Search This Blog

Friday, September 2, 2011

அ. செ. முருகானந்தன்



அ. செ. முருகானந்தன் கவிதைத்துறையில் ஈடுபட்டதாகத் தெரிய வில்லை மகாஜனாவின் மூன்று முத்துக்கள் என்று பாராட்டப்பட்ட எழுத்தாளர் களில் அவரும் ஒருவர். மற்றையோர் இருவரும் உருத்திரமூர்த்தியும் அ.ந. கந்தசாமியும் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அ. செ. முருகானந்தன் என்பது அளவெட்டி செல்லக்கண்டு முருகானந்தன் என விரிவுறும். செல்லக்கண்டு என்பது இவருடைய தாய் பெயர். தாய் பெயரால் மக்கள் பெயரை வழங்கும் கலாச் சாரமொன்றும் நம்மவரிடையே இருந்த தென்பதை இப்பெயர் நிரூபித்துக்காட்டுகிறது. இவர் மகாஜனக் கல்லூரியிற் கற்ற காலத் திலேயே பத்திரிகைகளுக்குச் சிறுகதை எழுத ஆரம்பித்தவர் கல்வியை முடித்த பிறகுங் கூட இவர் உத்தியோகப்பக்கம் திரும்பிப்பாராது பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டும் கதைகளை எழுதுவதில் ஆர்வங்காட்டியும் தமது காலத் தைப் போக்கினார். இதனால் பிற்காலத்தில் வருமானமுள்ள ஒரு தொழிலோ ஓய்வூதி யமோ இல்லாமல் வாழ்க்கையைக் கொண்டு நடந்த அவர் பட்ட கஸ்டம் அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்கு தெரிந்ததே.

முருகானந்தன் யாழ்ப்பாணக் களமும் பண்பாடுங் கொண்ட கதைகளைப் படைத்த தன் மூலம் இரசிகர்கள் மத்தியில் புகழ் பெற் றார். ‘புகையில் தெரிந்த முகம்’ என்னும் அவரது குறுநாவல் இலக்கிய ஆர்வலர்களின் பாராட் டைப் பெற்றது. இக்குறுநாவல் சவாரிக்காட் சியையும் நீதிமன்ற வழக்குகளையுங் கொண்ட மைந்தது. ஈழகேசரியில் ‘பீஷ்மன்’ என்ற புனைபெயரில் ஆங்கில நாவலொன்றை ‘அலிபாபாவின் குகை’ என்ற தலைப்பில் தொடர்ந்து மொழிபெயர்த்து வெளியிட்டார். ஜேர்மன் மொழியில் வில்கெல்ம் சிமித் என்ப வர் எழுதிய நாவலை மொழிபெயர்த்து ‘போட்டி’ என்ற தலைப்பில் வெளி யிட்டார்.

அ. செ. மு. இளமை யிலே அதாவது பாட சாலையில் கற்கும்போதே எழுத்துத்துறையில் ஈடு பட்டவர் என்பதை முன் னர் கண்டோம். அக்கா லத்திலேயே இவர் ஈழ கேசரியின் ஆசிரியர் குழுவிற் சேர்ந்து எழுத்துத் துறையில் தீவிரமாக ஈடு பட்டார். இந்த முனைப்பே இவரை வேறொரு தொழில் தேடுவதையும் அரசாங்க உத்தியோ கத்தைப் பெறுவதையும் தடுத்து விட்டது எனலாம். இக்காலத்தில் அ. செ.மு அவர்கள் மறுமலர்ச்சிச் சங்கத்திலும் பிரதான உறுப்பி னராகவிருந்து செயற்பட்டார். ஈழகேசரியின் முதன்மையாசிரியராகப் பதவியேற்ற இராஜ. அரியரத்தினம் தமிழ் நாடு சென்றுவிட்டதால் முருகானந்தன் அவர்களே ஈழகேசரியின் ஆசிரி யராக செயற்பட்டார். இவர் தமது ‘யாத்திரை’ என்ற நவீனத்தை 1957ல் ஈழகேசரியில் வெளியிட்டு வந்தார். 1958ல் ஈழகேசரி வெளிவராது நின்று விட்டதால் அந்த நவீனம் ஈழநாட்டில் வெளியிடப்பட்டது.

இவர் எழுதிய சிறுகதைகளில் காளிமுத்து வின் பிரஜா உரிமை என்பதும் ஒன்று. இச்சிறு கதை மலையக மக்களின் அவலங்களைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் அமைத்துள் ளது. மலையக மக்களும் இந்நாட்டு மக்களே யென்ற உணர்வை அக்கதை வாசகர்களுக்கு வெளிப்படையாகக் காட்டுகிறது. இந்த உணர்வை யுண்டாக்கும் விதத்தில் காளிமுத்துவின் முப்பாட்டனின் எலும்புக் கூடு மூலம் சித்திரித் துக் காட்டுந்திறன் நயக்கவும் வியக்கவும் வைக் கிறது. அண்மைக் காலத்தில் பதினைந்து ஈழத்துச் சிறுகதைகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றுள் அ. செ. முருகானந்தன் எழுதிய ‘காளிமுத்துவின் பிரஜா உரிமை’ யும் ஒன்றாக இருந்தது. இது இவ்வெழுத்தாளரின் சிறுகதை வெற்றியை எடுத்துக் காட்டுவதாகும். ‘மனிதமாடு’ என்கிற சிறுகதை தொகுதியும் மக்களைக் கவரக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. மனிதனை இழுத்துச் செல்லும் மனிதனையே மனிதமாடு என்று எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.

எழுத்துலகில் புகுந்தால் இலகுவாக புகழேணியில் ஏறிவிடலாம் என்பது சில எழுத்தாளரின் எண்ணம். ஆனால் எழுதிய சிறுகதைகளையோ கவிதைகளையோ நாவல் களையோ அச்சிட்டுவெளிப்படுத்தும் எழுத்தா ளர்கள் மேடையில் வைத்து வெளியீடுகளில் புகழப்பட்டாலும் நூல்வெளியீட்டுக்குச் செலவு செய்த பணத்தைப் பெறமுடியாது நட்டப்படு பவர்களே பலராவர். எழுத்தாளர்களின் கனவு ஈற்றில் கானல் நீராகிவிட பின்னாளில் அவர் கள் படும் கஸ்ட நஸ்டங்களுக்கு நல்ல எடுத்துக் காட்டானவர் அ. செ. முருகானந்தமவர்களே. அவர் பிச்சையெடுத்து வாழவேண்டிய நிலையி லிருந்த போது அவரை எந்த வளம் படைத்த எழுத்தாளரும் கவனிக்கவில்லையென்பது கவலை தருவதே. தமிழ் எழுத்தாளரைக் கவனிக்கத் தமிழ் அரசுமில்லை, பணம் படைத்தை பிரபுக்களும் இல்லையென்பதே உண்மை நிலைப்பாடு.

No comments:

Post a Comment