Tuesday, July 31, 2012

சிறப்பான கல்விக்கு 'ஹயக்ரீவர் வழிபாடு'



ஆடி அமாவாசையை போன்று ஆடிப் பவுர்ணமியும் 
மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகாவிஷ்ணுவின் 
குதிரை அவதாரமான ஹயக்ரீவர் அவதரித்த தினம் 
ஆடி பவுர்ணமிதான். இவர் சரஸ்வதியின் குரு என்று
புராணங்கள் கூறுகின்றன. கல்வியின் தெய்வமாகிய
சரஸ்வதியின் குருவாகிய ஹயக்ரீவரை தரிசிப்பதும்
அவரது துதிகளைச் சொல்வதும் குழந்தைகள் கல்வி
கலைகளில் சிறந்து விளக்க வழி வகுக்கும்.

இந்த ஹயக்ரீவர் ஸ்லோகத்தை குழந்தைகள்
காலை மாலை படிக்கத் தொடங்கும்முன் கூறுதல்
மிகவும் நல்லது. 

படிப்பும்,ஞானமும்பெற

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்
ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படி காக்ருதிம்

ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே

No comments:

Post a Comment