Search This Blog

Saturday, September 3, 2011

உடலை ஆளும் கிரகங்கள் -ஜோதிடம்


மனித உடல் உறுப்புகளை ஒவ்வொரு கிரகமும் ஆட்டிப்படைக்கிறது என்பது உண்மையா? 
கேள்வி....கே.கோவிந்தசாமி காஞ்சிபுரம்

மது உடலில் உள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கிறது. எந்தெந்தக் கிரகம் எந்த உறுப்பை ஆட்சி செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

உடம்பிற்கு பிரதானமான தலையை சூரியனும் முகம்,வயிறு போன்றவற்றை சந்திரனும் கைகளையும்,தோள்களையும் போர் கிரகமான செவ்வாயும்; கழுத்து தொண்டை இவற்றை புதனும் இதயம் மற்றும் நுரை ஈரலை குருவும் அடிவயிறு,பிறப்புறுப்பு போன்ற வற்றை காதல் கிரகமான சுக்கிரனும்,  தொடை மற்றும் பாதத்தை சனியும் உள்ளுறுப்பான கல்லீரலை ராகுவும் கேது கணையத்தையும் ஆட்சி செய்வதாக சாஸ்திரம் சொல்கிறது.   

இந்தக் கிரகங்கள் மறைவு ஸ்தானத்திலேயே ஆறாமிடமான ரோக ஸ்தானத்திலேயே வரும் போது அந்தந்த உறுப்புகள் அதிகமான அளவில் நோய் தாக்கத்திற்கு உட்படுகிறது. இதை அனுசரித்து வைத்தியம் செய்தால் நோய் நிவாரணம் என்பது உடனடியாகவும் கிடைக்கும்.  நிரந்தரத் தீர்வாகவும் அமையும்.
நன்றியும் குருஜியின் அருளாசியுடன்...அன்புடன் கே எம் தர்மா....

No comments:

Post a Comment