Search This Blog

Friday, July 15, 2011

எல்லாமே அறிந்தவன்



இது நாள் வரை இணையத்தில் எதையாவது தேட கூகிளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த கோபால் இப்போதெல்லாம் பிங்குக்கும், யாகூக்குமாக தாவிக் கொண்டிருக்கின்றான். இரண்டிலும் சிக்காத பட்சத்தில் மட்டுமே கடைசி முயற்சியாக கூகுளுக்கு செல்வதாக கேள்விப் பட்டேன். அதற்கு அவன் சொல்கின்ற காரணம் சமீபத்தில் கூகிளின் CEO Eric Schmidt பேட்டி ஒன்றில் பார்வையாளர்களைப் பார்த்து சொன்ன ஒரு கூற்று "We Know Where You Are. We Know Where You've Been. We Can More Or Less Know What You're Thinking About."

அந்தாள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.ஜிமெயிலிலோ அல்லது ஐகூகிளிலோ நீங்கள் லாகின் செய்ததும் ஐபி விலாசம் வைத்து கூகிளுக்கு நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் என்ற தகவல் தெரிந்து விடுகின்றது. உங்கள் ஜிமெயில் மற்றும் Gtalk தொடர்புகள் வழி உங்கள் நண்பர்கள் யார், யாரிடம் அடிக்கடி தொடர்புகொள்கின்றீர்கள் என்ன விசயமாக போன்ற விசயங்கள் கூகிளுக்கு தெரிந்து விடும். தேடல்களில் நீங்கள் டைப்பும் கீ வார்த்தைகள் மூலம் உங்கள் ஆர்வங்களும் கூகிளுக்கு தெரிந்து விடுகின்றது.கூகிள் மேப் பயன் படுத்தி போக வர டைரக்சன்கள் நாம் கேட்கும் போது உங்கள் இருப்பிடமும், எங்கே செல்ல விழைகின்றோம் என்ற தகவலும் கூகிளுக்கு தெரிந்து விடுகின்றது.பிறரிடம் நாம் கேட்க தயங்குவதைக் கூட கூகிளிடம் வெட்கமில்லாமல் தைரியமாக கேட்கின்றோம். சிக்கன் பிரியாணி செய்து பார்க்கலாமாவென யோசித்து அதை மனைவியிடம் சொல்லுமுன்பே கூகிளிடம் நீங்கள் சொல்லிவிடுகின்றீர்கள்.How to make chicken biryani?.

உண்மையில் கூகிளால் உங்களை பற்றி ஓரளவு ஆருடம் கூட சொல்ல முடியும். உங்கள் குணங்களையும் ஆர்வங்களையும் செயல்பாடுகளையும் பட்டியலிட்டு இவர் இப்படிபட்ட நபராகத்தான் இருக்க முடியும் என ஒரு ரிப்போர்ட்டே கொடுக்க முடியும்.பெண்ணை கட்டிக் கொடுக்கப் போகின்றவர் மாப்பிளையின் குணநலன்கள் செயல்பாடுகள் பற்றி எதிர்காலத்தில் கூகிளிடமே விசாரிக்கலாம். இதை தான் எரிக் சிமிட் அப்படிச் சொன்னார். இதனால் கோபம் பொத்துக்கொண்ட கோபால் கூகிளை விட்டுவிட்டான். இதனால் யாருக்கு நஷ்டமோ தெரியவில்லை.

”டிஸ்பிளே போர்ட்” ஒரு அறிமுகம்:
சில சமயம் நம் கணிணியில் அல்லது மடிக்கணிணியில் இருக்கும் வினோதமான புதியவித போர்ட்டுகள் எதற்காக இருக்கின்றனவென்றே நமக்கு தெரிவதில்லை. அப்படி புதிதாக சமீப காலங்களில் உங்கள் கண்களில் சிக்கும் ஒரு போர்ட்டு தான் ”டிஸ்பிளே போர்ட்”. அது பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இங்கே.
படத்தில் நீங்கள் காணும் இந்த புதிய வகை ”டிஸ்பிளே போர்ட்டுகள்” சீக்கிரத்தில் VGA,DVI மற்றும் HDMI போர்ட்டுகளை பெவிலியனுக்கு அனுப்பிவிடுமாம்.மிக அதிக ரெசல்யூசன் மானிட்டர்களுக்கு இந்த போர்ட்டு வகைகள் நல்லதாம். HDMI போல இது வீடியோவோடு ஆடியோவையும் கடத்துகின்றது. அது போல ஒரு நடுபெட்டி அமைத்து பல எண்ணிக்கையில் மானிட்டர்களை ஒரு கணிணியில் இணைக்கலாமாம். பல வீடியோ கார்டுகள் தேவைப்படாது. HDMI போல இது பாயிண்ட் டூ பாயிண்ட்டாக வேலை செய்யாமல் பாக்கெட் சுவிட்சிங் முறையில் இது வேலை செய்வது இங்கு குறிப்பிடத் தக்கது. ராயல்டி இல்லாமை, விசேச கண்ட்ரோலர் தேவை இல்லாமை இவ்வகை ஹார்டுவேர்களின் விலையை குறைக்கின்றன. ஆப்பிள் கணிணிகள் இப்போதெல்லாம் அதன் விசேச mini DisplayPort-களுடன் வருகின்றன.
DisplayPort vs HDMI port comparison chart

Caught on Camera
செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் மாறாக தவறை சுட்டிக்காட்டிய தொண்டனை கும்மாங்குத்து குத்தும் தலைவனெல்லாம் என்ன தலைவன்?
கேப்டனின் நிஜ சண்டைக் காட்சி.

மேலே ஒளிப்படம் தெரியவில்லையா?
யூடியூப் வீடியோவை பார்க்க இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=u9TS5xUHIRk
On the Lighter Side

No comments:

Post a Comment