Search This Blog

Tuesday, January 3, 2012

You Built What?! A Wearable LED Television



This 160-by-120 pixel TV will get you stopped at the airport
Colour by Numbers David Forbes's TV vest contains 14,400 green, red, and blue LEDs that together make 4,667 pixels. Steven Meckler
David Forbes was on his way home to Tucson, Arizona, after a family trip last summer when a policeman stopped him in the Detroit airport. The officer said he had received 50 panicked phone calls since Forbes had entered the building, and now his entire family had been marked for extra screening. The delay was inconvenient, but it shouldn’t have come as a surprise. Forbes had 160 circuit boards and enough electronics to start a data center strapped to his body. What the authorities didn’t realize, though, was that all the equipment wasn’t dangerous—it was actually a wearable TV set.
An electrical engineer, Forbes built his first video coat in 2009 after getting his hands on a collection of surplus LED displays. He transformed them into “the world’s worst television,” an all-red screen that weighed 50 pounds. He wanted to make a better, lighter version, and thanks to a side business selling homemade wristwatches, he had the spare cash. He laid an old overcoat on a table, measured its dimensions, and guessed that he could fit it with enough LEDs to create a sharp 160-by-120-pixel display. Next, he sorted through his gadget box and found a few flexible circuit boards. The flexibility was ideal for a wearable screen, but he wanted to have more pixels, so he built a prototype of a long, thin board with 30 rows of four LEDs each and shipped it to a circuit board manufacturer to make 175 more.
Screen Shot: When the vest is displaying video, roughly five gigabits of data flows to the LEDs every second.  Steven Meckler
Forbes also built an additional circuit board to scale down the analogue video signal from his iPod and three other circuit boards that translate the signals into instructions for the LEDs and deliver power from two lithium-polymer batteries. He put the batteries into his pants pockets and hot-glued the control boards to the shoulders and the flexible display boards to the front and back of the coat. A little Velcro down the middle replaced the buttons on the coat. The finished version weighed only eight pounds.
Forbes convinced airport security that he wasn’t a threat at the airport by offering to show them The Simpsons on the coat. Since then, he has cut the coat into two less-cumbersome vests. Although they’re relatively comfortable and they work well, they haven’t replaced his family TV. “I’m not using them daily,” he says, “but they get taken out now and then if I’m in the mood for a little attention from strangers.”
Image Generation: The iPod connects to a circuit board that has a chip normally used to scale down the pixels in surveillance video.  Steven Meckler

How It Works

Time: 6 months
Cost: $20,000

DISPLAY

Forbes’s iPod plugs into a circuit board on the vest’s left shoulder. The board includes a digitizing chip—a type used in security video systems that allows the feeds from four cameras to fit on one monitor—that he repurposed to scale iPod video down to a resolution consistent with his display. Additional processing converts the iPod data into signals for the LEDs, which travel along Ethernet-like cables to four separate boards, one on each shoulder and hip. From there, the signals move through ribbon cables to the three miniature chips on each of the flexible circuit boards located on the chest and back. The chips turn the LEDs on and off 360 times a second to create the illusion of changing color and brightness.

POWER

Heavy batteries would make the coat hard to wear, so Forbes found an R/C hobby shop in Washington that sold lightweight, inexpensive lithium-polymer batteries. One battery fit in each pocket, which gave the coat roughly an hour of run-time. The smaller vests last up to 90 minutes.

AUDIO

Forbes initially thought about rigging small speakers to the shoulders of the coat, but he realized that they wouldn’t be powerful enough to let him show off his invention at Burning Man, the annual festival in the Nevada desert. So he wired the coat to another one of his inventions, a boom box for bicycles that he built from a six-inch-diameter drain pipe and a pair of outdoor marine speakers.

Wilton B.A.S.H. Sledgehammer and Two-Faced Crowbar


Can anything break a steel-reinforced sledge?
Strong Hold B.A.S.H. is the only sledge to thread the handle through the head. Typical sledges rely on friction to hold the two together. Claire Benoist
Sledgehammers are the monsters of demolition. They can deliver enough force to pound boulders into dust, but strangely, it doesn’t take much to break them in two. When workers miss their target and whack the hammer’s handle on debris, called overstriking, the hammerhead can snap off, becoming a dangerous projectile. Wilton guarantees its Bad Ass Sledge Hammers (B.A.S.H.) against breaks, and will cut a $1,000 check to anyone who can destroy one. Depending on the model, up to six steel rods run the length of the handle and affix to a plate inside the head, holding the two parts together. When the hammerhead strikes, the rubber handle disperses the force evenly among the rods, a design that also absorbs vibration.

THE TEST

Knowing that the B.A.S.H. was likely to withstand regular abuse—hours of pounding on concrete and snapping steel joints—I focused on striking its most vulnerable spot: the upper handle. I repeatedly overstruck the hammer on a one-inch-thick steel rod suspended between two-by-fours. After that, I overstruck on a four-inch-square fencepost that I was driving into the ground.

THE RESULTS

After maybe 1,000 whacks, the B.A.S.H. held strong. In fact, the test was a bit demoralizing—my back felt more worn than the hammer looked. It barely seemed used. The handle flexed gently on impact but never showed any sign of fracture. And the B.A.S.H. is one of the most comfortable sledges I’ve ever swung; the handle absorbs so much vibration that overstriking felt more like hammering a nail than clobbering steel.
Swinging Weight: 2.5-20 pounds
Handle Length: 12-36 inches
Price: $38-$160

The Two-Faced Crowbar

FUBAR:  Stanley

With its new FuBar, Stanley multiplies the demolition capability of a normal crowbar, replacing what would be a blunt handle with a heavy-duty slicer. On top, the chiseled end of the 14-inch steel-and-carbon bar is thick enough to break holes in drywall. On the bottom, it’s ground down to a fine edge that can slice through material with a couple of hammer taps to the bar. Stanley FuBar Demolition Bar $20

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!








   பிரணாயாமம் என்ற மூச்சு பயிற்சி ஆரோக்கியமான வாழ்கைக்கு சிறந்தது என்று கேள்விப்படுகிறோம்

 அதை செய்யும் முறையை குரு மூலம் தான் அறிய வேண்டும் என்பதும் நமக்கு தெரியும்

அந்த பயிற்சியை செய்ய துவங்கும் முன் அதை எப்போது செய்ய வேண்டும் அதற்கான உணவு கட்டுப்பாடு ஏதேனும் உண்டா என்பதை அறிந்து கொண்டால் நம்மால் ஆகுமா ஆகாதா என்று முடிவு செய்யலாம் என சிலர் நினைக்கிறார்கள்

மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் ஒரு முயற்சி மட்டுமல்ல வாழும் காலம் எவ்வளவு ஆனாலும் அதில் ஆரோக்கியமாக இருக்கும் வழியேயாகும்.


  முறைப்படி மூச்சு பயிற்சியை காலை மாலை இரு வேளைகளில் தான் செய்ய வேண்டுமென யோக நூல்கள் சொல்லுகின்றன

  சூரிய உதய நேரத்திலும் மறையும் வேளையிலும் தரையில் பத்மாசனம் இட்டு அமர்ந்து முதுகு தண்டுவடம் நேராக நிற்பது போல் நிமிர்ந்து அமர வேண்டும்.

  புலித்தோல், மான்தோல் போன்ற விரிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

  பருத்தி மற்றும் கம்பளி துணிகளையும் பயன்படுத்தலாம்.

 தர்ப்பையால் ஆன பாய் சிறந்தது ஆகும்.

 நாம் மூச்சு பயிற்சி செய்கின்ற அறையில் நமக்கு பிடித்தமான கடவுள் படங்களை வைத்து கொள்ளலாம். 
 கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இயற்கை காட்சி படங்களை வைக்கலாம். இந்த பயிற்சி கடவுள் நம்பிக்கை இல்லாதவனை கூட கடவுளிடம் அழைத்து செல்லும்

 மிக முக்கியமாக அந்த அறை காற்றோட்ட வசதி உள்ளதாகவும், வெளிச்சம் வர கூடியதாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.


  ஊதுபத்தியோ அல்லது மற்ற வாசனை பொருட்களோ உபயோகப்படுத்த கூடாது.

 அந்த நேரத்தில் மனிதர்களின் நடமாட்டமும் செல்லப் பிராணிகளின் அருகாமையோ கூடாது.

 அதிகமா ஒளியும் அங்கு வர கூடாது.

  மனதை கூடியமானவரை அலைய விடாமல், கண்களை மென்மையாக மூடி நிதானமாக அவசரமே இல்லாமல் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

  இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது நேற்று ஒரு நேரம் இன்று ஒரு நேரம் என நமது விருப்பப்படி பிராணாயாமம் செய்யும் நேரத்தை வைத்துக் கொள்ள கூடாது.

  தினசரி மிக கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

  சத்தமாக பேசுதல் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துதல் கூடாது.

 கூடியமான வரை மனதை காம வசப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

 பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதத்துடன் சிறிது நெய், பருப்பு கலந்த உணவை அரை வயிற்றுக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

 கால் வயிற்றுக்கு நீரும், மீதம் வயிறு காற்றாலும் நிரம்பியிருக்க வேண்டும். 

உணவு சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து வாழை பழம் மாம்பழம், ஆரஞ்சு பழம், சீத்தா பழம் ஆகிய பழங்களில் எதாவது ஒன்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

  வயிறு நிறைவாக இருக்கும் போதோ, பசியோடு இருக்கும்  போதோ மூச்சு பயிற்சி செய்யக் கூடாது.

  மல ஜலம் கழித்த பிறகு குளித்து முடித்தே இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

 இப்படி செய்பவர்கள் இடத்தில் பெரிய நோய்கள் எதுவும் வராது. 









உட்கார்ந்தபடியே நீண்டநேரம் வேலை செய்யும் இளைஞர்களை தாக்கும் அபாயம் ?



ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு என்று அழைக்கப்படும் DVT ( Deep Vein Thrombosis ) என்பது தொடை அல்லது கெண்டை சதை பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்தக்கட்டையே குறிக்கும். இந்த ரத்தக் கட்டு அந்த நாளத்தில் ரத்த ஓட்டத்தை முழுதுமோ அல்லது பகுதியாகவோ அடைந்துவிடும்.


இது கால் கீழ் பகுதி மற்றும் தொடை பகுதியிலேயே ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள பெரிய குருதி நாளங்களிலும் ரத்தக் கட்டு ஏற்படுவதில் இது பங்களிக்கிறது. ரத்த ஓட்டத்தை இடையூறு செய்து அல்லது ரத்தக்கட்டு ரத்த ஓட்டத்துடனேயே சென்று ரத்தக் குழாய் அடைப்பை ஏற்படுத்தும் அபாயம் மிக்கது.



நீண்ட நேரம் அசையாமல் உட்காருவது, கை கால்களை அசைக்காமல் நீண்ட நேர படுக்கை ஓய்வு, விமானம், கார்களில் நீண்ட தூரம் செல்வது, சமீப அறுவை சிகிச்சை அல்லது காயம் (குறிப்பாக இடுப்பு, முழங்கால் அல்லது மகப்பேறு அறுவை சிகிச்சை) எலும்பு முறிவு, ஈஸ்ட்ரோஜென் மற்றும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு காரணமாகின்றன. 

வயதானவர்களுக்கும், அதிக எடை உள்ளவர்களுக்கும் இது பொதுவான நோயாக இருப்பினும் நவீன யுகத்தில் உட்கார்ந்தபடியே நீண்டநேரம் வேலை செய்வதால் இளைஞர்களையும், இது பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் பெருகி வருகின்றன.


நோய் அறிகுறிகள் :

கால்வலி அல்லது ஒரு கால் நொய்மையாக இருத்தல்.

ஒரு காலில் வீக்கம் (Oedema) ஏற்படுதல்.

உஷ்ணம் அதிகரிப்பு.

சரும நிறம் மாறுதல், சிகப்புத் தன்மை.

DVT யால் ஏற்படும் நுரையீரல் குருதிக் குழாய் அடைப்பு மிகவும் அபாயகரமானது. குருதி நாளச் சுவற்றிலிருந்து ரத்தக்கட்டு வெளியேறி நுரையீரலுக்குச் சென்று அதன் நாளத்தை அடைக்கும். இந்த நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு உயிருக்கு ஆபத்து விளைவிப்பது, உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவது. இந்த ரத்தக்கட்டு பிளசன்டாவிலுள்ள ரத்தக் குழாயில் தங்கினால் கருப்பையில் உள்ள பிண்டத்திற்கு பிராணவாயு குறைவாகச் செல்லும். இதனால் குழந்தை பிறப்பு மிகுந்த பிரச்சினைக்குள்ளாகும்.

குருதிநாள ரத்தக்கட்டு இருக்கிறது என்று ஒரு மருத்துவர் சந்தேகப்பட்டால் முதலில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வார். நோயாளியின் மருத்துவ வரலாற்றை கேட்டறிவார். காலை மேலே தூக்கும்போது சுரிலென வலி ஏற்பட்டால் அந்தப் பகுதியில் ரத்தக்கட்டு இருப்பதற்கான அறிகுறி உள்ளது. மேலும் இதனைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கால் குருதி நாளத்தில் "டை" ஊசி மருந்து மூலம் செலுத்தப்பட்டு காலை எக்ஸ் ரே எடுக்கப்படுவதும் உண்டு. மற்றும் உடலின் ரத்தக்கட்டு அமைப்புகளை அறியும் பொதுவான சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
சிகிச்சை:

DAT-க்கு பொதுவாக நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பைத் தடுக்க சிகிச்சை அளிக்கப்படும். மேலும் அடிக்கடி இது ஏற்படாமல் இருக்கவும் மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.

இதற்கு பொதுவாக அலோபதியில் ஹெபாரின் என்ற ஊசி மருந்து பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நரம்பு வழியாக ஏற்றப்படுகிறது. இது ரத்தக்கட்டு ஏற்படாமல் தடுக்கிறது.

இதனுடன் வாய் வழி மருந்தான வார்ஃபாரின் அளிக்கப்படுகிறது. வார்ஃபாரின் 6 மாதங்களுக்கு கொடுக்கப்படும். ஹெபாரின் சிகிச்சை தொடங்காமல் வார்ஃபாரின் மட்டும் கொடுக்கக் கூடாது.

ஆழ் குருதி நாள ரத்தக்கட்டை முன்னதாகவே இனங்கண்டு முறையாக சிகிச்சையளித்தால் ஒன்றுமில்லை, கவனக் குறைவாக சிகிச்சை எதுவும் எடுக்காமல் இருந்தோமானால் இதனால் ஏற்படும் ஆபத்துகள் உயிருக்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு அபாயமானது என்பதை நினைவில் கொள்வது நல்லது.
இதிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிகள் :

1. காலின் வழியாக செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்யும் விதத்தில் சாக்சுகளை இறுக்கமாக அணிவthaith தவிர்க்கவும்.

2. உட்கார்ந்திருக்கும்போது அல்லது படுத்திருக்கும்போது கால் மேல் கால் போடுவதை தவிர்க்கவும்.

3. ஒரே நிலையில் நீண்டநேரம் உட்காருவது, நிற்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

4. ஓய்வு நிலையிலும் கால்களை அசைத்துக் கொண்டிருங்கள். கால் விரல் மற்றும் முழங்கால்களை மடக்கி நீட்டியபடி இருங்கள்.

5. விமானத்தில் செல்கையில் நிறைய தண்ணீர் குடியுங்கள். உடல் நீர் வற்றாமல் பாதுகாப்பது அவசியம்.

கடலை தாண்ட வைக்கும் மூலிகை




  யல்நாடுகளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனிதராக பிறந்த அனைவருக்கும் உண்டு. எல்லாதரப்பு மக்களிடமும் இத்தகைய ஆவல் பொதுவாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் உண்டு. தெரியாததை தெரிந்து கொள்ள வேண்டும் புதுமையான அனுபவங்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தை பருவம் முதலே மனிதனுக்கு இயற்கையாக அமைந்து இருக்கிறது.

 இந்த எண்ணம் தான் மனிதனை கடலை கடக்க செய்தது. காற்றில் ஏறி விண்ணை சாடசெய்தது. மிக பழைய காலத்தில் அயல்நாட்டு பயணன் என்பது மிக முக்கியமான மூன்று அம்சங்களை கொண்டு இருந்தது.

 முதலாவதாக பல்துறை அறிவு விஷயங்களை தேடி பெறுவதற்கும் இரண்டாவதாக அந்நிய பொருட்களை உள்நாட்டில் இறக்குமதி செய்வதற்கும், உள்நாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் மூன்றாவதாக ராணுவ நடவடிக்கைகளுக்கும் இருந்தது.


  நாள் செல்ல செல்லதான் அயல்நாட்டிற்கு சென்று பணியாற்றுகின்ற வழக்கம் வந்தது. நமது தமிழர்களை பொறுத்தவரை தூரதேச பயணம் என்பது ஆண்டாண்டு காலமாக ரத்ததில் ஊறிய விஷயமாகும். நகரத்தார் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற தமிழ் மரபினர் வெளிநாடு சென்று தாய் தமிழகத்திற்கு கொண்டு வந்த பொக்கிஷங்கள் எண்ணற்றவைகளாகும்.

 கொண்டு வந்தது மட்டுமல்ல நம்மூர் கலாச்சார சிறப்பை பல நாடுகளிலும் பரப்பினார்கள் என்று சொல்லவேண்டும். பர்மா,இந்தோனேசியா,மலயா மற்றும் சிங்கப்பூரில் தமிழ் பண்பாடு ஒளிமையமாக திகழ்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நகரத்தார்களே ஆகும்.

நகரத்தார்களை பார்த்தே மற்ற இன மக்களும் அயல்நாட்டு பயணத்தால் தங்களது பொருளாதார பலத்தை அதிகரித்துக் கொள்ள வெளிநாடு செல்ல விருபினார்கள். இந்தியா சுகந்திரம் அடைவதற்கு முன் தமிழகத்தில் வடபகுதி மக்கள் பர்மா நாட்டில் பெருவாரியான தொழில்களை செய்தனர். அதே போலவே தென்தமிழக மக்களின் பெருவாரியான தொழிலாளிகளும், வியாபாரிகளும் இலங்கை நாட்டை நாடி சென்றனர். 


கொழும்பு நகரில் தமிழக வியாபாரிகளின் செல்வாக்கு இன்றும் அதிகமாக இருப்பதற்கு இதுவே மூலகாரணமாகும். ஆனால் இன்றைய தமிழ் மக்கள் பர்மாவையும் இலங்கையையும் விரும்புவதை விட்டுவிட்டனர். சில காலங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளின் மீது இருந்த ஆர்வம் கூட குறைந்துவிட்டது.

 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் மற்றும் வேலை செய்யவே பல தமிழர்கள் விரும்புகிறார்கள். நன்றாக படித்து ஒரளவு விவரம் தெரிந்தவர்களாக இருக்கும் சில தமிழர்கள் அமெரிக்கா சென்று  5,00,000 சம்பளம் வாங்குவதை விட ஆவடியில் இருந்து 50,000 சம்பளம் வாங்குவது மேல் என்கிறார்கள்.

அவர்கள் அப்படி நினைப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை ஐரோப்பிய நாடுகளில் தங்குவதற்கு இடம் கிடைப்பது மிக பெரிய சிரமம் அப்படியே கிடைத்தாலும் வாடகை மிக அதிகம். பல இடங்களில் இந்திய உணவு விடுதிகள் இருந்தாலும் உணவு பண்டங்களின் விலை சராசரியான மனிதன் சமாளிக்க கூடிய விதத்தில் கிடையாது.

 பலவேலைகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் என்றாலும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு நம்மவர்களின் பணி திருப்தியளிக்கவில்லை என்றால் உடனடியாக வேலையை விட்டு அணுப்பிவிடுவார்கள். அதாவது வேலைக்கு முழு பாதுகாப்பு கிடையாது. இவைகளை எல்லாம் தாண்டி மணைவி மக்களை அழைத்து செல்லவேண்டும் என்றால் எதிர்கொள்ளும் சிரமங்களை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. குடிக்கிற தண்ணிலிருந்து பின்பற்றுகின்ற கலாச்சாரம் வரையிலும் பிரச்சனை பிரச்சனை பிரச்சனையை தவிர ஒன்றுமே இல்லை.

இந்த மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் அல்லது எதிர்கொண்டு மனம் சலித்து அயல்நாடே வேண்டாம் சாமி சொந்த நாடே சொர்க்கம் என்று சொன்னாலும் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் நபர்கள் அங்கே அனுபவிக்கும் கஷ்டங்களை கதைகதையாய் விவரித்தாலும் அயல்நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற மோகம் இன்னும் பலரை விட்டபாடு இல்லை.

 அதற்கு உண்மையான காரணம் என்ன? ஊர் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசையா? பல நாட்டு அறிவை தமதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆவலா? இரண்டும் நிச்சயம் இல்லை. திரைகடல் ஒடியும் திரவியம் தேட வேண்டும் என்ற எண்ணம் தான் பலரை உந்தி தள்ளுகிறது.


   வெளிநாடு செல்ல ஆசைபடுவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கிறது. நமது ஜனங்களுக்கு சாதாரண குண்டு ஊசி என்றாலும் கூட அது வெளிநாட்டு பொருள் என்றால் அதன்மீது தனி கவர்ச்சி தான். எனது தகப்பனார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கொழும்பு கடைவீதியில் விற்ற அமெரிக்க தயாரிப்பான ஒரு சிறு விளையாட்டு பொருட்களை வாங்கி வந்து இருக்கிறார். அதை இன்று கூட எனது தாயார் மிக நேர்த்தியாக பாதுகாத்து வருகிறார்.

 அதற்கு என் அப்பா வாங்கி வந்தார் என்பது மட்டுமல்ல, அது மட்டும் தான் காரணம் என்றால் அவர் வாங்கி வந்த மற்ற பொருட்களையும் அதே போல் பாதுகாக்க வேண்டுமெல்லவா? ஆனால் அவைகள் போன இடமே தெரியவில்லை. இது மட்டும் இன்று வரை இருப்பதற்கு U.S.A என்ற எழுத்து இருப்பது தான் வயது வித்தியாசமின்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் இப்பழக்கம் சகஜமாக இருக்கிறது.

பொருட்களுக்கும் மட்டும்தான் மோகம் என்றில்லை அயல்நாட்டு படிப்புக்கு கூட அலாதியான மரியாதை இருக்கிறது.  திருநெல்வேலியில் இருக்கும் நண்பர் ஒருவரின் மகளுக்கு டாக்டர் மாப்பிள்ளை வந்தது.  பையன் படித்து தனியாக மருத்துவமனை நிறுவி கை நிறைய சம்பாதிக்கிறான்.  ஆனால் எனது நண்பர் M.S படித்த அந்த மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்காமல் வெறும் M.B.B.S படித்த பையனுக்கு பெண் கொடுத்தார். 


 எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது.  ஏன் M.S படித்த பையனின் குணமோ குடும்பமோ சரியில்லையா? என்று அவரிடம் கேட்டேன்.  அப்படி எல்லாம் ஒன்றுமில்லை இந்த பையன் M.B.B.S  சை ரஷ்யாவில் படித்து இருக்கிறான் என்று பெருமையாக சொன்னார்.  நான் அவரிடம் எதுவும் பேசவில்லை.  ரஷ்யாவின் கல்வி தரம் இந்தியாவின் தரத்தை விட மேம்பட்டது அல்ல என்று எடுத்து சொன்னாலும் அவர் கேட்க போவதில்லை.  நம்மை தான் பைத்தியகாரன் என்பார் .

இவர் மட்டுமல்ல இவரை போல ஏராளமான மனிதர்கள் வெளிநாட்டு படிப்பை சந்திரனனிலிருந்து எடுத்து வந்த கல்லை போல அபுர்வமாகவும், ஆச்சர்யமாகவும் பார்க்கிறார்கள்.  மூலகடையில் விற்கும் எட்டணா முறுக்கு கூட அமெரிக்காவில் இருந்து வந்தது என்று சொன்னால் பத்து நிமிடத்தில் விற்று தீர்ந்து விடும்.  அந்தளவிற்கு அயல்நாட்டு மோகம் நமது ஜனங்களை பிடித்து ஆட்டுகிறது.

அம்மனமாய் அலையும் ஊரில் வேட்டி கட்டியவன் மடையன் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.  அதே போலத்தான் வெளிநாடு சென்று மான் பிடிப்பதை விட உள் நாட்டில் முயல் பிடிப்பது மேல் என்று மக்களிடம் சொன்னால் மனநோய் இருப்பதாக அவர்கள் பேசிக் கொண்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை

 என்னிடம் ஜோதிடம் சம்பந்தமாக கேள்வி கேட்க்கும் பல பெற்றொர்கள் தங்கள் பிள்ளைக்கு திருமணமாகுமா? குழந்தை பிறக்குமா? சொத்து சுகம் வாங்க முடியுமா? என்று கேட்பது கூடவே பையன் வெளிநாட்டுக்கு போவானா? என்பதை கேட்பதற்கு மறப்பதேயில்லை.

 ஆமாம் கண்டிப்பாக செல்வான் என்று நாம் சொல்லி விட்டால் அவர்கள் முகத்தில் தெரியும் பாருங்கள் ஒரு ஆனந்தம் பிரகாசம் அதன் அழகே அழகு, இந்த இடத்தில் நான் சொல்லப் போகும் விஷயம் தேவையற்றது என்றாலும் சொன்னால் நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன்.  பையன் வெளிநாட்டுக்கு போவானா என்று கேட்க்கும் எவரும் என் மகளுக்கு வெளிநாட்டு யோகம் உண்டா என்றோ மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்வானா என்றோ கேட்பதே இல்லை.  அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாவிட்டாலும் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

நிறைய இளைஞர்கள் வெளிநாடு செல்ல விரும்புவது பணம் சம்பாதிக்கத்தான் என்றாலும் அவர்களது விருப்பம் தவறு என்று நம்மால் சொல்ல முடியாது.  ராமாவரம் ஏரிக்குள் பழைய இரும்பு கடை வைத்திருப்பவன் கூட பெண்  தேட ஆரம்பித்து விட்டால் ஐம்பது சவரன் போட முடியுமா? என்று கேட்கிறான். இன்று அத்தியாவசிய பொருளாகிவிட்ட சாதாரண கிரைண்டர், மிக்ஸி கூட ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்தால் தான் வாங்க முடிகிறது.  ஒட்டு குடித்தனம் நடத்தும் ஒரு சிறிய வீட்டிற்கு வாடகை இரண்டாயிரம் ரூபாயிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.  மளிகை பொருள், காய்கறி இவற்றின் விலை தினசரி ஏறுகிறது.


  இந்த நிலையில் சராசரி மனிதனுக்கு பணம் என்பது தவிர்க்கவே முடியாத தேவையாகிவிட்டது.  எப்படியாவது எந்த வகையிலாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  திருட வேண்டும், ஏமாற்ற வேண்டும், சட்டத்தை மீற வேண்டும் என்று நினைக்காமல் வெளி நாடு சென்றாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

அயல் நாடுகளில் சென்ற சம்பாதிப்பதில் ஒரு நல்ல அம்சமும் இருக்கிறது.  வெளிநாடு சென்று வந்த ஒருவர் ஐந்து வருடமோ, பத்து வருடமோ சிரமமாக இருந்தாலும் அதை தாங்கி கொண்டு நாலு காசு சம்பாதித்து தாய் நாட்டிற்கு வந்தால் எதாவது ஒரு சுய தொழிலை செய்யலாம் அல்லது இருப்பதை வைத்து செட்டும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி போய் விடலாம்.  என்றார். 

அவர் கூற்று சரியானதது தான்.  சோம்பேறித்தனமாக சேமிப்பை செலவழித்துக் கொண்டு இருக்காமல் சுயத் தொழில் தொடங்கி நடத்தலாம் என்பது வரவேற்க தக்க விஷயம் தான்.  ஆனால் இது எத்தனை பேரால் முடிகிறது.  சம்பாதித்த பணமெல்லாம் பிள்ளைகளின் திருமணத்திற்கும் படிப்பிற்கும் செலவழித்துவிட்டு வெறுங்கையாய் இருப்பவர்கள் எத்தனையோ பேரை நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனாலும் ஒரு ஆறுதல் அவைகளையாவது அவர்களால் செய்ய முடிகிறதே என்பது தான்.


என்னிடம் ஒரு நண்பர் கேட்டார்.  அந்த காலத்தில் நகரத்தார்கள் மிக சுலபமாக அயல்நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து வந்து இருக்கிறார்கள்.  அத்தகைய வியாபாரத்தில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்தவர்கள் மிக குறைவு.  சுலபமாக வெளிநாடு செல்லவும் அங்கு சம்பாதிக்கவும் தங்களது மூளை உழைப்பை தவிர வேறு எதையாவது அவர்கள் பயன்படுத்தினார்களா?

 நண்பரின் இந்த கேள்விக்கு தெளிவான பதில் சொல்ல அப்போது என்னிடம் எந்த விவரங்களும் கிடையாது.  ஆனாலும் அந்தகேள்வி என் மனதிற்குள் ஒரு பகுதியில் விடை தெரிவதற்காக பதுங்கியிருந்தது.  ஒரு சமயம் திருவண்ணாமலையில் இருந்து என்னை காண வந்த ஒரு சாது அந்த கால செட்டிமார்கள் அயல் நாட்டு பிராயாணம் வெற்றிகரமாக அமைய அபூர்வ மூலிகைகளால் ஆன அஞ்சனங்களை பயன்படுத்தினார்கள் என்ற ஒரு தகவலை தந்தார்.  ஆனால் அவருக்கு அதைப்பற்றி மேலதிக விவரங்கள் தெரியவில்லை.  அப்படியொரு குறிப்புகள் நிச்சயம் பழங்கால சுவடிகளில் இருக்குமென்று சில காலம் தேடிப்பார்த்தேன்.  எந்த விவரங்களும் கிடைக்கவில்லை.

சில அபூர்வமான மூலிகைகளை ஒரு வனவாசி பெரியவர் என்னிடம் கொண்டு தருவார்.  காட்டில் சிரமப்பட்டு தேடியெடுக்க வேண்டிய பொருள் என்பதினால் அவைகளுக்கு அவர் அதிகப்படியான பணத்தை எதிர்ப்பார்ப்பார்.  ஆனால் அவரிடம் இருந்து பெறுகிற பொருள் மிக சுத்தமானதாக இருக்கும்.  அவர் ஒரு முறை பேச்சுவாக்கில் என்னிடம் கடல் தாண்டும் மூலிகை இருக்கிறது வேண்டுமா?  என்று கேட்டார். 

 
  நான் விவரம் தெரியாமல் என்னவென்று கேட்டேன்.  அதற்கு அவர் இது தெரியாதா சாமி?  அந்த காலத்தில் செட்டியாருங்க இந்த மூலிகையால் செய்த அஞ்சனத்தை தங்களோடு எடுத்து போவார்கள்.  இது கையில் இருந்தால் அயல் நாட்டு தொழிலில் சிக்கல் வராது.  அபாயமும் கிட்டே நெருங்காது.  கையில் காசும் சேரும் அயல் நாட்டில் செய்யும் தொழில்களில் ஏற்ப்படும் சிக்கல்களும் தீரும் என்று சொன்னதோடு இல்லாமல் இன்று வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று விரும்பி செல்ல முடியாமல் இருப்பவர்களும் இதை பயன்படுத்தலாம் என்ற தகவலையும் தந்தார்.

எனக்கு தெரியாத விஷயத்தை தெரியாது என்று ஒத்து கொள்வதில் நான் எப்போதுமே தயங்கியது கிடையாது.  அதனால் அவரிடம்  அந்த மூலிகையை வெறுமனே வாங்கி வைத்து நான் என்ன செய்ய போகிறேன், அதை வைத்து எனக்கு அஞ்சனம் செய்ய வழி தெரியாதே என்று கேட்டேன்.  அவர் எனக்கும் தெரியாது.  ஆனால் ஒரு பெரியவர் இருக்கிறார்.  அவருக்கு பணம்கொடுத்தால் நிச்சயம் சொல்லித் தருவார்.  வேண்டுமானால் அவரை கூட்டி வரட்டுமா? என்றார் அந்த பெரியவரை வரச்சொல்லி அந்த அஞ்சனம் செய்யும் முறையை கற்றுக் கொண்டேன்.

அதை இந்த பதிவின் மூலம் நாலு பேருக்கு தெரிய செய்தால் பலருக்கு உதவியாக இருக்குமே என்பதற்காக பகீரங்கமாக எழுத விரும்புகிறேன்.  சாதாரணமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வலம்புரி காய், இடம்புரிகாய், தான்றிகாய், கடுக்காய், ஆகாய தாமரை, வெட்டி வேர், சாரனை வேர், அகில் கட்டை, சந்தன கட்டை, தேவதாறு கட்டை போன்றவைகளை வாங்கி கற்பூரத்தில் வைத்து எரித்து சாம்பலாக்க வேண்டும்.

   அந்த சாம்பலை பயிறுகள் திரிக்கும் கல் எந்திரத்தில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.  பின்னர் பட்டுப் போல் சலித்து சுத்தமான நல்லெண்ணையில் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி காலை வெய்யிலில் உலர்த்த வேண்டும்.  அப்படி உலர்த்திய பிறகு அந்த உருண்டைகளை மீண்டும் கற்பூரத்தில் எரித்து சாம்பலாக்கி வெண்கல கிண்ணத்தில் சேமித்து  கொள்ள வேண்டும்.

அந்த வெண்கல கிண்ணத்தை பூஜையறையில் விநாயகருக்கு முன்பு வைத்து ஓம் கங் கணபதியே நமஹ என்ற மூல மந்திரத்தை காலை வேளையில் 1008 முறை ஜெபிக்க வேண்டும்.  இப்படி தொடர்ச்சியாக 45 நாள் ஜெபித்து மந்திரத்தை உரு ஏற்ற வேண்டும்.  இந்த மந்திர உருவேற்று நடக்கும் நாளில் கண்டிப்பாக மாமிச போஜனம் கூடாது.  பிரம்மசரியத்தை வலுவாக கடைபிடிக்க வேண்டும்.  இந்த விஷயத்தில் நீக்கு போக்காக நடந்து கொண்டால் நிச்சயம் பலன் இருக்காது.  மேலும் ஜனன மரண தீட்டுக்களை தவிர்க்க வேண்டும்.  நாப்பத்தைந்து நாள் உருவேற்றிய பிறகு வெண்கல கிண்ணத்தில் இருக்கும் மூலிகை சாம்பலை சுத்தமான பசு நெய், சந்தன எண்ணெய் முதலியவற்றில் கலந்து மை போல அரைக்க வேண்டும்.  அப்படி அரைக்கும் போது ஓம் யங் சங் கீலிம் கும்பட் ஸ்வாஹ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே அரைக்க வேண்டும்.

அப்படி அரைத்த முடித்த பிறகு சாம்பலை வழித்து எடுத்து வெண்கல கிண்ணத்தில் வைத்துக் கொண்டு பூத வேதாள உப்பு, கன எருமை விருச்ச பால், மதிமயக்கிவேர் போன்றவற்றை கலந்து ஒரு வெண்கல தட்டு எடுத்து கிண்ணத்தை காற்று புகாமல் மூடி வாழை மரத்து அடியில் புதைத்து விட வேண்டும். 45 நாள் அது புதைக்கப்பட வேண்டும். அந்த நாளில் வாழை மரத்திற்கு கொடுக்கும் தண்ணீரில் சற்று மஞ்சள் கலக்க வேண்டும்.


 45 நாட்களுக்கு பிறகு அதை வெளியில் எடுத்து குரு மூலமாக பெற்ற மூல மந்திரத்தை 25நாட்கள் ஒருமுகப்பட்ட மனத்துடன் உருயேற்றி மீண்டும் பசும்நெய் விட்டு குப்பியில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும். இது நம் கையில் இருந்தாலே தொழில் ரீதியான அயல்நாட்டு பயணம் நம்மை தேடி வரும். தடங்கல் இருந்தால் தானாக விலகும் இது மட்டும் அல்ல அயல்நாடு செல்லாமல் உள்ளுரில் தொழில் நடத்துபவர்கள் கூட இந்த அஞ்சனத்தை பயன் படுத்தி நிறைய செல்வ வளத்தை பெறலாம் 

இந்த விஷயத்தை நம்புவது சற்று கடினமாகத்தான் இருக்கும். இப்படியெல்லாம் கூட நடக்குமா? இது சாத்தியமா? என்று தோன்றும். இந்த சந்தேகங்கள் ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. ஆனால் இதை சில பேருக்கு செய்து கொடுத்த பிறகு அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்கள் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நமது முன்னோர்கள் இப்படி பல விஷயங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவைகளை உண்மையன்று நிருபிபதற்கு அனுபவங்களை தவிர வேறு ஆதாரங்கள் இல்லை.