Tuesday, May 31, 2011

புதன் என்னும் மாயகிரகம் ! ''பொன் கிடைக்தாலும் புதன் கிடைக்காது'..புதன் கிடைத்துவிட்டது, பொன்தான் கிடைக்காது போல இருக்கின்றது.

புதன் என்னும் மாயகிரகம் ! ''பொன் கிடைக்தாலும் புதன் கிடைக்காது'..புதன் கிடைத்துவிட்டது, பொன்தான் கிடைக்காது போல இருக்கின்றது.

புதன் என்னும் மாயகிரகம் !

புகழ்பெற்ற வானியல் விஞ்ஞானி கோப்பர்னிக்கஸ் மரணப்படுக்கையில் கிடக்கும் போது கடைசிவரை என்னால் புதன் கிரகத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்ததுடன் கூறினாராம். அவரால் பார்க்க முடியாமல் போனாலும் தற்போதைய தலைமுறைக்கு புதன் கிரகத்தின் படங்களையும், அதைபற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை மெசஞ்சர் விண்கலம் ஏற்படுத்தியிருக்கிறது.

சூரியகுடும்பத்தின் முதல்கிரகம் புதன். பூமியை போல புதன் தன்னை தனே சுற்றிக்கொள்வதில்லை. சூரியனை சுற்ற அது எடுத்துக்கொள்ளும் காலம் 88 நாட்கள். சூரியனிலிருந்து 6 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அதன் பகல் பொழுது வெப்பம் 400 டிகிரி செல்சியஸ், இரவு பகுதி வெப்பம் - 260 டிகிரி செல்சியஸ். ஒரு செகண்டிற்கு 29.4 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிறது. பூமியில் 18 புதன் கிரகங்களை போட்டு நிரப்பிவிடலாம், அந்த அளவுக்கு சிறியது. இது போன்ற தகவல்களை தொலைநோக்கிகள், கணக்கீடுகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.

1973ம் ஆண்டு அமெரிக்காவால் அனுப்பட்ட மாரினார் 10 விண்கலம் ஒரு புதிய தகவலை சொன்னது. புதன் கிரகத்தின் அடர்த்தி அதிகம். வெள்ளி, பூமி, செவ்வாய் கிரகங்களில் பாறை பகுதி 70 சதமாகவும் 30 சதம் இரும்பு உள்ளடக்கமாகவும் இருக்கிறது.புதனில் 30 சதம் பாறை பகுதியும், 70 சதம் இரும்பு உள்ளடக்கம் கொண்டதாகவும் இருக்கிறது.

1977ம் ஆண்டு அனுப்பட்ட வாயேஜர்- 2 விண்கலம் வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன் கிரகங்களை ஆராய்ந்துவிட்டு சூரியமண்டலத்தின் எல்லையைத் தாண்டி சென்றுவிட்டது. வியாழன் கிரகத்தை கலிலியோ விண்கலம் 1995 முதல் 14 ஆண்டுகள் ஆராய்ந்தது. 2004ம் ஆண்டு முதல் சனிகிரகத்தை காசினி விண்கலம் சுற்றி வருகிறது. வெள்ளி கிரகத்தை மெகல்லன் விண்கலம் போன்ற பல விண்கலங்கள் மூலம் ஆராயப்ட்டுள்ளது. ஆனால் புதன் கிரகத்தின் மீது விஞ்ஞானிகளின் பார்வை திரும்பவேயில்லை.

புதன் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்புவதில் பிரச்சனைகள் உண்டு. பூமியானது சூரியனில் இருந்து சுமார்15 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. புதன் சூரியனிலிருந்து வெறும் 6 கோடி கி.மீ. தெலைவில் உள்ளது.புதன் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்புவது சூரியனை நோக்கி அனுப்புவதற்கு சமம்.இதில் இரண்டு பிரச்சனைகள் உண்டு. வெப்பம் அதிகரிக்கும், மேலும் விண்கலத்தின் வேகம் அதிகரிக்கும்.புதன் கிரகத்தை செல்வதற்கு பதிலாக சூரியனைநோக்கி சென்று சாம்பலாகிவிடும். புதன் கிரகத்தை நெருங்கி புதன் கிரகத்தின் ஈர்ப்பு பிடியில் சிக்குகிற அளவுக்கு விண்கலத்தின் வேகம் குறைந்தால்தான் விண்கலம் புதன் கிரகத்தை சுற்ற ஆரம்பிக்கும். வேகத்தை குறைப்பது தான் பிரச்சனை.

2004 ஆகஸ்டில் அனுப்பபட்ட மெசஞ்சர் வினாடிக்கு 640 கிலேமீட்டர் வேகத்தில் பயணம் செய்தது. இதன் வேகத்தை படிப்படியாக குறைக்க புதிய வழி கையாளப்பட்டது.இதன் படி மெசஞ்சர் விண்கலம் சூரியனை ஒரு சுற்றுசுற்றிவிட்டு மறு ஆண்டு ஆகஸ்டில் பூமியை நெருங்கியது. அப்போது அதன் வேகம் சற்று குறைந்தது.பின்னர் மேலும் சில சுற்றுகள் சுற்றிவிட்டு வெள்ளி கிரகத்தை 2006 - மற்றும் 2007ம் ஆண்டில் கடந்து சென்றது. அதனால் மேலும் வேகம் குறைக்கப்பட்டது. பின்னர் சூரியனை மேலும் சிலமுறை சுற்றிக்கொண்டே புதன் கிரகத்தை நெருங்கியது.இந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி புதன் பிடியில் சிக்கி சுற்ற ஆரம்பித்தது. அமெரிக்க நாசா விண்வெளி அமைப்பை சேர்ந்த சென்வான்யென் எனபவர்தான் மெசஞ்சர் விண்கலத்தின் பாதையை திட்டமிட்டு கொடுத்தார்.

பூமியிலிருந்து புதன் கிரகம் அதிகபட்சமாக 22 கோடி கிலோமீட்டர் துரத்தில் தான் உள்ளது. 2004 ம் ஆண்டில் செலுத்தபட்ட மெசஞ்சர் ஆறரை ஆண்டுகாலம் விண்ணில் அங்கும் இங்குமாக வட்டமடித்து புதனை நெருங்கிய போது அது பயணம் செய்த தூரம் 790 கோடி கிலோ மீட்டர். சூரியனின் அதிகமான வெப்பத்தை தாங்க காப்பு கேடயம் தாயாரிக்க மட்டும் 7 ஆண்டுகள் பிடித்தன. மேலும் விண்கலத்தை உருவாக்கதிட்டம், அதை செய்துமுடிக்க ஆகும் காலம், பாதை உத்திகளை உருவாக்க என சுமார் 20ஆண்டுகள் பிடித்தன.

மெசஞ்சர் விண்கலம் 363 புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் இருட்டு பகுதியில் ''டெபுசி'' என்று அழைக்கப்படுகிற கதிர்வீச்சு காணப்படுவதாகவும். அதன் பகல் பகுதியும், இருள்பகுதியும் சந்திக்கும் பகுதியில் ஒளிவட்டம் போன்ற வளையம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். மெசஞ்சர் மேலும் அனுப்புகிற தகவல்களை கொண்டு புதன் என்னும் மாய உலகத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

புதன் கிரகத்தை பற்றி ''பொன் கிடைக்தாலும் புதன் கிடைக்காது'' என்ற மிக பிரபலமான சொலவடை தமிழகத்தில் உள்ளது. புதனை வெறுங்கண்ணால் பார்க்க இயலும் என்றாலும் எளிதில் தென்படாது. சூரியனுக்குப் பக்கத்தில் இருப்பதால் அதிகாலையில் கிழக்குப்பக்கம் சூரிய உதயதிற்கு முன்னால் சிறிது நேரம் தெரியும், அல்லது மாலை நேரம் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மங்களான சிறிய புள்ளியாகத் தெரியும். மெசஞ்சர் விண்கலம் மூலமாக புதன் கிடைத்து விட்டது. பொன்(தங்கம்) தான் எட்டமுடியாத அளவிற்கு விலை ஏறிக்கொண்டே போகிறது

No comments:

Post a Comment