Monday, November 10, 2014

நீங்க 3D பிரியரா? அப்போ உங்களுக்கே உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை.


இப்போது எங்கு பார்த்தாலும் 3D Version என்கிற அளவிற்கு 3D மோகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. Avatar படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த Holywood கூட 3D மோகம் கொண்டு Spider, Iron Man serials களை 3D யில் release செய்தார்கள். அதுவே overdose ஆகி 3D TV யையே TV companies அறிமுகம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டது.
இந்நிலையில் ‘3D பார்க்காதீங்க’ என்று அபயக்குரல் எழுப்பியிருக்கிறது France நாட்டைச் சேர்ந்த மக்கள் ஆரோக்கிய கண்காணிப்பு இயக்கமான ’ANSES (Spanish: Administración Nacional de la Seguridad Social; English: National Social Security Administration’. குழந்தைகளின் கண்களில் 3D படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி, ஆய்வு செய்த பின் ANSES குழந்தைகளுக்கு 3D வேண்டாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது.
சரி 3D என்பது என்ன?
ஒரு 3D படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். இப்படித்தான் 3D படங்களைப் பார்த்து நாம் கிரகித்துக்கொள்கிறோம். ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காது. எனவே அவர்கள் 3D பார்க்கும்போது, அவர்களின் கண்கள் அதிக சிரமப்படும். அதனால் அவர்களின் பார்வைத்திறனே பாதிக்கப்படலாம் என்கிறது ANSES.
13 வயதில்தான் குழந்தைகளின் கண்கள் முழு வளர்ச்சி அடைந்திருக்கும் என்பதால், அதுவரை குழந்தைகளை 3D படம் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் இந்த அமைப்பு பரிந்துரைக்கிறது.
பெரியவர்களை விட 3D Effect குழந்தைகளைத்தான் அதிகம் ஈர்க்கிறது என்பதால் Video Games தயாரிக்கும் நிறுவனங்கள் இப்போது 3D யில் விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவதையும் கவலையோடு பதிவு செய்திருக்கிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனம் மட்டுமல்ல, உலகம் முழுக்க அவ்வப்போது 3Dக்கு எதிரான குரல்கள் சமீபகாலமாக ஒலிக்க ஆரம்பித்திருகின்றன. Italy யில் குழந்தைகள் 3D படங்கள் பார்க்க கட்டுப்பாடுகளே உண்டு. Nintendo என்ற Video Game நிறுவனம் 2010ல் ஒரு புதிய 3D விளையாட்டை அறிமுகப்படுத்தியபோது, ‘ஆறு வயதுக்கும் குறைவான குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்தினால் அவர்களின் பார்வைத்திறன் பாதிக்கப்படலாம்’ என எச்சரித்திருந்தது.
எனவே 3D யிடம் இருந்து உங்கள் வீட்டு குழந்தைகளை தள்ளியே இருக்கச் செய்யுங்கள்!

No comments:

Post a Comment