மனித மூளையில் இருக்கும் ரகசியங்களை ஆய்வாளர்கள் அறிய முடியும் |
மனித மூளையை விஞ்ஞானிகள் படிக்க முடியும் என்கிற தகவல் புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக மூளையில் வார்த்தைகள் எவ்விதம் படிகின்றன என்பதை ஆய்வாளர்கள் அறிய முடியும். மூளையில் படியும் வார்த்தைகளை கண்டறிய விஞ்ஞானிகள் மின்கடத்தி எனப்படும் எல்க்ட்ரோடுகளை பயன்படுத்தினர். இதன் மூலம் எழுப்பப்படும் ஒலிகள் மூலம் மூளையில் பதிவாகும் மொழி வார்த்தைகளை அறிய முடிகிறது. மனம் எனப்படும் மூளையில் உள்ள தகவல்களை வேறு யாருமே அறிய முடியாது. மனதில் உள்ள ரகசியம் சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்ற காலம் மலையேறி வருகிறது. மூளையில் உள்ள வார்த்தை பதிவுகளை கண்டறியும் ஆராய்ச்சியை வாஷிங்டன் பல்கலைகழகத்தின் நரம்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினர் மேற்கொண்டனர். இந்த ஆய்வு இத்துறையின் இயக்குனர் எரிக் லெதார்ட் தலைமையில் நடத்தப்பட்டது. சிந்திப்பதில் தடுமாற்றம் உள்ள நரம்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு 64 எலக்ட்ரோடுகளை மூளைப்பகுதியில் பதித்து ஆய்வு செய்யப்பட்டது. மூளை நரம்புப் பகுதியில் எதனால் குறைபாடு ஏற்படுகிறது என்பதை கண்டறிய கூடுதல் எல்க்ட்ரோடுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். ஒலிகளை பற்றி சிந்திக்கும் மூளை ஒருவித சமிஞ்ஞைகளை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் அவர்கள் பேசும் போது வேறுவித நிலை காணப்படுகிறது. ஓபரேஷன் செய்யாமலே மூளை விவரங்களை இந்த புதிய ஆய்வின் மூலம் அறிய முடியும். இந்த ஆய்வு அறிக்கை நியூரல் என்ஜினியரிங் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. |
No comments:
Post a Comment