Search This Blog

Wednesday, May 2, 2012

ஆன்மிக சிந்தனைகள் »ராமானுஜர்....பிறரை அவமதிக்காதீர்!


 



* ஒருவனுடைய பிறப்பை பற்றியோ அல்லது செயல்களைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வது சிறந்தது. கடவுளுக்கு எதை நீ அர்ப்பணிக்கிறாயோ அது மிகவும் புனிதமானது. நீ கடவுளிடம் சரணாகதி அடையும் போது உன் பாவங்கள் நீங்குகின்றன. மற்றவர்களை அவமதிப்பது மிக கொடிய செயலாகும்.


* பக்தர்களை எப்போதும் புகழ்ந்து பணிவிடை செய்து கொண்டே இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தை தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. புனிதமான ஆழ்வார்களின் திவ்ய பாசுரங்களை நாள் தோறும் படிப்பது நல்லது.


* இழிசெயல் புரிபவர்கள், ஏளனம் செய்பவர்கள், இறையடியார்களை நிந்திப்பவர்கள், புலித்தோல் போர்த்திய கபடதாரிகள், குருவை திட்டும் கயவர்கள் ஆகியோரை கண்ணால் கூட பார்க்கக் கூடாது.


* இறைவனுக்கு அர்ப்பணிக்காத உணவு, உடை, பூக்கள், சந்தனம், வெற்றிலை பாக்கு, பானம் எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. எப்பொருளையும் மானசீகமாக கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு எடுத்துக் கொள்வது நல்லது. நற்பிறப்பாளர், உயர்ந்த வாழ்க்கையுடையவர் ஆகியோரிடமிருந்து பெறும் உணவு மட்டுமே உண்பதற்கு தகுந்ததாகும்.


* ஒரு கடவுளை வணங்குவது நல்லது. பல தெய்வங்களை வணங்குதல் கூடாது. அது கடவுளை அவமதிப்பதாகும். நீ விரும்பும் கடவுளின் மீது உன் மனதை செலுத்துவது நல்லது.


* நற்குணமுடையவர்கள், அறிவாளிகள், தர்மசிந்தனையுடையவர்கள் ஆகியோர்களை கண்டால் பணிந்து வணங்கவேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். தொண்டு செய்வதன் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.


- ராமானுஜர்

No comments:

Post a Comment