Search This Blog

Friday, December 25, 2015

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்- பவா செல்லதுரை

பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்திலேயே அற்புதம் பாட்டிக்கு முழிப்பு தட்டியது. பக்கத்தில் தன் கதகதப்பிலும், வெற்றிலைச் சாறின் கார நெடியிலும் பழக்கப்பட்டு தூக்கத்திலிருந்தவனைக் கிள்ளி எழுப்பினாள். பாட்டியின் நகங்கள் அவனைத் தவிர எல்லோருக்கும் பயமூட்டக்கூடியவை. அவள், நகநுனிகளில் உலகின் பல ஜால வித்தைகளை வைத்திருந்தாள். மூன்றாவது கிள்ளலில் துடித்தெழுந்தான். இருளின் அடர்த்தியைக் குறைக்க வெளியில் ஒரு முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கையில், பாட்டி bava_1தெருவில் நின்று வடக்கால் திரும்பி மலை பார்த்தாள். பனியும், தூறலும், பத்தாதென்று மேகமும் மறைந்த போதும், ஒரு சிம்னி விளக்கொளி மாதிரி தீபம் தெரிந்தது. கண்களில் தெரித்து விழுந்த ஈரத்துளிகளை வழித்துப் போட்ட கையோடு மலை நோக்கிக் கும்பிட்டாள். மறுபடி வீட்டுக்குள் நுழைந்து தயாராக மடிக்கப்பட்டிருந்த இரண்டு கொங்காணிகளை எடுத்து ஒன்றை அவனுக்குப் போட்டுவிட்டாள். ஒரு பெரிய கூடையை இடுப்பில் இடுக்கி சாக்கு போட்டு மூடினாள். அதில் ஒரு சிறு கூடை, ஒரு பித்தளை சொம்பு, அவள் வெத்திலை இடிக்கும் உரல், உலக்கை இருந்தது.
அவள் நடைக்கு அவன் ஓட வேண்டியிருந்தது. தார்ரோடு இரவெல்லாம் நனைந்த ஈரத்திலிருந்தது. செருப்பில்லாத கால்கள் ஈரத்தைத் தலை உச்சிவரை கொண்டுபோய்க் குளிரவைத்தது. அவள் உடல் நடுக்கத்திற்கு அவனை இழுத்தணைத்து நடத்தினாள்.
குறுக்கால் பிரிந்த மண்பாதையின் நுழைவிலேயே, தாறுமாறாய் வளர்ந்திருந்த சப்பாத்திக் கள்ளிகளின் நெருக்கம் யாருக்கும் தரும் லேசான பயத்தைத் தந்தவாறிருந்தது. அற்புதம் பாட்டியின் காய்ப்பேறிய கரங்களின் நெருக்கலில் அவன் இன்னும் ஒடுங்கினான். வழியெங்கும் யாரோ அளவெடுத்து நட்டு வைத்த மாதிரி வளர்ந்திருந்த பனைமரங்கள் அவர்களுக்கான பாதைக்கு வழிகாட்டிகளாய் நின்றிருந்தன. கேட்கும் மழை சத்தம், பறவைகளின் விடியற்கால ஆரவாரச் சப்தங்களை முற்றிலுமாக உறிஞ்சி விட்டிருந்தது.
நடை நின்று, நிலத்தில் ஊனியது கால்கள். சனிமூலை ‘மென‘ பிடித்தார்கள். ராத்திரி கவுண்டர் மல்லாட்டை பிடுங்க ஆள் கூப்பிடும்போதே அற்புதம் பாட்டி முடிவெடுத்தாள், மொத ஆளா நெலத்துல நின்னு, சனிமூலை மென புடிக்கணும். 
பிடித்தாள்.
கறுப்பேறி பழுத்திருந்த இலைகளும், இலை உதிர்ந்து மொட்டையாய் நின்றிருந்த காம்புகளும், காய்களின் உள்முற்றலை வெளிச்சொல்லிக் கொண்டிருந்தன. குனிந்து பத்து செடி புடுங்கியவளுக்கு, மெல்ல ஒரு பயம் தன் மீது கவிழ்வதை உணரமுடிந்தது.
அவசரப்பட்டு முன்னாலேயே வந்துட்டுமோ? நாம மட்டும் தனியா நிக்கறதைப் பாத்தா எவனும் என்ன நெனப்பான்? யோசனைகளைச் சுத்தமாய்த் துடைப்பது மாதிரி முப்பது நாப்பது ஆட்கள் தூறலில் நனைந்து கொண்டே நிலமிறங்கினார்கள்.
‘‘கெழக்கத்தி ஆளுங்களா?’’
அந்த நாளின் முதல் வார்த்தை அற்புதம் பாட்டியிடமிருந்து நடுங்காமல் கொள்ளாமல் மழை சத்தத்தை மீறிக் கேட்டது. பதிலையும் அவளே ஊகித்த மாதிரி, அதற்காகவெல்லாம் காத்திருக்காமல், இதுவே அதிகம் என்பது மாதிரி குனிந்தாள். மாரணைத்து குவிந்த செடிகளோடுதான், மீண்டும் நிமிர முடிந்தது. அவள் இருப்பை சுத்தமாக மறந்திருந்தாள்.
துவரஞ்சாலைக்குள் அடர்ந்திருந்த செடிகள், அவளின் ஆவேசமான அலசலில் வேரோடும், சேறோடும் குவிந்தன. முன்பே அறிந்ததுதான் எனினும், பாட்டியின் இந்த வேகம் அவனை நிலை குலைய வைத்தது. மேற்கு மரிச்சில் ஏறி நின்றுதான் திரும்பினாள். கெழக்கத்தி ஆட்கள் முக்கால் மெனை ஏறிவிட்டிருந்தார்கள்.  தூறலின் மீதே நிகழ்ந்த விடியலின் வெளிச்சம் அழகு நிரம்பியதாயிருந்தது.
புடுங்கிப் போட்டுக் குவித்திருந்த மல்லாட்டைச் செடிகள் அவனுக்கு மலைப்பாகவும், அவளுக்குச் சாயங்காலம் வரை தாங்குமா? என்றுமிருந்தது.  முழங்கை பெரிசுக்கு தடித்திருந்த ஒரு துவரஞ்செடிக்கு மேல், ஒரு பழம்புடவையை விரித்தாள். மழை பெய்தால் மழைக்கு, வெய்யிலடித்தால் வெய்யிலுக்கு.
பெரிய்ய கூடையைப் பக்கத்தில் இருத்தி, சிறு கூடையில் காய்களை ஆய்ந்தாள். பாட்டியின் உக்கிரமான முறுக்கலில் செடிகள் காய்களைக் கூடைக்குள் உமிழ்ந்தன. அந்த வேகம் ஒரு இயந்திரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கக் கூடியதாயிருந்தது.
அவன், பேருக்கு ஒன்றிரண்டு காய்களைக் காம்போடு பிய்ப்பதும், கூடைக்குள் போடுவதும், பித்தளைச் சொம்பில் நிரப்புவதும், நிரம்பும் முன் பெரிய கூடைக்குள் கவிழ்ப்பதுமாக, அந்த அதிகாலையை வேடிக்கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான். பாலேறி முற்றி, பெற்ற மழையீரத்தில் முளை விடத்தயங்கிய காய்களாகப் பொறுக்கி, பாட்டி அவனிடமிருந்து பிடுங்கிய பித்தளை சொம்பில் போட்டாள்.
அவள் கைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். செடிகளை முறுக்கி உதிரும் காய்களில், முத்துக்களை அவள் தனியே பிரிப்பதற்கு ஒரு துளியும் தனியே முயற்சிக்காது, அது தன்னால் பிரியும் என்பது போல இயங்கினாள். சொம்பு நிரம்பியதும் ‘‘உரிச்சி துண்ணு’’ என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவன் அந்த ஈரமான காலையில் உற்சாகமேறியிருந்தான். முதல் காயை எடுத்து உரித்தான்.
ரோஸ்நிறப் பருப்பில் இளம் மஞ்சளாய் முளைவிட்டிருந்த இடத்திலிருந்து ஓர் உயிர் துடிப்பதை உணர்ந்தான். இவனின் அதிர்வுக்கு முன்பே ஒரு இளவரசியைப்போல மின்னும் அழகோடு அவள் இவன் முன் உட்கார்ந்திருந்தாள். பிரமிப்பும், ஆச்சர்யமும், லேசான நடுங்குதலும், நிறைய சந்தோஷமும் குழைய, குழைய அடுத்த காயை உரித்தான், இதோ இன்னொரு இளவரசி.
இரண்டு இளவரசிகளும், இவனோடு காய் உரிப்பதில் சேர்ந்து கொண்டார்கள். உரிக்க உரிக்க ரோஸ் நிறப் பெண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் பேரழகோடு ஒளிர்ந்து இவன் கண்களைக் கூச வைத்தார்கள். இந்த விந்தைகளில் சம்மந்தமில்லாதவளாக அற்புதம் பாட்டி, சிறு கூடையை நிரப்புவதும், அதைப் பெருங்கூடையில் கொட்டுவதுமாய் இயங்கிக்கொண்டிருந்தாள்.
அவள் இவனையோ, இவள் எதிரிலும் பக்கத்திலுமாக சூழ்ந்திருக்கும் பெண்களையோ கவனிக்கும் பிரக்ஞையற்று இருந்தாள். துவரஞ் சாலைகளுக்கூடாக நீண்ட ரயில்பெட்டி மாதிரி நின்றார்கள் அச்சிறுமிகள். இவன் முதல் ஆளாக நின்றான். இவன் பின்பக்கச் சட்டையைக் கொத்தாகக் கசக்கிப் பிடித்து நின்றிருந்த பெண் ராஜாம்பாள் மாதிரியே இருந்தாள். அவள் மீதிருந்து கிளம்பிய லேசான வாசனை நிரம்பிய நாற்றம் ராஜாம்பாளிடமிருந்து ஏற்கனவே சுவாசித்தது. அவர்களின் ரயில் வண்டி சத்தமின்றி புறப்பட்டது. இந்த விந்தைகளைப் பார்க்காமலேயே அற்புதம் பாட்டியைப் போலவே கிழக்கத்தி ஆட்களும் காய் ஆய்வதில் மும்முரமாயிருந்தார்கள்.
இவர்கள் ரயில், கருவேடியப்பன் கோவில் வேப்ப மரங்களுக்கிடையே தேங்கி நின்ற இருட்டில் நின்றது. இவன் முற்றிலும் பயம் உதிர்ந்து குதூகலமாயிருந்தான். ராஜாம்பாள் உடனான நாட்களில் அவனிருந்தது போலவே இந்நாள் அவனை மாற்றியது. 
‘‘இருளக் குட்டிக்கூட என்னடா வெளையாட்டு’’ என்று இவனை அறுத்துக் கொண்டு போய், டவுனில் டி.வி. ஆண்டனாவில் கட்டிப் போட்டு, தினம், தினம் வீசும் காற்றில் துடித்துக் கொண்டிருந்த நூல், இன்று அறுந்து விட்டது மாதிரியிருந்தது. 
அச்சிறுமிகள் சிரிப்பதும், பேசுவதுமாயிருந்தார்கள். சிலர் லேசாக பாடக்கூடச் செய்தார்கள். எல்லாருமே, ராஜம்பாளின் முக ஜாடையை ஒத்திருந்தார்கள்.
இவர்கள் ரயில் வண்டி கருவேடியப்பனின் கோவிலில், உடைந்து சிதிலமாகிக் கிடந்த குதிரைகளில் ஏறி... அசைகிறதா? நிற்கிறதா? எனக் கணிக்கமுடியாத ஒரு நதியின் கரையில் நின்றது. நதியின் மேற்பரப்பு முழுக்க கண்ணாடியிட்டு மூடியிருந்தது மாதிரியும், எந்த விநாடியும் இது அவர்களை உள்ளே இழுத்துக்கொள்ள சித்தமாயிருப்பது மாதிரியும் இருந்தது. 
ஓடி வந்த களைப்பில் நதியின் மடியில் இளைப்பாற அவர்கள் எல்லோரும் ஒரே நேரம் முடிவெடுத்தார்கள். பெரும் நாக மரங்கள் நதியின் கரையோரம் அடர்ந்திருந்தன. அது கார்த்திகை மாதமானதால் பழமோ காயோ அற்று, இலைகளால் மட்டும் அடர்ந்திருந்தது. காலை வரை நீடித்திருந்த தூறலின் மிச்சங்கள் ஒன்றிரண்டாய் சொட்டிக் கொண்டிருந்தது.
சப்தமற்று ஒருத்தி, உள்ளங்கால் மட்டும் நதியில் நனைய இறங்கி, தன் பாவாடையை ஏந்தினாள். கெண்டை மீன்கள் துள்ள, துள்ள அவள் ஓடிவந்த உற்சாகம் அங்கிருந்த எல்லோரையும் தொற்றிக் கொள்ள, ஓணான் கொடி பிடுங்கி நாக மரத்தில் ஏறி, ஊஞ்சல் கட்டினார்கள்.
மரம் முழுக்க சிறுமிகள் பூத்திருந்த பேரழகை நாக மரங்களும், களங்கமற்றிருந்த நதியும் மட்டுமே அன்று பார்த்தன. ஒவ்வொருத்தியாய் உட்கார்ந்த ஓணான்கொடி ஊஞ்சல் நதியின் கரையிலிருந்து, நதியின் நடுமுதுகுவரை அநாவசியமாகப் போய் வந்தது. அவர்கள் எல்லோருக்குமே நதியின் அக்கரைக்குப் போகும் ஆவல் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.  அவன் பெரும் உற்சாகத்திலிருந்தான். ஒவ்வொருத்தியாய் ஊஞ்சலில் உட்கார்த்தி வைத்து, தள்ளிவிடும் அவனின் உந்துதல் மேலும் வலுப்பெற்றிருந்தது. அதில் நதியின் அக்கரை நோக்கிய இலக்கிருந்தது.
ஒவ்வொரு சிறுமியின் ஸ்பரிசமும், ராஜாம்பாளின் தொடுதல் களையே நினைவூட்டின. நதியின் அக்கரையில் ஒவ்வொருவரும் நனைந்த உடைகளோடு விழுந்து கொண்டும், இறங்கிக் கொண்டுமிருந்தார்கள்.
மீன் பிடித்து மடியில் தேக்கி வைத்திருந்தவள், ஊஞ்சல் போகும் போது ஒரு கையில் ஓணான் கொடி பிடித்து, இன்னொரு கையில் மீன் நிரம்பிய மடி பிடித்தும் போனது மற்ற சிறுமிகளை ஆரவாரக் கூச்சலிடவைத்தது. எல்லோரையும் போய் சேர்த்து விட்ட ஓணான் கொடி ஊஞ்சல் திரும்பி வராமல் நதியின் இடையில் நின்று கொண்டது. அதுவரை பீறிட்ட அவன் உற்சாகத்தை திடீரென வந்த நதிநீர் அடித்து போனது.
அவன் ஊஞ்சலை தன் பக்கமிழுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோற்றான். நாகமரத்திலிருந்து நதியில் குதித்து நீந்துவது என முடிவெடுத்த கணம், நதியின் ஆழமும், குணமும் அறியாமல் குதிப்பது குறித்த எச்சரிக்கையும், கண்ணாடி போர்த்தி உறங்கும் அதன் பேரமைதி குறித்த பயமும் அவனுக்குள் முளைத்தது. எதிர்ப்பக்கச் சிறுமிகள் ஆரவாரமாய் இவனைத் தங்கள் பக்கம் அழைத்தார்கள்.
இஞ்சின் இன்றி அவர்கள் ரயில் அறுந்து கிடந்தது. அந்த நிமிடத்தில் எது நடப்பினும் பயமற்று நதியில் குதித்தான். இவன் நினைத்த மாதிரி எதுவுமற்று, நதி ஒரு குழந்தையைச் சுமப்பது மாதிரி தன் முதுகில் சுமந்து, இவனுடைய ராஜாம்பாள்களிடம் இவனைச் சேர்ப்பித்தது.
பெரும் கானகத்தின் நுழைவாயில், நதியின் அக்கரை. பருத்திருந்த மரங்களின் திண்மைகள் இதுவரை அவன் பார்த்தறியாதது. அடிக்கடி கேட்ட விநோதமான குரல்களும், கேட்டிராத சப்தங்களும், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருந்த பயத்தை உதிரச்செய்து முற்றிலும் பயமற்ற வெளிக்கு அழைத்து சென்றன. மரங்களுக்கிடையே படுத்திருந்த பாறைகள். நீண்ட கவனிப்புக்குப் பிறகே பாறைகள் என ஊர்ஜிதமாயின. ஒரு மரம் முழுக்க தலைகீழாய்க் காய்த்திருந்த வெளவ்வால்கள் அவர்களைத் தங்கள் மௌனம் நிரம்பிய உலகுக்கு அழைத்தன. அப்படிப் போக மனமற்று, சப்தமும், ஆராவாரமும், பெரும் கூச்சலும், பாடல்களும், பறவைகளின் கீச்சொலியும் நிரம்பிய உலகில் இருப்பதையே அவர்கள் எல்லோருமே விரும்பினார்கள். 
காய்த்து, பழுத்து இருந்த காய்களையும், பழங்களையும் பறித்து எல்லோருமே அவனுக்காக மட்டுமே தந்து கொண்டிருந்தார்கள்.
ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது.
வாழ்வு, அதுவரை தந்திராத சுவையை அவர்களுக்காக, வழங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி, மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள். அவர்கள் உற்சாகமும் விளையாட்டும் எல்லை கடந்திருந்தன.
கானக அமைதி கலைந்து, இவர்களால் குதூகலம் சூழ்ந்திருந்த, அதுவரை யாரும் யாரோடும் அறிந்திராத உலகத்தில் அவர்கள் சுற்றினார்கள். தொடர்ந்து நீண்ட விளையாட்டில், அவர்கள் களைப்புறாதவர்களாயிருந்தார்கள். நிமிடங்கள் கடக்க, கடக்க அவர்கள் புதுசாகிக் கொண்டேயிருந்தார்கள். புதுப்புது விளையாட்டு களில் மூழ்கி, எழுந்து, அடுத்ததற்குப் பயணமானார்கள்.
‘‘கண்ணாமூச்சி ஆடலாமா?’’
உடனே சம்மதித்தான். மரத்தில் முகம் புதைத்து நூறு வரை எண்ண வேண்டும். பரவியிருந்த மரங்களின் இடைவெளிகளில் அவர்கள் மறைத்தார்கள்.
மீன் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடுமென, செத்து, விரைத்திருந்த மீன்களை அவன் காலடியிலேயே கொட்டிவிட்டு ஓடினாள் அவள்.
ஒண்ணு... ரெண்டு... மூணு... 
நூறு... நூறு...
கானகம் முழுக்கத் தேடியும் அவர்கள் யாரும் அகப்படவில்லை எல்லா மரப்பருமன்களும் அவர்களின் மறைவின்றிதான் இருந்தது. அவன் துக்கத்தின் ஆழத்திற்குப் போய்க்கொண்டேயிருந்தான்...
‘‘ராஜாம்பா... ராஜாம்பா... ராஜாம்பா...’’
அவன் குரல் சிதைந்து சுக்குநூறாகி நதியில் வீழ்ந்தது. அவர்களின் ஓணான்கொடி ஊஞ்சல் அறுந்து நதியில் மிதந்து கொண்டிருந்தது. பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்த அவன் அழுகை கொஞ்ச நேரத்திலேயே கேவலாய் மாறியது. கருவேடியப்பன் கோவில் வேப்பமர நிழலில்தான் அது நின்றது.
இருட்டிவிட கொஞ்சமே பொழுதிருந்த வேளை, அற்புதம் பாட்டி ஒவ்வொரு கிணறாய், அவனைத் தேடியலைந்து, களைத்து, அவனைக் கண்டெத்தாள். மல்லாட்டைக்குள்ளிருந்து வந்த ரோஸ் நிற ராஜாம்பாள்கள் குறித்து, எதுவும் அறியாதவளாய் அவனைத் திட்டித் தீர்த்தாள்.
அன்று ‘‘எட்டுக்கு ஒண்ணு’’ என்று அவள் ஆய்ந்த காய்கள் அளக்கப்பட்டது.
இருள் அடர்ந்து போயிருந்த போது, அவர்கள் வீட்டை அடைந்தார்கள். அவனுக்குள் அப்போதும் லேசான விசும்பல்கள் நீண்டிருந்தன. வாசலில் நின்று பாட்டி மலையைப் பார்த்தாள். தீபம் அவளுக்கு மட்டும் மினுக்கிட்டாம்பூச்சிப்போல் மின்னி மேகத்தில் மறைந்தது. அற்புதம் பாட்டி நடுவீட்டுக்குள் நின்று, தன் பின் கொசுவலத்தைத் தளர்த்தினாள். பாலேறி முற்றியிருந்த நெத்துக்களாய் மல்லாட்டைகள் உதிர்ந்தன.
அவன் அவசர அவரசமாய் ஒரு ரோஸ் நிற ராஜாம்பாளின் உயிர்ப்பின் எதிர்ப்பார்ப்போடு ஒரு காயை உரித்தான்.
*****
நன்றி: கீற்று

New ibuprofen patch delivers drug without risks posed by oral dose ::


Ibuprofen is used by many people to relieve pain, lessen swelling and to reduce fever. Though there are many worrying side effects linked to overuse of the drug, a new ibuprofen patch has been developed that can deliver the drug at a consistent dose rate without the side effects linked to the oral form.
The patch was developed by researchers at the University of Warwick in the UK, led by research chemist Prof. David Haddleton.
The Food and Drug Administration (FDA) have recently strengthened the warning labels that accompany nonsteroidal anti-inflammatory drugs (NSAIDs) like ibuprofen.
New labels warn that such drugs increase the risk of heart attack or stroke, and these events happen without warning, potentially causing death. Furthermore, such risks are higher for people who take NSAIDs for a long time.
Ibuprofen can also cause ulcers, bleeding or holes in the stomach or intestine.
With these risks in mind, finding an alternative way to relieve pain without the risks is a worthwhile endeavor. Though there are commercial patches on the market designed to soothe pain, this is the first patch that delivers ibuprofen through the skin.
"Many commercial patches surprisingly don't contain any pain relief agents at all," says Prof. Haddleton, "they simply soothe the body by a warming effect."

Koneswaram


மக்களின் முன்னால் இன்னொரு 'மண்குதிரை'


ப. தெய்வீகன் - தமிழ் மிரர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொண்ட குழுவினர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர்.
இந்த அமைப்பானது ஓர் அரசியல் கட்சி அல்ல என்றும் எந்தக் கட்சிக்கும் மாற்றீடானதோ போட்டியானதோ அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும் அந்த அமைப்பில் கலந்துகொண்டவர்களின் முன்னுக்கு பின் முரணான பேட்டிகளும் அவர்கள் கடந்த காலங்களில் வலியுறுத்திவந்த விடயங்களின் பின்னணிகளும் பேரவையின் எதிர்காலமும் நோக்கமும் எந்தத் திசையை நோக்கியவை என்பதை தெளிவாகவே வெளிக்காட்டி நிற்கின்றன.
இந்த முன்னணியின் உருவாக்கம் எனப்படுவது தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை பல்வேறு வழிகளிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதைத்தான் இந்தப் பத்தி வலியுறுத்தவுள்ளது. அதற்கான தர்க்க பூர்வமான விடயங்களும் இங்கு முன்வைக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பினைப் பொறுத்தவரை, போர் முடிந்த காலம் முதல் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுவருகின்ற அரசியல் முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். ஆனால், கடந்த ஆறு வருடங்களில் அந்த முன்னணி பயணம் செய்யும் பாதை, அதில் முடிவெடுக்கும் தரப்புக்கள் கடைப்பிடித்த அரசியல் செல்நெறி போன்றவை குறித்து பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விமர்சனங்களின் நீட்சியாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிறுத்தி கூட்டமைப்புக்கு எதிரான அதிருப்தியாளர் குழு ஒன்று போர்க்கொடி தூக்கி கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு பகீரத பிரயத்தனம் செய்தது. இதற்காக கூட்டமைப்பின் உள்ளேயும் வெளியேயும் ஆட்களைச் சேகரித்து 'பெரும் புரட்சியை' ஏற்படுத்துவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தமை யாவரும் அறிந்ததே ஆகும். இந்தக் காலப்பகுதியில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் எவ்வளவு சிறுமைத்தனமாக நடந்துகொண்டார் என்பதையும் எவ்வளவுதூரம் நிர்வாக ரீதியாக பலமற்ற மனிதராக தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டார் என்பதையும் எல்லோரும் அறிவர்.
அரசியலில் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் ஒரே கருத்தை கொண்டிருப்பவர்கள் அல்லர். ஒரே கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் என்பதற்காக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மனப்பாடம் செய்து பஜனை செய்துகொண்டிருக்க முடியாது. முரண்பாடுகள் நிச்சயமாக இருக்கும். இருக்கவேண்டும். அவற்றை கட்சி மட்டத்தில் வெளிப்படையாக தர்க்கிப்பதைத்தான்; மேலைநாடுகளில் ஜனநாயக பண்புகள் என்ற வகையறாவுக்குள் அடக்குவர்.
இது விடயத்தில் பரந்த அறிவும் விளக்கமும் உடைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களோ கடந்த நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பமாவதற்கு முன் ஆரம்பித்து, தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கண்ணாமூச்சி அரசியல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். கட்சியின் தலைமைக்கு ஒளிந்திருந்து கல் எறிவதிலும் மாற்று அணியினருடன் மர்ம உறவுகளை பேணுவதிலும் தீவிரமாக காணப்பட்டார். கூட்டமைப்புடன் தனக்கிருந்த முரண்பாடுகளை வெளிப்படையாகப் பேசுவதற்கோ கட்சி மட்டத்தில் பேசி முடிவெடுப்பதற்கான திராணியோ அவருக்கு இருக்கவில்லை. தான் இயங்குவதற்கான துணிவை வளர்த்துக்கொள்வதிலும் பார்க்க தன்னை இயக்குபவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதிலேயே அவர் அயராது தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
அவரை இயக்குபவர்களுக்கும் மக்கள் பிரச்சினைகள் மீதான கரிசனையைவிட கூட்டமைப்பின் தலைமைத்துவம் மீதான காழ்ப்புணர்ச்சியும் தமது பதவிகள் பறிபோன அங்கலாய்ப்பும்தான் அதிகம் இருந்தன.
உதாரணமாக, தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய தூண்களில் ஒன்றாக இன்று முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனை எடுத்துக்கொள்வோம். அவருக்குத் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட்டமைப்பு வழங்கவேண்டும் என்று அவரது கட்சியினர் எத்தனை சுற்றுப் பேச்சு நடத்தினார்கள் என்றும் திருகோணமலை சென்று எப்படியெல்லாம் சம்பந்தர் வீட்டு கதவைத் தட்டினார்கள் என்றும் தேர்தல் முடிந்த கையோடு இடம்பெற்ற களேபரத்தை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அன்று அவர் அந்தப் பதவியைப் பெற்றுக்கொண்டிருந்தால், இன்று இந்தப் பேரவை சிற்றவையாகத்தான் இருந்திருக்கும்.
விக்னேஸ்வரன் குழுவினரை இயக்கும் இன்னொரு தரப்பினரைப் பார்த்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. கஜேந்திரகுமார் தலைமையிலான இந்த அரசியல் கட்சி நடந்துமுடிந்த தேர்தலில் மக்களால் - தெளிவாக - நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
இந்தக் கட்சியை நோக்கியல்ல கூட்டமைப்பின் அரசியல் போக்கு மீது அறச்சீற்றம் கொண்டு புதிய புரட்சிகர முன்னணியாக உருவெடுத்துள்ள இந்த புதிய பேரவையில் தஞ்சம் புகுந்திருக்கும் அனைவரையும் கேட்கவேண்டிய ஒரே கேள்வி யாதெனில், கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இவ்வளவு காலத்தில் இவர்கள் அனைவரும் செய்துகொண்ட அரசியல் செயற்பாடுகள் என்ன?
கூட்டமைப்பின் தலைமை மீதான சேறடிப்பை எவ்வளவுக்கு தீவிரமாக செய்ய முடியுமோ அதைச் செவ்வனே செய்தார்கள். செய்கிறார்கள். அதேவேளை, விக்னேஸ்வரன் தலைமையிலான ஒரு பேரவை உருவாகவேண்டும் என்பதற்காக முரசொலித்துக்கொண்டார்கள். அவ்வளவே.
மக்களுக்காகச் சேவை செய்யவேண்டும். மக்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதற்காக அரசியலில் இணையவேண்டும் என்று அரிதாரம் பூசிக்கொண்ட இந்த மீட்பர்கள், மக்களை அநாதைகளை அந்தரிக்கவிட்டுவிட்டு தங்களுக்குள் போட்டி அரசியல் செய்வதிலும் ஆளுக்காள் கொம்பு சீவிக்கொண்டிருப்பதிலிருந்தும் இவர்களது அரசியல் சீத்துவக்கேடுகள் அம்பலமாகிவிட்டன.
இந்த பின்னணியில்தான், பல நாட்கள் எதிர்பார்த்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் முன்னணி உதயமாகியிருக்கிறது. மக்கள் தரப்பிலிருந்து இது உண்மையிலேயே வரவேற்கப்படவேண்டிய முயற்சியாகும்.
தமிழ்த் தேசியப் பரப்பில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த அரசியல் வீக்கம் தற்போது காயமாகியிருக்கிறது. மக்களைப் பொறுத்தவரை வீக்கத்துக்கு மருத்துவம் செய்வதிலும் காயத்துக்கு மருத்துவம் செய்வது சுலபம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தின்போதுகூட முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் இரண்டு தோணிகளில் கால்வைத்தவாறு தனது அரசியல் நிலைப்பாட்டை அரைகுறையாக அறிவித்திருந்தார். மக்களுடன் இதய சுத்தியுடன் பேசுவதற்கான அரசியல் துணிவு அவருக்கு இருக்கவில்லை. இப்போதும்கூட அவரது தனிப்பட்ட நிலை அதுவாகத்தான் இருக்கிறது. ஊடகங்களுடனோ அல்லது அவரது சொந்தக் கருத்துக்களையோ வெளிப்படையாகப் பேசுவதற்கு தயாராகிறார் இல்லை.
ஆனால், அவர் சேர்ந்திருக்கும் கூட்டத்தினர் முதலமைச்சர் எங்கு நிற்கிறார் என்பதை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு எடுத்துக்கூறியுள்ளனர். இம்முறை மக்களுக்கு தெளிவான புரிதல்நிலை ஏற்பட்டிருக்கும். இந்தப் பேரவையின் உருவாக்கம் சரியானதா பிழையானதா என்பதற்கு அப்பால் இதற்கு அங்கிகாரம் கொடுப்பதா இல்லையா என்பதை அவர்கள் நிச்சயம் தீர்மானிப்பர்.
தற்போது, மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு மக்கள் முன்பாக போய் நிற்பதற்கு தலைப்பட்டுள்ள - கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு மக்கள் ஆதரவை வென்ற - முதலமைச்சர், மக்கள் தீர்வு தொடர்பில் என்ன பேசப்போகிறார் என்பதை மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
தனக்குக் கிடைத்த வட மாகாணசபை முதலமைச்சர் பதவியின் ஊடாக ஒரு மாகாணசபையின் நிர்வாகத்தையே ஒழுங்கமைக்க முடியாத முதலமைச்சர் அவர்கள், தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு நிழல்மந்திரி சபையை எவ்வாறு செயற்படுத்தப்போகிறார் என்பதைக் காண மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் தமது பிரதிநிதிகள் யார் என்று ஜனநாயக முறையில் தெரிவு செய்துவிட்டிருக்க, தற்போது புதிய அமைப்பொன்றின் ஊடாக தம்மால் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிய அரிதாரம் பூசிக்கொண்டு தம்மிடம் அங்கிகாரம் கேட்க விளைந்திருப்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Thursday, December 24, 2015

85 சித்தர் நூல்கள்: இப்போது பதிவிறக்கம் செய்யலாம்.


உறவுகளே கீழே உள்ள நிறைய சித்தர் நூல்கள் மிகவும் அரிதான நூல்கள். ஆகவே தயவு செய்து இந்த நூல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அத்துடன் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்னும் இப்படியான அழியும் நிலையில் உள்ள நிறைய நூல்களை நான் இனி வரும் காலங்களில் பகிர்ந்து கொள்ளுகின்றேன். இப்படியான நூல்களை நான் நிறைய காலமாக சேகரித்து வருகின்றேன். உங்களி டம் உள்ள நூல்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்னிடம் உள்ள நூல்களை PDF இக்கு மாற்றுவதற்கு காலங்கள் எடுக்கின்றன. அதற்காக மன்னிக்கவும். எம் மொழியைக் காப்பது எமது கடமை. உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி.
எமது தமிழ் மொழி எமது உயிர். அதை நாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். இப்படியான நூல்களை ஒருவரே வைத்து இருக்காமல் எல்லோருடைய கைகளிலும் கொண்டு சேர்த்து விடுங்கள். அதில் ஒரு சிறு துளியைத் தான் நான் உங்களுடன் சேர்ந்து செய்கின்றேன்.
எம் இனத்தின் அருமையும் எம் உயிர் மொழியின் அருமையும். ஆதலால் பழைய தமிழ் நூல்களை அழியாமல் எல்லோரும் காப்பாற்றுவோம்.
இந்த நூல்களை நீங்கள் பின்வரும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
ஓம் நமசிவாய.
வைத்திய அனுகூல ஜீவரட்சணி
அகத்தியர அருளிய வைத்திய இரத்தினச் சுருக்கம்
அகத்தியர் 2000 பாகம் 1
அகத்தியர் 2000 பாகம் 2
அகத்தியர் 2000 பாகம் 3
அகத்தியர் அருளிய அறுபத்தி நாலு சித்துக்கள்
அகத்தியர் ஆரூடம்- (1)
அகத்தியர் இரண வைத்தியம்
அகத்தியர் கன்ம காண்டம் கௌமதி நூல்
அகத்தியர் கேசரி நூல் 100 இன்னும் பல சங்கராச்சாரியார்
அகத்தியர் தற்க சாத்திரம்
அகத்தியர் தைல முறைகள்
அகத்தியர் பூரண சூத்திரம் 216 - தோழி
அகத்தியர் பூரண சூத்திரம் 216
அகத்தியர் ரண நூல்
அமிர்த சாகரம் பதார்த்த சூடாமணி
அயன மண்டல மருத்துவம்
அறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத் திறன்களும்
அனுபவ வைத்தியங்களும் ஆரோக்கிய உணவுகளும்
ஆதிசங்கராச்சாரியார் ஆயுட்பாவகம்
ஆனந்த மேடம்
இலக்கியத்தில் மருத்துவக் கருத்துக்கள்
ஈழத்துச் சித்தர் பாடல்கள்
உரோமரிசிநாயனார் அருளிய வைத்தியம் 500
எண் என்ப ஏனைய எழுத்தென்ப
எண் கணித சோதிடத்தில் கர்ம எண்
எண் சோதிட மறுமலர்ச்சி
எண் சோதிட யோதி
எளிய ஸ்ரீ ஜோதி முழுமையான நூல்
ஓமம் வளர்த்தல் திருமந்திர விளக்கம்
கட்டு வைத்தியம்
கணபதிப்பிள்ளை குமாரசேகரம்
கருவூரார் அருளிய கெவுன சூத்திரம்
கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து
காயத்திரி மந்திரம்
குமாரசுவாமியம் மூலகாண்டம்
கொங்கணச் சித்தர் வாலைக் கும்பி
கோயில்
கோரக்கர் அருளிய ரவிமேகலை 75
சந்தானமணி
சரசோதிமாலை
சாமக்கோள் ஆருடம்
சித்தராரூடம் (விஷக்கடி வைத்திய ஏட்டுச்சுவடி)
சிந்தனை எண்ணங்களும் அவற்றின் விளக்கங்களும்
சிவகதிக்கு சீவ யாத்திரை
சோதிட பரிபால
சோதிட பரிபாலினி
சோதிட வாசகம் 2
சோதிடத்திறவுகோல்
ஞான சார நூல்
தமிழ் இலக்கங்களும் தமிழ் தழீஇய வட ஒலி எழுத்துக்களும்
தமிழ் எழுத்துக்கள் நேற்று இன்று நாளை
தருக்கசங்கிரகம் மூலமும் உரையும்
தாவர போசன சமையல்
திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப்பகுதியும்
திருமூலர் அருளிய கருக்கடை வைத்தியம் அறுநூறு
திருமூலர் திருமந்திரம்
திருவருள் முறையீடு பாகம் இரண்டு
திருவருள் முறையீடு பாகம் ஒன்று
துகளறு போதம்
தெய்வ சக்தியை துரிதமாக எம்மில் விழிப்பிக்கும் சித்த சாதனை
தொல்காப்பியம்
நீங்கள் அழகாக இருக்கப் புது இரகசியம்
பத்திரகிரியார் பாடல்கள்
பாண்டியன் அசல் பழைய கொக்கோகம்
பாய்ச்சிகை ஆரூடம்
பாலவாகடத்திரட்டு 1200
பிரபஞ்ச உற்பத்தி
புட்ப விதி
பெண்கள்_ஜாதகமும்_பலனும்
போகரின் சப்த காண்டம் 7000
போகர் அருளிய வாலை ஞான பூசை விதி
போகர் கற்பம் 300
போகர் யனனசாகரம்
யாதக பாஸ்கரன்
வர்மக்கலை
வர்மப் பீரங்கி
விதான மாலை
விஷ வைத்தியம்
விஷவைத்திய சிந்தாமணி
வேத மந்திரங்கள்
யசூர் வேதம்
இருக்கு வேதம்
அதர்வ வேதம்
சாம வேதம்
85 சித்தர் நூல்கள்
www.siththar.com/…/அகத்தியர%20அருளிய%20வைத்திய%20இரத்தினச்%…
www.siththar.com/…/அகத்தியர்%20அருளிய%20அறுபத்தி%20நாலு%20ச…
www.siththar.com/…/அகத்தியர்%20கன்ம%20காண்டம்%20கௌமதி%20நூல…
www.siththar.com/…/அகத்தியர்%20கேசரி%20நூல்%20100%20%20இன்ன…
www.siththar.com/…/அகத்தியர்%20பூரண%20சூத்திரம்%20216%20தோழ…
www.siththar.com/…/p…/அகத்தியர்%20பூரண%20சூத்திரம்%20216.pdf
www.siththar.com/…/pdf/அமிர்த%20சாகரம்%20பதார்த்த%20சூடாமணி…
www.siththar.com/…/அறுபத்து%20நான்கு%20கலைகளும்%20கலையாக்கத…
www.siththar.com/…/அனுபவ%20வைத்தியங்களும்%20ஆரோக்கிய%20உணவு…
www.siththar.com/…/pdf/ஆதிசங்கராச்சாரியார்%20ஆயுட்பாவகம்.pdf
www.siththar.com/…/இலக்கியத்தில்%20மருத்துவக்%20கருத்துக்கள…
www.siththar.com/…/உரோமரிசிநாயனார்%20அருளிய%20வைத்தியம்%205…
www.siththar.com/…/எண்%20கணித%20சோதிடத்தில்%20கர்ம%20எண்.pdf
www.siththar.com/…/எளிய%20ஸ்ரீ%20ஜோதி%20முழுமையான%20நூல்.pdf
www.siththar.com/…/ஓமம்%20வளர்த்தல்%20திருமந்திர%20விளக்கம்…
www.siththar.com/…/கருவூரார்%20அருளிய%20கெவுன%20சூத்திரம்.p…
www.siththar.com/…/கருவூரார்%20மாந்திரீக%20அட்டமா%20சித்து.…
www.siththar.com/…/pdf/கொங்கணச்%20சித்தர்%20வாலைக்%20கும்பி…
www.siththar.com/…/pdf/கோரக்கர்%20அருளிய%20ரவிமேகலை%2075.pdf
www.siththar.com/…/சித்தராரூடம்%20விஷக்கடி%20வைத்திய%20ஏட்ட…
www.siththar.com/…/சிந்தனை%20எண்ணங்களும்%20அவற்றின்%20விளக்…
www.siththar.com/…/தமிழ்%20இலக்கங்களும்%20தமிழ்%20ஒலி%20எழு…
www.siththar.com/…/தமிழ்%20எழுத்துக்கள்%20நேற்று%20இன்று%20…
www.siththar.com/…/…/தருக்கசங்கிரகம்%20மூலமும்%20உரையும்.pdf
www.siththar.com/…/திருமந்திர%20ஆராய்ச்சியும்%20ஒப்புமைப்பக…
www.siththar.com/…/திருமூலர்%20அருளிய%20கருக்கடை%20வைத்தியம…
www.siththar.com/…/திருவருள்%20முறையீடு%20பாகம்%20இரண்டு.pdf
www.siththar.com/…/pdf/திருவருள்%20முறையீடு%20பாகம்%20ஒன்று…
www.siththar.com/…/தெய்வ%20சக்தியை%20துரிதமாக%20எம்மில்%20வ…
www.siththar.com/…/நீங்கள்%20அழகாக%20இருக்கப்%20புது%20இரகச…
www.siththar.com/…/…/பாண்டியன்%20அசல்%20பழைய%20கொக்கோகம்.pdf
www.siththar.com/ho…/pdf/போகரின்%20சப்த%20காண்டம்%207000.pdf
www.siththar.com/…/போகர்%20அருளிய%20வாலை%20ஞான%20பூசை%20வித…

ரஷ்யாவில் மாஸ்கோ கோவிலில் பெண் பூசாரி


அகரத்தில் ஓர் இராமாயணம்.

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது:
" இதுவே தமிழின் சிறப்பு.."
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன்
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.
தமிழின் பெருமையை வாழ்நாள் முழுவதும் பேசினாலும் ஒரு துளிக்கும் ஈடாகாது.

Teli ka Mandir reaching to height of 30m, Gwolior Fort(Madhya Pradesh) Dated: ~8th century CE