Search This Blog

Showing posts with label Music. Show all posts
Showing posts with label Music. Show all posts

Friday, July 14, 2023

"ஒரே ராகம்" மோகன ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்


பாடல்- 01.ஒரு தங்கரதத்தில். (00:01) பாடியவர்- மலேஷியா வாசுதேவன். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- இளையராஜா. படம்- தர்மயுத்தம். வருடம்- 1979. படம் வெளியான நாள்- 29-06-1979. பாடல்- 02.இரு பறவைகள் மலை. (04:25) பாடியவர்கள்- ஜென்சி & குழுவினர். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- இளையராஜா. படம்- நிறம் மாறாத பூக்கள்‌ வருடம்- 1979. படம் வெளியான நாள்- 31-08-1979. பாடல்- 03.மீன் கொடித்தேரில். (08:52) பாடியவர்கள்- ஜென்சி & குழுவினர். பாடல்- M.G.வல்லபன். இசை- இளையராஜா. படம்- கரும்பு வில். வருடம்- 1980. படம் வெளியான நாள்- 29-02-1980. பாடல்- 04.கண்ணன் ஒரு கைக்குழந்தை. (13:27) பாடியவர்கள்- K.J.ஜேசுதாஸ் & P.சுசீலா. பாடல்- கவிஞர் வாலி. இசை- இளையராஜா. படம்- பத்ரகாளி. வருடம்- 1976. படம் வெளியான நாள்- 10-12-1976. பாடல்- 05.வான் மேகங்களே. (16:44) பாடியவர்கள்- மலேஷியா வாசுதேவன் & S.ஜானகி. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- இளையராஜா. படம்- புதிய வார்ப்புகள். வருடம்- 1979. வருடம்- 14-04-1979. பாடல்- 06.குறிஞ்சி மலரில் வழிந்த. (21:26) பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம். பாடல்- கவிஞர் வாலி. இசை- இளையராஜா. படம்- அழகே உன்னை ஆராதிக்கிறேன். வருடம்- 1979. படம் வெளியான நாள்- 16-03-1979. பாடல்- 07.திருத்தேரில் வரும் சிலையோ. (25:54) பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- இளையராஜா. படம்- நான் வாழ வைப்பேன். வருடம்- 1979. படம் வெளியான நாள்- 10-08-1979. பாடல்- 08.கண்மணியே காதல் என்பது. (30:00) பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி. பாடல்- பஞ்சு அருணாசலம். இசை- இளையராஜா. படம்- ஆறிலிருந்து அறுபது வரை. வருடம்- 1979. படம் வெளியான நாள்- 14-09-1979. பாடல்- 09.தேன்மல்லிப் பூவே. (34:22) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & S.ஜானகி. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- இளையராஜா. படம்- தியாகம். வருடம்- 1978. படம் வெளியான நாள்- 04-03-1978. பாடல்- 10.நானொரு பொன்னோவியம். (38:29) பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா & S.ஜானகி. பாடல்- புலமைப்பித்தன். இசை- இளையராஜா. படம்- கண்ணில் தெரியும் கதைகள். வருடம்- 1979. படம் வெளியான நாள்- 14-03-1980.

பாடல்- 01.புதிய வானம் புதிய பூமி. (00:01) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- அன்பே வா. வருடம்- 1966. படம் வெளியான நாள்- 14-01-1966. பாடல்- 02.இறைவன் வருவான். (06:01) பாடியவர்கள்- P.சுசீலா & குழுவினர். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- சாந்தி நிலையம். வருடம்- 1969. படம் வெளியான நாள்- 23-05-1969. பாடல்- 03.மலர்கள் நனைந்தன. (09:15) பாடியவர்- P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- இதயக்கமலம். வருடம்- 1965. படம் வெளியான நாள்- 27-08-1965. பாடல்- 04.ஆலயமணியின் ஓசையை. (13:14) பாடியவர்- P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- பாலும் பழமும். வருடம்- 1961. படம் வெளியான நாள்- 09-09-1961. பாடல்- 05.என்ன பார்வை உந்தன். (16:45) பாடியவர்கள்- K.J.ஜேசுதாஸ் & P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- காதலிக்க நேரமில்லை. வருடம்- 1964. படம் வெளியான நாள்- 22-02-1964. பாடல்- 06.என்னை முதன் முதலாக. (20:06) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & S.ஜானகி. பாடல்- இராதா மாணிக்கம். இசை- R.சுதர்சனம். படம்- பூம்புகார். வருடம்- 1964. படம் வெளியான நாள்- 18-09-1964. பாடல்- 07.எனக்கொரு மகன். (23:51) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- பணம் படைத்தவன். வருடம்- 1965. படம் வெளியான நாள்- 27-03-1965. பாடல்- 08.வெற்றி மீது வெற்றி. (27:24) பாடியவர்- S.P.பாலசுப்ரமணியம். பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- தேடி வந்த மாப்பிள்ளை. வருடம்- 1970. படம் வெளியான நாள்- 29-08-1970. பாடல்- 09.வெற்றியை நாளை. (30:52) பாடியவர்- சீர்காழி S.கோவிந்தராஜன். பாடல்- புலவர் வேதா. இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- உலகம் சுற்றும் வாலிபன். வருடம்- 1973. படம் வெளியான நாள்- 11-05-1973. பாடல்- 10.வந்த நாள் முதல். (34:10) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- பாவ மன்னிப்பு. வருடம்- 1961. படம் வெளியான நாள்- 16-03-1961.

Friday, September 10, 2021

கவிஞர் புலமைப்பித்தன்

 பிரபல கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத்தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.

 
அதிமுக முன்னாள் அவைத்தலைவராக இருந்த கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  புலமைப்பித்தனின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 86.
 
கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்தவர் புலமைப்பித்தன். இவரது இயற்பெயர் ராமசாமி. நுாற்பாலையில் பணிபுரிந்தபடியே தமிழ் புலவர் படிப்பை நிறைவு செய்தார். 1964-இல் திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற, 'நான் யார்' என்ற பாடல் வழியாக திரையுலகில் நுழைந்தார். அடிமைப் பெண் படத்தில் எழுதிய 'ஆயிரம் நிலவே வா' பாடல் மூலம், அனைவரின் கவனத்தையும் பெற்றார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’ ஆகிய வரலாற்றுப் பின்னணிப் படங்களுக்கு இவர்தான் பாடல்களை எழுதினார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.

அவர் எழுதிய

உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது என்ற பாடல் ரொம்பப் பிடித்தது. என்னவோ பாதுகாப்பான உறவுகளும்,உலகமும் ஒரு காலத்தில் இருந்ததைச் சொல்வது போல் இருக்கும்.
அமுதே,தமிழே,அழகிய மொழியே ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல்.அந்தப் பாடலுக்கு வயதாகாது எனத் தோன்றும்.Relevant forever.
எஸ்.வரலஷ்மியின் கம்பீரமான குரலும்,உச்சரிப்பும்,இசை அறிவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அதனாலேயே இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் பாடல் பிடிக்கும்.அந்த வரிகளும் ரொம்பப்பிடித்தவை.
சேலம் பக்கத்தில் ஒரு மலைக் கிராமம்.பல்வேறு கட்டுப்பாடுள்ள ஒரு கிராமத்திற்கு ரவிக்கை அணிந்து நவீனமாய் ஒரு பெண் மணமாகி வருகிறாள்.கிராமத்துக் கணவனோடு அவளால் ஒன்ற முடியவில்லை.அவளுக்கு இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு வருகிறது.இந்தத் தகவல் கணவன் காதுக்கு வந்த பின் அதை ஏற்க மனமில்லாமல் குமைந்து கொண்டு அவலச் சுவையோடு பாடும் உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி. தமிழில் இந்தச் சுவையில் பாடல்கள் இல்லைதான்.
ஒரு பன்னாட்டு மாநாடு. அவ்வப் போது ஒரு மாறுதலுக்கு இடை வேளையில் அவரவர் மொழியில் பாட்டுப் பாடுவோம்.நான் தமிழில் நான்கு வரி.பாடி விட்டு நிறுத்திக் கொண்டேன்.அங்கிருந்த பெண் நீங்கள் தமிழா என ஆங்கிலத்தில் கேட்டார். அவர் தமிழ் வம்சாவளி தென்னாப்பிரிக்கர்.தமிழ் நாட்டிற்கு வந்ததில்லை.தமிழ் பேசவும் தெரியவில்லை.ஆனால் சில பழைய தமிழ் பாடல்களை ஓரளவு பாடிக் காட்டினார்.அதில் ஒன்று இனியவளே என்று பாடி வந்தேன்.இனி அவள்தான் என்று ஆகி விட்டேன்.அதுவும் புலமைப் பித்தன் அவர்களின் பாடல். அப்பாடல் வரிகளை ஆங்கிலத்த்தில் மொழிபெயர்த்துச் சொன்னேன்.
கண்மணியே பேசு எல்லோரையும் போல் எனக்கும் பிடித்த பாடல்.அதில் வரும் அஞ்சுகம் என்ற சொல்லைக் கேட்டு விட்டு அதன் பொருள் கிளி என விளங்கிக் கொண்டேன்.
எல்லாராலும் கொண்டாடப் பட்ட ஆயிரம் நிலவே வா பாடலில் வரும் என் உயிரினிலே உன்னை எழுத பொன் மேனி தாராயோ வரியெல்லாம் ரொம்பவே நகாசு வேலை எனத் தோன்றும்.
எப்படி டி.எம்.எஸ்- சுசீலா,எஸ்.பி.பி - ஜானகிக்கென ஒரு தனி இடம் இருக்கிறதோ அதே போல் வாணி ஜெயராம்-யேசுதாசுக்கும் உண்டு.மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் எம் ஜி ஆரின் கடைசிப் படம்.அதில் வரும் தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன்,அமுதத் தமிழில் எழுதும் பாடல்களைக் கேளுங்கள்.இரண்டும் புலமைப் பித்தன் அவர்களின் வரிகள்.
சமீபத்தில் வெளி வந்த தெறி திரைப்படத்தின் தாய்மை வாழ்கென வரை பல பாடல்கள் பிடிக்கும்.
இன்னுமே நிறைய பாடல்கள் நினைவுக்கு வருகிறது.பதிவின் நீளம் கருதி நீளம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.

Thanks Geetha Narayanan

Wednesday, September 1, 2021

ஆபிரகாம் பண்டிதர்

 


Kutti Revathi

சில நாட்களுக்கு முன் அயல்நாட்டிலிருந்து ஒரு பெண் அழைத்திருந்தார். இசைத்துறையில் கோலோச்சுபவர். கர்நாடக இசையில் வல்லவர். அவர் குரலில் பணிவும் கனிவும் முதிர்ச்சியும் கலந்திருந்தன. ‘நான் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த இசைத்துறையில் இயங்கிவருகிறேன். ஆனால், ஒரு போதும் ஆபிரகாம் பண்டிதர் பெயரையோ, கருணாமிர்தசாகரம் என்ற நூலையோ கேள்விப்பட்டதே இல்லை. ஏன் என்ற கேள்வி என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது’, என்றார். ஏன் என்ற இந்தக் கேள்வி நாமெல்லோரும் நம்மிடமும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

இசையமைப்பாளர் ஏஆர்ரஹ்மான் ஃபவுண்டேஷனின் இணையத்தளத்தில், karunamirthasagaram.org என்ற இணையத்தளம் தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதரின் நூற்றாண்டை (1917 - 2017) ஒட்டித் தொடங்கப்பட்டுத் தீவிரமாக இயங்கிவருகிறது. தொடங்கிய ஓராண்டிற்குக் கிணற்றில் போட்ட கல் போல இருந்தது. தமிழிசைச் செயல்பாடுகள் ஓரளவில் சமூகத்தில் அந்நியமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இதை மீண்டும் மீண்டும் ஏஆர் ரஹ்மான் முடுக்கிவிடுவதற்கான எல்லா பணிகளையும் செய்துகொண்டே இருந்தார். சர்க்கார் திரைப்பட இசைவெளியீட்டில் ஷோபா சந்திரசேகர் அவர்களால் இந்த இணையத்தளம் பகிரங்கமாய் அறிவிக்கப்பட்டது.
இன்று இதன் பின்னணியில் தம் அடையாளம் பகிர விரும்பாதோர், ஆனால் தமிழிசை பால் பெருத்த அக்கறையும் ஈடுபாடும் கொண்டோர் கூட்டாக உழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். தமிழிசையின் வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அறியாத நம்முடைய “அறியாமை” தான் எல்லா ‘ஏன்’, என்ற கேள்விகளுக்கும் ஒரே பதில் என்பேன்.
நாம் செய்யவேண்டியவை நிறைய:
1. மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட ஆபிரகாம் பண்டிதரை மீள் உருவாக்கம் செய்து உலக மக்களுக்கு அறிமுகப்படுத்துவதே நம் தலையாய நோக்கம்.
2. மூவாயிரம் ஆண்டு தமிழிசை வரலாற்றையும் அகழ்ந்தெடுத்து உலக இசை ஆய்வாளர்களுக்கு வழங்குவதே இதன் உள்நோக்கம்.
3. ஆபிரகாம் பண்டிதர் பெயரில் தமிழிசைக்கான ஒரு பல்கலைக்கழகம் தொடங்கவேண்டும்.
4. ஆபிரகாம் பண்டிதர் பெயரில் தமிழிசைக்கான ஆய்வு நூலகம் தொடங்க வேண்டும்.
5. ஆபிரகாம் பண்டிதர் வாழ்க்கை குறித்தும் தமிழிசைக்கான தமிழிசைக்கருவிகள் மற்றும் தமிழிசையின் வரலாறு குறித்தும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
6. சென்னை, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஆபிரகாம் பண்டிதரின் சிலையுடன் கூடிய மணிமண்டபங்கள் நிறுவ வேண்டும்.
7. பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒன்று கூடும் ஆகஸ்ட் மாதத்தை தமிழிசை மாதமாகஆண்டுதோறும் கொண்டாட வேண்டும். தமிழிசைக் கச்சேரிகளுடன் உலகளாவிய இசைக்கச்சேரிகளும் இம்மாதத்திலே நடத்த வேண்டும்.
8. உயிர்காக்கும் அவருடைய சித்தமருந்துகளை மக்களுக்குச் சேரும் வகையில் மீண்டும் தயாரித்து வழங்க வேண்டும்.
9. ஆபிரகாம் பண்டிதர் மற்றும் அவரது தமிழிசை ஆய்வுகள் குறித்த ஆய்வு நோக்கில் உயரிய ஆவணப்படம் ஒன்றையும் எடுக்க வேண்டும்.
இவை எல்லாம் தனி மனிதரின் பணிகள் அல்ல. நாம் எல்லோரும் இணைந்து இயக்கவேண்டிய சமூகச் செயல்பாடுகள். இவற்றைச் செய்வதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் நாட்டில் சமூக அரசியலிடையே பெருத்த பண்பாட்டு மாற்றத்தை நம்மால் உருவாக்கமுடியும். உலக அளவில் தமிழரின் முத்திரை முனைப்பாக இருக்கும்.
தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதரின் நினைவு நாளான இன்று உங்களையும் இந்த தமிழிசை இயக்கத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி!

Saturday, July 24, 2021

முதல் பெண் பாடலாசிரியர் ரோஷனாரா பேகம்!

 

Arunan Meenachchisundaram

குடியிருந்த கோயில்' என்றாலே ரசிகர்கள் மனத்தில் `குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடல் சட்டென நிழலாடும்;



கூடவே வெண்ணிற சேலையில் நளினமாக ஆடும் ஜெயலலிதாவும், அலட்டலில்லாத காதலை வெளிப்படுத்தும் எம்.ஜி.ஆரும் மனக்கண் முன்வந்து போவார்கள்.

இரு முன்னாள் முதல்வர்கள் நடித்த அந்தப் பாடலை எழுதியவர், நம் முதல் பெண் பாடலாசிரியர் ரோஷனாரா பேகம்!

இஸ்லாமியப் பெண்கள் திரைத்துறைக்கு வருவது இன்றுகூட பெரும் சிக்கலாகத்தான் உள்ளது.

ஆனால், 1968-ம் ஆண்டே இஸ்லாமியப் பெண் ரோஷனாரா பேகம் திரைப்பாடல் எழுதியது பெரும் ஆச்சர்யம்தான்.

துரதிர்ஷ்டவசமாக அவர் எழுதிய `குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடல் அவரின் முதலும் இறுதியுமான திரைப்பாடலாக அமைந்துவிட்டது. காலத்தின் அடுக்குகளில் எங்கோ மறைந்துபோனார் ரோஷனாரா.

Saturday, May 29, 2021

மறக்கப்பட்ட கவிஞர் மாயவநாதன்

 கவிஞர்.மாயவநாதன்பெயரைக் கேட்டதும் இந்தப் பெயரில் கவிஞர் ஒருவரா? தெரியாதே, யாரவர்? என்று கூடப் பலருக்கும் கேட்கத் தோன்றும். அவரைப் பற்றித் தெரிந்து கொண்டபின் விழிகள் வியப்பினால் விரியக் கூடும் ஓ! வென வாயைத் திறக்கக் கூடும்.

விளம்பர வெளிச்சம் இல்லாமல் இருட்டுக்குள்ளே மறைந்து அல்லது மறைக்கப்பட்டு, அடையாளம் இல்லாமல் அடங்கிப் போன ஏராளமான திறனாளர், நடிகர், அறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கலைஞர், மேதையர் தமிழ்நாட்டில் வாழ்ந்ததுண்டு. அப்பட்டியலில் மாயவநாதன் என்ற இந்த ஏழை அப்பாவிக் கவிஞனும் ஒருவன் என்பதுதான் வேதனையான உண்மை.
பணம் ஒன்றே குறிக்கோள் என்று நினைக்காத காரணத்தால், கொண்ட கொள்கையில் மாறாத பிடிவாதத்தால் அதிகாரத்திற்கும் பணத்திற்கும் அடங்கி நடக்க, நடிக்க, கூழைக் கும்பிடு போட, முகஸ்துதி பாட மறுத்தவர்,எவருக்கும் பணியாத வணங்காமுடிக் கவிஞர் இவர். உடன் பிறந்தது சுயகௌரவம். எப்படியாவது பொருளீட்ட வேண்டும் என்றால்தானே மனசாட்சி மறுத்த போதிலும், பொருளல்லவரைப் பொருளாக்கிப் பாட வேண்டிய அவசியம் ஏற்படும். இவர்தான் பணத்தை ஒரு பொருட்டாக நினைக்கவில்லையே.
அவ்வையிடம், பொருள் நிறைந்த செல்வன் ஒருவன், பொன் கொடுத்துத் தன்னைப் புகழ்ந்து ஒரே ஒரு பாடல் பாடச் சொல்லிக் கேட்டபோது, “உன்னிடம் பொருள் ஏராளம் இருக்கிறது. ஆனால புகழ்ந்து பாடும் அளவிற்கு நீ ஒரு பொருள் இல்லை. நீ அள்ளிக்கொடுத்த வள்ளலா? அமரில் மாவீரனா? இல்லாதோர் காவலனா? இசைபாடும் நாவலானா?. தமிழ்பால் மாறாக் காதலனா?. நீ ஒரு பாடு பொருளாக இருக்க முடியாது.எதை வைத்து உன்னைப் பாடுவது?”. என்று கேட்டாளாம்.புலவர்கள், ஒன்றும் இல்லாதவர்களை ஒரு பொருட்டாக ஒரு போதும் கருதுவதில்லை.
சிறுவயதிலேயே ஏராளமான திறமைகளைச் சுமந்துகொண்டு சென்னை நோக்கிப் பயணம் செய்த மாயவநாதனுக்கு அடைக்கலம் கொடுத்தது சந்திரகாந்தா நாடகக் கம்பெனி.

மாயவநாதன் மிகச்சிறந்த காளி பக்தர். மகாகவி காளிதாசன் போல, அன்னை காளிக்கு மட்டுமே தன்னை அடிமைப்படுத்திக் கொண்டவர். கரம்பைச் சித்தர், கரூர் சித்தர் போன்ற உயர்ந்தோர் நட்பு இவருக்கு உண்டு. அதனால் பொருளாசை இல்லாமல் இறைவனுக்கு மட்டுமே தன்னை அடிமை செய்து, மனிதருக்கு அடிமை செய்யாமல் வாழ்ந்து விட்டாரோ என்னவோ?
மருதமலைக் கோவிலைச் சீரமைத்துக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் திரு.சாண்டோ சின்னப்பா தேவர், மருதமலைக் கோவில் மலையில் முருகன் புகழைப் பாடல் வடிவத்தில் கல்வெட்டுகளாக எழுதி வடித்து வைக்க ஆசைப்பட்டார். அந்தப் பாடல்களை எல்லாம் எழுதியவர் கவிஞர் மாயவநாதன்தான். என்றென்றும் மாயவநாதனின் புகழை நிலைத்து நிற்கச் செய்யும் அக்கல்வெட்டுகளை முருகன் துதிப் பாடல்களாக நிலைத்து நிற்பதை இன்றும் மருதமலையில் காணலாம்.
1936 ஆம் ஆண்டு இன்றைய தென்காசி மாவட்டத்தில் பூலாங்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கவிஞர் மாயவநாதன்.1971 ஆம் ஆண்டு சென்னையில் திடீரென மறைந்தவர். 35 வயது மட்டுமே பூவுலகில் வாழும் பேறு பெற்று தன் பாடல்களால் நம்மை மயக்கி விட்டு,மறைந்து மாயமாகி போனவர் மாயவநாதன் . திரையுலகில் சில காலமே வலம் வந்தாலும் அழியாப் புகழ் பெற்ற பாடல்களை எழுதியவர்.
இவரது பாடல்களை இன்றும் தொலைக்காட்சிகளில் வானொலிகளில் கேட்பார், அவையெல்லாம் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்று தவறாக நினைப்பார்கள் யாரும் எடுத்துச் சொல்லும் வரை இந்தக் குழப்பம் இருக்கும். நான் கூட பலமுறை இந்தத் தடுமாற்றத்திற்கு ஆளாகி இருக்கிறேன். அந்த அளவிற்கு கவியரசர் கண்ணதாசனைப் போலவே சிறப்பாகச் சிந்திக்கும் ஆற்றல் கவிதையை மழையாகக் கொட்டும் ஆற்றல் மாயவநாதனுக்கு உண்டு. அவர்களெல்லாம் வர கவிஞர்கள் அமர கவிஞர்கள்… காளமேகங்கள்..
அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய மனைவி மக்கள் ஓலைக்குடிசை ஒன்றில் வாழும் அளவிற்குத்தான் வசதி இருந்தது. இன்னும் அவருடைய பிள்ளைகள் பேரக் குழந்தைகள் மிகச் சாதாரணமான வேலை செய்து, விவசாயக் கூலிகளாகக் குடும்பம் நடத்துகிறார்கள். சொந்த ஊரில் அவருடைய உடல் எரியூட்டம் நடந்த இடம் கூட கேட்பாரற்றுக் கிடக்கிறது. அதைப் பார்க்க நேரும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு பெரிய பாரம் ஏறிவிடும். கவி கரியான இடம்….
படித்தால் மட்டும் போதுமா, என்ற திரைப்படத்தில் இடம்பெறும், தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்று சென்றாள். இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்… என்ற பாடல் எவ்வளவு இதமான இனிமையான பாடல். விண்ணளந்த மனம் இருக்க. மண்ணளந்த நடை எடுக்க பொன் அளந்த உடல் நடுங்க வந்தாள்…. ஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்… இந்தப் பாடலில் என்ன இல்லை? அழகியல் இல்லையா? உணர்ச்சி இல்லையா? வடிவம் இல்லையா? கருத்து இல்லையா? எல்லாமே அதிகப்படியாய்த் தான் உள்ளன…….அந்த ஒரு பாடல் அப்படத்தில் வரும் மற்ற அனைத்து (பிற கவிஞர்கள் எழுதிய)நல்ல பாடல்களையும் மறக்கச் செய்துவிடும் அளவிற்கு சிறப்பாக இருக்கும்.

பந்த பாசம் என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய, நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ? கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?. என்ற பாடலில்,
இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது குடும்ப நிலைமை எதிரில் வந்து கடமை என்றது காதல் என்னும் உதிர்ந்து கடமை வென்றது என்றும் மேடு பள்ளம் உள்ளது தான் வாழ்க்கை என்பது.. என்று கூறுவார். . இளமை உணர்வு ஒருபுறம் காதல் காதல் என்று கூறுகிறது. ஆனால் குடும்ப நிலைமை மனதில் எழுந்து வந்து நம் காதலால் குடும்பம் அழிய நேரிடும் என்ற உண்மையை உணர்த்தும் போது காதலைத் தியாகம் செய்கிறான் அவன். இவ்வாறு குடும்பக் கடமை வென்றது; காதல் தோற்றது. அதைக் காதல் எனும் பூ உலர்ந்து கடமை வென்றது. என்று கூறும் இடம்…ஆகா அருமை அருமை என்ன உணர்ச்சி என்ன ஆழமான கருத்து.. காதலை ஒரு பூவாக உருவகம் செய்தது. அருமையான வாழ்க்கைத் தத்துவம் நிறைந்த பாடல் என்று சிலாகிக்கத் தோன்றுகிறது.

பூமாலை எனும் திரைப்படத்தில் கயவன் ஒருவனால் தன் கற்பிழந்த பெண் பாடுவதாக அமைந்த பாடல்..
கற்பூர காட்டினிலே கனல் விழுந்துவிட்டதம்மா…உவமை.. பாருங்கள்.. அவள் நிலை.. கற்பூரத்தால் அமைந்த ஒரு காட்டில் ஒரு சிறு கனல் விழுந்தால் என்னவாகும்? கண்மூடித் திறக்குமுன் யாரும் அணைக்க முடியாமல் முற்றிலும் எரிந்து காற்றில் கரைந்து காணாமல் தானே போகும்.

பந்தபாசம் படத்தில் கவலைகள்  கிடக்கட்டும் மறந்துவிடு . என்ற இவரது 

பாடலைக் கேட்டால் எந்தக் கவலையும் படாமல்.. காரியம் நடக்கட்டும் என்று குறைந்தபட்சம் ஒருநாள் நம்மால் இருக்க முடியும். அந்த அளவிற்கு தன்னம்பிக்கை தரும் ஒரு பாடல்.

பாலும் பழமும் படத்தில் பழுத்துவிட்ட பழம் அல்ல… உதிர்வதற்கு…. என்னும் பாடலைக் கேட்டுப்பாருங்கள். அந்த இளம் மனைவி திடீரென இறந்து போன செய்தியைக் கேட்ட கணவனின் நிலையை நாம் உணரக்கூடும். இதயத்தில் ஒரு கனம் ஏற்பட்டு எல்லோ கண்களும் கலங்குவது நிச்சயம்.

“என்னதான் முடிவு?” என்று ஒரு திரைப்படம். அதில் இடம்பெறும் ஒரு பாடல், இந்தப் பாடலைச் சிறு வயதில் முதன் முதலாகக் கேட்கும்போது, என்னை அறியாமலேயே ஏதோ ஒரு உணர்வு, இன்னும் சொல்லப்போனால் சிறு பய உணர்வு கூட ஏற்பட்டது. இன்றுவரை ஏன் என்று தெரியவில்லை. அப்போதெல்லாம் இப்பாடலை எழுதியவர் யார் என்பதெல்லாம் தெரியாது. பாடல் இதுதான்.

'பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே. செய்த பாவம் தீரும் முன்னே இறக்க வைக்காதே'. இந்தப் பாடல் என்ன முயற்சி செய்தாலும் வேறு எவரும் எழுதியிருக்க முடியாது என்றுதான் இன்றும் தோன்றுகிறது. இப்படி எழுதுவதற்கு அசாதாரணமான தைரியமும் வேண்டும். இப்பாடலில் ஓரிடத்தில் வஞ்சகர்க்குச் சாபம் இடுவார்...வஞ்சகரின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ... வாய் நிறைந்த பொய்யருக்குச் சூலம் வரவேண்டாமோ.. காலழுகி, கையழுகிக் காடு செல்ல வேண்டாமோ? காதகனைக் கண்டு மக்கள் காறித் துப்ப வேண்டாமோ? வஞ்சனை செய்யும் மனிதருக்கு வாதநோய் வரவேண்டும்.. பிறரைப் பற்றி பொய்யான வார்த்தை சொல்லி, புறம் பேசித் திரியும் மனிதருக்கு, பொய் சொல்லி ஒருவனுக்கு துன்பம் உண்டாகும் மனிதருக்கு மரணம் வரவேண்டும் என்று கேட்கிறார்... பாடலின் பல்லவியில் நான் ஒரு பாவி என்னை மீண்டும் ஒரு முறை இந்த உலகில் பிறக்க விட்டுவிடாதே... இறைவனிடம் இப்படி விண்ணப்பிக்கிறார்.. நிறைய பாவம் செய்து இருக்கிறேன் அதற்கெல்லாம் தண்டனையை இங்கேயே அனுபவிக்க வேண்டும். கோடி வகை நோய் கொடையா சாகும்வரை அழவிடையா.. நான் இறந்தால் மீண்டும் பிறந்தாலும் இதே பாவத்தை மீண்டும் மீண்டும் செய்வேன் அதனால் எனக்கு இன்னொரு பிறவி வேண்டாம் என்பது பாடலின் கருத்து.

பூம்புகார் திரைப்படத்தில் மாதவியிடம் இருந்து நீண்ட காலம் கழித்து நல்ல புத்தியோடு திரும்பி, கண்ணகியிடம் கோவலன் வருகின்றபோது, பின்னணியில் கே.பி சுந்தராம்பாள் குரலில் கணீரென்று ஒலிக்கும் ஒரு பாடல்…தப்பித்து வந்தானம்மா தன்னந்தனியாக நின்றானம்மா…. காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல் தப்பித்து வந்தானமமா… ஆகா என்ன அருமையான வரிகள். காலம் தவறு செய்யும் எல்லோருக்கும், ஒரு பாடம் கற்பிக்கும் அது மாபெரும் அடியாக இருக்கும்… அந்த அடியைத் தாங்க முடியாது… அப்போது தப்பித்து ஓடத் தான் தோன்றும்.

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே புதையல் படத்தில் இடம்பெற்ற பாடல் கூட இவரது பாடல் என்று கூறப்படுகிறது. இப்பாடல் பற்றி வேறு கருத்துகளும் உள்ளன அது விவாதப் பொருள். நமக்கு வேண்டாம்.

என்ன கொடுப்பாய்? என்ற தொழிலாளி படப் பாடல், ஒரு ஜாலியான காதல் பாடல், இன்னொரு படத்தில் சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ? கற்பனை நிறைந்த மென்மையான ஒரு காதல் பாடல்.இப்படிப் பல அருமையான பாடல் எல்லாம் இவர் எழுதியவை. இவர் இயற்றிய பாடல்கள் எவை என முழுமையாக அறிந்து கொள்ளக் கூட இன்று இயலவில்லை.

மறக்க முடியுமா எனும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகச் சென்றார் மாயவநாதன். சற்று தாமதம் ஆகிவிட்டது. வழக்கமாக அமைத்த இசைக்கு தத்தகாரம் போட்டுக் காட்டுவார்கள் இசையமைப்பாளர்கள். ஆனால் அன்று பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்,
டி.கே.ராமமூர்த்தி, வேடிக்கையாக, தத்தகாரம் சொல்லாமல் கவிஞரின் பெயரையே அவர் உருவாக்கிய இசைக்கு வரிகளாக பாடிக் காட்ட… மாயவநாதன் ….மாயவநாதன்…. மாயவநாதன்….. என்று.. உடனே கவிகளுக்கே உரிய கவி கோபம் இவருக்கு வந்துவிட ,”பாட்டு எழுத முடியாது”. என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்… பின்னர் அப்படத்திற்குக் கதை வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்களே அப்பாடலை, காகித ஓடம் கடலலை மேலே போவதைப்போல மூவரும் போவோம் என்று எழுதினார். இப்படி கோபித்துச் சென்றது கவிஞர்களின் இயல்பு. வித்யா கர்வம் என்றுஅதைச் சொல்வார்கள்.
‘கவியரசர் கண்ணதாசனின் செல்வாக்கை உடைத்த முதல் கவிஞர் மாயவநாதன்’ என்று, கவிஞர் நா.காமராசன் தன்னுடைய நூல் ஒன்றில் மாயவநாதனைக் குறிப்பிடுகிறார் . அந்த அளவிற்கு, படிக்காத இந்த பாமர விவசாயி தனக்குள்ளே, கவித்துவம் நிறைந்தவனாக இருந்தான்.
கவிஞர் கண்ணதாசன் ஒருவரே கவிஞர் என்று அறியப்பட்ட காலம் அது. அவரது பாடல்களுக்கு ஈடும் இணையும் இல்லை. எவரும் அவரைப் போல எழுதி இனிமேல் சாதிக்க முடியாது என்று இருந்த காலம் அது. கவியரசர் பாடலை தவிர வேறு எவருடைய பாடலும் அங்கீகரிக்கப்படாத காலம் மாயவநாதன் வாழ்ந்த காலம். அந்தக் காலகட்டத்தில் அழியாத பாடல்களை தந்தவர்.
கவிஞர் மாயவநாதன் பிறந்த ஊரான பூலாங்குளம் என் சொந்த ஊரின் பக்கத்து ஊர்தான். என் தங்கை கூட அவ்வூரில் தான் வாழ்க்கை நடத்துகிறாள். அவர் என் உறவினர் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை எப்போதும் உண்டு. அதே நேரத்தில் கொண்ட கொள்கையினால் இவ்வுலக வாழ்க்கையைப் பொருள் இன்றி வாழ முடியாது என்பதைப் புரிந்து கொள்ளாமலே, தன் இனிய
குடும்பத்திற்கு வறுமையைச் சொத்தாகக் கொடுத்துவிட்டுப் போய் விட்டாரே, என்ற வருத்தமும் உண்டு. இருந்தாலும் அவரது பாடலே நமக்கு மருந்தாக….

“கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு..

Thanks

முதுகலை பட்டதாரி ஆசிரியர் க.முத்துமணி

https://www.seithisaral.in/

கவிஞர் மாயவநாதன் பாடல் நயம்

1.வேல்தேடி- - -எறிகின்ற- - -வீரமுண்டு
நூல்தேடி- - - -தருகின்ற- - -ஞானமுண்டு


இவ்வரிகளின் மூலம்,தமிழனுக்கு வீரமுமுண்டு, விவேகமுமுண்டு எனநயம்படச்சொல்கிறார்.

2.எங்கிருந்து- - - - - -வந்தவரோ
நெஞ்சில்நின்ற- - பாவலரோ


நம் நெஞ்சில் நின்ற இப்பாவலனை புகழுவதற்குகூட,சொற்களை விட்டுச்சென்ற வித்தகனிவன்.

3.முத்துநகைப்- - - பெட்டகமோ
முன்கதவு- - - - - ரத்தினமோ


முத்துப்பற்களின் புன்சிரிப்பு வாய் என்ற
பெட்டகத்திலிருந்து வருவதாகவும்,அந்த
பெட்டகத்திற்கு, ரத்தின நிறமமைந்த இதழ்கள்
கதவுகளாகவும், உள்ளதாகவும் உவமையழகில்உருவாக்கிய வரிகளிவை.


4.மணமகனுக்கு 21 வயதும்,மணமகளுக்கு 18
வயதும் நிறைவுற்றிருந்தால் மட்டுமே,
அரசு வழங்கும் திருமண உதவி பெறமுடியும்
என்பது சட்டம்.நம் கவிஞனும் இதைத்தான்
வலியுறுத்துகின்றானோ?


ஆண்:-இவளொரு..அழகிய....பூஞ்சிட்டு_வயது
..........ஈரொம்.......போது.......பதினெட்டு
பெண்:-இவருக்கு..வயசு........மூவெட்டு_பொங்கி
..........இளமை......சதிராடும்..உடற்கட்டு

 

 



படம் . . . . . . இசையமைப்பாளர்
பாடல். . . . . . பாடகர்கள்


படித்தால் மட்டும் போதுமா-1962
. . . . . . . . . . . . . . .விஸ்வநாதன்-ராமமூர்த்தி
1.தன்னிலவு தேனிரைக்க - P.சுசீலா

பந்தபாசம் - 1962 - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
2.நித்தம் நித்தம் மாறுகின்ற - சீர்காழி கோவிந்தராஜன்
3.இதழ் மொட்டு - P.B.ஸ்ரீனிவாஸ்,P.சுசீலா
4.கவலைகள் கிடக்கட்டும்
. . . . . . . . . T.M.சௌந்தரராஜன், P.B.ஸ்ரீனிவாஸ்
5.எப்போ வச்சுக்கலாம் - J.P.சந்திரபாபு

தென்றல் வீசும் - 1962
. . . . . . . . . . . . . . விஸ்வநாதன்-ராமமூர்த்தி
6.ஏ மாமா கோவமா
. . . . . . . . .G.K.வெங்கடேஷ், L.R.ஈஸ்வரி
7.அழகான மலரே - P.B.ஸ்ரீனிவாஸ்
8.சந்தனத்தில் நிறமெடுத்து - S.ஜானகி
9.ஆசையில் பிறப்பது - P.சுசீலா
10.ஆசையில் பிறப்பது - L.R.ஏஸ்வரி

இதயத்தில் நீ - 1963 - M.S.விஸ்வநாதன்
11.சித்திரப்பூவிழி வாசலிலே - P.சுசீலா,L.R.ஈஸ்வரி

தொழிலாளி - 1964 - K.V.மகாதேவன்
12.வருக வருக திருமகளின்
. . . . . . . . . . . . .T.M.சௌந்தரராஜன்,P.சுசீலா
13.என்ன கொடுப்பாய்
. . . . . . . . . . . . . T.M.சௌந்தரராஜன்,P.சுசீலா
14.அழகன் அழகன் - P.S.சுசீலா,ஜானகி

பூம்புகார் - 1964 - R.சுதர்ஸனம்
15.தமிழ் எங்கள் உயிரானது - P.சுசீலா
16.காவிரிப்பெண்ணே - T.M.S. ,S.ஜானகி
17.தொட்டவுடன்(குறும் பாடல்)
. . . . . . . . . . . . . . . . . . . . . .K.P.சுந்தராம்பாள்
18.(பவளமணி மாளிகையில்)தப்பித்து வந்தானம்மா
. . . . . . . . . . . . . . . . . . . . . . K.P.சுந்தராம்பாள்
19.(துன்பமெலாம்)உறவாடும்பண்புதனை
. . . . . . . . . . . . . . . . . . . . . . K.P.சுந்தராம்பாள்
20.(நீதியேநீஇன்னும்)அன்றுகொல்லும்
. . . . . . . . . . . . . . . . . . . . . . K.P.சுந்தராம்பாள்

தாயின் கருணை - 1965 -G.K.வெங்கடேஷ்
21.பூந்தென்றல் இசைபாட - P.B.ஸ்ரீனிவாஸ்
22.ஒருகோடி பாடலுக்கு - சீர்காழி கோவிந்தராஜன்
23.சின்ன சின்ன கோயில் - S.ஜானகி,A.P.கோமளா
24.எங்கிருந்து வந்தவரோ - L.R.ஈஸ்வரி

பூமாலை - 1965 - R.சுதர்ஸனம்
25.(கற்பூரக் காட்டினிலே)பெண்ணே உன்கதி
. . . . . . . . . . . . . . . . . . . . . . .C.S.ஜெயராமன்
26.(உலகமே எதிர்த்தாலும்)பெண்ணே உன்கதி
. . . . . . . . . . . . . . . . . . . . . . .C.S.ஜெயராமன்

என்னதான் முடிவு - 1965 - R.சுதர்ஸனம்
27.(நீண்டமதிற்சுவரும்)பாவிஎன்னைமறுபடியும்-T.M.S.
28.உன்னைப் பாத்து மயிலக்காளை - P.சுசீலா

காதல் படுத்தும் பாடு - 1966 - T.R.பாப்பா
29.இவளொரு அழகிய பூஞ்சிட்டு - T.M.S.,P.சுசீலா
30.மேலாடை காற்றாட - P.சுசீலா
31.(பெற்றெடுத்த தாயும்)காவலும் இல்லாமல் - T.M.S.

மறக்க முடியுமா - 1966 - ராமமூர்த்தி
32.வானும் நிலமும் வீடு - A.L.ராகவன்

வாலிப விருந்து - 1967 - R.சுதர்ஸனம்
33.அவன் காதலித்தான் - L.R.ஈஸ்வரி

கற்பூரம் - 1967 - T.P.ராமச்சந்திரன்
34.அழகுரதம் பொறக்கும்-தாராபுரம்சுந்தரராஜன்- P.சுசீலா

காதல் வாகனம் - 1968 - K.V.மகாதேவன்
35.வா பொன்னுக்கு பூவைக்கவா - T.M.S.,P.சுசீலா

தெய்வீக உறவு - 1968 - K.V.மகாதேவன்
36.முத்து நகைப் பெட்டகமோ -T.M.S.
37.சிந்தாமசிரிப்பாசிங்காரபாப்பா-M.S.ராஜேஸ்வரி

தேர்த் திருவிழா - 1968 - K.V.மகாதேவன்
38.அடிக்கட்டுமா முரசு - T.M.S.,P.சுசீலா

காவல் தெய்வம் - 1969 - தேவராசன்
39.அய்யனாரு நெறஞ்சவாழ்வு
. . . . . . . . . . . .தாராபுரம் சுந்தரராஜன்,P.சுசீலா

மகிழம்பூ - 1969 - T.P.ராமச்சந்திரன்
40.தனக்கு தனக்கு என்று
. . . . . . . . . . T.M.S.,சீர்காழி கோவிந்தராஜன்
41.ஆலோலம் ஆலோலம் - L.R.ஈஸ்வரி,A.P.கோமளா
42.மாம்பூ மகிழம்பூ - L.R.ஈஸ்வரி

தாலாட்டு - 1969 - M.L.ஸ்ரீகாந்த்
43.மல்லிகை பூப்போட்டு கண்ணனுக்கு
. . . . . . T.M.S.,சூலமங்கலம் ராஜலட்சுமி

மனைவி - 1969 - K.V.மகாதேவன்
44.(பழுத்த நிலவெரிக்க)அண்ணியவள் தாகத்துக்கு
. . . . . . P.சுசீலா,L.R.ஈஸ்வரி

கெட்டிக்காரன் - 1971 - சங்கர்-கணேஷ்
45.வா வா இது ஒரு ரகசிய - L.R.ஈஸ்வரி

தேரோட்டம் - 1971 - S.M.சுப்பையா நாயுடு
46.கந்தனின் தேரோட்டம் - சூலமங்கலம் ராஜலட்சுமி
47.அட மாமா இப்படி - S.ரங்கராஜன், L.R.ஈஸ்வரி

திருவருள் - 1975 - வைத்தியநாதன்
48.(வேல் வேல்)எங்கும் திரிந்து வரும்
. . . . . . . . . . . . . . . . . . . . .T.M.S.,குழுவினர்
49.(முத்துத் திருப்புகழை) - மலைகளிலே சிறந்த மலை
. . . . . . . . . . . . . . சீர்காழி கோவிந்தராஜன்
50.(கன்னித் தமிழுக்கு) - மருத மலைக்கு நீங்க
. . . . . . . . . . . . . . . . . . . . . T.M.S.,குழுவினர்


Thanks

 பொன்.செல்லமுத்து

Tuesday, January 12, 2021

சந்திரபாபு...

 


தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?
‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர். ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்தவர். தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் புகழின் உச்சியை அடைந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
ஜோசப் பிச்சை” என்னும் இயற்பெயர் கொண்ட சந்திரபாபு, 1927-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி தூத்துக்குடியில் பிறந்தார். பெற்றோர் ஜே.பி.ரோட்டரிக்ஸ் - ரோசரின்.
இவருடைய குடும்பம் சுதந்திரப் போராட்டக் காலத்தில், விடுதலைப் போரில் ஈடுபட்டு, ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதால், சிறிதுகாலம் சந்திரபாபுவின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது.
சிறிது காலத்துக்கு பிறகு அவருடைய குடும்பம் மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது
மெட்ராஸ் பாஷையை அவரைப்போல் எவரும் தத்ரூபமாகப் பேசவே முடியாது. சபாஷ் மீனா படத்தில் மெட்ராஸ் பாஷையில் பேசி அசத்துவார்
சந்திரபாபு மேற்கத்திய பாணிப் பாடல்களைப் பாடுவதில் மிகச் சிறந்து விளங்கினார். அவரது பாடல்கள் பலவற்றிற்கு அவரே ஓரளவு இசையமைத்ததாகவும் கூறுவர்.
சுமார் அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும் இன்றளவும் ஒலிக்கும் அவரது சில பாடல்கள்:
ஜாலி லைப் ( கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
விளையாடு ராஜா ( நான் சொல்லும் ரகசியம் 1959 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
கண்மணிப் பாப்பா ( தட்டுங்கள் திறக்கப்படும் 1966 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
தாங்கதம்மா (செந்தாமரை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
ஆளு கனம் ( கண்கள் 1953 கம்பதாசன் இயற்றிய பாடல் )
கோவா மாம்பழமே ( மாமன் மகள் 1955 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
புத்தியுள்ள மனிதன் ( அன்னை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
ராக் ராக் அண்ட் ரோல் ( பதிபக்தி 1958 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
பம்பரக் கண்ணாலே ( மணமகள் தேவை 1957 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
ஐயோ மச்சான் மன்னா ( ஸ்ரீ வள்ளி 1961 ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
ஒற்றைக் கண்ணு ( வாலிப விருந்து 1967 சீத்தாராமன் இயற்றிய பாடல் )
எப்போ வச்சிக்கலாம் ( பந்தபாசம் 1962 மாயவநாதன் இயற்றிய பாடல் )
என்னைத் தெரியலையா ( யாருக்கு சொந்தம் 1963 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
சிரிப்பு வருது ( ஆண்டவன் கட்டளை 1964 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
தனியா தவிக்கிற வயசு ( பாதகாணிக்கை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
கவலையில்லாத மனிதன் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
பிறக்கும் போதும் அழுகின்றாய் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
ஒன்னுமே புரியல ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
ஹலோ மை டியர் ( புதையல் 1957 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
குங்குமப்பூவே ( மரகதம் 1959 கு.மா.பாலசுப்ரமணியன் இயற்றிய பாடல் )
தடுக்காதே என்னை ( நாடோடி மன்னன் 1958 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
தில்லானா பாட்டு ( புதுமைப்பித்தன் 1957 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
சரியான ஜோடி தந்தானே ( காத்தவராயன் 1958 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
நான் ஒரு முட்டாளுங்க ( சகோதரி 1959 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
சந்தோஷம் வேணுமென்றால் ( சுகம் எங்கே 1954 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
அச்சு நிமிர்ந்த வண்டி ( குலேபகாவலி 1955 )
சொல்லுறதை சொல்லிப்புட்டேன் ( பாண்டித்தேவன் 1959 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
நீ ஆடினால் ( பாண்டித்தேவன் 1959 )
மனதிற்குகந்த மயிலே ( பெற்றமனம் 1960 )
பாடிப் பாடிப் ( பெற்றமனம் 1960 பாரதிதாசன்

சொந்த வாழ்க்கை

நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை. அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர். அவருக்குப் பொதுவாகவே தன் நடிப்பின் மீது எப்பொழுதும் ஒரு கர்வம் உண்டு, ஆகையால் ‘நினைத்ததை செயல்படுத்தியே தீருவேன்’ என்ற பிடிவாத குணம் என்பதால் பலரால் திமிர் பிடித்தவன் என்று புரிந்துகொள்ளப்பட்டார். இதனால், சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் அவரைச் சூழ்ந்தே இருந்தன. மேலும் குடிபழக்கம் அதிகம் உள்ளவராகவும், பெத்தடின் என்னும் போதைப்பொருளுக்கு அடிமையானவராகவும் இருந்தார்.

இறப்பு

சந்திரபாபுவின் இறுதிக்காலத்தில் சோகம் அதிகமாக அதிகமாக, மதுபழக்கமும் அதிகரித்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் நாள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47 வது வயதில் இறந்தார்.

உண்மையை சொல்லப்போனால், சந்திரபாபுவின் நடிப்பு ஒரு சவால்தான். தனக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, நடிப்பில் புதுமையை புத்தியவர். தன்னுடைய புதுமையான சிந்தனைகளை, தான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரமாக வெளிப்படுத்தியவர். சந்திரபாபு என்ற ஒரு கலைஞன் இறந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச் சென்ற குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.