
மரணத்தைக் கடந்துவிடுகிறான்.


Join Only-for-tamil


எதார்த்தமாக வெற்றி அடைந்தவனுக்கு
மறுபடியும் ஒரு தோல்வி வரக்கூடும்.
மறுபடியும் மறுபடியும் தோல்வி அடைகிறவனுக்கு
நிச்சயம் ஒரு வெற்றி வந்தே தீரும்.
Join Only-for-tamil
உன் வருமானத்தில் ஐம்பது சதவீதத்தை
எப்படி செலவிட வேண்டுமெனக் கணக்கிட்டு வை.
மீதி ஐம்பது சதவீதம்
உனக்கே தெரியாமல் செலவழிந்துவிடும்.


Join Only-for-tamil


நேற்றைய துன்பம் எண்ணி வருந்துகிறோம்.
வேடிக்கை என்னவென்றால்
நாளைய விளைச்சலுக்காக
வைத்திருக்கும்
இன்றைய விதைகளையும்
அது விழுங்கிவிடுகிறது.
Join Only-for-tamil
பிச்சை எடுக்கும் வலது கையை விட
இடது கை எவ்வளவோ பரவாயில்லை.


Join Only-for-tamil


கவிதையின் கடைசி வரியில் தான்
ஒரு கவிஞனின் கர்ப்பவலி 
அதிகமடைகிறது... 


Join Only-for-tamil

அன்புடன்
தமிழ்தாசன் 

No comments:

Post a Comment