Search This Blog

Saturday, May 5, 2012

சுஜாதா என்றால் சுவாரஸ்யம்



சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...

* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

* சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

* உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடு முயற்சி செய்தவர்!

* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

* புத்தக கண்காட்சி சென்றால் சித்தமருத்துவம், சமையல் கலை, சுஜாதாவின் ஏதாவது ஒரு புத்தகம், பாலகுமாரனின் ஏதாவது ஒரு புத்தகம் வாங்கிவிடுவேன் ......வீட்டில் சொல்வார்கள் ..சட்டை எடுத்தால் எப்பொழுதும் sky blue கலர் ..புத்தகம் வாங்கினால் இதே லிஸ்ட்....என்னடா நீ ..என்று புலம்பல்.

* என்னை நான் சொல்லி கொள்வதுண்டு கணேஷ் பாதி / வசந்த் பாதி கலந்த கலவை நான் என்று. உண்மை என்று தான் நினைக்கிறேன்.

* அப்புறம் சுஜாதாவின் மெக்ஸிகோ மற்றும் வேலைக்காரி மற்றும் வண்ணான் ஜோக் ...........வேண்டாம் அடி விழும் அப்புறம் ......ஜோக் படித்தவர்கள் .......மீண்டும் நினைத்து சிரித்து கொள்ளவும்.................

* தமிழில் புத்தகம் வாசித்தவர்கள்......சுஜாதா தெரியாது என்று சொன்னால் நீங்கள் அவரை தாராளமாக திட்டலாம்.


No comments:

Post a Comment