Search This Blog

Showing posts with label Music. Show all posts
Showing posts with label Music. Show all posts

Monday, May 27, 2024

ஒரே ராகம்" மாயா மாளவ கௌளை ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்

மாயாமாளவகௌளை என்பது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம் ஆகும். கருநாடக இசையின் 15  வது மேளகர்த்தா எப்போதும் பாடத்தகுந்த இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்கு பைரவ தாட் எனப் பெயர்.படைப்பாளியின் கற்பனையோடு ராகமும் வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாய் இருந்தால் நமக்குக் கிடைப்பது விதவிதமான விருந்துகள் தான்.அப்படி ஒரு ராகம் தான் மாயா மாளவ கௌளை.இந்த இடத்தில் ஒரு சிறு தகவல்.கர்நாடக சங்கீதத்தில் ரி,க,ம,த,நி ஆகிய ஸ்வரங்கள் இரண்டிரண்டு இருக்கும் உ-ம் சின்ன ரி(ரி1) பெரிய ரி (ரி2). 'ஸ' வும் 'ப' வும் ஆதார ஸ்ருதிகள் ஆகவே ஒன்றுதான்.கீ போர்டில் ஒரு வெள்ளைக் கட்டைக்கு முன் மேலே இருக்கும் கருப்புக் கட்டை சின்ன ஸ்வரம்.('ம' மட்டும் விதிவிலக்கு). ஒரு ராகத்தில் ஏதாவது ஒரு ஸ்வரம்( சின்னதோ பெரியதோ) மட்டுமே வரும்.(இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன).

இவ்வாறு ஸ்வரங்களின் விதவிதமானச சேர்க்கையில் (உ-ம் ஸ ரி1க2 ம1 ப த1நி2ஸ் -மாயா மாளவ கௌளை.ஸ ரி2க2ம2ப த2 நி2 ஸ்-கல்யாணி) 72 வகையான ராகங்கள் கிடைக்கின்றன.இவை மேளகர்த்தா ராகங்கள் என அழைக்கப் படுகின்றன.ஏழு சுரங்களும் வருவதால் சம்பூர்ண ராகம் என்றும் அழைக்கப்படும்

திரை இசைபாடல்கள்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா(ஆலயமணி)

அம்மம்மா கேளடி தோழி(கருப்புப் பணம்)

பல்லாக்கு வாங்கப் போனேன்(பணக்காரக் குடும்பம்)

நாம் ஒருவரை ஒருவர்(குமரிக் கோட்டம்)

அந்தப்புரத்தில் ஒரு மகாராணி(தீபம்)

அந்தி வரும் நேரம்(முந்தானை முடிச்சு)

மதுரை மரிக்கொழுந்து வாசம்(எங்க ஊர் பாட்டுக்காரன்)

மாரியம்மா மாரியம்மா( கரகாட்டக்காரன்)

ஆறடிச் சுவருதான் ஆசையை(இது நம்ம பூமி)

நன்றி சொல்லவோ என் மன்னவா(உடன் பிறப்பு)

காதல் கவிதைகள் படித்திடும்(கோபுர வாசலிலே)

இங்கே நான் கண்டேன் அனார்கலி(சாதனை)

கலைமகள் அலைமகள்(வெள்ளி ரதம்)

கடலுக்கு நான் செய்யும்(பூவெல்லாம் கேட்டுப் பார்)

மானம் இடி இடிக்க(உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்)

உயிரே உயிரே உருகாதே(ஒருவர் வாழும் ஆலயம்)

சங்கீதம் கற்றுக் கொள்ளாதவர்களுக்குக்கூட 'ஸரிகமபதநிஸா' என்ற பாலபாடம் புரியும். கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ளும் எவரும், 'ஸரிகமபதநிஸா-ஸாநிதபமகரிஸா' என்ற ஸ்வரங்களுடன் துவங்கும் மாயாமாளவ கௌளை இராக சரளி வரிசையிலிருந்து தொடங்காமலிருக்க முடியாது. மாயாமாளவ கௌளை இராகத்திலுள்ள ஸ்வரங்களில் ஒரே ஸ்வரஸ்தானங்களுடன் கூடிய ஸ்வரங்கள் இல்லாமலிருப்பதனால், இந்த இராகத்தினை எவரும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். கமகம் ஏதுமின்றி, ஆரோகண, அவரோகங்களைப் பாடினாலே, இராகத்தின் சாயல் வெளிப்படும். 
Thanks https://eegarai.darkbb.com/,https://simulationpadaippugal.blogspot.com/

Tuesday, November 21, 2023

"ஒரே ராகம்" தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்


பாடல்- 01.அழகு தெய்வம் மெல்ல. (00:01) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- கவிஞர் வாலி. இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- பேசும் தெய்வம். வருடம்- 1967. படம் வெளியான நாள்- 14-04-1967. பாடல்- 02.பொன்னென்பேன். (03:31) பாடியவர்கள்- P.B.சீனிவாஸ் & S.ஜானகி. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- போலீஸ்காரன் மகள். வருடம்- 1962. படம் வெளியான நாள்- 07-09-1962. பாடல்- 03.பெண்ணின் பெருமையே. (07:07) பாடியவர்- P.சுசீலா. பாடல்- கவிஞர் சுப்பு ஆறுமுகம். இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- மனைவி. வருடம்- 1969. படம் வெளியான நாள்- 16-05-1969. பாடல்- 04.கனவு கண்ட காதல். (10:16) பாடியவர்- P.சுசீலா. பாடல்- கம்பதாசன். இசை- நௌசத் அலி. படம்- அக்பர். வருடம்- 1960. பாடல்- 05.தன்னைத்தானே. (13:23) பாடியவர்- C.S.ஜெயராமன். பாடல்- உடுமலை நாராயண கவி. இசை- R.சுதர்சனம். படம்- தெய்வப்பிறவி. வருடம்- 1960. படம் வெளியான நாள்- 14-04-1960.

Monday, October 30, 2023

"ஒரே ராகம்" கல்யாணி ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள் (கல்யாணி ராகம் கேட்டால் இதய நோய் வராதம்.)

கல்யாணி ராகம்


இது ஒரு தமிழிசை பண் ஆகும். பின் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசையில் இதன் பங்கு மிக முக்கியமாக அமைந்தது. பொதுவாக ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு முக்கிய “பாவம்” ( Bhava ) உண்டு என்பார்கள். கல்யாணி போன்ற ஸம்பூர்ண ராகங்கள். பலவித பாவங்களை வெளிப்படுத்தும். இதற்கு பாடகரின் குரல், அல்லது வாத்யத்தின் குரல் நேர்த்தி “tonal quality ” முக்கியமானது. இதற்கும் மேலாக, சாஹித்யத்தின் பங்கு. ராக ‘பாவம்’, ஸாஹித்ய ‘பாவம்’. பாடகரின் குரல் வளம் ஆகியவை ஒன்று சேரும்போதுதான் நாம் அந்த ராகத்தின் முழு ஸ்வரூபத்தையும், அது வெளிப்படுத்தும் உணர்ச்சிப் பெருக்கையும் அனுபவிக்க முடியும்.

வட இந்தியாவில் இதே கல்யாணி இராகம், 'யமன்' என்றழைக்கப்படுகின்றது. இதற்கு, 'சாந்த கல்யாணி' என்ற மற்றொரு பெயருமுண்டு. இந்த இராகம், ஹங்கேரி நாட்டிலும் பிரபலம் என்பது பெரும்பாலோர் அறியாததொன்று. மேளகர்த்தா இராகமான கல்யாணியிலிருந்து 150க்கும் மேலான ஜன்ய இராகங்கள் பிறந்த்திருப்பதாகத் தெரிகின்றது.

ஆரோகணம் : ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ

அவரோகணம் : ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ

நிதிசால சுகமா' ,'பங்கஜ லோசனா' போன்ற கீர்த்தனைகள் உள்ளன.

கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்கள்:

அம்மா என்றழைக்காத - மன்னன்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி
காற்றினிலே வரும் கீதம் - ஒரு நாள் ஒரு கனவு
அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர்
சரணம் பவ கருணாமயி - சேது
என்னை ஒருவன் பாடச் சொன்னான் - கும்பக்கரை தங்கையா
ஜனனீ ஜனனீ - தாய் மூகாம்பிகை
மஞ்சள் வெயில் - நண்டு
நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம்
நான் என்பது நீ அல்லவோ தேவா - சூரசம்ஹாரம்
நிற்பதுவே நடப்பதுவே - பாரதி
ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம்
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத் தங்கம்
அத்திக்காய் காய் காய் - பலே பாண்டியா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - தெய்வ மகன்
தாழையாம்பூ முடிச்சு - பாகப் பிரிவினை
இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப் புதல்வன்
மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர்


பாடல்- 01.என்னருமை காதலிக்கு. (00:01)
பாடியவர்- T.M.சௌந்தரராஜன்.
பாடல்- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இசை- T.G.லிங்கப்பா.
படம்- எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.
வருடம்- 1960.
படம் வெளியான நாள்- 01-07-1960.

பாடல்- 02.துள்ளித் திரிந்த பெண். (03:33)
பாடியவர்- P.B.சீனிவாஸ்.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி.
படம்- காத்திருந்த கண்கள்.
வருடம்- 1962.
படம் வெளியான நாள்- 29-08-1962.

பாடல்- 03.உள்ளம் ரெண்டும் ஒன்று. (06:48)
பாடியவர்கள்- C.S.ஜெயராமன் & ஜிக்கி.
பாடல்- தஞ்சை ராமையாதாஸ்.
இசை- G.ராமனாதன்.
படம்- புதுமை பித்தன்.
வருடம்- 1957.
படம் வெளியான நாள்- 02-08-1957.

பாடல்- 04.வெண்ணிலா வானில். (10:16)
பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
பாடல்- கவிஞர் வாலி.
இசை- S.M.சுப்பையா நாயுடு.
படம்- மன்னிப்பு.
வருடம்- 1969.
படம் வெளியான நாள்- 28-11-1969.

பாடல்- 05.இந்த மன்றத்தில் (சோகம்) (13:38)
பாடியவர்கள்- P.B.சீனிவாஸ் & S.ஜானகி.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி.
படம்- போலீஸ்காரன் மகள்.
வருடம்- 1962.
படம் வெளியான நாள்- 07-09-1962.

பாடல்- 06.மன்னவன் வந்தானடி. (16:37)
பாடியவர்கள்- P.சுசீலா & குழுவினர்.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன்.
படம்- திருவருட்செல்வர்.
வருடம்-படம் வெளியான நாள்- 28-07-1967. 1967.


பாடல்- 07.வெட்கமாய் இருக்குதடி. (23:43)
பாடியவர்கள்- P.லீலா & சூலமங்கலம் ராஜலட்சுமி.
பாடல்- சுத்தானந்த பாரதி.
இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி.
படம்- பார் மகளே பார்.
வருடம்- 1963.
படம் வெளியான நாள்- 11-11-1963.

பாடல்- 08.முகத்தில் முகம் பார்க்கலாம். (30:43)
பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.லீலா.
பாடல்- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி.
படம்- தங்கபதுமை.
வருடம்- 1958.
படம் வெளியான நாள்- 10-01-1959.

பாடல்- 09.சிந்தனை செய் மனமே. (33:56)
பாடியவர்- T.M.சௌந்தரராஜன்.
பாடல்- K.D.சந்தானம்.
இசை- G.ராமனாதன்‌.
படம்- அம்பிகாபதி.
வருடம்- 1957.
படம் வெளியான நாள்- 22-10-1957.

பாடல்- 10.துணிந்தபின் மனமே. (37:20)
பாடியவர்- கண்டசாலா.
பாடல்- உடுமலை நாராயண கவி.
இசை- C.R.சுப்புராமன்.
படம்- தேவதாஸ்.
வருடம்- 1952.
படம் வெளியான நாள்- 11-09-1953.

Thanks JE Music Academy Nagercoil

Tuesday, October 10, 2023

"ஒரே ராகம்" சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்

 


பாடல்- 01. நம்ம ஊரு சிங்காரி. (00:01) பாடியவர்- S.P.பாலசுப்ரமணியம். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- நினைத்தாலே இனிக்கும். வருடம்- 1979. படம் வெளியான நாள்- 14-04-1979. பாடல்- 02.ராஜா பொண்ணு. (03:30) பாடியவர்- P.ஜெயச்சந்திரன். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- இளையராஜா. படம்- ஒரே முத்தம். வருடம்- 1979. படம் வெளியான நாள்- 08-02-1980. பாடல்- 03.தவிக்குது தயங்குது. (07:59) பாடியவர்கள்- P.ஜெயச்சந்திரன் & S.P.ஷைலஜா. பாடல்- கங்கை அமரன். இசை- இளையராஜா. படம்- நதியை தேடி வந்த கடல். வருடம்- 1979. படம் வெளியான நாள்- 15-01-1980. பாடல்- 04.நதியோரம் நாணல் ஒன்று. (12:25) பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா. பாடல்- கவிஞர் வாலி. இசை- இளையராஜா. படம்- அன்னை ஓர் ஆலயம். வருடம்- 1979. படம் வெளியான நாள்- 19-10-1979. பாடல்- 05.ஆயிரம் மலர்களே மலருங்கள். (16:31) பாடியவர்கள்- மலேஷியா வாசுதேவன், S.P.ஷைலஜா & ஜென்சி. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- இளையராஜா. படம்- நிறம் மாறாத பூக்கள். வருடம்- 1979. படம் வெளியான நாள்- 31-08-1979.

Wednesday, September 13, 2023

"ஒரே ராகம்" சாருகேசி ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்


பாடல்- 01.வசந்தமுல்லை போலே. (00:01) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- A.மருதகாசி. இசை- G.ராமனாதன். படம்- சாரங்கதாரா. வருடம்- 1958. படம் வெளியான நாள்- 15-08-1958. பாடல்- 02.ஆடல் காணீரோ. (03:18) பாடியவர்- M.L.வசந்தகுமாரி. பாடல்- உடுமலை நாராயண கவி. இசை- G.ராமனாதன். படம்- மதுரை வீரன். வருடம்- 1956. படம் வெளியான நாள்- 13-04-1956. பாடல்- 03.வெள்ளிமலை மன்னவா. (08:58) பாடியவர்- S.வரலட்சுமி. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- கந்தன் கருணை. வருடம்- 1966. படம் வெளியான நாள்- 14-01-1967. பாடல்- 04.வரச்சொல்லடி. (10:47) பாடியவர்- P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- பாதுகாப்பு. வருடம்- 1970. படம் வெளியான நாள்- 27-11-1970. பாடல்- 05.அம்மம்மா கேளடி தோழி. (14:12) பாடியவர்கள்- L.R.ஈஸ்வரி & கமலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- கருப்பு பணம். வருடம்- 1964. படம் வெளியான நாள்- 03-10-1964. பாடல்- 06.தூங்காத கண்ணொன்று. (17:21) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- குங்குமம். வருடம்- 1963. படம் வெளியான நாள்- 02-08-1963. பாடல்- 07.அழகிய தமிழ் மகள். (20:45) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- ரிக்சாக்காரன். வருடம்- 1971. படம் வெளியான நாள்- 29-05-1971. பாடல்- 08.ஊரெங்கும் தேடினேன். (27:15) பாடியவர்- ஜிக்கி. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- A.M.ராஜா. படம்- தேன் நிலவு. வருடம்- 1961. படம் வெளியான நாள்- 30-09-1961. பாடல்- 09.காற்றினிலே பெரும். (30:47) பாடியவர்- K.J.ஜேசுதாஸ். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- G.தேவராஜன். படம்- துலாபாரம். வருடம்- 1969. படம் வெளியான நாள்-15-08-1969. பாடல்- 10.அம்மம்மா தம்பி. (35:01) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- ராஜபார்ட் ரங்கதுரை. வருடம்- 1973. படம் வெளியான 22-12-1973.

Saturday, September 9, 2023

"ஒரே ராகம்" சிந்து பைரவி ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்


பாடல்- 01.எந்தன் உள்ளம் துள்ளி. (00:01) பாடியவர்- P.சுசீலா. பாடல்- கு.மா.பாலசுப்ரமணியம். இசை- A.ராமாராவ் & ஹேமந்த் குமார். படம்- கணவனே கண் கண்ட தெய்வம். வருடம்- 1955. படம் வெளியான நாள்- 06-05-1955. பாடல்- 02.மாயமே நானறிவேன். (03:02) பாடியவர்- P.லீலா. பாடல்- தஞ்சை ராமையாதாஸ். இசை- ராஜேஸ்வர ராவ். படம்- மிஸ்ஸியம்மா. வருடம்- 1954. படம் வெளியான நாள்- 14-01-1955. பாடல்- 03.நல்ல பெண்மணி. (05:40) பாடியவர்- T.A.மதுரம். பாடல்- உடுமலை நாராயண கவி. இசை- G.ராமநாதன். படம்- மணமகள். வருடம்- 1951. படம் வெளியான நாள்- 15-08-1951. பாடல்- 04.சம்சாரம் சம்சாரம். (09:03) பாடியவர்- A.M.ராஜா. பாடல்- கொத்தமங்கலம் சுப்பு. இசை- M.D.பார்த்தசாரதி & சங்கரசாஸ்திரி. படம்- சம்சாரம். வருடம்- 1951. படம் வெளியான நாள்- 19-10-1951. பாடல்- 05.எங்கே நீயோ நானும். (11:33) பாடியவர்- P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- நெஞ்சிருக்கும் வரை. வருடம்- 1967. படம் வெளியான நாள்- 02-03-1967. பாடல்- 06.என்னை யாரென்று. (14:52) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- பாலும் பழமும். வருடம்- 1961. படம் வெளியான நாள்- 09-09-1961. பாடல்- 07.கொஞ்சும் கிளியான பெண்ணை. (18:26) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- விந்தன். இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- கூண்டுக்கிளி. வருடம்- 1954. படம் வெளியான நாள்- 26-08-1954. பாடல்- 08.வாழ்ந்தாலும் ஏசும். (21:32) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- கா.மு.ஷெரீப். இசை- G.ராமநாதன். படம்- நான் பெற்ற செல்வம். வருடம்- 1955. படம் வெளியான நாள்- 14-01-1956. பாடல்- 09.வாழ்க்கை எனும் ஓடம். (24:29) பாடியவர்- K.B.சுந்தராம்பாள். பாடல்- மு.கருணாநிதி. இசை- R.சுதர்சனம். படம்- பூம்புகார். வருடம்- 1964. படம் வெளியான நாள்- 18-09-1964. பாடல்- 10.ஆறு மனமே ஆறு. (27:54) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- ஆண்டவன் கட்டளை. வருடம்- 1964. படம் வெளியான நாள்- 16-06-1964.