Friday, October 27, 2017

“இராபர்ட் கால்டுவெல்” Bishop Robert Caldwell (7 May 1814 – 28 August 1891)

Govindarajan Vijaya Padma


Born: 7 May 1814, Clady, United Kingdom
Died: 28 August 1891, Kodaikanal, India
Education: University of Glasgow
Known for: Bishop in South India

Bishop Robert Caldwell (7 May 1814 – 28 August 1891) was a missionary and linguist, who academically established the Dravidian family of languages. He served as Assistant Bishop of Tirunelveli from 1877. He was described in The Hindu as a "pioneering champion of the downtrodden" and an "avant-garde social reformer". The Government of Tamil Nadu has created a memorial in his honor and a postage stamp has been issued in his name. a statue of Caldwell was erected in 1967 near to Marina Beach, Chennai, as a gift of the Church of South India.

கால்டுவெல் அவர்கள் பல மொழிகளை கற்றவர், இந்தியாவுக்கு வந்தபின்னர் 15,மொழிகளைக் கற்றுக்கொண்டார்.இப்போதுள்ள நூல்களின் வரிசையில் திராவிடம் என்ற சொல் முதன்முதலில் கால்டுவெல் அவர்களால் தான் பயன்படுத்த ப்பட்டுள்ளது. இந்த மண்ணில் காலம் காலமாக வாழ்ந்தவர்கள் திராவிடர்கள்(தமிழர்கள்) அவர்கள் பேசிய மொழி தமிழ் என்பதை சரியான ஆய்வுகளின் படி உலகிற்கு காட்டியவர்.தமிழ் மொழி செம்மொழி என்று உலகிற்கு ஆதாரத்துடன் எடுத்து கூறியவர்
பல்வேறு வட்டார வழக்குகளை கொண்டுள்ள தமிழ்மொழியின் பேச்சு வழக்கை தெரிந்துகொள்ளவும், தமிழ்மொழியின் மூலத்தை ஆய்வு செய்யவும் விரும்பிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார்.இந்த ஆய்வுகளின் முடிவில் கிடைத்த தகவல்களை கொண்டு "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely)'' என்னும் நூலை எழுதினார். இது 1881-ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. "தொடக்க காலம் முதல் கி.பி. 1881 வரையிலான திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறுகளை கொண்ட இந்நூலில், இந்தியர்களுக்கு வரலாற்று அறிவோ, நிகழ்வுகளை ஆவணப்பூர்வமாக பதிந்துவைக்கும் அவசியமோ தெரியவில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டுடன் தொடங்கும் கால்டுவெல், ஒன்பது பகுதிகளாக நூலை எழுதியிருக்கிறார். முதல் இயலில் மாலிக்காபூர் படையெடுப்பு, காயல் துறைமுகத்தில் நடந்த முத்துக்குளிப்பு என ஒவ்வொரு இயலையும் வரலாற்றுப் பூர்வமாக உருவாக்கியிருக்கிறார். கட்டபொம்மன் தூக்கிலிடப்படும் நிகழ்வு, ஊமைத்துரை, மருது சகோதரர்களை ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள், முகமது யூசுப்கானிடமிருந்து மதுரையை ஆங்கிலேயர் கைப்பற்றிய வரலாறு போன்றவை தெளிவாக இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந் நூலில், பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும்,அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் குறிப்பிட்டுள்ள கால்டுவெல், பழந்தமிழரின் வாணிப நகரமாக இருந்த கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, துறைமுகத்தின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பை வெளிக்கொண்டுவந்தார்.
இந்த காலகட்டங்களில், சிங்கள வரலாற்று இலக்கிய நூலான மகாவம்சம் நூலின் துணைகொண்டு ஈழ-தமிழக உறவுகளையும் கால்டுவெல் ஆய்வு செய்தார், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் எழுதிய பலகட்டுரைகளை ஆய்வு செய்தார். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனக்கண்டார்.
ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்து தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் தான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளையும், தமிழகமெங்கும் தாம் மேற்கொண்ட பயணத்தின் வழியாக மொழிகளில் தனக்கு கிடைத்த தரவுகளை ஓன்று திரட்டிய “கால்டுவெல்” ஆய்வுக்கட்டுரைகளை எழுதினர். பின்னர் அவற்றையெல்லாம் தொகுத்து 1856-ல், “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
அதில், மலையாளம், தெலுங்கு, கன்னடம்,துளு ஆகிய மொழிகளில் உள்ள சமற்கிருத மொழியின் கலப்பு குறித்த தனது ஆய்வில், இந்த மொழிக்கலப்பு உண்மையான தேவை குறித்து மேற்கொள்ளாது, காலக் கோளாறு விரும்பும் வெளிப்பாட்டுக் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டது” என்று கூறினார். மேலும், தெலுங்கு, கண்டம், மலையாளம் ஆகிய மொழிகள் தத்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாது என்ற அளவு சமற்கிருத சொற்களை அளவுக்கு மீறி கடன் வாங்கியுள்ளன. ஆதலின், சமற்கிருத கலவைகளை கைவிடுவது தெலுங்கு மொழிக்கு அரிதாம் என்பது உண்மை. கன்னடத்திற்கு அதனிலும் அரிதாம். மலையாளத்திற்கு அவை எல்லாவற்றை காட்டிலும் அரிதாம் என்றவர்.
ஆனால், திராவிட மொழிகளில் அனைத்திலும் உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் “தமிழ்” தண்ணிடையே இடம் பெற்றிருக்கும் சமற்கிருத சொற்களை அறவே ஒழித்துவிட்டு தனித்து உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல், வளம் பெற்று வளர்வதும் இயலும், அவ்வாறு கைவிடுவது ஒன்றினாலேயே, தமிழ் மொழி முன்னைய நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக பெரு நிலையை பெற்றுவிடும் என்று கூறினார்.
“கால்டுவெல்” பெருமகனாரின் இந்த ஆய்வு நூல், தேவ பாஷையான சமற்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி, மற்றதெல்லாம் நீஷ மொழிகள் என்று எளனம் செய்துகொண்டிருந்த வடமொழி ஆசிரியர்கள் எல்லோரையும் அடித்து தள்ளியது.
உலக அரங்கில் இருந்த அனைத்து மொழி அறிஞர்களும் “கால்டுவெல்” அவர்களின் ஆய்வு முடிவுகளை ஏற்றனர். கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்பட்டது. கால்டுவெல் பெருமகனாரின் ஆய்வுப்பணிகளைக் கண்ட “கிளாஸ்கோ” பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அதன் பிறகுதான், தமிழ் மொழியும் செம்மொழி தான் என்று உலகமே ஒத்துக் கொண்டது.


No comments:

Post a Comment