Search This Blog

Monday, August 18, 2014

அவனது இரகசியம்-யூரி நகீபின் தமிழில்: க.சுப்பிரமணியம்

முதல் நாள் இரவில் கடும்பனி பெய்திருந்தது. ஆகவே உவாரவ்காவிலிருந்து பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் குறுகிய நடைபாதையில் ஆள் நடமாட்டமே இல்லை. ஒரே ஓர் உருவம் மட்டுமே மங்கிய நிழல்போல் அதில் தென்பட்டது. வெகு எச்சரிக்கையுடன் ஆசிரியை அப்பாதையில் நடந்துகொண்டிருந்தாள். எங்கேயாவது பனிக்குவியலுக்குள் கால் புதைந்துவிடும்போல் தெரிந்தால், சடையுரோம ஓரங் கட்டிய சிறிய மேல்ஜோடுகளுக்குள்ளிருந்த தன் பாதத்தை உடனே பின்னால்yuri nagibin இழுத்துக்கொள்வதற்குத் தயாராயிருந்தாள்.
ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் நடந்து செல்லும் தொலைவில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. எனவே அவள் குட்டையான உரோம மேல்சட்டை அணிந்து, மெல்லிய கம்பளிக் குட்டையால் தனது தலையை மூடியிருந்தாள். குளிர் கடுமையாக இருந்தது. வெண்பனிக் குவியல்களின் உச்சியில் புதிதாகப் பெய்திருந்த பனிச் சிதர்களைக் காற்று வாரி இறைக்கவே, அவை அவளது தலையிலிருந்து கால் வரை தெறித்தன. பள்ளி ஆசிரியை இருபத்து நான்கு வயதுள்ள யுவதி. ஆகவே, கன்னங்களையும், மூக்கையும் கிள்ளிய கடுங்குளிரும் மேல்சட்டையும் ஊடுருவிக்கொண்டு சுரீரென்று பாய்ந்த காற்றும் அவளுக்குப் பிடித்திருந்தன. காற்றின் புறமாக முதுகைத் திருப்பிக்கொண்டு, கூரிய நுனியுள்ள தனது மேல்ஜோடுகளின் நெருக்கமான அடிச்சுவடுகளைப் பார்த்தாள். அவை ஒரு பெரிய மிருகத்தின் காலடித் தடங்களைப் போன்றிருந்தன. அவையும் அவளது மனதிற்குப் பிடித்திருந்தன.
ஜனவரி மாதத்துக் காலையின் உற்சாகமூட்டும் ஒளி, வாழ்க்கையைப் பற்றியும், தன்னைப் பற்றியும் சந்தோஷமான எண்ணங்களை அவள் மனதில் எழுப்பியது. இரண்டு வருடங்களுக்கு முன்தான் அவள் கலாசாலைப் படிப்பை முடித்து ஆசிரியைத் தொழிலை மேற்கொண்டாள். அதற்குள்ளாகவே அனுபவம் வாய்ந்த, திறமையுள்ள ஆசிரியை என்று பெயர் பெற்றுவிட்டாள். உவாரவ்கா, குஸ்மீன்கி, சொர்னி யார் ஆகிய பக்கத்துக் குடியிருப்புகளிலுள்ள ஜனங்களுக்கு எல்லாம் அவளைத் தெரியும். அவர்கள் அவளை வெறுமே அன்னாவென்று அழைக்காமல், உயர்வாகவும் மரியாதையுடனும் அன்னா வசீலியெவ்னா*1என்று அழைத்தார்கள்.
தொலைவிலுள்ள காட்டின் ஒழுங்கற்ற விளிம்புகளுக்கு மேலே சூரியன் கிளம்பினான். அவனுடைய கதிர்கள் பனியின் மேல் தோன்றிய நீல நிழல்களை இன்னும் அதிக நீலமாகச் செய்தன. இந்த நிழல்கள் வெகு தூரத்திலிருந்த பொருள்களையும் ஒன்டொன்று இணைத்துக் காட்டின. பழங்கால மாதா கோவிலின் சிகரம் உவாரவ்கா கிராம சோவியத்தின் காரியாலய வாசல்வரை நீண்டு விளங்கியது. நதியின் எதிர்க் கரை மேலிருந்த பைன் மரங்களின் நிழல் இக்கரையின் சரிவின் மேலிருந்த பைன் மரங்களின் நிழல் இக்கரையின் சரிவின் மேல் தவழ்ந்து சென்றது. பள்ளிப் பருவநிலைக் கூடத்தின் மேலிருந்த காற்றுதிசை காட்டுக் கருவியின் நிழல், வயல் நடுவே வந்துகொண்டிருந்த அன்னா வசீலியெவ்னாவின் காலடியில் சுழன்று கொண்டிருந்தது.
வயலின் குறுக்கே எதிராக ஒரு மனிதன் வந்து கொண்டிருந்தான். "அவன் வழி விடாவிட்டால் என்ன செய்வது? எதிரெதிராக இரண்டு பேர் போக முடியாத, ஒடுக்கமான பாதையாயிற்றே. ஓர் அடி விலகினாலும் கழுத்தளவு பனியில் புதைய வேண்டியதுதான்' என்று அவள் விளையாட்டான பயத்துடன் நினைத்துக்கொண்டாள். அந்தச் சுற்று வட்டாரத்தில் அவளுக்கு வழிவிட மாட்டேன் என்று சொல்லும் ஒரு மனிதனும் கிடையாது என்பது அவளுக்குத் தெரியாமலில்லை.
அவர்கள் இருவரும் எதிர் எதிரே நெருங்கி விட்டனர். குதிரைப் பண்ணையில் பயிற்சியாளனாகவிருந்த பிரலோவ் என்பவன் அவன்.
""வணக்கம், அன்னா வசீலியெவ்னா!'' என்று தனது உரோமக் குல்லாயை எடுத்து அசைத்துக்கொண்டு, கட்டையாகக் கத்தரிக்கப்பட்டிருந்த அடர்த்தியான தலைமுடி தெரியும்படி நின்றான்.
"அடேடே, குல்லாயை ஏன் எடுத்துவிட்டீர்கள்? மிகக் குளிராயிருக்கிறது. உடனே போட்டுக் கொள்ளுங்கள்'' என்றாள் அவள்.
பிரேலோவுக்கும் குல்லாயைச் சட்டென்று போட்டுக்கொள்ள ஆவல்தான். ஆனால் இந்தக் குளிர் தனக்கு ஒரு பொருட்டில்லை என்று காட்டிக் கொள்வதற்காகச் சிறிது தாமதித்தான். அவனுடைய ஒற்றை நாடியான உடம்பிற்கு அவன் அணிந்திருந்த ஆட்டுத்தோல் மேல்சட்டை மிகப் பொருத்தமாயிருந்தது. தன்னுடைய வெள்ளை "வாலென்கி'*2 களை மெல்லிய பாம்பு போன்ற குதிரைச் சவுக்கால் அடித்துக்கொண்டு, ""எங்கள் லியோஷா எப்படியிருக்கிறான்? மிகவும் துஷ்டனத்தனம் செய்வதில்லை என்று நம்புகிறேன்'' என மிகவும் மரியாதையாகக் கேட்டான்.
"துஷ்டத்தனம் செய்யத்தான் செய்கிறான். ஆரோக்கியமாயுள்ள குழந்தைகள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள். ஆயினும் அவர்கள் ஒரு கட்டிற்குள்ளிருக்கிறார்கள். அதை மீறுவதில்லை'' என்று ஆசிரியத் தொழிலின் நுட்பந் தெரிந்தவளாகப் பதிலளித்தாள் அவள்.
பிரலோவ் சிரித்துக்கொண்டான்.
"லியோஷா சாதுப்பையன், தகப்பனாரைப் போல'' என்றான்.
அவன் ஒரு பக்கம் விலகினானோ இல்லையோ, முழுங்கால் வரை வெண்பனியில் புதைந்து, சிறிய பள்ளிக்கூடப் பையன்போல் குட்டையாகிவிட்டான். அன்னா வசீலியெவ்னா அவனைப் பரிவுடன் நோக்கித் தலையசைத்துவிட்டுத் தன் வழியே போய்விட்டாள்.
இரண்டு மாடியுடைய பள்ளிக்கூடக் கட்டடம் ரஸ்தாவினருகே ஒரு தாழ்ந்த வேலிக்குப் பின்னால் இருந்தது. அதன் பெரிய ஜன்னல்கள் உறைபனியின் சித்திர வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. கட்டடத்தின் மேல் விழுந்த வெயில் ஒளியில் பிரதிபலித்த செங்கற் சுவரின் நிறம், சாலை வரை பனி மணலையும் செந்நிறமாய்க் காட்டியது. உவாரவ்காவிலிருந்து சிறிது தூரத்தில் இப்பள்ளிக்கூடம் கட்டப்பட்டிருந்தது. ஏனெனில் பக்கத்துக் கிராமங்கள், குதிரைப் பண்ணைக் குடியிருப்பு, எண்ணெய்த் தொழிலாளர் ஆரோக்கிய விடுதி, பீட் நிலக்கரி சேகரிக்கும் தொழிலாளிகளின் குடியிருப்பு ஆகிய இடங்களிருந்து சுற்றுப் பிரதேசத்திலுள்ள குழந்தைகள் எல்லாம் அங்குதான் படிக்க வந்தார்கள். அந்தப் பெரிய ரஸ்தாவின் இரு திசைகளிலிருந்தும் தலையங்கிகள், தலைக்குட்டைகள், குல்லாய்கள் காது மூடிகள் ஆகியவை அனைத்தும் பள்ளிக்கூட வாசலை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தன.
"வணக்கம், அன்னா வசீலியெவ்னா'' என்று அவர்களது வணக்க மொழிகள் முடிவற்ற நீரோடைபோல் கலகலத்தன. அவ்வார்த்தைகள் சில வேளைகளில் மணியொலியைப் போல் தெளிவாகவும், இன்னும் சில வேளைகளில் கழுத்திலிருந்த கண்வரை இறுக்கிச் சுற்றியிருந்த தலைக்குட்டைகளின் காரணமாகவும் மந்தமாகவும் கேட்டன.
அன்று அன்னா வசீலியெவ்னா ஐந்தாவது வகுப்பிற்கு முதலாவதாகப் பாடம் எடுக்க வேண்டும். பள்ளிக்கூட ஆரம்ப மணி அடித்த ஓசை அடங்கு முன்பே, அவள் வகுப்பு அறைக்குள் நுழைந்துவிட்டாள். மாணவர்கள் அனைவரும் ஒருங்கே எழுந்து வணக்கம் கூறிவிட்டு, மீண்டும் தங்கள் இடங்களில் அமர்ந்தனர். சத்தங்களெல்லாம் மெதுவாய் அடங்கின. சாய்வு மேஜைகளைப் "படார்' என்று மூடுவதும், பெஞ்சுகள் "கிரீச்' என்று ஓலமிடுவதும், யாரோ ஒருவன் தனது அருமையான, கவலையற்ற காலை நேரச் சுதந்திரத்திற்கு முடிவு வந்துவிட்டதே என்று வருத்தத்துடன் பெருமூச்சு விடுவதுமாகிய சத்தங்களெல்லாம் சிறிது சிறிதாக ஓய்ந்துவிட்டன.
"இன்று சொற்களின் வகையைப் பற்றிப் படிப்போம்...'' என்றாள் அன்னா வசீலியெவ்னா.
வகுப்பில் ஒரே நிசப்தம் குடிகொண்டது. ஒரு பெரிய லாரி ரஸ்தாவில் போய்க்கொண்டிருந்த உரத்த ஓசை வெகு தெளிவாய்க் கேட்டது.
சென்ற வருடத்தில் இப்பாடம் நடத்தும்போது, தான் எவ்வளவு பரபரப்புடன் இருந்தாள் என்பதை அன்னா வசீலியெவ்னா ஞாபகப்படுத்திக்கொண்டாள். பரீட்சை எழுதப் போகும் பள்ளிச் சிறுமியைப் போல் "பெயர்ச் சொல் என்பது பெயரைக் குறிக்கும்' என்று வாய்க்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததும், குழந்தைகள் இதைப் புரிந்துகொள்வார்களோ என்ற, வேதனை நிறைந்த ஒரு சந்தேகமும் அவளுக்கு நினைவு வந்தன.
பழைய நினைவு வந்ததும் ஒரு புன்சிரிப்பு அவள் முகத்தில் தவழ்ந்தது. தனது அடர்ந்த தலைமுடியில் செருகியிருந்த கொண்டையூசியைச் சரிப்படுத்திக் கொண்டாள். அமைதியுணர்ச்சி அவள் உள்ளம் முழுவதும் இதமான கதகதப்பைப் போல பரவியது. அடங்கிய குரலில் பாடத்தைத் தொடங்கினாள்.
"பெயர்சொல் என்பது ஒரு பொருளின் பெயரைக் குறிக்கும் சொல்லாகும். "யார் அது? அது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதிலாக வரக்கூடிய எந்தப் பொருளும், எந்த ஆளும் இலக்கணத்தில் பெயர்ச்சொல் என்று கூறப்படும் உதாரணமாக, "யார் அது?' "மாணவன்', அல்லது "அது என்ன?' - "புத்தகம்'...''
"நான் உள்ளே வரலாமா?''
பாதி திறந்திருந்த கதவின் பக்கம், குளிரில் அடிபட்டு, சீனிக் கிழங்கைப்போல் சிவந்து கிடந்த முகத்துடனும், பனித்தூசி படிந்த புருவங்களுடனும் ஒரு சிறிய உருவம் நின்று கொண்டிருந்தது. காலுக்குச் சற்றே பெரிதாயிருந்த "வாலென்கி'களுக்கு மேலே தங்கியிருந்த வெண்பனிச் சிதர்கள் உருகி ஒளியிழந்துகொண்டிருந்தன.
"மறுபடியும் நேரம் கழித்துத்தான் வருகிறாய், ஸôவுஷ்கின்?'' } அநேக இளம் ஆசிரியர்கள்போல் அன்னா வசீலியெவ்னாவும் கண்டிப்பாக இருக்க விரும்பினாள். ஆனால் இப்போது அவளுடைய கேள்வி பரிதாபம் மிகுந்து ஒலித்தது.
அவளது வார்த்தைகளைக் கேட்டதும், தனக்கு உள்ளே வர அனுமதி கிடைத்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு, ஸôவுஷ்கின் விரைவில் தன்னுடைய இடத்திற்கு நழுவி விட்டான். சாய்வு மேஜையின் கீழ் அவன் தனது தோல் பைக்கட்டைத் தள்ளியதையும், தலையைத் தூக்காமல் அடுத்த பையனிடம் ""என்ன நடந்துகொண்டிருக்கிறது?'' என்று அவன் மெதுவாகக் கேட்டுக்கொண்டிருந்ததையும் அன்னா வசீலியெவ்னா கவனித்துவிட்டாள்.
ஸôவுஷ்கின் நேரம் கழித்து வந்தது அவளுக்குத் தடுமாற்றத்தையளித்தது. நன்றாக ஆரம்பித்திருந்த பாடத்தை அது கெடுத்துவிட்டது. இரவில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிபோன்று, வயதால் வாடிய தோற்றமுடைய பூகோள ஆசிரியையும்கூட ஸôவுஷ்கின் சரியாக வருவதில்லை என்பது பற்றிப் புகார் செய்திருந்தாள். வகுப்பில் கவனமின்மை, சத்தம் ஆகியவை பற்றியும் அவள் கூறியிருந்தாள்... ""பள்ளிக்கூடம் ஆரம்பித்ததும் பாடங்கள் தொடங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது' என்று அவள் பெருமூச்சு விடுவாள். "ஆம், பிள்ளைகளை அடக்கி வைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கும், பாடங்களைக் கவர்ச்சியுள்ளவையாகப் போதிக்கத் தெரியாதவர்களுக்கும் கஷ்டம்தான்' என்று அன்னா வசீலியெவ்னா தன்னம்பிக்கையுடன் எண்ணியிருந்தாள். அவ்வாசிரியையுடன் பாடங்களை மாற்றிக்கொள்வதாகக் கூடச் சொல்லியிருந்தாள். இப்பொழுது, தான் அவ்வயது சென்ற ஆசிரியையிடம் கூறியது தவறு என்று அவளுக்குப்பட்டது. ஏனென்றால் தான் சகஜமாகப் பேசிய அவ்வார்த்தைகள் அவளைப் போட்டிக்கிழுப்பது போலவும், கண்டிப்பதுபோலவும் அந்த ஆசிரியைக்குத் தோன்றியிருக்கும் அல்லவா?
"தெரிந்துகொண்டீர்களா?'' என்று அன்னா வசீலியெவ்னா குழந்தைகளைக் கேட்டாள்.
"தெரிந்துகொண்டோம்'' என்று பலரும் ஒருமித்துக் கிளப்பிய குரல் கேட்டது.
"நல்லது, அப்படியானால் நீங்களே உதாரணங்கள் கொடுங்கள், பார்க்கலாம்.''
ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை. பிறகு யாரோ தயக்கத்தோடு ""பூனை'' என்று சொன்னான்.
"நீ சொல்லியது சரி'' என்றாள் அன்னா வசீலியெவ்னா. சென்ற வருடமும் குழந்தைகள் முதலில் ""பூனை'' என்றே சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. இவ்வாறு முதல் ஆரம்பம் ஆகிவிட்டது.
"ஜன்னல், மேஜை, வீடு, ரஸ்தா'' என்று குழந்தைகள் சொல்லிக்கொண்டு போனார்கள். "சரி, சரி'' என்று அன்னா வசீலியெவ்னா தொடர்ந்து சொல்லி வந்தாள்.
மிகுந்த குதூகலத்துடன் விளங்கியது வகுப்பு. பழக்கமான பொருள்களின் பெயர்களைச் சொல்வதில் குழந்தைகள் எவ்வளவு சந்தோஷம் அடைகின்றனர் என்பதை வியப்போடு அவள் அறிந்துகொண்டாள். இந்தப் பொருள்களைக் குழந்தைகள் இதற்கு முன் கண்டிராத ஒரு புதிய நோக்குடன் காண்பதுபோல் அவளுக்குப் புலப்பட்டது. மேலும் பல பொருள்களின் பெயர்களை அவர்கள் சொல்லி வந்தார்கள். முதல் சில நிமிடங்கள் மிகவும் பழகிய பொருள்கள், சாமான்களின் பெயர்களே வந்தன, "சக்கரம், டிராக்டர், கிணறு, பறவைக்கூடு'' என்று.
கடைசிச் சாய்வு மேஜையிலிருந்த கொழுத்த வாஸ்யா ""ஆணி, ஆணி'' என்று கீச்சுக்குரலில் மீண்டும், மீண்டும் பிடிவாதமாகக் கத்தினான்.
பிறகு யாரோ சிறிது பயத்துடன், "நகரம்'' என்றான்.
"சரி'' என்று அதை அங்கீகரித்தாள் அவள். பனிக்கட்டி மழை போன்று விரைவில் கேட்டன, ""தெரு, பாதாள ரயில், டிராம் வண்டி, சினிமா'' என்ற சொற்கள்.
"போதும், உங்களுக்குப் புரிந்துவிட்டது'' என்றாள் அன்னா வசீலியெவ்னா.
ஓரளவு தயக்கத்துடன் சத்தமெல்லாம் ஓய்ந்தது. கட்டுக்கட்டான வாஸ்யா மட்டுமே இன்னும் அங்கீகரிக்கப்படாமலிருந்த தனது "ஆணியை' உச்சரித்துக்கொண்டிருந்தான். திடீரென்று ஸôவுஷ்கின் கனவிலிருந்து விழித்தவன்போல் எழுந்து நின்று கணீரென்று ஒலிக்கும் குரலில், "பனிக்கால "ஓக்' மரம்'' என்று கூவினான்.
பிள்ளைகளெல்லாம் சிரித்தனர்.
"சத்தம் போடாதீர்கள்'' என்று அன்னா வசீலியெவ்னா உள்ளங்கையால் மேஜையைத் தட்டிக்கொண்டு கூறினாள்.
பிள்ளைகளின் சிரிப்பையும், ஆசிரியையின் உத்தரவையும் சிறிதும் கவனியாது, மறுபடியும், "பனிக்கால "ஓக்' மரம்'' என்றான் ஸôவுஷ்கின். அவன் பேசிய விதமும் மிக விசித்திரமாகயிருந்தது. அவனுடைய இருதயத்திலிருந்து வருவதே போன்றிருந்தன அச்சொற்கள். எதையோ ஒப்புக்கொள்வது போலவும் அவனால் அடக்க முடியாதபடி தானாக வழிந்து வேகமாய் வெளிவரும் ஓர் இன்ப இரகசியத்தைப் போலவுமிருந்தன அவை.
அவனுடைய விந்தையான கிளர்ச்சியைச் சிறிதும் அறியாது, அன்னா வசீலியெவ்னா தனது சிடுசிடுப்பை அடக்க முடியாதவளாய், "ஏன், "பனிக்கால' என்பதைச் சேர்க்கிறாய்? "ஓக்' மரம் என்றால் மட்டும் போதுமே'' என்று கூறி முடித்தாள்.
"ஓக்' மரம் என்று மட்டும் சொன்னால் அதற்கு ஒரு பொருளுமில்லை. பனிக்கால "ஓக்' மரம் என்றால்தான் சரியான பெயர்ச்சொல்'' என்று பையன் அவனை மடக்கினான்.
"ஸôவுஷ்கின், இடத்தில் உட்காரு! நேரத்தில் வராததினால் ஏற்படுகிறதைப் பார்த்தாயா? "ஓக்' மரம் என்பது பெயர்ச்சொல். "பனிக்கால' என்பது என்ன சொல் என்ற விஷயத்திற்கு நாம் இன்னும் வரவில்லை. தயவு செய்து, மதியம் இடை நேரத்தில் ஆசிரியர் அறையில் என்னை வந்து பார்'' என்றாள் அன்னா வசீலியெவ்னா.
பின் பெஞ்சியிலிருந்த ஒருவன் "பனிக்கால "ஓக்' மரத்திலிருந்து கிடைக்கும் பலன் இதுதான்'' என்று ஏளனம் செய்தான்.
ஆசிரியையின் கண்டிப்பு வார்த்தைகளால் சிறிதும் கலங்காதவனாய், தனது உள்ளத்தில் தோன்றிய ஏதோ ஓர் எண்ணத்தில் மகிழ்ச்சியுற்றவனாய், புன்சிரிப்புடன் தனது இருப்பிடத்தில் அமர்ந்தான் ஸôவுஷ்கின். ""இவனைச் சரிப்படுத்துவது கஷ்டம்தான்'' என்று அன்னா வசீலியெவ்னா நினைத்தாள்.
பாடம் தொடர்ந்து நடந்தது...
***
ஸôவுஷ்கின் ஆசிரியர் அறைக்கு வந்ததும். "உட்காரு'' என்று சொன்னாள் அன்னா வசீலியெவ்னா.
கை வைத்த மிருதுவான நாற்காலியில் வெகு சந்தோஷத்துடன் உட்கார்ந்துகொண்டு அதனுடைய வில் கம்பிகளின் மேல் பல தடவை அமுக்கிக் குதித்தான் அவன்.
"நீ எப்பொழுதும் ஏன் நேரம் கழித்து வருகிறாய். சொல்லேன்'' என்று அன்னா வசீலியெவ்னா கேட்டாள்.
"எனக்குத் தெரியாது, அன்னா வசீலியெவ்னா'' என்று வயது வந்தவனைப்போல் தோள்களைக் குலுக்கிக்கொண்டு கூறத் தொடங்கினான். "வகுப்பு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே நான் வீட்டை விட்டுப் புறப்பட்டு விடுகிறேன்.''
மிகச் சிறிய விஷயங்களில்கூட உண்மையை வருவிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! எத்தனையோ பிள்ளைகள் ஸôவுஷ்கினைவிட அதிகத் தொலைவில் வசிக்கிறார்கள். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்து வர வேண்டியதில்லையே.
"நீ குஸ்மீன்கியில்தானே இருக்கிறாய்?''
"இல்லை, ஆரோக்கிய விடுதியில் இருக்கிறேன்.''
"ஒரு மணி நேரத்திற்கு முன்னமேயே புறப்பட்டு விடுகிறேன் என்று சொல்ல உனக்கு வெட்கமாயில்லையா? ஆரோக்கிய விடுதியிலிருந்து பெரிய ரஸ்தாவிற்கு வரப் பதினைந்து நிமிடமாகும். ரஸ்தாவின் வழியே பள்ளிக்கூடம் வந்தால் அரை மணி நேரமாகும்.''
"நான் ரஸ்தா வழியே ஒரு பொழுதும் வருவதில்லை. நேராளமாகக் காட்டின் குறுக்காகத்தான் நடந்து வருகிறேன்'' என்று தனக்கே புரியாமல், இவ்விஷயம் முழுவதும் ஆச்சரியத்தைக் கொடுப்பதுபோன்ற ஒரு தோற்றத்துடன் கூறினான் ஸôவுஷ்கின்.
"நேராளமாக இல்லை, நேராக'' என்று அவனைத் திருத்தினாள்.
குழந்தைகள் பொய் சொல்லும்பொழுது சகஜமாக ஏற்படுவதுபோல, துக்கமும், வெறுப்பும் அவளுக்கு உண்டாயிற்று. ஸôவுஷ்கின் ஏதாவது காரணம் சொல்வான் என்ற நம்பிக்கையில் பேசாமலிருந்தாள். ""அன்னா வசீலியெவ்னா! நான் மிகவும் வருந்துகிறேன். மற்றப் பையன்களுடன் பனிப்பந்து விளையாடினேன்...' என்றோ இதுபோல ஏதாவதோ சொல்வான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் தனது பெரிய சாம்பல நிறக் கண்களால் அவளை வழித்துப் பார்த்தான். "நல்லது, எல்லாம் சொல்லியாகி விட்டதே; இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு?' என்று கேட்பதுபோலிருந்தது அவன் பார்வை.
"இது மோசம், ஸôவுஷ்கின், மிகவும் மோசம். நான் இதைக் குறித்து உன் பெற்றோர்களைப் பார்க்க வேண்டி வரும்.''
"எனக்குத் தாயார் மட்டும்தான் இருக்கிறார்கள், அன்னா வசீலியெவ்னா!'' என்று ஸôவுஷ்கின் புன்சிரிப்புடன் கூறினான்.
"குளிப்பாட்டும் தாதி'' என்று ஸôவுஷ்கின் தனது தாயாரைக் குறிப்பிட்டதால் அவளைப் பற்றி நினைத்துப் பார்க்கும்பொழுது, அன்னா வசீலியெவ்னாவின் முகம் சிவந்தது. ஆரோக்கிய விடுதியில் தண்ணீர்ச் சிகிச்சை அறையில் அவள் வேலை பார்த்து வந்தாள். அவள் மிகவும் நொய்ந்துபோன பெண்பிள்ளை. எப்போதும் சுடுதண்ணீரில் பட்டு வந்ததால் அவள் கைகள் வெளுத்து துணியாலானவைபோலத் தொளதொள வென்றிருக்கும். மாபெரும் தேசபக்த யுத்தத்தில் அவளது கணவன் இறந்து போகவே, இந்தக் கோல்யாவோடு இன்னும் மூன்று குழந்தைகள் அவள் தனியாகவே வளர்த்து வந்தாள்.
ஸôவுஷ்கினுடைய தாயாருக்கு எத்தனையோ தொல்லைகள், கவலைகள் உண்டு என்பது நிச்சயம்; எனினும் அன்னா வசீலியெவ்னா அவளைப் பார்ப்பது அவசியமாயிருந்தது.
"நான் போய் உன் தாயாரைப் பார்த்துத்தான் ஆக வேண்டும்.''
"கட்டாயமாக, அன்னா வசீலியெவ்னா! அம்மா மிகவும் சந்தோஷப்படுவார்கள்.''
"ஆனால் நான் சொல்லப்போவதைக் கேட்டு அவர்களுக்குச் சந்தோஷம் உண்டாகாது. எந்த ஷிப்டில் உன் தாயார் வேலை செய்கிறார்கள்?''
"மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது ஷிப்டில் அவர்களுக்கு வேலை.''
"மிகவும் நல்லது. இரண்டு மணிக்கு என் வேலை முடிகிறது. நீ என்னை உன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகலாம்.''
ஸôவுஷ்கின் அன்னா வசீலியெவ்னாவைக் கூட்டிக்கொண்டு சென்ற வழி பள்ளிக்கூடத்திற்குப் பின்னாலிருந்த மைதானத்திலிருந்து ஆரம்பித்தது. அவர்கள் காட்டிற்குள்ளே நுழைந்ததும் பனி மூடியிருந்த தேவதாரு மரங்களின் கிளைகள் அவர்களை வெளியே தெரியாமல் மறைத்தன. உடனேயே அமைதியும் சாந்தமும் நிலவுகின்ற வேறோர் அற்புத உலகிற்கு வந்துவிட்டதுபோல அவர்களுக்குத் தோன்றிற்று. மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு பறந்து சென்ற காக்கைகளும் மற்றப் பறவைகளும் கிளைகளை அசைத்துப் பைன் நெற்றுகளை உலுக்கிவிட்டன, அல்லது உலர்ந்து தொங்கிக்கொண்டிருந்த சுள்ளிகளைக் கீழே விழச் செய்தன. ஆனால் இதனாலெல்லாம் அவ்விடத்தில் சத்தமே உண்டாகவில்லை.
எங்குப் பார்த்தாலும் ஒரே வெண்மை நிறம். காற்றிலடிபட்டு அழுதுகொண்டிருந்த "பிர்ச்' மரங்களின் உச்சிகளில்தான் கருமை தென்பட்டது. அம்மெல்லிய கிளைகள் ஆகாயத்தின் தெள்ளிய நீல நிறத்தின்மீது இட்ட கறுப்புக் கோடுகள் போல் விளங்கின.
அவர்கள் நடந்துபோன பாதை ஓர் ஓடையின் ஓரமாக வளைந்து சென்றது. சில சமயங்களில் கரையையொட்டித் திரும்பியதும், மற்றும் சில வேளைகளில் மேலே மேட்டில் ஏறியும் சென்றது அப்பாதை.
சிற்சில சமயங்களில் மரங்கள் விலகும்; அப்போது சூரிய வெளிச்சத்தில் பிரகாசித்துக்கொண்டிருந்த அழகிய வெளிகள் கண்ணுக்குப் புலனாகும். அவற்றில், குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற முயல்களின் கால் தடங்கள் கடிகாரச் சங்கிலிகள்போல் தோன்றின. ஒரு மிருகத்தின், மூவிலை போன்ற காலடிச் சுவடுகளையும் அவர்கள் கண்டார்கள். அச்சுவடுகள் காட்டின் நடுப்பகுதியை நோக்கிச் சென்றன.
அன்னா வசீலியெவ்னா இத்தடங்களில் கருத்துள்ளவளாய் இருக்கிறாள் என்பதைக் கண்டதும், ஸôவுஷ்கின் தனது பழகிய நண்பன் ஒருவனைப் பற்றிப் பேசுவதுபோல, ""கடம்பை மான் இங்கு வந்து போயிருக்கிறது'' என்றான். அவள் காட்டை நோக்கிப் பார்த்ததைக் கண்டு, அவளுக்குத் தைரியமூட்டுவதுபோல், ""பயப்பட வேண்டாம், கடம்பைகள் ரொம்பச் சாதுவானவை'' என்று மேலும் கூறினான்.
"நீ எப்போதாவது கடம்பையைப் பார்த்திருக்கிறாயா?'' என்று அன்னா வசீலியெவ்னா ஆர்வத்துடன் கேட்டாள்.
"உயிருள்ள கடம்பையையா?'' என்று கேட்டுவிட்டு ஸôவுஷ்கின் பெருமூச்சு விட்டான், ""இல்லை. அது போட்டுவிட்டுப் போயிருந்தவற்றைத்தான் பார்த்திருக்கிறேன்'' என்று கூறினான்.
"அப்படி என்றால்?''
"ஓ, அதனுடைய விட்டைகள்'' என்று வெட்கத்துடன் விளக்கினான். பாதை கமான்போல வளைந்திருந்த ஒரு மரத்தின் கீழ் சென்று மறுபடியும் ஓடைக்கு வந்தது. அவ்வோடை அநேக இடங்களில் அடர்ந்த பனிமணலால் மூடப்பட்டிருந்தது; வேறு சில இடங்களில் மழமழப்பான பனிக்கட்டிச் சல்லடம் அதைப் பிணித்திருந்தது. இன்னும் சில இடங்களில் இவை இரண்டிற்குமிடையே நல்ல, கரு நிறமான தண்ணீர் கண்ணில் பட்டது.
"ஏன் எங்கும் பனிக்கட்டியாகவில்லை?'' என்று அன்னா வசீலியெவ்னா கேட்டாள்.
"இங்கு சுடுதண்ணீர் ஊற்றுகள் இருக்கின்றன. அதோ பாருங்கள்! ஒரு நீர்ப்பீலி'' என்றான் பையன்.
அந்தத் தண்ணீர்ப் பாகத்தின் மேல் குனிந்து பார்த்தாள் அன்னா வசீலியெவ்னா. அடியிலிருந்து தண்ணீர் நூலிழை போல மேலே வந்துகொண்டிருந்தது. நீர்மட்டத்துக்குக் கீழே அது குமிழிகளாக வெடித்தது. இக்குமிழிகளும், அடியிலுள்ள காம்பு போன்ற நீர்த் தாரையும் வெண்குவளைப் புஷ்பத்தைப் போலிருந்தன.
"இந்தப் பக்கத்தில் ஏராளமான நீருற்றுகள் இருக்கின்றன'' என்று ஸôவுஷ்கின் உணர்ச்சியுடன் கூறினான். "வெண் பனியின் கீழ் உயிரோட்டத்தோடு தானிருக்கிறது நீரோடை.''
மேலாக இருந்த வெண்பனியை அவன் அகற்றியவுடன் கன்னங்கரேலென்றிருந்த தெளிவான தண்ணீர் தென்பட்டது.
வெண்பனி தண்ணீருக்குள் விழுந்தவுடன் கரைந்து விடாமல் கட்டியாகி, பசுமையான நீர்ப்பாசிபோல் அதில் மிதப்பதை அன்னா வசீலியெவ்னா கண்டாள். இது அவளுக்குப் பிரியமான விளையாட்டாக இருந்தது. மேலும்மேலும் வெண்பனியைத் தனது மேல்ஜோடுகளால் தண்ணீருக்குள் தள்ளிவிட்டாள். ஒரு பெரிய வெண்பனித் துண்டு ஓடைக்குள் விழுந்து வேடிக்கையான உருவத்தில் தோன்றியதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். இதிலேயே முழுவதும் ஈடுபட்டிருந்ததினால் ஸôவுஷ்கின் தனக்கு முன்பே நடந்து சென்று ஓடையின் குறுக்கே வளைந்து நின்ற ஒரு மரக்கிளையின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என்பதை அவள் முதலில் கவனிக்கவில்லை. வேகமாக அவனைத் தொடர்ந்து சென்றாள். சுடு நீருற்றுகள் பின்தங்கின. இங்கே உள்ள தண்ணீரின் மேல் மெல்லிய பனிக்கட்டித் தகடு மூடியிருந்தது. அதன் பளிங்கு போன்ற மிருதுவான மேற்பரப்பில் விரைந்து சரிந்து செல்லும் நிழல்கள் தோன்றி மறைந்தன.
"இங்கே பனிக்கட்டி எவ்வளவு மெல்லிதாக இருக்கிறது பார், தண்ணீர் ஓட்டங்கூட அல்லவா தெரிகிறது!'' என்றாள்.
"அது தண்ணீரில்லை, அன்னா வசீலியெவ்னா! நான் ஆட்டிய கிளையின் நிழல் அது'' என்றான் சிறுவன்.
அன்னா வசீலியெவ்னாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இங்கே காட்டில், தான் ஒன்றும் சொல்லாமலிருப்பதே நல்லது என்று தீர்மானித்துக் கொண்டாள்.
ஸôவுஷ்கின் மறுபடியும் முன் சென்றான். சிறிது குனிந்துகொண்டும், கூர்மையாகக் கவனித்துக்கொண்டும் இப்போது நடந்தான்.
காடு மேலும் மேலும் போய்க்கொண்டேயிருந்தது. அதன் குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற நெருக்கமான இடைவெளிகளின் ஊடே அவர்கள் சென்றார்கள். அங்கே குடிகொண்டிருந்த அமைதிக்கும், வெண்பனிக்கும் குவைகளுக்கும், மரங்களுக்கும் முடிவென்பதே தோன்றவில்லை. இங்கு மங்குமுள்ள வெளிகளினூடே அந்தி வெயில் பாய்ந்து வந்தது.
திடீரென்று மரங்களின் அடர்த்தி குறைந்துகொண்டே சென்று, நீலிநிறமான ஓர் இடைவெளி முன்னே தென்பட்டது. ஒளி நிறைந்ததும், காற்றோட்டமாயும் இருந்தது. முதலில் குறுகிய இடைவெளியாகத் தோன்றிய அது, போகப்போக சூரிய வெளிச்சத்தில் பிரகாசிக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப்போல் மின்னுகின்ற பனித்திடல்களைக் கொண்ட பெரும் பரப்பாகக் காட்சியளித்தது.
ஒரு கொட்டை மரத்தைச் சுற்றிப் பாதை சென்றது. காடு பின்னடைந்தது. இவ்விடைவெளியின் நடுவே, பளபளவென்று ஜொலிக்கும் வெண்பனி போர்த்து, மாதா கோவிலைப்போல் பெரிதாகவும், கம்பீரமாகவும் நின்றது ஓர் "ஓக்' மரம். மற்ற மரங்களெல்லாம் தங்களுடைய இந்த அண்ணன் நன்கு விரிந்து வளர்ந்து வரவேண்டுமென்பதற்காக, அவ்விடத்தை விட்டு விலகி அப்பாற் போயிருந்ததுபோல் தோன்றியது. இவ்விடைவெளியின் மேல் பந்தல் போட்டிருந்தாற்போல் "ஓக்' மரத்தின் அடிக்கிளைகள் காட்சியளித்தன. மூன்று மனிதர்கள் சேர்ந்தாலும் தழுவ முடியாத அவ்வளவு பருமனாக இருந்தது அதன் அடிமரம். அதன் பட்டைகளுக்கு ஊடே ஆழமான பிளவுகளில் பனி நிறைந்து கிடந்தது, அம்மரத்தில் வெள்ளிக் கம்பி இழைத்திருந்தது போல் காணப்பட்டது. அதன் பருத்த இலைகள் முழுவதும் உதிர்ந்து விடவில்லை. மேல் உச்சி வரை பனியடர்ந்த இலைகளால் அது மூடப்பட்டிருந்தது.
"ஓ, இதுவா உன்னுடைய பனிக்கால "ஓக்' மரம்!''
அன்னா வசீலியெவ்னா தயக்கத்துடன் ஓர் அடி முன் சென்றாள். அக்காட்டின் காவற்காரனாக விளங்கிய அவ்விருட்சம் வெகு கம்பீரமாக அவளை நோக்கித் தனது கிளைகளை அசைத்தது.
ஆசிரியை என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாள் என்பதைச் சற்றும் அறியாத ஸôவுஷ்கின் தனது முதிய நண்பனின் காலடியில் பரபரப்புடன் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.
"அன்னா வசீலியெவ்னா! இதோ பாருங்கள்'' என்றான்.
பிறகு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, ஒரு பெரிய வெண்பனிக் குவையை அகற்றினான். அதனடியில் மண் தூள்களைத் தெளித்தது போலிருந்தது. மக்கிப்போன புல்லின் துண்டுகளும் தென்பட்டன. அதற்குக் கீழ் ஒரு துவாரத்தில் அழுகிய இலைகளாலான வலையால் சுற்றப்பட்டிருந்த ஒரு சிறிய பந்து கிடந்தது. கூர்மையான, ஊசிபோன்ற முனைகள் அந்த இலைகளினூடே நீட்டிக் கொண்டிருந்தன. அது ஒரு முட்பன்றி என்று அன்னா வசீலியெவ்னா கண்டுகொண்டாள்.
"அது எப்படிச் சுருட்டிக்கொள்கிறது, பாருங்கள்'' என்று இலைக் கம்பளியால் அதற்கு மறுபடியும் போர்த்துக்கொண்டு கூறினான் ஸôவுஷ்கின். பிறகு அடுத்த வேரின் பக்கமாகப் பனியைத் தோண்டினான். ஒரு சிறிய குகை காணப்பட்டது. அதன் ஓரங்கள் பனிக்கட்டித் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அட்டையில் வெட்டப்பட்ட விளையாட்டுப் பொம்மைபோல பழுப்பு நிறமான தவளை ஒன்று அங்கே உட்கார்ந்திருந்தது. விறைத்திருந்த அதன் தோல் மிகப் பளபளப்பாக இருந்தது. ஸôவுஷ்கின் அதைத் தொட்ட பொழுது அது அசையவில்லை.
"செத்துப் போனதுபோல் பாசாங்கு பண்ணுகிறது; சூரியன் எட்டிப் பார்த்தவுடன் உயிர்பெற்று விடும்'' என்று சொல்லிக்கொண்டே சிரித்தான் ஸôவுஷ்கின்.
தன்னுடைய சிறிய ராஜ்யத்திலுள்ளவை எல்லாவற்றையும் அவன் ஆசிரியைக்குக் காட்டினான். "ஓக்' மரத்தின் அடியில் அநேக உயிர்கள் இடங்கொண்டு வாழ்ந்தன; வண்டுகள், பல்லிகள், பூச்சிகள். சில வேர்களின் கீழேயும், வேறு சில பட்டைகளின் இடுக்குகளிலும் தங்கி வாழ்ந்தன. குளிர்காலத் தூக்கத்தில் வீழ்ந்து கிடந்த அப்பிராணிகள் ஒட்டி உலர்ந்து போய், வெறும் பொள்ளலாயிருப்பதுபோல் காணப்பட்டன. இந்தப் பெரிய "ஓக்' மரம் தன்னிடத்தே அதிக கதகதப்பைக் கொண்டிருந்தது. ஆகவே, இப்பிராணிகள், தங்குவதற்கு இதைவிடச் சிறந்த இடத்தைக் கண்டுகொண்ட முடியாது. மிகுந்த உற்சாகத்துடன், தனக்குப் புதிதான இக்காட்டில் மறைந்து கிடந்த உயிர்களைப் பார்த்து, அவற்றில் ஈடுபட்டிருந்தாள் அன்னா வசீலியெவ்னா. திடீரென்று ஸôவுஷ்கின் கலவரத்துடன் ஏதோ சொன்னது அவள் காதில் விழுந்தது. "அடேடே, அம்மாவை நாம் பார்க்க முடியாது போலிருக்கிறதே!'' என்றான் அவன்.
உடனே கைக்கடிகாரத்தை உயர்த்திப் பார்த்தாள். மணி மூன்றே கால் ஆகிவிட்டது. "அகப்பட்டு விட்டோம்' என்ற உணர்ச்சியுண்டாயிற்று. தான் சொல்லப் போவதற்குத் தன்னை மன்னிக்கும்படி "ஓக் மரத்தை மனத்துள் வேண்டிக்கொண்டு, "இதோ பார், ஸôவுஷ்கின், சுருக்கு வழிகளை எப்போதும் நம்ப முடியாது. நீ இனிமேல் ரஸ்தாவின் வழியாகவே வா'' என்று கூறினாள்.
ஸôவுஷ்கின் பதில் ஒன்றும் சொல்லவில்லை. தலையைக் குனிந்துகொண்டு நின்றான்.
"கடவுளே! நமது பேடித் தனத்தைக் காட்டுவதற்கு வேறு என்ன செய்ய வேண்டும்?' என்று அன்னா வசீலியெவ்னா வேதனையுடன் நினைத்துக்கொண்டாள். அன்று அவள் பாடம் நடத்தியதையும், மற்றைய நாட்களில் நடத்தியதையும் நினைத்துப் பார்த்தாள். எவ்வளவு உற்சாகமற்று, வறட்சியுடன் நாம் வார்த்தைகளையும், பாஷையையும் பேசி வந்திருக்கிறோம். மொழியென்பது இல்லாவிட்டால் மனிதன் உணர்சியற்ற ஊமை மாதிரிதானே! வாழ்க்கை எவ்வாறு அழகும், கருணையும் கூடியதோ, அதேபோல் எப்பொழுதும் தாய்மொழியும், புதுமையும் அழகும் நிறைந்து விளங்குகிறது.
இந்த அழகில்தான் திறமைவாய்ந்த ஆசிரியை என்று வேறு எண்ணம்! ஆசிரியத் தொழில் என்ற பாதையை நன்கு தெரிந்துகொள்ள ஆயுள் முழுவதும் முயன்றாலும் காலம் போதாது; தானே அப்பாதையில் இன்னும் ஓர் அடி எடுத்து வைக்கவில்லை. தவிர, அப்பாதைதான் எங்கே? அது அவ்வளவு இலேசாகக் கண்டுபிடித்துக்கொள்ளக் கூடியதா என்ன? மாய நகைப் பெட்டிக்குச் சாவி கண்டுபிடிப்பதே போல் அவ்வளவு கஷ்டமானதல்லவா அது! ஆனால் குழந்தைகள் "டிராக்டர், கிணறு, பறவைக்கூடு' என்றெல்லாம் குதூகலத்துடன் கூறியபொழுது, வருங்காலத்தின் மங்கலான தோற்றம் ஒருவாறு காணக் கிடைத்தது என்பதை அவள் உணர்ந்துகொண்டாள்.
"நல்லது, ஸôவுஷ்கின். இங்கே அழைத்து வந்ததற்காக உனக்கு மிக வந்தனம். நீ இந்தப் பாதையாக வரவேண்டுமென்று விரும்பினால் வரலாம்'' என்று கூறினாள்.
ஸôவுஷ்கினுடைய முகம் சிவந்தது. இனிமேல், தான் காலந்தவறாது வந்துவிடுவதாக வாக்களிக்க விரும்பினான். ஆனால் அது பொய்யாகுமே என்ற பயத்தினால் நிறுத்திக் கொண்டான். கழுத்துப் பட்டையை உயர்த்திக்கொண்டு உரோமக் குல்லாயை இழுத்துவிட்டான்.
"உங்களை வீடுவரை கொண்டு விடுகிறேனே...''
"பரவாயில்லை, ஸôவுஷ்கின்; நான் தனியாகப் போய்க்கொள்வேன்.''
அவன் சந்தேகத்துடன் ஆசிரியையைப் பார்த்தான். குச்சி ஒன்றெடுத்து, அதன் வளைந்த நுனியை முறித்து எரிந்துவிட்டு, அதை அன்னா வசீலியெவ்னாவிடம் கொடுத்தான்.
"கடம்பை எதிர்ப்பட்டால் இதைக்கொண்டு முதுகில் ஓர் அடி கொடுங்கள்; அது உடனே ஓடிவிடும். குச்சியை இலேசாக அசைத்தாலே போதும்; அதுதான் நல்லது. இல்லாவிட்டால் அது கோபங்கொண்டு நம் காட்டை விட்டே ஓடிப்போய்விடும்'' என்றான்.
"ஆகட்டும், ஸôவுஷ்கின். நான் அதை அடிக்க மாட்டேன்.''
சிறிது தூரம் சென்ற பிறகு அன்னா வசீலியெவ்னா திரும்பிப் பார்த்தாள். அஸ்தமன சூரியனது ஒளியில் இந்த "ஓக்' மரம் சிவப்பாயும், வெண்மையாயும் தோன்றியது. அதனடியில் ஒரு சிறிய, கறுத்த உருவம் தென்பட்டது. ஸôவுஷ்கின் இன்னும் போகவில்லை. அந்தத் தொலைவிலிருந்து, தனது ஆசிரியைக்குக் காவல் காத்துக்கொண்டிருந்தான். திடீரென்று அன்னா வசீலியெவ்னாவுக்கு, இந்தக் காட்டில் மிகவும் அதிசயமாகவுள்ளது அந்தப் பனிக்கால "ஓக்' மரமல்ல, தாய்நாட்டிற்காகப் போரில் உயிர் நீத்த வீரத் தகப்பனும், ""குளிப்பாட்டும் தாதி''யாக வேலைப் பார்க்கும் தாயும் பெற்றெடுத்த, புரிந்துகொள்வதற்கே இயலாத, இவ்வதிசயமான சிறிய மனிதன்; எதிர்காலப் பிரஜையாகிய இந்த ஸôவுஷ்கின்தான் என்ற உண்மை புலனாயிற்று.
அவனை நோக்கிக் கையை அசைத்து வழியனுப்பினாள். பிறகு வளைந்து செல்லும் நடைபாதை வழியே நிதானமாக நடந்து சென்றாள்.
----------------------
* 1. மரியாதையைக் காட்டுவதற்கு முழுப் பெயரையும் கூறுவது ருஷ்யர்களின் வழக்கம்.
* 2. "வாலென்கி' என்பது ஒரு வகைக் கம்பளிச் செருப்பு.
நூல்: சுங்கான் வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் ரூ.50
சிறுகுறிப்பு: எத்தனை முறைப் படித்தாலும் சலிக்காத சிறுகதை "அவனது ரகசியம்'. இச்சிறுகதையோடு 'சுங்கான்' என்கிற குறுநாவலும், "வெற்றியாளன்' என்கிற சிறுகதையும் உள்ளன. 'வெற்றியாளன்' சிறுகதையும் எல்லாப் போட்டிக் களத்திற்கும் பொருந்தக்கூடிய உலகச் சிறுகதை.
நன்றி: தாவரம்

புலிக்கட்டம் - எஸ். ராமகிருஷ்ணன்

அவன் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. தன்னைச் சுற்றிலும் உள்ள புறவெளியில் பனி இறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். திரட்சி திரட்சியாக வெண்மை படர்ந்து நிரம்புகின்றது. குளிரின் குணத்தால் வீடுகள் கூட உருமாறத் தொடங்குகின்றன. சிவப்பு நாழி ஓட்டு வீடுகள் வளைவுகள் இறங்கும் வெம்பா வீட்டின் செங்கற்களை ஈரமாக்கி வெறிக்கச் செய்கின்றன. மூன்று தெருக்களும் பிரியும் முனையில் இருந்தது அந்த மைதானம். அவனைத் தவிர அந்த மைதானத்தில் இப்போது நின்றுகொண்டிருப்பவை இரண்டு மரங்கள்தான். அவன் கைகள் புங்கை மரத்தில் கட்டப்பட்டிருந்தன. உதடு வெடிக்க அவனையும் குளிர் பற்றிக் கொண்டிருந்தன. உறக்கமற்ற வான்கோழியொன்று கவக்! கவக்! என்றபடி தெருவில் அலைந்து கொண்டிருப்பதைப்  பார்த்துக் கொண்டிருந்தான். வான்கோழியின் அசைவு தெருவையே சலனம்tagore_s.ra_1 கொள்ளச் செய்கிறது.
நீளும் பின்னிரவில்தான் நிலா வெளிப்பட்டிருக்கின்றது. முகத்தில் சரியும் தலைமயிரை நீக்கக்கூட கைகளை அசைக்க முடியாது. வெகு வலுவாகவே கட்டியிருந்தார்கள். புங்கை மரத்தில் காய்கள் சடை சடையாகத் தொங்குகின்றன. பூக்களின் வாடை வேறு. மூன்று தெருவினுள்ளும் தன் போக்கில் அலைகிறது காற்று. எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்தன. வானம் நீலம் இருண்டு கருத்து வெடித்தபடியே நகர்கிறது. புங்கை மரத்தின் பட்டையைப் போல அவனும் மரத்தோடு சேர்ந்து போயிருந்தான். மரத்தின் இலைகள் விரலை அசைத்தபடியிருந்தன. உடம்பின் அடிபட்ட காயங்களில் ஈரக்காற்று புகுந்து வேதனை கொள்ள வைக்கின்றது. தன் கால்களைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தான். காற்று தூக்கி எறியப்பட்ட ஓலைப்பெட்டியை அறுக்கும் சப்தம் கேட்டபடியே இருந்தது. வயசாளியின் இருமலும், தொடர்ந்த புலம்பலும் கேட்கின்றன. அவன் உடம்பில் இரண்டு எறும்புகள் இறங்கத் தொடங்கி இருந்தன. புங்கை மரத்தின் பூக்களின் அடியில் உறங்கிக்கொண்டிருந்த ஜோடி எறும்புகளாக இருக்கக்கூடும். கறுத்த, கட்டுகட்டான வயிற்றோடு எறும்புகள் அவன் நெற்றியில் வந்து நின்று மரத்தின் உருவம் திடீரென மாறிவிட்டது போலத் திகைப்படைந்து, கீழே இறங்க வழியின்றி அலையத் தொடங்கின. வெகுவேகமாக முகத்தின் பரப்பில் எறும்புகள் ஊர்ந்து காது வழியே தோளில் இறங்கி, திரும்பவும் முகத்துக்கே வந்தன. எறும்பினை ஒருபோதும் இத்தனை அருகில் கண்டதேயில்லை. நுட்ப வசீகரமும், உருண்ட கண்களுமாக அவற்றின் அலைச்சல் தீவிரமாகின்றது. உடல் முழுவதும் எறும்பின் பிடியில் சிக்கி சிலிர்த்தது போலாகியது. அவன் இச்சையின்றியே முகம் சுருங்கி விரிகின்றது. இரண்டு எறும்புகளும் நுண்ணிய கால்களால் முகத்தைப் பற்றிக்கொண்டு நகர்கின்றன. வழியின்றி மீண்டும் மரத்தின் கிளைகளை நோக்கி நகர்ந்தன எறும்புகள்.
இந்த இரவின் சில மணி நேரங்களுக்கு முன்பு அவன் கூட ஈர ஓடுகளைப் பற்றி இப்படித்தான் நகர்ந்துகொண்டிருந்தான். அப்போதே காற்றில் குளிர் இருந்தது. சுவர் சுவராகக் கடந்து மேற்கு வளைசலில் அவன் இரவில் போய்க்கொண்டிருக்கும் போது பூசணிக் கொடிகளில் பூக்கள் இரவில் பூத்துவிடுவதைப் பார்த்தான். பின்பனிக் காலத்தில் கேட்பாரற்ற பூசணிக் காய்களின் மீது இலைகள் படர்ந்து மறைக்கின்றன. நாய்களும் கூட அடங்கி மண்ணில் முகத்தைப் புதைத்து உறங்குகின்றன. அவன் இடுப்பில் இருந்த சூரிக் கத்தியை உருவி சுவரில் படர்ந்த கொடிகளை வெட்டியபடியே நடந்தான். சுவர்கள் பொதுமியிருந்தன. பின்கட்டில் உலர வைத்த தானியங்கள், கொத்த கோழிகள் அற்றுக் காய்கின்றன. நீர்த்தொட்டிகளின் சலனமற்ற நீர், நட்சத்திரங்களைக் காட்டிக்கொண்டிருந்தது. தன் முகத்தையும் அதில் பார்த்துக்கொண்டான். சாக்குப் படுதாக்கள் தொங்கும் தொழுவத்தில் இறங்கும்போது மாடுகள் விழித்துக்கொண்டுதான் இருந்தன. தாங்கு கல் வழியே ஏறி ஓட்டின் மீது உட்கார்ந்து கொண்டான். மெல்ல நகர்ந்து ஏறியதும், மைதானத்தின் புங்கை மரங்களும், வேதக் கோயிலின் மணிக்கூண்டும், கண்ணாடி ஜன்னல்களும் தெரிந்தன. இரண்டடுக்கு ஓட்டுச் சரிவினுள் புறாக்கள் இருக்கின்றதா எனப் பார்த்தான். ஓட்டை மிதித்து நடந்தால் புறாக்கள் விம்மி குரல் எழுப்பிவிடும். மரத்தூசுகள் அடர்ந்த அந்தப் பொந்தில் புறாக்கள் இல்லை. குருவி முட்டை தென்பட்டது. வெகு அலட்சியமாகவும் தைரியமாகவும் ஓட்டின் மீது உட்கார்ந்திருந்தான்.
அவன் ஏறியிருந்த வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தார்கள். அந்த வீட்டில் கொடுக்கல் வாங்கல் ரொக்கம் எப்போதும் உண்டு. ஆண்கள் மாதம் ஒரு நாள் வசூலுக்குப் போய்விடுவார்கள்.  இன்று அது தெரிந்துதான் வந்திருந்தான்.
குனிந்த கண்ணாடி ஓடு வழியாக உள்ளே பார்த்தான். கறுப்பேறிய தரை தெரிந்தது. அறையின் ஒரு மூலையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது போலும்; வெளிச்சம் தரைக்கு வருவதும் போவதுமாக இருந்தது. கிழக்கு ஓடு ஒன்றை எடுத்துவிட்டால் உள்ளே இறங்கிவிடலாம். ஓடு சரியாகச் சொருகப்பட்டிருந்தது. கத்தியைக் கொடுத்து நெம்பினான். ஓடு உடைபட்டது. பாதி ஓட்டைக் கையில் எடுக்கும்போது எதிர் மாடியிலிருந்து பூனை தாவி அடுத்த ஓட்டில் நடந்தது. வாலைச் சுருட்டியபடியே அவனைப் பார்த்தபடியே போனது. உடைபட்ட ஓட்டின் வழியே காற்று குபுகுபுவெனப் புகுந்து வீடெங்கும் நிறைகிறது. விளக்கின் வெளிச்சமில்லை. அவன் ஈர ஓடுகளைப் பற்றி உள்ளே இறங்க வழி செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் கை வைத்திர்நுத ஓடு உடைந்தது. எழும் முன்பு வரிசையாக ஓடுகள் உடையும் சப்தத்துடன் உயரத்திலிருந்து வீட்டினுள் விழுந்தான்.
பெண்கள் சப்தத்துடன் எழுந்து கொண்டார்கள். மூத்தவள் கதவைத் திறந்து தெருவில் கத்தியபடி ஓடினாள். தெருவில் அரவம் கேட்கும் முன்பு எழுந்து ஓட முயன்றான். யாரோ அவன் கால்களைக் குறி வைத்து ஊனு கம்பை வீசினார்கள். கால்கள் மடங்கத் தெருவில் விழுந்தான். நாய்களின் தூக்கம் கலைந்த கரைப்பும், குழந்தைகளின் அழுகையொலியும் கேட்கத் தொடங்கின.
அவன் தலைமயிறைப் பற்றியிருந்த கரம் ஒரு வயசாளியினுடையதாக இருந்தது. அரிக்கேன் விளக்குகளுடன் வந்த சிலர் தூரத்தில் வெறித்துக்கொண்டிருந்தார்கள். பெரியவள் ஓடும் போது தள்ளிய கோழிக்கூட்டிலிருந்த குஞ்சுகள் எதையும் அறியாது மேயத் தொடங்கியிருந்தன. முகத்துக்கு எதிராகத் தீக்குச்சியைக் கிழித்துக் காட்டியதும் அவன் கண்களை மூடிக் கொண்டான். ஓங்கி அறை விழுந்தது. ஆள் அடையாளம் சுலபமாகக் கண்டுவிட்டார்கள். பெண்கள் கலையாத உறக்கத்துடன் அவிழ்ந்த சேலைகளைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். பிடரியைப் பிடித்துத் தள்ளியபடி அவனை மைதானத்திலிருக்கும் புங்கை மரத்தில் கட்டி வைக்கக் கூட்டிப் போனபோது, எப்போதுமே உறங்கிக்கொண்டிருக்கும் குருடன் எழுந்து எதையோ விசாரித்தபடி அருகில் வந்துகொண்டிருந்தான். அவன் குரல் இரவுப் பூச்சிகளின் அறுபட்ட சப்தத்தை ஞாபகப்படுத்தின. உறங்கிய நாய்களைத் திட்டியபடியே வந்தான் குருடன்.
நிறைய பணமும், தங்கமு வைத்திருப்பதாக எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்த அந்தக் குருடன், தன் படுக்கையிலேதான் எல்லாவற்றையும் வைத்திருந்தான். எப்போதும் உறங்கியபடிக் கிடக்கும் அவன் குரல் கசப்பும் பிசுபிசுப்பும் கொண்டிருந்தது. அருகில் வந்து அவன் முகத்தில் விரல்களைப் பதித்து அலையும் குருடனின் விரல்கள் மண்புழுவின் நெளிவைப் போல இருந்தன. அசூசையாக இருந்தது. பெருமூச்சு விட்டபடியே திட்டினான் குருடன். தனியே வீட்டுக்குப் போகும்வரை பேசியபடியே நடந்த குருடனுக்குப் பின்னால் அவனைத் தள்ளிக் கொண்டு வந்து புங்கை மரத்தில் கட்டினார்கள்.
அம்மாவின் பின் ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த சிறுமிகளில் ஒருத்தியை அவன் பார்த்தபடியே இருந்தான். அவள், அம்மாவிடம் “கள்ளப்பய, என்னயவே பாக்கான்” எனச் சிணுங்கினாள். சிறுமியின் முகத்தை சேலை மறைத்துக் கொண்டது. உறக்கம் கலைந்த இரண்டு சிறுவர்கள் மரத்தின் எதிரேயிருந்த கல்லில் உட்கார்ந்து அவனைப் பார்த்தபடியே இருந்தார்கள். ஒடிசலான, கன்னம் ஒட்டிய உருவத்தை கள்ளன் என அவர்கள் ஒருபோதும் நினைவு கொண்டதில்லை. அவன் தலைமயிர் சரிய குனிந்திருந்தான். காலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவனைக் கூட்டிப் போகும்போது உடன் போக வேணுமென சிறுவர்கள் பேசிக் கொண்டார்கள். கூட்டம் கலைந்திருந்தது. அந்தச் சிறுவர்களை வீட்டுக்குள் விரட்டிவிட்டுப் பெரியவர் கல்லில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். வீட்டுப் பெண்கள் அலுத்தபடியே கலைந்து போகும்போது அவன் மனைவியின் சாயல் கொண்ட ஒருத்தி கூட அந்தக் கூட்டத்தில் கலைந்துபோனாள். வீட்டில் விளக்கைப் பெரிதாகத் தூண்டிவிட்டு உறக்கம் வரும்வரை அவர்கள் இனிப் பேசிக்கொண்டிருப்பார்கள் எனத் தோணியது.
சிகரெட் புகை அவன் முகத்தைச் சுற்றியது. நாக்கில் சிகரெட் சுவை தானே ஊறியது. காற்றைக் கிழித்துக்கொண்டான். வீட்டில் இந்நேரம் மனைவி உறங்கியிருப்பாள். அவளுக்குக் குழந்தைகள் மேல் எப்போதும் ஆசைதான். எட்டு வருசமாகியும் குழந்தையில்லை. இப்போதும் சிறு பெண்ணைப் போல யாரு வீட்டிலாவது திருகைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அவளுக்கு மிகச் சிறிய கண்கள். அவள் பெட்டியில், உலர்ந்த தாழம்பூ மடல் கிடப்பது கூட ஏனோ ஞாபகம் வருகிறது.
திடீரென ஏற்பட்ட அதிர்வென்று ஊர் அடங்காமலேதான் இருந்தது. அந்த இரண்டு எறும்புகள் அவன் தலைக்கு வருவதும், மேலேறுவதுமாகவே அலைந்தன. பனி கால்களின் அடியில் இறங்குவதை உணர்ந்தான். பறவைகள் எதுவும் அடையாத மரமாக இருந்தது.
கட்டி வைக்கப்பட்ட அவனுக்குக் காவலாக யாராவது ஒருவர் மட்டும் மைதானத்தில் இருக்கலாம் எனப் பேசிக் கொண்டார்கள். எப்போதோ பல வருடங்களுக்கு முன்பு பிடிபட்டு கட்டி வைக்கப்பட்ட கள்ளன் ஒருவன் உதடுகள் வெடித்து, குளிர் தாங்காது செத்துக் கிடந்ததை யாரும் இன்னும் மறக்கவே இல்லை. அந்த மரம் இப்போதில்லை. பெண்களின் பயத்தால் வெட்டுப்பட்டுப் போனது.
ஆனால் இறந்துபோன கள்ளன் இரவெல்லாம் கடுமையாக முனங்கினான். திடீரென வெறி வந்தது போலக் கத்துவான். மரத்தையே சாய்த்துக்கொண்டு ஓடுபவன் போல மூர்க்கம் கொள்வான். சமயங்களில் தானே பலருடன் பேசிக்கொண்டது போல பேசிக்கொண்டிருந்தான். அப்போதும் நல்ல பனிக்காலம். நடமாட்டம் அற்ற தெருக்கள். அவன் குளிரை பேயை விரட்டுவது போல இரவெல்லாம் திட்டியபடி இருந்தான்.  அவன் சப்தம் ஓய்ந்து இறந்துபோனபோது ஊரில் வெம்பா அடர்ந்து போயிருந்தது. மூன்று நாள்களுக்கு அவன் உடல் ஊரிலே கிடந்தது. ஆள் அடையாளம் தேடி தெற்குப்பக்கம் போனவர்களும் திரும்பிவிட்டார்கள். அவன் முதுகில் தேளின் உருவத்தைப் பச்சை குத்தியிருந்தான். அந்தக் கள்ளன் யாரென்று தெரியவே இல்லை. அவனை அந்த ஊர்க்காரர்களே சேர்ந்து எரித்து வந்தார்கள். அதற்குப் பிறகு அந்த வருடம் ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வந்ததையும், ஊரின் பல வீடுகளில் தேள் உதிர்ந்ததையும் கண்டார்கள். அந்த மடங்கிய கால்கள் பெண்களின் ஞாபகத்தினுள் புதையுண்டிருந்தது நெடுங்காலமாய்.
அதன்பிறகு இப்போதுதான் அவர்கள் இன்னொருவனைப் பிடித்திருக்கிறார்கள். காவலுக்காயிருந்து ஓர் இடத்தில் நிற்காமல் நடப்பதும், கைகளை சொடுக்கிக்கொள்வதுமாக இருந்தான். அவன் விரல்களில் பாம்பு மோதிரமிட்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. காவலுக்கு இருந்தவன் சமயங்களில் அவன் அருகில் வந்து தலைமயிரைப் பற்றித் தூக்கி மூச்சு வருகிறதா எனப் பார்த்துக்கொண்டான். பனி அதிகமானதும் காவல்காரனும் போய்விட்ட பின்பு அவன் மட்டும் நின்றிருந்தான்.
விழித்திருக்க இருக்க பசியும் தாகமும் அதிகமாகிக்கொண்டே போனது. அந்தச் சிறுவர்கள் இன்று இரவு உறங்க மாட்டார்கள் என்றே தோணியது.
அவன் சிறுவனாகயிருந்தபோது உறங்குவதை விடவும் ஊர் சுற்றுவதிலேதான் விருப்பப்பட்டான். உறங்குவதாயினும் காட்டுவெளியின் கோயில் படிகளிலோ, வைக்கோல் போரில் புரண்டோ உறங்க விரும்பினான். அய்யாவின் பழக்கமும் அப்படியே இருந்தது. ஊரில் கிடைபோடும் கீதாரிகள் வரும் காலத்தில் அய்யா அவர்களோடு காட்டில்தான் தங்குவார். அவனும் உடன் போவான். கீதாரிகளுடன் காட்டில் உறங்கும்போது அதிசயக்கனவுகளின் ஊற்று கசிந்து பெருகத் தொடங்கும். கீதாரிகள் அய்யாவுக்குப் பயந்தார்கள்.
காட்டில் சாப்பாட்டு ருசி மாறிவிடும். நிலா வெளிச்சத்தில் மணலில் அய்யா பதினெட்டாம் புலி கட்டம் வரைவார். மணல் கோடுகள் கட்டமாகும். கீதாரிகள் அவரோடு விளையாட பயந்தார்கள். சிவக்குளம் கீதாரி அய்யாவோடு விளையாடினான். அய்யாவுக்குப் புலிகள். கீதாரிக்கு ஆடு. புலியாட்டம் தொடங்கியது. அய்யாவின் புலிகளால் ஒரு ஆட்டைக் கூட தொட முடியவில்லை. ஆடுகள் புலியை அடைத்துவிட்டன. ஏழு ஆட்டம் தொடர்ந்து புலிகளே அடைபட்டன. கீதாரி ஜெயித்துக் கொண்டே இருந்தான். எட்டாவது ஆட்டத்தில் கீதாரி தற்செயலாக அய்யாவின் கண்களைப் பார்த்தான். கோபமும் குரோதமும் கொண்ட அந்த கண்கள் புலியை ஞாபகப்படுத்தின எட்டாவது ஆட்டத்தில் வேண்டுமென்றே புலி, ஆடுகளை வெட்ட வழி பண்ணி ஆடினான் கீதாரி. அய்யாவுக்குக் கோபம் அதிகமானது. “விட்டுக் கொடுத்து விளையாட வேண்டியதில்லை” என அதட்டினார். அடைபட்ட ஒரு புலி மட்டுமே மிஞ்சியபோது கீதாரி ஆட்டத்தை நிறுத்திவிட்டு மல்லி காபி போடத் தொடங்கினான்.
தூரத்தில் கிடை ஆடுகள் தரை பார்த்து அசைவற்று நின்றன. அய்யா அடைபட்ட புலிகளைப் பார்த்தபடியே இருந்தார். நெருப்பு கல்லி நின்று வெடித்து செத்தைகளில் தாவியது. பூதாகரமான நிழல்கள் தோன்றி மறைந்தன. மல்லி வாடை கொதித்தது. சூடாக மல்லி காப்பியைக் குடித்துவிட்டும் அய்யா தோற்றுத்தான் போனார்.  கீதாரி ஆடுகளுக்கு நடுவில் உறங்கப் போனான். அவனும் அய்யாவும் புலிக்கட்டத்தின் பக்கமே படுத்துக் கிடந்தார்கள். விளையாட்டில் புலியாக மாறியிருந்த  கற்கள், இப்போது வெறும் கற்களாக இருந்தன. அய்யாவுக்கு உறக்கம் கொள்ளவே இல்லை. புரண்டுகொண்டே இருந்தார்.
கீதாரி ஆடுகளுக்குள் பதுங்கி வரும் உருவத்தைப் பார்த்தபடியே படுத்துக் கிடந்தான். அய்யாதான் கையில் கத்தியோடு ஆடுகளுக்குள் பதுங்கி கீதாரி படுத்துக் கிடந்த இடத்துக்குப் போய்க் கொண்டிருந்தார். ஆடுகள் உடம்பை நெளித்துக் கொண்டன. கோழை ஒழுகும் மூக்கை அய்யா மேல் உரசி நின்றன ஆடுகள். அய்யா அருகில் வந்து எழும்போது, கீதாரி ஆடுகளை விரட்டுவது போல எதிர்ப்பக்கம் சூ! சூ! எனக் குரல் கொடுத்தான். கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு அய்யா, தீப்பெட்டி கேட்டபடியே, இன்னொரு ஆட்டம் போடலாமா எனக் கேட்டார். அவன் அந்த இடத்திலே அய்யா காலில் விழுந்து, “எதும் தப்பா நடந்திருந்தா... மன்னிச்சிருங்க. பிழைக்க வந்தவன்” எனக் கும்பிட்டு எழுந்தான். அய்யா அவனோடு உட்கார்ந்து கொண்டார். விடியும்வரை கீதாரி தன் குடும்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான். அன்றிரவு ஆற்று மணலில் படுத்துக் கிடந்தபோது அடித்த ஆட்டுக் குட்டிகளின் பால் வாடை அவனுக்குப் பிடித்திருந்தது.
சிகரெட் புகையும் அடங்கிவிட்டது. அவன் மரத்தோடு சரிந்து நின்றுகொண்டிருந்தான். வெம்பா படர ஆரம்பித்து, அடுத்திருக்கும் மரம், வீடுகள், வேதக் கோயில், வான்கோழி எதுவும் தெரியவில்லை. எல்லாமும் வெம்பாவினுள் போய் விட்டன. மரத்தின் இலை இலையாக வெம்பா படிகிறது. குளிர்ச்சி கொண்ட மரம் அசைவற்று நின்றது. அவன் எதையும் பார்க்காமலிருக்கக் கண்களை மூடிக்கொண்டான். பட்டை உதிர்ந்த மரத்தில் ஈரம் குபுகுபுவென ஊருகின்றது.
அடைக்காமல் விட்டுப்போன கோழிக் குஞ்சுகள் வெம்பாவில் மாட்டிக்கொண்டு சப்தமடைகின்றன. அவன் தளர்ந்து போயிருந்தான். மெல்ல தான் மரத்தினுள் புகுந்துவிட்டது போலவும், எல்லாக் கிளைகளும் தன்னிடமிருந்தே கிளைக்கின்றன எனவும் உணர்வு கொண்டான். இப்போது மரத்தின் முண்டுகளும், வெடிப்பும், அசைவற்ற தன்மையும் அவனுக்கு துக்கத்தையே தந்தன. தன் கைகள் கட்டப்படாமல் உயரே அசைத்துக்கொண்டிருப்பதாகத் தோணியது.
மரத்தின் வயிறு திறந்து அதனுள் புகுந்துகொண்டது போன்றும், பசுமைச் சாறுகள் தன் உடலெங்கும் ஓடுவதாகவும், வெகு பாதுகாப்பான இடத்தினுள் தான் பதுங்கியுள்ளதாகவும் உணர்ந்தான். உடல் பருமன் அழிந்து மரமெங்கும் நீண்டது. ஊரின் உயரத்துக்கு வியாபகம் கொண்டிருந்தது மரம். அண்ணாந்து பார்த்தபோது ஆயிரக்கணக்கான இலைகளும், காய்களும் விநோதமாகத் தோன்றின. புங்கை இலைகளைச் சொருகிக்கொண்டு வேட்டைக்குப் போனதன் ஞாபகம் திரும்பியது.
வேட்டைக்குச் செல்லும் அய்யாவின் பின்பு உடம்பில், தலையில் இலைகளைக் குத்திக்கொண்டு துணை வேட்டையாடி, தெருச் சுற்றி வரும்போது அறுபட்ட கோழியின் ரத்தம் தெருவெங்கும் திட்டுதிட்டாகப் படியும்.
ஆகாசம் கூட இப்போது கலங்கிய ரத்தத் திட்டைப் போலச் சிதறிக் கொண்டிருந்தது. ஈரம் நிரம்பத் தொடங்க, உடல் துவண்டு உறக்கத்தினுள் இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு புள்ளியில் பனி சில்லிட அவன் உறக்கம் கொண்டான். எதுவும் அப்போது நினைவில் இல்லை. வெயில் பட்டபோதே நினைவு வந்தது.
அந்தச் சிறுவர்கள் இருவரும் எதிரில் உட்கார்ந்திருந்தனர். சிறுவர்களில் ஒருவனிடம் அவனின் சூரிக் கத்தி இருந்தது. அதைக் காட்டி மற்றவர்களை மிரட்டிக் கொண்டிருந்தான். மைதானம் பிரகாசமாகி, மரம் அவனை வெளியேற்றியது போல் திமிறி நின்றது. ஊரின் அமைப்பே மாறியிருந்தது. அவனைக் கூட்டிப் போக வந்திருந்த ஆட்கள் குளித்து, படியத் தலை வாரியிருந்தார்கள். மரத்தில் சரிந்திருந்த அவன் தலையை நிமிருந்து பார்த்தபடி பேசிக்கொண்டார்கள். 
“கிறங்கிப் போயி கிடக்கான். கஞ்சித் தண்ணி கொடுத்துத்தான் கூட்டிட்டுப்  போகனும்.” 
சிறுவர்களில் ஒருவன் வேகமாக ஓடி தண்ணீர் செம்பும், கஞ்சியுமாக வந்தான். எதையும் குடிக்க முடியவில்லை. வயிற்றைப் புரட்டியது. பெண்கள் சிறு குழந்தைகளுக்குக் கள்ளப் பயல் காட்டிக்கொண்டிருந்தார்கள். வெயில் ஏறியிருந்தது. இரவில் பார்த்த முகங்கள் எல்லாம் மாறியிருந்தன. அவனை தெரு வழியாக நடத்திக் கூட்டிப்போகும் போது நாய்கள் குலைத்தபடி பின்தொடர்ந்தன. அவன் தெரு தாண்டும்போது திரும்பி வந்த மைதானத்தைப் பார்த்தான்.
மரம் வெயிலில் நின்றிருந்தது. இரவிலிருந்து கீழே இறங்க வழியற்றுத் திரிந்த இரண்டு எறும்புகள் வேகமாக மரத்தில் இறங்கத் தொடங்கின. அவன் தலை இருந்த இடம் வந்ததும் திகைப்படைந்து நின்று மெல்லக் கால்களை நகர்த்தி ஊர்ந்தன. மரம் தன் உருவில் இருப்பதாக உணர்ந்ததும் வேகமாக இறங்கித் தரையில் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் ஊரைக் கடந்து போயிருந்தார்கள். சூரியன் உச்சிக்கு வந்திருந்தது.
*******
1992

அட்டமா சித்தி உபதேசித்த படலம்...!


ஒரு சமயம் கார்த்திகைப் பெண்களின் ஆணவத்தையும் அடக்க திருவிளையாடல் புரிந்தார் சோமசுந்தரர். கைலாயத்தில் ஒருமுறை அவர் உமாதேவியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமாசித்திகளும் எட்டுப் பெண்களாக உருமாறி, அம்பிகைக்கு சேவை செய்து கொண்டிருந்தன. அந்த சித்திகளின் மகிமை அளவிடற்கரியது. அந்த சித்திகளைப் பெற வேண்டுமானால் பெரும் தவம் செய்ய வேண்டும். கார்த்திகைப் பெண்களுக்கு அந்த சித்திகளைப் பெறும் ஆசை இருந்தது. அதைப் பெறுவதற்காக கைலாயம் வந்த அவர்கள், சிவபெருமானை வணங்கி, ஐயனே! அஷ்டமாசித்தியை எங்களுக்கு அருளவேண்டும், என்று கேட்டுக்கொண்டனர். அவர் அந்தப்பெண்களிடம், பெண்களே! அஷ்டமாசித்திகளும் அம்பிகையின் பணிப்பெண்களாக உள்ளனர். அவற்றைப் பெற வேண்டுமானால் நீங்கள் அம்பாளை வழிபட வேண்டும். அவளைப் போய் கேளுங்கள், என சொல்லிவிட்டார். அப்போது, அந்தப்பெண்களின் விதிப்பலன் மாறும் சமயமாக இருந்தது. இதனால், புத்திகெட்டு போன அவர்கள் அம்பிகையை மதிக்காமல் அங்கிருந்து கிளம்பினர். அவளுக்கு மரியாதை நிமித்தம் கூட வணக்கம் சொல்லவில்லை. தன் கட்டளையையும் மீறி, அம்பிகையையும் வணங்காமல் சென்ற அந்தப் பெண்களை சிவன் சபித்து விட்டார்.
ஏ பெண்களே! நீங்கள் என் கட்டளையையும் மீறி, அம்பாளையும் மதிக்காமல் சென்றதால் நீங்கள் பட்டுப்போன மரங்கள் போல் ஏதுமே இல்லாமல் போகக் கடவீர்களாக, என்றார். அந்தப் பெண்கள் பட்டுப்போன மரங்களைப் போல் தங்கள் அழகு, ஐஸ்வர்யம் அனைத்தையும் இழந்து பூலோகத்தில் வந்து விழுந்தனர். அவர்கள் விழுந்த இடமே பட்டமங்கை எனப்பட்டது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலம் என்ற பெயரில் இப்போதும் இந்த ஊர் உள்ளது. அவ்வூரில் அவர்கள் கல்லாகக் கிடந்ததாகவும் வரலாறு உண்டு. ஆயிரம் தேவஆண்டுகள் அவ்வாறு கல்லாகக் கிடந்த அவர்களை, அங்கிருந்த ஆலமரத்தின் பழங்கள் விழுந்து விழுந்து மூடின. சாப விமோசன நேரத்தில் அந்தப் பழங்களின் ஊடேயிருந்து அந்தக் கற்கள் வெளிப்பட்டன. அங்கே லிங்கவடிவில் இருந்த சுந்தரேஸ்வரரின் கருணைப் பார்வையால் விமோசனம் பெற்று தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர். உமாதேவியாரிடம் மன்னிப்பு கேட்டு, அஷ்டமா சித்திகளையும் வேண்டினர். அவர்களிடம் சிவபöருமான், பெண்களே! சிவயோகிகள் இத்தகைய சித்திகளை விரும்பமாட்டார்கள். அந்த சித்திகளின் பெருமையை மட்டும் உங்களுக்கு சொல்கிறேன். அவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள், என்று சொல்லி உபதேசித்தார். அந்தப் பெண்களும் உபதேசத்தைக் கேட்டு, சிவயோகினிகளாக மாறினர். பட்டமங்கலத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகைப் பெண்களின் சிலைகள் இப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது. சித்திகள் எட்டு வகைப்படும். அவையாவன: அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பனவாகும். இவை அஞ்ஞானம் நீங்கிய ஞானிகளின் விளையாட்டுகளின் வகைகளாகும்.
மிக நுண்ணிய உயிர்கள் தோறும் தான் மிக்க சிறுமையாகிய பரமாணுவாய்ச் சென்று தங்கும் நுண்மையே அணிமா ஆகும். மண் தத்துவம் முதல் சிவத்தத்துவம் வரை, முப்பத்தாறு தத்துவங்களின் உள்ளும் புறமும் நீங்காமல், நிறைந்துள்ள பெருமையே மகிமா ஆகும். மேருமலை போலக் கனத்திருக்கும் யோகியை எடுத்தால், இலேசான பரமாணுவைப் போல் கனமற்று இருப்பதே இலகிமா ஆகும். லேசான பரமாணுவைப் போல் மெலிந்திருக்கும் யோகியை எடுத்தால், மேருமலையின் பாரம் போலக் கனமாக இருப்பது கரிமா ஆகும். பாதலத்தில் உள்ள ஒருவன், பிரமலோகத்தில் புகுவது, மீண்டும் பாதலத்தை அடைவது பிராத்தி ஆகும். வேறு உடலிற் புகுதலும், விண்ணில் சஞ்சரித்தலும், தான் விரும்பிய இன்பங்கள் அனைத்தையும், தான் இருக்கும் இடத்திலே நினைத்த வண்ணம் வரச் செய்தலும் பிராகாமியம் ஆகும். சிவபெருமானைப் போல் ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும், தம் இச்சையின்படியே இயற்றி, சூரியன் முதல் ஒன்பது கோள்களும் ஏவல் கேட்க வீற்றிருப்பதுவே ஈசத்துவம் ஆகும். அவுணர், பறவை, விலங்கு, பூதம், மனிதர் முதலிய பல்வகை உயிர்களையும் இந்திரன் முதலிய திக்குப் பாலர் எண்மறையும் தன் வசமாகச் செய்து கொள்வது வசித்துவம் ஆகும். சிவபெருமான் இயக்கியர் அறுவருக்கும் இந்த அட்டமா சித்திகள் பற்றித் தெளிவுபட உபதேசித்தருளினார். இயக்கிமார்கள் அறுவரும் உமாதேவியாரின் தியான வலியாலே நன்கு பயின்றனர். பிறகு விண் வழியே சென்று கயிலை மலையை அடைந்தார்கள்.

பாத மலர் - எஸ். வைத்தீஸ்வரன் கவிதைகள்

பாத மலர்
மலரற்ற தார் ரோடில் 
பாதங்கள் விழிக்கு மலர். 
கார் அலையும் தெருக்கடலில் 
பாதங்கள் மிதக்கும் மலர்.vaideeswaran-01 
வெயில் எரிக்கும் 
வெறுந் தரையில் 
வழி யெதிரில் 
பாவாடை நிழலுக்குள் 
பதுங்கி வரும் வெண் முயல்கள். 
மண்ணை மிதித்து 
மனதைக் கலைத்தது, 
முன்னே நகர்ந்து 
மலரைப் பழித்தது 
பாதங்கள்.
மனிதனுக்கு
மேக நிழல் 
மிக மெல்லிய நைலான் துணியாய் 
நிலத்தில் புரளும், 
பகல். 
தார் ரோடில் 
தன் நிழலை நசுக்கி மிதித்து 
வாழ்க்கையின் மூலச்சூட்டால் 
கொதித்தோடும் 
மனித வாகனங்கள் பல. 
வயிற்றின் நிழலாய் 
பசி பின்தொடர 
வாழ்வின் நிழலாய் 
தன்னலம் பதுங்க, 
வறட்சியில் புரட்சி, கட்சி, 
நகரெங்கும் நிழற்கடல்கள், 
அதன் மோதல்கள். 
கணத்திற்குக் கணம் 
தான் காய்ந்து 
பொது நிழல் பரப்பக் 
கிளைகள் வளர்க்கும் 
மரங்களும் உண்டு 
இந்த மனிதனுக்கு.

நன்றி: அரியவை

Long-term economic impact of childhood sexual abuse on survivors

Key findings include:
* 5.6 per cent of men and 6.7 per cent of women in the study said that they had experienced childhood sexual abuse (CSA).
* Looking at people aged 50 to 64, 17 per cent of male and 14 percent of female survivors of CSA were out of the labour force as a result of being sick or permanently disabled. (The corresponding figures for those who had not experienced CSA were 8 and 6 per cent respectively.)
* Controlling for factors such as age and education, the gap between male survivors of CSA and other men is even greater, with CSA survivors being three times more likely to be sick or disabled.
* After controlling for factors like age and education, it is estimated that male survivors of CSA live in households where the household income is 34 per cent lower.
* Male survivors of CSA are twice as likely to be living alone compared to other men.

Suspect gene corrupts neural connections


iPSC-induced neurons drom Schizophrenia patients with DISC1 (Disrupted In Schizophrenia-1) gene mutation, , expressed 80 percent less DISC1 protein compared to members without the mutation. These mutant neurons showed deficient cellular machinery for communicating with other neurons at synapses.
The researchers traced these deficits to errant expression of genes known to be involved in synaptic transmission, brain development, and keyextensions of neurons where synapses are located. Among these abnormally expressed genes were 89 previously linked to schizophrenia, bipolar disorder, depression, and other major mental disorders. This was surprising, as DISC1's role as a hub that regulates expression of many genes implicated in mental disorders had not previously been appreciated.
The clincher came when researchers experimentally produced the synapse deficits by genetically engineering the DISC1 mutation into otherwise normal iPSC neurons – and, conversely, corrected the synapse deficits in DISC1 mutant iPSC neurons by genetically engineering a fully functional DISC1 gene into them. This established that the DISC1 mutation, was, indeed the cause of the deficits.
Researchers reported their discovery in the journal Nature.

Ganesha lovely photo


Exquisite sculptures at a medieval temple Ganesh Bag, Chitrakoot(Uttar Pradesh)


Telegram has become the hottest messaging app in the world (வாட்ஸ்ஆப்-யை வீழ்த்திய டெலிகிராம் மென்பொருள்)

Telegram is a messaging app with a focus on speed and security. It’s superfast, simple and free.
With Telegram, you can create group chats with up to 200 people so you can stay connected with everyone at once. Plus, you can share videos up to 1GB, send multiple photos from the web, and forward any media you receive in an instant. All your messages are in the cloud, so you can easily access them from any of your devices.
For those interested in maximum privacy, we've added Secret Chats, featuring end-to-end encryption to ensure that a message can only be read by its intended recipient. When it comes to Secret Chats, nothing is logged on our servers and you can automatically program the messages to self-destruct from both devices so there is never any record of it.
 Telegram has been  built to make messaging safe again so you can take back your right to privacy.
Why Switch to Telegram?
FAST: Telegram is the fastest messaging app on the market because it uses a decentralized infrastructure with data centers positioned around the globe to connect people to the closest possible server.
SECURE: Security flaws in popular apps like WhatsApp have gotten a lot of bad press recently, so we made it our mission to provide the best security on the market.
CLOUD STORAGE: Never lose your data again! Telegram offers free unlimited cloud storage for all your Telegram messages and media that you can securely access from multiple devices.
GROUP CHAT & SHARING: With Telegram, you can form large group chats (up to 200 members), quickly share gigabyte size videos, and send all the photos you want to friends.
RELIABLE: Built to deliver your messages in the minimum bytes possible, Telegram is the most reliable messaging system ever made. It even works on the weakest mobile connections!
100% FREE & NO ADS: Telegram is free and will always be free. We do not plan to sell ads or introduce subscription fees.
When WhatsApp went down for four hours this weekend, nearly 5 million people signed up for messaging service Telegram. The app skyrocketed to the top of the App Store charts, and is now the top free app in 46 countries from Germany to Ecuador. In the US and several other countries, the app is no. 1 in the social networking category, ahead of Facebook, WhatsApp, Kik, and others.
It’s not immediately clear why Telegram emerged as the alternative of choice following WhatsApp’s downtime. Users could have switched to Kik, or Facebook Messenger, or LINE — all of which have hundreds of millions of users. There’s seemingly something different about Telegram. Its rise isn’t only due to WhatsApp’s acquisition and subsequent downtime. "We have been the no. 1 app in Spanish, Arabic, and several Latin American app stores for several weeks before the Facebook deal happened," says Telegram's Markus Ra. "The growth was there — so the WhatsApp acquisition and problems merely multiplied the effect across all affected countries." According to app analytics site App Annie, Telegram started truly gaining steam on February 17th, days before the WhatsApp news even hit.
Built by the pioneering Durov brothers behind Russia’s largest social network, VKontakte (also known as VK), Telegram is a messaging service combining the speed of WhatsApp with Snapchat’s ephemerality and advanced new security measures. WhatsApp might have heralded the first time we heard of Telegram, but it certainly won't be the last.
வாட்ஸ்ஆப்-யை வீழ்த்திய டெலிகிராம் மென்பொருள்; இது முற்றிலும் இலவசம் (வீடியோ)
முகநூலுக்கு அடுத்த படியாக மக்களை அதிகம் கவர்ந்தது வாட்ஸ்ஆப் என்னும் மென்பொருள். இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளின் அதிவேக வளர்ச்சியை கண்ட பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை சத்தமில்லாமல் விலைக்கு வாங்கியது. இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளை வீழ்த்த டெலிகிராம் என்ற புதிய மென்பொருள் சந்தைக்கு வந்துள்ளது. வாட்ஸ்ஆப்பில் இருக்கும் பயன்களைவிட இதில் அதிகம் உள்ளது. மேலும் பாதுகாப்பு வசதிகளும் இதில் அதிகம் காணப்படுகின்றது.
வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல் வருடம் மட்டுமே இலவசம். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் இந்த மென்பொருளை உபயோகப் படுத்த கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் டெலிகிராம் மென்பொருளை லைஃப்லாங் முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருளில் அனுப்பபட்ட தகவல்களை அனுப்பியவர் அழித்தால், அனுப்பப்பட்டவரின் மொபைல் போனில் அப்படியே இருக்கும். ஆனால் டெலிகிராமில் ஒருவர் அழித்த செய்தி, மற்றொருவர் மொபைலிலும் அதே நேரத்தில் அழிந்துவிடும். இதனால் தவறாக அனுப்பப்பட்ட செய்தியை அவர்கள் பார்பதற்கு முன்னரே அழித்துவிடலாம்.
வாட்ஸ்ஆப்பில் உள்ள குரூப்பில் 50 நபர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்ப முடியும். ஆனால் டெலிகிராமில் 200 நபர்களுக்கு குரூப் மூலம் செய்திகள் அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப்பில் வீடியோ, ஆடியோ, போட்டோஸ் ஆகியவற்றை மட்டும் தான் அனுப்பமுடியும். ஆனால் டெலிகிராமில் எல்லா விதமான பைல்களையும் அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருளை மொபைல் போன்களை தவிர கணினியில் நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆனால் டெலிகிராம் மென்பொருளை மொபைல், டேப்லெட்கள் மற்றும் கணினியில் விண்டோஸ், மேக் இயங்குதளங்களில் நேரடியாக உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருள் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்-யை வாங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பையும் பின்வாங்கிகொண்டது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் உங்களுடைய புகைப்படங்களை உங்கள் விருப்பம் இல்லாமல் வேறு யாரும் பார்க்கமுடியாது. மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அளித்துள்ளனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருள் ஆங்கில மொழியில் மட்டுமே உருவாகப்பட்டுள்ளது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் ஆங்கிலம், ஸ்பானிஸ், அரபிக் ஆகிய மூன்று மொழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்பொழுது சொல்லுங்கள் வாட்ஸ்ஆப்-யை விட டெலிகிராம் மென்பொருள் சிறந்தது தானே. இன்றே இதை டவுன்லோட் செய்து பாதுகாப்பாக சாட்டிங் செய்யுங்கள்.
இதை டவுன்லோட் செய்வதற்கு கீழ் உள்ள இணையதளத்திற்கு செல்லுங்கள்:
website version - (இணைய தளம் மூலம் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்) - http://zhukov.github.io/webogram/#
pc mac/windows/linux - https://tdesktop.com/

திருக்குறள் கவிதைகள் அறத்துப்பால் வான் சிறப்பு


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். (17) 
ஆழ்கடல் குளித்தெழுந்து
அன்றாடம் நீர்முகந்து...
ஐப்பசியில் கட்டவிழ்ந்து
அடைமழையாய்
ஆகாது போயின் மேகம்...
முத்து, பவழம் விளை
கத்துக்கடலும்
வற்றுமே...வளமிழக்குமே

Charting culture

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

1976 இல் ஆப்பிரிக்காவில் பல உயிர்களை வாங்கிய ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோய் தான் எபோலா வைரஸ். இந்த வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலா ஆற்றங்கரையில் தோன்றியதால் இந்த நோய்க்கு, 'எபோலா வைரஸ்' என, பெயர் வந்தது. இதுவரை ஆப்பிரிக்காவில் பரவி பல மக்களை கொன்றுள்ளது.

ஏனெனில் ஆப்பிரிக்காவில் இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தது இல்லை. மேலும் இதற்கு இன்னும் போதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோயினால் தாக்கப்பட்டால் மரணத்தைக் கூட தழுவக்கூடும். எபோலா வைரஸ் நோயானது காற்று, நீர் போன்றவற்றினால் பரக்கூடியது அல்ல. விலங்குகளான குரங்கு, வௌவால் மூலம் மனிதர்களுக்கு பரவும். மேலும்ம் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் மலத்தில் இருந்து மற்ற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.
இப்போது இந்தியாவில் பரவியுள்ளதாக கூறப்படும் இந்த எபோலா வைரஸின் அறிகுறிகள் மற்றும் அந்த நோய் பரவுவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போம். முக்கியமாக இந்த நோய் தாக்கி இதன் அறிகுறிகள் தெரிய 5-21 நாட்கள் ஆகும். ஆகவே கவனமாக இருங்கள்.
எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...
* எபோலா வைரஸ் தாக்கியிருந்தால், முதலில் காய்ச்சல் வரக்கூடும்.
* காய்ச்சலைத் தொடர்ந்து உடல் எப்போதும் மிகவும் சோர்வுடன் வலிமை இல்லாமல் இருக்கும்.
* குறிப்பாக தலைவலி வரும்.
* வைரஸ் தாக்குதலால் தொண்டையில் புண் ஏற்படும்.
* கடுமையான தசை மற்றும் மூட்டு வலி வந்து, பெரும் தொந்தரவைத் தரும்.
நோய் முற்றிய நிலையில்....
* எதை சாப்பிட்டாலும் வாந்தி வரக்கூடும்.
* வயிற்று வலி வந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் எபோலா வைரஸ் தாக்கியிருந்தால் கடுமையான வயிற்று வலி வரும்.
* அதிகளவு வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்.
* அதைத் தொடர்ந்து சருமத்தில் அரிப்புகளும், கட்டிகளும் ஏற்படும்.
* குறிப்பாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்க ஆரம்பிக்கும்.
* சிலருக்கு நெஞ்சு வலி வரும்.
* மூச்சு விடுவதில் கூட சிலருக்கு சிரமம் ஏற்படும்.
* உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் இரத்தம் வழிய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி கண்கள் சிவப்பாகவும், அடிக்கடி விக்கல் ஏற்படும்.
எபோலா நோய் பரவுவதை தடுக்கும் வழிகள்.....
* நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் அதிகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
* முக்கியமாக அந்நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களின் அருகில் செல்லும் போது கையுறை மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் இரத்தம் உங்கள் மீது பட்டாலும் உங்களுக்கும் இந்நோய் தொற்றிக் கொள்ளும்.
* எப்போதும் எந்த ஒரு பொருளை உட்கொள்ளும் முன்னர் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவி விட வேண்டும்.
குறிப்பு.......
இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், உடலில் அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் வண்ணம் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்து வந்தால், இந்த உயிர்க்கொல்லி நோயின் தாக்குதலில் இருந்து வெளிவரலாம்.
( படிக்கும் அனைவரும் share செய்யவும் நன்றி

Wednesday, August 13, 2014

ஏழரைச் சனி என்ன செய்யும்?

ஏழரைச் சனி என்ன செய்யும்? காலத்தை கி.மு., கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு., ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும், நிதானமும் ஆச்சரியமானது. முதிர்ந்த வார்த்தைகளால் அனுபவப்பூர்வமாகப் பேச வைக்கிறது. இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்... உங்கள் ராசிக்கு முன்னும், உங்கள் ராசிக்குள்ளும், அடுத்துள்ள ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம்.
சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும், வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும், கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர். பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் தெரியும். முதல் சுற்று முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்... எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் போட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்... எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்பதுபோல பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக, குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் பிரச்னை பெரிதாகும். தேன்கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வயது வரையுள்ள ஏழரை சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். உங்கள் குடும்பத்திற்கு வழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்க வேண்டும். ஏட்டறிவு, எழுத்தறிவு, சொல்லறிவு எல்லாவற்றையும் தாண்டிய அனுபவ அறிவை ஏற்றி வைப்பார். தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளையை தடியெடுத்துத் திருத்தும் வாத்தியார்தான் சனி பகவான். ‘‘சாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப் போடா’’ என்று அம்மா சொன்னால், ‘‘எங்கயோ இருக்கற சாமிக்கு என் பிரேயர்தான் முக்கியமா?’’ என்பார்கள். ஆனால், சிக்கலில் தவிக்கும்போது தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். விபரீதங்களைப் பற்றி யோசிக்காமல், ‘‘சும்மா ஜாலிக்குத்தான் அப்படி பண்ணேன்’’ என்று ஏழரையில் பல வினைகளைக் கொண்டு வருவார்கள். ஏழரை சனியில் பெறும் அனுபவங்களும், அவமானங்களும், காயங்களும், வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடி இருக்கும். ‘‘ரெண்டு மார்க் அதிகமா எடுத்திருந்தா தலையெழுத்தே மாறியிருக்கும். இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்ப வைப்பார். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனி பகவான். சரி, இதற்கு என்னதான் செய்வது? குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட் என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்.
அடுத்ததாக இரண்டாவது சுற்று! இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம் போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால், கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘ஒண்ணுமே இல்லாத ஓட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் இப்படி எடுத்துக் கொள்கிறார்? யாரிடமிருந்து பறித்துக் கொள்வார்? ‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது. எனக்கு மிஞ்சி என்ன இருக்கு’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சிலர், மிதமிஞ்சிய செல்வ வளத்தால் பிரச்னைகளை உருவாக்குவார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று செல்வாக்கை நிரூபிக்கத் துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று தன்னடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே, ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார் சனி. பழைய நிலைக்கே கொண்டு செல்லத் திட்டமிடுவார். ஆகவே, கவனமாக இருங்கள். பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததைப் பிடுங்க தயங்க மாட்டார். சனி பகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்வோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். எதுவும் இல்லாதபோது இருந்த வீரமெல்லாம், எல்லாமும் வந்த பிறகு போய்விடும். ‘‘நாலு பேர் என்ன நினைப்பாங்க’’ என்றே, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் தெரியாமல் ஓரமாக உட்கார்ந்து உள்ளுக்குள் அழ வைப்பார். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட், கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும், கறுப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனா, ‘‘இந்த விஷயத்தைப் போய் நாம எப்படி சொல்றது? என்னை தப்பா நினைச்சிட்டா...’’ என்று தயங்குவீர்கள். பிறகு எப்படித்தான் இருக்க வேண்டும்? வசதி வரும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் குடிசை மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு, வாரி சுருட்டும்போது சனி பகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால், வேலை பார்த்த நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டிப்பு வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால் பாதை மாறினால், அதலபாதாளம்தான். தவறான வாய்ப்புகள் வந்தாலும், திசை மாறக் கூடாது. ‘‘சார்... நம்ம தொழிலுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும் கலந்து விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமில்லை. நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக மனதில் பதித்துக் கொள்ளுங்கள். ஏழரை சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர். இன்னொரு விஷயம்... நம்பிக்கை துரோகம் செய்தவர்களை பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்கியம் பாதிக்கும். ஏழரை சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும், அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வஜென்மத் தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.
ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளை குறைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் எது எதுவோ சாப்பிடும்போது, தயிர் சாதத்தோடு அமைதியாக இருங்கள். எல்லாவற்றிலும் எல்லை தாண்டக் கூடாது. எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று இருக்கக் கூடாது. சனி பகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தர்றாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். பிரதிபலன் பாராமல் உதவிகள் செய்தால், பொங்கு சனி நல்ல பலன்களைக் கொடுக்கும்.
அடுத்து மூன்றாவது சுற்று. கிட்டத்தட்ட ஐம்பது வயதைத் தாண்டி வரும் ஏழரை சனி. இதுதான் உங்களுக்கு கடைசிச் சனி என்று யாராவது பயமுறுத்தினால் கலங்காதீர்கள். படபடப்பையும் பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களையும் மீறி ஒரு கட்டுப்பாடு உள்ளுக்குள் வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால், அதை மூன்றாக்கி, அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான்... அதீத இயக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தி, உயர்த்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போகத் தயாராக இருந்தால், பையை எடுத்துக்கொண்டு தான்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும். எது நடந்தாலும் குற்றத்தைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்க வேண்டாம். ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் வீட்டை அலுவலகமாக பார்க்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மா ஆகலாம். ஆசைகளைத் துறந்தால் புத்தன் ஆகலாம் என்பதை இந்த சுற்றில் மறக்காதீர்கள். எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். ஏழரை சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல. சனி பகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள். தடுக்கி விழுந்த குழந்தையை தூக்கி விடுவதைப் போல, ஆங்காங்கு கோயில்களில் வீற்றிருக்கும் இறைவனே மனிதர்களைத் தூக்கி நிறுத்துகிறார். ‘‘என்னைப் பார்த்து பயப்படாதீர்கள். நான் எத்தனை கருணைமிக்கவன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்’’ என்கிற விதமாக சனி பகவான் பல்வேறு தலங்களில் எழுந்தருளி இருக்கிறார். அப்படித்தான் திருநள்ளாறு தலத்திலும், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு தலத்திலும் பேரருள் புரிகிறார். இந்த தலங்களுக்கு சென்று வாருங்கள். பிரச்னைகளெல்லாம் எப்படித் தீர்கிறது என்று பாருங்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வரும் பிரச்னைகளுக்கு தீர்வுகளைத் தேடி வந்தோம். ‘முட்ட முட்டப் பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கு அன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ’ என்கிறாள் ஔவை பாட்டி. ‘‘மிகவும் கடுமையான பஞ்சமாக இருந்தாலும், பிரச்னைகள் துரத்தினாலும், நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பு ஈசனுடையது என்பதை நெஞ்சமே நீ மறக்காதே’’ என்கிறாள். எனவே, எத்தனை பிரச்னைகள் வந்தாலும் இறைவனை சரணாகதி செய்வோம் பணவசதி உள்ளவர்கள் தகுந்த ஹோம்மம் செய்து கொள்வதால் கடுமையை குறைககலாம். கண்னி துலராசி விருச்சிக ராசி மேலும் மீனம் கடக ராசிக் காரர்களுகுகு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் டி.எஸ்.பி. வெள்ளத்துரை

துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டாவைவிட அதிவேகமாக ஆக்சன் எடுக்கும் ஆக்சன் கிங்!!!
தன்னுடைய துப்பாக்கி சத்ததாலே தமிழகத்தை தன்பக்கம் திரும்பி பார்த்த ஒரு தைரியமான, எவருக்கும் பயப்படாத நேர்மையான அதிகாரி,
வீரமும், கோபமும் விளைந்து நிற்கும் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் பிறந்தவர்தான் இந்த வல்லவர்!!! தமிழக காவல்துறையில் அதி உயர் கல்வித் தகுதியுடையவர் இவர்.
எம்.ஏ. (சரித்திரம்) எம்.ஏ. (போலீஸ் நிர்வாகம்) என டபுள் எம்.ஏ.வுடன், பி.ஹெச்டி வரை முடித்த ஒரே தமிழக போலீஸ் அதிகாரி இவர்தான்
தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தபிறகு ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமர குருபரர் கலை கல்லூரியில் ப்ரோபோசராக பணியில் சேர்ந்தார், பின் மூன்று வருடம் பணியை தொடர்ந்து 1994ஆம் ஆண்டு எஸ்.ஐ தேர்வுக்கு சென்றார்,
அதன் காரணமாக 1997ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார், பின்னர் 1999 ஆம் ஆண்டு புதுகோட்டை, கீரனூர்-இல் உதவி ஆய்வாளராக பணியை தொடர்ந்தார்,
என்னுடைய முதல் என்கவுண்டர், திருச்சி லால்குடி கோர்ட் மாஜிதிரட் முன்னாடி கூண்டில் இருந்தவரை கழுத்தை அறுத்து கொன்றான் ரவுடியான கோசிஜன், அவன்தான் இவருடைய துப்பாக்கிக்கு கிடைத்த முதல் களை!!!
அப்போதும் அவருக்கு எந்த ஒரு பதட்டமும் இருந்தது இல்லை, அவருடைய பி.பி பரிசோதனை செய்த மருத்துவர் நார்மலாக இருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுத்தார், இப்பவும் அப்படியேதான் இருக்கிறார், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரை ரோல் மாடலாக கொண்டிருப்பார்கள், அதுபோல இவருக்கும் ரோல் மாடல் ஆப்பிசர் உண்டு, அவர்கள் யாரென்றால் "திரிபாதி சார் மற்றும் வால்டர் தேவாரம்" அவர்கள்..... இவர்களை போல தன்னுடைய பாதையை அமைக்கவேண்டும் என்றே லட்சியம் கொண்டவர்,
இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், நெல்லுக்கு பக்கத்தில் களை வளரத்தான் செய்யும், அதை சமையம் பார்த்து புடுங்கி எறியவேண்டும், இல்லையென்றால் அது நெல்லையும் நாசமாக்கி விடும், வயலையும் நாசமாக்கி விடும், அது போலதான் இவருடைய ஆக்சனும், 1000 பேர் சந்தோசமாக இருக்கிறார்கள், அந்த 1000 பேரின் சந்தோசத்தை ஒருவன் கெடுக்கிறான் என்றால் அவனை கொள்வதில் தவறு இல்லை என்பதே இவரது எண்ணம்!!!
ரவுடிசத்தை ஒழிப்பது என்ற விஷயத்தில் முனைப்பான அதிகாரி என்று பெயரெடுத்த டி.எஸ்.பி. வெள்ளத்துரை தன்னுடைய கண்பார்வையிலேயே கண்ணீர் விடவைத்தவர், தமிழகத்தில் ரவுடிகளை வேர் அறுப்பதே இவருடைய லட்சியம்... எவருக்கும் பதறாமல் ஆழ்மனதில் தவறு என்று தெரிந்ததை தைரியமாக தட்டிகேட்கும் தளபதி!!!
மக்கள் பயபடமால் நடமாட ஆதரவாக இருக்கும் கண்ணியமிக்க கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய.திரு.வெள்ளத்துரை அவர்களுடைய பணிசிறக்க, பணி தொடர மனதார வாழ்த்துகிறோம்.... சல்யூட்....
என்றும் உங்களுடன்..........