Monday, September 21, 2015

ஐ.நா அறிக்கை


ஐ.நர் மனித உரிமை ஆணையாளரின் காரியாலத்தினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை ஆணையாளர் கூறியது போல் கடந்த 16ந் திகதி வெளியாகியிருந்தது.
இவ்வறிக்கையின் குறியீட்டு இலக்கம் A/HRC/30/CRP.2 என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வறி;க்கை 261 பக்கங்கள் கொண்ட அதேவேளை 1281 முக்கிய பத்திகளையும ;மூன்று முக்கிய அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.
முதலாவது அத்தியாயத்தில் முன் அரை: இவ் விசாரணை பற்றிய ஆரம்பம், காரணங்கள் ஸ்ரீலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய ஓரு கண்ணோட்டம், அத்துடன் மற்றைய குழுக்கள் பற்றியும் சட்ட நுணுக்கங்களும ;குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது அத்தியாயத்தில் கொலை, காணாமல் போதல், சித்திரவதை, பாலியல் வன்முறை, ஆட்கடத்தல், சிறுபிள்ளைகளை இராணுவத்தில் இணைத்தல், இடப்பெயர்வு அத்துடன் மக்களுக்கு நிராகரிக்கப்பட்ட உணவு, நீர், மருத்துவம் போன்ற நிவாரண பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளமை பற்றியும் இடம்பெயர்ந்தோர் அனுபவித்த கஷ்ங்கள் போன்று பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது அத்தியாயத்தில் இவ் விசாரணையின் போது கண்ட பரிகாரம் சட்ட நடவடிக்கைகள் பரிந்துரைகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
இங்கு கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஆறு பிரிவுகளாக உள்ளடக்கப்பட்டுள்ளது. பொதுவானவை: நிறுவன நடைமுறைகள் அல்லது மாற்றங்கள் நீதி, உண்மை,உரிமை நஷ்டஈடுகள் ஆகியவற்றுடன் ஆறாவதாக ஐநா அங்கத்துவ நாடுகளிற்கு பல முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றுள் நாடுகளிற்கான பரிந்துரைகள் மிகவும் முக்கியமானவையாகக் காணப்படுகின்றது. எம்மைப் பொறுத்தவரையில் இவ்வறிக்கை தமிழ் மக்களின் ஆயதப் போராட்ட காலத்தின் முக்கிய ஐ.நா. அங்கீகாரம் கொண்ட ஓர் ஆவணமாக காணப்படுகின்றது.
இவ்வறிக்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களை திருப்திப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இவ்வறிக்கையை ஒழுங்காக வாசித்து புரிந்து கொள்ளாதவர்கள் இவ்வறிக்கையின் கனதியை அதாவது உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள மாட்டார்கள் என்தை நாம் அறிவோம்.
இவ்வறிக்கை தமிழ் மக்களுக்கு நடைபெற்றவை யாவும் ஓர் இன அழிப்பு என்பதைக் கூறாமல் கூறுகின்றது.
இவ்வறிக்கை நிச்சயம் காலப்போக்கில் ஓரு சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
ஆணையாளர் ஸ்ரீலங்கா விஜயம்
கடந்த வியாழக்கிழமை ஐ.நாஆணையார் காரியாலயத்தில் சிவில் கழகத்திற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் பல கேள்விகளுக்கு பதில் கூறிய ஐ.நா. உத்தியோகத்தர் கூடிய விரைவில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஹூசெய்ன் அவர்கள் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்ய எண்ணியுள்ளதாகக் கூறியதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐ.நாவின் காணாமல் போனோருக்கான குழு ஸ்ரீலங்காவிற்கு செல்லவுள்ளதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment