ஆனந்த் படம் மதுரைக்கு வந்த போது, ராஜேஷ் கன்னாவுக்காகத்தான் பலரும் போ ய் பார்த்தனர். நானும்தான் ஒரு நண்பருடன். இயக்குனர் ரிஷிகேஷ் முகெர்ஜி . மிக உயரமாக பெரிய கண்களுடன் வித்தியாசமாக ஒரு டாக்டர் வேடத்தில் ஒல்லியாக ஒருவர் நடித்திருந்தார். அமிதா பச்சன். அவருக்கு அறிமுகம். ராஜேஷ் கண்ணா நடித்த படமெல்லாம் மிகப் பெரிய வெற்றி பெற்ற அவரின சூப்பர் ஹிட் காலம்.அது.
ராஜேஷ் கண்ணா புற்று நோய் வந்து இறக்கும் தறு வாயில் இருக்கும் போ து டாக்டர் நட்பு கிடைக்கிறது. சோகமும் குறும்புத்தனமும் மென்மையும் கொண்ட பாத்திரம் ராஜேஷ் உடையது. இறு திக்காட்ச்யில் அவர் இறந்த பிறகு அவரின் குரல் ஒலிநாடாவில் பேசும்போது வாழ்க்கயில் நாமெல்லாம் பொம்மைகள் என்பார். ராஜேஷின் நடிப்புலக வீழ்ச்சியும், அமிதாப்பின் எழுச்சியும் இங்கிருந்து தொடங்கியது எனலாம்.
இதில் உள்ளே பாட்டுகள் இசை அமைப்பாளர் சலில் சவு த்திரியை எப்போதும் காற்றில் இசை அமைக்க வைத்துக் கொன்டே இருக்கிறது. . அதுவும் கஹி தூர் என்ற பாடல். ....என் கனவுகளை யாரோ விளகேற்று கின்றனர் ---- சுவாசம் சுமையா கும் போது, விழிகளில் கண்ணீர் நிரம்பும் போது... முகேஷ் ,லதா பாடி இருப்பார்கள் இரண்டு முறை தனித் தனியாக. யோகேஷ் என்ற கவி மார்கெட் இல்லாத நிலையில் எழுதி இருப்பார். ஜிண்டஹி, மைனே தேரே போன்ற பாடல்களும் இன்று கேட்டாலும் மனதின் ஆழத்தில் நினைவின் சில கணங்களுக்குள்ளும். , வாழ்வின் அர்த்தங்களைப் பற்றிய கேள்விகளுக்குள்ளும் மனம் பயணம் செய்யத் தொடங்கிவிடும். ...
நிஜ வாழ்விலும் ராஜேஷ் கண்ணா புற்று நோய் வந்து இறந்தது ஆனந்தை மீ ண்டும் நினைவுப் படுத்தியது.
No comments:
Post a Comment