Tuesday, October 4, 2011

நொறுக்குத்தீனி சாப்பிடும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும்




நொறுக்குத்தீனிக்காக அதிக அளவில் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உட்கொள்ளும் பெண்களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வில் 60,000த்திற்கும் மேற்பட்ட பெண்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உண்பவர்களுக்கு புற்றுநோய்உக்கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கபட்டுள்ளது.
பிரிட்டனில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 6,400 பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படுகிறது என்றும் இதில் 1,000 பேர் மரணமடைவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்கள் பொதுவாக இனிப்புப் பண்டங்களுக்கும் புற்றுநோய் வாய்ப்பிற்கும் தொடர்புள்ளதா என்ற ரீதியிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில் அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பண்டங்கள், குளிர் பானங்கள், ஜாம்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு புற்று நோய் வாய்ப்பு ஏற்படுவதாகத் தெரியவில்லை என்று கூறும் இந்த ஆய்வு பிஸ்கட்டுகள், பன்கள், இனிப்பு கேக்குகள் ஆகியவற்றை உண்பதால் கேன்சர் ரிஸ்க் 42% அதிகமிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு மற்ற ஆய்வுகளின் முடிவுகளுடன் ஒத்துப் போகுமென்றால் கவலையளிக்கும் ஒரு ஆரோக்கியப் பிரச்சனையாகி விடும் என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment