Search This Blog

Tuesday, October 18, 2011

உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்...உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்


கர்னாடக இசையுடன்  SPBயின் இனிமையான் குரலில் நல்லதொரு பாடல்



படம்:   பெண் ஒன்று கண்டேன்   (1974)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: முத்துராமன், பிரமிளா
இயக்கம்: கோபு


உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்...

உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்...

உன் இள நடை மலையமாருதமாகும்...

உன் மலர் முகம் சால மதியெனக் கூறும்...



நீ ஒரு ராக மாளிகை...உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...

நீ ஒரு ராக மாளிகை....

நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி...இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி..

உறவுக்கு உதவிடும் சரசாங்கி...இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி..

குரல் வழிப் பிறந்தது அம்சத்வனீ...

உன் குரல் வழிப் பிறந்தது அம்சத்வனீ...

உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி...



நீ ஒரு ராக மாளிகை...உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...

நீ ஒரு ராக மாளிகை...
நான் வாவெனெ அழைக்கையில் விரைந்தோடி வந்து தழுவிடும் தேவ மனோஹரி...

யாரபிமானமும் தேவையில்லை இந்த அகிலத்தில் உன் போல் பாவையில்லை...

நீ ஒரு ராக மாளிகை...உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...

நீ ஒரு ராக மாளிகை...
நீ எனக்கே தாரம் என்றிறுக்க உனை என் வசம் தாவென நான் கேட்க...

நீ எனக்கே தாரம் என்றிறுக்க உனை என் வசம் தாவென நான் கேட்க...

என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்ஜனியே...

நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்ஜனியே...

இந்த நாயகன் தேடிடும் நாயகியே.....


No comments:

Post a Comment