Search This Blog

Showing posts with label HISTORY. Show all posts
Showing posts with label HISTORY. Show all posts

Wednesday, September 26, 2018

Galileo's Original Telescope

Galileo's Telescopes. The basic tool that Galileo used was a crude refracting telescope. His initial version only magnified 8x but was soon refined to the 20x magnification he used for his observations for Sidereus nuncius. It had a convex objective lens and a concave eyepiece in a long tube

Saturday, June 23, 2018

செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல் 1852ல் எழுதியது

Prasanna Ramaswamy

செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல் 1852ல் எழுதியது. ஆங்கிலத்திலிருந்து என் மொழிபெயர்ப்பு.
"வாஷிங்டனிலிருந்து ஜனாதிபதி எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாக செய்தி அனுப்பியிருக்கிறார்.
வானத்தையோ நிலத்தையோ எவ்விதம் நீங்கள் விற்கவோ வாங்கவோ முடியும்? இது நாங்கள் கேட்டறியாதது. காற்றின் சுத்தத்தையும் நீரின் மினுக்கலையும் எவ்விதம் விற்க இயலும்? இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்கு புனிதமானது. பளபளக்கும் ஊசிக்காட்டின் ஒவ்வொரு சுள்ளியும், ஓசையிடும் சிள்வண்டுகளும். இவையெல்லாமே எங்கள் மக்களின் அனுபவங்களிலும் நினைவுகளிலும் மிகவும் புனிதம் வாய்ந்தவை.
மரங்களினுள்ளே ஓடும் உயிர்த்தன்மையை எங்கள் நரம்புகளில் ஓடும் ரத்தத்தை அறிவது போலவே அறிவோம். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். பூமி எங்களின் ஒரு பகுதி. நறுமணமுள்ள மலர்கள் எங்கள் சகோதரியர். கரடி, மான், வலிய பருந்து முதலியவை எங்கள் சகோதரர்கள். மலை முகடுகள், புல்வெளிகளில் உள்ளுறை அமிழ்து, குதிரைக் குட்டியின் கதகதப்பு, மனிதன், எல்லாம் எங்கள் குடும்பம்.
ஓடைகளிலும் நதிகளிலும் சலசலத்து மின்னியோடுவது நீரல்ல; எம் மூதாதையரின் குருதி. நாங்கள் உங்களுக்கு இவற்றை விற்போமானால் நீங்கள் நினைவிலிருத்த வேண்டும் இவற்றின் புனிதத்தை. துல்லியமான நீர் நிரம்பிய ஏரிகளில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு பிம்பமும் எங்கள் மக்களின் வாழ்வியலை, நினைவுகளைச் சொல்கின்றன. நீரெல்லாம் என் அப்பனுக்குத் தகப்பனின் குரலில் முணுமுணுக்கிறது.
நதிகளோ எம் சகோதரர்கள். அவை எம் விடாய் தீர்க்கின்றன. அவை எங்கள் ஓடங்களைச் சுமக்கின்றன. எம் குழந்தைகளுக்கு உணவூட்டுகின்றன. ஆதலினால் எம் நதிகளிடம் ஒரு சகோதரனைப் போல அன்பு செலுத்த வேண்டும்.
உங்களுக்கு இந்த நிலத்தை யாம் விற்போமானால், இந்தக் காற்று எங்களுக்கு விலை மதிப்பற்றது, சூழலின் வாழ்வத்தனையும் அது தாங்குகிறது என்று நினைவிருத்துவீர்களாக. எம்முடைய தாத்தனுக்கு அவனது முதல் மூச்சையும் கடைசி சுவாசத்தையும் இந்தக்காற்றுதான் அருளிற்று, இதே காற்றுதான் எங்கள் குழந்தைகளுக்கு இந்த வாழ்க்கையின் ஆதாரத்தையே தருகிறது. ஒருவேளை உங்களுக்கு நாங்கள் இந்த நிலத்தைத் தருவோமானால், நீங்கள் அதனைப் புனிதமாகப் போற்றி, நறுமலர்களின் இன்மணம் தோய்ந்த காற்றை மனிதர்கள் அங்கு சுவாசிக்க ஏதுவாக நீங்கள் அந்த நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குக் கற்பித்ததை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் போதிப்பீர்களா? இந்த பூமி நம் தாய் என்றும், எது இந்த நிலத்துக்கு நேர்கிறதோ அது இந்த நிலத்தின் எல்லாப் பிள்ளைகளுக்கும் நேரும் என்றும்?
நாங்கள் அறிந்தவரை, இந்த பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல; மனிதன் பூமியின் உடமை. நம் எல்லோரையும் பிணைக்கும் ரத்தம் போலவே இந்த பூமியில் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று. இந்த வாழ்க்கையின் உயிர்க்கூட்டை நெய்தவன் மனிதனல்லன். மனிதன் இந்த பூமியின் உயிரிகளில் ஒரு இழை மாத்திரமே. இந்த பூமிக்கு மனிதன் இழைக்கும் ஒவ்வொரு செயலையும் அவன் தனக்கேதான் இழைத்துக் கொள்கிறான்.
கடவுள் ஒருவரே. பூமியின் மீது நிகழ்த்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும் அதன் படைப்புக் கடவுளின் மீது நிகழ்த்தப் படுவதே. உங்களுக்கு இறுதியில் என்னவாகும் என்பது எங்களுக்கு விளங்காப் புதிர்தான். எல்லா எருதுகளையும் கொன்று குவித்த பின், எல்லாக் குதிரைகளையும் அடக்கியபின் என்னாகப் போகிறது? அடர்வனங்களின் பகுதிகளெல்லாம் மனிதக் கூட்டத்தின் மூச்சுக் காற்று படர்ந்தபின், பசுமலைகளின் சிகரங்களை மின்கம்பிகளின் பின்னல்கள் மறைக்கும்போது...செறிந்த காடுகள் எங்கே? அழிந்தன..உயர் வானில் பறக்கும் பருந்துகள் எங்கே? போயே போயின...
அப்புறமென்ன? உயிர்த்திருப்பது இல்லாமலாகி, வாழ்தல் மட்டுமே எஞ்சும்.
கடைசி செவ்விந்தியனும் அவனது கானுயிரோட்டமும் மறைந்தபின், அவன் குறித்த நினைவென்பது அலையாடும் புல்வெளியைக் கடக்கும் மேகத்தின் நிழல் போலான பின் இந்த நதிக்கரைகளும் காடுகளும் இங்கிருக்குமா என்ன? எம் மக்களுடைய உயிர்ப்பு இங்கே எங்கிருக்கும்?
தாயின் இதயத்துடிப்பை உணரும் பிறந்த குழந்தை போல இந்த பூமியை நாங்கள் நேசிக்கிறோம். ஆதலால் இதை உங்களுக்கு நாங்கள் கொடுப்போமானால், நாங்கள் நேசித்தது போல் நீங்களும் இந்த பூமியை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பால் எங்களைப் போலவே கரிசனம் கொள்ளுங்கள். இந்த நிலத்தைப் பெற்றுக் கொள்ளும்போது அது இருந்த விதமாகவே நீடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இனி வரும் சந்ததிகளுக்காக இந்த நிலத்தைப் பாதுகாப்பாக, அதைக் கடவுள் நேசிப்பது போல இந்த நிலத்தை நேசமுடன் வைத்திருங்கள்.
நாங்கள் இந்த நிலத்தின் பகுதி என்பதே போல்தான் நீங்களும். இந்த பூமி எங்களுக்கு விலை மதிப்பற்றது. உங்களுக்கும்தான். கடவுள் ஒருவரே. செவ்விந்தியனோ வெள்ளையனோ ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள் அல்லர். நாமெல்லோரும் ஒருதாய் வயிற்று மக்களே"

Friday, May 25, 2018

மட்டக்களப்பு வேடுவர் ஆய்வின் முன்னோடி செலிக்மன்





-என்.சரவணன்-
இலங்கையின் இனவரைவியல் பற்றிய ஆய்வுகளில் வேடுவர் பற்றி ஆய்வு செய்த செலிக்மன் தம்பதிகளின் ஆய்வு இன்று வரை மானுடவியலாளர்கள், இனவியலாளர்கள் போன்றோரால் போற்றப்பட்டு வருகிறது.
செலிக்மன் (Charles Gabriel Seligman) தனது ஆய்வை மேற்கொள்வதற்காக 16.12.1907 அன்று தனது துணைவியுடன் (Brenda Zara Salaman) இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்தடைந்தார். மொத்தம் மூன்று ஆண்டுகள் மட்டுமே அவர் தங்கியிருந்து நாடு முழுவதும் அலைந்து திரிந்து தனது ஆய்வை முடித்துக் கொண்டார். அவர் மேற்கொண்ட ஆய்வு 1911 ஆம் ஆண்டு “The Veddas” (வேடுவர்) என்கிற தலைப்பில் 623 பக்கங்களில் நூலாக வெளிவந்தது. அதை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் லண்டனில் வெளியிட்டது. இந்த நூல் உலகளவில் பிரசித்தம் பெற்றது.
இந்த நூலுக்காக செலிக்மன் தம்பதிகள் பல மாதங்கள் வேடுவர்களுடனேயே வாழ்ந்திருக்கிறார்கள். காடுகளிலும், குகைகளிலும் அவர்கள் கண்டவை, கேட்டவை என்பவற்றை விஞ்ஞானபூர்வமான ஆய்வுக்குட்படுத்தினார்கள். வேடுவர்களின் இசையை பதிவு செய்திருக்கிறார்கள். செலிக்மன் எடுத்த புகைப்படங்களும், ஓவியங்களும், விளக்கப் படங்களும் அந்த நூலில் பல இடங்களில் காணக் கிடைக்கிறன.
செலிக்மனும் அவரது துணைவி பிரண்டா சாராவும் அந்தப் பெரு நூலின் ஆசிரியர்கள். 98 ஆண்டுகள் கழித்து 2009 இல் இந்த நூலை இலங்கையில் சிங்களத்திற்கு மொழிபெயர்த்து (மொழிபெயர்ப்பு: நிஸ்ஸங்க பெரேரா) கொடகே பதிப்பகம் வெளியிட்டது. அதே ஆண்டு சிங்களத்தில் “பாஸ்ட் பப்ளிஷன்” (மொழிபெயர்ப்பு: சந்திரசிறி ரணசிங்க) என்கிற நிறுவனமும் வெளியிட்டது. தமிழில் செலிக்மன் பற்றி எங்கு தேடினாலும் சிறு தகவல் கூட கிடைப்பதில்லை.
ஆனால், அவரது ஆய்வை சிங்கள பேரினவாதிகள் போற்றுவதில்லை. அதற்கான காரணமும் இலங்கை சிங்கள நாடு என்கிற ஐதீகத்தை உடைக்கும் பல சான்றுகளும் அவரது ஆய்வில் புதைந்து கிடக்கின்றன. உதாரணத்திற்கு புத்தர் இலங்கைக்கு வந்திறங்கியது யாழ்ப்பாணத்திலிருக்கும் நாகதீபத்தில் என்கிற வரலாற்றுப் புரட்டை இன்றைய ஆய்வாளர்கள் பலர் மறுக்கிறார்கள். சமீபத்தில் கூட பௌத்த மதத் தலைவர்களில் ஒருவரான வல்பொல கல்யாணதிஸ்ஸ மஹா தேரோ ஆற்றிய ஒரு உரையில் “மகாவம்சத்தில் குறிப்படப்படும் நாகதீபம் என்பது யாழ்ப்பாணத்தில் இருப்பதல்ல. அது மகியங்கனைக்கு அருகில் இருக்கிறது என்றும். சில அரசியல் வரலாற்றுக் காரணங்களினால் அந்த உண்மை மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.” என்று கூறியிருந்தார்.
செலிக்மன் தனது நூலில் நாகதீப என்கிற இடத்தைத் தான் மதவாச்சி என்று அழைத்து வந்திருக்கிறார்கள் என்று ஹென்றி பார்க்கரை ஆதாரம் காட்டுகிறார். ஹென்றி பார்க்கர் (Henry Parker) கிட்டத்தட்ட செலிக்மன் காலத்திலேயே “சிங்கள பழங்குடிகளின் வாய்மொழி நாட்டுப்புற கதைகளை ஆய்வு செய்து 1910இல் “Village folk-tales of Ceylon” என்கிற நூலை எழுதியவர். செலிக்மன் ஹென்றியை அவரின் நூலில் 122 இடங்களில் ஆதாரம் காட்டுகிறார். அதுபோல ஹென்றி பார்க்கர் 1909 இல் வெளியிட்ட முக்கிய நூலான புராதன இலங்கை (Ancient Ceylon) என்கிற நூலில் செலிக்மனின் ஆய்வை பல இடங்களில் பிரஸ்தாபிக்கிறார்.
செலிக்மன் தனது ஆய்வின் விபரங்களை (வரைபடத்துடன்) 23.05.1908 அன்று “இலங்கை றோயல் ஆசிய கழகத்தின்” கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.[i] கூட்டத்தின் போது நிகழ்ந்த கலந்துரையாடலும் அவரின் பரிந்துரைகளும் அக்கழகத்தின் சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன. அப்போது அந்தக் கழகத்தின் தலைவராக இருந்தவர் ஜோன் பெர்கியுசன். அவர் தான் செலிக்மனை தேசாபதியின் வேண்டுகோளின் பேரில் இலங்கைக்கு வரவழைத்தவர். இலங்கையின் தேசாதிபதி ஹென்றி மக்கலம் (Sir Heney McCallum) அந்த அவைக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். அக்கூட்டத்தை ஆரம்பித்து அவர் உரையாற்றும் போது “இலங்கையில் வேடுவர் இனம் மிகவும் வேகமாக அழிந்துவந்திருக்கிறது. இதப் பற்றிய விரிவான ஒரு சமூக ஆய்வொன்றின் அவசியம் கருதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹட்டன் (Haddon) அவர்களைக் கொட்டுக்கொண்டேன் அவர் இந்த விடயத்துக்கு பொருத்தமானவராக பேராசிரியர் செலிக்மனை எமக்கு பரிந்துரைத்தார்” என்றார். அப்போது அந்தக் கூட்டத்தின் இறுதியில் அக்கழகத்தின் உபதலைவராக இருந்த சேர் பொன் அருணாச்சலம் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து ஆமோதித்தார்.[ii]
செலிக்மன் தனது ஆய்வை முடித்து விட்டுத் திரும்பியதன் பின்னர் பல உலக நாடுகளில் இலங்கையின் வேடுவர் குறித்தும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் விரிவுரைகளை நிகழ்த்தியிருப்பதை அறிய முடிகிறது. [iii]
பின்வந்த ஆய்வாளர்கள் பலருக்கும் கைகொடுத்த நூல் அது. இனவரைவியல் மாத்திரமல்ல, தொல்லியல், சாதியம் பற்றிய ஆய்வுகளுக்கு கூட அவரது இந்த நூலை கையாண்டிருப்பதை பல இடங்களிலும் காண முடிகிறது.
இந்த ஆய்வைத் தூண்டிய காரணிகள் பற்றி அவரது முன்னுரையில் காணக் கிடைக்கிறது.
வேடர்களுக்கும் தமிழ் சிங்கள மக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றிய ஆழமான ஆய்வு விபரங்களை அவர் முன்வைத்தார். அவரது நூலைப் பார்த்தால் அவருக்கு இது தொடர்பில் உசாத்துணையாக பயன்படுத்துமளவுக்கு அவருக்கு முந்திய நூல்கள கிடைக்கவில்லை என்பதை அறிய முடியும். ஆனால் அவருக்கு பின்வந்தோர் பலர் செலிக்மனின் ஆய்வைக் கொண்டாடுவதைக் காண முடியும்.
அவர் ஆய்வு செய்தது ஒட்டுமொத்த இலங்கையின் ஆதிவாசிகளை பற்றித்தான் என்றாலும் ஒரு தனியான அத்தியாயம் (12வது) கிழக்கிலங்கை கடல் வேடுவர் பற்றியது. இலங்கையின் கராவ (சிங்கள சமூகத்தில்), கரையார் (தமிழ் சமூகத்தில்) ஆகிய சாதிகளை ஆராய்ந்தவர்களும் இந்த ஆய்வை உன்னிப்பாக கையாண்டுள்ளனர்.
இலங்கையின் பழங்குடிகளை ஆராய்பவர்கள் நூற்றாண்டுக்கு முன்னரேயே அது பற்றிய குறிப்புகளை எழுதிய Robert knox,John Davy, D.Pridham, Sir Emerson Tennent, B.F.Hartshorne, John Bailey, C.S.V.Stevens போன்றோரின் குறிப்புகளையும் கையாள்வார்கள். இலங்கையின் பழங்குடிகள் பற்றி இவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் பற்றிய விபரங்களைப் பற்றி 1899 இலேயே பேராசிரியர் W.M.TURNER, எழுதிய“Contributions to the Craniology of the people of the Empire of India” என்கிற நூலில் நிறையவே எழுதியிருக்கிறார். செலிக்மன் போல அதை ஒரு ஆழமான, விஞ்ஞானபூர்வமான விடயதானமாக எடுத்து கள ஆய்வுகள் செய்து பன்முக கோணத்தில் விரிவான விஞ்ஞானபூர்வமான ஆய்வாக முன்வைத்தது இல்லை.
அவர் மட்டக்களப்பு வேடுவர் குறித்து குறிப்பாக கடல் வேடுவர் குறித்து எழுதியவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

Monday, November 27, 2017

Ancient weapon unearthed in north Africa

This ancient weapon unearthed in north Africa (Sudan) is made from the jawbone of the donkey or ass. Although these weapons were present in the paleolithic, this particular one dates from the PPNB (Pre-Pottery-Neolithic Period B). At this period of time that animal was not known to be domesticated in North Africa or the Fertile Crescent..

There is a record of one being used by the Israelite Sampson (Judges 13-16) in his mercenary-type exploits against the Sea-people or Philistines in the Hebrew Bible which may reveal that the use of it as a weapon occurred in the Levant as well as North Africa.

Archaeology of Sardinia. Grave of Giants.


HISTORICAL PERIOD: Around the Early Bronze Age (2000 B.C.)

The Tombs of Giants, so called because of their gigantic dimensions, are another typical element of Sardinia's megalithic period. Usually the frontal part of their structure is delimited by some sort of semicircle (exedra), almost as to symbolize a bull's horns. Viewed from above the shape of the Tombs of Giants brings to mind that of an uterus or a woman in labour. This interpretation would confirm how closely connected  life and death were for nuraghic people and how their megalithism was linked to the cult of fecundation.





In the middle of these tombs' exedra there is an enormous granite stele, on the base of which is an opening that leads to the part that was probably considered the most sacred by nuraghic people: the part occupied by the tomb corridor, that most of the time has been realized during the transition period between the pre-nuraghic and nuraghic ages. Their structure, when the exedra is not present (in this case they're called “allée couverte”), has a form similar to that of the barrows in Great Britain. 




As for the Nuraghi and the Sacred Wells, the Tombs of Giants have been studied in relation to their astronomical orientation. Even in this case there are some surprises: The Tombs of “Li Mezzani” in Palau (OT) and “Coddu Vecchiu” (OT) are just an example of how nuragic people had a great knowledge of the celestial cycles. On the equinoxes days, in these two Tombs of Giants, the sunrise's light enters perfectly in the tomb corridor, through the small opening on the stele dominating the exedra.



Many Tombs of Giants are also oriented towards the Taurus' constellation, precisely towards the brightest star, Aldebaran (Alpha Tauri). This is the case of the Tombs of “S'Ena e Tomes” in Dorgali (NU), “Goronna” in Paulilatino (OR) and “Baddu Pirastru” in Thiesi (SS).



The Tombs of Giants are constructions whose shape and size are unique and are scattered throughout the island. So far about 320 have been found, but probably Sardinia's territory is jealously hiding many more of them. The Tombs of Giants housed collective graves, probably without any class distinction. So they were probably used as charnel houses that could contain up to 200 skeletons.

Sunday, November 19, 2017

ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் (இறப்பு: நவம்பர் 18, 2017)


திருமலை ரீ.பத்மநாதன் அவர்கள் திருகோணமலையில் 1964ம் ஆண்டிலேயே திருகோணமலை இசைக்கழகம் என்ற இச...ைக்குழுவை ஆரம்பித்து இயக்கி வந்தவர்.
இலங்கை வானொலியின் மெல்லிசைப் பாடல்கள் பலவற்றுக்கு இசையமைத்துப் புகழீட்டியிருந்த ஈழத்தின் தலைசிறந்த ஓர் இசையமைப்பாளர் திருமலை பத்மநாதன் அவர்கள்.
ஈழத்தின் மூத்த - புகழ் பூத்த கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள் தயாரித்து நடித்த நிர்மலா திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தவர் திருமலை பத்மநாதன். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த "கண்மணி ஆடவா .." என்ற பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாராட்டைப் பெற்றிருந்தது.

அது போல தென்றலும் புயலும் என்ற ஈழத்துத் திரைப்படத்துக்கும் இவரே இசையமைத்திருந்தார்.
இசையில் மண்வாசம் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு தனது பாடல்களுக்கு இசையமைத்து இரசிகர்கள் நெஞ்சங்களில் நிலையான இடத்தைப்பிடித்தவர்.
நிறைவான கர்நாடக,மேலைத்தேச இசைஞானம் உடைய ஓர் ஒப்பற்ற இசைக்கலைஞரை எங்கள் தேசம் இழந்துள்ளது.
எமது ஆழ்ந்த இரங்கல்.
பதிவிட்டவர் : SK Rajen

நாகம் பூசித்த மணிபல்லவத்து அன்னை நாகபூசணி


அந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைத் தீவில் இயக்கர்களும் நாகர்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள்... அரசுகளும் இருந்தன. இந்த நிலையில், வட இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு அருகிலே இருக்கிற கடல் நடுவில் உள்ள மணிபல்லவத் தீவில் அவர்கள் ஒரு அழகிய பீடத்தைக் கண்டார்கள்.
இந்த அரியணைக்காக.. சிம்மாசனத்திற்காக.. நாகர்கள் இரு பிரிவுகளாய் பிரிந்து போரிடத் தொடங்கினார்கள். காலம் ஓடிற்று… கௌதமபுத்தர் அஹிம்சையை போதித்து வந்த காலத்திலும் இந்த அரியணைக்கான மோதல் தொடர்ந்தது.
புத்தர் இந்தப் பிணக்கைத் தீர்க்க மணிபல்லவம் வந்தார். “இந்த சிம்மாசனம் இந்திரனாலே புவனேஸ்வரி அம்பாளுக்காகவே பிரதிஷ்டை செய்யப்பெற்றது. இது அன்னைக்கே உரியது.. இதனை வணங்குவதே நம் கடன்” என்று அந்த நாகர் கூட்டத்தை வழிப்படுத்தி வழிபடச் செய்தார்.
“பெரியவன் தோன்றா முன்னர் இப்பீடிகை கரியவன் இட்ட காரணத்தாலும்”
(மணிமேகலை- காதை- 25, 54,55)
இது நடந்து சில காலமாயிற்று.. கலியுகக் கண்களிலிருந்து அம்பிகையின் பீடம் மறைந்தொளிர்ந்தது.. ஆங்கே அன்னை சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியிருந்தாள்.
“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்” என்பர். ஆனால் பாம்பு (நாகம்) ஒன்று அம்பிகையை அங்கு பூஜை செய்து வந்தது. இது தொடர்ந்திட, மணிபல்லவத்து நாயகி.. அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றான புவனேஸ்வரி பீட நாயகிக்கு நாகபூஷணி, நாகபூஜணி என்ற பெயர்கள் நிலைக்கலாயின..
நயினைத்த்வீப நிவாஸிநீம் நதிகிருதாம் ஆனந்த சந்தாயினீம்
பக்தாரீஷ்ட நிவாரிணீம் விநிசுதைர் நாகைப் புரா பூஜிதாம்
நாகானாம் ஜனநீதி லோகவசனைக்கியாதாம் சுபாம் சாஸ்வதாம்
நௌமித்வாம் பரதேவதாம் மம மனோபீஷ்டார்த்த சித்திப்பிரதாம்
எனப் போற்றும் வண்ணம் அன்னை அங்கே நிலைத்தாள். காலம் கனிந்தபோது வணிகன் ஒருவனுக்கு அன்னை காட்சிகொடுத்து தம்மிருப்பைப் புலப்படுத்தினாள்.
வணிகன் தன் வாழ்வை, வளத்தை எல்லாம் பயன்படுத்தி பெரிய கோயில் ஒன்றை அன்னைக்குச் சமைத்தான். நயினைப்பட்டர் என்கிற அந்தணர் இக்கோயிலின் ஆதி சிவாச்சார்யர் ஆனார். அவர் பெயரால் மணிபல்லவம்
“நயினாதீவு” ஆயிற்று.
இடையிடையே எத்தனையோ கால மாற்றங்கள்.. மதவெறியர்களான போர்த்துக்கேயர் முதலியவர்களின் இந்து ஆலய அழிப்புச் செயற்பாடுகள் இவைகளை எல்லாம் மீறி இன்றைக்கும் சிறப்புற்றிருக்கிறது இத்தலம்.
போர்த்துக்கேயர் இங்கு வந்து கோயிலை இடித்தபோது அம்பிகையின் உற்சவ வடிவத்தை இங்குள்ள ஆலமரப் பொந்தில் வைத்து அடியவர்கள் மறைவாக வழிபட்டனர். இன்றும் அந்த ஆலமரம் ‘அம்பாள் ஒளித்த ஆல்’ என்று அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
இந்த ஆலயத் திருத்தேரை போர்த்துக்கேயர் எடுத்துக்கொள்ள முயன்றபோது அது தானே நகர்ந்து கடலுள் பாய்ந்ததாம்.. ஆனிப்பூரணை நாளில் அந்த கடலுள்பாய்ந்த தேரின் திருமுடி மட்டும் தெரியும் என்பதும் ஐதீகமாக இருக்கிறது.
இன்று நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயம் என்று புகழ் பெற்று விளங்கும் இத்தலம் வட இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடல் நடுவிலுள்ள நயினாதீவு என்கிற தீவில் உள்ளது.
கருவறையில் சுயம்புவாக அம்பிகை விளங்குகிறாள். நாகம் குடை பிடிக்க.. சிவலிங்கத்தை இறுக்க அணைத்தபடி விளங்கும் அம்மை போல அந்த சுயம்பு உருவம் இருக்கிறது.
அடியவர்களின் பசிப்பிணி தீர்க்கும் ‘அமுதசுரபி அன்னதான மண்டபம்’ மற்றும் யாத்திரீகர்கள் தங்குவதற்கு ‘இறைப்பயணிகள் இல்லம்’ என்பனவும் இங்கு இன்று அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனி முழுமதி நாளை நிறைவாகக் கொண்டு 15 நாட்கள் மஹா உற்சவம் காணும்
கற்றவர்க்கினியாய் நயினையம்பதி வாழ் காரணி நாரணன் தங்காய்
மற்றவரறியா மரகதவரையின் வாமமே வளர் பசுங்கொடியே
நற்றவரோடும் சேயெனை இருத்தி நாதநாதாந்தமும் காட்டி
முற்றுமாய் நிறைந்த பூரணானந்த முத்திதா நாகபூஷணியே
என்று இந்த அன்னையைப் பாடுகிறார் இவ்வூரில் வாழ்ந்த நயினை நாகமணிப் புலவர்.
சிவனுக்கு உகந்த பஞ்சபூதஸ்தலங்களான சிதம்பரம், திருவண்ணாமலை போன்றன போல, அம்பிகைக்குரிய ஆறு ஆதார சக்தி பீடங்களில் இதனை ‘மணிபூரக ஸ்தலம்’ என்றும் கொண்டாடுகின்றனர்.
இவ்வாறான மகிமை பொருந்திய இந்த ஸ்தல மகிமை பலவாறு சொல்லப்படுகிறது. இங்கே அம்பிகையை வணங்குவார்க்கு பிள்ளைப்பேறு கிட்டும் என்பர். கோயிலில் அண்மைக் காலத்திலேயே பல்வேறு அற்புதங்கள் நடந்ததாக.. நடப்பதாகச் சொல்கிறார்கள்.
வேற்றுச் சமயத்தவர்கள், பிற இனத்தவர்கள் பலரும் கூட தாங்கள் இங்கே பெற்ற அற்புத நிகழ்வுகள் பலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Sunday, November 12, 2017

SUN TZU ஸுன் ட்ஸூ சீனத்துப் போரியல் மேதை

Sun Tzu was an ancient Chinese military general, strategist and philosopher, who is believed to have written the famous ancient Chinese book on military strategy, “The Art of War”. Through his legends and the influential “The Art of War”, Sun Tzu had a significant impact on Chinese and Asian history and culture. The book drew immense popularity during the 19th and 20th centuries when the Western Society saw its practical use. This work still has continued its impact on both Asian and Western culture and politics. Sun Tzu’s authenticity is still a question of debate, but the traditional Chinese accounts place him in the Spring and Autumn Period of China (722–481 BC), where he was a military general serving under King Helü of Wu. Based on the description of warfare in “The Art of War” and the striking similarity of the text’s prose to other works from Warring States period led the modern scholars to place the completion of “The Art of War” in the Warring States Period (476–221 BC).

ஸுன் ட்ஸூவின் நூலின் முதல் அத்தியாயத்திலேயே ஒரு சம்பவம் கூறப்பட்டிருக்கும்.

ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், சீனாவில் பல நாடுகள் இருந்தன. அவற்றின் மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டேயிருந்தனர். அந்த நாடுகளில் ஒன்று வூ என்னும் நாடு. அதன் அண்டை நாடாகிய ச்சூ அதை விட பெரியது. பெரும் படையைக் கொண்டது. வூ படையைவிட பன்மடங்கு பெரியது.  அந்த நாட்டிடமிருந்து தன் நாட்டைப் பாதுகாத்துக்கொள்ளத் தக்கதொரு நல்ல படையைப் பெருக்கிக்கொள்ள வூ மன்னன் விரும்பினான்.

அக்காலத்தின் போரியல் மேதையாக ஸுன் ட்ஸூ விளங்கினார். அவர் போர்க்கலை THE ART OF WAR என்னும் நூலை எழுதியுள்ளார். அந்த நூல் தற்காலத்தில் வாணிபம், நிர்வாகம், போரியல் போன்ற பல துறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
வூ நாட்டு மன்னனை ஸுன் ட்ஸூ சென்று சந்தித்தார்.

"தளபதிக்குத் திறமையிருந்தால் எந்த மாதிரியான மனிதர்களுக்கும்
போர்ப்பயிற்சி கொடுத்துவிடமுடியும்",  என்று ஸுன் ட்ஸூ கூறினார். அந்த சித்தாந்தத்தை விளக்க ஆரம்பித்தார். "நான் உம்முடைய நூலைப் படித்துவிட்டேன். இந்தப் பெண்களுக்குக்கூட உம்முடைய முறைகளின்படி போர்ப்பயிற்சி கொடுக்கமுடியுமா, பாரும்" என்று மன்னன் உத்தரவிட்டான். தன்னுடைய அந்தப்புரத்து சிங்காரிகளுக்குப் போர்ப்பயிற்சி சொல்லிக் கொடுக்கச் சொல்லி சவால்விட்டான்.

அதனை ஏற்றுக்கொண்ட ஸுன் ட்ஸூ மன்னனிடம் சன்னத்துப் பெற்றார்.

படையின் தலைமைத்துவத்தையும் முழுப்பொறுப்பையும் பெற்றுக்கொள்ளும் சடங்கு - சன்னத்துப் பெறுதல். தளபதிக்கு மன்னன் தன் கையால் பரிவட்டம் கட்டி வெற்றிலை பாக்கு கொடுப்பான்.
சில மரபுகளில் தண்டம் ஒன்றை மன்னனிடமிருந்து பெறுவார்கள். 'தண்டு எடுத்தல்' என்ற வழக்கம் அது.

சீனர்களிடமும் இந்த சன்னத்துப் பெறும் மரபு இருந்தது.
மன்னனிடமிருந்து வாள் பெறுவார்கள். அந்த வாளைப் பெற்றபின்னர்
தளபதி இடும் உத்தரவை யாரும் மீறவே முடியாது. மன்னவனும் அதனை
மாற்றமுடியாது.
ஸுன் ட்ஸூ மன்னனின் வாளைக் கேட்டு வாங்கிக்கொண்டார்.

பின்னர் அந்தப்புர சிங்காரிகள் வந்தனர்.

நூற்று எண்பது பெண்கள் கொண்ட அந்தப்புர அழகிகள் கூட்டம் ஒன்று வந்து சேர்ந்தது. அந்தக் கூட்டத்தை இரண்டு பகுதிகளாக ஸுன் ட்ஸூ பிரித்தார்.
அவர்களுக்குத் தலைமையாக மன்னனின் மிகவும் விருப்பமான மிக அழகிய மிக இளமையான வைப்பாட்டிகள்(favourite concubines) இருவரை நியமித்தார்.

பயிற்சி தொடங்கியது.
ஸுன் ட்ஸூ அவர்களை வலது பக்கமாகத் திரும்பச்சொன்னார்
அந்த வைப்பாட்டிகள் சிரித்து, கேலி செய்துகொண்டு விளையாடிக்
கொண்டு சரசமாடிக்கொண்டிருந்தனர். மற்ற சிங்காரிகளும் அவ்வாறு
விளையாடினர்.

ஸுன் ட்ஸூ அவர்களை அழைத்து ஒழுங்காகப் பயிற்சி செய்யச்சொன்னார்.
மீண்டும் வலது பக்கம் திருமச்சொன்னார்.
அவர்கள் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
மற்றவர்களும் அதே மாதிரிதான்.

இரண்டாம் முறை ஸுன் ட்ஸூ அவர்களிடம் இன்னும் நயமாகவும் விரிவாகவும் சொன்னார். சில கவாத்துகளைத் தாமே செய்து காட்டினார்.
பலிக்கவில்லை. வைப்பாட்டிகளும் சிங்காரிகளும் மாறவில்லை.

மூன்றாம் முறை முதலிலிருந்து எல்லா கவாத்தையும் முறையாகச்
செய்து காட்டி, முடிவில் எச்சரிக்கையும் விடுத்தார்.
அப்போதும் அவர்கள் திருந்தவில்லை.

உடனே அங்கிருந்த வீரர்களை அழைத்து அந்த இரண்டு  வைப்பாட்டிகளையும் அத்தனை பேர் முன்னிலையிலும் தலையை வெட்டிவிடச்சொன்னார்.

மன்னன் முதலில் விளையாட்டாக நினைத்தான்.
மற்றவர்களும் அப்படியே.

ஆனல் ஸுன் ட்ஸூ வீரர்களிடம் தாம் இட்ட கட்டளையை நிறைவேற்றும் வண்ணம் ஆணையிட்டார்.

மன்னன் வெகுண்டெழுந்து அந்த ஆணையை மாற்றி உத்தரவிட்டான்.

ஸுன் த்ஸூ தம்மிடம் இருந்தார் வாளைத் தூக்கிக் காண்பித்து,
"மன்னவனே! இது உம்முடைய வாள். உம் அதிகாரம் நீதி, வீரம், உறுதி,
வன்மை முதலிய அனைத்திற்கும் இந்த வாள் நிலையாக உள்ளது. அதை நீர் என்னிடம் கொடுத்துவிட்டீர். அத்துடன் அனைத்து அதிகாரத்தையும் என்னிடம் கொடுத்துவிட்டீர்.
அதன்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என் ஆணையில் யார் குறுக்கே
வந்தாலும் - நீரே ஆயினும் சரி - இந்த வாளுக்கு இரையாக்கிவிடுவேன்",
என்றார்.

வெலவெலத்துப் போனார்கள், அனைவரும்.

மன்னன் உட்பட பலர் முன்னிலையிலும் அந்த இரு வைப்பாட்டிகளையும் சிரச்சேதம் செய்தனர்.

புதிய தலைவிகளை ஸுன் ட்ஸூ நியமித்து, பயிற்சியைத் தொடர்ந்தார்.

சில மணி நேரம் சென்று மன்னனை அழைத்து, மேற்பார்க்கச் சொன்னார்.

தன்னுடைய மிக விருப்பமான, மிக அழகிய, மிக இளமையான இரண்டு வைப்பாடிகளை இழந்திருந்த மன்னன் சொன்னான்,
"இப்போது எனக்கு எதையும் மேற்பார்வையிட மூட் இல்லை."

ஸுன் ட்ஸூவின் முதல் மூன்று விதிகள்:

1. நாம் சொல்லவந்ததை நாம் சரியாகச் சொல்லியிருக்க மாட்டோம்.
ஆகவே நாம் சொல்லவந்ததை மீண்டும் விரிவாகச் சொல்ல வேண்டும்.

2.நாம் சொல்ல வந்த விஷயம் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கலாம். ஆகவே தை மறு பரிசீலனைசெய்து மீண்டும் சொல்லவேண்டும்.

3. சொல்லப்பட்டவர்கள் சற்று தெளிவில்லாதவர்களாக இருக்கலாம்
அவர்கள் பொருட்டு மீண்டும் சொல்லிக்கொடுக்கலாம்.

4. நான்காம் தடவை.......XXX 

http://jaybeestrishul11.blogspot.com.au/2012/07/sun-tzu.html

Wednesday, November 8, 2017

Heron of Alexandria அலெக்ஸான்ரியாவின் அதிசய இன்ஜினியர்

.
Heron of Alexandria, also called Hero (flourished c. ad 62, Alexandria, Egypt), Greek geometer and inventor whose writings preserved for posterity a knowledge of the mathematics and engineering of Babylonia, ancient Egypt, and the Greco-Roman world.
Heron’s most important geometric work, Metrica, was lost until 1896. It is a compendium, in three books, of geometric rules and formulas that Heron gathered from a variety of sources, some of them going back to ancient Babylon, on areas and volumes of plane and solid figures. Book I enumerates means of finding the area of various plane figures and the surface areas of common solids. Included is a derivation of Heron’s formula (actually, Archimedes’ formula) for the area A of a triangle,A = (s(sa)(sb)(sc))in which a, b, and c are the lengths of the sides of the triangle, and s is one-half the triangle’s perimeter. Book I also contains an iterative method known by the Babylonians (c. 2000 bc) for approximating the square root of a number to arbitrary accuracy. (A variation on such an iterative method is frequently employed by computers today.) Book II gives methods for computing volumes of various solids, including the five regular Platonic solids. Book III treats the division of various plane and solid figures into parts according to some given ratio.
Other works on geometry ascribed to Heron are Geometrica, Stereometrica, Mensurae, Geodaesia, Definitiones, and Liber Geëponicus, which contain problems similar to those in the Metrica. However, the first three are certainly not by Heron in their present form, and the sixth consists largely of extracts from the first. Akin to these works is the Dioptra, a book on land surveying; it contains a description of the diopter, a surveying instrument used for the same purposes as the modern theodolite. The treatise also contains applications of the diopter to measuring celestial distances and describes a method for finding the distance between Alexandria and Rome from the difference between local times at which a lunar eclipse would be observed at the two cities. It ends with the description of an odometer for measuring the distance a wagon or cart travels. Catoptrica (“Reflection”) exists only as a Latin translation of a work formerly thought to be a fragment of Ptolemy’s Optica. In Catoptrica Heron explains the rectilinear propagation of light and the law of reflection.
Of Heron’s writings on mechanics, all that remain in Greek are Pneumatica, Automatopoietica, Belopoeica, and Cheirobalistra. The Pneumatica, in two books, describes a menagerie of mechanical devices, or “toys”: singing birds, puppets, coin-operated machines, a fire engine, a water organ, and his most famous invention, the aeolipile, the first steam-powered engine. This last device consists of a sphere mounted on a boiler by an axial shaft with two canted nozzles that produce a rotary motion as steam escapes. (See the animation.) The Belopoeica (“Engines of War”) purports to be based on a work by Ctesibius of Alexandria (fl. c. 270 bc). Heron’s Mechanica, in three books, survives only in an Arabic translation, somewhat altered. This work is cited by Pappus of Alexandria (fl. ad 300), as is also the Baroulcus (“Methods of Lifting Heavy Weights”). Mechanica, which is closely based on the work of Archimedes, presents a wide range of engineering principles, including a theory of motion, a theory of the balance, methods of lifting and transporting heavy objects with mechanical devices, and how to calculate the centre of gravity for various simple shapes. Both Belopoeica and Mechanica contain Heron’s solution of the problem of two mean proportionals—two quantities, x and y, that satisfy the ratios a:x = x:y = y:b, in which a and b are known—which can be used to solve the problem of constructing a cube with double the volume of a given cube. (For the discovery of the mean proportional relationship see Hippocrates of Chios.)
Only fragments of other treatises by Heron remain. One on water clocks is referred to by Pappus and the philosopher Proclus (ad 410–485). Another, a commentary on Euclid’s Elements, is often quoted in a surviving Arabic work by Abu’l-‘Abbās al-Faḍl ibn Ḥātim al-Nayrīzī (c. 865–922).
ரா_பிரபு
" அலெக்ஸான்ரியா"
எகிப்தின் மிக பிரபலமான ஒரு நகரம். குறிப்பாக அந்த கால உலக அதிசயம் கலங்கரை விளக்கமும் .. இடைக்காலத்தில் உலக அதிசயமான நெக்ரோபோலீஸ் எனும் கல்லறைகள் கட்டிடங்களுக்காகவும் உலக பிரசித்தம்.
இதற்கும் மேல் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அலெக்ஸான்ரியாவின் எரிந்து போன மகா பெரிய நூலகம். உலகத்தின் அணைத்து போக்கிஷியங்களும் அங்கே கொட்டி கிடந்தன. (அந்த நூலகம் வார கணக்கில் எரிந்ததாம் அவ்ளோ பெரிது )
அலெக்ஸாண்ட்ரியா கி. மு 331 இல் அலெக்ஸ்சாண்டரால் நிறுவப்பட்ட நகரம். அது பண்டைய கடவுள்கள் ஆட்சி செய்த ஒரு புராண நகரம். அந்த நகரத்தின் மக்கள் கடவுளுக்கு மிக பக்தியாக இருந்தார்களா தெரியாது ஆனால் மிக பயந்து இருந்தனர். அதற்க்கு காரணம் அங்கே இருந்த பிரமாண்ட கோவில் களின் கடவுள்கள் மிக உயிரோட்டமாக இருந்தது தான். ஆம் அந்த கடவுள்கள் அந்த மாநகர மக்கள்களுடன் பல வகைகளில் பேசினார்கள் தொடர்பு கொண்டார்கள் பய முறுத்தினார்கள். அக்கால கிரேக்க கடவுள் ஜூயுஸ் பற்றி இன்றைய பல ஹாலிவூட் திரைப்படங்களில் நாம் பார்த்து இருபோம்.

குறிப்பாக அலெக்சான்றியாவை அன்றைய காலத்தில் மிரட்டி இருந்தது அன்றைய கடவுள் serapis .

சேராபிஸ் க்கு மிக பிரமாண்ட கோவில் இருந்தது. மக்கள் கோவிலுக்கு பயம் கொண்ட பக்தியுடன் செல்ல காரணம் அங்கே ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் போது அவர்கள் ஒரு மாயா ஜால உலகத்திற்கு சென்று வந்தார்கள்.
அங்கே உள்ளே செல்ல கதவுகள் சாத்த பட்டிருக்கும் அதை திறக்கும் ஆட்கள் அங்கே யாரும் கிடையாது. மாறாக கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நெருப்பை கொளுத்தி வேண்ட வேண்டும்.

திருப்தியான கடவுள் கொஞ்சம் நேரம் கழித்து கதவை திறப்பார்.மாயாஜாலமாக தானாக திறக்கும் கதவை கடந்து சென்றால். உள்ளே கோவிலில் நடுவில் பிரமாண்ட ஹாலில் ஒரு உலோக ரதம் கிளம்பி மெல்ல காற்றில் எழும். அங்கே முன்னால் பிரமாண்டமாக அமர்ந்து இருக்கும் சேராப்பிஸ் முகத்தில் சூரிய ஒளி தோன்றும் அந்த கணம் அந்த ரதம் அப்படியே காற்றில் எழும்பி பறக்கும்.
மக்கள் கடவுளின் சக்தியை கண்டு பிரமித்து விழுந்து வணங்குவார்கள்.

அங்கே இடிகளின் கடவுள் சிலை முன் நின்று வணங்கும் போது அந்த சிலைகள் சில நேரம் இடி சத்தத்தை கொடுக்கும். அங்கே இருந்த சில சிலைகள் உறுமும். அப்புறம் சில தேவதைகள் காணிக்கை நேரத்தில் கண்களில் இருந்து ரத்தம் வழியும். இன்னோரு தேவதை காணிக்கை நேரத்தில் திடீரென மார்பில் இருந்து பால் பீச்சி அடிக்கும்.

இது போன்ற கடவுளின் சக்தியை நேரடியாக தினம் தினம் காணும் அந்த நகரத்தின் மக்கள் கடவுளை ரத்தமும் சதையுமாக உணர்ந்ததாக நம்பினார்கள். வணங்கினார்கள். பயந்தார்கள்.

ஆனால் பாவம்...
அவர்களுக்கு தெரியாது. இந்த மாயா ஜாலத்திற்கு பின்னால் இருந்தது கடவுள் சக்தி அல்ல அது ஒரு திறமை வாய்ந்த இன்ஜினியரிங் மூளை என்று.
அந்த மகா மூளை கொண்ட இன்ஜினியரை hero of alexandriya என்று அழைக்கிறார்கள் .(கதாநாயகன் என்ற பொருளில் அல்ல..அது அவன் பெயர்.) அவன் பெயர் heron அதை தான் அப்படி அழைக்கிறார்கள் .ஹெரான் ஒரு கணிதவியல் மற்றும் பொறியியல் வல்லுனர். அக்காலத்தில் மின்சாரமோ மோட்டாரோ இல்லாத காலத்தில் அவன் செய்து வைத்திருந்த கண்டுபிடிப்புகள் ..தானியங்கிகள்.. தொழில்நுட்பங்கள் எல்லாமே இக்கால நவீன கண்டுபிடிப்புக்கு சவால் விடுபவை. உதாரணமாக சில....

அந்த கோவிலில் ஒரு சிலை இருந்தது ஒரு பிளாட்பார அமைப்பு அதில் ஒரு பக்கம் ஒரு குதிரை நிற்கும் அதற்க்கு எதிரே ஒரு மனிதன் கையில் வாளுடன் திரும்பி நிற்பான் திடீரென அந்த மனித சிலை திரும்பும் அந்த குதிரையின் கழுத்தில் வாளை வைத்து அப்படியே வெட்டும் .. அந்த வாள் குதிரை கழுத்தை அறுத்து கொண்டே சென்று அடுத்த பக்கம் வருவதை பார்க்கலாம் கழுத்தில் வெட்ட பட்ட கோடும் தெரியும் ஆனால் குதிரை தலை துண்டாகாமல் அப்படியே தான் இருக்கும் அந்த மனிதன் திரும்ப திரும்ப குதிரையை வெட்டி கொண்டே தான் இருப்பான். இதை தவிர அந்த குதிரை வாயில் தண்ணீர் வைக்க பட்டால் அழகாக உறிஞ்சி வேறு குடிக்கும். இதை பார்க்கும் மக்கள் தலை கிறுகிறுக்கும்.
அந்த அமைப்பை யாரவது உடைத்து பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும் அங்கே அடியில் அந்த சிலையில் ஒரு ஓட்டை இருப்பதும் அதில் தண்ணீர் நிரம்ப நிரம்ப ஒரு குழாயில் வெற்றிடம் உண்டாகி குதிரை வாயில் வைக்க பட்ட தண்ணீரை உருஞ்சுவதும்.
மேலும் அந்த கத்தி வெட்டி கொண்டு முன்னேற முன்னேற கழுத்தின் உள்ளே கழுத்தை இணைத்து பிடிக்கும் பலசக்கர அமைப்பு இருந்ததும்.இவ்வளவும் இயங்குவது தண்ணீரின் சக்தியால் மட்டுமே.
இதே போல இன்னொரு சிறு சிலை .. அதில் ஒரு முனையில் ஒருவன் வில்லை இழுத்து பிடித்து இருப்பான் எதிர் முனையில் ஒரு டிராகன் இருக்கும் ஒரு குறிப்பிட்ட விசை இழுக்க பட்டதும் அவன் டிராகனை நோக்கி அம்பு விடுவான் அப்போது டிராகன் கர்ரர் என உறும்பும். இதுவும் தண்ணீரின் மாயாஜாலம் தான் விசை இழுக்க பட்ட உடன் ஒரு பாத்திரத்தின் நீர் கீழ் நோக்கி வடியும் அப்போது உண்டாகும் வெற்றிடடத்தில் காற்று புகுந்து டிராகன் உறும்பும் சப்தம் கொடுக்கும்.
ஒரு நீண்ட சதுர வடிவ மர குழாய் அமைப்பில் ஒரு முள் முள்ளாக இருக்கும் இரும்பு பந்து போடப்பட்டு அந்த அமைப்பு ஊஞ்சல் போல மேலே கீழே ஆட்ட படும் போது உருளும் அந்த பந்து எழுப்பும் கட கட ஓசை... அந்த சிலைக்கு வெளியே இருந்து கேட்பவருக்கு இடியின் ஓசை போல இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக...
தேவதை முன்னால் நெருப்பில் காணிக்கை செலுத்தும் மக்கள் அந்த தேவதைக்குள் நடந்து கொண்டிருக்கும் சூட்சமம் பற்றி துளியும் அறியாமல் இருந்தார்கள்.
அவர்கள் எரிக்கும் நெருப்பு உள்ளே இருக்கும் ஒரு பாத்திரத்தை சூடாக்கும் அதற்க்கு உள்ளே வைக்க பட்ட நீர் படி படியாக சூடாகி பாத்திரத்தின் நீராவி அழுத்தத்தை கூட்டும். அந்த பாத்திரத்தில் இணைக்க பட்ட ஒரு குழாய் அடுத்த பாத்திரதுடன் இணைக்க பட்டிருக்கும் .
அந்த இன்னொரு பாத்திரத்தில் செயற்கை ரத்தம் வைக்க பட்டிருக்கும். மக்கள் நெருப்பு தொடர்ந்து எரிக்க எரிக்க குழாயில் அழுத்தம் அதிகமாகும். குழாயில் அழுத்தம் அதிகமாகி பாத்திரத்தில் உள்ள ரத்தம் அதனுடன் இணைக்க பட்ட அடுத்த குழாய் வழியாக மேலேறும் அந்த குழாய் தேவதை சிலையின் கண்களில் உள்ள மெல்லிய ஓட்டையில் உள்பக்கமாக இணைக்க பட்டிருக்கும். எனவே குறிப்பிட்ட நேரம் நெருப்பை மூட்டிய பின் அந்த தேவதை ரத்த கண்ணீர் வடிக்கும். சில தேவதை மாரில் பால் வடிவதும் இப்படி தான்.
ஹெரான் இப்படி பட்ட பல தகிடு தித்தங்களை செய்து கொடுத்தான். கடவுள்களின் தூதர்கள் ..மத போதகர்கள் அவனிடம் மக்களை கடவுளை நம்ப வைக்கும் படி கருவிகள் செய்து தர சொல்லி பணித்து இருந்தார்கள். அவனது எல்லாம் கண்டுபிடிப்பும் வெறும் ஈர்ப்பு விசை ...நீரின் சக்தி மற்றும் நீராவியின் சக்தி இதை கொண்டது இதை வைத்தே பெரிய மாய ஜாலங்களை நிகழ்த்தி காட்டினான்.
மிதக்கும் உலோக ரதம் ஒரு காந்த சக்தி கருவியாக இருக்கலாம் என்கிறார்கள்.
ஹெரானின் கருவிகள் ஆச்சர்யமானவை ... அதில் எங்கோ ஒரு இடத்தில கொளுத்த படும் நெருப்பு ஒரு இடத்தில் நீராவியை உண்டு பண்ணி விசையை முறுக்கி கோவில் கதவை திறக்க பண்ணியது.
சில தேவதையை சிரிக்க வைத்தது.. சில கடவுளை உறும வைத்தது. காற்றால் சுழல வைக்க பட்ட காற்றாடி அதனுடன் இணைந்த ஒரு அமைப்பின் மூலம் இசையை வழங்கியது.
புனித நீரை விநியோகிக்கும் ஜாடியின் மேலே போட பட்ட நாணயம் உண்டில் போல உள்ளே சென்று ஒரு விசையை தட்ட ஒரு வால்வ் சில வினாடிகள் திறக்க பட்டு புனித நீரை விநியோகித்து.
ஹெரானின் இந்த அற்புத பொறியியல் நுட்பத்திற்கு காரணம் அங்கே இருந்த அந்த உலகத்தின் அணைத்து பொக்கிஷத்தை அறிவை தனக்குள்ளே சுமந்திருந்த அலெக்ஸான்ரியா நூலகம் தான் என்கிறார்கள்.
ஹெரான் என்ன தான் அற்புத கருவிகளை கண்டு பிடித்து இருந்தாலும் ஒரு டாவின்சி போல ...
ஒரு ஆர்கிமிடிஸ் போல ... அவனுக்கு போதிய அங்கீகாரம் தருவது சரி அல்ல என்றே பலரும் கருதினார்கள் ஆம் அது சரியான கருத்தும் கூட.
காரணம் ஹெரானின் கண்டுபிடிப்புகள் எதுவுமே மக்களுக்கானது அல்ல மாறாக கடவுள் பெயரை சொல்லி மக்களை நிரந்தர முட்டாள் ஆக்கி வைத்திருக்க விரும்பிய மத குருமார்களுக்கானது.
கடவுள் சிலைகளுக்குள் அவன் செய்து வைத்திருந்த தகிடு தித்தம் ஒருவேளை மக்களுக்கு தெரிந்து இருந்தால் அவர்கள் அவனை கடவுளுக்கு காணிக்கை ஆக்கும் நெருப்பில் அவனை காணிக்கை ஆக்கி இருப்பார்களோ என்னவோ. ஆனால் எப்படியாகினும் தொழிற்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் ஹெரானின் அதிசய பொறியியல் கருவிகள் நம்மை ஆச்சர்ய பட வைக்க தவறுவது இல்லை.

Tuesday, November 7, 2017

யாழ்.வல்வையிலிருந்து அமெரிக்கா சென்ற வேப்பமரத்தினாலான கப்பல் (1938)

யாழ்.வல்வையிலிருந்து வேப்பமரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு
யாழ்.தமிழர்கள் கொண்டு சென்றார்கள்
என்றால் நம்பமுடிகிறதா...?
கோடிக்கணக்கில் உருவான ...
டைடானிக்கே பாதித்தூரத்தில்
மூழ்கியதேன்றால்
ஈழத்தமிழன் உருவாக்கிய பாய்மரமான அன்னபூரண கப்பல் புயலுக்கும்,மழைக்கும் தப்பி அமெரிக்கா
சென்றதேன்றால் தமிழனின் சாதனை
எத்தகையது




அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938
வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில்> சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரி லான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது.
அன்னபூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபாளத்தின் எல்லைக்குட்பட்ட இதன்உயரம் 26504 அடிகளாகும். அத்துடன் அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால் ஆராதிக்கப்படும் பெண் தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும். இப்பெயரே அன்னபூரணிஅம்மாளின் சுட்டுப் பெயராக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.
1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்த அமெரி;க்கரான பிரபலகடலோடியான அமெரிக்கரான றொபின்சன் “Florence C. Robinson” அன்னபூரணியின்; அழகால் கவரப்பட்டவராக அதனை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்பினார். அதனைக் கொள்வனவு செய்ததும்,அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் உள்ள அந்தக் கப்பலை “Florence.C.Robinson” என்ற தனது மனைவி யின் பெயருக்கு மாற்றியபின்னரே அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார். வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் கொந்தளிக்கும் இராட்சச அலைகளையும் கடந்து சுயஸ் கால்வாயி னூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சாதனை இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படு கின்றது.
சூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக் கடலில் பயணம் செய்த போது, ஏற்பட்ட புயலில் சிக்கிய கப்பல் 250 கடல்மைலகள் பின்புறமாக பெய்ரூத் வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மைல்களையும்> பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 1938 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள குளோசெஸ்ரர் (Gloucester) துறைமுகத்தில் நிறைவடைந்தது.
தெற்காசிய நாடொன்றில் உள்ள சின்னஞ்சிறிய தீவான இலங்கை யில் உள்ள வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு காற்றின் துணை யுடன் இயங்கும் கப்பலொன்று> இந்து சமுத்திரத்தைக் கடந்து ஐரோப்பாவின் ஊடாக மத்திய தரைக் கடலையும் கடந்து> அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக> அமெரிக்காவின் குளோசெஸ்ரர் துறைமுகம் வரை பயணம் செய்தது> உலக வரலாற்றில் இதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையு மாகும். இச்சாதனை நிறைந்த கடற்பயணத்தில், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிள்ளை (48வயது) அவர்களின் தலைமையில், திரு.பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (29 வயது), திரு.தாமோதரம்பி;ளளை சபாரத்தினம் (28வயது) திரு.சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை, (28 வயது)) திரு.ஐயாத்துரை இரத்தினசாமி(24 வயது) ஆகிய ஐந்து கடலோடிககளும் பயணத்தின் இறுதி இலக்கு வரை பங்கேற்றிருந்தனர். அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் நகருக்கு அண்மையில் உள்ள பால்ரிமோர் என்ற துறைமுகத்தில் தரித்து நின்றபொழுது எடுக்கப்பட்ட படத்தை அது தொடர்பான கட்டுரையுடன், பால்ரிமோரில் இருந்து வெளிவரும்> “Baltimore Sun” என்ற செய்தித்தாள் பிரசுரித்திருந்தது. அன்னபூரணி அம்மாள்> கப்பலை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் பொழுது கப்டன் மக்குயிஸ் என்பவரின் தலைமையில், வல்வெட்டித்துறை மாலுமி களின் உதவியுடன் பயணம் செய்து குளோசெஸ்டர் துறை முகத்தைச் சென்றடைந்தது. அன்று குளோசெஸ்டர நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்கள் பிரசுரித்த கருத்துக்கள் மிகச் சிறந்த சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் விளங்கின.
அன்னபூரணி அம்மாளின் இந்த திகில் நிறைந்த பயணம் பற்றிய இலக்கியங்கள் நூல்களாகவும்> பத்திரிகைகள்> சஞ்சிகைகளில் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளமை அதன் சிறப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இச்சாதனைப் பயணம்பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine . Barrows என்பவரால் விவரிக்கப் பட்டிருந்தது. மற்றும் அன்றையநாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான 02.08.1938 அன்று வெளியிடப்பட்ட Gloucester Time பத்திரிகையில் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணி யின் நீண்ட கடற்பயணம் அதன் முன்பக்க செய்தியாக வெளிவந்த ருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செய்திக் குறிப்பினூடாக தமிழர்களின் கடல் ஆளுமைகளை பற்றி மேற்கத்தைய நாட்டவர்க ளின் உள்ளக் கிடக்கையையும் கருத்தையும் அறிய முடிகின்றது.
“வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட ஒன்பது பாய்களையும் விரித்தபடி> கம்பீரமாக ஆடிஆடிப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் ஒன்று> அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கடந்து அமெரிக்கக் கிழக்குக் கரையை அடைந்ததோர் நீண்ட கடல் பயணம் பற்றிய உண்மைக் கதை. இத்தகைய கப்பல்கள்> வல்வெட்டித்துறையிலும் அதனை அடு;த்துள்ள பருத்தித்துறையிலும் கட்டப்பட்டு வல்வெட்டித்துறைக் கடலோடிகளால்> செலுத்தப்பட்டன. இவை தமிழ் நாட்டில் பணம் படைத்த செட்டிமாருக்காகவும்> வல்வெட்டித்துறையை வதிவடமாகக் கொண்ட செட்டிமாருக்காகவும்> வல்வெட்டித்துறை வணிகர்களுக்காகவும் இலங்கை வடக்கில் உள்ள வல்வெட்டித்துறை> பருத்தித்துறை மேஸ்திரிமார்களால் கட்டப்பட்டவை.”
அன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும்போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவையாகும்.
அமெரிக்கா சென்ற மூன்றாவது மாதத்தில் அன்னபூரணி 22 நவம்பர் 1938 இல் தென்பசிபிக் (South Pacific) சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்றுநாட்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில் 100மைல் வேகத்தில் வீசியகாற்றையும் 40அடி உயரத்திற்கு எழுந்தஅலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது. வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமர கட்டுமானமும் அதன் செய்வினைத் தொழில்நுட்பத்திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196 மைல்களைக் கடந்து 15 பெப்ரவரி 1939 இல் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலகசாதனைப் பயணத்தையும் வெற்றி கரமாக முடித்துக்கொண்டது.
அன்னபூரணியின் Tahiti பயணம்பற்றி Tahiti Bound மற்றும் Wandere எனும் இருநூல்கள் வெளிவந்துள்ளன. Florence C. Robinson இன் இப்பயணத்தின்போது அமெரிக்க தலைநகரான Washington நகருக்கு அண்மையில் உள்ள Baltimore துறைமுகத்திற்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் படத்தின் மூலம்> தனது ஒன்பது பாய்களையும் முழுமையாக விரித்தபடி ஓடிவரும் இரட்டைப்பாய்மரக்கப்பலான அன்னபூரணியின் கண்ணைக்கவரும் கம்பீரத்தோற்றத்தை இதில் உள்ள புகைப்படத்தில் பார்க்கலாம்.
பொங்கியெழும் கடலின் இராட்சத அலைகளின் மத்தியில் துணிகரப் பயணத்தின் மூலம்> சுயெஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்கு வல்வை மாலுமிகளால் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட அந்த வரலாற்றுச் சாதனை இன்றும் உலக மக்களால் பெருமையாகப் பேசப்படுகின்றது.
இவ்வளவு சாதனைகளையும் செய்து இந்துசமுத்திரம் அத்திலாந்திக்சமுத்திரம் பசுபிக்சமுத்திரம் என உலகத்தை சுற்றிய அன்னபூரணியின் பயணம் 1957 ஆம் ஆண்டு Tahiti யில் மூழ்கி தனது வாழ்வை முடித்துக் கொண்டது. ஆயினும்> சாகசம் மிக்க கடற்பயணத்தை மேற்கொண்ட அன்னபூரணி என்ற அந்த இரட்டைப் பாய்க்கப்பல் வல்வெட்டித்துறையின் பெருமை மிக்க ஒரு முதுசொமாகும்.
அமெரிக்க மற்றும் ஸ்ரீPலங்காப் படையினர் இணைந்து நடத்திய 'ஒப்ரேசன் பசுபிக் ஏஞ்சல்' நிகழ்விற்காக(15.08.2016) அமெரிக்க தூதுவரான அதுல்ஹேசப் (Atul Keshap) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அங்கு அவர் தனதுரையில் 1813இல் அமெரிக்க மிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம் உருவாக்கிய அன்னபூரணிஅம்மாள் என்ற பாய்க்கப்பலில் அமெரிக்காவின் குளோஸ்ரர்துறை முகத்திற்கு வந்த வல்வெட்டித்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் இக்கடல்வழிப் பயணம் சரித்திரபூர்வமானது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
இலங்கைமக்கள் அனைவரும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்கூட மறந்துவிட்ட ஒருநிகழ்வினை எழுபத்தைந்து வருடங்களின்பின் யாழ்ப்பாண மண்ணில் மீண்டும் ஓர் அமெரிக்கர் நினைவு கூர்ந்துள்ளார். இதுபோலவே 1987 மே மாதத்தில்; வடமராட்சியை கைப்பற்றுவதற்காக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் 'லிபரேசன் ஒப்பரேசன்' எனும்பெயரில் பெரும் தாக்குதலை தொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உலகவங்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் வல்வெட்டித்துறைக்கு விஜயம்செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் குறிப்பிட்ட அன்னபூரணி அம்மாளின் பயணம்பற்றி அன்று உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.வை.வேலும்மயிலும் அவர்களிடம்; தெளிவாக உரையாடியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
75 ஆண்டுகளுக்கு முன்னர் தொழி;ல் நுட்பத்திறனும்> அறிவியல் நுட்பங்களும் விரு;ததியடைந்திராத காலத்தில் உள்ளு}ர் வேப்ப மரங்களைக் கொண்டு பாயும் நீரையும் கிழித்துச் செல்லக்கூடிய பல கப்பல்களைத் தயாரித்த தமிழர்கள்அன்று அமெரிக்கா மட்டுமின்றி பர்;மா> காக்கிநாடா> தூத்துக்குடி போன்ற பல துறைமுகங்களுக்குச் சென்று வர்த்தகத் தொடர்பை ஏற்படு;ததித் திரவியம் தேடி நமது நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள்....ஆனால் காலத்திற்குக் காலம் தமிழ் அரசியல் தலைவர்களின் துணையுடன் பதவி ஏற்றுவரும் இலங்கை அரசுகளின் இனவாதப் போக்குகளின் காரணத்தால் தமிழ் மக்களின் கப்பல் கட்டும் தொழிலுக்கே சாவுமணி அடிக்கப்பட்டது. அன்றே அவர்களுடைய கப்பல் கட்டும் தொழில் இங்கையின் அரசுகளினால் அங்கீகரிக்க்பட்டு கப்பல் பயணங்களினூடாக மேற்கொள்ள்பபட்டு வந்த ஏற்றுமதி> இறக்குமதி வர்த்தகத்தைச் சட்ட பூர்வமானதாக்கியிருந்தால் எமது நாட்டின் பொருளாதார வளமும் உயர்ந்திருக்கும், இலங்கையில் இனவாதமும், அதனால் எழுந்த யுத்தமும் தோனறியிரு;ககாதல்லவா....
ஆனால் இன்றும் கூடத் தமிழர்களின் கண்களைத் தமிழர்களின் கைளினாலேயே குத்திக் காயப்படுத்த வைக்கின்ற செயலில் சிங்கள பேரினவாத அரசும், அதற்குத் துணைபோகின்ற இனவாதிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாட்டில் சாந்தி, சமாதானம் ஏற்படுவதற்கு, இலங்கையில் ஒற’றுமையாகவே வாழ ஆசைப்படுகின்ற சிங்;கள,தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது........! விலைபோகாத நல்லதொரு தலைமைத்துவத்தைக் கொண்டு நிமிர்ந்து நின்ற எமது மக்களின் தலைவிதியென்றால் என்ன செய்வது....?
ஆதாரம்: வல்வையின் முதுசொம் வல்வை.ந.அனந்தராஜ்

Sunday, September 24, 2017

குறிஞ்சிப்பாட்டு - "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" - கபிலர் என்கிற யக்ஞவல்கியர்!

குறிஞ்சிப்பாட்டு - "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" - கபிலர் என்கிற யக்ஞவல்கியர்! வேள்வி என்பது யக்ஞத்துக்கு - யாகத்துக்கு முன்னர் செய்யப்படுவது. வேள்வி என்பது பிராமணருடனும் கலந்துபேசி முடிவெடுப்பது. யக்ஞ்சம் - யாகம் என்பது வேள்வியில் எடுக்கப்பட்ட முடிவை - இலக்கை அடையவேண்டி; திட்டமிட்டுச் செயல்படுத்துவது. வேள்வியில்மட்டுமே பிராமணர்கள் பங்குபெறுவர். யக்ஞம் என்பது போருக்கு முன்னர் காலாற்படை முதல் சேனாதிபதி படைநடத்துநர் வரை தேர்வுசெய்து வழிமுறைகளை வகுத்து; இலக்கைநோக்கி அனைவரையும் செலுத்தி; இறுதியில் வெற்றியை ஈட்டுவது. சத்திரியர்க்கே உரியது. பிரகத் ஆரண்யக உபநிஷத்: உண்மையில் ஆதியில் இந்த உலகம் பிரம்மமாக இருந்தது; ஒன்றாக இருந்ததால் அது வளர்ச்சிபெற்றிருக்கவில்லை. எனவே இதைக்கட்டிலும் சிறந்த வடிவத்தைப் பிரம்மம் எடுத்தது. அதற்கு சத்ரியத்துவம் என்று பெயர். இந்திரன் வருணன் சோமன் ருத்ரன் பர்சன்யன் யமன் ம்ருத்யு ஈசானன் ஆகியோரும் இவ்வடிவத்தவரே. சத்ரியத்துவத்தைக்கட்டிலும் சிறந்தது வேறெதுவும் இல்லை. அதனால்தான் ராசசுயயாகத்தில் சத்திரியர்க்குக் கீழே பிராமணர் அமர்கின்றனர். சத்ரியத்துவத்தின் கீழ்தான் பிராமணனுக்கு மரியாதை கிடைக்கிறது. அனால் சத்ரியத்துவத்தின் தோற்றுவாய் பிராமணத்துவம் என்பது உண்மையே. எனவேதான் அரசன் உயர்ந்தவனாக இருந்தாலும் பிராமணத்துவத்தையே மூலமாகக் கொள்ளவேண்டியுள்ளது. ஆகவே எவனொருவன் பிராமணனைத் தாக்குகிறானோ அவன் தன்னையே தாக்கிக்கொள்கிறவன் ஆகிறான். தன்னைக்கட்டிலும் சிறந்தவனுக்குக் கேடுவிளைவிக்கிறவன் அதைவிட மோசமான கேட்டைத் தனக்குத்தானே விளைவித்துக்கொள்கிறான். சத்பத பிராமணங்கள்: (சுருக்கமாகக் காண்பொம்) xiv. 4.2.23: முன்னர் இந்த பிரமா; அண்டம் ஒன்றாகமட்டுமே இருந்து; வீரியவடிவத்தில் சத்ரியரை உண்டாக்கினார்; அதாவது கடவுளர்களுள் சக்திமிக்கவர்களாக இந்திரன் வருணன் சோமன் ருத்ரன் பர்ஜனியன் யமன் மிருத்யு ஈசானன் முதலானோர் தோன்றினர். எனவே ராஜசுய யாகத்தில் பிராமணர் சத்ரியர்க்குக் கீழேதான் அமர்வர். அவர் சத்ரியர்க்கு அரசசக்தியைத் தருகிறார். பிரமாதான் சத்ரியரின் பிறப்பிடம். ஆயினும் பிராமணரைத் தனது உயர்வுக்கு மூலாதாரமாகக் கருதி நாடினார். யாரொருவர் பிராமணரை அழிக்கிறார்களோ அவர்கள் தங்களையே அழித்துக்கொள்வதாகும். அவர் வசுக்களைச் சிருஷ்டித்தார். கடவுளர் வகுப்பைச்சேர்ந்த அவர்கள் வசுக்கள் ருத்ரர் ஆதித்தியர் விசுவதேவர் மருத்துகள் ஆகிய சைனியங்களாகப் பெயரிடப்பட்டனர். அவர் சூத்ரர்(புஷன்) வகுப்பைப் உண்டாக்கினார். பூமிதான் புஷனி; அவள் உலகில் வாழ்வன அனைத்தையும் வாழ்விக்கிறாள். அவர் பேரார்வத்தோடு ஒப்பற்ற வடிவில் நியாய(தருமத்)தை உண்டாக்கினார். எனவே சத்ரா -ஆள்பவர்; சத்ராவை ஆள்பவர்தான் நீதிதேவதை. எதுவும் நீதிக்கு மேற்பட்டவையல்ல. இதுதான் பிராமணர் சத்ரியர் வைஷியர் மற்றும் சூத்ரர். அக்னியின் மூலம் கடவுளரிடையே பிரமாவும்; மனிதர்களிடையே பிராமணரும்; மானிட சத்ரியரிடையே தெய்வீகச் சத்திரியரும், மானிட வைசியரிடையே தெய்வீக வைசியரும் மானிடசூத்ரரிடையே தெய்விகச்சூத்ரரும் உருவானார்கள். ஆகவே இவர்கள் கடவுளரிடையே அக்னியிடமும், மானிடரிடையே பிராமணரிடமும் வாழ்வைத் தேடி அலைந்தார்கள். ரிக்வேதம்; iii -34.5: " சோமபௌமன்(சந்திரகுல நகுஷ=செழியன்) தனது கறுப்பு நிறத்தைக் களைந்து ஒளிவீசும் நிறத்தை மேற்கொண்டான்; அதனால் சுக்கிலவருணம்(வெண்மை நிறம்) அதிகரிப்பதாற்கு வகைசெய்தது" சந்தோக்கிய உபநிஷத் குறிப்பிடும் தகவல் வியப்பளிப்பதாகும்; தாழ்ந்த வருணத்தைச்சேர்ந்த சண்டாளன் நாய்களோடும் பன்றிகளோடும் சமமானவனா மிக எளிதில் ஒப்பிட்டுப்பேசப்படுகிறான். பிரகத் ஆரண்யக உபநிஷத்தின் கர்த்தா ஞானி யக்ஞவல்கியர் அக்காலத்தின் சூழ்நிலைகளை வரலாற்றுநோக்கில் நாம்காண உதவுகிறார். இவற்றுள் ஒரே ஆட்சியாளன் இருந்து மக்களும் ஒரே இனம் / வருணம் சார்ந்தோராக இருந்ததையும்; பின்னர் பிராமணரின் / அந்நியரின் வரவால் பல கலப்பினங்கள் உருவாகிக் குழப்பங்கள் ஏற்பட்டு சண்டைசச்சரவுகள் பெருகியதால் சத்திரியர் என்ற பெயரில் தலைமை ஆட்சியாளனையும் அவனுக்குத்துணையாக மேலும் அவனுக்கீழ் கட்டுப்பட்ட சத்திரியராக எட்டுப்பேரை உருவாக்கி ராசசூயயக்ஞத்தைச் செய்துள்ளனர். அப்போது பிராமணர் தங்களுக்கு அந்த யாகத்தில் உரிய இடத்தைக் கோரியபோது சில கருத்துவேற்றுமைகள் உருவாகியிருக்கவேண்டும். முதலிடத்துக்கான கோரிக்கையெனத்தெரிகிறது. ஆயினும் யாகத்தில் முதலிடத்தைச் சத்திரியருக்குக் கொடுப்பதாக முடிவுசெய்துள்ளனர். ஆயினும் பிராமணர் வேண்டாவெறுப்புடனனே இதனை ஏற்றுள்ளபோதிலும் தாங்களே உயர்ந்தவர்கள் என அறிவித்துக்கொண்டதைக் காண்கிறோம். இச்சரவின் வளர்ச்சியை மேலும் பல வேதப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பின்னரே சட்டங்களும் நீதிகளும் உருவக்கப்பட்டுள்ளன என்பதையும் காண்கிறோம். அதன்பின்னரும் கலப்பினத்தில் உருவானோரிடையே அமைதியில்லை என்பதைக் காண்கிறோம். இந்நிலையில்தான் கலப்பினமாக சத்ரியன் சந்திரகொற்றனுக்கும் தாழ்ந்த இனப்பெண்ணுக்கும் பிறந்தவனாகக் கருதப்பட்ட பிம்பிசாரன் கலப்பினத்தில் உருவானோரின் உதவியுடன் - குறிப்பாக மிளேச்சருடன்சேர்ந்து சோழநட்டு சத்திரிய இனப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்துள்ளான். அதற்குத் துணைநின்ற ஆரியவரசனே பிரகத்தன். அவனே ஆரியப்பேடியாகவும் அமணத்துறவிபோன்ற வேடமிட்டுப் போர்க்களத்திலிருந்து தப்பியோடியதாகவும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" என்ற குறிப்பு கபிலனின் குறிஞ்சிப்பட்டில் காணப்படுகிறது. எனவே பிரகத்தனுக்கு அறிவுறுத்தியவர் புலவர் கபிலரே. அவராலேயே பிரகத் ஆரண்யக உபநிஷத் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. ஆயினும் அதன் ஆசிரியரின் பெயர் யக்ஞவல்கியர் எனக்கொடுக்கப்பட்டுள்ளது. தொல்தமிழ்ப்பாடல்களில் வேள்விகுறித்து கபிலரால் பாடப்பட்ட பாடல்கள் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பரசுராமனால் பாதிரிப்புலியூரிலிருந்து விரட்டப்பட்ட தமிழந்தணர்கள் கரிகால்சோழன் அகத்தியனாக வாழ்ந்த அன்றைய சேரலத்தின் மலைநாட்டில் வாழ்ந்துள்ளான் என்பதையும்; விரட்டப்பட்ட அந்தணர்கள் அவனது உதவியைநாடிச்சென்றனர் என்பதையும் பெரியபுராணம் உறுதிப்படுத்துகிறது. தமிழ் அந்தணருக்காக மலைக்காடுகளைக்கடந்து சென்று அவர்களின் வருத்தத்தைப்பொக்க முயன்ற கபிலரையும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். பிராமணருக்கும் தமிழ் அந்தணருக்கும் இடையே நிகழ்ந்த பூசலின் வெளிப்பாட்டையே வேதங்களும் உபநிஷத்களும் விரிவாகப்பேசுகின்றன. ரிக்வேதத்தின் 10ஆம் மண்டலமான புருஷசூக்தத்திலும் புருஷனே முதல்வனாகவும் எட்டு வசுக்களாக மேலே குறிப்பிட்டோரும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதில் புருஷ் என இடம்பெற்றவனே சந்திரகொற்றனின் தந்தை போரஸ்! போரஸ் என்பதையே புருஷ் என மாற்றியுள்ளனர். சாந்தோக்கிய உபநிஷத் குறிப்பிடும் சண்டாளர்களும் பன்றிகளும் நாய்களும் சில மாறுபட்ட இனமக்களையே குறிக்கும். அத்தகையோரை அடையாளப்படுத்துவது இன்றைய சூழ்நிலைக்கு உகந்ததாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் நகுஷன் என்பவனைக் குறித்து விரிவான தகவல்களை மாபாரதமும் புராணங்களும் கொடுக்கின்றன. அவனிடம் கரிகால்சோழனின் நாடு தண்டனைக்கலம் முடியும்வரை ஒப்படைக்கப்பட்டது என்பதையும் பரசுராம மாறிசனுடன் சேர்ந்து தானே இந்திரனாக முயன்றதையும் சோழநட்டையும் மதுரையையும் மாறிச பரசுராமனிடம் ஒப்படைத்துவிட்டு சோலநாட்டை ஆள்வதற்கான ஆரங்களுடன் இலங்கைக்குத் தப்பியோடிய நகுஷனே இராவண செழியன் என்பதைத் தொல்தமிழ்ப்பாடல்களும் தெளிவாகக் காட்டுகின்றன. மணிமேகலையும் உறுதிப்படுத்துகிறது. கபிலரான யக்ஞவல்கியரின் பிரகத் ஆரண்யக உபநிஷத் நூலில் உள்ள கருத்துக்களுக்கு மேலும் சில கருத்துக்களைச் சேர்த்து 'யக்ஞவல்கிய ஸ்மிருதி' என்ற நூலில் இருபிரப்பாளரான சத்திரியரும் பிராமணரும் மட்டுமே பிரம்மம் - ஆன்மா குறித்த சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது வியப்பளிப்பதாகும். இதேகருத்து மாபாரத்திலும் திருதராஸ்ற்றன் பிரம்மத்தைப்பற்றி விதுரனிடம் விளக்கம் கேட்டபோது "நான் சூத்திரன் என்பதால் அதைப்பற்றி நான் பேசமுடியாது" எனக் குறிப்பிடுவதையும் காண்கிறோம். இந்த விதுரனின் மகனே நகுச இராவண செழியன். அவனையே பின்னர் சத்திரியனாக முயன்றனர் என்பதை ரிக்வேதத்திலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் விரிவாகக் காண்கிறோம். இந்நிலையிலேயே முகம்மதியருக்கான அதர்வவேதம் வெளிப்பட்டிருக்கவேண்டும். அதர்வேதத்தை வெகுகாலத்துக்க வேதமாக எவரும் ஏற்கவில்லை என்பதையும் வேதங்களின் வரலாற்றில் காணலாம்! கபிலரான யக்ஞவல்கியர் - யக்ஞங்களைச்செய்வதில் வல்லவர்; அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் சாக்ரட்டீஸின் சிந்தனைகளிலும் பிளேட்டோவின் சிந்தனைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை பருவா அவர்கள் குறிப்பிட்டதை வட இந்தியர் எவரும் பொருட்படுத்தவில்லை என்பதுதான் வருந்தத்தக்கது. மேலும் பருவா அவர்களின் நூலில் கிரேக்கச் சிந்தனையாளர்கள் பலரும் தமிழரின் தத்துவங்களையே தங்களுடையதாக மாற்றிக்கொண்டனர் என உணர்த்துவதையும் காணலாம்! அவரது முழுநூலையும் தமிழில் வெளியிட்டுள்ளார்களா? அறிய இயலவில்லை. விரிவான வரலாற்றைச் சான்றுகளுடன் காணவிரும்புவோர்
http://nhampikkai-kurudu.blogspot,com தளத்தில் காணலாம்!sariya Chandrasekaran