Search This Blog

Tuesday, May 31, 2011

Blessed People

வாழ்க வள்ளுவம்: வளர்க தமிழ் !!! பொருட்பால்:அமைச்சியல்!!! குறிப்பறிதல்:அதிகாரம்71/133

வாழ்க வள்ளுவம்: வளர்க தமிழ் !!! பொருட்பால்:அமைச்சியல்!!! குறிப்பறிதல்:அதிகாரம்71/133

by Keyem Dharmalingam 

வாழ்க வள்ளுவம்: வளர்க தமிழ் !!!
பொருட்பால்:அமைச்சியல்!!!
குறிப்பறிதல்:அதிகாரம் 71/133
701.
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who knows the sign, and reads unuttered thought, the gem is he,
Of earth round traversed by the changeless sea.
Explanation :
The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.
************************************************
702.
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Undoubting, who the minds of men can scan,
As deity regard that gifted man.
Explanation :
He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).
*************************************************
703.
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who by the sign the signs interprets plain,
Give any member up his aid to gain.
Explanation :
The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.
***********************************************
704.
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who reads what's shown by signs, though words unspoken be,
In form may seem as other men, in function nobler far is he.
Explanation :
Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally).
**************************************************
705.
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
By sign who knows not sings to comprehend, what gain,
'Mid all his members, from his eyes does he obtain?
Explanation :
Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?.
***************************************************
706.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
As forms around in crystal mirrored clear we find,
The face will show what's throbbing in the mind.
Explanation :
As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.
***************************************************
707.
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Than speaking countenance hath aught more prescient skill?
Rejoice or burn with rage, 'tis the first herald still!
Explanation :
Is there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.
*************************************************
708.
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
To see the face is quite enough, in presence brought,
When men can look within and know the lurking thought.
Explanation :
If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face.
****************************************************
709.
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
The eye speaks out the hate or friendly soul of man;
To those who know the eye's swift varying moods to scan.
Explanation :
If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.
****************************************************
710.
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
The men of keen discerning soul no other test apply
(When you their secret ask) than man's revealing eye.
Explanation :
The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else.
****************************************************
குறட்பா இணைப்புக்களை சேமித்துக் கொள்ளுங்கள் நண்பரே!!! எப்போதுவேண்டுமானாலும் எந்த குறள் வேண்டுமானாலும் உங்கள் குழந்தைகளுடனோநண்பர்களுடனோ இனிய இசையில்விளக்கத்துடன் தமிழில் கேட்டு மகிழ உதவியாக இருக்கும். ஆங்கிலத்திலும் போப்,அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேறு மொழிகளில் பதிவுகள் கிடைத்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் உண்டு. விருப்பம் உள்ள அன்பர்கள் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். நன்றி.......அன்புடன் கே எம் தர்மா....

இந்துமத வரலாற்று தொடர் பாகம் - 6 !!! கடவுள்உருவாக்கிய மதம் !!! உலகின்முதல்மதம்இதுதானா...? இந்துமதம்அக்கா,வேதம் தம்பி !

இந்துமத வரலாற்று தொடர் பாகம் - 6 !!! கடவுள்உருவாக்கிய மதம் !!! உலகின்முதல்மதம்இதுதானா...? இந்துமதம்அக்கா,வேதம் தம்பி !

குருஜியின் அருளாசியுடன்

இந்துமத வரலாற்று தொடர் பாகம் - 6 !!!
கடவுள்உருவாக்கிய மதம் !!!
உலகின்முதல்மதம்இதுதானா...?
இந்துமதம் அக்கா, வேதம் தம்பி !

கடவுளுக்கு உருவம் கொடுத்து வழிபடுவது என்பதே மனதை ஒரு நிலை படுத்தும் யோக மார்க்கத்திற்கு ஒரு எளிய வழியாகும்.  இந்த உருவ வழிபாட்டு முறையை வேதங்கள் சிறப்பித்து கூறவில்லை.  ஆனால் வேதகாலத்திற்கு முற்பட்ட இந்திய சமூகம் உருவ வழிபாட்டை குறிப்பாக லிங்க வழிபாடு சிவ வழிபாடு ஆகியவைகளை ஆழமாக கொண்டிருந்தனர். இந்த ஆழமான உருவ வழிபாடு வேதங்களில் அவ்வளவாக வற்புறுத்த படாததை பார்க்கின்ற போது அது மிகவும் காலம் தாழ்ந்து வேதங்களில் சேர்க்கபட்டிருப்பது புலனாகும். இதனாலும் உருவ வழிபாடுடைய இந்து மதம் வேதகாலத்திற்கு முற்பட்டது என்பது உறுதியாகும்.

பராக்கிரம் பொறுந்திய செயற்கய செயல்களை புரிந்த மனிதர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தி வழிபடும் வழக்கம் வேதகாலத்தில் இல்லை.  ஆனால் சிந்து வெளியில் கிடைகின்ற சில முத்திரை சித்திரங்களில் மனிதனை தெய்வமாக வழிபடும் தன்மை இருந்திருப்பதாக அறிய முடிகிறது.  இந்த தன்மையே பிற்காலத்தில் மக்களைகாப்பாற்ற கடவுள் மனிதனாக இறங்கி வரும் அவதாரக் கொள்கையாக வேதங்களில் பேசப்படுகிறது

இதற்கு உதாரணமாக அங்கிரஸ் என்ற மகரிஷியின் வாழ்க்கை விபரம் வேதத்தில் கூறப்பட்டதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.  பகவான் விஸ்ணு அவதாரங்கள் பல எடுத்திருந்தாலும் அந்த அவதாரங்கள் எல்லாமே வேதங்களில் விவரிக்கப் படவில்லை.  அண்ட சராசரங்கள் அனைத்தையும் மூன்று அடிகளால் அளந்தவாமன அவதாரத்தை பற்றிய சிறு குறிப்பும் வராக அவதாரத்தை பற்றிய சிறுகுறிப்புகளுமே வேதத்தில் காணப்படுகிறது.  ஆகவே இந்து மதத்திலுள்ள அவதாரக் கொள்கை என்பது வேதகாலத்திற்கு முற்பட்டதாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்களுக்கு தனித்தன்மையும் தனி உருவமும் இல்லை.  அதாவது தேவதைகளை அருவமாக வழிபடுவதே  வேத மரபாகும்.  அதனால் வேதக் கடவுளான இந்திரன்வருணன்வாயுஅக்னி இவைகளுக்கு தனிப்பட்ட வகையில் எந்த உருவமும் ஆதியில் கொடுக்கப்படவில்லை.  இன்று சிலை வடிவங்களால் காட்சி அளிக்கும் அந்த தெய்வ உருவங்கள் மிக சமீப காலத்திலேயே உருவாக்கப் பட்டது ஆகும். ஆனால் சிவனுக்கும் அம்பிகைக்கும் கொடுக்கப்பட்டுள்ள உருவங்கள்வேதத்திற்கு மிகவும் முற்பட்ட உருவங்கள் ஆகும்.  அது மட்டுமல்ல வேதங்கள் ஆலைய வழிபாட்டை வலியுறுத்தவே இல்லை

தனிதனி குழுக்களாகவோ அல்லது சமுதாய கூட்டங்களாகவோ மனிதர்கள் ஒருங்கிணைந்து வேள்விச் சடங்கை செய்யச் சொல்லி தான் வேதங்கள் வற்புறுத்துகின்றன.  ஆனால் பூர்வ கால இந்திய மக்கள் உருவ வழிபாட்டை முதன்மையாக கொண்டவர்களாகவும் வழிபாட்டுக்கு என்று தனி இடத்தை  தேர்ந்தெடுத்து செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஆதிகால மக்கள் ஆலய வழிபாட்டை மேற் கொண்டவர்களாக இருந்தாலும் கூட பின்னர் வந்த வேதகால கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர்கள் ஆலய வழிபாட்டை கைவிட்டு விட்டனர் என்றே தோன்றுகிறது.  இதனால் தான் ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் மற்றுமுள்ள  பழைய புராணங்களிலும் ஆலயங்களை மன்னர்கள் புதிதாக உருவாக்கியதாகவோ மக்கள் அதில் சென்று வழிபாடு நடத்தியதாகவோ எந்த குறிப்பும் இடம் பெறவில்லை. இதை விட முக்கியமான இன்னொரு ஆதாரம் உள்ளது. 

அது சிந்து நதி பள்ளத்தாக்கு நாகரீகத்தில் மிகத் தெளிவாகக் காணும் வேதத் தொடர்பில்லாத தன்மையை நமக்கு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் எடுத்து காட்டுகிறது.  அதாவது இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையாகும். இந்தியாவின் பூர்வ குடிகள் தெற்கே வாழ்ந்த போதும் சரி வடக்கே நகர்ந்தபோதும் சரி இறந்தவர்களை தாழிகளில் வைத்து புதைக்கும் பழக்கத்தைமேற்கொண்டிருந்தனர்.  எப்பொழுதுமே அவர்கள் இறந்த உடல்களை எரித்து விட வில்லை.  புதைத்தே வைத்தனர்.  ஏன் அப்படி அவர்கள் செய்தார்கள் என்பதில் ஒரு உண்மை தெளிவாக ஒளிந்து கிடக்கிறது.

ஆதிகால மக்கள் உடலைவிட்டு உயிர் பிரிந்ததும்  உயிரின் வேலை முடிந்துவிடுவதாக கருதவில்லை.  உலகை விட்டு சென்ற உயிர் மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் என்று அவர்கள் நம்பினார்கள்.  அப்படி வருகின்ற போது உயிர்கள் வாழ்வதற்கு உடல்கள் தேவை என்பதினால் அந்த உடலை எரிக்காமல் புதைத்து வைப்பதே சிறந்த வழி என்று கருதினார்கள்.  இன்று கூட ஆன்மீக உயர் நிலையை அடைந்த ஞானிகளின் உடலை எரிக்காமல் புதைப்பதும் அந்த நம்பிக்கையினால் தான்

வேதங்களை நெறியாகக் கொண்ட மக்கள் உடல்களை புதைப்பது இல்லை எரித்து விடுவார்கள்.  ஏன் என்றால் வேதங்கள் உயிர்களின் மறு வருகையை பற்றி எதுவும் கூறவில்லை. வேதங்கள் மறுபிறப்பை பற்றி எதுவும் சொல்லவில்லைஎன்றாலும் இந்து மதத்தின் ஆதாரக் கொள்கையாக இருப்பது மறுபிறப்புகொள்கையாகும்.  வேத காலத்திற்கு முற்பட்டகாலத்திலிருந்தே மறு பிறப்பு பற்றிய சிந்தனைகள் இந்து மக்களிடையே ஆழமாக வேறூன்றி இருப்பதனால் இந்து மதம் வேதக் கொள்கைகளை தனக்கு ஆதாரமாக கொண்டிருந்தாலும் கூட வேதம் சாராத கொள்கைகளையும் தனக்குள் அடக்கி இன்று வரை நிலைத்து வருகிறது. 

இங்கு நாம் வேதத்தில் இல்லாத கருத்துக்களும் நடை முறைகளும் இந்துமதத்தில் இருக்கிறது என்று சொல்வது வேதம் வேறு இந்து மதம் வேறு என்றுசொல்வதற்காகவோ வேதங்களை குறைத்து மதிப்பிடுவதற்காகவோ அல்ல. இந்து மதம் என்பது வேதத்தை விட தொன்மையானது மனித சமூகத்தன் முதல் மதமாக இருப்பது என்பதை நிலை நிறுத்தி காட்டுவதற்காகத் தான். 

சரித்திர ஆசியர்கள் குறிப்பிடுவது போல் வேதகால மக்கள் வெளியிலிருந்து உள்ளுக்குள் வந்தவர்களாக இருந்தாலும் திருமண பந்தங்கள் மூலமாக உள்ளூர் மக்களோடு இரண்டற கலந்து விட்டதனால் எப்படி அவர்களும் இந்தியாவின் பூர்வ குடிகளாக இருக்கிறார்களோ அதே போன்றே பூர்வ குடிகளின் கருத்துக்கள் வேதங்களில் கலந்து வேதங்களை  இந்து மதத்தின் ஆதாரங்களாக ஆக்கி கொண்டது.  பூர்வ சிந்தனைகளும் வேத சிந்தனைகளும் கலந்து காலங்கள் பல கடந்து விட்டதனால் வேத காலத்திலிருந்து தான் இந்து மதம் தோன்றியிருக்கலாம் என்று நாம் தவறுதலாக கருதிவருகிறோம் உண்மை நிலை முன்பே இருந்த மதத்தில் வேதங்கள் கலந்து அதை செழுமை உடையதாக்கியது என்பதாகும்.

வாழ்க வள்ளுவம்: வளர்க தமிழ் !!! பொருட்பால்:அமைச்சியல்!!! அவையஞ்சாமை:அதிகாரம் 73/133

வாழ்க வள்ளுவம்: வளர்க தமிழ் !!!

பொருட்பால்:அமைச்சியல்!!!
 அவையஞ்சாமை  :அதிகாரம் 73/133

721.
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Men, pure in heart, who know of words the varied force,
The mighty council's moods discern, nor fail in their discourse.
Explanation :
The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.
*********************************************
722.
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177295"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who what they've learned, in penetrating words heve learned to say,
Before the learn'd among the learn'd most learn'd are they.
Explanation :
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.
**********************************************
723.
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177296"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Many encountering death in face of foe will hold their ground;
Who speak undaunted in the council hall are rarely found.
Explanation :
Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).
**************************************************
724.
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177297"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
What you have learned, in penetrating words speak out before
The learn'd; but learn what men more learn'd can teach you more.
Explanation :
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).
****************************************************
725.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177298"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply.
Explanation :
In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).
*****************************************************
726.
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177299"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
To those who lack the hero's eye what can the sword avail?
Or science what, to those before the council keen who quail?
Explanation :
What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?
***************************************************
727.
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177300"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
As shining sword before the foe which 'sexless being' bears,
Is science learned by him the council's face who fears.
Explanation :
The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.
*****************************************************
728.
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177301"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Though many things they've learned, yet useless are they all,
To man who cannot well and strongly speak in council hall.
Explanation :
Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.
**********************************************
729.
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177302"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who, though they've learned, before the council of the good men quake,
Than men unlearn'd a lower place must take.
Explanation :
They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.
***************************************************
730.
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177303"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who what they've learned, in penetrating words know not to say,
The council fearing, though they live, as dead are they.
Explanation :
Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.
**********************************************************

Graphics