Search This Blog

Monday, September 17, 2012

டிகாக்ஷன் போடும் கலை!




Join Only-for-tamil

டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் – அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.
மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி. வெறும் ஸ்டெரெய்ன்தான் – இரண்டு நாள் ரெஸ்ட்டாக இருந்தால் போதும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.
ரெஸ்ட் என்பதில் காப்பி கூடப் போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால் வழக்கம்போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
ரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது...மனைவி காப்பி போடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்கு மேல்தான் தெரிந்தது.
”டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்க” என்று சொல்லிவிட்டு தனது தூக்கத்தின் இன்ப எல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.
நான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனே தவிர போட்டுப் பழகாதவன்.
ஓரளவு காப்பி நடவடிக்கைகளை எட்ட இருந்து கவனத்திருக்கிறேன் என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ளாதவன்.
மனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராக இருக்கும். இன்னும் சில சமயம் நாம எதைக் குடித்தோம் என்றே தெரியாது.
மனைவி அமைவதெல்லாம் மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.
காப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்கு இருக்க வேண்டும்.
மழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால் எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள் கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் ·புல் காப்பிப் பொடி பட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன் மேலெல்லாம் நம்ம திருஷ்டி படும் என்று அவர்கள் நினைத்து காரில் கண் திருஷ்டி கணபதி ஒட்டி வைப்பதில்லை.
ஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டு விடுவாளாம். எல்லாம் சைக்கோ கேஸ்.
‘காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப் ஆகிவிட்டது.
காப்பிப் பொடியை ·பில்ட்டரில் போடவேண்டும என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும் மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்கு விஷயம் தெரிந்த ஞானஸ்தன்.
ஆனால் எந்த ·பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவது கலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும். சில பேர் இருபது ரூபாய் நோட்டாக சேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டி வகையறா…
மனைவி ஒரு ·பில்ட்டர் கலெக்டர். பல வகையான ·பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்து இருக்கும்.
அது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால் சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.
மேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதை ஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(?) ஆகிவிட்டது.
எந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டு பிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார் அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம் பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும் போலாகிவிட்டது.
நல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறது’ என்று குரல் வரவில்லை.
சற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்தபின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகல ஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. (ஆனால் நான் கொஞ்சம் சூட்சும மூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படி பாட்டிலில் இருந்தது மஞ்சள் தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப் போகிறதென்று அலம்பிவிட்டு – சே! என்ன அவசரம், ஏன் ஆர்வம் – காப்பிப்பொடி பாட்டிலில் ஈரமாகவே நுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச் சேதத்துக்குரிய மாபெரும் குற்றமில்லாவிட்டாலும்; நாளைக்கு கோர்ட் முன் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என் நறுக்கு பதில்களும். (கற்பனைதான்).
நீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்?
ஏதோ ஒரு ஸ்பூன்.
மிளகாய்ப் பொடி ஸ்பூனா?
அந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.
துடைச்சீங்களா?
ஊம்… ஊம்…
சரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.
சரியான ஞானக் கண்ணி!
காப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னு… சே! அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை?
மஞ்சள் தூள் பாட்டிலையா? நல்லா மூடினேனே.
நான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும் ஆயிடுட்டுது…
ஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு, தப்புத்தானே….
இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம் போக வேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக் கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.
சே! காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான் அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச் சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான் சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலே அம்மா ஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்த ஆக்கிவந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு – உங்க கண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.
அந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப் போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்ல சாதகமாயிருக்கும்.
ஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா? ‘நீங்க பெரிய ரஜினி? வாய்ஸ் குடுக்கறீங்களா வாய்ஸ்?’ என்று எழுப்பப்பட்ட புலி உறுமக் கூடும்.
இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை (குமாச்சியா) போட்டாயிற்று.
அப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாக இறங்குமாம்.
ஒரு குண்சாகச் சர்க்கரை போட்டேன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.
பாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக் குடித்துவிட்டு அவளுக்கும் தர வேண்டியது.
பாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது.
சிறிது சூடானதும் பாலில் வினோதமான கொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன.
உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. ‘இறைவா, தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பா’ என்ற பிரார்த்தனை எடுபடவில்லை.
இத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான் அடுப்பேற்றினேன்.
இதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி, தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டு சேராக் கூட்டணி மாதிரி பால் அது இஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது.
மிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரத யுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கி அமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.
அமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர் இருபத்து நாலு ஆச்சே.
ஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே…
இப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது. ”இன்னுமா காப்பி போடறீங்க?”
”தோ ஆச்சு!”
”நான் வரட்டுமா?”
”வேணாம், வேணாம்” அவசரமாக அவள் வருகையை ரத்து செய்தேன்.
முக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாக மறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் போகிற வழியில் மனைவியின் ‘என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க?’ என்றால் விபரீதம். கொலை செய்வதைவிட அதை மறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்த பாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.
அதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக் கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்தி சக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்து அலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும் படலம் முடிந்தது.
இனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.
பில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழிக்குச் சிறந்த உதாரணம் – பில்ட்டரைக் கழற்றுவதுதான்.
எவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக் கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடி துணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும் விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.
இடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒரு ஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கலாம்… ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.
அதற்குள் மனைவியிடமிருந்து ‘என்னாச்சு! நான் வரட்டுமா?’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டு கால்கள்தான்).
”இதோ ஆச்சு!” என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப் பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால் என்று ஜோடி பிரிந்தது.
செய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.
பிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கி மனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்கு திரும்புவதற்குள், ‘தூ தூ… என்று மனைவியின் கூப்பாடு.
”அழுத்தவே இல்லியா…” கூவினாள் – காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி, உரக்க அழைத்திருக்க மாட்டான்.
”எதை அழுத்தலையா?” செயற்கையான வீரத்துடன் காளிமாதாவிடம் மோதினேன்.
”மனுஷி குடிப்பாளா?” என்று ஆற்றிக் காட்டினாள்.
மணல் மாரி! கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.
”அழுத்தவே இல்லியா? காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது! அழுத்தணும்னு தெரியாது?”
”எதை?”
”என் தலையை!” மனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளு தள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரை ஆராய்ந்தாள்.
”ஒரு வாய்ச் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம் பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது. மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.
”எதையடி அழுத்தணும்…?”
”காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் – வேலை முடிஞ்சிதுன்னு.”
நான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம் தெரிவித்தேன்.
அதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை… ”இதனுடைய மேல் பில்ட்டர் எங்கே… அட ராமா! நாலு ஸ்பூன் பில்ட்டருக்கு இரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சி காப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”
”காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.”
”உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது? நாலு ஸ்பூன் அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன் பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”
”அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.”
”காப்பிப் பொடியை அழுத்தணும்… இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப் போட்டுத்தர ஆள் இல்லை.”
”செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாக ஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.
கால்மணியில் மனைவி காப்பியோடு வந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.
”போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு!” என்று பாராட்டினேன். ”எனக்கும் காப்பி போட முறைப்படி கத்துக் கொடுத்துடு” என்றேன்.
”கத்துக் குடுக்கறாளாக்கும் கத்து? கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னா பொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேல ஷாவனிஸம்!”
”வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பி போடுகிறார்கள் மேலாவது ஷாவனிஸமாவது. உளறல்.
-பாக்கியம் ராமசாமி-

Shiridi Sai baba Song Sai baba ninu

Sunday, September 16, 2012

2012 இல் அதிகம் சம்பாதித்த 30 இணையத்தளங்கள் விபரம்



1. Google 
முதலாம் இடத்தில் இருப்பது Google தான்.


நிறுவுனர்கள் : Larry Page and Sergey Brin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$691.29
வருடாந்த சராசரி வருமானம் :$22,000,000,000

2. Amazon

நிறுவுனர் : Jeff Bezos
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$607.05
வருடாந்த சராசரி வருமானம் :$19,200,000,000

3. Yahoo
நிறுவுனர் : Jerry Yang and David Filo
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$228.31
வருடாந்த சராசரி வருமானம் :$7,200,000,000

4. eBay
நிறுவுனர் : Pierre Omidyar
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$199.45
வருடாந்த சராசரி வருமானம் :$ 6,300,000,000

5. Msn/Live
நிறுவுனர் : Nathan Myhvoid
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$102.00
வருடாந்த சராசரி வருமானம் :$ 3,200,000,000

6. Paypal
நிறுவுனர் : Luke Nosek, Max Levchin and Peter Thiel
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$71.40
வருடாந்த சராசரி வருமானம் :$2,250,000,000

7. iTunes
நிறுவுனர் : Jeff Robin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$60.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,900,000,000

8. Rueters
நிறுவுனர் : Marshal Vace
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$60.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,900,000,000

9. Priceline
நிறுவுனர் : Jesse Fink
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$59.6
வருடாந்த சராசரி வருமானம் :$1,850,000,000

10. Expedia
நிறுவுனர் : Added Mark Schroeder
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$46.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,450,000,000

11. NetFlix
நிறுவுனர் : Reed Hastings
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$38.00
வருடாந்த சராசரி வருமானம் :$1.100.000,000

12. Travelocity
நிறுவுனர் : Terry Jones
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$38.00
வருடாந்த சராசரி வருமானம் :$1.100.000,000

13. Zappos
நிறுவுனர் : Nick Swinmurn
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$31.70
வருடாந்த சராசரி வருமானம் :$1,000,000,000

14. Hotels.com
நிறுவுனர் : David Litman
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$31.70
வருடாந்த சராசரி வருமானம் :$1,000,000,000

15. AOL
நிறுவுனர் : Erik Prince
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$30.50
வருடாந்த சராசரி வருமானம் :$960,000,000

16. Orbitz
நிறுவுனர் : Jeff Katz
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$28.00
வருடாந்த சராசரி வருமானம் :$870,000,000

17. Overstock
நிறுவுனர் : Robert Brazell
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$27.00
வருடாந்த சராசரி வருமானம் $834,000,000

18. Myspace
நிறுவுனர் : Tom Anderson
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$25.00
வருடாந்த சராசரி வருமானம் $800.000.000

19. Skype
நிறுவுனர் : Niklas Zennstrom
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$18.00
வருடாந்த சராசரி வருமானம்: $550,840,000

20. Sohu
நிறுவுனர் : Zhang Chaoyang
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$14.00
வருடாந்த சராசரி வருமானம்: $430,000,000

21. Buy.com
நிறுவுனர் : Robb Brock
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$12.68
வருடாந்த சராசரி வருமானம்: $400,000,000

22. StubHub
நிறுவுனர் : Eric Baker
செக்கன் ஒன்றிற்கான வருமானம் : $13.00
வருடாந்த சராசரி வருமானம்: $ 430,000,000

23. Alibaba
நிறுவுனர் : Jack Ma
செக்கன் ஒன்றிற்கான வருமானம் : $10.00
வருடாந்த சராசரி வருமானம்: $315,000,000

24. Facebook
நிறுவுனர் : Mark Zuckerberg
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.50
வருடாந்த சராசரி வருமானம்: $300,000,000

25. YouTube
நிறுவுனர் : Chad Hurley, Jawed Karim and Steve Chen
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.50
வருடாந்த சராசரி வருமானம்: $300,000,000

26. Blue Nile
நிறுவுனர் : Mark Vadon
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.40
வருடாந்த சராசரி வருமானம்: $295,000,000

27. Tripadvisor
நிறுவுனர் : Stephen Kaufer
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$8.20
வருடாந்த சராசரி வருமானம்: $ 250,000,000

28. Getty Images
நிறுவுனர் : Mark Getty
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$7.40
வருடாந்த சராசரி வருமானம்: $230,000,000

29. Bidz
நிறுவுனர் : Garry Itkin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$6.70
வருடாந்த சராசரி வருமானம்: $200,000,000

30. NYTimes
நிறுவுனர் : Henry Jarvis Raymond
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$6.00
வருடாந்த சராசரி வருமானம்: $175,000,000

அலன் மாத்திசன் டூரிங்.. இவரை எத்தனை பேருக்கு தெரியும்?

 

இன்று கணனித்திரையில் நாம் எமது பணிகளை செய்கிறோமென்றால் அதற்கு காரணம் இந்த அற்புத மனிதர்தான். இவர் இல்லாவிட்டால் என்னால் கணனித்திரையில் இதை எழுதவும் முடியாது. உங்களால் படிக்கவும் முடியாது. Binary எண்களாக பகுத்தெழுதி கணிப்பு நடத்த முடியும் என்று நிரூபித்து காட்டியவர். சுருக்கமாக கூறினால் நவீன கணனியின் தந்தை.

மூச்சு விடுவதுகூட கணனி என்று ஆகியிருக்கும் இக்காலத்தில் அலன் மாத்திசன் டூரிங்கை யாருக்கும் தெரியாமல் இருப்பது கொடுமைதான்.

1912 ஆம் ஆண்டு இப் புவியில் அவதரித்த அலன் டூரிங் அமெரிக்காவின் புகழ்வாய்ந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1938 ஆம் ஆண்டு கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றுக்கொண்டார். அந்த காலகட்டம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியாகையால் அலன் பல்கலைக்கழகத்தில் இருந்து தன் தாய் நாடான பிரிட்டனுக்கு திரும்பி, அங்கே ஜேர்மனியர்களின் போர்க்கால சங்கேதங்களை தகர்க்கும் வேலையில் சேர்ந்தார். 

இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் எனிக்மா இயந்திரம் அதனுடைய சங்கேதங்களை மாற்றிக்கொண்டேயிருக்க எந்த வகையிலும் ஜேர்மனியர்களின் தகவல்களை புரிந்துகொள்ளமுடியாமல் இருந்தது. அப்போது டூரிங் தயாரித்த கணனி செய்முறைகளை (Algorithmas) கொண்டு எந்த அடிப்படையில் எனிக்மாவின் சங்கேதங்கள் மாறுகின்றன என்பதை துல்லியமாக கணிக்க முடிந்தது. விளைவாக ஜேர்மனியரின் A+-போட் என்ற நீர்மூழ்கியின் சங்கேதங்களைப் பிரிட்டானியர்கள் புரிந்துகொள்ள, அந்த நீர்மூழ்கி முறியடிக்கப்பட்டு போரில் நேச நாடுகளுக்கு வெற்றி கிடைத்தது. இரண்டாம் உலகப்போரில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். கிட்டத்தட்ட இதுதான் உயர்தொழில்நுட்ப அடிப்படையிலான போர்த்தந்திரத்துக்கு கிடைத்த முதல் வெற்றி)
தொடர்ந்து எண்கணிதம் (Number Theory), நேரிலி கணக்கீடு (Nonlinear computation), நேரிலிக்கணக்கீட்டின் அடிப்படையில் உயிரியல் பெருக்கங்களை வடிவாக்கல், பிணைப்பு வலைகள் (Neural Networks) என்று பலதுறைகளில் அலன் டூரிங் மிக முக்கியமான பங்களிப்பைத் தந்தார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க இவரது தனிப்பட்ட வாழ்வு சோகம் மிகுந்ததாகவே இருந்தது. அலன் டூரிங்கிற்கு இயற்கையிலேயே ஓரினச்சேர்க்கைமீது நாட்டமிருந்தது. அக்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களை உலகம் வெறுத்து ஒதுக்கிய காலம். அரசுகளினால் கூட ஓரினச்சேர்க்கை தடை செய்யப்பட்டிருந்தது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் சமூக விரோதிகளாகவே நோக்கப்பட்டனர். அலன் டூரிங் 1952 ம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் இன்னொரு ஆணுடன் உறவுகொள்ள முயற்சித்தபோது போலீசாரால் பிடிக்கப்பட்டார். 

ஓரினச்சேர்க்கையாளர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு சிறைத்தண்டனை கொடுப்பதே வழமை. அல்லது பெண்களுக்கு இயற்கையில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் ஹார்மோனை ஒருவருடத்திற்கு ஊசிமூலம் செலுத்திகொள்ள வேண்டும். சிறையை தவிர்ப்பதற்காக அலன் டூரிங் ஹார்மோன் செலுத்த ஒத்துக்கொண்டார்.


தன்னைக்கவர்ந்திழுக்கும் தொழில்நுட்பம் ஒருபுறமும், ஓரினச்சேர்க்கை ஆர்வம் மறுபுறமும், இயற்கைக்கு மாறாக உடலில் செலுத்தப்பட்ட ஹார்மோன் இன்னொரு புறமும் என்று இழுக்க அலன் டூரிங்கின் வாழ்வு அவலமாகிப்போனது.

தூங்க முடியாத வேதனையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு கணிதம், இயற்பியல், உயிரியல் என்று முடிக்கப்படாத பல சித்தாந்தங்களை உலகிற்கு விட்டுவிட்டு சயனைட் கலந்த அப்பிளை உட்கொண்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார். எந்த பிரிட்டானிய சமூகத்தை தன் அறிவால் போரில் காப்பாற்றினாரோ அதே சமூகத்தின் ஓரினச்சேர்க்கை வெறுப்பினால் துரத்தியடிக்கப்பட்டு அவருடைய வாழ்வு முடிந்துபோனது.

அவருடைய ஆராய்ச்சிகள், கணிதம், இயற்பியல், தர்க்கம், தத்துவம், உயிரியல், சங்கேதம் என்று பல் துறைகளில் பரவி நிற்கிறது. அவருடைய மறைவுக்கு பிறகு 1969 இல் வெளியிடப்பட்ட Intelligent Machines என்ற ஆராய்ச்சிக் கட்டுரை, இன்றைக்கு நாம் அறியும் செயற்கை ஒட்பம் (Artificial Intelligence) என்ற துறைக்கு வித்திட்டது. மனித மூளையின் செயற்பாடுகளை முற்றாகவோ, கிட்டத்தட்ட முழுமையாகவோ நிகழ்த்தவல்ல இயந்திரங்களைப் படைப்பது சாத்தியம் என்று அலன் டூரிங் முழுமையாக நம்பினார். அத்தகைய புத்திசாலி இயந்திரங்களை உளவியல் ரீதியாக கையாள்வதற்கு மனிதனுக்கு இருக்கும் தயக்கங்களையும் முன்மொழிந்தார்.

1950 இல் டூரிங் சோதனை என்ற கட்டுரையை வெளியிட்டார். அதில் செயற்கை ஒட்பத்தை அடையாளம் காணும் வழியை விளக்கியிருந்தார். மொத்தத்தில் நவீன இரண்டடிமான (Binary) கணனி, செயற்கை ஒட்பம், சங்கேதவியல் போன்ற துறைகளை நமக்கு உருவாக்கி கொடுத்தவர் அலன்.

அணுசக்தி வேண்டாம்; ஆனால்...



அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

விபத்துகள்:-
முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:-
அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-
உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-
இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-
நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-
அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-
நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:-
ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-
அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி

சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.
இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.)

‎~ The Heaven Gate Mountains~



It is no wonder that Tianmen Mountain in China is also called the Heaven Gate Mountain. The mountain measures up to 131 meters in height and runs 60 meters deep. Because of its high altitude, it is more like an open gate to heaven. Located in the Zhangjiajie city in China, the Heaven Gate Mountain is seven kilometers from the city. Adventures prefer hiking up to the mountain while tourists prefer a taxi or a car to get to the mountains. Apart from trekking and car rides, cable car facility is available too. The mountain boasts of a natural cave believed to have formed in 263 AD.
The Tianmen Mountain has a 500 year old temple called the Tianmenshan temple situated on its top and hence the mountain is the major place of worship for the Chinese. Written as Tien Men Shan in Chinese language, the mountain had longer days and shorter nights. The temperature is around 9 to 10 degree centigrade through most of the year. In July 1992, the Heaven Gate Mountain was established as a national park and a potential tourist attraction. To facilitate the tourism aspect, the Chinese government built the 7455 meter cable cars so that the tourists can marvel the beauty of the mountain.