Search This Blog

Showing posts with label Music. Show all posts
Showing posts with label Music. Show all posts

Thursday, December 31, 2020

இசையமைப்பாளர் ஷியாம்

கேரளத் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஷியாம். என்றாலும் இவரது பூர்வீக ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாசரேத். ஆனால் இவரது நினைவு தெரிந்த நாளிலிருந்து சென்னையில்தான் வளர்ந்தது படித்தது எல்லாம். லால்குடி ஜெயராமிடம் முறையாக வயலின் கற்றவர்..
இசையமைப்பாளர் ஷியாம் "மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்" பாட்டைக் கேட்டதுமே "அடடா இளையராஜா என்னமா இசையமைத்திருக்கிறார்" என்று என் காது படச் சொன்னவர்கள் உண்டு. இன்னும் அப்படியே நம்புபவர்களும் உண்டு. ஆனால் அந்தப் பாடல் இடம்பெற்ற "மனிதரில் இத்தனை நிறங்களா" படத்தின் இசையமைப்பாளர் ஷியாம். இந்தப் பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு பின்னணியில் ஒலிக்கும் பெண் குரல் எஸ்.பி.சைலஜாவுக்கு இதுவே முதல் பாடலாக அமைந்தது. இதே படத்தில் "பொன்னே பூமியடி" அந்தக் காலத்து இலங்கை வானொலி நினைவுகளைப் பலருக்குக் கிளப்பி விடும் அழகான பாட்டு. எஸ்.ஜானகியும் வாணி ஜெயராமும் பாடியிருப்பார்கள். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடைய இசைப் பட்டறையில் விளங்கிய வாத்திய விற்பன்னர் சாமுவேல் ஜோசப் தான் இந்த ஷியாம். கேரளத் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஷியாம். என்றாலும் இவரது பூர்வீக ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாசரேத். ஆனால் இவரது நினைவு தெரிந்த நாளிலிருந்து சென்னையில்தான் வளர்ந்தது படித்தது எல்லாம். லால்குடி ஜெயராமிடம் முறையாக வயலின் கற்றவர்.1954-இல் கிருத்தவக் கல்லூரியில் பி.ஏ., படித்துக் கொண்டிருந்தபோது தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய இசையைக் கற்றார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் இவரும் வகுப்புத் தோழர்கள். இசை மீது ஆர்வத்தால் சட்டப்படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு திரையுலகில் நுழைந்தார். அன்றைய பிரபல இசையமைப்பாளர்களான சி.என்.பாண்டுரங்கம், எஸ்.தக்ஷிணாமூர்த்தி ஆகியோருடனும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி ஆகியோருடனும் உதவியாளனாக இருந்து இசையறிவை வளர்த்துக் கொண்டேன். இவர் தனியாக இசையமைத்த முதல்படம் “அம்மா-அப்பா”. இப்படம் நடிகர் ரவிச்சந்திரன் – ஷீலாவின் சொந்தப்படம். பிறகு ஷீலாவின் மூலமாக மலையாளத் திரையுலகில் நுழைந்தார்.
இந்தி இசையமைப்பாளர் சலீல் சவுத்ரியிடம் பல படங்களுக்கு உதவியாளனாகப் பணிபுரிந்ததனால் இவரது இசையமைப்பில் இந்தி மெட்டு சாயல்கள் காணப்படும்.

ஷியாம் மேதமை நிறைந்த இசையமைப்பாளர். அவருடைய பாட்டுகளுக்கு சில தனித்தன்மை உண்டு. முழுமையாகவே மேலைநாட்டு இசைப்பாணி கொண்டவை. ராக், ப்ளூஸ் போன்ற பாணியிலும் இசையமைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் கிளாஸிக் பாணியில்தான். ஆனால் அதை மிகத்திறமையாக இந்திய இசை போல ஆக்கிவிடுவார். அந்தக் கதைச்சந்தர்ப்பத்துக்கு முழுமையாகவே ஒத்துவரும்படி அந்த இசை அமைந்திருக்கும். 

சலீல் சௌதுரிக்கு நிறைய சீடர்கள் உண்டு. ஆர்.கே.சேகர், அவருடைய மகன் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள். ஆனால் மிகச்சிறந்த சீடர் ஷியாம்தான். அர்ப்பணிப்புள்ள சீடர் மட்டுமல்ல, அவரிடம் நெடுங்காலம் இருந்தவர். அவருடைய அந்த மரபை முன்னெடுத்தவர் சலீல் சௌதுரி பாடலில் எதிர்பாராத நோட்டுகள் விபரீதமான திருப்பம் போல வருவதுதான் அழகு. 

மலையாளத்தில் அவருடைய சாதனைப்பாடல்கள் ஏராளமாக உள்ளன. பல பாடல்களை இங்கே உள்ள இசையமைப்பாளர்கள் திரும்பப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் அடிப்படையில் வயலின் கலைஞர். வயலினில் ஒரு மேதை என்றுதான் சொல்வேன். அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாமே வயலின் நோட்டுகள் கொண்டவைதான். உதாரணமாக இந்த மாந்தளிரே பாடலில் மிகக் கவர்ச்சியான இடம் மாந்தளிரே மயக்கமென்ன உன்னை தென்றல் தீண்டியதோ என்ற வரியிலுள்ள தென்றல் என்ற சொல். அது ஒரு சரியான வயலின் நோட். கேட்கக்கேட்க புதுமையாக உள்ளது அது. என்னைப்போல் என்ற எதிர்நோட்டும் வயலினுக்கு உரியதுதான். நிறையப்பாடல்களை வயலினாகவே கேட்டு ரசிக்கலாம்.

எஸ்.பி.ஷைலஜா, கோவை முரளி, ராஜ்குமார் பாரதி, ஹரன் மற்றும் சுஜாதா போன்ற பாடகர், பாடகியர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
ஐதராபாத்தில் எடுக்கப்பட்ட ஆங்கிலப் படமான ‘The Naughty Pair” படத்திற்கு இசையமைப்பாளர் இவரே.
இவரது இசையமப்பில் 1972-இல் உருவான ‘கருந்தேழ் கண்ணாயிரம்’ என்ற மாடர்ன் தியேட்டர்சாரின் படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோரமா, சதன் ஆகியோர் இணைந்து பாடிய ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே’ என்ற பாடல் இவரை மிகவும் பிரபலமாக்கியது. ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் 1976-இல் வெளிவந்த ‘உணர்ச்சிகள்’ படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி இணைந்து பாடிய ”நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்” என்ற பாடலும் பிரபலம். 
இதே ஆண்டில் வெளிவந்த மனிதரில் இத்தனை நிறங்கள் படத்தில் இடம்பெற்ற ‘மழைதருமோ என் மேகம்’, பொன்னே பூமியட என்ற பாடலின் மெட்டினை ஒரு மலையாளப் படத்திற்கும் பயன்படுத்தியிருந்தார். 1979-இல் ‘பஞ்சகல்யாணி’ என்ற படத்திற்கு இசையமைத்தார். இதே ஆண்டில் நீ சிரித்தால் நான் சிரிப்பேன் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ‘உன்னைப் படைத்ததும் பிரம்மன் ஒருகணம் மயங்கி நின்றுவிட்டான் என்ற பாடல் அனைவரையும் மயங்கச் செய்தது. இதே ஆண்டில் வெளிவந்த ‘தேவதை’, ‘நான் நன்றி சொல்வேன்’, ‘தேவைகள்’ முதலிய படங்களின் பாடல்களும் மிகவும் வரவேற்பைப் பெற்றன.
‘மற்றவை நேரில்’ [1980], ‘வா இந்தப் பக்கம்’ [1981], ’இதயம் பேசுகிறது’ [1982], குப்பத்துப்பொண்ணு [1982],’கள்வடியும் பூக்கள்’, ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது [1983], நன்றி மீண்டும் வருக, குயிலே குயிலே [1984] மலையாளத்தில் இப்படம் கூடினெத்தேடி என்ற பெயரில் வெளியானது, குழந்தை ஏசு [1984], நலம் நலமறிய ஆவல் [1984], சந்தோஷக்கனவுகள் [1985], விலாங்கு மீன் [1985], பாசம் ஒரு வேஷம் [1987],விலங்கு[1987], சலனம் [1987], ஜாதிப்பூக்கள்[1987], கல்லுக்குள் தேரை [1987] போன்ற படங்கள் ஷியாமின் இசை ஞானத்தை வெளிப்படுத்திய படங்கள்.
இவருக்கு மனைவியும் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் என 3 குழந்தைகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவிலும் மகள் பாலக்காட்டிலும் உள்ளனர்.
18.11.1983 ஜெமினி சினிமா இதழிலிருந்தும், இலங்கை வானொலி வர்த்தக சேவை இன்னிசைச் சுவடிகள் நிகழ்ச்சியிலிருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
நாடக உலகில் இருந்து வந்தாலும் எண்பதுகளில் தன் படங்கள் ஒவ்வொன்றையும் சற்று மாறுதலான வடிவத்தில் கொடுத்துக் கவனிக்க வைத்தார் இயக்குநர் மெளலி.

Tuesday, December 29, 2020

கிராமபோன் மனிதர்! இ.சந்தானகிருஷ்ணன்

 


போனோகிராஃப் (phonograph), அல்லது கிராமபோன் (gramophone) என்பது 1877 இல் ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் தொமஸ் அல்வா எடிசன் கண்டுபிடித்த ஒரு கருவியாகும்.
அது பேப்பர் பண்டல் இல்ல... எல்லாமே கிராமபோன் இசைத்தட்டுகள். தமிழ், ஆங்கிலம், மராத்தி, தெலுங்கு, துளுனு 30 ஆயிரத்துக்கு மேல இருக்கு..!’’ சிரிக்கிறார் இ.சந்தானகிருஷ்ணன். சென்னை திருநின்றவூரில் வசித்து வரும் இவர், செக்ரட்டேரியட்டில் ஜாயிண்ட் செக்ரட்டரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தன் வீட்டு மாடி அறையை முழுவதுமாக தன் சேகரிப்புக்காகவே ஒதுக்கியிருக்கிறார். கிராமபோன் ரெக்கார்ட்ஸ், கேசட்ஸ், பழைய சினிமா பத்திரிகைகள்... என அனைத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்.‘‘பூர்வீகம் இதே ஊர்தான். மூணு வயசுல அப்பா தவறிட்டார். அம்மாதான் வளர்த்தாங்க. மூணாவது படிக்கிறப்பவே சினிமா பைத்தியமாகிட்டேன்! எங்களூர்ல அப்ப டூரிங் டாக்கீஸ் கிடையாது.


வானொலில சினிமா பாட்டு வாரத்துக்கு ஒருமுறை வரும். இந்தச் சூழல்ல எங்க பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு தெய்வமா தெரிஞ்சார்! தினமும் கிராமபோன்ல சினிமா பாடல்களை ஓடவிடுவார். சத்தம் கேட்டதுமே அவர் வீட்டு திண்ணைல போய் உட்கார்ந்துப்பேன். அம்மாவுக்கு பயம் வர ஆரம்பிச்சது. இப்படியே போனா நான் கெட்டுடுவேன்னு என்னை வடசென்னைல இருந்த எங்க மாமா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அவர் ரொம்பவே கண்டிப்பானவர். எப்பவும் பாடப்புத்தகமும் கையுமா இருக்கணும். இல்லைனா தோலை உரிச்சுடுவார். திருநின்றவூர்ல இருந்தப்பவே சினிமா பாடல்களை விரும்பிக் கேட்பேன். அப்படியிருக்கிறப்ப வடசென்னை வந்த பிறகு சும்மா இருப்பேனா? மாமா வீட்டுக்கு எதிர்லயே டூரிங் டாக்கீஸ் இருந்தது. அங்கதான் தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் வெளியாச்சு. போதாதா? சினிமா மோகமும் வந்தது...’’ என்று சொல்லும் சந்தானகிருஷ்ணன், இதன் பிறகே இந்தி, ஆங்கிலப் பாடல்களையும் கேட்க ஆரம்பித்திருக்கிறார். ‘‘மாமா வீட்டுக்குப் பக்கத்துல ஆங்கிலோ இந்தியர்கள் வசிச்சாங்க. அங்க என்னை மாதிரியே ஒரு பையன் ராக் அண்ட் ரோல் பாடலை கிராமபோன்ல கேட்பான்.

தினமும் அங்க போயிடுவேன். அதே மாதிரி ‘ஆவாரா’, ‘பர்சாத்’ இந்திப் படங்களை எல்லாம் டூரிங் டாக்கீஸ்ல திரையிடுவாங்க. ஒண்ணும் புரியாது. ஆனாலும் பாட்டுக்காகவே பார்ப்பேன். ஸ்கூல் முடிஞ்சதும் நேரா மார்க்கெட் போவேன். அது பழைய மார்க்கெட். ஒரு பெரிய கூடைல மொத்தமா ரெக்கார்ட்ஸை கொண்டு வந்து கடைகள்ல விநியோகம் செய்வாங்க. அதை வேடிக்கை பார்ப்பேன். அலுக்கவே அலுக்காது. இந்த பழைய மார்க்கெட் எரியற வரைக்கும் கிட்டத்தட்ட தினமும் அங்க போயிருக்கேன். புதுப்பிச்ச பிறகும் வேலைல இருந்து ஓய்வு பெறும் வரை மாலைல அங்க போயிடு வேன். கைல ஏதாவது ரெக்கார்ட் வாங்காம வீட்டுக்கு வந்ததே இல்ல! 1972 வரை கிராமபோன் ரெக்கார்ட்ஸ் புழக்கத்துல இருந்தது. அப்புறம் நிறுத்திட்டாங்க. ஆனா, எல்லா மாவட்டங்கள்லயும் புரோக்கர்ஸ் இருந்தாங்க. தூத்துக்குடி மணி, மதுரை பாலு, காரைக்குடி மகேஸ்வரன்னு பெரிய பட்டியலே உண்டு. அவங்க வழியா ரெக்கார்ட்ஸ் வாங்க ஆரம்பிச்சேன். வார இறுதியானா போதும்... ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு பஸ் ஏறிடுவேன். அங்க புரோக்கர்ஸ் எனக்காக கைல ரெக்கார்ட்ஸோட காத்திருப்பாங்க. தமிழ்ப் பாடல்களை இப்படி வாங்கினேன். இந்திப் பாடல்களை மும்பை, தில்லிக்கு பறந்தும்; தெலுங்குப் பாடல்களுக்கு ஆந்திரா போயும் வாங்குவேன்.

இப்படித்தான் ‘சுபோதயம்’ தெலுங்குப் பட ரெக்கார்ட் வாங்க திருப்பதி, விஜயவாடா, குண்டூர்னு அலைஞ்சேன். கே.வி.மகாதேவன் இசைல அந்தப் படத்துல எல்லா பாடல்களும் சூப்பரா இருக்கும். அதுவும் பி.சுசீலா பாடின ‘ஆசிந்த நீகேணடா...’வை நாளெல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம். எங்க திரிஞ்சும் அந்தப் பட ரெக்கார்ட் கிடைக்கலை. ரொம்ப வெக்ஸ் ஆகிட்டேன். சரியா ஒரு மாசம் கழிச்சு பெங்களூர்ல இருந்து ராஜா என்கிற புரோக்கர் ஒரு பெட்டி நிறைய தெலுங்கு, கன்னட ரெக்கார்ட்ஸை கொண்டு வந்தார். அதை அப்படியே வாங்கி பிரிச்சுப் பார்க்காம வீட்ல வைச்சிருந்தேன்.

ஒரு மாசம் கழிச்சு பெட்டியைத் திறந்தா... முதல் கிராமபோன் ரெக்கார்டே ‘சுபோதயம்’! அந்த நொடில எனக்குள்ள பூத்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல! இப்படி நாம சின்சியரா தேடறது எதிர்பாராத வகைல கிடைக்கும்...’’ என்று சொல்லும் சந்தானகிருஷ்ணனிடம் திரைப்படப் பாடல்கள் தவிர பெருந்தலைவர்களின் பேச்சுக்கள் கொண்ட ரெக்கார்ட்ஸும் இருக்கின்றன. ‘‘மதன்மோகன் மாளவியா, ரவீந்திரநாத் தாகூர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, ஜான் எஃப். கென்னடி... இப்படி பல தலைவர்களோட பதிவு செய்யப்பட்ட ரெக்கார்ட்ஸ் என் சேகரிப்புல இருக்கு.இதுல என்ன சிறப்புன்னா... அண்ணல் அம்பேத்கர் ஆர்கெஸ்ட்ரா அமைச்சுப் பாடின பாடல்கள், மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தியின் ஜாஸ் இசை, எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆல்பம், இரண்டாம் உலகப் போர் காலத்துல பிரெஞ்சு டெலிகிராஃபிஸ்ட் பதிவு செஞ்ச அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேச்சு, ஹிரோஷிமால வெடிகுண்டு போடப்பட்டதும் ஏற்பட்ட சத்தம், அடால்ஃப் ஹிட்லர் போரை அறிவிச்சு ஆற்றிய உரை... இப்படி பல பொக்கிஷங்கள் இருக்கு...’’ என்று கண்கள் விரிய விவரித்த சந்தானகிருஷ்ணன், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன் சேகரிப்பையும் விரிவுபடுத்தியுள்ளார்.

‘‘கேசட்ஸ், விசிஆர், டிவிடினு என் தேடலும் சேகரிப்பும் நிற்கவே இல்ல. மவுனப்பட காலத்துல வெளியான படங்கள்ல சிலதும் என் சேகரிப்புல இருக்கு. அதேமாதிரி சினிமா பத்திரிகைகள். இப்ப பழைய புகைப்படங்களையும் ஃபிலிம் ரீல்ஸையும் டிஜிட்டலைஸ் செய்துட்டு வரேன். என்னை மாதிரியே என் சின்ன பெண்ணுக்கும் இதுல ஆர்வமிருக்கு. அதனால எனக்கு அப்புறம் அவங்க இதைப் பார்த்துப்பாங்க. இப்பவே ஆய்வுக்காக பலரும் என்னைத் தேடி வர்றாங்க. ஒரு டிரஸ்ட் அமைச்சு இதை எல்லாம் வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தற மாதிரி செய்யணும்... பார்க்கலாம்என்கிறார் சந்தானகிருஷ்ணன். கும்குமம் இதழில் இருந்து பெறப்பட்டவை .
http://kungumam.co.in/

Monday, September 21, 2020

கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்

 


1950-கள் தொடங்கி 1980-கள் வரையிலான காலப் பகுதியில் திரையிசைப் பிரியர்களின் இதயங்களில் கொள்ளை கொண்ட பல பாடல்களை எழுதியவர், இலக்கிய எழுத்தாளர்.
குறைந்த அளவில் பாடல்கள் புனைந்தாலும் ரசிகர்கள் மனதில் நிறைந்த அளவில் முத்திரை பதித்த கவிஞர் இவர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள வேளுக்குடி கிராமத்தில் 1920-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி பிறந்தவர் கு.மா.பாலசுப்பிரமணியம். தந்தையார் குறிச்சி மாரிமுத்து. இவரது 4 வயதிலேயே தந்தை காலமாகிவிட்டதால் 6-ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடரமுடியவில்லை. தாயார் தமிழ், இலக்கிய ஆர்வலராக இருந்தபடியால் தாயாரிடமே தமிழும், ஆன்மீகமும் கற்றுக்கொண்டார்.
தனது 16-ஆவது வயதிலேயே சிறு கதைகளைத் தமிழ் வார மஞ்சரியில் எழுதிவந்தார். இவரது தமிழ் ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட சென்னைத் தமிழ் ஆசிரியர் ஒருவர் இவருக்குத் தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். பிரபல தமிழ்ப் பத்திரிகைகளான தமிழ் முரசு, தமிழ்க்குரல் போன்றவற்றில் வெளிவந்த இவரது கட்டுரைகளைப் பார்த்த அறிஞர் அண்ணாவின் பாராட்டை இவர் பெற்றார்.. 1945 இல் கோழும்பில் இருந்து வெளிவந்த வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக இணைந்தார்.
1951-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் சொந்தத் தயாரிப்பான ‘ஓர் இரவு’ பாடல் சந்தர்ப்பம் இவருக்குக் கிடைத்தது. பெண்ணினத்தின் துன்பம் வெளிப்படுத்தும் வகையில் ’பெண்ணாக பிறந்தாலே வாழ்வில் எந்நாளும் துயர் தானோ’ என்ற பாடல் எழுதினார். 1952-இல் ஆர்.சுதர்சனத்தின் இசையில் ‘வேலைக்காரன்’ படத்தில் 5 பாடல்கள் எழுதினார். ’ஆனந்தமே ஆஹா ஆனந்தமே அறியாமல் மனதில் பொங்கும் ஆனந்தமே’ என்ற பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலில் ஒலித்தது.
1953-இல் ஜி.ராமனாதனின் இசையில் ’இன்ஸ்பெக்டர்’ திரைப்படத்திற்காக எழுதினார், ‘மூடியிருந்த விழியில் வந்த மோகனக் கண்ணன் விளையாடினான் என்ற பாடல். 1954-இல் ‘ரத்த பாசம்’, 1955-இல் ‘செல்லப்பிள்ளை’க்காக 4 பாடல்கள் எழுதினார். ‘காவியக் காதல் வாழும் ஓவியம் நானே’ பாடல் சுதர்சனத்தின் இசையில் ஒலித்தது. ஜிக்கியின் குரலில் ’மதனா எழில் ராஜா நீ வாராயோ’ மிகப் பிரபலமான பாடல். இப்போதும் இலங்கை வானொலியில் கேட்கலாம். இப்பாடலில் பாடலின் இடையே கே.ஆர்.ராமசாமி, கே.சாவித்திரி, டி..எஸ்.பாலையா ஆகியோரின் குரல்களும் ஒலிப்பது சிறப்பு. இதே ஆண்டில் ‘கோமதியின் காதலன்’, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’, இந்தியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட ’சாம்ராட்’ என்ற 3 படங்களில் பாடல்களை எழுதினார். பிற மொழிகளிலிருந்து தழுவி எடுக்கப்படும் படங்களுக்குப் பாடல்கள் எழுதுவது மிகவும் சிரமம். ‘இன்பக் கண்ணாளன் உனை நான் காணவில்லை, எந்தன் கண்ணோடு இமையே மூடவில்லை’ என்ற பாடலை அப்படத்திற்காக எழுதினார். இந்தியில் ஹேமந்த்குமார் இசையமைத்த அதே மெட்டில் அதே உச்சரிப்பை வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகள் அமையவேண்டும். அதே வேளையில் பொருளும் விளங்கும் வகையில் இருக்கவேண்டும். கு.மா.பா. மிக அழகாக பாடல் வரிகளைத் தந்திருக்கிறார். அதற்கு உதாரணம் லக்ஷ்மி சங்கர் பாடிய ’நிலா வானிலே மேகமாய்’.
1951-இல் அறிமுகமான பிரபல பாடகி பி.சுசீலாவிற்கு 1955-இல் மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த பாடல் ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னைக் கண் தேடுதே’. 1955-இல் வெளிவந்த இப்படத்தில் அடப்பள்ளி ராமராவின் இசையில் அந்தப் பாடலை இயற்றியவர் கு.மா.பாலசுப்பிரமணியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் காந்தம்போல் கவர்ந்திழுத்த பாடல்கள் இது.
1957-இல் 3 படங்கள். ‘அம்பிகாபதி’,’சக்கரவர்த்தித் திருமகள்’, ‘தங்கமலை ரகசியம்’. அம்பிகாபதியில் ரி.எம்.சௌந்தரராஜன், பி.பானுமதி பாடிய ‘மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே’ என்ற பாடலை அழகு தமிழ் கொஞ்சி விளையாட எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம். எஸ்.ராமனாதன் வித்தியாசமான முறையில் அக்காதல் கீதத்தை முஹாரி ராகத்தில் இசை வடிவம் கொடுத்திருந்தார். ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் ‘காதல் என்னும் சோலையிலே ராதே ராதே’, ’எல்லையில்லா இன்பத்திலே’ பாடல்கள். 1958-இல் ‘சபாஷ் மீனா’, ‘உத்தம புத்திரன்’, ‘பூலோக ரம்பை’, ‘எங்கள் குடும்பம் பெரிசு’ என்ற படங்கள். ‘சபாஷ் மீனாவில் 3 பாடல்கள். ‘சித்திரம் பேசுதடி’, ’ஆணாக பிறந்ததெல்லாம்’ , ‘அலங்கார வல்லியே அல்லியே’ பாடல்கள் நேயர் நெஞ்சங்களில் சுவடுகள் பதித்த பாடல்கள்.
1959-இல் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக ஜி.ராமனாதன் இசையில் பதினொரு பாடல்கள் எழுதினார் கு.மா.பாலசுப்பிரமணியம். அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதே ஆண்டில் மேலும் ஆறு படங்களுக்குப் பாடல்கள் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது கு.மா.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு. அவை ‘கல்யாணிக்குக் கல்யாணம்’, ‘நல்ல தீர்ப்பு’, ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’, ’புதுமைப் பெண்’, ‘யானை வளர்த்த வானம்பாடி’, ‘மரகதம்’ ஆகிய படங்களில் இவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘மரகதம்’ படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடிய ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே. பாடல் ‘சபாஷ் மீனா’ படத்திற்காக கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதினார். ஆனால் அந்தப் பாடல் அப்படத்தில் இடம்பெறாமல் போனதால் சந்திரபாபு அப்பாடலை ‘மரகதம்’ படத்திற்கு சிபாரிசு செய்து அதில் பாடி நடித்தார்.
1960-இல் எட்டுப் படங்களில் அவரது பாடல்கள் இடம் பிடித்தன. அவை சவுக்கடி சந்திரகாந்தா, ’எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’, ’கடவுளின் குழந்தை’, ‘களத்தூர் கண்ணம்மா’ , ‘குழந்தைகள் கண்ட குடியரசு’, ’பெற்றவள் கண்ட பெரு வாழ்வு’, ‘சங்கிலித் தேவன்’ , ‘விடி வெள்ளி’ ஆகியன. 1961-ஆம் ஆண்டு அரசிளங்குமரி’, ’கானல் நீர்’ , ’திருடாதே’ படங்களில் ஒவ்வொரு பாடல்கள் எழுதினார். 1962-இல் ’தெய்வத்தின் தெய்வம்’, ‘கொஞ்சும் சலங்கை’ , ‘பட்டினத்தார்’ என 3 படங்களில் அவரது பாடல்கள் இடம்பிடித்தன. எஸ்.ஜானகிக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்த ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம்.
புகழ் பெற்ற பாடல்களைப் பாடியவர்கள் பிரபலமடையும் அதே நேரம் பாடலுக்கு முகம் கொடுத்தவர்களை எவரும் கண்டுகொள்வதில்லையென்பது வருத்தப்பட வேண்டிய ஒரு விடையம்.
1963-இல் ‘சித்தூர் ராணி பத்மினி’, ‘நானும் ஒரு பெண்’ ஆகிய படங்கள். நானும் ஒரு பெண் படத்தில் ‘ஏமாறச் சொன்னது நானோ என் மீது கோபம் தானோ’ பாடலை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். 1964-இல் ‘சித்திராங்கி’, 1966-இல் ‘மகாகவி காளிதாஸ்’ படத்தில் மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் என்ற அற்புதமான பாடல். 1967-இல் ‘பக்த பிரகலாதா’ , 1980-இல் சலீல் சௌத்ரி இசையில் தூரத்து இடி முழக்கம் என்ற படத்திற்காக இவர் எழுதிய பாடல் ‘மணி விளக்கே’ என்று ஆரம்பிக்கும் பாடல்.
கு.மா.பாலசுப்பிரமணியம் கடைசியாக எழுதிய பாடல் ‘கனவுகள் கற்பனைகள்’ படத்தில் கங்கை அமரன் இசையில் ‘வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே’ என்று ஆரம்பிக்கும் பாடல். 54 படங்களில் 170 பாடல்களை எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம். 
1975-ஆம் ஆண்டு தமிழக அரசினால் கலைமாமணி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1994-ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று இப்பூவுலகை நீத்தார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்களில் நம்மோடு வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகும் ‘இன்னிசைச் சுவடுகள்’ நிகழ்ச்சியிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது. நிகழ்ச்சியை வழங்கியவர் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி. விசாலாக்ஷி ஹமீத்’ அவர்கள். தயாரிப்பு:- திருமதி.ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள்.

Saturday, September 12, 2020

பின்னணிப் பாடகி கே.ஜமுனாராணி

 



கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, பிறப்பு: 17 மே 1938) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

தமிழில் பிரபலமான துள்ளிசைப் பாடகியர்களுள் இவரும் ஒருவர். பாடல் பதிவின் போதோ, மேடை நிகழ்ச்சிகளின் போதோ இவர் ஆடிக்கொண்டே பாடுவதில்லை என்பது சிறப்பு.

”திரைப்படங்களில் பின்னணிப் பாடுவதில் ஒரு புது வகையைச் செய்ய இவருக்கு வாய்ப்பு கிட்டியது. சாதாரணமாகப் பாடுவதோடு இல்லாமல், ஓரளவு பொப்பிசை எனப்படும் ஜனரஞ்சகமான பாடல்களைப் பாட இவருக்கு சந்தர்ப்பங்கள் கிட்டின. கேளிக்கை விடுதிகளில் நடனமாடும் நடன மாதுக்களுக்கும், கிராமிய, நாடோடிப் பாடல்களைப் பாட இவரது பொருத்தமாக இருந்திருக்கிறது ஜமுனாராணிக்கு”.
’ஆரம்பத்தில் இவர் பரதநாட்டியம் தான் கற்றுக்கொண்டார். இவரது தாயார் திரௌபதி அவர்கள் பெண்களையே கொண்டு அமைத்த வாத்தியக்குழுவில் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வீணையில் தேர்வில் சித்தி பெற்றிருக்கிறார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இவரது குரலைக் கேட்ட அவர் இவரைப் பாடச் சொல்லலாமே எனக் கூறியுள்ளார். அது முதல் தான் பாடுவது என ஆரம்பித்துள்ளார்.

”1952-இல் மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த ‘கல்யாணி’ என்ற படத்தில் பாட இவருக்கு சந்தர்ப்பம் அளித்தனர்”. ‘சக்ஸஸ்’ என்ற ஒரு பாட்டும், ‘ஒன் டூ த்ரீ’ என்ற ஒரு பாட்டும் அதில் இவர் பாடினார். இவ்விரண்டு பாடல்களுமே இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தன.
‘அநேகமாக வில்லி கதாபாத்திரங்கள் ஏற்றவர்களுக்காக ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். “குலேபகாவலி” படத்தில் இவர் பாடிய ’ஆசையும் என் நேசமும் இரத்தப் பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா’ என்ற பாடல் பலரையும் கவர்ந்தது. பழம்பெரும் நடிகைகள் எம்.என்.ராஜம், சூர்யகலா போன்ற நடிகையர்களுக்காக ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார் இவர்.
’விடுதி நடனங்கள்’ பாடல்களா ஜமுனாராணியை பாடச்சொல் என்று அழைப்பார்கள் 1960-களில். ‘மாலையிட்ட மங்கை’யில் மைனாவதிக்காக இவர் பாடிய செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாட்டும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
’அன்பு எங்கே’ படத்தில் ‘மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு’ என்ற பாட்டும் எல்லோரையும் கவர்ந்தது. இப்பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ’குமுதம்’ படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன் இவர் இணைந்து பாடிய “மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா’ என்ற பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான பாடலாகும். இப்பாடல் காட்சியில் நடித்தவர்கள் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் பி.எஸ்.சரோஜா மற்றும் கள்ளபார்ட் நடராஜனும்.
கவியரசரின் பரிந்துரை
இப்படி பாடிப்பாடி இப்படித்தான் இவரால் பாடமுடியும் என்று ஒரு பெயர் இவருக்கு ஏற்பட்டுவிட்டது. சுந்தர்லால் நட்கர்னி ‘மகாதேவி’ என்ற ஒரு படத்தினை எடுத்தார். அதில் சாவித்திரி பாடவேண்டிய ஒரு பாட்டு. பாடல் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் சொன்னார் இந்தப் பாடலை ஜமுனாராணியைக் கொண்டு பாடச் செய்யலாம் குரல் நன்றாக இருக்கும் என்று. இசையமைப்பாளர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் முடியாது என்று மறுத்துவிட்டனர்.
உடனே கவிஞர் ஜமுனாவைப் பாடச் சொல்லுங்கள். பதிவு செய்த பிற்கு கேட்டுப்பார்ப்போம். நன்றாக வந்தால் நீங்கள் ஊதியத்தை அவருக்கு இரண்டு மடங்காக தரவேண்டும். நன்றாக வரவில்லையென்றால் இன்றைய செலவை நான் தந்துவிடுகிறேன் என்றார். இப்படி இவர்கள் பந்தயம் கட்டிக்கொண்டு இவரைப் பாட வைத்தார்கள். எல்லா தெய்வங்களையும் பிரார்த்தனை செய்துகொண்டு இவரும் பாடினார். “காமுகர் நெஞ்சில் நீதியில்லை” என்ற அந்தப் பாட்டு மிக நன்றாக அமைந்தது. இது இவரது வாழ்வில் நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ‘மன்னாதி மன்னனிலும்’, பாசமலரிலும் [பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்] பாட இவருக்கு வாய்ப்புக்கள் கொடுத்தனர் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும்.
தற்போது இவருக்கு 77 வயதாகிறது. 1938-ஆன் ஆண்டு கே.வரதராஜுலு, கே.திரௌபதி தம்பதியரின் மகளாக ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.
தெலுங்கில் முதன்முதலாக 1946-ஆம் ஆண்டு ’தாசில்தார்’ என்ற படத்தில் பாடினார். தொடர்ந்து ‘தியாகய்யா” என்ற படத்தில் பாடிய பின்னர் பிரபலமானார். கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் ஏராளமான படங்களில் இவர் பாடியுள்ளார். இவர் மொத்தமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் மொழியில் மட்டுமல்லாது சிங்களம், மலையாளம், கன்னடம் மற்றும் தாய் மொழியான தெலுங்கு மொழிகளிலும் பாடியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இளையராஜாவின் இசையில் நாயகன் படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் இணைந்து நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது. அடுத்து ‘நீ தொடும் போது’ படத்தில் இளையராஜாவின் இசையில் பாடியவர் 1992-இல் சந்திரபோஸ் இசையில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற பாடலை ஜிக்கியுடன் இணைந்து பாடினார். இவர் தற்போது குடும்பத்தாருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இவர் பாடிய மேலும் சில அமுதகானங்கள்:
  1. அன்பு எங்கே படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பூவில் வண்டு போதை கொண்டு
  2. அதிசயத் திருடன் படத்தில் யாரென இனிமேல் கேட்காதே
  3. ஆசை படத்தில் ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட ராஜா
  4. இரு கோடுகள் படத்தில் சுசீலாவுடன் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
  5. இருமனம் கலந்தால் திருமணம் படத்தில் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து மலர்ந்திடும் இன்பம் வண்ணம் போலே…
  6. இரும்புத்திரை படத்தில் திருச்சி லோகநாதனுடன் இணைந்து நிக்கட்டுமா போக்கட்டுமா நெஞ்சத் தொறந்து காட்டட்டுமா
  7. உத்தம புத்திரன் படத்தில் ஏ.பி.கோமளா, ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி
  8. எங்க வீட்டுப் பெண் படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து எனக்கு நீதான் மாப்பிள்ள
  9. எங்கள் குல தேவி படத்தில் தனித்துப் பாடிய கண்ணாடி கிண்ணம் காண்பவர்
  10. எங்கள் செல்வி படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலெட்சுமியுடன் இணைந்து பாடிய என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்
  11. எங்கள் குடும்பம் பெரிசு படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து அதிமதுரா அனுராதா ஜீவிதமே…..
  12. கடவுளைக் கண்டேன் படத்தில் பி.சுசீலாவுடன் அண்ணா அண்ணா சுகம்தானா
  13. கடவுளைக் கண்டேன் படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் இணைந்து கொஞ்சம் தள்ளிக்கணும் அங்கே நிண்ணுக்கணும்…..
  14. கவிதா படத்தில் ஏ.எல்.இராகவனுடன் இணைந்து மணக்கும் ரோஜா மை லேடி
  15. கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து பார்க்க பார்க்க மயக்குதடி
  16. கவிதா படத்தில் சுசீலாவுடன் இணைந்து பறக்கும் பறவைகள் நீயே
  17. கவிதா படத்தில் ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
  18. கவிதா படத்தில் ரி.எம்.எஸ்-சுடன் இணைந்து உள்ளே இருக்கும் பொன்னம்மா
  19. கண் திறந்தது படத்தில் எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்து இருக்கும் வரையில் ரசிக்கணும் இன்பமாக இருக்கணும்
  20. காட்டு ரோஜா படத்தில் தனித்துப் பாடிய என்னைப் பாரு பாரு பார்த்துக் கொண்டே இருக்கத்தோணும்
  21. 15.12.1982 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது. 1982-இல் கே.ஜமுனாராணி
Thanks https://antrukandamugam.wordpress.com/

Monday, March 23, 2020

எந்த ஒரு நோயையும் அணுகக்கூடிய எளிய மருந்து இசை Music Therapy



இசையை வைத்து நோயாளிகளை குணப்படுத்தும் ஒரு சிகிச்சை முறைதான் மியூசிக் தெரபி.
1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு,  போரில் பாதிக்கப்பட்டிருந்த வீரர்கள் சிகிச்சையில் இருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் பல இசை கலைஞர்களை  மருத்துவமனைக்கு வரவழைத்து இசைக்கருவிகளை வாசித்தும், பாடல் பாடியும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினார்கள். அதன் பிறகு,  சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இதை கவனித்த அமெரிக்கர்கள் இசைக்கும் மருத்துவத்துக்கும் இருக்கும் தொடர்பு பற்றிய ஆராய்ச்சியில்  இறங்கினார்கள். அறிவியல் ரீதியாகவும் இசை குணப்படுத்தும் திறன் கொண்டது என்பது தெரிந்த பிறகே, மியூசிக் தெரபி  என்ற சிகிச்சை முறையை  உருவாக்கினார்கள்.


Music Therapy is the clinical and evidence-based use of music interventions to accomplish individualized goals within a therapeutic relationship by a credentialed professional who has completed an approved music therapy program.
Music Therapy is an established health profession in which music is used within a therapeutic relationship to address physical, emotional, cognitive, and social needs of individuals. After assessing the strengths and needs of each client, the qualified music therapist provides the indicated treatment including creating, singing, moving to, and/or listening to music. Through musical involvement in the therapeutic context, clients' abilities are strengthened and transferred to other areas of their lives. Music therapy also provides avenues for communication that can be helpful to those who find it difficult to express themselves in words. Research in music therapy supports its effectiveness in many areas such as: overall physical rehabilitation and facilitating movement, increasing people's motivation to become engaged in their treatment, providing emotional support for clients and their families, and providing an outlet for expression of feelings.


நோய்க்கு நேரடி மருந்தாக இது இருக்காது. ஆனால் நோயை குணப்படுத்த பக்கபலமாக இருக்கும். அதனால், இதை காம்ப்ளிமென்ட்ரி தெரபி என்றும்  சொல்வார்கள். மன அழுத்தமும் பதற்றமும் அதிகமாகி விட்ட இன்றைய வாழ்வில் உடலால் வரும் நோய்களைவிட மனதால் வரும் நோய்கள்  அதிகமாகிவிட்டன. ரத்த அழுத்தம் போன்ற உடல் நோய்களுக்கு கூட மனமே காரணமாக இருக்கிறது. கோபம், பொறாமை அதிகமாகி வருகிறது.

இந்த எதிர்மறை விஷயங்களையெல்லாம் தவிர்த்து அமைதியான முறையில், வெற்றிகரமாக ஒருவர் வாழ்வதற்கு மியூசிக் தெரபி பெரிதும் உதவி  செய்கிறது. முதியோர் இல்லங்கள், போதை மறுவாழ்வு மையங்கள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் இருப்பவர்களுக்கு கூட மியூசிக் தெரபி  நல்ல பலனை கொடுத்து வருகிறது. ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மியூசிக் தெரபி பெரிய உதவியாக இருப்பதைக் கண்கூடாக பார்க்க  முடியும். அதனால் நோயாளிகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் மியூசிக் தெரபி தேவை.

இந்த சிகிச்சையை எப்படி அளிப்பார்கள்?

“ இசையை கேட்க வைப்பது, இசைக் கருவிகளை வாசிக்க வைப்பது, மற்றவர்களுடன் சேர்ந்து பாடுவது, மற்றவர்கள் பாடுவதை கேட்பது என்று இதில்  பல வகைகள் இருக்கின்றன. நோயாளிக்குத் தகுந்தாற்போல் இந்த சிகிச்சை முறைகள் மாறுபடும்.”

கர்ப்பிணிகளுக்கு மியூசிக் தெரபி அளிப்பது நல்லதாமே?

“ கர்ப்பத்தில் இருக்கும் அபிமன்யு கதை கேட்டதாக புராணக் கதை உண்டு. கருவைச் சுற்றியிருக்கும் அம்னியாட்டிக் திரவம் மூலம் கர்ப்பத்தில்  இருக்கும் குழந்தையால் நாம் பேசுவைதை கேட்க முடியும் என்று விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் மியூசிக் தெரபியை  தாய்க்கு அளிப்பதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். அதனுடன் சுகப்பிரசவமாவதற்கும் குழந்தை  ஆரோக்கியமாக பிறப்பதற்கும் மியூசிக் தெரபி உதவுகிறது.



தினமும் 30 நிமிடம் பாட்டு கேளுங்கள்..!
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் இசையைக் கேட்பது இதயத்திற்கு நல்லது என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
என்ன மோசமான மனநிலையில் இருந்தாலும் பிடித்த பாடல்களை கேட்டால் மனநிலை ஓரளவுக்கு சரி ஆகிவிடும் என்று கூறுபவர்கள் பலர். அவ்வாறு இந்த உலகில் இசைக்கு அடிமையானவர்கள் ஏராளம்.
இந்நிலையில் இசை குறித்து மேற்கொண்ட ஆய்வில், பல ஆச்சரியத்தக்க தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதில் குறிப்பாக முதல்முறை மாரடைப்பு வந்தவர்கள் தொடர்ந்து தினமும் இசையை கேட்கும் பட்சத்தில், அவர்களுக்கு அடுத்து மாரடைப்பு வராது என்று தெரிய வந்துள்ளது. மேலும் எந்த ஒரு நோயையும் அணுகக்கூடிய எளிய மருந்து இசை என்றும் அதனால் நோயாளிகள் அனைவருக்கும் ‘மியூசிக் தெரபி’ வழங்க வேண்டும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
ஏனென்றால் ‘மியூசிக் தெரபி’ -க்கு பெரிதாக முயற்சி எடுக்கத் தேவையில்லை. எளிதானது, மலிவானது. நோயாளிகளுக்கு சிகிச்சையின்போதும், அவர்கள் வீட்டில் ஓய்வு எடுக்கும்போது மனதுக்குப் பிடித்த இசையை கேட்கச் செய்யலாம் என்றும் இதன் மூலமாக மன மற்றும் உடல் ரீதியாக அவர்களது நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, செர்பியாவில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்ட 350 நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்குறிப்பிட்ட முடிவுகள் உறுதி ஆகியுள்ளன.

மியூசிக் தெரபி சிகிச்சையைப் பெறும் நோயாளிகள் முதலில் தங்கள் உடல்நிலை, மனநிலைக்கு ஏற்ற இசையைத் தேர்ந்தெடுக்கின்றனர். தினமும் 30 நிமிடங்கள் ஒரே விதமான இசையை கேட்டனர். சுமார் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நேர்மறையான முடிவுகள் பெறப்பட்டன.
நோயாளிகள் கவலை, வலி​ குறைந்ததாக உணர்ந்ததுடன், எளிமையாக சிகிச்சையை பெற்றதாக உணர்ந்தனர். மருத்துவ சிகிச்சையை விட பலருக்கு இசை சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும், ஏற்கனவே ஒருமுறை, இரு முறை மாரடைப்பு வந்தவர்கள் பெரும்பாலானோருக்கு அடுத்த முறை மாரடைப்பு வரவில்லை.
ஒருவரின் மன அழுத்தத்தை குறைக்க இசையே சிறந்த வழி என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்புக் குழந்தைகள் அல்லது ஸ்பெஷல் சில்ட்ரன் என்று ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு 13 வருடங்களாக இசையைப் பயன்படுத்தி அவர்கள் திறமையை வெளிக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் லட்சுமி மோகன். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வகுப்புகள் நடத்தி வருகிறார். சென்ற ஒரு வருடமாக சௌமனஸ்யா அறக்கட்டளை ஒன்றை இதற்காகவே உருவாக்கியுள்ளார். அவரைச் சந்தித்தோம்: 

 "முன்னைவிட என் மகனிடம் இப்போது பொறுமை அதிகமாகத் தெரிகிறது. வெளியே ஹோட்டலுக்கோ, மாலுக்கோ போனால் அவனை எளிதாகக் கையாள முடிகிறது' என்று அதிகத் தீவிரமான பையனைப் பற்றி பெற்றோர் தெரிவித்த கருத்து இது.
சங்கராபரணம், சாருகேசி, கல்யாணி போன்ற ராகங்களில், ஒரே மாதிரியான வார்த்தைகளில் பஜன்கள் பாடும்போது, இவர்களின் நடவடிக்கை ஒழுங்குபடுவதாகக் கூறும் லஷ்மியிடம் 3 வயது முதல் 45 வயது
வரையிலான ஆட்டிசப் பாதிப்புடையவர்கள் சங்கீதப் பயிற்சி பெறுகிறார்கள்.
பயிற்சி பெறும் அனைவரும் வெவ்வேறு வயதில், வெவ்வேறு வகையிலான குறைபாட்டுடன் இருந்தாலும், இசை அவர்களை ஓர்
இடத்தில் நிறுத்துகிறது. கவனத்தைக் குவிப்பது, தனக்கான வேலைகளை முடிந்தவரையில் தானே செய்துகொள்ளவைப்பது போன்ற முன்னேற்றங்கள்,
இசை சிகிச்சையால் சாத்தியப்படுவதை நிரூபித்திருக்கிறார் லஷ்மி மோகன்.



எனவே, தினமும் சிறிது நேரம் இசையை ரசிப்பதன் மூலமாக உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

Friday, March 20, 2020

இசைத்தமிழ்

தமிழ்மொழி அதன் பயன்பாட்டின் அடிப்படையில் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது. அவையே முத்தமிழ் என்று வழங்கப்படும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பனவாகும். இயற்றமிழ் என்பது உரைநடையும் செய்யுட்களும் ஆகும். இலக்கண இலக்கியங்கள் அனைத்தும் இயற்றமிழ் என்கின்ற பிரிவின் கீழே வருகின்றன. இசைத்தமிழ் எனப்படுவது இசையும் தாளமும் அமைந்த பாடல்களாகும். நாடகத்தமிழ் என்பது நடிப்பும் பாட்டும் அல்லது நடிப்பும் உரைநடையும். முத்தமிழிலும் தித்திக்கும் தேன்பாகாக இனிப்பதும், எத்தமிழையும் அறியாதமக்களின் இதயங்களையும் கவர்ந்திழுப்பதும் இசைத்தமிழாகும்.

தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் சொல்கின்றார்கள். ஏனெனில் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியமே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை. அதன் பின்னால் தோன்றிய இசை நூல்களான 
பெரு நாரை, 
பெருங்குருகு,
முதுநாரை, 
முதுகுருகு, 
பஞ்சமரபு, 
பஞ்சபாரதீயம், 
பதினாறுபடலம், 
வாய்ப்பியம், 
இந்திரகாளியம், 
குலோத்துங்கன் இசைநூல் 
போன்ற அற்புதமான நூல்களும் அழிந்து போய்விட்டன. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போது கிடைக்கப்பெறும் மிகத்தொன்மையான இசை நூலாகக் கருதப்படுகின்றது. அதிலும்கூட அழிந்தவை போக எஞ்சியிருக்கும் இருபத்தியொரு பாடல்களே இப்போது கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் பிற்காலத்தில் தோன்றிய எண்ணற்ற இசை நூல்கள் தமிழிசையின் சிறப்புக்குச் சான்றாக அமைகின்றன. தெள்ளுதமிழ் தேன்பாகை அள்ளியிறைக்கும் திருமுறைகள், கல்லும் கசிந்துருகும் கனிவான பக்தி இசைப்பாடல்கள், முறையான பண்ணோடு அழகாகப் புனையப்பட்டுள்ள தொகையான தனிப்பாடல்கள் எல்லாமே இசைத்தமிழுக்கு இனிமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் யாழ்நூல் இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட மகுடமெனத் திகழ்கிறது.
இசையை ஏழுவகையாகப் பகுத்தவர்கள் தமிழர்களே. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவே அந்த ஏழு வகைகளாகும். ஏழு வகை இசையினையும் இடத்திற்கும், பாடலுக்கும், குணத்திற்கும், காலத்திற்கும் ஏற்றவாறு நான்காகப் பாகுபடுத்தினார்கள் நமது பண்டைத்தமிழ் மக்கள்.
முத்தமிழுக்கும் இனிமை சேர்ப்பது இசைத்தமிழ். ஆந்த இசைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்து, முறைப்படி பகுத்து, சிறப்புறத் தொகுத்து நம்முன்னோல் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் இசையினை முறையாகப் பயில வேண்டும். தமிழ்ப் பாடல்களைப் பாடவேண்டும். தமிழ் இசையின் மகத்துவத்தைத் தணியெங்கும் பரப்பிடத் தமிழர்களாகிய நாம் முயற்சி செய்யவேண்டும்.
இசைத்தமிழ் விளக்கம்: இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத் தமிழாகின்றது. தொல்காப்பியம் இயற்றமிழ் இலக்கணத்தோடு இசைத் தமிழிலக்கணமும் இழையோடிக் கிடக்கின்றது. இவ்விரு தமிழும் வெவ்வேறாகப் பிரித்தறிய முடியாத வகையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.இசை பொருள்: இசை என்ற சொல்லுக்கு இசைவிப்பது, வயப்படுத்துவது ஆட்கொள்வது என்று பல பொருள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது எனும் பொருளைத் தருகிறது என்பர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்றள பொழுது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்பர் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள்.ஒலி, ஓசை, இசை:- இசைக்கு அடிப்படையாக இருப்பது ஒலி, ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பது சமயங்கள் உணர்த்தும் உண்மை. இவ்வுலகமே ஓங்கார ஒலித்திரளின் இருப்பாக உள்ளது என்பதும் ஒரு தத்துவம், மூலாதாரமான ஒலி வேறு ஓசை வேறு ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என இறையைப் பற்றிக் கூறும் அப்பரின் தேவார வரிகளிலருந்து ஓசை வேறாகவும், ஒலி வேறாகவும் கருதப்படுவதை உணர முடிகிறது. ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையே என்னும் தேவார அடிகள் நரம்பிலிருந்து எழும் ஓசையை ஏழிசையாக அமைகிறது என்று சுட்டுகின்றது. எனவே ஓசையே இசைக்கு அடிப்படை என்பதை உணர முடிகிறது. ஒலி என்பது ஒரு குறிப்பைக் கருதி எழுந்து, இனிதாய் அமைந்து சுவைப் பயப்பதாக இருக்க வேண்டும். காலக் கடப்பால் ஏற்பட்டுள்ள சொல் பயன்பாட்டை நோக்கும்போது இசையும் ஒலியும் சில இடங்களில் வேறுபாடு கருதாது பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.ஓசை மற்றும், இனிதாய் அமைந்து சுவை பயப்பதாக இருப்பதான ஒலியின் அடிப்படையில தோன்றுவதான இசைக்கலை ஆயக்கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும். இயல் தமிழைக் கற்றும், கேட்டும் அனுபவிக்கவும் சுவைக்கவும்க முடியும். ஆனால் இசையையோ செவிப்புலன் ஒன்றினால் மாத்திரமே சுவைக்க முடியும்.இசையும் இறையும்: இசையின் சிறப்புணர்ந்த நம் முன்னோர் ஆதிமூலமான ஆண்டவனும் இசையை விரும்புகின்றான், இசை பாடுகின்றான், என்பதுடன் இசையின் வடிவாகவும், இசையின் பயனாகவும் உள்ளான் என்று கண்டறிந்தனர்.துறைவாய் நுழைந்தனையோவற்றி யேழிகசைச்
சூழல் புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொலாம் புகுந்த
தெய்தியோ - எனும் திருக்கோவையார் பாடல் ஏழிசைச் சூழலில் இறைவன் ஆட்பட்டான் என்பதைத் தெரிவிக்கின்றது. ஏழிசையாய் இசைப்பயனாய் என்று சுந்தரரும் எம்மிறை நல்வீணை வாசிக்குமே என்று அப்பரும் கூறியுள்ளமையும் நோக்கத் தக்கது.ஆதி மனிதனும் இசையும்: மொழியறியாது வாழ்ந்த மனிதன் இனம் புரியாத மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் எழுப்பிய ஓசையும் ஒலியுமே இசையாயிற்று. மகிழ்ச்சி மற்றும் துன்பப் பெருக்கின் உச்ச கட்டமாக அவன் கைதட்டி எழுப்பிய ஆரவாரமே தாளமாயிற்று. சிலை வளைத்துக் கணை தொடுத்து வேட்டையாட முற்பட்ட போது எழுந்த நாதமே இசைக்கருவிகளின் தோற்றத்திற்கு மூலமாயிற்று.இசையின் பழமைதொல்காப்பியம்: மனிதனின் உணர்ச்சிப் பெருக்கோடு ஒன்றி வளர்ந்த இசை பற்றி நமக்கு உணர்த்தும் முதல் நூலாக தமிழின் கருத்துக் கருவூலமான தொல்காப்பியத்தையே கொள்ளலாம்.அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிய இசையோடு சிவனிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்எனும் தொல்காப்பியம் அடிகள் இசையில் பழமையை உணர்த்தும் தொல்காப்பியச் சொற்களின் ஓசையதிக்கு வண்ணம் என்று பெயரிட்டு," வண்ணந்தாமே நாலைந்தென்ப "என்று கூறுவதன் மூலம் அதனை இருபது வகைப்படுத்திக் கூறியுள்ளார். வண்ணங்கள் என்றால் சந்த வேறுபாடுகள்- என்பர் பேராசிரியர் இவ்விருபது வண்ணங்களையும் தேவாரம், திருப்புகழ், கீர்த்தனை, சிந்து, கண்ணி முதலிய பாடல்களில் தெளிவாகக் காணலாம்.எதுகை, மோனை, இயைபு, முதலிய தொடைகளின் இலக்கணம் இசைக் கீர்த்தனைக்கும் இசைப்பாடல்களாகிய தாண்டகம், நேரிசை, விருத்தம் முதலியவற்றிற்கும் இன்றியமையாது வேண்டப்படுபவனவாம். எதுகை, மோனை போன்ற தொடைகளில்லையேல் இசைப்பாடல்கள் இல்லை. இசைப்பாடலுக்குரிய யாப்பு வகைகளைத் தொல்காப்பியர் அழகாகவும் தெளிவாகவும் வகுத்தும் பகுத்தும் காட்டியுள்ளார்.செய்யுட்களின் சிறப்பிற்கு எதுகை, மோனை, முதலிய தொடை விகற்பங்கள் பெரிதும் துணைபுரிந்தமையினின்று இயற்றமிழும் இசையமைதி பெற்றிருப்பது புலனாகும். வெண்பா முதலிய பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான இசையுடனேயே பண்டு தொட்டு ஓதப்படுகின்றன. அவற்றுள்ளும் கலிப்பா, பரிபாட்டு முதலியவற்றை இசைப்பாக்கள் என்றே பேராசிரியர் முதலிய பேருரையாளர்கள் கூறுவராயினர். வெண்பா முதலிய பாக்களுக்கு இனமாக வகுக்கப்பெற்ற தாழிசை துறை முதலியனவும் இசைப் பாக்களேயாதல் வேண்டும். தொல்காப்பியரே முதன்முதலில் எதுகை, மோனை ஆகியவற்றைப் பிரித்துக் கூறும் யாப்பிலக்கணத்தை அறிமுகப்படுத்தியவராவார். தொல்காப்பியர் கூறும் பண்வரிசை முறை தமிழக இசை முறைகளில் வழி வழியாகப் பண்களை வரிசையில் நிற்கச் செய்யும் முறைகட்கெல்லாம் முன்னோடி எனலாம்.தொல்காப்பியத்தின் வழியாக அறியப்படும் இசைச் செய்திகள்
1. நால்வகை நிலங்கட்குரிய பண்வகைகள்
2. பண்களுக்குரிய பெரும்பொழுது சிறுபொழுதும்,
3. பண்களை வரிசைப்படுத்தி நிறுத்தியது.
4. பாடலின் அமைப்பிற்கும் சிறப்பிற்கும் தேவையான எதுகைமோனை முதலிய தொடை வகைகள்
5. அம்போதரங்க அமைப்பு
6. இசை எழுத்துக்களின் மாத்திரை அளவும்
7. தாள நடை வகைகள்.இசைத் தமிழ் நூல்கள்

இசைத் தமிழ் விரிவானது. ஆழமானது. பல துறைகள் கொண்டது, இவ்விசைத் தமிழ் நூல்கள் சங்க காலத்திலேயே எண்ணற்றவை இருந்தன என்பதை இறையனார் களவியலுரை ஆசிரியரின் கூற்று வலியுறுத்தும், முதற் சங்க வரலாறு பற்றிக் கூறும் இவர், அவர்களால் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக்கத்தன, என்றும் கடைச்சங்கம் பற்றிக் கூறுமிடத்து அவர்களாற் பாடப்பட்டன. நெடுந்தொகை நானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையுமென இத்தொடக்கத்தன என்றும் குறிப்பிட்டுள்ளதிலிருந்து இசைத் தமிழில் பல தலைசிறந்த நூல்கள் முதற் சங்க காலத்திலேயே இருந்தன என்பதும், கடைச் சங்க காலத்து எழுந்த எட்டுத்தொகை நூல்களும் இசைத்தமிழ் தொடர்புடையன என்பதும் விளங்குகின்றது. பெருநாரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுட்டுரைக் கோவை போன்ற எண்ணற்ற இசைத் தமிழ் நூல்களும் வழக்கில் இருந்து, பின்னரே வழக்கு ஒழிந்ததோ, கடல்கோட்பட்டோ மறைந்திருத்தல் வேண்டும்.பரிபாடல்: இன்று நமக்கு கிடைத்திருக்கும் இசை பற்றிய குறிப்புகளில் பழமையான இலக்கியமாகத் திகழ்வது பரிபாடல். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான இது கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகும். 70 பாடல்களைக் கொண்ட இந்நூலில் கழிந்தன போக இன்று எஞ்சியுள்ளவை 22 ஆகும். இவற்றுள் ஒவ்வொரு பாடலின் கீழும் அப்பாடலின் ஆசிரியர் பெயரும் அதற்கு இசை அமைத்தவர் பெயரும், அதற்குரிய யாழ், செந்துறை, தூக்கு வண்ணம் முதலியவும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் பரிபாடலில் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் பாலையாழ், நோதிரம், காந்தாரம் எனப் பண்கள் குறிக்கப்பட்டுள்ளன. இசை வகுத்தோராகப் பதின்மர் பெயர்களும் அதில் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப்பத்திலும் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசை பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.எட்டுத் தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் இசை பற்றியும், இசைக்கலைஞர்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை முதலியவை இசைக் கலைஞர்கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப் பத்திலும் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசை பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.எட்டுத் தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் இசை பற்றியும், இசைக் கலைஞர்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிறுபாணாற்றுப்படை முதலியவை இசைக் கலைஞர்கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன. திருமுருகாற்றுப்படை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, ஆடலாகிய கூத்து, கண்டமாகிய இசை மரபிற்கான பஞ்ச மரபினைப் பெற்று தமிழிசையின் சிறப்பை விளக்கவல்ல ஆற்றுப்படை நூலாகத் திகழக் காணலாம்.சிலப்பதிகாரம்: சங்க இலக்கியத்தை அடுத்த சிலப்பதிகாரத்தில் இசை பற்றி செய்திகள் மிகவும் பரந்து காணப்படுகின்றன. சிலம்பின் கதைப்பகுதிகளுடன் இசை இலக்கணம் பின்னிப் பிணைந்து இயற்றப்பட்டுள்ளன என்றே கூறலாம். தமிழிசை இலக்கணம் கூறும் பெருங்கடலில் சிலம்பு ஓர் ஓங்கி உயர்ந்த கலங்கரை விளக்கம். இது நல்கும் ஒளியின் உதவியால் இதற்குக் காலத்தால் முந்திய தொல்காப்பியம், எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய சீரிய நூல்களில் தமிழ்ப் பேரறிஞர்கள் சுட்டியுள்ள ஏராளமான இசைக் குறிப்புகளை விளங்கிக் கொள்ளலாம்.சிலம்பின் ஆசிரியரும் சேரநன்னாட்டின் இளவரசருமான இளங்கோவடிகளை இந்திய நாடு கண்ட இசை மாமேதை என்றும், இசை இலக்கணத்தை அறிவியல் முறையில் அமைத்துத் தந்துள்ள இசை இலக்கணத் தந்தை என்றும் கூறலாம். இளங்கோவின் காலத்திற்கு முன் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வழிவழி வந்த இசை இலக்கண மரபு சிலம்பில் காணப்படுகின்றமையின் தொல்காப்பிய இசைக் குறிப்புகளை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. தொல்காப்பிய இசைக் குறிப்புகளை விளக்குவது சிலம்பின் இசை இலக்கணமே - தமிழிசை இலக்கணம் சிலம்புதொட்டு இன்று வரை சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து வருகிறது என்பர் டாக்டர் எஸ். இராமநாதன்.தமிழில் ஒப்பற்ற இசைப்பாக்களாக நமக்குக் கிடைத்திருப்பன சிலப்பதிகாரத்தில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்குழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை எனும் ஆறு காதைகளும் ஆகும். இந்த ஆறு காதைகளுமே இசைப்பாக்களின் தொகுதியாகும்.உதயணன் கதையினைக் கூறும் பெருங்கதையிலும் யானையின் சீற்றத்தை சீவ சிந்தாமணியல் காந்தருவதத்தை யார் இலம்பகத்தில் இடைக்காலத் தமிழிசையினைப் பரக்கக் காண முடிகின்றது.இனி தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு நோக்கலாம். தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய குறிப்புகளோடு இசைவாணர்கள் மற்றும் பண்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கட்கும் வெவ்வேறான யாழ், அல்லது பண் கூறப்படுவதினின்றும், அக்காலத்தில் இசைக்கலை பெற்றிருந்த சிறப்பும், ஐவகை நிலமக்களும் பெற்றிருந்த இசையுணர்ச்சியும் பெறப்படுகின்றது.இசையில் பண் என்றும் திறமென்றும் இருவகை உண்டு. பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று என்னும் பரிமேலழகர் கூற்றிலிருந்து, தமிழ்ப் பண்கள் நூற்று மூன்று என்பது கொள்ளப்படுகின்றது. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டவை. ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண் எனப்படும். நரம்பு என்பது இங்கு ஸரி கம பத நீ என்றும் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும். இந்த ஏழு ஸ்வரங்களை வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாராம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுவர். இதுவே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும்.இவ்விசைகளின் ஓசைக்கு வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனி, ஆடு ஆகியவையும், இவற்றின் சுவைக்கு முறையே தேன், தயிர், நெய், ஏலம், பால், வாழைக்கனி, மாதுளங்கனி, ஆகியவையும் உவமை கூறப்பட்டுள்ளதுடன், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் இவற்றின் எழுத்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.பண்வகை: பண்கள் பலவகைப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, எனப் பண்கள் ஐந்து என்பர் - ந.சி. கந்தையாபிள்ளை. ஆனால் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் பெரும்பண்களாவன குறிஞ்சி, முல்லை, மருதம், செவ்வழி, என்பனவாம் என்பர். இப்பண்கள் வடமொழியில் ராகம், என்று கூறப்படுகின்றன. இதனை மேளகர்த்தா, ராகம் அல்லது ஐனகராகம் என்றும் கூறுவர். பண்ணிலிருந்து திறங்கள் பிறக்கும்நிரை நரம்பிற்றே திறமெனப்படுமே என்ற திவாகரச் சூத்திரம் பண்கள், திறங்களின் இலக்கணத்தை விளக்கும் திறங்களே தற்போது ஜன்யராகம் என்று வழங்கப்படுகின்றன.

https://store.tamillexicon.com