Search This Blog

Monday, April 16, 2012

இந்த சமூகம் இன்னும் ஆணாதிக்க சமூகம் தான்.


வணக்கம்

திரைப்பட பாடல்கள்கள், குறுஞ்செய்திகள், என அனைத்திலுமே நான் பார்த்த விசயங்களில் எல்லா ஆண்களும் பெண்கள் தங்களை  ஏமாற்றி விட்டதாகவும், பெண்களை நம்பி அவர்கள் மோசம் போய் விட்டதாகவும் வார்த்தைகளை பயங்கரமாய் கோர்த்து பாடல்களும், செய்திகளும் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். 

எனக்கு ஒன்று புரியவே இல்லை... ஆண்கள் எல்லாருமே நல்லவர்களா? பெண்கள் எல்லாருமே கெட்டவர்களா? 

எல்லா திரைப்படங்களிலும், எல்லா பாடல்களிலும் இதையே வலியுறுத்தி தான் வெளியிடுகிறார்கள். படம் எடுப்பவர்களும் ஆண்கள், பாட்டு எழுதுபவர்களும்  ஆண்கள். எனவே தங்கள் எண்ணத்தை வெளியிட்டு விடுகிறார்கள். அது சுலபமாக பரவியும் விடுகிறது. (உடனே கேட்பார்கள்.. ஏன் நீங்களும்  படம் எடுத்து ஆண்கள் ஏமாற்றி விட்டாகள் என்று எழுத வேண்டியது தானே என்று... அனால் அப்படி எடுக்க யாரேனும் முன்வந்தால் அவர்களை அந்த துறையில் கண்டிப்பாக காணாமல் அடித்து விடுவார்கள் என்பது உலகறிந்த கசப்பான உண்மை)

எத்தனை ஆண்கள் பெண்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்? எத்தனை ஆசை வார்த்தைகள் சொல்லி, நம்ப வைத்து பெண்களை ஏமாற்றி வருகிறார்கள். எத்தனை சுலபமாக பெண்களை மாற்றிக்கொள்கிறார்கள்.? ஏமாற்றி கல்யாணம் செய்பவர்கள் எத்தனை பேரை செய்திகளில் பார்த்து விட்டோம்.  உண்மையும் தோற்றோட செய்யும் அலங்கார வார்த்தைகளால் பெண்களை ஏமாற்றி விட்டு பின்னர் இன்னொரு பெண்ணை தேடி போகும் ஆண்களும் எத்தனை பேர் இருக்கிறார்கள். அதை பற்றி யாருமே பெரிதாய் இது  போல் திரைப்படங்களிலோ பாடல்களிலோ அதிகமாய் சொன்னதாய் தெரியவில்லையே.....!

ஆணோட காதல் கைரேகை போல பெண்ணோட காதல் கைக்குட்டை போல - என்று பாடுகிறார்கள்.. ஆனால் உண்மையில் எத்தனை ஆண்கள் கைக்குட்டை போல பெண்களை நினைக்கிறார்கள், ஒரு கைக்குட்டை அறியாமல் இன்னொரு கைக்குட்டை தேடுகிறார்கள் என்பதெல்லாம் உலகுக்கு தெரியாத ஒன்றா?  ஏன் அதைபற்றி யாரும் வெளிப்படுத்துவதில்லை? கைரேகை போல காதலை நினைத்து ஏமாந்து கொண்டிருக்கும் பெண்களின்  நிலைமையை எங்கே போய் சொல்வது?

வேணாம் மச்சி வேணாம் இந்த பொண்ணுங்க காதலு .. அது மூடி தெறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு.. - என்று பாடுகிறார்கள். ஆனால் உண்மையில் எத்தனை பெண்களின் நேசத்தை ஆண்கள் பொய்யாலும், ஏமாற்றியும் கவிழ்க்கிறார்கள் என்பது வெளியே வருவதே இல்லையே...

நான் ஆண்கள் எல்லாருமே கெட்டவர்கள் எல்லா பெண்கள் எல்லாருமே நல்லவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் எல்லா ஆண்களுமே எல்லா பெண்களும் கெட்டவர்கள் போல் ஏன் சித்தரிக்கிறார்கள் என்று தான் கேட்கிறேன்... ஆண்களில் எத்தனையோ கெட்டவர்கள் இருக்கிறார்கள். அது மட்டும் வெளியே வருவதே இல்லையே.. என்பதுதான் வேதனையும் ஆத்திரமுமாக இருக்கிறது.  உண்மையில் அதிகமாய் ஆண்களிடம் ஏமாந்த பெண்கள் தான் இருக்கிறார்கள். 

ஆயிரம் ஆண்கள் பத்தாயிரம் பெண்களை ஏமாற்றுகிறார்கள். அது வெளியே வருவதே இல்லை.. சில பெண்கள் சில ஆண்களை ஏமாற்றி விட்டால் உடனே வரிந்து கட்டிக்கொண்டு பாட்டிலும், சினிமாக்களிலும் பெண்கள் தான்  ஏமாற்றுவது போல் காட்டுகிறார்கள். 

எனக்கு தெரிந்து சமீபத்தில் ஒரு அலுவலகத்தில்  ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள் என்று தெரிய வந்ததும் உடனே அந்த பெண்ணை மட்டும் பணியில் இருந்து நீக்கி விட்டார்கள். அந்த ஆண் மட்டும் அங்கேயே பணியை தொடர்கிறான். தப்பு செய்த இருவரில் ஆணின் தப்பு ஏற்கப்பட்டு விட்டது. பெண்ணின் தப்பு தண்டிக்கப்பட்டு விட்டது, 

இதை எல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. 

எத்தனை முன்னேறினாலும் இந்த சமூகம் இன்னும் ஆணாதிக்க சமூகம் தான்.
நட்புடன் 

Join Only-for-tamil

ஸ்ரீ வசந்தா 

No comments:

Post a Comment