இறப்பைக் குறைக்குமா அஸ்பிரின்: குழப்பமான புதிய ஆய்வு முடிவுகள் |
அஸ்பிரின் குறித்த பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அம்மருந்து மனிதர்களை நீண்டநாள் உயிர்வாழ வைக்குமா என்பது பற்றி இணக்கப்பாட்டுக்கு விஞ்ஞானிகளால் வர முடியவில்லை. ஒட்டுமொத்த இறப்பு வீதத்தில் தாக்கத்தைக் கண்டறிவதில் ஆய்வொன்று தவறியதைத் தொடர்ந்து ஒரு மாதத்தின் பின்னர் அதே தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எதிர்மாறான முடிவுகள் வந்துள்ளன. அஸ்பிரின் பாவிப்பதில் உள்ள பலன்கள் மற்றும் சிக்கல்களுக்கு இடையிலான நடுநிலைத்தன்மை அஸ்பிரினுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் அமெரிக்க மருத்துவ சஞ்சிகை ஒன்றில் எழுதியுள்ளனர். உலகில் அதிகமாகப் பாவிக்கப்படும் மருந்தான அஸ்பிரின் ஏற்கனவே ஒரு தடவை மாரடைப்பு நோய் வந்தவர்களுக்கு உபயோகம் மிக்கதாய் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது பக்கவிளைவுகளைக் கொண்டுள்ள போதும் இரண்டாவது மாரடைப்பு ஏற்படுவதைக் குறைக்கிறது என்கின்றனர். அஸ்பிரின் உபயோகத்தில் உள்ள ஒட்டுமொத்த தீங்குகள் மற்றும் பலன்களை அளவிடுவதற்கான புதிய ஆய்வொன்று முயற்சித்தது. இந்த ஆய்வு 100,000 ஆண்கள் மற்றும் பெண்களிடையே 4 முதல் 10 வருடங்கள் வரை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் சிலர் ஆரோக்கியமாகவும் சிலர் சர்க்கரை வியாதிக்கு ஆட்பட்டிருந்த போதும் எவருக்கும் நெஞ்சு வலியோ வேறு ஏதேனும் இதய நோய்க்குறிகளோ தென்படவில்லை. இந்த அறிக்கையை எழுதியவரின் கருத்துப்படி அஸ்பிரின் மருந்து உட்கொள்ளாத 3.74 வீதமானவர்களுடன் ஒப்பிடுகையில் அஸ்பிரின் மருந்தினை சிறிய அளவில் உட்கொண்ட 3.65 வீதமானவர்கள் பரீட்சார்த்த முயற்சியின் போது இறந்தனர். ஆனால் தரவுகளை உற்று நோக்கும் போது இந்த பரீட்சார்த்த முயற்சியின் போது ஒரு இறப்பைத் தவிர்ப்பதற்காக 1,111 பேர் அன்றாடம் அஸ்பிரின் உட்கொள்ள வேண்டியவர்களாக இருந்தனர். இவர்களில் 9 பேர் இரத்தப்போக்குள்ள குடற்புண்ணிற்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததோடு 4 பேர் வரையில் ஹூமோர்ஹெஜிக் போன்ற அதிக இரத்தப் பெருக்கிற்கு உள்ளாக நேர்ந்தது. நோயாளர் இதய நோய் சிக்கல்களுக்கான காரணிகளைப் பெற்றிராவிட்டால் அவர்களுக்கு அஸ்பிரின் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என இந்த புதிய ஆய்வில் கலந்துகொள்ளாத நியுயார்க்கின் சென்.லூக்கஸ் ரூஸ்வெல்ட் மருத்துவமனையில் உயர் இரத்த அழுத்த திட்டத்திற்குத் தலைமை தாங்கிய மருத்துவர் பிரான்ஸ் மெஸர்லி ரொய்டர்ஸ் சுகாதார வெளியீட்டிற்குத் தெரிவித்தார். இந்நிலையில் கனடாவிலுள்ள ஹெமில்டனின் மெக் மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஜோன் ஈக்கிள்பூமிடம் இது பற்றிக் கருத்துக்கேட்ட போது அவர் கருத்துரைக்க மறுத்துவிட்டார். எனினும் ஆய்வுகளின் முடிவில் ஆய்வாளர்கள் சிலவற்றைக் கண்டறிந்தனர். அஸ்பிரின் பாவிக்காத 1.91 வீதமானவர்களுடன் ஒப்பிடுகையில் 1.68 வீதமான அஸ்பிரின் பாவனையாளர்கள் மாரடைப்பு நோயினால் அவதிப்பட்டார்கள். அதாவது ஒரு மாரடைப்பினைத் தவிர்க்க 435 ஆரோக்கியமான நபர்கள் அன்றாடம் அஸ்பிரினை உட்கொள்ள வேண்டி இருந்தது. |
No comments:
Post a Comment