Search This Blog

Tuesday, January 28, 2020

கங்காவதரணம் என்ற சிவபெருமானின் நூற்றியெட்டாவது தாண்டவம்


இந்த படத்தில் உள்ள நடராசர் மஹா தாண்டவம்.


கங்காவதரணம் என்ற சிவபெருமானின் நூற்றியெட்டாவது தாண்டவம். இக்கரணம் பரதநாட்டி யத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர்.

தாண்டவம் ஆடும் முறை

ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி, உடலைப் பின்புறமாக வளைத்து,கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்காவதரணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த அற்புதமான சிற்பம் கும்பகோணம் ஸ்தபதி ஒருவரிடம் இருந்ததாகவும் பின்னர் Honesty Engineers &contractors என்பாரிடம் விற்கப்பட்டு அயல் நாடு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் மூலம் கிடைத்த படம் இது. நுட்பமான யோகக்கலையை விளக்கும் கடினமான தாண்டவம்.

ஒரு கையில் தீ, ஒரு கையில் உடுக்கை, ஒரு கை அபயமாகவும் மற்றொன்றை மல்லாந்து கிடக்கும் முயலகன் மார்பில் ஊன்றி தலைகீழாக இரண்டு திருவடிகளையும் இடுப்பிற்கு மேல் உயர்த்தி ஆடுகின்ற அற்பத நடனம்..

திருச்சிற்றம்பலம்.

கருடபுராணம் சொல்லும் பலவகை தானத்தின் நன்மைகள்.!


ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.*
2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்*
3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு*
4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்*
5 தாமிரம்,; நெய், கட்டில்,; மெத்தை, ஜமுக்காளம், பாய்,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்*
6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்*
7 இரத்தம்,; கண்,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்*
*8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்*
*9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 ஆண்டு இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்*
*10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன்னன் வாழ்ந்தகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்*
*11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்*
*12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை*
*13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்*
*14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது*
*15 ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 ஆண்டு இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்*
*16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்*
*17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்*
*18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்*
*19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்*
*20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்*
*21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.*
*22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.*
*23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்*
*24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்*
*25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்*
*26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்*
*27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 ஆண்டு இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்*
*28 சுதர்சன ஹோமமும்,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்*
*29 ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.*
*30 இதைப் படிப்பவரும், கேட்பவரும், புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் பித்துர்களும் முக்தி பெறுகின்றனர்.
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
Thanks 


JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம்

Human Coronavirus (கொரோனாவைரசு) What you need to knowThanks, https://www.express.co.uk/
Coronaviruses are a large group of viruses that are common among animals. In rare cases, they are what scientists call zoonotic, meaning they can be transmitted from animals to humans, according to the US Centers for Disease Control and Prevention.Figure 

Schematic diagram of the SARS coronavirus structure (reproduced from ref. 20).The viral surface proteins (spike, envelope and membrane) are embedded in a lipid bilayer envelope derived from the host cell. Unlike group 2 coronaviruses, SARS-CoV does not possess a hemagglutinin esterase glycoprotein. The single-stranded positive-sense viral RNA is associated with the nucleocapsid protein. 


History

Coronavirus disease was first described in 1931, with the first coronavirus (HCoV-229E) isolated from humans in 1965. Until the outbreak of severe acute respiratory syndrome in late 2002, only two human coronaviruses (HCoV) were known – HCoV-229E and HCoV-OC43. Once the SARS coronavirus (SARS-CoV) had been identified, two further human coronaviruses were identified. Three groups of coronaviruses exist: group 1 (HCoV-229E and HCoV-NL63), group 2 (HCoVOC43 and HCoV-HKU1), group 3 (no human CoVs as yet). SARS-CoV is an outlier to all three groups, although some place it in group 2.

Human Coronavirus Types

Coronaviruses are named for the crown-like spikes on their surface. There are four main sub-groupings of coronaviruses, known as alpha, beta, gamma, and delta.
Human coronaviruses were first identified in the mid-1960s. The seven coronaviruses that can infect people are:

Common human coronaviruses

 1. 229E (alpha coronavirus)
 2. NL63 (alpha coronavirus)
 3. OC43 (beta coronavirus)
 4. HKU1 (beta coronavirus)

Other human coronaviruses

 1. MERS-CoV (the beta coronavirus that causes Middle East Respiratory Syndrome, or MERS)
 2. SARS-CoV (the beta coronavirus that causes a severe acute respiratory syndrome, or SARS)
 3. 2019 Novel Coronavirus (2019-nCoV)
People around the world commonly get infected with human coronaviruses 229E, NL63, OC43, and HKU1.
Sometimes coronaviruses that infect animals can evolve and make people sick and become a new human coronavirus. Three recent examples of this are 2019-nCoV, SARS-CoV, and MERS-CoV.
What are the symptoms of the Novel Coronavirus?

The novel coronavirus is a new strain of coronavirus that has not been previously identified in humans but it shares symptoms with known strains.
The most common symptoms shared across the pathogen family include fever, coughing, shortness of breath and breathing problems.
In more severe cases, the symptoms can develop into kidney failure, pneumonia, severe acute respiratory syndrome and even death.
The WHO said: “There is no specific treatment for disease caused by a novel coronavirus.
“However, many of the symptoms can be treated and therefore treatment based on the patient’s clinical condition.”

How to protect yourself


Here are the CDC's and other healthcare experts' suggestions for how to protect yourself from the virus while travelling:
 • Try to avoid contact with people who display symptoms similar to those of pneumonia or the common cold, like coughing or a runny nose.
 • Don't touch your eyes, nose, or mouth with unwashed hands.
 • Wash your hands frequently with soap and water, and scrub for at least 20 seconds.
 • Use alcohol-based hand sanitizer when possible.
 • Avoid animals and animal markets.
The World Health Organisation is set to hold an emergency meeting on Wednesday on whether to declare the outbreak a global health emergency.
 Business Insider.
கொரோனா தீநுண்மி அல்லது கொரோனாவைரசு (Coronaviruse) பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும் ஒரு தீநுண்மி ஆகும், இவை பசுக்கள், பன்றிகளில் வயிற்றுப்போக்கையும், கோழிகளில் மேல் சுவாச நோயையும் உண்டாக்கும். இத்தீநுண்மிகள் மனிதர்களில் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இத்தொற்றுகள் பெரும்பாலும் மிதமானவையாக இருந்தாலும் அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானவையாக உள்ளன. இந்நோய்க்கான தடுப்பு அல்லது சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது தீநுண்மி தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை.

கொரோனாவைரசுகள் நிடோவைரலசு வரிசையில், கொரோனவிரிடே குடும்பத்தில் ஆர்த்தோகொரோனவிரினே என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இவை ஒரு நேர்மறை உணர்வு கொண்ட ஒற்றைத்-தனிமைப்படுத்தப்பட்ட ஆர்.என்.ஏ மரபணு மற்றும் திருகுசுருள் சமச்சீர்மை அதிநுண்ணுயிர் அமைப்பு (நியூக்ளியோகாப்சிட்) கொண்ட உறைசூழ் தீநுண்மிகள் ஆகும். இவற்றின் மரபணு அளவு சுமார் 26 முதல் 32 கிலோபேசுகள் வரை இருக்கும், இது ஆர்.என்.ஏ தீநுண்மி ஒன்றிற்கு மிகப்பெரியதாகும்.

"கொரோனாவைரசு" என்ற பெயர் இலத்தீன் corona, கிரேக்க κορώνη (கொரீனா, "மாலை, மாலை") என்பதிலிருந்து உருவானது, அதாவது கிரீடம் அல்லது ஒளிவட்டம் எனப் பொருள். இது இலத்திரன் நுண்ணோக்கி மூலம் முதிர்ந்த நச்சுயிரிகளின் (தீநுண்மிகளின் தொற்று வடிவம்) சிறப்பியல்புத் தோற்றத்தைக் குறிக்கிறது, இது பெரிய, குழிவான மேற்பரப்பு கணிப்புகளின் விளிம்பைக் கொண்டுள்ளது, இது ஒரு அரச கிரீடம் அல்லது சூரிய கொரோனாவை நினைவூட்டுகிறது.

அனைத்து கொரோனாவைரசுகளின் ஒட்டுமொத்த கட்டமைப்பிற்கு பங்களிக்கும் புரதங்கள்
ஸ்பைக் (S), 
உறை (E), 
சவ்வு (M) மற்றும் 
நியூக்ளியோகாப்சிட்  ஆகும்.

கொரோனா வைரசு 1960களில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கோழிகளில் தொற்று மூச்சுக்குழாய் அழற்சித் தீநுண்மி மற்றும் மனித நோயாளிகளின் நாசிக் குழிகளில் இருந்து பொதுவான சளியைக் கொண்ட இரண்டு தீநுண்மிகள் முதன்முதலாகக் கன்டுபிடிக்கப்பட்டவை ஆகும். இவை பின்னர் மனித கொரோனாவைரசு 229E (human coronavirus 229E), மனித கொரோனாவைரசு OC43 என பெயரிடப்பட்டன. இந்த நச்சுயிரிக் குடும்பத்தின் பிற தீநுண்மிகள் 2003 இல் SARS-CoV, 2004 இல் HCoV NL63, 2005 இல் HKU1, 2012 இல் MERS-CoV, 2019 இல் 2019-nCoV உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன. இவைகளில் பெரும்பாலானவை கடுமையான சுவாசக்குழாய் தொற்றுநோய்களில் ஈடுபட்டவை ஆகும்.

31 டிசம்பர் 2019 அன்று, உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 2019-nCoV என்ற கொரோனாவைரசின் ஒரு புதிய திரிபு சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2020 சனவரி 24 இற்குள் 25 இறப்புகள் பதிவாகின, 547 பேர் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. வுகான் தீநுண்மம் 2பி குழுவின் SARS-CoV தீநுண்மியுடன் கிட்டத்தட்ட 70% மரபணு ஒற்றுமையுடன் பீட்டாகொரோனா தீநுண்மியின் புதிய திரிபு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தீநுண்மிகள் பாம்புகளில் இருந்து தோன்றியதாக சந்தேகிக்கப்பட்டது,ஆனால் பல முன்னணி ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு உடன்படவில்லை.

https://www.cdc.gov/coronavirus/index.html