Thursday, May 5, 2016

படம் "ஜீீரோ"


சில படங்கள் மட்டுமே படம் பார்த்தபின்னும் நம்மை யோசிக்க வைக்கும் அப்படி ஒரு படம்.பெரிய மாஸ் ஹீரோ பிம்பம் உள்ளவர்களே இது போன்ற கதைகளை எடுக்க அஞ்சுவர்.அப்படியிருக்க துணிச்சலாக இப்படி ஒரு தளத்தை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கும் நடிகருக்கும் ஹேட்ஸ்ஆஃப்.
கதை:
வழக்கமான பேய், பிசாசு படங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு ஆதாம், ஏவாள் காலம் ஆரம்பித்து இன்றும் தொடரும் சாத்தானின் ஆதிக்கத்தையும் பேண்டஸி கலந்து காட்டியிருக்கும் படம் தான் இந்த ஜீரோ’.

தனது தந்தைக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட ஆதரவற்ற பெண்ணான ஷிவதாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார் சமூக சேவகரான அஸ்வின். தனிக்குடித்தனமும் செய்துகொள்கிறார்கள். ஆனால் அதை தொடர்ந்து ஷிவதாவுக்கு பலவித குழப்பமான நினைவுகள் அடிக்கடி வந்து அவரை டார்ச்சர் செய்கின்றன.
இதனால் பாதிக்கப்படும் ஷிவதாவின் நடவடிக்கைகள் அவரை மனநோயாளி போலவே ஆக்கிவிடுகின்றன. அதை தொடர்ந்து நிகழும் சம்பவங்கள் அஸ்வினை கலவரமூட்டவே, மருத்துவரான ஷார்மிளா மற்றும் ஆத்மாக்களுடன் பேசும் ஜே.டி.சக்கரவர்த்தி ஆகியோரின் மூலமாக சாத்தானின் ஏவலால் ஷிவதா பாதிக்கப்பட்டதாக தெரியா வருகிறது.
சாத்தானின் நோக்கம் என்ன..? எதற்காக அது ஷிவதாவை தேர்ந்தெடுத்தது..? ஷிவதாவை சாத்தானின் பிடியில் இருந்து அஸ்வினால் காப்பாற்ற முடிந்ததா..? என்பதே கதை.
இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு அமானுஷ்ய பின்னணியில் அதேபோன்ற வேறொரு உலகத்தை இந்த ‘ஜீரோ’வுக்காக சிருஷ்டித்துள்ளார்கள்.. இந்த புதிய முயற்சி பாராட்டப்பட வேண்டியதே. இரண்டாம் உலகத்திலேயே warm hole,parralel universe போன்ற அறிவியல் கோட்பாடுகளை லேசாக தொட்டிருப்பார் செல்வராகவன்.
அதே போல இதிலும் ஆவி உலகம்,மரணத்திற்கு பிந்தைய நிலை போன்ற சில சிக்கலான விஷயங்களை கையாண்டுள்ளனர்.இவை இப்போது வணிகரீதியாக தோல்வியுற்றாலும் தமிழ் சினிமா தரத்தை உலக அளவில் தூக்கிப்பிடிக்கும் கலைப்படைப்பாகவும் குப்பைகளுக்கு நடுவில் மாணிக்கங்களாகவும் திகழ்கின்றன.இவை எதிர்காலத்தில் நினைவுகூறப்படும்.
இது போன்ற இயக்குநர்களை பெரும் நடிகர்கள் பயன்படுத்தி கொண்டால் தமிழ் சினிமா ஹாலிவுட்டுக்கு நிகராக உயரும்.
கா.அருண் பாண்டியன்.

No comments:

Post a Comment