Saturday, November 14, 2015

பூமித்தாய் மறைத்து வைத்திருக்கும் மனிதரில்லா ஒரு மர்மதேசம்..!!!





மக்களின் மரியாதையை பெற்ற ஒரு மலை என்றால், அது சீனாவில் உள்ள
டியான்சி மலைதான்.
அமைவிடம் :-
சீனாவின் ஹூணான் மாகாணத்தில்
உள்ள வுலிங்யூன் மாவட்டத்தில்,
ஷாங்ஜியாஜி நகரில், இந்த டியான்சி
மலை அமைந்துள்ளது.
இதன் அருகில் க்சோக்ஷியு
பள்ளத்தாக்கும் உள்ளது.
டியான்ஷி என்றால் ’சொர்க்கத்தின்
மகன்’(Son of Heaven) என்று பெயர். இந்த பெயர் விளங்கக் காரணம், அந்த மலை அருகில் வசிக்கும் உள்ளூர்
விவசாயிகள் துஜியா இனக்குழு என
அழைக்கப்பட்டனர். அவர்களுடைய எழுச்சியும் வளர்ச்சியும் வெற்றிபெற்றதால், அதற்கு
இந்த மலையும் ஒரு காரணமாக
நினைத்தனர். அந்த மகிழ்ச்சியில் இந்த
பெயரை அவர்களின் தலைவனான
ஷியாங் துகன் வைத்தார்.
இந்த பெயரில் சீன பேரரசரின் பாரம்பரிய பட்டப்பெயரும் உள்ளது ஒரு
சுவாரஸ்யம்... இந்த மலைக்கு வெளியில் மார்பிள் தயாரிக்கப்படுவது
அதன்புகழுக்கு இன்னும் ஒரு மகுடம்
ஆகும்.
இந்த மலை சீனாவின் சிறந்த சுற்றுலா
தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
பார்வையாளர்கள் காலை 8.00
மணியிலிருந்து மாலை 6.00 மணி
வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
வசந்த காலமும், இலையுதிர் காலமும்
ரசிப்பதற்கு ஏற்ற காலமாக
கவனிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
ஏப்ரலும் அக்டோபரும் இங்கு
சுற்றுலாவிற்கு சிறப்பான மாதங்கள்.
டியான்சி மலையின் இயற்கை அழகு..
இந்த இடம் சுற்றுலாத்தலமாக
வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இயற்கை
எழில்தான் இதன் ஈர்ப்பு பொக்கிஷம்.
இங்கு செல்பவர்கள் மூன்று முக்கிய
இடங்களை ரசிக்கும் வாய்ப்பு
கிடைக்கிறது.
தங்க முக்கோணம் (Golden
Triangle) என்று அழைக்கப்படும் அவை:
1. ஷாங் ஜியாஜி வன பூங்கா
2. க்சோக்ஷியு பள்ளத்தாக்கு
3. டியான்சி மலைகள்
மனிதரில்லா இந்த நிலப்பரப்பில் மர்மம் இருப்பதாக உள்ளூர் கதை உலவுகிறது..

No comments:

Post a Comment