Monday, September 21, 2015

"American Draft Resolution"

 சற்று முன்னர் கசிந்துள்ளது: இதில் உள்ளடக்கப்பட்ட விடையங்கள் இதோ .
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு ஆவணம் தற்போது உத்தியோகப்பற்றற்ற வகையில் வெளியாகியுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப் புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்
பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தீர்மான முன்வரைவு எதிர்
வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் நடக்கவுள்ள இலங்கை மீதான தீர்மானம் குறித்த முதலாவது முறைசாரா கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது.
ஆறு பக்கங்களில் 26 பந்திகளைக் கொண்ட இந்த முன்வரை
வுத் தீர்மானத்தின் பிரதி கடந்த வியாழக்கிழமை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மான வரைவு அமெரிக்கா தலைமையில் பிரித்தானியா, மசி டோ னியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகளின் இணை அனுசர ணையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபில், ஐ.நா
மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையின் பரிந்துரைகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து அடுத்த ஆண்டு- 2016 செப்ரெம்
பரில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்
33 ஆவது அமர்வில் வாய்மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
தற்போதைய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொட ர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி முன்னேற்றங்கள் தொடர்பான விரிவான விசா ரணைகளை 2017 மார்ச் மாதம் நடைபெறவுள்ள பேரவையின் 34வது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என குறித்த தீர்மான வரைவில் கோரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியா கியுள்ளன. ஒட்டு மொத்தத்தில் இன்னும் இரண்டு வருடங் களுக்கு(2017 செப்டெம்பர்) வரை அமெரிக்கா இதனை ஒத்தி வைத்துள்ளது. அது தான் சுருக்கமான விடையம்.
நன்றி - அதிர்வு, 20.9.2015

No comments:

Post a Comment